Everything posted by goshan_che
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்…. அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்… புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்…. திருட்டை ஒழிக்க முடியாது.
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
👆👇 கிட்ட நெருங்கி வாடா…கர்லா கட்ட உடம்புகாரா
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா (தமிழ் தேசிய) தாய் கொண்டு வந்ததை…. (தம்பிகள்) தாலாட்டி வைத்ததை (பிஜேபி) நோய் கொண்டு போகும் நேரமம்மா….
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை Published:14th Mar, 2025 at 6:20 PM பரமசிவன் பாத்திமா படம். செய்திகள் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். Updated:14th Mar, 2025 at 6:20 PM ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி உள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் கதை காதலை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. https://www.dinamani.com/amp/story/cinema/cinema-news/2025/Mar/14/paramasivan-fathima-movie-trailer டிஸ்கி #கருடா செளக்கியமா🤣
-
பார்த்தீனியம்
உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.
-
பார்த்தீனியம்
சீ…பார்தீனிய விசம் பற்றிய கவிதை அருமை…. பூச்சி மருந்தைக்கூட இனிக்க இனிக்க பருக்குவது எல்லாம் வேற நிலை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி டக்கு டிக்கு டோஸ் எண்டு எதையாவது அடிச்சு விடுவம்🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அழைப்புக்கு நன்றி பையா. ஏலவே சொன்னது போல் இதில் அறவே ஈர்ப்பு இல்லை. அடுத்த போட்டியில் சந்திப்போம்.
-
சிம்பொனி என்றால் என்ன?
ஆம் இந்த லிஸ்டில் சேர வேண்டியவர்தான் இவரும். எஸ் ஏ ராஜ்குமார் பிடிக்கும் எண்டால் உங்களுக்கு மரகதமணியும் பிடிக்கும். வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா…அத்தோடு எஸ் பி பி (சிகரம்), ஹரிகரன் (காதல் வேதம் ஆல்பம்) - உண்மையில் புண்ணியம் செய்த காதுகள் நம் காதுகள். எனது இசை ரசனை கொஞ்சம் bipolar நோய் போல🤣… ஒரு நாள் ரஹ்மானை கேட்க எரிச்சலாக இருக்கும் … அன்று பட்டுகோட்டையார், கண்ணதாசன், அப்படியே ஓ ரசிக்கும் சீமானே, பம்பாய் சகோதரிகள், சஞ்சய் சுப்ரமணியம் என ஜூக்பாக்ஸ் ஓடும். மறுநாள் நானும் ரஹ்மானும் மட்டும் ஒரு லோங் டிரைவ், இடையில் ஆங்கில பாடகர்களும் ஏறி கொள்வார்கள். ஹாரிசும் ஓடி வந்து தொத்திகொள்வார். மூன்றாம் நாள் ராஜா, விஜயகாந்த், ராமராஜன், பிரபு நேரே வண்டி கிராமத்துக்கு போய்விடும். வாக்கிங் போகும் போது அனிருத் அநேகம் கூடவே சத்தம் போட்டுகொண்டே வருவார். சில நாட்களில் அதுவே இரைச்சலாக இருக்கும், திரத்தி விடுவேன். சிட் சிறிராமை சேர்த்து கொள்வேன். இப்படி ஒவ்வொருவரும் ஒரு லூப்பில் வந்து கொண்டே இருப்பார்கள். பாலசந்தருக்கே அனந்து இப்படிதான் என்பார்கள். ஆனால் திரைமறைவில். பாரதிராஜா வெளிப்படையாக பாக்யராஜ் போன்றோரின் திரைக்கதை, கதையைத்தான் பாவிதார், டைட்டிலிலும் போட்டார் என நினைக்கிறேன். ஒரு பேட்டியில் வேதம் புதிது கதை கூட யாரோ மதுரையில் அதை நாடகமாக போட்டவரின் கதை என பாக்யராஜ் சொல்லி இருப்பார்.
-
சிம்பொனி என்றால் என்ன?
உண்மைதான். ஏதாவது ஒரு சஞ்சீகையோடு வாரம் இத்தனை பக்கத்தை நிரப்புவேன் என டீலுக்குகாவது போகாமல் சமாளிக்க முடியாது. தமிழில் ghost writers போல் இன்னொருவருக்காக எழுதி உழைக்க மார்கெட் உள்ளதா?
-
தூத்துகுடி கொத்தனாரு….
