Everything posted by goshan_che
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளா 15 ஆயிரம் சதுர மைல். த.நா 50 ஆயிரம் சதுர மைல். வறுமை கோட்டு தகவலில் கேரளாவுக்கு அருகில் இலட்சதீவு, புதுச்சேரி, கோவா நிக்கும். தமிழ் நாட்டை அதை ஒத்த பெரிய மாநிலங்களோடுதான் ஒப்பிட வேண்டும். அதே போல் கேரளாவிலும் திறமான மாநில ஆட்சியாளர் அமைந்தனர் என்பதால், தமிழ் நாட்டில் அமையவில்லை என கூற முடியாது.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இந்தியா முழுக்க இருப்பது Indian Administrative Service எனப்படும் நிர்வாக சேவைதான். இதற்குள் ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பிரிப்பு இருக்கும். உதாரணமாக IAS - Tamil Nadu Cadre. இதில் தமிழ்நாட்டவர்கள், தமிழ் நாட்டில் பணி செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் தேசிய சேவைக்கு அழைக்கப்படலாம். ஆனால் IAS அதிகாரிகளின் தரம் இந்தியா முழுவதும் ஒன்றேதான். பீஹாருக்கும், தமிழ் நாட்டுக்கும் வித்தியாசம் அரசியல் தலைமைத்துவம். நிர்வாக சேவை அதிகாரிகள் கொள்கை முடிவை எடுப்பதில்லை. அவர்கள் ஆலோசனை சொல்வார்கள், அரசியல்வாதிகள் எடுத்த முடிவை அமல்படுத்துவார்கள். தமிழ்நாடு, கேரளா, மஹராஸ்டிரா முன்னேற, பீஹார் பிந்தங்க காரணம் நிர்வாக சேவையின் தரம் அல்ல, மாநில ஆட்டியாளரின் தரம். தமிழ் நாட்டு பொருளாதர வளர்ச்சியில் ஈழதமிழன் சீலை, நகை, சினிமா மூலம் கொடுத்த இலாபம், மிக, மிக, மிக சொற்பமானது. எங்களுக்குத்தான் இது பெரிய காசு, தமிழ் நாட்டு பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் - தூசு. நாம் வாழும் நாடுகளில் மது, சிகரெட், சூது, மூலம் அரசுகள் ஈட்டும் வருமான சதவீதம் இதை விட கூட இருக்கும் என. நினைக்கிறேன். டாஸ்மார்க்குக்கு நான் ஆதரவில்லை. ஆனால் புத்தர் முதலமைச்சர், யேசு நிதியமைச்சர் அல்லாத நாடு/மாநிலம் ஒன்றில் இது பெரிய சதவீதமாக எனக்கு படவில்லை.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் 2.2% சதவீதம். பீஹாரில் 34#. குஜராதில் 12%. அண்ணளவாக. ஆந்திரா, தெலுங்கானா 6%. கர்நாடகா 7.5. பல வட இந்திய மாநிலங்கள் 27,22, 15 க்கு மேல். https://en.m.wikipedia.org/wiki/Poverty_in_India
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளா தவிர் ஏனைய இந்திய மாநில கிராமங்களுக்கு போனால் தமிழ் நாட்டின் வளர்ச்சி புரியும். ஆனால் மீனை, மண்ணை தவிர, நிலக்கரி, தாதுக்கள், எண்ணை என சகல வளத்தையும் அகழும் அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தேர்தலில் வேட்பாளரின் மனைவி சொத்தும் விபரமும் தாக்கல் செய்யப்படும். போன தேர்தலில் கயல் அண்ணி சார்பில் தாக்கல் ஆன பத்திரத்தில் இந்த சொத்து இல்லை. சாதா சட்ட கல்லூரி மாணவர் காளிமுத்து, பெரிய வக்கீல் இல்லை. உழைத்த சொத்து எல்லாம் தமிழக அரசியலில் உழைத்த திருட்டு சொத்து. மாமனாரின் சொத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சீமானின் இஸ்டம். ஆனால் அதுவே திருட்டு சொத்து. அண்ணன் மானஸ்தன் இப்படி செய்யலாமா? தமிழ் நாட்டு அரசியல்வாதி யாரும் சுத்தம் இல்லை என நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். இப்ப சீமான் சொக்கதங்கம், சொக்கதங்கம் ஜுவல்லரி என எழுதுகிறீர்கள். பிகு போனதேர்தல் - அதற்கு முந்திய தேர்தல் இடையில் இதே போல் சீமான், மனைவி பெயரில் ஒரு மலை வாசஸ்தலத்தில் கோப்பி தோட்டம் பதிவாகி இருந்தது.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
பூவ…பூ எண்டும் சொல்லலாம்…புய்ப்பம் எண்டும் சொல்லலாம்…நீங்க சொல்றமாரியும் சொல்லலாம் அண்ணே🤣.
