Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. வீழ்த்தப்பட்ட இந்தியாவின் SU 30 இன் பாகங்களாம்.
  2. கேள்வி: எத்தனை ரபேல் விமானங்களை நீங்கள் இழந்துள்ளீர்கள் சேர்? இந்திய விமானப்படை தளபதி: நீங்கள் எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி - பயங்கரவாதிகளின் முகாம்களை திட்டமிட்டமாதிரி அழித்து விட்டீர்களா என்பதே. அதற்கான பதில் ஆம் 😂. யுத்த நிலை என்பதால் நடவடிக்கை சம்பந்தபட்ட விபரங்களை தரமுடியாது (அதான் போர் நிறுத்தம் ஆகிவிட்டதே). பிகு இங்கே தளபதி கொடுத்த பதிலின் சுருக்கம் = சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு 🤣
  3. நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள். இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன். தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள். இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை. கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை. இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது. புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இலங்கையில் அறவே இல்லை. அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள். ஆகவேதான் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை. நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள். சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம். ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர். காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.
  4. என்னை பொறுத்தவரை இந்தியா தனது நலன் கருதி நேரடியாக ஈழத்தமிழரை அரவணைக்க வேண்டும். அதற்கான காலம் வந்தே விட்டது. அதாவது ஈழதமிழ் தலைவர்கள் எவருக்கும் எந்த வகிபாகமும் தேவையில்லை. நான் மேலே சொன்னது போல குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த ஒரு தீர்வை இந்தியாவே தயாரித்து விட்டு. இலங்கையிடம் அதை கொடுத்து… குறித்த கால அவகாசத்தில் அதை நடைமுறைபடுத்தும் படி சொல்ல வேண்டும். இலங்கையில் வரவிருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அண்மைய சண்டையில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பாவித்து, பொருளாதார அசமநிலையையும் மீறி இந்தியாவை சவாலுக்கு உள்ளாக்கியதை பார்கிறோம். இதே ஒரு நிலை இலங்கையில் வர அதிக காலம் எடுக்காது. பாகிஸ்தான் உதாரணத்தை இலங்கை கையில் எடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை. புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை தோற்கடிக்க இந்தியா செய்த இத்தனை உதவிக்கு பின்னும், இன்று இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட சொல்லவில்லை. கஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கூட கண்டிக்கவில்லை. ஆனாலும் இன்றும் மெலிதாகவேனும் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எங்கே இருந்து வருகிறது எனபார்ப்பின் அது ஈழதமிழரிடம் இருந்தே. அதற்கு யாழ்கள கருத்துக்களே சாட்சி. சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுள்ளது வெள்ளிடமலை. கேந்திர ரீதியாக சீனாவும், மத அடிப்படையில் துருக்கி, பங்களாதேஷ், நாடுகளும் பாக்கிஸ்தான் பின்னால் நின்றன. இந்தியாவுக்கு யாரும் இல்லை, இஸ்ரேலின் வெறும் சந்தர்ப்பவாத, ஆயுத விற்பனையின் பால்பட்ட ஆதரவு கூட மிகவும் சுரத்தில்லாமலே இருந்தது. எங்கே நேபாளம்? எங்கே ஈழத்தமிழர்கள்? இந்தியா இழந்த நண்பர்களை மீள அரவணைக்க வேண்டியது, அவர்களை விட இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது. தன் வடக்கு, தெற்கு வாசல்களில் அசைக்க முடியாத நட்புசக்திகளை உருவாக்குவது இந்தியாவுக்கு இன்றி அமையாதது. அதன் முதல்படியாக இலங்கையை பிரிக்காத, ஆனால் காத்திரமான ஒரு தீர்வை தமிழருக்கு கொடுப்பது அமையும். இப்படி ஒன்று நடக்குமாயின் உலகலாவிய தமிழ் இனமும், இலங்கை வாழ் தமிழரும், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழரும் இந்தியாவின் பின் பெரும் அளவில் அணி திரள சில மாதங்கள் கூட எடாது.
