Everything posted by goshan_che
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
# செத்த கிளி
- IMG_3342.jpeg
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
🤣 இதில் ஒருவர் பேட்டரா அல்லது ஆரவுண்டரா என தீர்மானிப்பது எப்படி? சச்சின் கூட முக்கிய போட்டிகளில் விக்கெட் எடுத்துள்ளார். கங்குலி வெளியேறினால் சச்சினை போடலாம். டிராவிட் வெளியேறினால்? இதை விட உள்ளே எவரும் வரலாம் ஆனால் வருபவர் 7வதாகத்தான் களம் இறங்க வேண்டும், வெளியேறியவர் போட்ட வகை பந்து வீச்சையே செய்யவேண்டும் என கொண்டு வந்திருக்கலாம். உதாரணமாக மொயின் அலிக்கு பதில் ஸ்டோக்ஸ் இறங்கினால். ஸ்டோக்ஸ் 7 டவுண் பேட்டிங், ஓவ் ஸ்பின் மட்டுமே செய்ய முடியும். மிக அற்புதமான கேட்சுகள் இப்படி எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தேவையில்லாத ஆணி, பேட்ஸ்மேனுக்கு சாதகமானது. இதுவும் அதுவே.
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
மோசமான விதி மாற்றம். ஏற்கனவே அடிவாங்கி நொந்து நூடில்ஸ்சாகி இருக்கும் பந்து வீச்சாளரின் கையை இது மேலும் கட்டுகிறது. இதென்ன மொக்குத்தனமாக இருக்கிறது ? ஒரு touring squad இல் 4 வேகபந்து வீச்சாளர், ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டுமே இருந்து, அவர்கள் அனைவரும் விளையாடும் XI இல் இருந்தால் யாரை இந்த மீதி 5 க்கு நியமிப்பது?
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியை நடத்தினால் நிச்சயம் பங்கு கொள்வதோடு முடிந்தளவு ஈடுபாடும் காட்ட முனைவேன்.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
கள்ளசாராய மதுவால் வரும் உயிரிழப்புகளுக்குத்தான் இழப்பீடு கொடுப்பார்கள். அதுவும் ஒரே நாளில் நஞ்சாகி பலர் இறக்கும் போது மட்டுமே. சட்டபூர்வ மது குடித்து இறப்போருக்கு அல்ல. கருத்துக்கு பதில் எழுதலாம். புலம்பலுக்கு🤣
-
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு!
அண்ணைமார் trigger ஆகப்போயினம்🤣
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
இப்போது இதை சிறுவகள் அதீதமாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஆங்கிலத்தில் Nanny state என்பார்கள். தமிழில் ஆயா-அரசு எனலாம். ஒவ்வொரு விடயத்திலும் அரசு ஒரு ஆயா போல் தலையிடுவது. இதை மக்கள் பலர் விரும்புவதில்லை. ஆகவே அரசுகள் இதை தன்மையாகத்தான் கையாளும். சிகெரெட் போல கைப்பேசிகளும் ஆபத்து என நிறுவப்படின், சிகெரெட் போலவே அவையும் படிபடியாக களையப்படும். யூகேயில் குளிர்பானங்களில் sugar tax என ஒன்றை அறிமுகபடுத்தியதால், பல நிறுவனங்கள் தம் தயாரிப்புகளில் சீனி அளவை குறைத்தன. இவ்வாறாக விஞ்ஞான புரிதல் மாற, மாற அதற்கேற்ப அரசுகளும் தம் அணுகுமுறை, நிலையை மாற்றும்.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
புற்று நோய் பல காரணங்களால் வருவது உண்மை. ஆனால் புற்று நோயை உருவாக்கும் மிக பெரிய, ஆய்வு மூலம் ஐயம் அற நிறுவப்பட்ட காரணி சிகெரெட். இதுவும் மதுவிலக்கு போலவே. தடை செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், கள்ள சிகெரெட் பரவும். ஆகவே பூரண தடை சரிவராது. ஆனாலும் யூகேயில் இப்போ படிப்படியாக வாங்கும் வயதை கூட்டி, ஒரு காலத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 01-01-2009 இன் பிறந்த பிள்ளைகள் வாழ்க்கையில் எப்போதும் சிகெரெட் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். இப்படி மைக்ரோ பிலாஸ்டிக் உட்பட ஒவ்வொரு புற்று நோய் ஊக்கியும் மனித உணவு, பழக்க சங்கிலியில் இருந்து அகற்றபட வேண்டும். அதன் முதல்படி உள்ளதில் மோசமானதில் ஒன்றான சிகரெட். கள்ளுக்கு மட்டும் அல்ல தடை. தனிநபர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் சகல மதுவுக்கும் தடை. சாராயம் போல கள்ளையும் அரசு விற்க வேண்டும் என கேட்பது லொஜிக்கலானது. ஆனால் பியரை எதிர்த்து கொண்டு கள்ளை ஆதரிப்பது வெறும் அரசியல் பம்மாத்து.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
