Everything posted by goshan_che
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
கருத்து எழுதாமலே கூட கருத்து பஞ்சம் வரலாம்🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இரெண்டு பக்கத்துக்குள்ளாகவே கருத்து வறுமை ஏற்பட்டதும், அதனால் கருதாளர் மீது கருத்து வைக்க ஆரம்பித்துவிட்டதும் ஒரு துன்பியல்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும், இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன. இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர். இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage. இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை. தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது. பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார். அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன். கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை. அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல். இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி. தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும். கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
அந்த கடல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புகள் இலங்கையும், இந்திய மத்திய அரசும் மட்டுமே. இது சம்பந்தமான ஆவணங்களை பிறிதொரு திரியில் தந்துள்ளேன். நாட்டின் எல்லையை விட்டுகொடுப்பது, சுருக்குவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரம். இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அண்ணை - சீமானே தான் சந்தித்ததாக ஒத்துகொள்ளவில்லை. அந்தளவுக்கு இது அரசியலில் மாறான விடயம். இங்கே யாருக்கும் சீமான் மீது கோவம் இல்லை. திருமா மகிந்தவை சந்திப்பார், சீமான் நிம்மியை சந்திப்பார். தமக்கு சுயநலமாக அனுகூலமெனில் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யமனையே சந்திப்பார்கள்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இந்திய அமலாக்கத்துறை மத்திய அரசில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் சொல்படி, அவர்களின் அரசியல் எதிரிகள் வீட்டை மட்டுமே தட்டும். சீமான் பிஜேபி பி டீம் எனும் போது அவர்கள் ஏன் சீமானை நோண்ட போகிறார்கள். ஊழல் செய்ய அதிகாரம் வேண்டும். சீமானுக்கு அதிகாரம் வாய்க்கவில்லை. ஆனால் கோப்பி தோட்டம், பஜிரோ ஜீப்புகள், நீலாங்கரை பங்களா என சுத்தமாக வருவாய் ஏதும் இல்லாமல் சீமானும் மனைவியிம் பல சொத்துக்களை வாங்கியுள்ளது அவர்கள் கொடுக்கும் பிரமாண பத்திரத்திலேயே உள்ளது. வழசரவாக்க வீடு பிரச்சனை வந்த போது, சீமானுக்கு மணம் ஆகி விட்டிருந்தது. ஆனால் நான் ஏழை வாடகை வீட்டில் இருக்கிறேன் என சீமான் கூறிய வீடியோவை நீங்கள் இங்கே பகிர்ந்தீர்கள். இந்த அரியவகை ஏழைக்கு இப்படி சொல்லி சில வருடங்களில் எப்படி நீலாங்கரையில் 8 கோடி பங்களா சொந்தமாகியது? கடந்த 15 வருடமாக, சீமானோ கயல் அண்ணியோ வேலை, வியாபாரம் ஏதுவும் செய்யவில்லை. அப்போ இந்த பணம் எல்லாம்? திரள்நிதியில் தின்றதா? அல்லது பி டீம் வேலைக்கு பிஜேபி கொடுத்த கூலியா? அப்போ சீமானும் கனிமொழி போல ஒரு திருட்டு அரசியல்வாதி அதாவது நான் அடிக்கடி கூறும் “சின்ன கருணாநிதி” என்பதை ஏற்கிறீர்கள். நன்றி.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣. அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா? ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன். அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இல்லை அண்ணை. ஒட்டுமொத்த இலங்கையின் ஜிடிபி 99 பில்லியன். தமிழ் நாட்டின் = 420 பில்லியன். இலங்கையின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பினை விட பலமடங்கு குறைவு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பு.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