நன்றி… இதை கொஞ்சம் free யாகத்தான் விட வேண்டும் போல இருக்கிறது. மாறி கொண்டிருப்பதுதானே கலாச்சாரம். கேப்டன் மகள் படத்தில் வரும் “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” என்ற பாடல் அருவருப்பானது, கெட்ட உள்ளார்த்தம் உடையது என கூறி அதை என்னை வீட்டில் கேட்க விடமாட்டார் என் அப்பா🤣. இது ஒரு சின்ன மேட்டர் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. அதில் என்ன விரசம் என்பது இன்னும் விளங்கவில்லை🤣. இப்ப கொத்தானாரை கேட்டதும் நாமும் பூமர் அங்கிள் போல் ரியாக்ட் பண்ணுகிறோமோ தெரியவில்லை. மேற்கத்தை சமூகம் இதை எல்லாம் தாண்டி வந்தும், இன்னும் ஓடி கொண்டுதானே இருக்கிறது. அடியோ சீரழியவில்லை என்பது நம்பிக்கை தருகிறது. சாளினி ஆரம்பத்தில் அடக்கமாகதான் இருந்தவர். பின்னர் கொமெண்டுக்கு, பதில் சொல்லி கீழ்தரமாக பதில் சொல்லி போடும் வீடியோக்களின் பிரபலத்தை பார்த்து விட்டு மாறினார். கண்ணுக்கு முன்னால் நடந்த சீரழிவு அது. குட்டி மியாவும் பாதி ஈழத்தமிழர்தான்.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இது ஏற்புடையதுதான்.
-
சிம்பொனி என்றால் என்ன?
ஜாம்பவான் ஊட்டாண்ட போனதும்… தன்னை வைத்து இலவச விளம்பரம் செய்துகொண்டார்கள் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பாதது சிறிலங்கன் ஏர்லைன் பூர்வ ஜென்ம புண்ணியம் 🤣 அந்த சின்ன கட்டுரையில் பல இசைகளை கேட்க்ககூடிய லிங்குகள். உங்களுக்கும் சாருவுக்கும் நன்றி. Cam girls மாதிரி ஜிபே டீடெய்லை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு சாரு இறங்கி விட்டது நெருடலாக உள்ளது. நாங்கள்தான் பிழை விடுகிறோமோ? தெரிந்தது, பாதி தெரிந்தது, தெரியாதது பற்றி எல்லாம் யாழில் இலவசமாக எழுதி🤣.
-
சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!
யாரின் சொந்த பாதுகாப்புக்கு? சீமான் அப்போ வீட்டில் இல்லை. நீதிபதி பம்முறார்.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
கடலில் முழு ஆட்சியும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான். கரையில் இருந்து போகும் படகை இலங்கை எல்லையை தாண்டுமா இல்லையா என தமிழக அரசு மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது. திரும்பி வரும் போது படகில் இலங்கை மணக்கிறதா என சோதிக்கவும் முடியாது. படகில் ஜிபிஎஸ் பூட்டி, எல்லை தாண்டும் முதல் எச்சரிக்கலாம். தாண்டினால் தண்டிக்கலாம். ஆனால் இதை கடலில் ஆட்சி அதிகாரம் உள்ள மத்திய கடலோரகாவல் படைதான் செய்ய முடியும். இலங்கை கடலில் நடப்பதை தங்கச்சிமடம் சப் இன்ஸ்பெக்டர் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முடியாது என தெரிந்தும், குறை சொல்ல வேண்டும் என்பதால் வைக்கப்படும் கோரிக்கை.
-
சிம்பொனி என்றால் என்ன?
Royal Philharmonic Orchestra விந்தளத்தின் எதிர்வரும் நிகழ்வுகள் பகுதியில் ஒரு விபரிப்பு இருந்தது. வேறு எதுவும் என் கண்ணில் படவில்லை. ஆராய்ச்சி கட்டுரைகள் போல் இதுவும் கட்டாயம் peer review வுக்கு உட்படுத்தபடும் என நினைக்கிறேன். சுப்புடு மாரி யாராவது எழுதி இருக்க கூடும். கண்ணில் படவில்லை.
-
தூத்துகுடி கொத்தனாரு….
உடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது. இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது. பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை. ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது. இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான். இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா. மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம். இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள். குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும். இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார். அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”. சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது. பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு. சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது. தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது. இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன். ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது. தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா? பிகு பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.
-
சிம்பொனி என்றால் என்ன?
ஓம்… ஏசி..ஏசி நானும் அவர் பாட்டோடுதான் வாழ்கிறேன்🤣. தமிழ் திரையிசையை பொறுத்தவரை 75-90 பிறந்தவர்கள் மிக அதிஸ்டசாலிகள். எங்கள் தாலாட்டை ராஜாவும், ரொமான்ஸ்சை ரஹ்மானும் பாடி நின்றார்கள். இவர்கள் இருவரும், தாயகபாடல்களும்தான் எம் வாழ்க்கைக்கே பிண்ணனி இசை. அதிலும் நான் “மேயாத மான்” முதல் “தூத்துகுடி கொத்தனாரு” வரை இசையை ரசிப்பவன் (ஹெட்போன் போட்டு கொண்டு கேட்கவும்🤣🔞). ஆகவே நான் ராஜா வெறுபாளன் அல்ல, சின்னதாயி மகனின் சின்னதனமே எனக்கு பிடிக்காதது. ரஜேந்தர், சங்கர் கணேஷ், சிற்பி இவர்களின் படைப்புகள் அற்புதம். பலர் இதை ராஜா பாட்டு என்றே நினைப்பார்கள். அதே போல் ராஜா, ரஹ்மான் ஏனோ தானோ என போட்ட பாடல்களும் உண்டு.
