goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
Everything posted by goshan_che
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கஞ்சா கப்ஸா கதைகளை நீட்டி, முழக்கி எழுதினாலும் அவை கஞ்சா கப்ஸா கதைகள்தான்…🤣. இந்த திரியிலேயே, கருத்து கள ஏனைய உறவுகளே தூத்துகுடி கொத்தனாரை இனம் கண்டு கொண்டுளார்கள். இதில் எப்படி நீட்டி முழக்கினாலும் ஒரு பலனுமில்லை.
-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடியும் புரியாத நுனியும் புரியாத அலட்டல். ஆ எஸ் எஸ் மோகன்பாகவத் தலைமை எடுத்த கொள்கை முடிவு இது. சாதிவாரியாக இந்துக்களை ஜன சங்கின் கீழ் ஒருங்கிணைத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்க்கு எதிராக கட்டமைக்கும் அவர்களின் கொள்கையின் அடுத்த பரிணாம படி நிலை இது. இதை யோகி ஆதிநாத் எதிர்த்தார் ஆனால் ஏனைய பல பிஜேபி மாநில அரசியல்வாதிகள், ஆதரித்ததால் ஆர் எஸ் எஸ் இந்த முடிவுக்கு வந்து, பிஜேபி கொள்கையை மாற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் எடுத்த கொள்கை முடிவு. ஆதாரம் கீழே 'சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ்' - கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு?! ஆர்.எஸ்.எஸ் சொல்லியது என்ன? இந்த சூழலில்தான் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கள்தான் தற்போதைய ஹாட் டாபிக். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்றது. அதில் பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், "சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும்.சில சமயங்களில், அரசாங்கத்துக்கு எண்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். அதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், பிரச்னை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் அது, அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். அது ஓர் அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது" என்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் கருத்தைக் கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், "ராகுல் காந்தி பேசுவதாலேயே சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலாகிவிடாது. அப்போது பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது என்ன அரசியல்?. பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். உயர் சாதியினரின் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்காது. ஓ.சி பிரிவில் கைவைத்து விடுவார்கள் என்பதால் தானே எதிர்க்கிறீர்கள். சமூக நோக்கத்தோடுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. நீங்கள் எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் புள்ளிவிவரங்கள் தானே கேட்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கூட இதனால்தான் பிரச்னை ஏற்பட்டது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி கணக்கெடுப்பு நடத்தும்போது ஓபிசியின் விவரங்களையும் சேகரிக்க வேண்டியது தானே?. பீகாரில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கூட சாதிவாரி கணக்கெடுப்பு சரியானது இல்லை என்று கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசும். முதலில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிய இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். தேர்தலுக்கு ஏற்ப அவர்களின் கொள்கைகள் மாறும். ஓட்டுவாங்க வேண்டும் என்பதற்காக மாற்றி, மாற்றிப் பேசுவார்கள். ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி, அதன்பிறகு சமஸ்கிருதம், இந்தியாவை டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது. ஓட்டு வாங்குவதில் சிக்கல் இருப்பது தெரிந்தால் ஆதரவு தெரிவிப்பது போலத் தெரிவிப்பார்கள். வாக்குகள் கிடைத்த பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். 370-ஐ நீக்குவோம் என்று சொல்லியா மெகபூபாவுடன் கூட்டணி வைத்தார்கள். இதுபோல் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆகவே அதிகாரத்தைப் பிடிக்க எப்படியான நெளிவு, சுழிவும் செய்துகொள்வார்கள். அவர்களுடைய கொள்கை இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. எனவே ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சொல்வதெல்லாம் போகிற போக்கில் சொல்லும் விஷயம். அவர்களது பேச்சுகள் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. சந்தேகத்துக்குரியது தான்" என்றார். 👆 https://www.vikatan.com/amp/story/government-and-politics/rss-insists-on-caste-wise-census-what-modi-government-will-do
