Everything posted by goshan_che
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஆனால் சொந்த ஊர் பெயரை யாரோ மானிப்பாய்/கொழும்பு 7 துரை வந்து சொன்னார் என்பதால் ஏன் விட்டு கொடுப்பான். பழைய பெயரின் மீது உண்மையில் ஊர் மக்களுக்கு பற்று இருப்பின் அதை தக்க வைக்க அல்லவா போராடி இருப்பார்கள். ஆகவே, இந்த காரை -தீவை தூக்கி போட்டு விட்டு நகரமாவதில், காரைநகர் வாழ் மக்களுக்கும் விருப்பம் இருந்தது என நினைக்கிறேன். எனது மகனின் பெயர் சுரேன். பக்கத்து ஊரில் இரெண்டு சுரேன் இருப்பதால் நான் என் மகனின் பெயரை ஏன் நரேன் என மாற்ற வேண்டும்? அதே போல் கிழக்கிலங்கை, புத்தள காரைதீவுகள் பூகோளவியல் படி தீவுகளே அல்ல, ஆனாலும் அவை இன்று வரை தம் முன்னோர் பாவித்த பெயரையே பாவிக்கின்றனர். முல்லைதீவும் அப்படித்தான். ஆகவே பாலம் கட்டியதால் பெயர் மாற்றியதை ஒரு தக்க காரணமாக என்னால் கருத முடியவில்லை. அப்படி என்றால் புங்குடுதீவை புங்கைநகர், மண்டைதீவை தலைநகர் என்றா அழைப்பது?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் Virakesari.lkவேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர் | Virakesari.lkவேலன் சுவாமி சார்பாக சுமந்திரன் ஆஜர்யோக்கியனுக்கு சுமந்திரனோடு என்ன தொடுசல் 🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்து சமயம் என்ன சொல்கிறது? பற்றறானை மட்டும் பற்றி, ஈற்றில் அந்த பற்றையும் அறுத்து முக்தி அடை என்பதை தானே ? அப்படி இருக்க ஆன்மீக இந்து குருவுக்கு, அரசியல், சமூக எண்ணமே வரக்கூடாது. ஏன் எண்டால் இவை எல்லாம் பற்றுகள். உலகியல் விடயங்கள். உள்ளம் பெருங்கோவில்… ஊனுடம்பு ஆலயம்… வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்… தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்… இதுவல்லாவா இந்து துறவி இருக்க வேண்டிய நிலை? ஆனால் இங்கே வேலனுக்கு ஏன் அரசியலில் போராடும் வேட்கை வருகிறது. சிவ தொண்டன் நிலையம் அமைத்த யோகர் எப்போதாவது மத ரீதியாக ஆர்பாட்டம் செய்தாரா? ராமகிருஸ்ண மிசன்களை தந்த விபுலானதர் அரசியலில் கருத்து கூறினாரா? நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்க்க கூடாது. வேலன் போன்றவர்கள் துறவிகள் அல்ல. மாறாக யோகி ஆதிநாத் போல, காவி உடை பூண்ட அரசியல்வாதிகள். இந்த வேலன் என்ற விசசெடி முளை விட தொடங்கும் போதே யாழில் அவரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. வேலனுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஆட்களுக்கு அது கண்ணில் படவில்லை என நினைக்கிறேன். இந்த திரியில் இப்போ வேலனை மதிப்பாக பக்தி பரவசமாக விளிக்கும் சிறி அண்ணா எழுதிய கருத்தை பார்த்து யாரும் மூர்ச்சை ஆகினால் நான் பொறுப்பல்ல 🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அது இப்போ. இதுவே வேலன் தரவழிகள் கையில் அதிகாரம் போனால்…உங்கள் குளியலறை வந்து மணந்து பார்பார்கள் மச்சம் சாப்பிடீர்களா என. வத்தலோ, தொத்தலோ தலைவர் இருக்கும் போது அவரே ஒரு தீர்வை பெற்று, 10 வருடம் அதை நடைமுறைபடுத்தி விட்டே சாக வேண்டும், இல்லை எண்டால் நாறிப்போவோம் என நான் 2009 க்கு முன் நண்பர்களிடம் சொல்வதுண்டு. இப்போ அதுதான் நடக்கிறது.
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
ஓம்…களத்தில் இருந்து போக முன்னம் தான் கனடாவிற்கு வேலை விடயமாக போவதாக கூறினவர்🤣. அது சரி சோனகத் தெருவில் எப்போ நொதேர்ன் யூனி கிளை திறந்தார்கள்?🤣.
