Everything posted by goshan_che
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது. ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது. ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣 # சோறு முக்கியம் பிகிலு🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வேதாளம் புதிய விக்ரமாதித்தனை தேடுகிறது🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் யுத்தம் ஈரானிய மக்களின், குறிப்பாக பெண்களின் சுதந்திரத்துக்கான போர் என நான் எங்கும் எழுதவில்லை. அது இஸ்ரேலின் பாதுகாப்பு, நெதன்யாஹுவின் அரசியல் இருப்பு சம்பந்தமானது. ஆனால் ஈரானியர் நீங்கள் நினைப்பது போல் பிற்போக்குத்தனத்தை கலாச்சாரமாக கொண்டவர்கள் அல்ல. மேலே துருக்கி, மலேசியா என இரு உதாரணங்களை தந்துள்ளேன். இவை இரெண்டும் அமேரிக்க அடிவருடிகள் அல்ல. ஆனால் முற்போக்காக மிதவாத இஸ்லாமிய நாடுகள். இப்படித்தான் முல்லாக்கள் பதவிக்கு வரமுன் ஈரானும் இருந்தது. அதே நிலைக்கு திரும்பவே மீண்டும், மீண்டும் போராடி மடிகிறார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஈரானிய இளையவர்கள். நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣, தமது நாட்டில் தம் சுதந்திரவாழ்வுக்காக அவர்கள் போராடி மடிகிறார்கள், நீங்கள் சொல்வது போல் ஆடைகளையும் ஆசையில் அல்ல.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும். எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம். மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும். மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது. இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம். இதை என்ன செய்வது என யோசியுங்கள். பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மைதான். அதே போல் 1990 இல் அநியாயமாக ஊரை விட்டு விரட்டியதால் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வையும் இந்த தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத வரிகள் காட்டி நிற்கிறன. நீங்கள் எழுதுபவையும் 1990ம் ஆண்டின் நிகழ்வுகளை மாற்றி அமைக்காது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1979 இற்கு முன் மேற்கு நாடுகளை போல, இன்றைய துருக்கி, மலேசியா போல சுதந்திரமாக வாழ்ந்த ஈரானிய பெண்களை. ஈராக் ஒரு போதும் முல்லாக்கள் கையில் இருக்கவில்லை. ஷியா முல்லாக்களை ஓட விரட்டிய பாஆத் அரசியலை முன்னெடுத்தவர் சதாம். அமெரிக்கா தலையிட்ட பின் IKR என அழைக்கபடும் குர்தீஷ் பகுதியில் பெண்கள் நல்ல நிலையிலும், இதர அரபு ஸுன்னி மக்கள் வாழும் இடங்களில் சுமாராகவும் முல்லாக்கள் கட்டுப்படுத்தும் ஷியா மக்களின் இடங்களில் மோசமான நிலையிலும் உள்ளார்கள். ஆப்கானிஸ்தான் - நிச்சயமாக பெண்கள், குழந்தைகள் கல்வி, இதர உரிமைகள் 1996-2001, தற்போது உள்ள தலிபான் ஆட்சியை விட, அமெரிக்கா அங்கே நிண்ட போது, மிக, மிக மேம்பட்டே இருந்தது. இங்கே பெண்கள் ஒடுக்கப்பட காரணம் - முல்லாக்களும், தலிபான்களும், ஐ எஸ் சும் - அவர்களை இப்படி நடக்க தூண்டும் குரானின், ஹதீஸ்களின் வழிகாட்டலுமே ஒழிய, அமேரிக்கா அல்ல. நிச்சயமாக ஒரு தேர்தல் ஜனநாயக நாட்டில், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, நெதன்யாஹுவை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தட்…தொப்பியை மறைக்க மறந்த தருணம்🤣 இங்கே பலர் மேற்கு புலிகளுக்கு ஆப்பு அடித்த கடுப்பில் முல்லாக்களுக்கு குல்லா போடுவார்கள். இன்னும் சிலரோ குல்லா போடுவதால் முல்லாக்களை நியாயபடுத்துவார்கள். யார் எவர் என்பதை சற்று விலகி நிண்டு அவதானித்தால் கண்டு கொள்ளலாம்.