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இதை முன்பே எழுத நினைத்தேன். ஆனால் பல வயது போன உறுப்பினர்களின் மன புண்படும் என நினைத்து தவிர்த்தேன். இப்போ நீங்களாகவே கேட்பதால் எழுதுகிறேன். அமெரிக்காவில் டிரம்பின் தேர்வின் பின், கோமாளி செலன்ஸ்கி எப்படி எல்லாம் வளைந்து கொடுத்து, நிலை மாறி, மாறி, முதுகு வளைந்து, அவமானப்பட்டு, தன் நாட்டின், தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் நலனை முடிந்தளவு உறுதி செய்ய முனைகிறார் என்பதை கடந்த 6 மாதத்தில் கண்டிருப்பீர்கள். நலிந்த தரப்பொன்றின் தலைமக்கு இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்பு இது. உலகின் முடிவு எப்படியும் அமையலாம், அது அவரவர் சுயநலம் சார்ந்து அமையும், ஆனால் அவர்களின் சுயநலத்தை எம் நலனோடு இணைக்க, கொஞ்சம் கெட்டிக்காரத்தனமும், நிறைய humility யும் தேவைப்படும். இவை இல்லாவிடில், எமக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இல்லை எனில் - முறிக்கப்படுவோம். பட்டோம். பூமரங் கேள்விபட்டிருப்பீர்கள் அண்ணை. நீலன் மீது வைத்த குறி ஒரு பூமரங்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அப்படியாயின் எந்த சிங்கள அரசியல் தலைவரிடமும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும், யாரும் போயிருக்க கூடாது. எமக்கு ஒரு பிரச்சனை இருந்தால்தான், தீர்வு தேவைப்படும். பிரச்சனையை என்பதை எமக்கு தருபவர்கள் உடன் பேசித்தான் தீர்வை எட்ட முடியும். இல்லை என்றால் பலம் மூலம் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை எமக்கு இருக்க வேண்டும். இந்த முறைக்கு தீர்வு திட்டம் தேவையில்லை. பலம் மட்டும் போதும். நீலன் பலம் மூலம் அன்றி, பேச்சின் மூலம் ஒரு தீர்வை அடைய முயலின் - அவர் தீர்வு திட்டத்தை எமக்கு பிரச்சனை தரும் சந்திரிக்காவிடம்தான் கொடுக்க வேண்டும். இதைத்தான் புலிகளும் பின்னாளில் செய்தனர். ரணில் மட்டும் திறமா? ஆனால் அவரிடம் புலிகள் சமாதான ஒப்பந்தமே செய்தனர்.
-
24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
அடேய் கொள்ளை அடிக்கிறது நீங்களடா🤣. மீன் கொள்ளையர்கள் மீது கரந்தடி தாக்குதல் நடத்திய இலங்கை கடல்காப்பு போராளிகளுக்கு வாழ்த்து.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கார்னி எப்போ எந்த வயதில், என்ன முறையில் பிரித்தானிய பிரஜா உரிமை எடுத்தார் என்பதை மேலே நான் தந்த ஆதாரம் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவுகிறது. இதனான் நீங்கள் இந்த திரியில் எழுதியவை எல்லாம் கஞ்சா கப்ஸா கதைகள் என்பதும் சந்தேகத்துக்கு அப்பால் நிருபணமாகியுள்ளது. மீதமாக நீங்கள் எழுதியவை எல்லாம்… சும்மா…லுலுலுலா…
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
யாரும் இந்த கேள்வியை நீலனிடம் கேட்டதாகவோ அவர் பதில் சொன்னதாகவோ நான் அறியவில்லை. ஆனால் இரெண்டு விடயங்கள் சாத்தியம். 1994/95 இல் சந்திரிகா ஒரு நேர்மையான தீர்வை தர முயல்வார் என சகல வகையான தமிழ் மக்களும் நம்பினார்கள். சந்திரிகா அனுப்பிய பாலபட்டபெந்தி தலைமையிலான சமாதான குழுவுக்கு யாழில் ஹெலிகொப்டர் இறங்கிய பல்கலைகழக வளாகத்திலேயே மக்கள் கூடி ஆரவார வரவேற்பு கொடுத்தனர். புலிகளின் ஆளுகைக்கு வெளியே இருந்த தமிழர்களும் ஏகோபித்து சந்திரிகாவை வாக்கு போட்டு ஆதரித்தனர். இப்படி பலர் தனிப்பட்டும் நம்பினர். பிபிசி சிங்கள சேவை சந்தேசியவின் பணிப்பாளர் வசந்தராஜ இலங்கை திரும்பி ரூபவாகினியை பொறுப்பேற்றார். ஆனால் சில காலம் போக, வெறுத்து போய் இலண்டன் திரும்பி தமிழ் கார்டியனில் எழுத தொடங்கினார். இப்படி ஒரு நம்பிக்கை. அல்லது அமெரிக்கா மூலம் சந்திரிக்காவை பணிய வைக்கலாம் என நீலம் நம்பி இருக்கலாம். சாகும் போது நீலனும், சந்திரிகா இனவாதிகள் குறிப்பாக ரத்வத்தை, பீடாபதிகள், கொட்டகதேனிய போன்றோரின் பேச்சுக்கு ஆடுவதால் நீலன் வெறுப்படைந்து இருந்தார் என்போரும் உளர். முழுக்க முழுக்க பொய்யான நாடகம் ஒன்றை சந்திரிகாவுடன் சேர்ந்து ஆடி இருக்கலாம். அப்படி இருப்பினும் கூட, அரசியல் கொலைகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால், நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
அடுத்த யாழ் அகவைக்கு இதை வைத்து ஒரு கதை எழுத போகிறேன். நான் மறந்தாலும் நீங்கள் நினைவூட்டுங்கள்.