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
பகிர்வுக்கு நன்றி. 90 கோடியில் கட்டிடமாம், அதை பராமரிக்க மாதம் 10 இலட்சம் செலவாம்😱. புங்குடுதீவில் இருந்து தமிழ் நாட்டில் போய் முகாமில் அல்லல்படும் குடும்பங்களே இல்லை போலும், இருந்திருந்தால் காசை அதில்தானே செலவிட்டிருப்பார்கள். இப்படி கட்டிடம் கட்டி காசை கரியாக்காமல். நிர்வாக குழு ஆண்டு சந்தா 12,000 என்பதும், கொழும்பில்தான் முழு நிர்வாகிகள், கூட்டமும் அங்கேதான் நடக்கிறது என்பது, கோவிலை கொழும்பில் வசிக்கும் புங்குடுதீவை சேர்ந்த வியாபாரிகள் முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்கள் போலத்தெரிகிறது. இந்த கோவில் அதிக பிரசித்தம் இல்லை என நினைக்கிறேன், அத்தோடு பெயரளவிலாவது ஒரு நிர்வாக குழு இருக்கிறது, இதிலேயே இந்தளவு காசு புழங்குது என்றால், பிரசித்தமான, 100% தனியாருக்கு சொந்தமான கம்பெனிகளின் வருமானத்தை நினைக்கவே மலைப்பாக உள்ளது. நாகபூசனி அம்மன் செய்யும் சமூக, சமய பணிகளை பேட்டி கொடுப்பவர் சுட்டி காட்டினார். எனக்கு தெரிய இதே போல் செய்யும் இன்னொரு கோவில் தெல்லிபளை துர்க்கை அம்மன். மிச்சம் எல்லாரும் வறுகுவது மட்டும்தான். குசா அண்ணை சொன்னது போல் ஏனைய மதங்களிலும் இது நிச்சயம் இருக்கிறது. ஆனால் அவர்கள் நிறுவன மயபட்டிருப்பதால் கொள்ளை அடிப்பது கஸ்டம். லோக்கல் பாதிரி களவெடுத்தால் அதை பிஷப்பின் ஆள் செய்யும் வருடாந்த கணக்கு கேட்பில் கண்டு பிடித்து விட வாய்புண்டு. எமது கோவில்களில் நிர்வாக குழு தானே அதி உச்ச பவர். ஆகவே அதில் உள்ளோர் எல்லாரும் பங்கு பிரித்தால், பிடிபடாமல் களவு எடுப்பது ஈசி. நான் நினைக்கிறேன் இப்படியான கோவில்களில் நிர்வாக பொறுப்பில் இருப்போரே மிக பெரும் நாத்திகராக இருப்பார்கள் என. அப்படி என்றால்தான் கடவுள் தண்டிப்பார் என்ற பயம் இல்லாமல் கோவில் சொத்தை ஆட்டையை போட தைரியம் வரும்.
-
ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்
இங்கே இப்போ 68 ஆனால் 70 ஆகும் என்றே நினைக்கிறேன். நான் ஓய்வூதியம் எல்லாம் எடுப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியே வேலையில் இருந்து நேரா போய் சுடலையில் படுக்க வேண்டியதுதான்🤣. ஆனாலும் தனியார் பென்சனுக்கும் மாதாந்தம் கட்டி வருகிறேன். தப்பி, தவறி 70,75 எண்டு டிக்கெட் கிழிபடாமல் இழுத்தால் - என்ற பயத்தில். கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை, அதனிலும் கொடிது முதுமையில் வறுமை. பிகு ஒளவையார் நல்லா பொற்கிழி வாங்கி சேர்தமையால் அவருக்கு முதுமையில் வறுமை பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இதைத்தான் நான் மேலே சொன்னேன். நல்லூர் ஒன்றும் ஸ்பெசல் அல்ல. கோவில் வெளி வீதி வேறு. கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டர் அப்பால், இருப்பது வேறு. இது கடைசியில் யாழ் மாநகர எல்லைக்குள் மச்சம் அனுமதி இல்லை என்ற அளவில் போய் நிற்கிறது. தாடி