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
நோயும்👆 நோய்க்கு மருந்தும்👇
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
இந்த விதி அண்ணாமலை வந்த போதும் கடைபிடிக்க படவில்லை. இப்போ வேறு எவரும் தேர்தலில் போட்டியிடாமல் அமித்ஷா பார்த்து கொண்டதால் நைனா வென்றுள்ளார். சீமான் எந்த பிஜேபி தலைவரோடும் வீட்ல எலி வெளிள புலிதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லாததை எப்படி விட முடியும்🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
போன தேர்தலில் சொத்து கணக்கில் இல்லாத ஆறு கோடி நீலாங்கரை பங்களா இப்போ எப்படி வந்தது? பிலீஸ் டெல் மீ🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது 10 புள்ளிகளையா சொல்றீங்க?
-
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!
நீட்டுக்கு முன் இதில் பலதில் தமிழக மாணவரே படித்தனர். இப்போ ஏனைய மாநில மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது. 1996-2014 போல ஒரு ஸ்திரமற்ற நிலை ஒன்றிய அரசில் மீண்டும் வரும். அப்படி வரும் போது தமிழக கட்சிகளின் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டியது நீட் நீக்கம்தான்.
-
பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
வயது போனாலே இந்த அறளை ஒரு பெரிய பிரச்சனை. என்ன எழுதுகிறோம்/பேசுகிறோம், ஏது எழுதுகிறோம்/பேசுகிறோம் என்பது தெரியாமல் கீழ்த்தரமாக பொது இடங்களில் கூட எழுதி/பேசி விடுவார்கள். இங்கே திரியில் மேலே கூட இதை காணலாம் (சிலர் பதினைந்து வருடம் முன்பே இப்படித்தான் என்பது வேறு விடயம் 🤣). கீழ்த்தரமான பேச்சை, கீழ்தரமான பேச்சால் கண்டிக்கிறோம் என்ற முரண்நகை கூடவா விளங்காது🤣. பொன்முடி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே. தூசண திருமுருகன், செக்ஸ் சைக்கோ சீமான் போல பொதுவெளியில் யார் ஆபாசமாக பேசினாலும் அதை கண்டிக்க வேண்டியது அவசியம்.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
நயினார் பழைய அதிமுக ஆள். சொந்த தொகுதியில் கணிசமான ஆதரவு உண்டு. எடப்பாடி மிக பெரிய தப்பை செய்கிறார். 2026 தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணி வென்றால் - அதிமுக ஒட்டு மொத்தமாக பாஜகவால் விழுங்கப்படும். எடப்பாடி, செங்கோட்டையன் எல்லோரும் துரத்தி அடிக்கப்பட்டு, பாஜகவின் நேரடி அல்லது, மறைமுக ஆட்சி அரங்கேறும். அப்போ நயினார் முதல்வர் அல்லது துணை முதல்வராவார். முன்னாள் அதிமுக எம்பி என்பது, அதிமுக எம் எல் ஏக்களை எதோ ஒரு ரிசார்ட்டில் வைத்து மடக்க உதவும். 2026 இல் திமுக தோற்றால், 2030 இல் பாஜக கூட்டில், அதிமுக பத்தோடு பதின்னொன்றாக இருக்கும். அதிமுகவின் எதிர்காலம் 2026 இல் அவர்கள் கூட்டணி தோற்பதில்தான் தங்கி உள்ளது. தோற்றால் கட்சி தப்பும். வென்றால் கேம் ஓவர். அதிமுகவின் எதிர்காலம் இப்போ திமுக, தவெக, நாதக கையில். திமுக வாக்குகளை எடுக்க, விஜையும், சீமானும் திமுக எதிர் வாக்குகளை பிரிக்க - தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றால் மட்டுமே அதிமுக அழிவதை தடுக்க முடியும். மக்களும் பாஜக போட்டியிடும் தொகுதியில் திமுக கூட்டணிக்கு போட்டு அதிமுகவை காப்பாற்றலாம்.
-
வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு
இது உண்மையா?
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
அண்ணை ஆர் யூ ஓக்கே? 🤣 பாஜக ஆட்சி மாறும் போது அதுவரை ரவி உயிருடன் இருந்தால் கிளறப்படலாம்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில அரசு நிர்வாகம்/ஹைகோர்ட் துரத்தினால் சுப்ரீம்கோர்ர்ட்டுக்கு சில பாஜக வக்கீல்கள் சகிதம் போய் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டி வரும் 🤣. ஆனால் தோழன் பாலனுக்கு இதில் ஒருவகை மட்டும்தான் தெரியும். ஏன் என்றால் அவருக்கு செலக்டிவ்-மாலைகண்🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை என நினைக்கிறேன். அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்? அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…. கோஷானின் நிலை👇🤣🤣🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👆👍 IPL, Big Bash, Hundred etc etc என உலகெங்கும் நடக்கும் பிக்கினி கிரிகெட் திருவிழாக்களையும், தோனி போன்ற முதியவர்களை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்வதையும் சகித்து கொள்ள இது ஒன்று மட்டுமே காரணம்.