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கியா வாலி பையா? வடா பவ் ஹோகயா?🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த திரியில் ரஞ்சித், ஜஸ்டீன், ரசோ அண்ணைகள் எழுதிய கருத்துக்களுக்கு நிகர எடையில் தங்கம் கொடுக்கலாம். அதிலும் அந்த கடைசி இருவரும் எனது இன்றைய சிரிப்புகுறிகளை அனைத்தையும் இந்த திரியிலே செலவழிக்க வைத்து விடுவார்கள் போலுள்ளது. தலையால் சிந்திப்பது - இதற்கு நல்ல நேர்மறையான விளக்கம் உள்ளது. இன்னும் எத்தனை பேர் தம் உள்மன அழுக்கை பொது வெளியில் கழுவுகிறார்கள் என பார்க்க ஆசைபடுவதால்🤣 கொஞ்சம் தாமதித்து விளக்கத்தை வெளியிடுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஆனால் MAGA மோக்குகளை தன் வழிக்கு எடுக்க டிரம்புக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதை இந்த மோதல் தவிர்ப்பு வழங்கும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இப்போ இருப்பவர் கமேனி. இதற்கு முன் இருந்தவர் கொமேனி. நீங்கள் நினைப்பது போன்ற வகையில் ஈரானில் தனிமனித ஆட்சி நடப்பதில்லை. அதிஉச்ச தலைவர் என வாழ்நாளுக்கு ஒருவரை தெரிவு செய்தாலும், அவரை நியமிப்பது நிபுணர்கள் குழு எனும் குழாமே. இந்த தலைவர் எப்பொதும் revolutionary guardsஎனும் படையின் தலைவரிலேயே தங்கி இருப்பார்கள். ஈரானின் ஆட்சியை தக்க வைக்கும் பலம் RG யிடம்தான் உள்ளது. அயதுல்லாக்கள் மக்களால் வெறுக்கப்படும் நிலை வந்தால் பங்களாதேசில் நடந்தது போல் படைகள் ஓடி விடும். இஸ்ரேல் அடிப்பதால் மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸ்டாலினின், லெனினின் கடைகாலத்தில் என்ன நடந்தது, அவர்கள் விரும்பிய ஆட்களுக்கு அடுத்த தலைமை கிடைத்ததா என்பதை எல்லாம் பார்த்தால் கமேனியின் ஈரானின் மீதான பிடி அத்தனை வலுவானது அல்ல என புரியும். அதே போல் ஈரானின் வான் பரப்பு முழுவதும் இஸ்ரேலின் ஆதிக்கம். ஈரானின் ஒரே ஆயுதம் டிரோன், ஏவுகணைகள் மட்டுமே. இதில் சீனா இறங்கினால் மட்டுமே ஈரானால் நீடித்து நிற்க முடியும். அதே போல் டிரம்பின் போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன். டிரெம்பிற்கு இடியப்ப சிக்கல். அவரின் MAGA மோட்டு கூட்டம் நவ நாஜிகள், யூத வெறுப்பாளர். ஆனால் எப்ஸ்டீன் பைல்கள் உட்பட டிரம்பின் பல பிடிகள், புட்டினை போலவே, இஸ்ரேலிலும் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த யூத வெறுப்பாளரை பேய்க்காட்டி, வேறு வழியில்ல்லை, அதான் அமேரிக்கா முழு வீச்சில் இறங்கியது என காட்ட டிரம்ப் ஆடும் நாடகமே இந்த மோதல் தவிர்ப்பு. பிகு ஈரான் கத்தாரில் இருந்த அமரிக்க தளத்தை தாக்கியதும், அமேரிக்கா பயந்து, மறுவினை காட்டாமல் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது என நான் நம்பவில்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் இன்றைய காலாச்சாரம் என்பது 1979 இன் பின் வலிந்து திணிக்கப்பட்டது. தன் சொந்த மகள்களை இரெண்டாம் தர பிரசையாக நடத்தும் எந்த கொடுங்கோன்மையும் அழிக்கப்பட வேண்டியதே. அப்படி பட்ட கொடுங்கோன்மையை ஆதரிப்பவர்கள், அவர்களும் ஆணாதிக்க வாதிகளே, தாம் இருக்கும் நாடுகள் டின்னு கட்டி விடுவார்கள் என்பதால் அடக்கி கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. பிகு ஈரானிய பெண்ணடிமைவாதிகளை தகைவரோடு, புலிகலோடு ஒப்பிடவே முடியாது. அப்போ சவுதி? அவர்களும் கொடுங்கோலரே, அவர்களுக்கு எதிராக அந்த மக்கள் போராடும் போது அதையும் நான் ஆதரிப்பேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் இளையவர்கள் மிக தெளிவாக இந்த அடிப்படைவாத அரசை எதிர்கிறார்கள். ஆனால் இரும்பு கரம் கொண்டு அடக்கபடுகிறார்கள். எனக்கு இஸ்ரேல்-ஈரான் போரில் இருபகுதி மீதும் ஈடுபாடு இல்லை. ஆனால் அயதுல்லா கொமேனி என்ற முன்னாள் பிரெஞ் உளவாளி, பின்னால் அடிப்படைவாதியின் இஸ்லாமிய புரட்சியின் பின்னான கொடுங்கோல் இஸ்லாமிய தியோகிரசி அழிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
என்ன செய்வது…நேட்டோ நாட்டில் வந்து குடி ஏறி - சாலை முதல், மருத்துவம் வரை இந்த களவில் வந்த சுகத்தை அனுபவித்து கொண்டே…அதாவது கள்ள சோத்தை சாப்பிட்டு கொண்டே, களவை, கள்வனை வெறுப்பதாக என்னால் virtue signaling மாய்மாலம் போட முடிவதில்லை. இருந்துட்டு போங்க 🤣 2013 க்கு முன் நான் யாழில் எழுதவில்லை. உக்ரேனுக்கு, ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய போருக்கு ஆதரவு சொந்த மக்களை அடக்கும் முல்லாக்களுக்கு இஸ்ரேல் அடிக்க முன்பே நான் எதிர்ப்பு. ஹமாசை சாட்டி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என நீங்கள் கேட்க முன்பே எழுதி விட்டேன். ஆனால் நீங்கள் உடைந்த ரெக்கோர்ட் போல அதையே ஆயிரம் தடவை கேட்டால் என்ன செய்ய முடியும்?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நாங்கள் என்றால்? நான் என்ன யூதனா, டிரம்பா, நெத்ந்ன்யாஹுவா? நான் ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன். நான் 550K பலஸ்தீனியரை கொல்லவில்லை, ஆகவே தன் மக்களை அடக்கி ஆளும் ஈரானிய, அடிப்படைவாத முல்லாக்களை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் ரசிக்கிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவியாக தெரிகிறது. சே எனக்கு பிடித்த தலைவர்தான். ஆனால் நான் கம்யூனிஸ்டும் இல்லை, என் பெயரில் உள்ள சே அவரும் இல்லை. ஒரு கண்ணியமான தளத்தில், வரம்புக்கு உட்பட்டு உரையாடல் நடக்கும் போது ஒரு நிர்வாகியே இப்படி கண்ணிய குறைவாக எழுதலாமா? அண்மையில் ஒருமுறை உங்கள் சார்பில், நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட முறைக்கு நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. அதை தொடர்ந்து மிக அண்மையில் நீங்களாகவே ஜஸ்டின் அண்ணாவுக்கு ஒருமன்னிப்பு கடிதம் எழுதி இருந்தீர்கள். இப்படி பல இடங்களில் நடந்துள்ளது. ஏன் இப்படி நீங்களும் அவமானப்பட்டு, நிர்வாகத்தையும் தர்மசங்கடத்துக்கு ஆக்குகிறீர்கள்? வீரப்பையன் போன்றோரை பார்த்தாவது கண்ணியமாக எழுத பழகலாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
