Everything posted by goshan_che
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கேள்விகள் அப்படி 🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பவுமா வை அவுட்டாக்க லாபுஷேஞ் பிடித்த கேட்ச் “வாவ்” ரகம். பெடிங்டன் ஒருத்தர்தான் டெஸ்ட் மேட்ச் போல ஆடுகிறார். பவுண்டரி அடிகள் கலக்கலாக இருந்தாலும்…அடிக்கடி லைனை கடந்து ஆடுகிறார். எப்போவேணும் எண்டாலும் எல்பி ஆகலாம். கடைசி ஓவரில் பெடிங்டன் handling the ball முறையில் அவுட் ஆகி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் அம்பயர்கள் கொடுக்கவில்லை.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மோனுக்கும் சேர்த்து 80 ரூபாய் பாஸ். கஸ்டப்பட்டு உழைச்ச காசு 🤣. ஆனால் இப்பவெல்லாம் app தானே. ஆட்டம் நடக்காவிடில் (மினிமம் 15 ஓவர் full refund க்கு, 30 ஓவர் 50% refund க்கு) அவர்களாகவே refund ஐ பாங்கில் போட்டு விடுவார்கள். அலைய வேண்டி வராது. என்ர லக்குக்கு 4ம் நாள், 16 ஓவர் அல்லது 31 ஓவர் விளையாட்டு நடக்கும் என நினைக்கிறேன்🤣. இப்படித்தான் போன WTC final, 5ம் நாள், ஒவல் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட் இலவசமாக கிடைத்தது. இந்தியாவின் 6 விக்கெட்டை லஞ்சுக்கு முன்பே ஊதி தள்ளி விட்டது அவுஸ். வார நாட்களில் மகனை ஸ்கூல் கட் அடித்து கூட்டி போகலாம், ஆனால் வீட்டில அவன் என்ன பிழை விட்டாலும், கால் தடக்கி விழுந்தாலும் அதைத்தான் காரணம் என்பார்கள் 🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நான் சொன்னது தெளிவா விளங்காமல் பேசும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பிந்திய தகவல் 3ம் நாள் இரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்புண்டாம். நான் 4ம் நாள் டிக்கெட் வாங்கும் போதே நினைத்தேன்🤣. ஒன்றில் மழை குழப்பும் அல்லது 3ம் நாளே நேட்ச் கிட்டதட்ட முடிந்து விடும் போல உள்ளது😔
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்…பொதுவாகவே லோர்ட்சில் முதல் நாள் முதல் பேட்டிங் விரும்பபடுவதில்லை. அத்தோடு இன்று மேகமூட்டம் வேறு. ஆனாலும் ஆரம்ப ஆட்டக்காரர்கள், 1 டவுனை தவிர அடுத்து வீழந்த 3 விக்கெட்டும் shot selection தவறியதாலே அவுட் ஆகின. இரெண்டாவதாக பேட்டிங் எடுத்ததின் பிரதிகூலம், 4 வதாக பேட் பண்ண வேண்டி வரும். முதல் இனிங்சில் சறுக்கினாலும், அவுசின் பேட்டிங் வரிசை, தென்னாபிரிகாவினதிலும் வலிமையானகாக தெரிகிறது. குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும். அநேகமாக முடிவு வருவது உறுதி என நினைக்கிறேன். 3 ம் நாள் சில சமயம் மழை தூறலாக பெய்யலாம். ஆனால் பாதிக்காது. போட்டி சம நிலை என போட்டவர்களுக்கு 20 புள்ளிகள் லம்பாக போக போகுதோ? பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஆண்டவரே எண்டு சொல்லி போட்டு விளக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாமா🤣 ஐயோ நம்ம மனம் வேற அங்கேயே போகுதே🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தன்ர பெயரை லிஸ்டில தானே கீழ கொண்டு போய் போட்ட மனசு இருக்கே… அதான் கடவுள் 🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்… ஆனால் ஹெட்டும், ஸ்மித்தும், கேரியும் விக்கெட்டை தானமாக வழங்கி இராவிட்டால் நாளை லஞ்ச் வரை அவுஸ் ஆடி இருக்கலாம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20 (1) 🪑 புலவர் 10 (9) சுவி 20 (2) நுணாவிலான் 00 (16) 🐥 ஈழப்பிரியன் 20 (3) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) செம்பாட்டான் 00 (17) 🐥 அல்வாயான் 10 (12) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) பிரபா 10 (13) எப்போதும் தமிழன் 20 (6) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15)
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இதை தகவலறிந்த வட்டாரங்கள் ஆமோதிக்கின்றன🤣. மேலும் இருவர் double omelette சாப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன 🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாளின் முடிவில் புள்ளிகள் வெளிவரும். அடியார்கள் அமைதி காக்கவும்🤣. என்னதான் வெய்யில் அடித்தது எண்டாலும் லோர்ட்ஸ் ஆடுகளம் வழமைபோல் ஆரம்பநாளில் முதல் செசனில் பந்து வீசும் அணிக்கு சார்பாகவே அமைந்துள்ளது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஐ பி எல்லில் விட்டதை இங்கே பிடிக்கும் ஐடியா🤣 ஆ தள்ளு…தள்ளு…🤣 பிறகென்ன வாங்கோ…பழகலாம்🤣 மானாஸ் மானஸ்தனுக்கு இது முக்கியமான போட்டி, அடித்தால்தான் டீமில் நிலைக்கலாம் என்ற நிலையில் அடிக்கவும் கூடும். 1 டவுனாக இறங்கும் பச்சையப்பனும் வெளுக்க கூடும்🤣
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
வாழ்த்து கந்தப்பு டெஸ்ட் போட்டி அல்லவா அப்படித்தான் இருக்கும் 🤣
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
எனக்கு அப்போதே அன்பே சிவம் பிடித்திருந்தது. எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று. அதே போல் ஆயிரத்தில் ஒருவனும் - பார்த்து விட்டு வந்து சூப்பர் படம் என பேஸ்புக்கில் எழுதினேன் ஆனால் படம் ஊத்திகிச்சு. ஒரு வேளை எனக்கு தக் லைபும் பிடிக்குமோ? இருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வன் 2 இல் ஆடியன்ஸை வச்சு செஞ்சது “மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே”🤣.