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
பாவம் மாவை… அந்த தேசிய பட்டியல் சீட்டை கெஞ்சி அழுதும் குடுக்காமா விட்டுட்டாங்கள். ஏக்கத்தோட செத்திருப்பார் போல… கூட்டத்தில சிறிதரனுக்கு அங்கால இருக்கிற வெறும் கதிரையில வந்து குந்தி இருக்கிறார். கந்தையா அண்ணையிட்ட யோகசங்கரியும் கூட்டத்துக்கு போனவரோ எண்டு கேட்க வேணும்.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
மிக்க மகிழ்ச்சி. எனது நீண்டநாள் கோரிக்கையான, கனவான Ealam-Tamil Origin Elected Representatives Forum ETOERF உருவாக வேண்டும் .
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அண்மை வரை அவுசில் வலதுசாரிகள்தான் முன்லையில் நின்றனர். ஜஸ்டீன் அண்ணாவின் “தம்பு”வின் புண்ணியத்தில் - இடதுசாரி தொழிற்கட்சி அமோக வெற்றி. தம்பு வாழ்க😂
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கு பல மில்லியன் வாரிசில்லா சொத்து கிடைத்துள்ளது, வங்கி கணக்கு விபரம் அனுப்புங்கள் என்று நைஜீரியாவில் இருந்து வரும் இமெயில் போல் உகண்டாவில் இருந்து வந்தால் உடனே டிலீட் பண்ண கூடாது. உண்மையாகவும் இருக்கலாம்😂.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகள் மண்மீட்பு நிதி என குடும்பத்துக்கு ஒரு பவுண் வாங்கினார்கள். ஆனால் இப்படி ஆபரணங்களாக அவர்கள் சேர்க்கவில்லை. கொள்ளை அடிக்கவும் இல்லை. பணத்தை தங்க கையிருப்பாக (நாட்டின்/ அமைப்பின் திறைசேரி) சேமித்தால் கூட, உருக்கி தங்க கட்டியாக அல்லவா வைத்திருப்பார்கள். இதென்ன மார்ர்வாடி கடை போல் இருக்கிறது ? தமிழீழ வைப்பகத்தில் மக்கள் வைத்திருந்த நகைகளின் ஒரு தொகுதியை கணக்கு காட்டிவிட்டு, தங்க கட்டிகளாக புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகை தங்கத்தை ஆட்டையை போட்டு விட்டார்கள்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்னதில் பலதில் உடன்பட்டாலும்: இப்போதெல்லாம் இந்த “பல்லினதுவம் ஒரு வரம்” என்பதற்கு ஒரு எல்லை இருப்பதாக நான் கருதுகிறேன். ஓர் அளவுக்கு மேலானாதும், மிக விரைவானதுமான பல்லினகலப்பு, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடும் நிலையை உருவாக்கி விடுகிறதோ? ஜப்பான் - இனத்தூய்மை பேணினாலும் - 2ம் உலகயுத்தம் முன், பின் என இருவேறு பட்ட காலங்களில், இரு வேறு முறைகளில் ஐடியாக்களின் தாயகமாக இருந்து முன்னேறினார்கள். ஆகவே அவர்களின் அண்மைய 30 வருட தேக்கத்தை இதனோடு முடிச்சு போட முடியுமா? கொரியாவும் இப்படி ஒரு நாடுதான். அப்படியா? இது எனக்கு புது செய்தி.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
