Everything posted by goshan_che
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னது நான் 16 ஆவது இடத்திலா😱. இதன்பிறகாவது ஐபிஎல் பூராவும் மேட்ச் பிக்சிங் என்பதை நம்புங்கப்பா🤣. அப்பவே சாத்திரக்காரன் சொன்னவர் - பத்தில வியாழன் பதிய விட்டு கிளப்புமாம்🤣.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன். இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன? இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
பல தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி. மேடையில் பாடுவது பற்றி நான் எழுதியதை கொஞ்சம் தெளிவில்லாமல் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். மேற்கத்திய பாடல்களை மேடைகளில் பாடும்போது அதற்கு ராயல்டி செலுத்தி பாடுவது போல் தமிழிலும் ஒரு வழமை இருக்கிறதா? உதாரணமாக ஜிம்மில் ஒலிக்க விடும் பாடலுக்கு இப்படி ராயல்டி செலுத்த வேண்டும் எனில் ஊரில் பஸ்சிலும், வீடியோ கடைகளிலும் ஒலிக்கும் பாடலுக்கும் செலுத்த வேண்டி வரும் அல்லவா? அதே போல் எஸ்பிபிக்கு பொருந்தும் அதே சட்டம், லக்ஸ்மன் சுருதி, ஏனைய சின்ன சின்ன டுரூப்புகள், மாரி அம்மன் கோவில் கூழ் ஊத்தும் நிகழ்வில் “ஆடல் பாடல்” செய்யும் திண்ட்டுகள் ரீட்டா குழுவினர் அனைவருக்கும் பொருந்துமா? ஆகவே தமிழில், இந்தியாவில் எதற்கு ராயல்டி கோரலாம், கோராமல் விடலாம் என்பதில் ஒரு சமச்சீர் இன்மையை நான் காண்கிறேன். அல்லது அனைவரிடமும் கோரலாம், ஆனால் உரிமையாளர் கொழுத்த ஆடுகளாகப்பார்த்து அவற்றிடம் மட்டுமே கோரும் உரிமை உள்ளவரா? இதை அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. அது ஒப்பந்தத்தில் என்ன கூறி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன். குட் பேட் அக்லி தயாரிப்பாளர் - நாம் இசையை உண்மையான உரிமையாளரிடம் வாங்கி விட்டோம் என்றே கூறி உள்ளனர். ஆகவே இளையராஜ இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவருக்கு சொந்தமா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக ஒரு படத்தின், படைப்பின் கதை, வசன, இசை முழு உரிமையும் தயாரிப்பாளரிடமே இருக்கும். மத்திய, பிற்காலங்களில் ராஜா இதற்கு மாறாக ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அப்படி எனில் அந்த பாடல்கள் மட்டும் அவருக்கு சொந்தமாகலாம். நடந்தது இதுதான் எனில் - எஸ்பிபி பக்கம் தவறு உள்ளது. ஆனால் யூடியூப் இல்லை என்ற துணிவில், உலகம் முழுவதும் இருந்து மெட்டுக்களை எடுத்து பாடல் போட்டு விட்டு ஒரு இலவச கிரெடிட் கூட போடாத “உருவல் ஞானி” க்கு இதை தட்டி கேட்கும் வர்த்தக உரிமை இருப்பினும் தார்மீக உரிமை இல்லை என்பதே என் வாதம்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
முயலுக்கு மூணேகால் கால்தான். சந்தேகமேயில்லை. இத்துணை நீட்டி முழக்கி உள்ளீர்கள் - பாவமாக இருப்பதால் இரெண்டு சிரிப்புகுறி இலவசம்.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
இளையராஜ கொப்பி அடித்த படங்கள் எதிலாவது அதை கிரெட்டில் போடும்படி செய்துள்ளாரா? இல்லை. தான் சொல்லாமல் கொப்பி அடித்தால் அதுக்கு பிடிபட்டபின் காரணம் சொல்வார். ஆனால் ஜீவி பிரகாஷ் கதை பொருத்தம் கருதி, வெளிப்படையாக இளையராஜா பாடலை கையாண்டால் அது ஆண்மை அற்றதனமா?