வளர்க்காவிட்டால் கசை அடி கொடுக்கும் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். இப்போ விளங்கிறதா? தமிழ் தாலிபான்கள் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது? பாரிஸ்டா விட்டு கொடுத்தது அனைவருக்கும் ஆப்பாக முடியும் என ஜஸ்டின் அண்ணா சொன்னதும் இதைதான். சொந்த உழைப்பில் சாப்பிட பஞ்சி பட்டு சாமியார் ஆனவனை எல்லாம் சமூக/அரசியல் தலைவராக ஏற்று கொண்டால் இதுதான் கெதி🤣. வேலன் சச்சி போன்ற கிருமிகளை வளர விட்டால் கூண்டோடு ஆளுனரிடம் ஒரு நல்ல விலைக்கு வித்து விடுவார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பார்வையில்தான் கோளாறு. எழுத்தில் அல்ல. நல்ல கண்வைத்தியரை பார்க்கவும். மிகவும் காரசாரமாக ஆனால் கண்ணியமாக போய் கொண்டிருந்த திரியை நடுநிலை நக்கிகள் என்ற பதபிரயோகம் மூலம் முதலில் நாறடித்தவர் யார் என்பதை மேலே போய் பார்க்கவும். பரிஸ்டா மாதிரி போய் கொண்டிருந்த உரையாடலை, வந்து இரெண்டாம் பதிவிலேயே கள்ளு தவறணை ரேஞ்சுக்கு இறக்கி விட்டீர்கள். வந்த வேலை முடிந்தால் கிளம்ப வேண்டியதுதானே. நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் வந்து இன்னொரு திரியை நாறடிக்கும் வரை நன்றி வணக்கம்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவ்வையே, தமிழ் வாத்தியாரே, நீங்கள் பொருள் விளங்கியது என் பிழை அல்லவே… காரை தீவு தான் நாம் என பெருமிதம் கொள்ளாமல் காரை நகர் என தாமே பெயர் மாற்றி கொண்டதில் நான் ஒரு கூட்டு தாழ்வு மனச்சிக்கலை காண்கிறேன் தமிழ் குரவரே. அதே போல்தான் தீவக மக்கள் என்பதை தீவார் என பொருள் கொண்டதும், சொல் குற்றமோ, பொருற்குற்றமோ அல்ல, மாறாக வியாக்கியான குற்றம் என நயம்பட உரைக்கிறேன். ஊர்புதினத்தில் சுமனை போட்டு வாங்கிய மற்றைய திரியில் இது சொல்லப்பட்டது. சூப்பர். ஏலவே வெளிநாட்டு பண வரவை அரச கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் உட்பட பல ஆப்புகளுக்கு ஆவன செய்த ஆளுனரிடமே இன்னும் ஒரு ஆப்பை தாமாகவே கொண்டு போய் கொடுத்துள்ளார்கள். இந்த இனத்துக்கு, சமஸ்டி, பொலிஸ், காணி உரிமைதான் இல்லாத கேடு.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இலண்டன் சாமியாருக்கு ஜே போட்டு, இப்ப கூனி குறுகி நிற்பவர் யார் என உங்களுக்கும் எனக்கும் தெரியும். அதே நிலை உங்களுக்கும் வரக்கூடாது என நல்லூரில் ஒரு ஒரு ரூபாய் அர்ச்சனை செய்துள்ளேன்🤣.
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
தகவலுக்கு நன்றி 🙏
-
வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜன் கூட்டிய கூட்டத்தால் வந்த விளைவை ஏதோ தான் வெட்டி, விழுத்தியது போல போஸ்ட் போடும் பார் சிறி. இதுவரை யாரோடும் பேசமாட்டேன் எனா இருந்த கஜன் இப்போ இராஜதந்திரிகளை சந்திப்பதும், பிரதமைரை சந்திப்பதும் நல்லதொரு முன்னேற்றம்.
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
என்னவாம் மேட்டர்?
