Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அப்படியா? அப்போதே அதிகம் பழக்கமில்லை. என்னை நியாபகம் இருக்குமோ தெரியவில்லை. அவர்களின் இன்னொரு உறவான யோகசங்கரி எம்பியான பின் இவர் பள்ளியில் வந்து சேர்ந்தார் என நினைக்கிறேன். மிகவும் சாதுவான குணம். அப்போ அதிகம் கதைப்பவராக நியாபகம் இல்லை. நானும் விரைவிலேயே பள்ளி மாறி விட்டேன். நிச்சயமாக. புலம் பெயர்தேசத்தில் அமைதியாக ஆனால் வினைத்திறனாக ஈழத்தமிழர் விடயத்தில் ஆமான காரியம் செய்பவர்களில் இவரும் ஒருவர். தந்தையை இரு தடவை மட்டும் சந்தித்தாதாலோ என்னமோ அவரினை போல் இவர் இல்லை.
  2. அவர் வீட்டில் படுத்திருந்து விட்டைத்தை பார்த்து கதை சொல்லுகிறார் என்றால் அதை எல்லாம் சீரியசா எடுத்தா கேள்வி கேட்பீர்கள்😀. மார்க்கானி பேங் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் ஆகும் போது அவரிடம் கனேடிய பிரஜாஉரிமை, மற்றும் பாட்டன்/பாட்டி வழி மூலம் கிடைத்த ஐரிஷ் பிரஜா உரிமை இருந்தன. அதன்பின் அவர் யூகேயில் 5 வருடங்களை பூர்த்தி செய்து, ஏனையோரை போல citizenship வழிமுறை படி பிரித்தானிய பிரசை ஆனார். ஆதாரம் கீழே: Honorary citizenship எல்லாம் நம்ம கடஞ்சா, கடைந்த பருப்பு துவையல் 😀. The StandardThe Londoner: Carney to become a British citizenMark Carney to receive citizenship / Labour figures fail to add up / Michael Caine's hazy memories / Christopher Meyer makes speedy recoveryகொசுறு கார்னியின் மனைவி பலகாலமாக (பிறப்பில் இருந்தாக இருக்கலாம்) பிரிதானியர். கார்னியின் மகள் தஜ்தையை போல ஹாட்வர்ட்டில் படிக்கிறாராம்.
  3. உங்கட ஆளும் அதிகம் மோசம் இல்லை. சொன்னது போல் ஜேர்மனியை மீண்டும் ஒரு இராணுவ தன்னிறைவு நாடாக மாற்றினால் ஆள் கெட்டிக்காரன் என சொல்லலாம். பலாலியில் கைவிலங்கோடு இறங்கல் - இப்படி வரலாம் என சொன்ன போது பலர் இங்கே அதை மிகை கற்பனை என்றார்கள். ஆனால் டிரம்ப் அண்மையில் ஒரு அமெரிக்கன் சிட்டிசன் குழந்தையை இப்படி நாடு கடத்தியுள்ளார். இன்னொரு கொலம்பியனை நீதி மன்ற ஆணையை மீறி அனுப்பி விட்டு, நேற்று ஏ பி சி நிருபர் பேட்டியில் - போட்டோஷாப் படம் ஒன்றை காட்டி அவன் கையில் ஒரு கிரிமினல் பாதாள உலக குழு முத்திரை இருந்தது என மொக்குதனமாக பொய் சொல்கிறார். எதிர்த்த இரெண்டு ஜட்ஜுகளை கைது செய்துள்ளார். அமெரிக்காவை கிட்டதட்ட முகாபேயின் சிம்பாப்வே போல ஆக்கிவிட்டார் டிரம்ப். AfD ஜேர்மனியில் ஆட்சி அமைத்தால், இதை விட பல மடங்கு நடக்கும்.