நிச்சயமாக இல்லை. இந்தியா, இலங்கை நாம் வகிக்கும் மேற்கில் கூட கொள்கையை முடிவு செய்வது அதிகாரிகள் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள். உதாரணமாக - திமுக கடந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என ஒரு தேர்தல் அறிக்கை அல்லது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் அந்த கொள்கைகளை நடைமுறை படுத்துகிறார்கள். அதை நடைமுறை படுத்தும் உத்தியை வகுப்பதும், நடைமுறை படுத்துவதும்தான் அதிகார வர்க்கம். மாநில கொள்கையால்தான் சிலது முன்னேற சிலது பிந்தங்கியது. அது திறமையான மாநில கொள்கையை வரித்து கொள்ளாத, ஒழுங்காக அதிகாரிகளை மேற்பார்வையிடாத அந்தத்த மாநில அரசியல் தலைவர்கள் பிழை.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளா 15 ஆயிரம் சதுர மைல். த.நா 50 ஆயிரம் சதுர மைல். வறுமை கோட்டு தகவலில் கேரளாவுக்கு அருகில் இலட்சதீவு, புதுச்சேரி, கோவா நிக்கும். தமிழ் நாட்டை அதை ஒத்த பெரிய மாநிலங்களோடுதான் ஒப்பிட வேண்டும். அதே போல் கேரளாவிலும் திறமான மாநில ஆட்சியாளர் அமைந்தனர் என்பதால், தமிழ் நாட்டில் அமையவில்லை என கூற முடியாது.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இந்தியா முழுக்க இருப்பது Indian Administrative Service எனப்படும் நிர்வாக சேவைதான். இதற்குள் ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பிரிப்பு இருக்கும். உதாரணமாக IAS - Tamil Nadu Cadre. இதில் தமிழ்நாட்டவர்கள், தமிழ் நாட்டில் பணி செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் தேசிய சேவைக்கு அழைக்கப்படலாம். ஆனால் IAS அதிகாரிகளின் தரம் இந்தியா முழுவதும் ஒன்றேதான். பீஹாருக்கும், தமிழ் நாட்டுக்கும் வித்தியாசம் அரசியல் தலைமைத்துவம். நிர்வாக சேவை அதிகாரிகள் கொள்கை முடிவை எடுப்பதில்லை. அவர்கள் ஆலோசனை சொல்வார்கள், அரசியல்வாதிகள் எடுத்த முடிவை அமல்படுத்துவார்கள். தமிழ்நாடு, கேரளா, மஹராஸ்டிரா முன்னேற, பீஹார் பிந்தங்க காரணம் நிர்வாக சேவையின் தரம் அல்ல, மாநில ஆட்டியாளரின் தரம். தமிழ் நாட்டு பொருளாதர வளர்ச்சியில் ஈழதமிழன் சீலை, நகை, சினிமா மூலம் கொடுத்த இலாபம், மிக, மிக, மிக சொற்பமானது. எங்களுக்குத்தான் இது பெரிய காசு, தமிழ் நாட்டு பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் - தூசு. நாம் வாழும் நாடுகளில் மது, சிகரெட், சூது, மூலம் அரசுகள் ஈட்டும் வருமான சதவீதம் இதை விட கூட இருக்கும் என. நினைக்கிறேன். டாஸ்மார்க்குக்கு நான் ஆதரவில்லை. ஆனால் புத்தர் முதலமைச்சர், யேசு நிதியமைச்சர் அல்லாத நாடு/மாநிலம் ஒன்றில் இது பெரிய சதவீதமாக எனக்கு படவில்லை.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் 2.2% சதவீதம். பீஹாரில் 34#. குஜராதில் 12%. அண்ணளவாக. ஆந்திரா, தெலுங்கானா 6%. கர்நாடகா 7.5. பல வட இந்திய மாநிலங்கள் 27,22, 15 க்கு மேல். https://en.m.wikipedia.org/wiki/Poverty_in_India
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளா தவிர் ஏனைய இந்திய மாநில கிராமங்களுக்கு போனால் தமிழ் நாட்டின் வளர்ச்சி புரியும். ஆனால் மீனை, மண்ணை தவிர, நிலக்கரி, தாதுக்கள், எண்ணை என சகல வளத்தையும் அகழும் அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தேர்தலில் வேட்பாளரின் மனைவி சொத்தும் விபரமும் தாக்கல் செய்யப்படும். போன தேர்தலில் கயல் அண்ணி சார்பில் தாக்கல் ஆன பத்திரத்தில் இந்த சொத்து இல்லை. சாதா சட்ட கல்லூரி மாணவர் காளிமுத்து, பெரிய வக்கீல் இல்லை. உழைத்த சொத்து எல்லாம் தமிழக அரசியலில் உழைத்த திருட்டு சொத்து. மாமனாரின் சொத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சீமானின் இஸ்டம். ஆனால் அதுவே திருட்டு சொத்து. அண்ணன் மானஸ்தன் இப்படி செய்யலாமா? தமிழ் நாட்டு அரசியல்வாதி யாரும் சுத்தம் இல்லை என நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். இப்ப சீமான் சொக்கதங்கம், சொக்கதங்கம் ஜுவல்லரி என எழுதுகிறீர்கள். பிகு போனதேர்தல் - அதற்கு முந்திய தேர்தல் இடையில் இதே போல் சீமான், மனைவி பெயரில் ஒரு மலை வாசஸ்தலத்தில் கோப்பி தோட்டம் பதிவாகி இருந்தது.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
பூவ…பூ எண்டும் சொல்லலாம்…புய்ப்பம் எண்டும் சொல்லலாம்…நீங்க சொல்றமாரியும் சொல்லலாம் அண்ணே🤣.