பூரண மதுவிலக்கு முடியாத காரியம் என்றுதானே அமெரிக்க உதாரணத்துடன் எழுதியுள்ளேன்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
அது சந்தேகத்துக்கு இடமில்லாத விடயம்🤣
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
எனக்கு இதுவும் ஐ பி எல் லும் ஒன்றேதான். நிச்சயமாக இது என் ஆணாதிக்க மனோநிலையின் வெளிப்பாடேதான். சந்தேகமில்லை. ஆனாலும் - எவ்வளவோ முயன்று டிவிக்கு முன் வலுகட்டாயமாக குந்தி இருந்து பார்த்தாலும் - மனம் லயிப்பதில்லை. தானாக போனை நோண்ட ஆரம்பித்து விடுவேன். இத்தனைக்கும் எனக்கு தெரிந்த சில சிறுமிகளின் கிரிகெட் மீதான ஆர்வத்தை ஊக்குவித்தது மட்டும் அல்லாமல், உள்ளூர் கிளபுகளின் அறிமுக நாட்கள் பற்றிய தகவல்களை கூட பகிர்ந்துள்ளேன். ஆனாலும் என்னால் ஆர்வமாக பார்க்க முடிவதில்லை. வெட்கப்படவேண்டிய விடயம்தான்.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
சிகரெட் மட்டும் என்ன காயகல்ப மருந்தா? அதுவும் ஒரு கான்சர் ஊக்கிதானே? ஒரு காலத்தில் 90கள் வரைக்கும் மேற்கில் சிகெரெட் பிடிக்காட்டி ஸ்டைல் இல்லை என்ற நிலை இருந்தது, சிறுவர் பார்க்கும் விளையாட்டுகள் எங்கினும் சிகெரெட் கம்பனிகளின் ஆதிக்கமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். இதே போன்ற விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது. பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும். கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை. எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது. ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது. ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார். மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
போதை தரும் எந்த பொருளும் தடை செய்ய இலாயக்கானதே…. அதில் கள்ளில் அல்கஹோல் 6% டாஸ்மார்க் பியரில் 5% என்ற வேறுபாடுகள் எல்லாம் முட்டையில் மயிர் புடுங்கும் வேலைகளே. ஆனால் prohibition எனப்படும் பூரண மதுவிலக்கு அமெரிக்கா உட்பட இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் பலத்த தோல்வியை சந்தித்தது என்பதுதான் உண்மை. இப்போதும் குஜராத்தில் உள்ளது, ஆனால் அங்கே கள்ளசாராய விற்பனை அமோகம். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு உருவான கருத்தியலே அரசு மதுகடைகளை நடத்த வேண்டும் என்பது. தனிநபர்கள் மது உற்பத்தி, விற்பனையில் இறங்க கூடாது என்றால் அதில் கள்ளும் அடங்கத்தான் வேண்டும். இதில் தனது நாடார் சாதி வாக்குகளை கவர சீமான் போன்றோர் சட்டத்தை மீறும் போது அவர்களை உள்ளே தள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால் பிஜேபி ஆளான சீமான் மீது கைவைக்க திமுக அரசுக்கு பயம். கூடவே அரச மது தயாரிப்பு, விநியோக உரிமை விடயத்தில் தாம் செய்யும் பெரும் ஊழல் மீது வெளிச்சம் படக்கூடாது என்ற பயம் வேறு உள்ளது. பிகு புகையிலை வித்து சொந்த மாவட்ட, நாட்டு மக்களை கான்சர் மூலம் பரலோகம் அனுப்பிய, இப்போதும் புலம்பெயர் நாட்டில் off licence, restaurant என மது வித்து, அடைக்கலம் தந்த நாட்டு மக்களை பரலோகம் அனுப்பி வைக்கும் ஈழத்து புலம்பெயர் தமிழ் சமூகம் - கள்ளுக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
ஏலுமெண்டா எண்ட ஏரியாவுக்கு வந்து பார்க்கவும் 🤣
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
இப்போதைக்கு கிரிகெட் போட்டி ஒண்டும் இல்லை என்பதால் மிச்சமாகும் நேரத்தை இதில் செலவிட உள்ளேன்🤣