  4. அதென்ன உடான்ஸ் சாமியார் சொன்னா மட்டும் நம்பமாட்டியள்😂. பிகு ஓம் கரி, கிளிநொச்சி உடும்பரின் மகந்தான். கரி சிறுவனாக இருக்கும் போதே தாய் மனகசப்பில் பிரிந்து விட்டதாயும். 80 களின் முற்பகுதியில் (83 கலவரதோடாக இருக்கலாம்) தாயும் மகனும் சிலகாலம் அயர்லாந்தில் வசித்து பின் கனடா போயினராம். உடும்பருக்கும் அவரின் இரெண்டாம் மனைவி யோகம் என்பவருக்கும் பிறந்த பிள்ளைதானாம், கரி எனப்படும் சத்தியசங்கரி. இவர்களின் உறவான இன்னொரு சங்கரியுடன் நான் இரு வருடம் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தேன். விக்கியின் footnotes இல் நான் சொன்னதற்கு முதன்மை ஆதாரம் உள்ளது. Anandasangaree, born in Jaffna in 1973, is the son of V. Anandasangaree, a leading Sri Lankan Tamil politician,[2] by his second wife, Yogam.[3] His parents separated in 1980 and he and his mother moved to Ireland, where she had relatives.[4] They had planned to return to Sri Lanka in July 1983; but when the Black July anti-Tamil riots broke out,[4]Anandasangaree and his mother travelled to Canada on August 31, 1983.[4][5] Anandasangaree is estranged from his father and has only met him twice since 1983.[4][5] https://en.m.wikipedia.org/wiki/Gary_Anandasangaree
  5. நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம். ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு. ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.
  6. உங்களை போல டுருடோ காலத்தில் மிக கடுமையாக லிபரலை எதிர்த்த பலர், டிரம்பின் வருகை, கோமாளித்தனத்தின் பின் அதற்கு கானி ஆற்றிய எதிர்வினையின் பின் மாறி வாக்கு போட்டுள்ளனர் என்பதைதான் கடந்த மாதங்களில் ஏபட்ட கருத்துகணிப்பு, நேற்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறன. ஜி 7 நாடுகளி கார்னியும், மேர்ஸும் டிரம்ப்பை டீல் பண்ணும் விதமே சரியானது. மெக்ரொனும் கொஞ்சம் இந்த வழிக்கு வருகிறார். ஸ்டாமர் கழுவிற நீரில் நழுவுற மீனாய் இருந்து சாதிக்க முயல்கிறார். ஆனால் டிரம்ப் ஒரு playground bully. அவரது மட்டையை வாங்கி அவருக்கே மண்டையில் ஒண்டு போட்டால்தான், எதிராளியை மதிப்பார். பழைய உறவு ஓவர் என துணிந்து மேர்சை, கார்னியை போல சொன்னால்தான் டிரம்புக்கு உறைக்கும். புத்தி கூர்மை வேறு, எந்த விதத்திலும் கார்னிக்கு கிட்டவும் நிற்க முடியாத ஆள் டிரம்ப். கார்னியை கையாள டிரம்ப் கஸ்டப்படுவா.
  7. ஓம்…கனேடியன் கன்சேவேடிவ் கட்சியை ஒரு கைபார்ப்பார் போலத்தான் இருக்கு. இத்தனைக்கும் கனேடியன் கன்சேவேடிவ் கூட 51ம் மாநில கூத்துக்கு எதிர்ப்புத்தான்.
  8. மன்னிக்கவும்….. சிரிப்புகுறி தருவேன் என்பதை நம்பி மீண்டும் மீண்டும் கோமாளித்தனம் செய்வதை ஊக்குவிக்க கூடாது என்பதால் இன்றைக்கு சிரிப்புகுறி நிவாரணம் கட்🤣. இந்த லப்பர் பந்தை மிக இலகுவாக திருப்பி அடிக்கலாம். தமிழ் நாடு வளர்ந்தமைக்கு திராவிட கொள்கைக்கு/ கட்சிகளுக்கு credit குடுக்க விரும்பாமல் இப்படி கற்பனாவாத கதைகள் எழுதுபவர்கள்தான்…. Wait for it …டாஸ்மார்க் இதர கொள்கைகளால்…திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் எழுதுவார்கள் 🤣. தமிழ்நாட்டு பொருளாதாரம் வாழ்ந்தால் -ஐ ஏ எஸ் அதிகாரிகளால், அதுவே வீழ்ந்தால் - திராவிட கட்சி அரசியல்வாதிகளால் 🤣🤣🤣 இதைதான் தாம் ஒரு அரசியல் முடிவில் இருந்து கொண்டு அதற்கு ஏற்ப வியாக்கியானம் எழுதுவது என்பது.