  5. இந்தியா நதி நீரை அதிகமாக திறந்து விட்டுள்ளதாம்🤣. கைபுள்ள, தண்ணிய கொடுக்க மாட்டம் எண்டு சொன்னாயேப்பா? அது போன மாசம்🤣🤣🤣
  6. எப்படி சீன தயாரிப்பான, புதியவகை ஏ ஐ சேர் இலத்திரனியல் ராடார் கூட்டமைப்பால் ரபேல் வீழ்த்தப்பட்டது என விபரிக்கும் வீடியோ. சீனானிம் உளவியல் யுத்தமாகவும் இருக்கலாம்.
  7. ஓ…லியோ என்பதன் தமிழ் பதமா சிங்கராயர்? மன்னாரில் தள்ளாடி முகாமில் வைத்து ஒரு பாதர் சிங்கராயர் போராளிகளுக்கு உதவினார் என்று சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அதெல்லாம் எங்க இப்ப நினைவு இருக்க போவுது…இப்பெல்லாம் மறைகழண்ட புலவு சச்சி போல கதைப்பதுதானே பேஷன். ஜான் பாலை - அருளப்பர் சின்னப்பர் என்பார்கள். சிறு வயதில் தமிழர்தான் பாப்பரசர் என நினைத்த காலமும் உண்டு. பெனடிக்ட், பிரான்ஸிசை தமிழில் என்னவென்று அழைத்தார்கள்?
  8. நான் ஒரு இந்து. எனக்கு முஸ்லிம்களை பிடியாது எனவே: எப்படியாவது இந்து இந்தியாவுக்கு முஸ்லிம் பாகிஸ்தானை எதிர்த்து முண்டு கொடுப்பேன். இதுவே உங்கள் எழுத்தின் ஊக்கியாக எனக்கு படுகிறது. அதை அப்படி சொல்லி விட்டு போனால் உங்கள் நம்பகதன்மையாவது மிஞ்சும். விளங்க (சில சமயம் வில்லங்கமாக) நினைபவருக்கும் இந்த முஸ்லிம் வெறுப்புத்தான் சிந்தனையின் ஊக்கி. சுயநிர்ணயம் என்பது தேசிய இனங்களின் உரிமை. கஸ்மீரிகள் தனி நாடாக இருந்தவர்கள். அவர்கள் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை இந்தியாவே ஐநாவில் ஏற்று கொண்டுள்ளது. ஆகவே எம்மை விட சுயநிர்ணயத்துக்கு / வாக்கெடுபுக்கு உரிதானவர்கள் அவர்கள். அவர்கள் உலக யதார்த்தத்தை எதிர்த்து போராட கூடாது என்றால், நாமும் சிங்களவன் கொடுத்த வெளுவையை வாங்கி கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும். இந்த சண்டையின் அடிப்படை ஒன்றேதான். நீர்… இண்டஸ், ஜீலம், செனாப், நீலம், றவி என பல நீர்வாழ்வாதார நதிகள் காச்மீரினூடு பாய்கிறன. அதனால்தான் இரு நாடுகளும் கஸ்மீரை குறிவைக்கிறன. உலகம் வல்லாதிக்கத்தின், அதாவது உங்கள் பாசையில் இறைமையில் கைவைக்காது என்பது நடைமுறையாக இருக்கலாம்…ஆனால் இங்கே சாமானியகள் நாம் நடைமுறை பற்றி கதைக்கவில்லை. யார் பக்கம் நியாயம் என்பதையே கதைக்கிறோம். நியாயம் இந்தியாவிடமோ பாகிஸ்தானிடமோ இல்லை. நியாயம் எம்மை போல ஒடுக்கப்படும் சக தேசிய இனமான காஸ்மீரிகளிடமே உள்ளது.
  9. இல்லை…இது ஒரு பிரிதானியர், இந்தியர், அமேரிக்கர், கனடாகாரர், அவுஸ்ரேலியர் என பலருக்கும் இருக்கும் obsession (என்ன தமிழ்?). பிரிதானியாவில் 62% வசிப்பாளர் சொந்த வீட்டிலும் ஜேர்மனியில் 47% வசிப்பாளர் சொந்த வீட்டிலும் வசிக்கிறானர். ஆனால் இந்த obsession பு-பெ.தமிழர்களிடம் ஒரு படி கூடத்தான்.
  10. தவறான புரிதல். கஸ்மீரிகள்தான் கஸ்மீரின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். திம்பு கோட்பாடுகள் ஈழ தமிழருக்கு மட்டும் அல்ல, கஸ்மீரிகளுக்கும் பொருந்தும். கஸ்மீரில் சர்வஜன வேல்கெடுப்பை தடுப்பது இந்தியா. வடகிழக்கு இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பை தடுப்பது சிங்களம் (கோத்தா எக்ஸ்செரா). 👆இதுதான் சரியான ஒப்பீடு.