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
ஒவ்வொரு பிரபலத்தினதும் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அலசதேவையில்லை. என்பது என் நிலைப்பாடு. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என மறுதரப்போ, மூன்றாம் தரப்போ புகார் கூறும் வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் பொதுவெளியில் நடந்து கொள்ள என ஒரு முறை உள்ளது. இளையராஜாவிடம் தன்னை விட நலிந்தோரை தூக்கி போட்டு மிதிக்கும் ஒரு கேடு கெட்ட குணம் உள்ளது. பத்திரிகையாளரை, ரசிகரை, இசை ஆர்வம் உள்ள சிறுவனை அவர்கள் சுயமரியாதையை சீண்டும் படி பொது வெளியில் அவமரியாதை செய்யவார். ஆனால் கோவிலில் அவமரியாதையாக அவர் நடத்தப்பட்டால், அந்த அந்நீதியின் முன் நவதுவாரங்களையும் மூடி கொள்வார். அகங்காரமே கூடாத விடயம் - அதிலும் அகங்காரத்தை - ஆட்களின் ஸ்டேடஸ் பார்த்து காட்டுவது எவ்வளவு கீழ்தரமானது? இந்து இறையியலின் மிக அடிப்படையான விடயம் நான் என்ற மமதையை அழிப்பது. இந்த மமதையை அழிக்காமல் மனமுருகிபாடி, சாமியார் வேடம் போட்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக. ஆரம்பகால பாடல்கள் திரைப்பட நிறுவனன்வ்களுக்கும், பிந்தைய இளையராஜ ஒப்பந்தம் போட்ட பாடல்கள் அவருக்கும் உரியன என தீர்பாகும் என எதிர்பார்க்கிறேன். மேடையில் பாடுவதற்கு எந்த இசையமைப்பாளருக்கும் பணம் கொடுப்பதாக நான் அறியவில்லை. ஆதாரம் தந்தால் அறிந்து கொள்வேன். எல்லாம் பிடிபட்ட பின்புதான். யூடியூப் வரும் வரை நானே இசை பிரம்மா என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது. என்ன காரணம் சொன்னாலும் களவு, களவுதானே. அதாவது இளையராஜ ஜீவி யை அண்மையில் சொன்னது போல சொல்வதாயின், ஆண்மை அற்ற தன்மை🤣.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
மேஸ்டிரோ… பேஷ்…பேஷ்…காப்பின்னா மேஸ்டிரோ காப்பிதான்😂👇 மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பத்தவேணும் கர்த்தரு…
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
சகல விடயத்திலும் அணி பிரிந்து அடிபடத்தேவையில்லை😂. ஆர் செய்தாலும் தப்பு, தப்புத்தான். முன்பே ரஹ்மான் பல ஸ்பானிய இதர மொழி பாடல்களை அப்படியே உருவி பாவித்தமையை கண்டுள்ளோம். யூடியூப்பில் பல வீடியோக்களும் உள்ளன. ராஜாவும் இப்படி உருவி உள்ளார். எவ்வளவு பணம் இருக்கு, இசையை பாவிக்க முன்னம், உரிமையாளருக்கு கொஞ்சம் கொடுத்து, பெயரை படத்தின் முடிவில் ஓடும் கிரெட்டிசில் ஒரு மூலையில் போட்டால் ஒரு சர்ச்சையும் வராது. ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் களவு எடுத்து மாட்டி கொள்வது😀. ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும். அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர் பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார் மெட்டுக்களை திருடினார் இதில் 4 வது மட்டுமே இதுவரை ரஹ்மானுக்கு பொருந்தும்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