  9. பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன். இங்கிலாந்து வங்கியின் ஆளுனரக இருந்த போது நன்றாக செயல்பட்டார்.
  10. மிகவும் விளக்கமான பதில், பல புதிய தகவல்களுடன். இளையராஜா, அவர் நிலைப்பாடு பற்றிய என் கணிப்பீட்டில் ஒரு10% அளவு மாற்றத்தை உங்கள் கருத்துகள் ஏற்படுத்தி விட்டன 🙏. நன்றி. இதில் எதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
  11. என்னது நான் 16 ஆவது இடத்திலா😱. இதன்பிறகாவது ஐபிஎல் பூராவும் மேட்ச் பிக்சிங் என்பதை நம்புங்கப்பா🤣. அப்பவே சாத்திரக்காரன் சொன்னவர் - பத்தில வியாழன் பதிய விட்டு கிளப்புமாம்🤣.
  12. இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன். இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன? இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.
  13. பல தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி. மேடையில் பாடுவது பற்றி நான் எழுதியதை கொஞ்சம் தெளிவில்லாமல் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். மேற்கத்திய பாடல்களை மேடைகளில் பாடும்போது அதற்கு ராயல்டி செலுத்தி பாடுவது போல் தமிழிலும் ஒரு வழமை இருக்கிறதா? உதாரணமாக ஜிம்மில் ஒலிக்க விடும் பாடலுக்கு இப்படி ராயல்டி செலுத்த வேண்டும் எனில் ஊரில் பஸ்சிலும், வீடியோ கடைகளிலும் ஒலிக்கும் பாடலுக்கும் செலுத்த வேண்டி வரும் அல்லவா? அதே போல் எஸ்பிபிக்கு பொருந்தும் அதே சட்டம், லக்ஸ்மன் சுருதி, ஏனைய சின்ன சின்ன டுரூப்புகள், மாரி அம்மன் கோவில் கூழ் ஊத்தும் நிகழ்வில் “ஆடல் பாடல்” செய்யும் திண்ட்டுகள் ரீட்டா குழுவினர் அனைவருக்கும் பொருந்துமா? ஆகவே தமிழில், இந்தியாவில் எதற்கு ராயல்டி கோரலாம், கோராமல் விடலாம் என்பதில் ஒரு சமச்சீர் இன்மையை நான் காண்கிறேன். அல்லது அனைவரிடமும் கோரலாம், ஆனால் உரிமையாளர் கொழுத்த ஆடுகளாகப்பார்த்து அவற்றிடம் மட்டுமே கோரும் உரிமை உள்ளவரா? இதை அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. அது ஒப்பந்தத்தில் என்ன கூறி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன். குட் பேட் அக்லி தயாரிப்பாளர் - நாம் இசையை உண்மையான உரிமையாளரிடம் வாங்கி விட்டோம் என்றே கூறி உள்ளனர். ஆகவே இளையராஜ இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவருக்கு சொந்தமா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக ஒரு படத்தின், படைப்பின் கதை, வசன, இசை முழு உரிமையும் தயாரிப்பாளரிடமே இருக்கும். மத்திய, பிற்காலங்களில் ராஜா இதற்கு மாறாக ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அப்படி எனில் அந்த பாடல்கள் மட்டும் அவருக்கு சொந்தமாகலாம். நடந்தது இதுதான் எனில் - எஸ்பிபி பக்கம் தவறு உள்ளது. ஆனால் யூடியூப் இல்லை என்ற துணிவில், உலகம் முழுவதும் இருந்து மெட்டுக்களை எடுத்து பாடல் போட்டு விட்டு ஒரு இலவச கிரெடிட் கூட போடாத “உருவல் ஞானி” க்கு இதை தட்டி கேட்கும் வர்த்தக உரிமை இருப்பினும் தார்மீக உரிமை இல்லை என்பதே என் வாதம்.