  11. ஓம் ஆனால் இங்கே கலககுழுவின் பின்னால் இருந்தது பாக்கிஸ்தான். இந்தியா அல்ல. ஆனால் 80% முஸ்லிம்களின் இடமான கஸ்மீரை இந்தியா உரிமை கோருவதும் நியாயமான விடயம் இல்லை. இதே போல் தெலுங்கானாவில் இப்போ இருக்கும் ஹதரபாத் நிஜாம் பாக்கிஸ்தானிடம் சேர. விரும்பியபோது இந்தியா இராணுவத்தை அனுப்பி அடக்கியது. அதே சமன்பாட்டை பாவித்தால் கஸ்மீரை பாகிஸ்தானிடம்தான் கொடுத்திருக்க வேண்டும்.
  12. 1948 இல் கஸ்மீரிகளிடம் முடிவு வாக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டும் என ஐநா தீர்மானம் நிறைவேறியது. ஆம் ஆனால் வெளியார் வெளியேறியபின்பே தேர்தல் என இந்தியா பின்னடித்தது. இன்னும் அடிக்கிறது. ஆர்ட்டிகல் 370 இது கஸ்மீர் இந்தியாவுடன் சேரும் போது ஒரு “தற்காலிக” சரத்தாகவே உருவானது. கஸ்மீரின் மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்த பின் அது இந்திய குடியுரிமை சட்டத்தின் எந்த பிரிவுகள் கஸ்மீருக்கும் அமலாக கூடியன என்பதை தீர்மானிக்கும். அதன் பின் மாநில கருவாக்க அசெம்பிளியே 370 வதை நீட்டிப்பதா இல்லையா என தீர்மானிக்கும். அதேபோல் இதை நீக்கும் அதிகாரம் மத்திய நாடாளுமன்றுக்கும் உள்ளது என சொன்னது இந்த ஆர்டிக்கில். மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்து, அது இந்திய அரசியல் சட்டத்தில் சில தமக்கு சேராது என தீர்மானித்தது. இதைத்தான் கஸ்மீர் சிறப்புரிமை என்பார்கள். இதன் உத்தியோக பூர்வ பெயர் 1954 ஆம் ஆண்டின் ஜனாதிபதி உத்தரவு. இதன் அடிப்படையில்தான் நீங்கள் மேலே சொன்ன காணி விடயங்கள் இருந்தன. மாநில கருவாக்க அசெம்பிளி 370 ஐ நீக்காமலே கலைந்து விட்டது. இந்திய பாராளுமன்றமும் அதை நீக்கவில்லை. 70+ வருடமாக அது ஒரு நிரந்தர சரத்து என்றே கருதப்பட்டது. ஆனால் அதன் இயல்பை பின்னாளில் வந்த பல ஜனாதிபதி உத்தரவுகள் குறைத்தன. 2019 இல் பிஜேபி இந்த சிறப்பு அந்தஸ்து முழுவதையும் நீக்கி, ஏனைய இந்திய மாநிலங்கள் போல் ஜம்மு கஸ்மீருக்கும் அரசியலமைப்பின் அத்தனை சரத்துகளும் பொருந்தும் என மாற்றினர். அத்தோடு, ஒரு காலத்தில் நாடாக இருந்த மாநிலத்தை, யூனியன் பிரதேசமாக தரம் இறக்கி, அதில் இருந்து லடாக் பகுதியை பிரித்து அநியாயம் செய்தனர்.