அறவே இல்லை. இதில் தியரி, நடைமுறை வேறுபாடு ஏதும் இல்லை. தேர்தல் அரசியல் மூலம் வந்தாரோ, இல்லை நியமன எம்பியாக ராஜ்யசபா மூலம் வந்தாரோ மன்மோகன் ஒரு அரசியல்வாதிதான். ஐ ஏ எஸ் அதிகாரி அல்ல. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் பொருளாதாரத்தை திறப்பது என்ற கொள்கை முடிவை எடுத்து, தேர்தலில் வென்றதும் அதை நடைமுறைபடுத்கியது. அதற்கு தக்க பொருளாதார வல்லுனர் என்பதால் சிங் உள்ளே - நியமன அரசியல்வாதியாக கொண்டு வரப்பட்டார். ஆகவே இங்கு கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் காரிய கமிட்டி எனும் அரசியல்வாதிகள் கூட்டு + ராவ் + சிங். புலிகள் மூலம் ரஜீவை வெளிநாட்டு (சி ஐ ஏ) உளவு அமைப்பு சந்திரசாமி மூலம் கொலை செய்ததே - ரஜீவ் அவர்கள் விரும்பிய வகையில் இந்திய பொருளாதாரத்தை திறக்க உடன்படமாட்டார் என்பதாலேயே எனும் ஒரு சதி கோட்பாடு கூட உண்டு. ரஜீவை அகற்றி விட்டு அந்த இடத்துக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போதே அவர்களுடன் நெருங்கிய ராவ், கேம்பிரிட்ஜில் படித்த சிங்கை கொண்டு வந்து சி ஐ ஏ காரியம் சாதித்தது என்பார்கள். இந்தியாவின் பொருளாதார கொள்கையை ஐ ஏ ஏஸ் அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில் - ரஜீவை கொண்டிருக்க தேவையே இல்லை ( இந்த சதி கோட்பாடு உண்மை எனில்). ஆனால் உண்மையில் இந்த சதிகோட்பாடு எதுவும் தேவையில்லை. நீங்கள் ஒரு சதி கோட்பாட்டில் உழலும் நபர் என்பதால் அதை சொல்லியாவது புரியவைக்க முயல்கிறேன். மிக அப்பட்டமான உண்மை - எந்த நாட்டிலும், அது ஒரு அதிகாரிகள் குழாமால் ஆளப்படும் technocracy யாக இல்லாதவிடத்து, கொள்கை முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே. இதை ஏற்கனவே பல உதாரணங்களோடு விளங்கபடுத்தியாயிற்று. ஆனால் வழமை போலவே உங்கள் குறை புரிதலை அல்லது தவறான வியாக்கியானத்தை நடைமுறை என நிறுவ முயல்வது மட்டுமே உங்கள் அந்தரிப்பாக இருக்கிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சந்திரசேகரன் ஐயா தனது ஊரிலும் சிவனொளிபாத மலையின் ஆங்கில பெயரான Adam’s Peak எனும் பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மேலதிக பெயர் வைக்கும் ஆலோசனைகளுக்கு please contact uDanceSamiyar@uruttuu.com
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதென்ன பிரமாதம்… குறிகாட்டுவானின் சக்சசை பார்த்து விட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் தயாரிப்புகள் கல்லடி, கல்முனை, போன்ற பெயர்களில் எல்லாம் வர முஸ்தீபாம்😀. திருகோணமலை நானாமார் தமெக்கென பிரத்தியேகமாக கிளிவெட்டி என்ற பிராண்டினை இறகுகிறார்களாம்😀.