  14. முயலுக்கு மூணேகால் கால்தான். சந்தேகமேயில்லை. இத்துணை நீட்டி முழக்கி உள்ளீர்கள் - பாவமாக இருப்பதால் இரெண்டு சிரிப்புகுறி இலவசம்.
  15. இளையராஜ கொப்பி அடித்த படங்கள் எதிலாவது அதை கிரெட்டில் போடும்படி செய்துள்ளாரா? இல்லை. தான் சொல்லாமல் கொப்பி அடித்தால் அதுக்கு பிடிபட்டபின் காரணம் சொல்வார். ஆனால் ஜீவி பிரகாஷ் கதை பொருத்தம் கருதி, வெளிப்படையாக இளையராஜா பாடலை கையாண்டால் அது ஆண்மை அற்றதனமா?
  16. ஒவ்வொரு பிரபலத்தினதும் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அலசதேவையில்லை. என்பது என் நிலைப்பாடு. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என மறுதரப்போ, மூன்றாம் தரப்போ புகார் கூறும் வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் பொதுவெளியில் நடந்து கொள்ள என ஒரு முறை உள்ளது. இளையராஜாவிடம் தன்னை விட நலிந்தோரை தூக்கி போட்டு மிதிக்கும் ஒரு கேடு கெட்ட குணம் உள்ளது. பத்திரிகையாளரை, ரசிகரை, இசை ஆர்வம் உள்ள சிறுவனை அவர்கள் சுயமரியாதையை சீண்டும் படி பொது வெளியில் அவமரியாதை செய்யவார். ஆனால் கோவிலில் அவமரியாதையாக அவர் நடத்தப்பட்டால், அந்த அந்நீதியின் முன் நவதுவாரங்களையும் மூடி கொள்வார். அகங்காரமே கூடாத விடயம் - அதிலும் அகங்காரத்தை - ஆட்களின் ஸ்டேடஸ் பார்த்து காட்டுவது எவ்வளவு கீழ்தரமானது? இந்து இறையியலின் மிக அடிப்படையான விடயம் நான் என்ற மமதையை அழிப்பது. இந்த மமதையை அழிக்காமல் மனமுருகிபாடி, சாமியார் வேடம் போட்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக. ஆரம்பகால பாடல்கள் திரைப்பட நிறுவனன்வ்களுக்கும், பிந்தைய இளையராஜ ஒப்பந்தம் போட்ட பாடல்கள் அவருக்கும் உரியன என தீர்பாகும் என எதிர்பார்க்கிறேன். மேடையில் பாடுவதற்கு எந்த இசையமைப்பாளருக்கும் பணம் கொடுப்பதாக நான் அறியவில்லை. ஆதாரம் தந்தால் அறிந்து கொள்வேன். எல்லாம் பிடிபட்ட பின்புதான். யூடியூப் வரும் வரை நானே இசை பிரம்மா என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது. என்ன காரணம் சொன்னாலும் களவு, களவுதானே. அதாவது இளையராஜ ஜீவி யை அண்மையில் சொன்னது போல சொல்வதாயின், ஆண்மை அற்ற தன்மை🤣.
