Everything posted by goshan_che
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி. அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே? முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா. அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
வாழ்க்கை முடிவில் எம்மை சூழ இருப்பவர்கள், வரும் வரலாறு எம்மை கூட்டி கழித்து பிளஸ் சா? அல்லது மைனசா என ஒரு அறுதி கணிப்பை எழுதும். முன்னோடி போராளி, சமரசமில்லாத சாதிய எதிர்பாளர் என்ற மிக பெரிய பிளஸ். போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்த போது அதை வெளியே இருந்து பலவீனபடுத்த தன்னாலான சகலதையும் செய்த ஒருவர், அதன் மூலம் முள்ளிவாய்க்கால் அவலம் உட்பட்ட அவலங்களில் மறைமுக பங்கெடுத்தவர் என்ற மிக பெரிய மைனஸ். எனது பார்வையில் மைனசே விஞ்சி நிற்கிறது. சார்ந்தோருக்கு அனுதாபங்கள். "What's in a name? That which we call a rose by any other word would smell as sweet." பெயரில் என்ன இருக்கிறது, நாம் ரோசா என அழைப்பதை வேறு எந்த பெயரில் அழைத்தாலும், அது அதே நறுமணத்தையே தரும். -ஷேக்ஸ்பியர்-
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள். இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர். இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது. இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார். கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது. நிற்க, இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது. அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்). ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள். ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது. இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார். அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது. இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல. உதாரணம் மூலம் சொல்வதாயின், திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி. பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி. இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல். வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை. டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை. தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன். எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. அதன் ஒரு வெளிப்பாடே இது. இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை. மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வென்றால் மாலை, வெல்லாவிட்டால் பாடை 🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
இதெல்லாம் திமுக, அதிமுக வை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் எந்த கட்சியும் சாராதவன். ஆனால் சீமான் வெறுப்பாளன். என்னோடு பந்தயம் கட்ட கேட்டா, முக்கு சந்தில் நின்று… நான் சதாம் ஹுசைனை பார்த்து கேட்கிறேன்… நான் ஜார்புஷ்சை பார்த்து கேட்கிறேன்… என சவால் விடுவது நியாமில்லை🤣.
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
சிங்கமும், புலியும் இல்லாத நாட்டில் மனிதர்கள் சிங்கம், புலி என அடிபட்ட ஒரே நாடு சிறிலங்காதான்🤣. காட்டில் பெரும்பா லும் ஆண் சிங்கம் இரை தேடுவதில்லை. மனிசி கொண்டு வாறத சாப்பிட்டு விட்டு, ஹாயாக தூங்குவது, ஆட்புலத்தை பாதுகாப்பது, அந்த வேலைக்கு யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆவது - இவைதான் அவரின் வேலைகள். அப்ப வீட்டோட மாப்பிள்ளைதானே🤣
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
வீட்டோட மாப்புள்ள என்றால் மரியாதை அம்மட்டும்தான்🤣
-
விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான்
மொழி பெயர்ப்பு - தம்பி வாடா சேர்ந்து விளாடலாம். ப்ளீஸ்டா தம்பி🤣 ஆரம்பத்தில் விஜைக்கு தூது விட்டார். விஜை பெரியாரை தூக்கி கொண்டாடியவுடன் கோபத்தின் உச்சிக்கே போய் லாரில அடிபட்டு செத்துருவேன்னு சாபம் எல்லாம் விட்டார். இப்போ மறுபடியும் தூதுப்படலம். நேற்று இது. இன்று - இந்திய, திராவிட கட்சி தவிர வேறு எல்லாரிடமும் கூட்டணி வைப்பாராம். விஜை அதிமுகவையே 90 சீட் கேட்டு அலற விட்டதாக சொல்கிறார்கள். சீமானை🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
அதான் இன்னொரு திரியில் இந்த படபடப்பை பார்த்தோமே அண்ணை🤣. சீமான் தனித்து நின்று 2026 இல் எத்தனை வாக்கு வீதம் வாங்குவார் என ஒரு அருமை அண்ணனிடம் பந்தயம் கட்ட கோரினேன் - ஆள் எஸ்🤣. பிகு சீமான் கிடக்கட்டும், லா செஷப்பலுக்கு என்ன ஆயிற்று? கூட்டம், கூட்டமாக ஆபிரிக்க, அரேபிய இளைஞர்கள் மொய்த்து நிற்கிறார்கள். தமிழ் கடைகள் அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை - கொஞ்சம் தள்ளி போய் பார்க் பண்ணலாம் என போனால் வீதியிலேயெ டெண்ட் அடித்து வாழ்கிறார்கள். காரை அங்கே பார்க் பண்ண பயத்தில் இறங்காமலே வந்து விட்டேன். நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா? செய்வீர்களா? செய்வீர்களா?
