Everything posted by goshan_che
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில அரசு நிர்வாகம்/ஹைகோர்ட் துரத்தினால் சுப்ரீம்கோர்ர்ட்டுக்கு சில பாஜக வக்கீல்கள் சகிதம் போய் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டி வரும் 🤣. ஆனால் தோழன் பாலனுக்கு இதில் ஒருவகை மட்டும்தான் தெரியும். ஏன் என்றால் அவருக்கு செலக்டிவ்-மாலைகண்🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை என நினைக்கிறேன். அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்? அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…. கோஷானின் நிலை👇🤣🤣🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👆👍 IPL, Big Bash, Hundred etc etc என உலகெங்கும் நடக்கும் பிக்கினி கிரிகெட் திருவிழாக்களையும், தோனி போன்ற முதியவர்களை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்வதையும் சகித்து கொள்ள இது ஒன்று மட்டுமே காரணம்.
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
பிகு இப்போ கூட அன்புமணியை இராமதாஸ் தூக்கி அடிக்க காரணம் - அமித்ஷாவை சென்னையில் சந்தித்து 2026 கூட்டணி அறிவிப்பை நேரடியாக NDA யில் என அறிவிக்க அன்புமணி அவசரப்பட்டு, கிட்டதட்ட சந்திப்பது, கூட்டணி அறிவிப்பு வெளியிடுவது என்ற முடிவை எடுத்த பின்…. அன்புமணி அவசரப்படுகிறார், முதலில் அதிமுக என்ன செய்கிறது என பார்ப்போம், காலம் இருக்கிறது என முடிவு செய்த இராமதாஸ் - வேறு வழி இன்றி எடுத்த முடிவுதான் அன்புமணியை தூக்கி அடித்தல். இத்தனை காலம் எத்தனையோ ஆட்களை விரட்டி, கட்சியை அன்புமணி கையில் கொடுத்தார் இராமதாஸ் - ஆனால் அவரே கட்சியை எடுப்பார் கைப்புள்ளை ஆக்குவாதல் இப்போ அவரையே தூக்கி அடித்துள்ளார் இராமதாஸ். தமிழக அரசியலில் பாலபாடம் ஆட்சியை விட கட்சி முக்கியம். அப்படி இருந்தபடியால்தான் எம் ஜி ஆரிடம் தொடர் தோல்வியின் பின்னும் கருணாநிதி ஆட்சியை பிடித்தர். எம்ஜிஆர், ஜெ, ஸ்டாலின் அனைவரும், இதுவரைக்கும் எடப்பாடி கூட எடுக்கும் நிலைதான் இது. உங்களுக்கு கோழி கூவும் சத்தம் கேட்கும் வரை நாள் விடியாது…🤣 இதையே யாரும் யூடியூப்பர் சொல்லும் வரை - இது நடக்காத விடயமாகவே இருக்கும். #யூடியூப்பில் அறிவித்தால்தான் சூரியன் உதயமானது என நம்புவோர் சங்கம்🤣 கோஷானுக்கு உருவான கனவு, பிபிசி க்கும் உருவாகியுள்ளது🤣
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
இராமதாஸ் முகுந்தனை உள்ளே கொண்டு வந்ததே…. அன்புமணி கூட்டணி விடயத்தில் தன்னை கேட்காமல் பாஜக பக்கம் சாய்கிறார் என்பதால்தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்பதை இராமதாஸ் விரும்பவில்லை. ஆனால் அன்புமணி அவர் வாயை அடைத்து விட்டார். அதிமுகவுடன் சேர்ந்து கேட்டகலாம் என இராமதாஸ் வலியுறுத்தியும் அன்புமணி பாஜகவோடு போய் தர்மபுரியை சொற்பவாக்கில் இழந்தார் செளமியா. அப்போதே நான் சொன்னபடி கூட்டணி அமைத்தால் - செளமியா வென்றிருப்பார் என கூறிய இராமதாஸ் - கூட்டணி முடிவை இனி நான் மட்டுமே எடுப்பேன் என அறிவித்தார். இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அன்புமணியை பாஜக தம் கையில் எடுத்து கொண்டதே. அன்புமணி மூலம் யானை விளாம்பழம் தின்றது போல் கட்சியை பாஜக கட்டுபடுத்த விழைவதை உணர்ந்து, தடுக்க இராமதாஸ் எடுத்த முயற்சியே விருப்பமே இல்லாத முகுந்தனை இராமதாஸ் வலுகட்டாயமாக அரசியலில் இறக்கியது. இதுதான் அன்புமணி-இராமதாஸ் முறுகலின் பிண்ணனி. பிகு ஏனையவர்களை நக்கல் அடிக்க முன், யூடியூப் உருட்டல்களை மட்டும் உள்வாங்கி அதை இரை மீட்காமல் - கொஞ்சம் நடப்பதை வைத்து, நாலு களத்தில் இருப்பர்களோடு பேசினால், புத்தியை பாவித்து உய்தறிந்தால் நடப்பதை உணரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣
-
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம்
நல்ல வேளை தலிவா…. ஜெ இறந்து இத்தனை வருடம் ஆன பின்னாவது உங்களுக்கு தைரியம் வந்து இந்த அரிய தகவலை சொன்னீர்கள் இல்லாவிட்டால் வரலாற்றில் ஒரு மைல்கல் மறைக்கப்பட்டிருக்கும் 🤣. நம்ம தலிவரு தொடை நடுங்காம எடுத்த ஒரே முடிவு - 1996 தேர்தலில் ஜெ யை எதிர்க்கும் முடிவுதான். ஆனால் அதை கூட தன் சொந்த அரசியல் கட்சியை தொடங்க பயந்து, இரவலுக்கு குரல் கொடுக்க போய் - கருணாநிதி, மூப்பனார் நல்ல இலாபம் அடைந்து கொண்டனர்.
