Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இப்போதைக்கு கிரிகெட் போட்டி ஒண்டும் இல்லை என்பதால் மிச்சமாகும் நேரத்தை இதில் செலவிட உள்ளேன்🤣
  2. டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்! VigneshkumarPublished: Sunday, June 15, 2025, 23:01 [IST] டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார். இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி இப்போது இரைப்பைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி உடல்நலம் சீராகி விரைவில் டிஸ்சார்ஸ் ஆக வேண்டும் எனக் காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-admitted-to-delhi-s-ganga-ram-hospital-due-to-stomach-problem-712807.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி “அன்னை சோனியா பீட்சா சாப்பிட்டார். நலமோடு உள்ளார்” என்ற அறிவிப்பு விரைவில் வெளிவருமோ?
  3. வாழ்த்து நந்தன். ரசோ அண்ணா உட்பட ஏனையோருக்கும் வாழ்த்து. போட்டியை நடத்திய ஜிக்கும், கலகப்பாக்கிய உறவுகளுக்கும் நன்றி.
  4. முக்கிய அறிவிப்பு ! எலே மக்கா…. 50% refund… வந்துட்டு லே மக்கா🤣 அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்து.
  5. இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠
  6. வசி கேட்டு கொண்ட படி, போட்டியில் முதலாவது ஆளாக பாஸ்மார்க் 40 ஐ எடுத்துள்ளார் வாதாவூரான். நாளை இன்னும் சிலரும் ஆத்தா நான் பாசாகிட்டேன் என சொல்ல போகிறனர், அதேபோல் மீதி சிலர் ஆடு மேய்க தயாராகின்றனர் 🤣.
  7. நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான். ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன். சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது. இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார். வாதவூரான் 40 🪑 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 பிரபா 20 நுணாவிலான் 10 செம்பாட்டான் 00 🐥
  8. இப்படி செய்தது, normal swing ஐ பெற. அதாவது seam position ஆனது slips ஐ நோக்கி இருக்கும் போது பந்து பேட்ஸ்மேனனில் இருந்து விலகிய திக்கில் போனால் அது நோமல் அவுட் சுவிங். ஆனால் சீம் பொசிசன் இப்படியே இருக்க பந்து பேட்ஸ்மனை நோக்கி வந்தால் அது ரிவேர்ஸ் சுவிங். சுருங்க சொல்லின், outswing seam position இல் inswing ஆவதும், inswing seam position இல் outswing ஆவதுமே ரிவர்ஸ் சுவிங். இதற்கு பந்தின் ஒரு புறத்தை பொலிஷ் பண்ணுவது மட்டும் போதாது. மறுபுறம் கரடுமுரடு ஆகவும் வேண்டும். ஆனால் லொர்ட்ஸ் போன்ற ஒரு பச்சைபசேல் மைதானத்தில், யூன் மாத ஆரம்பத்தில் இதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படியே ஆகட்டும்.
  9. இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா. புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை. நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும். செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்? செய்வீர்களா 🤣 முடிந்தால் 14 ஓவருக்குள் முடிச்சு வை🤣
  10. ஓம்…புத்தம் புதிய பந்தை கொடுக்கமாட்டார்கள், ஆனால் மாற்றும் பந்து அதே அளவு ஓவர்கள் பாவித்த பந்தாக இருப்பினும், சற்றே கடினமானதாக, அத்தோடு உருவம் குறையாமல், குறிப்பாக நூல் தேயாமல் இருக்க வாய்ப்புகள் கூட. பந்தை மாற்றும் போது விக்கெட் விழுவது உண்டு அதையே சொன்னேன். ரிவேர்ஸ் சுவிங்கிற்காக ஏதுநிலை இங்கே இல்லை என நினைக்கிறேன். அதற்கு மைதானம் வரண்டு அதன் மூலம் ஒரு பகுதி உராய, மறு பகுதியை பொலிஷ் பண்ணி, சுவிங்க உருவாக்க வேண்டும். அல்லது சாண்ட்பேப்பரால் சுரண்டினால்தான் உண்டு 🤣. இது அவுஸ் முன்னர் ஒரு முறை செய்து மாட்டியதுதானே🤣.