-
சிம்பொனி என்றால் என்ன?
பீத்தோவன் இல்லை, மொசார்ட் தானாம் 8 வயதில் இதை செய்தார்.
-
சிம்பொனி என்றால் என்ன?
இந்த இனம் மிக நெடியது அண்ணை. எந்த ஒரு தனி மனிதனும் அவர்களின் செயலும் இந்த இனத்தின் பெருமையை கூட்டாது, குறைக்காது. எங்கே நான் எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன் - எனது பார்வையில் இளையராஜா செய்தது சாதனைதான் ஆனால் இந்தளவு ஓவர் பில்டப் தேவையில்லை. அடுத்தது அவரின் அகங்காரம் - அது நிச்சயமாக கண்டிக்கபட வேண்டும். தமிழர் நல்லா இசையமைப்பார் என்பதால் அநாகரீகமாக நடக்கும் உரிமையை அவர் பெறவில்லை.
-
காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
முஸ்லீம்கள் அல்லாவை பயந்து கொள்ளுங்கள் என சொல்வார்கள். யாழ்கள சீமானியர்கள் இந்த வீடியோவை பார்த்த பின்… விஜயலட்சுமி சொல்வது எல்லாமும் பொய் ஆக இருக்கவேண்டும் என கடவுளை வேண்டி கொள்ளுங்கள்.
-
சிம்பொனி என்றால் என்ன?
பீத்தோவன் என நினைக்கிறேன் பதின்மவயதுக்கு வர முன் குழந்தையாக சிம்பொனி அமைத்தாராம். யாரோ ஒரு பையன் எனக்கும் சிம்பொனி அமைக்க ஆசை என சொல்ல - நீ செய்வது சினிமா பாட்டு போல இருக்கிறது என பொதுவெளியில் அவமானபடுத்தி உள்ளாராம் ராஜா. புளுசட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.
-
சிம்பொனி என்றால் என்ன?
ரஹ்மான், ராஜாவை நான் ஒப்பிடவில்லை. ஆனால் ராஜா நிச்சயம் விருதுகளுக்கு பின்னால் ஓடும், அதற்காக அரசியல் சாயம் கூட பூசி கொள்ளும் ஒருவர். எல்லோரும் ஆஸ்கார் நாயகன், ஆஸ்கார் அது, இது என அலப்பறை பண்ணி கொண்டிருக்க சத்தமில்லாமல் 2 ஆஸ்காரை ரஹ்மான் எடுத்து வந்தார். என்னை பொறுத்தவரை ரஹ்மான் ஆஸ்கார் எடுத்தது ராஜாவின் கர்வத்தின் மீது விழுந்த மரண அடி என்றே நினைக்கிறேன். தன்னோடு கோவித்து கொண்டு, மணிரத்னமும், பாலச்சந்தரும் சேர்ந்து, அறிமுகபடுத்திய தனக்கு வேலை பார்த்த பையன். ஆஸ்காரை தனக்கு முன் எடுத்துவிட்டான் என்பதை அவர் இன்று வரை ஏற்றுகொள்ள முடியாமல் அவதிபடுகிறார். இனி ஆஸ்கார் எடுத்தும் பயனில்லை (ரஹ்மானுக்கு பிறகு எனவே வரலாறு பதியும்). ஆகவே நானும் ரெளடிதான் என பத்மவிபூசண், சிம்பொனி என எதை எதையோ எல்லாம் முயல்கிறார். இது எதுவுமே தேவையில்லை - அவருக்கான இடம் அபப்டியேதான் இருக்கிறது.
-
சிம்பொனி என்றால் என்ன?
இளையராஜா என்ற இசையமைப்பாளரை நான் குறை ஏதும் கூறவில்லை. ஆனால் இளையராஜா என்ற தனிமனிதன் வேறு, இளையராஜா என்ற இசையமைப்பாளர் வேறு, இளையராஜா என்ற பிரபலம் (celebrity) வேறு. செலிபிரிட்டி என்றால் சமூகம் செலிபிரேட்பண்ணும் அதாவது கொண்டாடும் மனிதன். அப்படி சமூகம் கொண்டாடும் மனிதருக்கு அவர் அலப்பறை பண்ணினால், சமூகத்தில் இருந்து விமர்சனங்கள் வருவது தவிர்க்கவியலாதது. அவரின் மிக உன்னதமான இசையை ரசிக்கிறோம் ஆனால் நாம் ரசித்ததுதான் அவரின் இன்றைய சுக வாழ்வுக்கு காரணம். ஆகவே அவர் ஒரு service provider நாம் ஒரு customer. கஸ்ட்மர் முகம் சுளிக்கும் படி நடந்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும், இளையராஜா ஆயினும், இலோன் மஸ்க் ஆயினும். அவரின் இசையை ரசிப்பதால் அவரின் அலப்பறைகளை சகித்துகொள்ள வேண்டியதில்லை.
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
அப்போது கூட தெரியவராத ரகசிய கூட்டணிகளும் உண்டு.