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
டிஸ்கி அமித் ஷா தன் டகால்டி வேலையை காட்டி விட்டார். எப்படி பால் தாக்ரே குடும்பத்தை உடைச்சு சாப்பிட்டார்களோ அதேபோல் ராமதாஸ் குடும்பத்தையும் உடைக்கிறார்கள். இதை பார்த்து எடப்பாடி சுதாகரிக்க வேண்டும். தந்தை-மகன் உறவையே இப்படி உடைப்பவர்கள், அதிமுகவை எட்டாக உடைப்பார்கள். 2026 இல் என் டி ஏ கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொன்னது இதைத்தான். சசி, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் எவரையும் உள்ளே எடுக்காது, விஜையுடன் 65 : 35 க்கு போவதே கட்சியையும், பதவியையும் தக்க வைக்க எடப்பாடி முன் உள்ள ஒரே தெரிவு. விஜையும் ஓவர் கனவில் மிகக்காமல் இதற்கு உடன்பட வேண்டும்.
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
R சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) விதிகளின்படி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரை தன்னிச்சையாக யாராலும் நீக்க முடியாது; பாமகவின் பொதுக் குழுதான் 'தலைவர்' பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும்; நியமிக்க முடியும்; ஆகையால் அன்புமணி ராமதாஸை, பாமக தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கியது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். Also Read மேலும் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே பதவி வகிப்பேன்; 2026 சட்டசபை தேர்தலுக்காகவே இந்த முடிவு என்று கூறிய ராமதாஸ், அன்புமணியை நீக்கிவிட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் வெளியில் பகிரங்கமாக கூறிவிடவும் முடியாது என்றார். Chennai-Bengaluru Expressway Extend ஆகப்போகுது! | Oneindia Tamil டாக்டர் ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பாமகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் ராமதாஸின் முடிவுக்கு எதிராக அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ராமதாஸின் இந்த முடிவு ஜனநாயகப் படுகொலை என்கிறார் பாமக பொருளாளர் திலகபாமா. திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் வீட்டை அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு அனைத்து பாமக நிர்வாகிகளையும் வரவழைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அன்புமணியின் ஆதரவாளர்களோ, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். பாமகவில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது. Recommended For You இந்த நிலையில், பாமகாவின் உட்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவியில் இருப்பவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் நீக்கவே முடியும்; டாக்டர் ராமதாஸ் நினைத்த நேரத்தில் டிஸ்மிஸ் செய்யவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். மேலும், அன்புமணியை பாமக தலைவராக நியமித்த போது, சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டுதான் முடிவு அறிவிக்கப்பட்டது; அதேபோலவே தற்போதும் பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டிதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையான அறிவிப்பை எல்லாம் ஏற்கவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். அத்துடன், பாமக தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸ், பொதுக் குழுவை கூட்ட வாய்ப்புள்ளது; அந்த பொதுக் குழுவில் தம்மை புதிய தலைவராக அறிவித்துக் கொண்ட டாக்டர் ராமதாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். https://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-has-no-authority-to-dismiss-anbumani-as-party-leader-general-council-to-convene-011-694649.