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார். அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார். ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣. எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார். சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார். அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாயகன் மீண்டும் வரான்… எட்டுத்திக்கும் ஜெயம்தானே🤣
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள். முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை. காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன். தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட். கருவாடு மீனாகிறது🤣
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன். தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
வாஸ்தவம்தான்
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
சிங்கத்துக்கு எண்ணை பூசினால், பூசின பிக்குவுக்கு சிங்கம் பாலூத்தி விடும் என்பதால் தவிர்த்திருக்கலாம்🤣. இப்பதான் முடியை வெட்டி நல்லா முழுகி போட்டு, நல்லெணை வச்சு மேவி இழுத்து கொண்டு வந்து யாழை திறந்தேன்….🤣.
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
தர்மபிரபோ, உங்கள் புரோபைலை ஒரு நோட்டம் விட்டேன்….கருத்துக்களை சராசரியாக இருமாதம் ஒரு முறை பதிந்துள்ளீர்கள். குபேரனை விஞ்சிய கருத்து செல்வம் உங்களிடம் கொட்டி கிடந்தும் ஏன் இந்த கஞ்சத்தனம் 🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
எவர் பங்களிப்பையும் குறைக்கும் நோக்கம் அல்ல. ஆனால்… வரலாறு எனும் புத்தகத்தில் சிலர் வசனமாக, இன்னும் சிலர் பந்தியாக, வெகு சிலர் பக்கமாக அமைவார்கள். அந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயமாக அமைந்தவர்களை, அதே புத்தகத்தில் காற்புள்ளிகளாக அமைந்தவர்கள் கிண்டல் பண்ணும் போது - இதை நினைவூட்ட வேண்டியதாகிறது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னுடைய பேர்சையா?🤣- பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣- கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
தனது சொந்த தொகுதியிலேயே பார் அனுமதியை ஊழல் மூலம் பெற்று கொடுப்பது… சிறுவர் துஸ்பிரயோகிகளுக்கு கவர் எடுப்பது என ஊத்தை வேலை பார்க்கிறார் பார் சிறி. சுமந்திரனின் சகபாடிகள் மீது கூட பருவம் வந்த பெண்கள்தான் புகார் கூறி உள்ளனர் என நினைகிறேன். இதி சிறுவர் நலன் சம்பந்தபட்ட விடயம்.- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
🤣🤣🤣 பிள்ளையானின் வயதை வைத்து பார்த்தால் - மங்கு, பொங்கு சனிகள் முடிந்து இது மரணச் சனியாகவே படுகிறது. கம்மன்பில அரசியலியே தேறாதா கேசு 🤣. கறுப்பு சட்டையை கூட வாடகைக்கு எடுத்திருக்க கூடும்🤣. இப்போ ஏதோ மகிந்த கேட்டு கொண்டதனால், எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என்பது போல் போயுள்ளார். வேறு எவரையும் காட்டி கொடாதே, குற்றம் தீர்த்தாலும், நாம் வந்ததும் விடுதலைதான் என்பதே ரணில் பேச முனைந்து, முடியாமல் போனதும் கம்மன்பில மூலம் சூசகமாக பிள்ளையானுக்கு நாமல் தெரியபடுத்திய செய்தியாக இருக்கும். உடான்ஸ்சாமியார் கணிப்பின் படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த மேஷ ராசி அன்பரே, உங்கள் ஜெனன ராசி, லக்ன அமைப்புப்படி, முதலில் இரெண்டரை வருடம் கோர்ட் செலவில் விரையச்சனி வந்தாறுமூலை தென்னம்தோட்டம் ஈறாக கொண்டு போகும். அடுத்த இரெண்டரை வருடம் ஜென்மச்சனியில் வழக்குக்கு பாதகமாக தீர்ப்பு வரும். ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பாகி கண்ணில் சாவு பயத்தை காட்டும். கடைசி இரெண்டரை நடக்கும் போது மீளவும் ஜேவிபி ஆட்சிக்கு வரும் - பாதச்சனி பாடையில் ஏற்றும். மேஷம், முழுவதும் மோசம் 🤣 பரிகாரம் - தெரிந்தாலும் சொல்லமாட்டமே 🤣 - கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
Important Information
By using this site, you agree to our Terms of Use.