  17. மேஸ்டிரோ… பேஷ்…பேஷ்…காப்பின்னா மேஸ்டிரோ காப்பிதான்😂👇 மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பத்தவேணும் கர்த்தரு…
  18. சகல விடயத்திலும் அணி பிரிந்து அடிபடத்தேவையில்லை😂. ஆர் செய்தாலும் தப்பு, தப்புத்தான். முன்பே ரஹ்மான் பல ஸ்பானிய இதர மொழி பாடல்களை அப்படியே உருவி பாவித்தமையை கண்டுள்ளோம். யூடியூப்பில் பல வீடியோக்களும் உள்ளன. ராஜாவும் இப்படி உருவி உள்ளார். எவ்வளவு பணம் இருக்கு, இசையை பாவிக்க முன்னம், உரிமையாளருக்கு கொஞ்சம் கொடுத்து, பெயரை படத்தின் முடிவில் ஓடும் கிரெட்டிசில் ஒரு மூலையில் போட்டால் ஒரு சர்ச்சையும் வராது. ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் களவு எடுத்து மாட்டி கொள்வது😀. ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும். அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர் பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார் மெட்டுக்களை திருடினார் இதில் 4 வது மட்டுமே இதுவரை ரஹ்மானுக்கு பொருந்தும்.
  19. அறவே இல்லை. இதில் தியரி, நடைமுறை வேறுபாடு ஏதும் இல்லை. தேர்தல் அரசியல் மூலம் வந்தாரோ, இல்லை நியமன எம்பியாக ராஜ்யசபா மூலம் வந்தாரோ மன்மோகன் ஒரு அரசியல்வாதிதான். ஐ ஏ எஸ் அதிகாரி அல்ல. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் பொருளாதாரத்தை திறப்பது என்ற கொள்கை முடிவை எடுத்து, தேர்தலில் வென்றதும் அதை நடைமுறைபடுத்கியது. அதற்கு தக்க பொருளாதார வல்லுனர் என்பதால் சிங் உள்ளே - நியமன அரசியல்வாதியாக கொண்டு வரப்பட்டார். ஆகவே இங்கு கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் காரிய கமிட்டி எனும் அரசியல்வாதிகள் கூட்டு + ராவ் + சிங். புலிகள் மூலம் ரஜீவை வெளிநாட்டு (சி ஐ ஏ) உளவு அமைப்பு சந்திரசாமி மூலம் கொலை செய்ததே - ரஜீவ் அவர்கள் விரும்பிய வகையில் இந்திய பொருளாதாரத்தை திறக்க உடன்படமாட்டார் என்பதாலேயே எனும் ஒரு சதி கோட்பாடு கூட உண்டு. ரஜீவை அகற்றி விட்டு அந்த இடத்துக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போதே அவர்களுடன் நெருங்கிய ராவ், கேம்பிரிட்ஜில் படித்த சிங்கை கொண்டு வந்து சி ஐ ஏ காரியம் சாதித்தது என்பார்கள். இந்தியாவின் பொருளாதார கொள்கையை ஐ ஏ ஏஸ் அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில் - ரஜீவை கொண்டிருக்க தேவையே இல்லை ( இந்த சதி கோட்பாடு உண்மை எனில்). ஆனால் உண்மையில் இந்த சதிகோட்பாடு எதுவும் தேவையில்லை. நீங்கள் ஒரு சதி கோட்பாட்டில் உழலும் நபர் என்பதால் அதை சொல்லியாவது புரியவைக்க முயல்கிறேன். மிக அப்பட்டமான உண்மை - எந்த நாட்டிலும், அது ஒரு அதிகாரிகள் குழாமால் ஆளப்படும் technocracy யாக இல்லாதவிடத்து, கொள்கை முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே. இதை ஏற்கனவே பல உதாரணங்களோடு விளங்கபடுத்தியாயிற்று. ஆனால் வழமை போலவே உங்கள் குறை புரிதலை அல்லது தவறான வியாக்கியானத்தை நடைமுறை என நிறுவ முயல்வது மட்டுமே உங்கள் அந்தரிப்பாக இருக்கிறது.
  20. சந்திரசேகரன் ஐயா தனது ஊரிலும் சிவனொளிபாத மலையின் ஆங்கில பெயரான Adam’s Peak எனும் பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மேலதிக பெயர் வைக்கும் ஆலோசனைகளுக்கு please contact uDanceSamiyar@uruttuu.com
  21. இதென்ன பிரமாதம்… குறிகாட்டுவானின் சக்சசை பார்த்து விட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் தயாரிப்புகள் கல்லடி, கல்முனை, போன்ற பெயர்களில் எல்லாம் வர முஸ்தீபாம்😀. திருகோணமலை நானாமார் தமெக்கென பிரத்தியேகமாக கிளிவெட்டி என்ற பிராண்டினை இறகுகிறார்களாம்😀.