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதென்ன கொட்ட்டா பட்டி ஜட்டியா? கொடியில் இருந்து உருவி கசங்கலோடு அப்படியே போட🤣. லிமிடெட் எடிஷன் நைக் ஐயா… வாங்கும் போதே கறுப்பு வெள்ளை பெட்டியில் ஒரு ஐபோனை விட கியாதியாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும். வாங்குவதற்கு மூன்று வருட வெயிட்டிங் லிஸ்ட். அப்போதும் எல்லாருக்கும் விற்க மாட்டார்கள் - வாங்குபவரின் profile எல்லாம் செக் பண்ணி, ஏற்புடையதாகின் மட்டுமே விற்பார்கள். கிட்டதட்ட ஒரு பெராரே கார் வாங்குவதற்கு சமன். இதை கையால், மிஷினில் எல்லாம் தோய்க்கப்படாது. டிரை கிளீந்தான். பிறகு அதை அப்படியே மடிப்பு கசங்காமல் அயன் மேசையில் எடுத்து வைத்து, பூப்போல எடுத்து அணிய வேண்டும். பிகு குறிகாட்டுவான் கம்பெனி கூட இதை போல - “நெடியகாடு” என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷன் ஐட்டம் இறக்கவுள்ளார்களாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பந்தா பரமசிவம் ஊரில் இருந்து டுபாய் போய் மிகவும் கஸ்டபட்டு உழைத்து ஊரில் நல்ல வீடு வளவு எல்லாம் வாங்கினாராம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் புது வகை போன், புதுவகை கைசெயின் என்ன புதிது, புதிதாக கொண்டு போய் போட்டு பந்தா காட்டுவாரம். இந்த முறை தங்கைக்கு பலகோடி சீதனம் கொடுத்து ஒரு கலியாணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ, நீங்கள் ஜொலி ஜொலிப்பாக இருந்தால் மாப்பிள்ளை டல்லாக தெரிவார் எனவே மிகவும் சாதாரணமாகவே நீங்கள் கலியாணத்துக்கு வர வேண்டும், வாட்ச் ஈறாக எதுவும் கூடாது என கறாராக சொல்லி விட்டார்களாம். பந்தா காட்ட என்றே பிறந்த நம்மாள் இதை கேட்டு ரொம்ப அப்செட். ஒரு வழியாக மூளையை கசக்கி, தங்கை கலியாணத்தில் பந்தா காட்ட ஒரு வழியை கண்டு பிடித்தாராம். அதாவது நல்ல உயர் ரக, பெறுமதியான, லிமிடெட் எடிஷன் நைக் ஜட்டி ஒன்றை வாங்கி, அதை போட்டு கொண்டு, வேட்டியை கொஞ்சம் உயர்த்தி மடிச்சு கட்டி கொண்டு பந்தி பரிமாறினால், எல்லாரும் அதை காண்பார்கள், நல்ல பந்தாவாக இருக்கும். இதுதான் அந்த பிளான். திருமண நாளும் வந்ததாம், எங்காளும் திட்டமிட்ட படியே பந்தி பரிமாறினாராம். ஊரில் எல்லாரும் வைத்த கண் வாங்காமல் தன் ஜட்டியை பார்ப்பதை கண்டு எங்காளுக்கு பெருமை பிடிபடவில்லையாம். கொஞ்சம் வெட்கப்பட்டு பார்த்த பெண் பிரசுகளுக்கு… “ வெட்கபடாமல் பாருங்கோ… டுபாய்ல இப்ப இதுதான் பேஷன்…ஷேய்க் கூட இப்படித்தான்” என ஊக்கம் வேறு கொடுத்தராம் நம்மாளு. ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து… களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்… அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
நன்றி🙏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது சுவி அண்ணா சொல்லி உள்ள படத்தின் கதைதான். உங்களுக்கு டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாதா? இதை விட சுவாரசியமானது🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