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்! VigneshkumarPublished: Sunday, June 15, 2025, 23:01 [IST] டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார். இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி இப்போது இரைப்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி உடல்நலம் சீராகி விரைவில் டிஸ்சார்ஸ் ஆக வேண்டும் எனக் காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-admitted-to-delhi-s-ganga-ram-hospital-due-to-stomach-problem-712807.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி “அன்னை சோனியா பீட்சா சாப்பிட்டார். நலமோடு உள்ளார்” என்ற அறிவிப்பு விரைவில் வெளிவருமோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்த்து நந்தன். ரசோ அண்ணா உட்பட ஏனையோருக்கும் வாழ்த்து. போட்டியை நடத்திய ஜிக்கும், கலகப்பாக்கிய உறவுகளுக்கும் நன்றி.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முக்கிய அறிவிப்பு ! எலே மக்கா…. 50% refund… வந்துட்டு லே மக்கா🤣 அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்து.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
வசி கேட்டு கொண்ட படி, போட்டியில் முதலாவது ஆளாக பாஸ்மார்க் 40 ஐ எடுத்துள்ளார் வாதாவூரான். நாளை இன்னும் சிலரும் ஆத்தா நான் பாசாகிட்டேன் என சொல்ல போகிறனர், அதேபோல் மீதி சிலர் ஆடு மேய்க தயாராகின்றனர் 🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான். ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன். சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது. இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார். வாதவூரான் 40 🪑 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 பிரபா 20 நுணாவிலான் 10 செம்பாட்டான் 00 🐥
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இப்படி செய்தது, normal swing ஐ பெற. அதாவது seam position ஆனது slips ஐ நோக்கி இருக்கும் போது பந்து பேட்ஸ்மேனனில் இருந்து விலகிய திக்கில் போனால் அது நோமல் அவுட் சுவிங். ஆனால் சீம் பொசிசன் இப்படியே இருக்க பந்து பேட்ஸ்மனை நோக்கி வந்தால் அது ரிவேர்ஸ் சுவிங். சுருங்க சொல்லின், outswing seam position இல் inswing ஆவதும், inswing seam position இல் outswing ஆவதுமே ரிவர்ஸ் சுவிங். இதற்கு பந்தின் ஒரு புறத்தை பொலிஷ் பண்ணுவது மட்டும் போதாது. மறுபுறம் கரடுமுரடு ஆகவும் வேண்டும். ஆனால் லொர்ட்ஸ் போன்ற ஒரு பச்சைபசேல் மைதானத்தில், யூன் மாத ஆரம்பத்தில் இதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படியே ஆகட்டும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா. புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை. நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும். செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்? செய்வீர்களா 🤣 முடிந்தால் 14 ஓவருக்குள் முடிச்சு வை🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்…புத்தம் புதிய பந்தை கொடுக்கமாட்டார்கள், ஆனால் மாற்றும் பந்து அதே அளவு ஓவர்கள் பாவித்த பந்தாக இருப்பினும், சற்றே கடினமானதாக, அத்தோடு உருவம் குறையாமல், குறிப்பாக நூல் தேயாமல் இருக்க வாய்ப்புகள் கூட. பந்தை மாற்றும் போது விக்கெட் விழுவது உண்டு அதையே சொன்னேன். ரிவேர்ஸ் சுவிங்கிற்காக ஏதுநிலை இங்கே இல்லை என நினைக்கிறேன். அதற்கு மைதானம் வரண்டு அதன் மூலம் ஒரு பகுதி உராய, மறு பகுதியை பொலிஷ் பண்ணி, சுவிங்க உருவாக்க வேண்டும். அல்லது சாண்ட்பேப்பரால் சுரண்டினால்தான் உண்டு 🤣. இது அவுஸ் முன்னர் ஒரு முறை செய்து மாட்டியதுதானே🤣.