  13. சுதந்திரத்தின் பின் 80% முஸ்லிம்களுடன் இருந்த கஸ்மீரை சுதந்திர நாடாக விட்டு, இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைவது என்ற முடிவை அதன் இந்து மன்னராகிய ஹரி சிங்கிடம் விட்டனர் ஆங்கிலேயர். ஏதாவது ஒரு நாட்டுடன் இணையும் படி அவருக்கு ஆலோசனையும் வழங்கினர். மன்னர் சுவிற்சலாந்து போல் ஒரு குட்டி சுதந்திர அரசை வைத்கிருக்க எண்ணி, பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதே போல் ஒரு ஒப்பந்தம் இந்தியாவிடனும் போட வேலை நடந்து கொண்டிருந்தது. ஆனால் - அதற்குள் மஹராஜாவுக்கு எதிராக உள்ளூரில் கலவரம் வந்து, அதை அடக்க அவர் திண்டாடினார். இதை பாகிஸ்தான் தூண்டியதாக சொல்லபடுகிறது. அதே சமயம் - பதானிகள் கலக குழு என்ற போர்வையில் வடமேற்கில் இருந்து பாகிஸ்தானிகள் (இரானூவம் மாற்று வடிவில்) உள்ள நுழைந்து இடங்களை பிடிக்க - பீதியாகி போன மஹாராஜா ஒரு விசேட ஒப்பந்தம் மூலம் கஸ்மீரை இந்தியாவுடன் சேர்த்தார். இந்த ஒப்பந்த படி - இந்திய படைகள் கஸ்மீரில் நுழைந்து இப்போ இருக்கும் எல்லை கோடு வரை பாகிஸ்தான் படைகளை பின் தள்ளி, காஸ்மீர் 1/3 பாகிஸ்தானில், 2/3 இந்தியாவில் என பிளவுபட்டது. அப்போதும் கூட ஹரி சிங், இந்தியா, கஸ்மீரி தலைவர் பரூக் அப்துல்லா அனைவரும் - இறுதி முடிவு கஸ்மீரிகள் முடிவின் (சர்வஜன வாக்கெடுப்பு) படியே என கூறினர்.
  14. இஸ்லாமியர்கள் வாழும் பகுதி “இஸ்லாமிய குடியரசு” ஆக. ஏனைய பகுதிகள் “மதச்சார்பற்ற” இந்தியாவாகியது என்பதே உண்மை.
  15. போரில் தாம் வென்றுள்ளதாக அறிவித்தார் பாக் பிரதமர்!🤣 மோடி ஜி சமைஞ்ச பிள்ளை மாரி வீட்டுக்குள் இருக்காமல் வெளிய வாங்க ஜி. உங்க வீரம் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்கள், அல்லது எதிரணி அரசியல்வாதிகள் மீது மட்டும்தானா?
  16. உங்களால் முடிந்ததை முயன்றுள்ளீர்கள். இதே போல் ஜெ யுக்கு நல்ல ஆங்கிலம் பிடிக்கும் என நானும் ஒரு கடிதம் எழுதிகொடுத்தேன். நம்மால் முயலமட்டுமே முடியும். இதை ஒத்த முடிவை நன்னி தற்போது எடுக்கிறார்… #கண்ணில் படும் வரை பகிரவும் இந்தியாவை போல் “கராச்சியை கைப்பற்றும்” ஆட்கள் பாகிஸ்தானிலும் உள்ளார்கள் 🤣. அல்ஜசீரா, இந்த செய்தி இரெண்டுமே பாக் இராணுவ தலைமை சொன்னதாக சொல்கிறது. ஆனால் யாருக்கும் சொல்லவேண்டாம் என அமெரிக்கா கேட்டதாம். அமெரிக்கா என்ன இந்தியாவின் அம்மாவா🤣. பிள்ளை அவமானப்படும் என யோசிக்க.
  17. இந்த ஜோக்கை எண்ணி, எண்ணி சிரிக்கிறேன்🤣 டீச்சர் அம்மா ஜேவிபி இல்லை போலும். சட்டம் ரொம்ப ஸ்பீடா வேலை செய்யுது.
  18. இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது. தேவையானோர் கண்ணில் படுமா? காதில் ஏறுமா? பிகு இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன். என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு. இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும். நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  19. 🤣 ஆரம்பிக்கிறது நீயா இருக்கலாம்… ஆனால் முடிக்கிறது நான் ஆகவே இருக்க வேணும் என சொல்லி அடிக்கிறான் பாக். கடைசி அடி தன்னுடையது என சொல்லும்படி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த அடி. இந்தியா அடியை வாங்கி கொண்டு மூடி கொண்டு இருந்தால் போர் நிறுத்தம் நிலைக்கும். பாகிஸ்தானின் பொருளாதார சரிவு நிலைக்கும் அவர்களின் போரிடும் இயலுமைக்கும் சம்பந்தமில்லை. அவர்களின் போரை bankroll செய்வது சீனா. சீனா இருக்கும் வரை போர் தளபாடத்துக்கு பஞ்சம் வராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.