இது ச்ந்ம்பந்த பட்ட ஒரு சுவாரசியமான விடயம், முன்னர் இதை பற்றி நுணாவிலானுடன் தர்கித்துள்ளேன். முலன்பேர்க் தொன்மன் Muhlenberg Legend என்ற ஒரு கதை உள்ளது. தொன்மம் என்றாலே அது ஆதாரமற்ற கட்டுகதைதானே. இதுவும் அப்படித்தான். அந்த கட்டுக்கதை என்னெவென்றால் - ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் உத்தியோக பூர்வ மொழி ஆங்கிலமா, ஜேர்மனா என அமெரிக்கன் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடந்த போது, சபாநாயகர் பிடரிக் முலன்பேர்க் எனும் ஜேர்மானிய வம்சாவழியினன், ஆங்கிலம் சார்பாக வாக்களித்தார், அதனாலேயே அமெரிக்க ஆங்கில வழி நாடாகியது என்பது. ஆனால் இது உண்மை அல்ல. வெறும் தொன்மம். நடந்தது என்னெவெனில், சில ஜேர்மன் குடியேற்ற வாசி வழிவந்தோர் தமக்கு ஆவணங்கள் ஜேர்மன் மொழியில் தரப்பட வேண்டும் என கோரி, அது சபையில் விவாதிக்க்கப்பட்டு, அப்படி கொடுக்க தேவையில்லை என ஒரு வாக்கில் முடிவு எடுக்கபட்டது. இதில் ஜேர்மன் வழிவந்த மூலன்பேர்க் வாக்களிப்பை புறக்கணித்தார். எவ்வளவு விரைவாக ஜேர்மானிய வழிவந்தோர் ஆங்கிலத்தை கற்றுகொள்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது. இந்த உண்மை சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கட்டுக்கதைதான் நான் மேலே சொன்ன முலன்பேர்க் தொன்மம். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் - இந்தளவு தூரம் ஒரு தொன்மம் உருவாகி இன்றளவும் நம்பபடும் அளவுக்கு, அமெரிகாவில் ஜேர்மானிய மக்களின் வகிபாகம், நெடியது, கனதியானது. ஆங்கில, ஐரிஷ் வம்சாவழிக்கு அடுத்து ஜேர்மன் வகிபாகம் ஆரம்ப அமெரிக்காவில் இருந்தது. பின்நாட்களில் நியுஓலீன்ஸ், கலிபோர்னியா என அமெரிக்கா வாங்கிய நிலங்கள் மூலம் பிரெஞ், ஸ்பானிய இனங்களின் வகிபாகம் அதிகரித்தது. இத்தாலிய வகிபாகம் 1700 களில் ஆரம்பித்தது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
இல்லை. ஜேர்மனியர்களின் அமெரிக்கா நோக்கிய குடிபெயர்வு… முதலாவது ஆங்கிலேய குடியேற்றவாசிகளுடனேயே ஆரம்பித்து விட்டது. ஜேம்ஸ் டவுன் எனும் முதல் குடியேற்றத்தை ஸ்தாபித்தவர்களில் ஒரு ஜேர்மனியரும் இருந்தார். பெரும் எண்ணிக்கையிலான ஜேர்மானிய மக்களின் குடியேற்றம் 1600 களின் பின் அரைப்பாதியில் ஆரம்பித்து விட்டது. முதலாவது ஜேர்மனிய காலனி இந்த காலகட்டத்தில் பென்சில்வேனியாவில் அமைக்கப்படுகிறது. 2020 குடிசன மதிப்பீட்டின் படி ஏறத்தாழ 14% அமேரிக்கர் ஏதோ ஒருவழியில் ஜேர்மன் வம்சாவழியினர். இன்றைக்கு நாம் அமெரிக்கன் விடயங்கள் என அறியும் ஹாம் பேர்கர், ஹாட் டாக், கிறிஸ்மஸ்து மரம், எல்லாமுமே ஜேர்மானிய குடியேற்றவாசிகள் கொண்டு போனவைதான். இரு உலகபோர்களின் பின் மேலும் குடியேற்றம் அதிகரித்தாலும்.. ஐக்கிய அமேரிக்க நாடுகள் என்ற எண்ணக்கரு கருத்தரிக்கும் முன்பே, ஜேர்மானிய மக்கள் அந்த மண்ணில் கணிசமான அளவில் வாழ தொடங்கி விட்டனர்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
