Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். நன்றி - அதுக்கென்ன கில்மிசாவும் எங்கட பிள்ளைதானே❤️. நன்றி🙏. நன்றி🙏. அருமையான கருத்யோவியம் ஐயா. நன்றி🙏.
  2. இந்த பாடலை கர்ணன் படத்தில் வந்த “கண்டா வரச்சொல்லுங்க” மெட்டில் பாட/வாசிக்கவும். தலைவரை கண்டா வரச்சொல்லுங்க வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வேலுப்பிள்ளை பெத்த புள்ள.. விடுதலைய தந்த புள்ள… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்…ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்… வீர்கொண்டெழுந்தார் பாரு விரிந்ததங்கு தமிழர் தேசம்… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ********* ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. வேங்கையவர் வந்த பின்னே எங்கள் வேற்றுமைகள் ஒழிந்ததப்பா… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஆட்சியிலும் அமரவில்லை எந்த அதிகாரமும் சுவைக்கவில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… -கோஷான் சே-
  3. மீண்டும் விளக்கம்👇. விஜி அண்ணி பாதிக்க பட்ட தரப்பு. அவர் தனக்கு அநியாயம் நடந்தது என்கிறார் - அதை விசாரிக்க கோராமல் கடந்து போக முடியாது. பாத்திமா தான் பாதிக்கபடவே இல்லை, உங்கள் அரசியலுக்கு என் பெயரை நாசமாக்காதீர்கள் என கேட்கிறார். அவரை இழுத்து கதைக்க கூடாது. இது மேலே கருத்தாடிய பலருக்கு விளங்கி உள்ளது அவர்களின் கருத்திலும், லைக்கிலும் தெரிகிறது.
  4. இதை விட கீழ்தரமாக யுத்தகுற்றத்தில் பாதிக்கபட்ட உறவுகளை கேவலப்படுத்த முடியாது. சில்லறை விவாதங்களுக்கு எல்லாம் யுத்தகுற்றத்தை இழுப்பது கருதாளரின் தார்மீக வங்குரோத்து moral bankruptcy யையே காட்டி நிற்பது. யுத்த குற்றம் பூட்டிய அறைக்குள் நிகழ்ந்த இரு தனி மனிதர்கள் சம்பந்தபட்ட விடயம் அல்ல. சம்பந்தபட்டவர்கள் சொல்வதற்கும் அப்பால் அது நடந்தமைக்கு பொதுவான சாட்சிகள் உண்டு. நாமல் ராஜபக்ச = குற்றம் சுமத்தபட்டவர் தரப்பு. அதே போல் ஸ்டாலின் = குற்றம் சுமத்தபட்டவர் தரப்பு. பாத்திமாபாபு குற்றம்சுமத்த பட்டவர் அல்ல. மாறாக அவர் குற்றத்துக்கு ஆழானதாக சொல்லபடுபவர். இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஸ்டாலின் மறுப்பதற்கும், பாத்திமா பாபு மறுப்பதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாமல் …🤦‍♂️ அடிப்படை நாகரிகத்கை யாழின் ஏனைய உறுப்பினர்களிடம்தான் எதிர்பார்த்தேன். சிறுவர் துஸ்பிரயோகிகளுக்கு இரு வேறுபட்ட இடங்களில் வக்காலத்து வாங்கிய pedo-sympathizer இடம் இப்படியான கொச்சையைத்தான் எதிர்பார்க்க முடியும்.
  5. பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா அதமரு மடத்தின் தலைவர் விஸ்வபிரிய தீர்த்த ஸ்ரீபாத-வின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் நடைபெற்றது. https://www.hindutamil.in/amp/news/india/1007716-nirmala-sitharaman-s-daughter-gets-married-in-a-simple-home-ceremony.html
  6. நன்றி நன்றி. நிச்சயமாக. அவ தெலுகு பிராமின்🤣
  7. நானோ நீங்களோ பாத்திமா பாபுவின் நெருங்கிய வட்டத்துள் இல்லை. அரசியலுக்கு அப்பால் - 35 சொச்ச வருடமாக தொடர்ந்து ஒரு 60 வயதுக்கும் மேலான பெண், ஒருவரின் மனைவி, அவர்களின் இரு ஆண் பிள்ளைகளின் தாய், பேரக்குழந்தைகளின் பாட்டியாக கூட இருக்கலாம், இப்படி எதுவும் நடக்கவில்லை என மீண்டும், மீண்டும் சொல்லும் போது, அது முற்றிலும் உண்மையா இல்லையா என்று அப்போ ஐரோப்பாவிலும், இலங்கையிலும் இருந்த நானும் நீங்களும் தீர்மானிக்க முடியாது, கூடாது. அதை கதைக்காமல் விடுவதுதான் குறைந்த பட்ச நாகரீகம்.