பந்தயத்திற்கு வந்தமைக்கு நன்றி. Put your money where your mouth is என்பார்கள். சீமானின் தீவிர பக்தர்களுக்கு கூட இல்லாத தைரியம், தன்னம்பிகை, அவர் மீது விமர்சன பார்வை கொண்ட உங்களுக்கு உள்ளது. அதற்கு ஒரு சலூட். சீமானின் நாதக தனித்து நின்று - என்பதுதான் பந்தயத்தின் மிக முக்கியமான சரத்து. அதை ஏற்கிறீர்களா? கூட்டணி வைத்தால் - கணிப்புகள் சகலதுமே பிழைக்கும். வாக்கு வங்கி வளர்சி, தேய்ச்சி எதையும் கணிக்க முடியாது.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
சோபா சகதி அருமையான கதைசொல்லி….மாற்று கருத்தில்லை… என்ன…. கதை சொல்லும் ருசியில், அதில் தனக்கு எலும்புதுண்டுகள் அல்லது மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக தான் சம்பந்தபட்டும்…இனம் சம்பந்தபட்டும் பல பொய்களை அவிட்டு விடுவார்… சீமானுக்கு அடுத்த படியாக….தமிழ் நாட்டில் ஈழப்போராட்டம் பற்றிய எதிர்மறை விம்பத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் சகதி (இருவரின் அணுகுமுறையும் எதிரெதிர்துருவங்கள்). சீமானாவது போராட்டம் முடிந்த பின் செய்தார். சகதி, புஷ்பராணி, புஷ்பராஜா போன்றோர் அவர்கள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருந்த போதே, தாம் செய்வது கடைசியில் இனத்துக்குத்தான் பாதகமாக முடியும் என தெரிந்து கொண்டே, கழுதறுப்பை செய்தவர்கள். எனவேதான்…. சகதி….
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
நானும் அதையேதான் சொல்கிறேன். ஒரே விடயத்தை சொல்லும் நீங்களும் நானும் பந்தயம் கட்டினால் அது IPl match fixing போல் ஆகிவிடும்🤣. சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும். இந்த விளக்கம் எதுவும் தேவையில்லை அண்ணை. இசையை போல பெரிய பந்தயம் எதுவும் கூட கட்ட தேவையில்லை. வெறும் 1 ஈரோதான் பந்தயம். கேள்வி கீழே: சீமான் தனியே கேட்டால், போன சட்டசபை தேர்தலில் எடுத்ததை விட (8%) நாலு விழுக்காடாவது கூட எடுப்பார், அதாவது அவர் கட்சி வளர்ந்துள்ளது என்போர்தான் என்னுடன் பந்தயம் கட்ட வேண்டும்.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
நம்பிக்கைகள் உண்மையல்ல. நிச்சயமாக ஆரம்பத்தில் புலிகள்/டெலோ ஒரு சாதி என்றும், புளொட் இன்னொரு சாதி என்றும், இவர்கள் இருவரும் அல்லாத இன்னும் மூன்று சாதிகளின் அமைப்பு ஈபிஆர் எல் எப் எண்டுமே மக்கள் பார்த்தார்கள். ஆனால் சிங்களவன் வெளுத்த வெளுவையின் உக்கிரம், பின்னாளில் புலிகள் என்னை இயக்கங்களை தடை செய்தமை - இந்த பகுப்புகளை நீக்கி அனைவரையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வந்தது. அப்படி ஒரு நிலை வரும் போது, அறவே சாதிய, பிரதேசவாத எண்ணமற்ற தலைவர் புலிகளின் தலைவராக இருந்தமை - ஒரு மின்னல் போல - வரலாற்றில் ஒரு சொற்ப நேரம் (1987-2009) -நாம் சாதிகள் கடந்து இனமாக ஒன்றுபட வழிகோலியது.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