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
நோயும்👆 நோய்க்கு மருந்தும்👇
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
இந்த விதி அண்ணாமலை வந்த போதும் கடைபிடிக்க படவில்லை. இப்போ வேறு எவரும் தேர்தலில் போட்டியிடாமல் அமித்ஷா பார்த்து கொண்டதால் நைனா வென்றுள்ளார். சீமான் எந்த பிஜேபி தலைவரோடும் வீட்ல எலி வெளிள புலிதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லாததை எப்படி விட முடியும்🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
போன தேர்தலில் சொத்து கணக்கில் இல்லாத ஆறு கோடி நீலாங்கரை பங்களா இப்போ எப்படி வந்தது? பிலீஸ் டெல் மீ🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது 10 புள்ளிகளையா சொல்றீங்க?
-
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!
நீட்டுக்கு முன் இதில் பலதில் தமிழக மாணவரே படித்தனர். இப்போ ஏனைய மாநில மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது. 1996-2014 போல ஒரு ஸ்திரமற்ற நிலை ஒன்றிய அரசில் மீண்டும் வரும். அப்படி வரும் போது தமிழக கட்சிகளின் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டியது நீட் நீக்கம்தான்.
-
பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
வயது போனாலே இந்த அறளை ஒரு பெரிய பிரச்சனை. என்ன எழுதுகிறோம்/பேசுகிறோம், ஏது எழுதுகிறோம்/பேசுகிறோம் என்பது தெரியாமல் கீழ்த்தரமாக பொது இடங்களில் கூட எழுதி/பேசி விடுவார்கள். இங்கே திரியில் மேலே கூட இதை காணலாம் (சிலர் பதினைந்து வருடம் முன்பே இப்படித்தான் என்பது வேறு விடயம் 🤣). கீழ்த்தரமான பேச்சை, கீழ்தரமான பேச்சால் கண்டிக்கிறோம் என்ற முரண்நகை கூடவா விளங்காது🤣. பொன்முடி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே. தூசண திருமுருகன், செக்ஸ் சைக்கோ சீமான் போல பொதுவெளியில் யார் ஆபாசமாக பேசினாலும் அதை கண்டிக்க வேண்டியது அவசியம்.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
நயினார் பழைய அதிமுக ஆள். சொந்த தொகுதியில் கணிசமான ஆதரவு உண்டு. எடப்பாடி மிக பெரிய தப்பை செய்கிறார். 2026 தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணி வென்றால் - அதிமுக ஒட்டு மொத்தமாக பாஜகவால் விழுங்கப்படும். எடப்பாடி, செங்கோட்டையன் எல்லோரும் துரத்தி அடிக்கப்பட்டு, பாஜகவின் நேரடி அல்லது, மறைமுக ஆட்சி அரங்கேறும். அப்போ நயினார் முதல்வர் அல்லது துணை முதல்வராவார். முன்னாள் அதிமுக எம்பி என்பது, அதிமுக எம் எல் ஏக்களை எதோ ஒரு ரிசார்ட்டில் வைத்து மடக்க உதவும். 2026 இல் திமுக தோற்றால், 2030 இல் பாஜக கூட்டில், அதிமுக பத்தோடு பதின்னொன்றாக இருக்கும். அதிமுகவின் எதிர்காலம் 2026 இல் அவர்கள் கூட்டணி தோற்பதில்தான் தங்கி உள்ளது. தோற்றால் கட்சி தப்பும். வென்றால் கேம் ஓவர். அதிமுகவின் எதிர்காலம் இப்போ திமுக, தவெக, நாதக கையில். திமுக வாக்குகளை எடுக்க, விஜையும், சீமானும் திமுக எதிர் வாக்குகளை பிரிக்க - தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றால் மட்டுமே அதிமுக அழிவதை தடுக்க முடியும். மக்களும் பாஜக போட்டியிடும் தொகுதியில் திமுக கூட்டணிக்கு போட்டு அதிமுகவை காப்பாற்றலாம்.