  11. பந்தை மாற்றுகிறார்கள். அவுஸ்சுக்கு கடைசி ஆயுதம்?
  12. ஹெட்டின் முதல் பந்து செங்குத்தாக திரும்பியது🤣. இந்த பந்து வீச்சு மாற்றம் அல்லது நாளை காலை முதல் 10 ஓவரில் அவுஸ்ரேலியா நாலு விக்கெட் எடுக்காவிட்டால் தெ ஆ வெல்லும்.
  13. இப்போதும் என் கணிப்பு ஆஸி வெல்லும் என்பதே. ஆனால் எப்போதும் விரும்பியது தெ ஆ வெல்வதையே. நாளைக்கு 14 வது ஓவரில் வெற்றியை எட்டினால் மிகவும் மகிழ்வேன்🤣.
  14. ஆடுகளம், தட்பவெட்ப காரணிகளை போலவே - ஸ்கோர் போர்ட் அளுத்தமும் ஒரு பெரிய காரணி. இது தெ ஆ வுக்கு எதிராக உள்ளது. முதல் மூன்று இனிங்சில் அடிக்காத எண்ணிக்கையை நாலாவது இனிங்சில் அடிப்பது மிக கடினம், அரிதிலும் அரிதாகவே நடக்கும். வழமை போல் இது 5ம்/4ம் நாளில் நடக்கும் நாலாவது இனிங்சில் இல்லை எனிலும்…1ம், 2ம் நாளில் இருந்த தட்பவெப்ப காரணிகள் குறைவு எனிலும், ஆடுகளம் இப்போதும் பந்து வீச்சுக்கு சார்பாகவே உள்ளது. 10ம் விக்கெட்டை வீழ்த்த தெ ஆ திணறியது, ஆஸியின் கூட்டு மனோதிடத்தை, அதுவே தெ ஆ விடம் குறைவு என்பதையே காட்டி நின்றது, ஆடுகள நிலையை விட. இனி இது தனியே மனோதிடம் சம்பந்தபட்ட ஆட்டமாகவே இருக்கப்போகிறது. லஞ்சுக்கு போன போது உடல்மொழியை வைத்து பார்க்கின், ஆஸியிடம் உத்வேகமும், தெ ஆ விடம் சோர்பும் தென்பட்டன.
  15. ஆரிடம் கேட்டனியள் வாக்கரிடமோ? டேனியலிடமோ🤣
  16. விமானத்தில் இருந்தோரில் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பலி. தப்பியவரின் சகோதரரும் பலி. கீழே கட்டிடத்தில் இருந்தோரில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
  17. தலைவர் வேலை களைப்பு தீர சோமபானத்தை அருந்தி விட்டு…தென்னாபிரிக்கா என்னா, அந்தாட்டிக்கா கூட நாளைக்கு வெல்லும் எண்டு சொல்லுவார்…அதை எல்லாமுமா நம்புவது🤣.
  18. இவ்வாறு கூறி விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்…..
  19. நாளைக்கே முடியும் போலத்தான் இருக்கு. 80+உள்ளே சாப்பாடு, நீகாராகாரம் =50, போக்குவரத்து 15. ஒரு £150 பவுண் தப்பியது என விட்டு விட வேண்டியதுதான். பெர்மிங்ஹாம், மான்செஸ்டரில் இங்கிலாந்து - இந்தியா 3ம் நாள் டிக்கெட்டுகள் வாங்கி வைத்துள்ளேன். அதாவது ஒழுங்கா நடக்க வேணும் கடவுளே.
  20. 2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன. முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள். ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி. சுவி 30 🪑 வாதவூரான் 30 ரசோதரன் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 வாத்தியார் 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 கந்தப்பு 20 நுணாவிலான் 10 பிரபா 10 செம்பாட்டான் 00 🐥 இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும். ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை. தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம். எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.
  21. 5ம் கேள்வி சுவி அண்ணா, ரசோ அண்ணா க்களிடையே தீர்மானிக்கும் கேள்வியாக இருக்கும்.
  22. ரசோ அண்ணாவை தவிர வேறு யாரும் 6ம் கேள்விக்கு கமிண்சை தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.