  22. இதென்ன கொட்ட்டா பட்டி ஜட்டியா? கொடியில் இருந்து உருவி கசங்கலோடு அப்படியே போட🤣. லிமிடெட் எடிஷன் நைக் ஐயா… வாங்கும் போதே கறுப்பு வெள்ளை பெட்டியில் ஒரு ஐபோனை விட கியாதியாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும். வாங்குவதற்கு மூன்று வருட வெயிட்டிங் லிஸ்ட். அப்போதும் எல்லாருக்கும் விற்க மாட்டார்கள் - வாங்குபவரின் profile எல்லாம் செக் பண்ணி, ஏற்புடையதாகின் மட்டுமே விற்பார்கள். கிட்டதட்ட ஒரு பெராரே கார் வாங்குவதற்கு சமன். இதை கையால், மிஷினில் எல்லாம் தோய்க்கப்படாது. டிரை கிளீந்தான். பிறகு அதை அப்படியே மடிப்பு கசங்காமல் அயன் மேசையில் எடுத்து வைத்து, பூப்போல எடுத்து அணிய வேண்டும். பிகு குறிகாட்டுவான் கம்பெனி கூட இதை போல - “நெடியகாடு” என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷன் ஐட்டம் இறக்கவுள்ளார்களாம்.
  23. ஒரு பந்தா பரமசிவம் ஊரில் இருந்து டுபாய் போய் மிகவும் கஸ்டபட்டு உழைத்து ஊரில் நல்ல வீடு வளவு எல்லாம் வாங்கினாராம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் புது வகை போன், புதுவகை கைசெயின் என்ன புதிது, புதிதாக கொண்டு போய் போட்டு பந்தா காட்டுவாரம். இந்த முறை தங்கைக்கு பலகோடி சீதனம் கொடுத்து ஒரு கலியாணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ, நீங்கள் ஜொலி ஜொலிப்பாக இருந்தால் மாப்பிள்ளை டல்லாக தெரிவார் எனவே மிகவும் சாதாரணமாகவே நீங்கள் கலியாணத்துக்கு வர வேண்டும், வாட்ச் ஈறாக எதுவும் கூடாது என கறாராக சொல்லி விட்டார்களாம். பந்தா காட்ட என்றே பிறந்த நம்மாள் இதை கேட்டு ரொம்ப அப்செட். ஒரு வழியாக மூளையை கசக்கி, தங்கை கலியாணத்தில் பந்தா காட்ட ஒரு வழியை கண்டு பிடித்தாராம். அதாவது நல்ல உயர் ரக, பெறுமதியான, லிமிடெட் எடிஷன் நைக் ஜட்டி ஒன்றை வாங்கி, அதை போட்டு கொண்டு, வேட்டியை கொஞ்சம் உயர்த்தி மடிச்சு கட்டி கொண்டு பந்தி பரிமாறினால், எல்லாரும் அதை காண்பார்கள், நல்ல பந்தாவாக இருக்கும். இதுதான் அந்த பிளான். திருமண நாளும் வந்ததாம், எங்காளும் திட்டமிட்ட படியே பந்தி பரிமாறினாராம். ஊரில் எல்லாரும் வைத்த கண் வாங்காமல் தன் ஜட்டியை பார்ப்பதை கண்டு எங்காளுக்கு பெருமை பிடிபடவில்லையாம். கொஞ்சம் வெட்கப்பட்டு பார்த்த பெண் பிரசுகளுக்கு… “ வெட்கபடாமல் பாருங்கோ… டுபாய்ல இப்ப இதுதான் பேஷன்…ஷேய்க் கூட இப்படித்தான்” என ஊக்கம் வேறு கொடுத்தராம் நம்மாளு. ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து… களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்… அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.