  8. பாத்திமா பாபுவின் பேஸ்புக்கில் அவரே நேரடியாக பேஸ்புக் லைவில் இதை மறுத்தது 👇. https://www.facebook.com/fathima.babu/videos/1683119401737808/ பிகு இங்கே நான் இதை எழுதுவது ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்க அல்ல. மாறாக யாழ் போன்ற ஒரு தளத்தில், குறிப்பிட்ட பெண் ஒன்றுக்கு மூன்று தடவை பொதுவெளியில் இதை மறுத்த பின்னும், இந்த அவதூறை பரப்ப கூடாது என்பதால் மட்டுமே.
  9. ஸ்டாலினை அடிக்க வேண்டும் என்பதற்காக அநாவசியமாக பாத்திமா பாவுவை அவதூறு செய்வது ஏற்புடையதல்ல. பாத்திமா பாபு பொது வெளியில் இதை மூன்று தரம் மறுத்துள்ளார். அதன் பின் ஜெ ஆட்சியில் ஜெ க்கு நெருக்கமாக இருந்த போதும் கூட பாத்திமா இதை உண்மை என சொன்னதே இல்லை. அவரே இல்லை எனும் போது இதை நாம் காவி திரிவது அவர் மீதான அவதூறுதான். அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள். மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள். Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது. 1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி 2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி 3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது. முழு கட்டுரையின் லிங்க்👇 Fact Crescendo Tamil | The leadi...பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்...30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக...தினமணியில் பாத்திமா பாபுவின் விளக்கம்👇. Dinamaniஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து...திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்த
  10. இது முஸ்லிம் (f)பாத்திமா அல்ல கிறிஸ்தவ (f)பட்டிமா. டீசரை பார்த்தால்… மதமாற்றத்தை எதிர்கிறோம் என்ற வகையில் கிறீஸ்தவர்களை போட்டு தாக்கி இருப்பதாகவே படுகிறது. வெளியிட்ட இருவரையும் பார்த்தால் இந்த சந்தேகம் வலுக்கிறது. கதாநாயகன் விமல் தெலுங்கு வம்சாவளி என தம்பிகள் இவரின் ஆதாரவாளருடன் முன்பு சண்டை பிடிப்பார்கள். விமலும் கொஞ்சம் அரசியல் கலந்துதான் பேசுவார். மறைமுக சாதிய கதைகளும் உண்டு என நினைக்கிறேன்.
  11. குறிப்பு “தலைவரை கண்டா வரச்சொல்லுங்க” எனும் இன்னொரு பாடலும் தலைவருக்காக எழுதி வைத்துள்ளேன். இரெண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகா கூடாது என்பதால். அதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளேன். வயதில் மூத்தவர் பாடல் முதலில் வந்துள்ளது. ஆவலோடு காத்திருங்கள்😎. 🙏
  12. முதல் அடியே அவர்களுக்குத்தான் விழும் 🤣.
  13. 🤣 நன்றி பெரிசு இங்கயே அப்படி… அங்க சித்திரகுப்தனுக்கு என்ன குடைச்சலை கொடுக்குதோ? யம ஹிங்கருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடும்னு நினைக்கிறேன்🤣 வெங்காயம், பூண்டு விலை ஏறுதே என கேட்டால் (பிராமணர்) நாம் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை என பதில் கொடுத்த நிதி அமைச்சரிடம் வேறு எதை எதிர்பார்க்கலாம். நீங்கள் பார்தீனியம் என எழுதியதை அவசரத்தில் பார்பனியம் என வாசித்து விட்டேன்🤣.
  14. இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஒத்தையா துணிஞ்சு நின்னு பாதை செஞ்சு தந்தானப்பா கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க *********** ஆட்சியிலும் அமரவில்லை அதிகாரம் சுவைக்கவில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க கோஷான் சே
  15. திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்…. அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்… புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்…. திருட்டை ஒழிக்க முடியாது.
  16. 👆👇 கிட்ட நெருங்கி வாடா…கர்லா கட்ட உடம்புகாரா
  17. யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா (தமிழ் தேசிய) தாய் கொண்டு வந்ததை…. (தம்பிகள்) தாலாட்டி வைத்ததை (பிஜேபி) நோய் கொண்டு போகும் நேரமம்மா….
  18. ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை Published:14th Mar, 2025 at 6:20 PM பரமசிவன் பாத்திமா படம். செய்திகள் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். Updated:14th Mar, 2025 at 6:20 PM ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி உள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் கதை காதலை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. https://www.dinamani.com/amp/story/cinema/cinema-news/2025/Mar/14/paramasivan-fathima-movie-trailer டிஸ்கி #கருடா செளக்கியமா🤣
  19. உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.