உண்மை. எப்படி பிரிதானியா இரெண்டு ஆயிரம் ஆண்டு ஐரோப்பிய இனக்கலவையோ…. அதேபோல் இரு நூறு ஆண்டு ஐரோப்பிய இனக்கலவைதான் அமெரிக்கா. பிகு உலகை கட்டி ஆளும் இனங்கள் பலரும் இப்படி கலப்பினமாக இருப்பது - ஒரு மரபணு கலப்பால் கிடைத்த அனுகூலத்தின் பலன் என்பது என் கருதுகோள். ஜஸ்டின் அண்ணா போன்றோர் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவல்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
இதேபோல் அப்போ யூகே, ஈயூ உறுப்பினர் என்பதால் - அயர்லாந்து சிட்டிசனான கார்னி - ஈயூ freedom of movement அடிப்படையிலும் யூகேயில் வாழ, வேலை செய்ய இயன்றிருக்கும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
உண்மையில் இவர் எல்லோரினதும் தாய் வீடு - இத்தாலியின் ரோம், ஸ்கெண்டிநேவியன் நோர்ஸ், ஜேர்மனியின் சக்சனியும், பிரான்ஸின் நோர்மண்டியும் எண்டும் சொல்லலாம். ஒரு காலத்தில் செல்டிக் அல்லது கெல்டிக் எனப்படும் குழுவே பிரிதானிய+ஐரிஷ் தீவுகளில் இருந்தது. இவர்களின் கடைசி அரசி பூடீக்கா. இவர்களை ரோம சாம்ராஜ்ய படை வெற்றி கொண்டு, அதேபோல் வட பகுதிகளை வைகிங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி, ரோம் விலக, சக்சனியில் இருந்து வந்தோர் ஆண்டு, அதன்பின் நோமன் படை எடுத்து வந்து ஆங்கிலோ சக்சனை வீழ்த்தி - இப்படியாக, ரோமன், வைகிங், ஜேர்மன், பிரெஞ் + உள்ளூர் செல்டிக் எல்லாம் கலந்த கலவைதான் நாம் அறியும் ஆங்கில இனம். ஓரளவு கலப்பு இல்லாதவர்கள் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்கள். அதிலும் பின்னாளில் ஆங்கிலேய கலப்பு உண்டு.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஆனால் கார்னி பிரித்தானிய பிரஜை ஆகியது இந்த வழியில் அல்ல. அவர் முன்பு கனேடி சிட்டிசனாக இருக்கும் போதே பாட்டன்/பாட்டி வழியில் ஐரிஸ் சிட்டிசன். Common Travel Area விதிகளின் படி பிரிதானியா, ஐரிஷ் பிரசைகள் அவரவர் நாட்டில் எந்த தடையும் இன்றி வாழலாம், தொழில் செய்யலாம். ஆகவே கார்னி கவர்னாகிய போது ஏலவே ஒரு ஐரிஸ் சிட்டிசனாக அவருக்கு யூகேயில் வாழ, வேலை செய்ய முழு சுதந்திரம் இருந்தது. அதன் மூலம் 5 வருடத்தை பூர்த்தி செய்து - விண்ணப்பித்து, பிரித்தானிய பிரசை ஆகினார்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஒரு பிரிட்டிஷ் பிரஜை, அல்லது பிரித்தானியவில் வதிவிட உரிமை உள்ள ஒருவரின் வாழ்க்கை துணையையை இங்கே வாழ கூப்பிடலாம், அதற்கு சில விதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து கூப்பிடலாம். இப்படி வரும் ஒருவர் இதன் மூலமாக பிரிட்டிஷ் பிரஜை ஆக ஆட்டோமெடிக்காக ஆக முடியாது. சட்டபூர்வமாக பிரிதானியாவில் 5 வருடம் வாழ்தல், அதில் கடைசி வருடம் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இங்கே வாழ்தல், ஆங்கில சோதனை, பிரித்தானியா பற்றிய சோதனை, மேலும் சில நியமங்களை பூர்த்தி செய்து, நேச்சுரலைசேசன் எனும் முறை மூலம் பிரிதானிய பிரசை ஆக மாற விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்னப்பத்தை அரசு ஏற்பதும் விடுவதும் அவர்கள் இஸ்டம். ஏற்று கொண்டால் அதன்பின் அந்த