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
மேலை நாடுகளில் ஒரு படத்தில் பிரபலம் ஆகி விட்டால் - அடுத்த பதினைந்து வருடத்தில் 5 படம் இயக்குவார்கள். அதுவே அதிகம். இவர்கள் வருடம் 2 ஆவது. ஆகவே விரைவில் உக்திகள் முடிந்து விடும். மேலும் மேற்கில் டைரக்டர் டைரக்சன் மட்டும்தானே - ரைட்டர்களுக்கும் கிட்டதட்ட அதே பங்கு உண்டு. இவர்களோ ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள். கதை இல்லாத போது சொதப்ப ஆரம்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். அனந்து இறந்த பின் பாலச்சந்தரும், சுஜாதாவின் பின் சங்கரும் அதிகம் சோபிக்கவில்லை.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) ஆஸி முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) ஆஸி முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸி இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸி போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) டிராவிஸ் ஹெட் போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கெகீஸோ ரபாடா போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) ஆஸி போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) ஆஸி
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும். நமக்கு இப்படி டிப்பி டிப் மாரி கொறிக்கிற விசயம்தான் சரி வரும். வாழ்த்து பிரபா. வாழ்த்து எபோத. மன்னிக்கவும் பிரபா, பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம் என்பது விதி. அதாவது எடி செய்யப்பட்ட பதில்கள் நிராகரிக்கபட வேண்டும். ஆனாலும் அப்படி செய்வது கொஞ்சம் ஓவராக தெரிவதால், உங்கள் பதிலை மஹாராஜ் என்றே கருதுவதாக உள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்🙏. பிகு பிரபா மஹாராசன் என்னையும் போட்டானே என மஹராஜ் வாழ்துவதாக கேள்வி 🤣.
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
அதே போல் இந்த சரக்கு தீர்ந்து போன தாத்தா இயக்குனர்களின் கொடுமைக்கு முடிவு வைக்க, தாத்தா நடிகர்களும் தேவை🤣.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
நனைந்த பிஸ்கோத்து🤣
-
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
இரும்பு டுசல்டோர்ப் என்டாலும் கட்டின கொத்தனார் தூத்துகுடி எல்லோ🤣🤣🤣… “இதுவரை சுட்டு வீழ்த்தப்படாத” ரபேலுக்கும் நடந்தது தெரியும்தானே🤣.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
சில நாடுகளில் திருமணத்தின் பிந்தான் உறவு வைக்க முடியும் என உள்ளது. சில நாடுகளில் திருமணத்தின் பின் கணவனுடன் மட்டுமே வைக்க முடியும் என உள்ளது. ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளிலும் திருமணத்தின் பின் இன்னொருவருடன் உறவு வைப்பது கிரிமினல் குற்றம் இல்லை எனிலும், விவாகரத்துக்கு போதிய காரணமாக கொள்ளப்படும்.
-
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
ரபேல்…. போல ஜேர்மன் கம்பெனியிம்… அம்பேல்? 🤣
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
மீண்டும் சொல்கிறேன் - மனைவி இப்படி திருமணத்துக்கு அப்பாலான உறவு கொண்டாரா இல்லையா என்பது இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அப்படியே நடந்து இருந்தாலும் - கணவர் நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மனைவி செய்ததாக சொல்லப்படும் ஒழுக்க கேட்டிற்கு இதுவல்ல தண்டனை. இதை செய்த கணவனுக்கு கூட, ஆத்திர மிகுதியால் இப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு mitigating factor (குற்ற குறைப்புக்கான காரணி) ஆக (நியாயப்படுதலாக ஆக அல்ல) எடுத்தாலும்…. கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டம்….தமிழ் தலிபான்களே. தீர்ப்பு எழுதும் போது ஒரு விசாரணை இவை எல்லாவற்றையும் ஆய்ந்தே தீர்ப்பு வர வேண்டும். அந்த விசாரணை முடிவு வரும் வரை எம் பதில்கள் எல்லாம் “லாம்” விகுதியில்தான் இருக்க முடியும். இலங்கையில் தீர்ப்பு சரியாக வராது என்ற கணிப்பில், நாம் குறை தரவுகளை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
கணவர் கொழும்பில்தானே. வந்து போயிருப்பார் அல்லவா? வவுனியா 4 மணி பயணம்தானே. நீங்கள் பார்த்து விட்டீர்களா? இல்லைத்தானே. ஆகவே இதில் என்ன நடந்தது என நாம் சொல்ல போதிய தரவுகள் இன்னும் இல்லை. பிகு இப்படி மனைவியில்தான் பிழை இருக்க வேண்டும் என்ற முடிந்த முடிவில் இருந்தபடி, விடயத்தை அணுகுவதைத்தான், மேலே “கொலையாளி சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்” என சில கருத்தாளர்கள் விமர்சித்துள்ளனர். அது சரியானதே.