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
பிகு இப்போ கூட அன்புமணியை இராமதாஸ் தூக்கி அடிக்க காரணம் - அமித்ஷாவை சென்னையில் சந்தித்து 2026 கூட்டணி அறிவிப்பை நேரடியாக NDA யில் என அறிவிக்க அன்புமணி அவசரப்பட்டு, கிட்டதட்ட சந்திப்பது, கூட்டணி அறிவிப்பு வெளியிடுவது என்ற முடிவை எடுத்த பின்…. அன்புமணி அவசரப்படுகிறார், முதலில் அதிமுக என்ன செய்கிறது என பார்ப்போம், காலம் இருக்கிறது என முடிவு செய்த இராமதாஸ் - வேறு வழி இன்றி எடுத்த முடிவுதான் அன்புமணியை தூக்கி அடித்தல். இத்தனை காலம் எத்தனையோ ஆட்களை விரட்டி, கட்சியை அன்புமணி கையில் கொடுத்தார் இராமதாஸ் - ஆனால் அவரே கட்சியை எடுப்பார் கைப்புள்ளை ஆக்குவாதல் இப்போ அவரையே தூக்கி அடித்துள்ளார் இராமதாஸ். தமிழக அரசியலில் பாலபாடம் ஆட்சியை விட கட்சி முக்கியம். அப்படி இருந்தபடியால்தான் எம் ஜி ஆரிடம் தொடர் தோல்வியின் பின்னும் கருணாநிதி ஆட்சியை பிடித்தர். எம்ஜிஆர், ஜெ, ஸ்டாலின் அனைவரும், இதுவரைக்கும் எடப்பாடி கூட எடுக்கும் நிலைதான் இது. உங்களுக்கு கோழி கூவும் சத்தம் கேட்கும் வரை நாள் விடியாது…🤣 இதையே யாரும் யூடியூப்பர் சொல்லும் வரை - இது நடக்காத விடயமாகவே இருக்கும். #யூடியூப்பில் அறிவித்தால்தான் சூரியன் உதயமானது என நம்புவோர் சங்கம்🤣 கோஷானுக்கு உருவான கனவு, பிபிசி க்கும் உருவாகியுள்ளது🤣
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
இராமதாஸ் முகுந்தனை உள்ளே கொண்டு வந்ததே…. அன்புமணி கூட்டணி விடயத்தில் தன்னை கேட்காமல் பாஜக பக்கம் சாய்கிறார் என்பதால்தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்பதை இராமதாஸ் விரும்பவில்லை. ஆனால் அன்புமணி அவர் வாயை அடைத்து விட்டார். அதிமுகவுடன் சேர்ந்து கேட்டகலாம் என இராமதாஸ் வலியுறுத்தியும் அன்புமணி பாஜகவோடு போய் தர்மபுரியை சொற்பவாக்கில் இழந்தார் செளமியா. அப்போதே நான் சொன்னபடி கூட்டணி அமைத்தால் - செளமியா வென்றிருப்பார் என கூறிய இராமதாஸ் - கூட்டணி முடிவை இனி நான் மட்டுமே எடுப்பேன் என அறிவித்தார். இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அன்புமணியை பாஜக தம் கையில் எடுத்து கொண்டதே. அன்புமணி மூலம் யானை விளாம்பழம் தின்றது போல் கட்சியை பாஜக கட்டுபடுத்த விழைவதை உணர்ந்து, தடுக்க இராமதாஸ் எடுத்த முயற்சியே விருப்பமே இல்லாத முகுந்தனை இராமதாஸ் வலுகட்டாயமாக அரசியலில் இறக்கியது. இதுதான் அன்புமணி-இராமதாஸ் முறுகலின் பிண்ணனி. பிகு ஏனையவர்களை நக்கல் அடிக்க முன், யூடியூப் உருட்டல்களை மட்டும் உள்வாங்கி அதை இரை மீட்காமல் - கொஞ்சம் நடப்பதை வைத்து, நாலு களத்தில் இருப்பர்களோடு பேசினால், புத்தியை பாவித்து உய்தறிந்தால் நடப்பதை உணரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣
-
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம்
நல்ல வேளை தலிவா…. ஜெ இறந்து இத்தனை வருடம் ஆன பின்னாவது உங்களுக்கு தைரியம் வந்து இந்த அரிய தகவலை சொன்னீர்கள் இல்லாவிட்டால் வரலாற்றில் ஒரு மைல்கல் மறைக்கப்பட்டிருக்கும் 🤣. நம்ம தலிவரு தொடை நடுங்காம எடுத்த ஒரே முடிவு - 1996 தேர்தலில் ஜெ யை எதிர்க்கும் முடிவுதான். ஆனால் அதை கூட தன் சொந்த அரசியல் கட்சியை தொடங்க பயந்து, இரவலுக்கு குரல் கொடுக்க போய் - கருணாநிதி, மூப்பனார் நல்ல இலாபம் அடைந்து கொண்டனர்.