மறுபடியும், எதிரி எடுத்த இனரீரியான அடக்குமுறையே எம்மை இன ரீதியாக ஒன்றுபடுத்கியது. சிங்களவர் தாம் சாதிகளை விடுத்து, இனரீதியாக ஒன்றாகி, எம்மை இனரீதியாக தாக்கியதனாலேயே நாமும் இனரீதியாக அதை எதிர்கொண்டோம். அவர்கள் மட்டும் கொவிகமவும் வெள்ளாளரும் ஒண்டு, கரையாரும் கராவவும் ஒண்டு, சலகமவும் முக்குவரும் ஒண்டு என சண்டையை ஆரம்பித்து இருந்தால் நாமும் இந்த சாதிய பகுப்பு வகையில்தான் பிடுங்குபட்டிருப்போம். இதில் நாம் புத்திசாலிகள் என மார்தட்ட அதிகம் இல்லை என்பது என் கருத்து
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
அது அந்தந்த சமூகத்தில் யார் அடக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. இந்திய தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் மிக அதீத, அளவுக்கு மீறிய வலுவை, அதிகாரத்தை கொண்டிருந்தனர். இன்றும் அரச ஒதுக்கீடு இல்லாத, சினிமா, கிரிகெட், போன்ற துறைகளில் இது தொடர்வதை காணலாம். இப்படி ஒரு நிலையை ஏது செய்வது சாதிய படி கட்டமைப்பு. பிராமணர்களை, உயர தூக்கி வைப்பது வேறு யாரும் அல்ல அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தேவரும், நாயக்கரும், பிள்ளைமாரும் தான். இதே சாதிய படி கட்டமைப்பு வட-கிழக்கு இலங்கை தமி சமூகத்திலும் உண்டு. ஆனால் ஒரு மிக முக்கியமான மாறுதல். இலங்கையில் இந்த படிக்கட்டின் உயரத்தில் இருந்து - செல்வாக்கு மிக்க தொழில்களை, பதவிகளை கைவசப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோர்/செலுத்தியோர் பிராமணர்கள் அல்ல. மாறாக வெள்ளாளர். இலங்கை பிராமணர்கள் கோவில், அது சார்ந்த தொழில்களோடு மட்டு படுகிறார்கள். ஏனைய துறைகளில் மிளிர்ந்தோர் கூட தனி மனிதராகவே மிளிர்ந்தனர். ஆனால் ஒரு காலத்தில், கன்னங்கர இலவச கல்வியை தர முன்னர், ஒட்டு மொத்த இலங்கையின் நிர்வாக சேவையை சுவீகரித்து, வியாபாரம், மருத்துவம், கல்வி என பலதில் கோலோச்சிய சமுகம், வெள்ளாளர். குறிப்பாக யாழ்ப்பாண வெள்ளாள சமூகம். எப்போதும் மட்டற்ற அதிகாரம், அடக்குமுறைக்கு வழிவகுக்கும். அப்படி இலங்கையில் இந்திய-பிராமணர்கள் போல், அடக்குமுறை சாதியாக இருந்தவர்கள் வெள்ளாளர்கள். ஆகவே இலங்கையில் சாதி எதிர்ப்பு அவர்களை நோக்கியே அமைந்தது. நிற்க, இந்தியா போல், ஏன் இலங்கையில் சாதிய படி கட்டமைப்பின் உச்சியில் பிராமணர் இல்லை? இது ஒரு பி எச் டி ஆய்வுக்குரிய கேள்வி. யாரும் இதுவரை ஆராய்ந்ததாக தெரியவில்லை. பெளத்த-சிங்கள அடையாளம் ஒரு காராணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அவர்களின் புத்தகங்களில் தமிழருக்கு நிகராக, அவர்களின் மதகுருக்களாக அனுராதபுர, பொலநறுவை காலங்களில் இருந்த பிராமணர் மீது வெறுப்பு கக்கபடுவதை காணலாம். கடந்த 1000-500 வருடத்தில் தமிழர் பகுதிகள் சிங்கள மன்னர்களின் நேரடி அல்லது மறைமுக ஆளுகையில் பல காலம் இருந்தபோது, பிராமணர்களின் வகிபாகம் திட்டமிட்டு குறைக்கப்பட்டிருக்கலாம். அதே போல் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகாரம் செலுத்த போதுமானதாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது நீங்கள் சொல்வது போல் யாழ்பாண மன்னர்கள் புத்திசாலிகளாக இருந்திருக்கலாம். அல்லது இந்த, வேறு காரணங்களின் கூட்டு விளைவாக இருக்கலாம்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