முல்லாக்கள் ஆளுவது ஈரானும், ஆப்கானிஸ்தானும் தான். இரெண்டும் கெட்ட சயனைடுகள் - அவர்களின் மக்களுக்கு. இவை சமயம்சேர் அரசுகள். தியோகிரசி. சவுதி, குவைத், அமீரகம், ஜோர்தான் போன்றவை இஸ்லாமிய மன்னராட்சி அரசுகள். இவையும் கெட்ட சயனைடுகள். ஆனால் மக்கள் சுதந்திரம் நாடி போராடி மீண்டும், மீண்டும் நசுக்கப்படுவது ஈரானில் மட்டுமே. ஆகவேதான் தாலிபான், சல்மான், சேக்குகள் மீது இல்லாத வெறுப்பு ஈரானிய முல்லாக்கள் மீது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உங்களது மட்டும் அல்ல தலையால் சிந்திக்கும் எந்த மனிதரதும் கருத்து இதுவாகவே இருக்கும். புட்டினுக்கு மண் சுமந்ததை கூட மன்னித்து விடலாம், ஆனால் முல்லாக்களுக்கு முதுகுசொறியும் அளவுக்கு, சில தமிழ் உள்ளங்கள் சீழ் கட்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது. நான் போட்ட படத்தில் கிளி முல்லா அல்ல. செத்த கிளி படத்திலேயே இல்லை🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உக்ரேனை ஆதரிப்பது ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணயத்தை ஆதரிப்பதால். ஈரானை எதிர்ப்பது அடிப்படைவாத முஸ்லிம் மத-அடக்குமுறையை எதிர்ப்பதால். நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடுநிலை என்பது அநீதியின் பக்கம் நிற்பதே, நான் இந்த பிரச்சனைகளில் நடுநிலை என எங்கே சொன்னேன்? ஈரான் மீது போர் தொடுத்தது இஸ்ரேல். ஏன் எண்டால் இஸ்ரேலை உலக மேப்பில் இருந்து அழிப்போம் என சொல்லும் ஒரு நாட்டுக்கு அணுகுண்டு இயலுமை வருவதை இஸ்ரேல் தடுக்க விழைகிறது, என்பது அவர்களின் வாதம். ஆனால் நான் ஈரானின் முல்லாக்களை எதிர்க்க இதுவல்ல காரணம். என் எதிர்ப்பு அவர்கள் அடிப்படைவாத சட்வாதிகள் என்பதே.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சொந்த நாட்டு மக்களை மதத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கி, சிறுமிகளை கொலைசெய்யும் அமைப்பு ஒன்று வீரனோ, கோழையோ, மனிதனோ கூட இல்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
# செத்த கிளி
- IMG_3342.jpeg
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
🤣 இதில் ஒருவர் பேட்டரா அல்லது ஆரவுண்டரா என தீர்மானிப்பது எப்படி? சச்சின் கூட முக்கிய போட்டிகளில் விக்கெட் எடுத்துள்ளார். கங்குலி வெளியேறினால் சச்சினை போடலாம். டிராவிட் வெளியேறினால்? இதை விட உள்ளே எவரும் வரலாம் ஆனால் வருபவர் 7வதாகத்தான் களம் இறங்க வேண்டும், வெளியேறியவர் போட்ட வகை பந்து வீச்சையே செய்யவேண்டும் என கொண்டு வந்திருக்கலாம். உதாரணமாக மொயின் அலிக்கு பதில் ஸ்டோக்ஸ் இறங்கினால். ஸ்டோக்ஸ் 7 டவுண் பேட்டிங், ஓவ் ஸ்பின் மட்டுமே செய்ய முடியும். மிக அற்புதமான கேட்சுகள் இப்படி எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தேவையில்லாத ஆணி, பேட்ஸ்மேனுக்கு சாதகமானது. இதுவும் அதுவே.
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
மோசமான விதி மாற்றம். ஏற்கனவே அடிவாங்கி நொந்து நூடில்ஸ்சாகி இருக்கும் பந்து வீச்சாளரின் கையை இது மேலும் கட்டுகிறது. இதென்ன மொக்குத்தனமாக இருக்கிறது ? ஒரு touring squad இல் 4 வேகபந்து வீச்சாளர், ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டுமே இருந்து, அவர்கள் அனைவரும் விளையாடும் XI இல் இருந்தால் யாரை இந்த மீதி 5 க்கு நியமிப்பது?
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியை நடத்தினால் நிச்சயம் பங்கு கொள்வதோடு முடிந்தளவு ஈடுபாடும் காட்ட முனைவேன்.