நபருக்கு பிரித்தானிய பிரசை சான்றிதழ் கொடுக்கப்படும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கார்னி பிரிட்டிஷ் அரச வம்சம் என அவிட்டு விட்டவர் நீங்கள். இன்னொரு உறவு ஆதாரம் கேட்க - நம்பினால் நம்புங்கள் என பதில் எழுதியவர் நீங்கள். பின்னர் அவர் registration மூலம், honorary citizenship மூலம் பிரிட்டிஷ் ஆகி இருக்கலாம் என ஒரு ஊகத்தை அவிழ்த்து விட்டீர்கள். நான் அவர் எப்படி கவர்னர் ஆகி சில வரிடங்களின் பின், ஏனையோரை போல பிரிட்டிஷ் பிரஜை ஆகினார் என்ற ஆதாரத்தை பகிர்ந்த பின்னும் … அவர் மனைவி பிரிட்டிஷ், ஆக்ஸ்போர்ட் என ஏதேதோ எழுதுகிறீர்கள். அவர் மனைவி பிறப்பால் பிரிட்டிஷ் எண்டால் போல அவர் ஆட்டோமேடிக்கா பிரிட்டிஷ் ஆக முடியாது. மேய்வது முழுக்க நுனிப்புல் - இதற்குள் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்ற முறைப்பாடு வேறு 😀.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கார்னி என்ன 2018 இல் பபாவா… ரெஜிஸ்டிரேசன் மூலம் பிரித்தானிய பிரஜை ஆக😂😂😂. இப்போதுதான் ரெஜிஸ்டிரேசன் என்பது சிறுவருக்கு என ஓடி விழித்துள்ளீர்கள். எனக்கு அதற்கு பதில் எழுதும் போதே தெரியும். ஆகவேதான் அதை கஞ்சா கப்ஸா கதை என அடையாளம் காட்டினேன். அதே போலத்தான் honorary citizenship கதையும். சும்மா ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது பின் மற்றையொருக்கு பாடம் எடுக்க முனைவது. நான் மேலே தந்த இணைப்பில் மிக தெளிவாக ஐந்து வருடத்தை சட்டபூர்வமாக பூர்த்தி செய்து (நேசுரல்சைசேசன்) மூலம் அவர் பிரிதானிய பிரஜை ஆகினார் என்பது சொல்லபடுகிறது. இல்லை…. இளையராஜ திரி யை போய் வாசிக்கவும். நிழலி பல விடயங்களை ஆணித்தரமாக எடுத்து சொன்ன போது…அதை ஏற்று கொண்டதோடு…என் நிலைப்பாட்டையும் தளர்த்தி கொண்டேன். இப்படி பல திரிகளில் - விடயம் தெரியாத போது நான் கேட்டறிந்த பல உதாரணங்கள் உண்டு. ஆனால் உங்களை போல் அரைகுறை அறிவு+குறை ஆங்கில புரிதல்+ சதிகோட்பாட்டு மனநிலை என ஒரு வினோத கலவையினால் விடயங்களை தலை கீழாக விளங்கி கொண்டு அதையே சரி என வந்தாடினால் - நிச்சயம் அதற்குரிய (அவ) மரியாதையை கொடுப்பேன். இந்த திரியில் நீங்கள் எழுதியது 90% இப்படி சம்பந்தமே இல்லாத துணுக்குகள்தான்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சீச்சீ அப்படி அல்ல.. இதெல்லாம் சூட்சுமான விடயம். இதை புரிய ஒரு உணர்திறன் அவசியம் கிட்டதட்ட emperor’s clothes போல… அம்மணமாக நின்று கொண்டு…அருமையான உடை உடுத்துள்ளேன் பாருங்கள் என்பார்…. வாவ் அந்த பொத்தான் ரொம்ப அழகாக இருக்கிறது என நீங்கள் சொல்லத்தான் வேணும்😀. இல்லை என்றால் நீங்கள் தியரிபடி கதைக்கிறீர்கள், அல்லது பொத்தாம் பொதுவாக மேலோட்டமாக எழுதுகிறீர்கள்😂. 40,000 ஆண்டுக்கு முன் துறைமுகம் கட்டிய ஆள்… நாம்தான் மூளை கருகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.