நீங்கள் எளிய பிள்ளை சீமானின் பக்தர் என்பதால் இப்படியான ஒரு எளிய ஆனால் பிழையான சமன்பாட்டை போடுவதாக படுகிறது. நான் தமிழ் நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால் சீமானை எதிர்கிறேன். இதற்கான காரணங்கள் இங்கே பலதடவை தெளிவாக எழுதப்பட்டுள்ளன. ஆனால இங்கே கேள்வி நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதல்ல. கேள்வி கீழ்கண்டதுதான். நான் சீமானை எதிர்கிறேன் நீங்கள் சீமான் கட்சி வளர்கிறது, அதை பார்து என் போன்றோர் படபடப்புக்கு ஆளாகிறனர் என்றீர்கள். அப்படி சீமான் கட்சி வளரவில்லை. 2026 இல் சீமான் தனியாக கேட்டால் 12% கூட எடுக்க மாட்டார். இல்லை என பந்தயம் கட்ட தயரா? ஒன்றில் பந்தயம் கட்ட வேண்டும். அல்லது சீமான் கட்சி வளரவில்லை என ஒத்துகொள்ள வேண்டும்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
அப்போ லஞ்ச லாவண்யாவோ, பிஞ்ச பிரமிளாவோ…ஏதோ ஒரு காரணத்தால் சீமானின் கட்சியின் வளர்ச்சி 2026 இல் இல்லை என்பதை ஏற்கிறீர்கள்? தமிழ் நாட்டை தெலுங்கு வம்சாவழி ஆளக்கூடாது எனில், மலையாளி வம்சாவழியும் ஆளக்கூடாது என்பதில் தலைசுத்து, மசக்கை எதுவும் வரத்தேவையில்லை. லாசப்பல் என்ன பாரம்பரிய தமிழர் வாழிடமா? ஒவ்வொரு குடியேறி கூட்டமும் “மேட்டுகுடி” ஆகி வெளியேற அதை புதிய குடியேறிகள் நிரப்புவது வழமைதான். ஆனால் நான் கண்டது கலேயின் முகாம்களில் இருப்பது போல ஒரு நிலைமையை. அதைத்தான் கேட்டேன்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
1991 இல் பொருளாதார கொள்கை கம்யூனிசத்தில் இருந்து அல்ல. மூடிய சந்தை பொருளாதாரத்தில் இருந்து திறந்த சந்தை பொருளாதாரமாகவே மாறியது. ஆனால் சர்வதேச அரசியல் கொள்கை - பொருளாதார கொள்கை போல அன்றி படிபடியாக மாறி வருகிறது. நேரு காலத்து அணி சேரா கொள்கை இப்போ இல்லை. இப்போ இருப்பது நாமும் ஒரு அணிதான் என முந்தள்ளும் மோடி-ஜெய்சங்கர் கொள்கை நிலை. மேற்கு, இந்தியா மட்டும் அல்ல. சீனா போன்ற நாடுகளில் கூட ஷி காலத்தில் இப்போ இருக்கும் கொள்கை அல்ல மாவோ காலத்தில். ஆகவே அரசியல்வாதிகள், தலைவர்கள்தான் கொள்கையை முடிவு செய்வார்கள். இது இங்கே திரியில் பலரும் சொல்லி உள்ள ஒரு விடயம். நீங்கள் பழைய பாணியில் முயலின் மூன்றரைக்காலில் தொங்குகிறீர்கள்🤣.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
இந்த கதை எல்லாம் வேணாம். சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள். சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா? பந்தயம் கட்ட ரெடியா? இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம். பிகு மற்ற அண்ணன் இந்த திரியிலும் எஸ். ஒளிச்சு நிண்டு பச்சை அடிக்கிறார்🤣. அட லாசெப்பல் பற்றி மட்டும் கதைப்போம் வாங்கோ அண்ணை 🤣.