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி சொன்ன “சார்” ஆளுனர் ரவிதான் என மறைமுகமாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார் டாக்டர் காந்தராஜ். பார்ப்போம் ரவி களி தின்னும் காலம் கூட வரலாம்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வந்தமா, சாமி கும்பிட்டமா, சுண்டல் சாப்பிட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் கந்தப்பு அண்ணை🤣. வீட்டில் தங்கிற ஐடியா எல்லாம் கூடாது🤣. பிகு யாழ்பாணத்தில் ஒரு வெற்று காணியை காப்பாத்துறத விட, யாழில் கடைசி இடத்தை காப்பாத்துறது கஸ்டம்போல கிடக்கு🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை அப்பாவி போல் நீங்கள் பரப்புவது இதுதான் முதல் முறை அல்ல. அதை நான் வெளிகொணர்வதும் இதுதான் முதல் முறை அல்ல 🤣. பிகு இதை fact check பண்ணாமலே எழுதுகிறேன் - உங்கள் நம்பகதன்மை மீது அப்படி ஒரு நம்பிக்கை🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
21 போட்டி….8 புள்ளிகள்….🤣 நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣. யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட…. தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
ஏன் வாரமொருமுறை மட்டும்? ஏழு நாள் இரு தடவை என்றாலும் சனம் வரும். அப்படி பட்ட ரம்மியமான இடம். உலகில் காண வேண்டிய ரயில் பயணங்களில் முதல் 5க்குள் வரும்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இதர செயல்களுக்கு ஸ்டாலினோ, தமிழக அரசோ ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. அரச ஆணைகள் முதல் சகலதும் தமிழில்தான் உள்ளது. கையொப்பத்தை ஆங்கிலத்திலோ பூனை வடிவிலோ வைப்பதால் தமிழ் அழிந்து போகாது. கையொப்பத்தை தமிழில் வைப்பதால் தமிழை வளர்க்கவும் இயலாது.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
முடியும். கட்டாயம் தமிழில்தான் இட வேண்டும் என்பதில்லை. தமிழகத்தின் ஆட்சி மொழியில் (தமிழ்), உலக, இந்தியாவின் இணைப்பு மொழியில் (ஆங்கிலம்) வைக்கலாம். கேள்விக்கு இதுதான் பதில். பிகு நான் எனது கையெழுத்தை ஆங்கிலத்தில்தான் 3ம் ஆண்டு முதல் வைக்கிறேன். இங்கே குத்திமுறியும் பலரும் அப்படித்தான். மோடி கூட ஆங்கிலத்திலும் வைத்துள்ளார். அரசியல்வாதி பேத்தனமா உளறுவான் - நாம்தான் நடைமுறை சாத்தியமாக யோசிக்க வேண்டும்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
சேம் சைட் கோல் அடிப்பது கூட பரவாயில்லை. இப்படி நெட்டை பிச்சு கொண்டு போற மாரி அடிக்கப்படாது🤣. 🤣. ….கோழி ஆங்கிலத்தில்தான் எழுதும் என்பது மோடிக்கு தெரியும். நாம் யாரும் சிங்களவர்களின் தனிப்பட்ட கைஎழுத்தை எதிர்த்து போராடவில்லை. தமிழ் பகுதியில் சிங்களத்தில் பலகை வைப்பதற்கும், சிங்களவர் ஒருவர் தன் கை எழுத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ன மொழியில் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் பெரியது. கையெழுத்து என்பது எமக்காக நாம் பிரத்தியேகமாக முடிந்தளவு பிரதிபண்ண முடியாதவாறு உருவாக்கிகொள்ளும் முத்திரை. அது ஒரு பூனையின் படமாகவும் இருக்கலாம் 🤣.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
சும்மா கடிதம் போடாமல்… கள்ளன் கூரையை பிரித்து இறங்குவது போல, இரவோடு இரவாக நிர்மலா சீதாராமனை போய் சந்தித்து காரியம் சாதிக்கும் இயலுமையை வளர்த்து கொள்ள வேண்டும்🤣.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
புலம்பெயர் அண்ணைமார், தமது உத்தியோகபூர்வ கையெழுத்தை என்ன மொழியில் போடுவார்கள்? தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழி, ஆனால் ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதே தமிழக தலைவர்கள் நிலைப்பாடு. ஆகவே தமிழில் அல்லது ஆங்கிலத்தில் போடலாம். ஹிந்தியில் போட்டால்தான் பிழை. இங்கே N M என ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவது எந்த பானிபூரிவாயன்? https://commons.m.wikimedia.org/wiki/File:Signature_of_Narendra_Modi_(English).svg
-
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
நன்றி தவெக தலைவர் விஜை அவர்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்… நெருங்கினா… பொசுக்கிற கூட்டம்… முடியுமா 💪💪💪🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சை…. தூண் பிடிக்கிற பழக்கம் எல்லாம் எனக்கு இல்லையடா தம்பி🤣.
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.