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
நானறிய இவருக்கு “தூஷண பிக்கர்” என்ற பட்டத்தை வழங்கியவர் யாழ்கள கருத்தாளர் நாதம்ஸ். பவித்திரா வன்னியாராச்சியை பவித்திரம் அற்ற வார்தைகளால் இவர் அர்ச்சித்த வீடியோ வந்த நேரம் இந்த பெயர் சூட்டல் இடம்பெற்றது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வந்தார், வரத்தார் என்பது வசைவு சொல் அல்ல. நான் இப்போ வசிக்கும் ஊரில் பத்து தலைமுறைகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரின் சேர்ச் இரும்பு கதவு அவர்களின் முப்பாட்டனின் கொல்லையில் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்து வாய் வழி வரலாறாக 100 வருடங்களுக்கு முன் வந்த கடும் பனி பொழிவு பற்றி தெரிகிறது. அந்த ஊரில் எது வழக்கம், எது புதிதாக வந்த பழக்கம் என தெரிகிறது. நல்ல வேலை அல்லது பள்ளிகூடம் என்பதற்காக இங்கே வந்து குடியேறிய வந்தான் வரத்தானாகிய நான் - இந்த ஊரின் வழமைகள், வரலாறு பற்றி அறியாமல் இருப்பது இயல்பானது. இதில் எந்த வலியும் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வது வெறும் பாசாங்கு. Playing the victim card. ஆதாரம் - யாழ்பாணம் என நான் சொல்லவில்லை. நல்லூரில் இப்போ இருப்பவர்கள் பலர் தீவகத்தில் இருந்து 50 வருடத்தில் குடியேறியோர் என்றே கூறினேன். இது என் வாழ்க்கை அவதானத்தின் பால் எழுந்த கருத்து. நல்லூரை ஓரளவு அறிந்தோருக்கு நான் சொல்வது புரியும். இலங்கை குடிசன மதிப்பீட்டில் கூட இந்த கேள்வி கேட்கப்படாத போது, இதற்கு நீங்கள் கேட்கும் வகையில் ஆதராம் எங்கும் இராது. கடை முதலாளி சுமந்திரனின் ஆள் எண்ட கதையை நம்பி சோல்டர் பேக்கோடு விமானத்தில் இருந்து குதித்தாகிவிட்டது… இனி கால் முறிந்தாலும், கழுதெலும்பே உடைந்தாலும் வலிக்காத மாரி நடிப்பதை தவிர வேறு வழியில்லை. மற்றையவர் கொஞ்சம் மேலால் தண்ணி ஊற்றியதற்கே, சசி வர்ணம் கரைந்து, உள்ளே இருக்கும் சங்கி-வர்ணம் புலப்பட்டு விட்டது. அவரும் Google street view ஆதாரத்துக்கு அவதூறை பதிலாக கக்கி விட்டு ஓடியவர், ஓடியதுதான்🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
குறித்த கடை நல்லூர் குறுக்கு தெரு பருத்திதுறை வீதி சந்தியில், கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டருக்கும் அப்பால் உள்ளது. இதை மறைத்து கோவிலில் திருவிழா நேரம் வளைவு கட்டும் இடத்தில் இருப்பது போல் பொய்யை பரப்பினார் சசி வர்ணம். அதை Google street view ஆதாத்துடன் கேள்வி கேட்டதும் டென்சன் ஆகி விட்டார். ஆரம்பத்தில் இதை சுமந்திரன் ஆளின் கடை என்றார்கள். பின்னர் சிங்களவர் கடை என்றார்கள். முதலில் மொக்கன் கடை போல் மாட்டு எலும்பை வீதியில் போடுவார்கள் என்றார்கள். இல்லை இது ஒரு கோப்பி கடை என மெனுவை எடுத்து போட்டதும் அந்த கதை அப்படியே அமுங்கி விட்டது. இது யாரோ வியாபார போட்டியில் வேலன் போன்ற திருட்டு சாமியாருக்கு காசை கொடுத்து தூண்டிவிட்ட விடயம் என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது. வழமை போல சுமந்திரன், சைவம் என்ற உசுப்பேத்தும் காரணிகளை இணைத்து விட மொக்கராசுகளும் சோல்டர்பேக்கை கொழுவிகொண்டு விமானத்தில் இருந்து குதித்து விட்டனர் என நினைக்கிறேன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
யாழ்பாணத்தில் விளம்பர உதவி தேவையா? உடனே அணுகுங்கள்! வேலன் & மொக்கராசுஸ் கிளைகள் நல்லூர்:பெர்லின் பாரிஸ்:டொராண்டோ
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அதே… யாருக்கும் யாழ்பாணத்தில் மார்கெட்டின் பக்கேஜ் தேவைபட்டால் வேலனை அணுகவும்🤣. வேலனுக்கு கொஞ்சம் செலவாகும். யாழ்கள சங்கிகள் சம்பளம் இல்லாமலே வேலை பார்ப்பார்கள் 🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது எந்த தனி நபருக்குமான கருத்து அல்ல. உண்மையிலே உங்களை எல்லாம் பார்க்க பரிதாமாக இருக்கிறது. சுமந்திரன் பார் வைக்கிறார், பாறிஸ்டா வைக்கிறார் என பொய்களை காவி திரிகிறீர்கள், அவர் அரசியல்வாதி அதையாவது அரசியல் எதிர்ப்பு என விளங்கி கொள்ளலாம். சசி வர்ணம் கருத்து வறுமை ஏற்பட்டதும், கருத்தாண்மை அற்ற தனமாக நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்ல, அந்த பச்சை பொய்யை காவி திரிவதும் மட்டும் இல்லாமல், என் மீது பிரதேசவாத முத்திரை குத்தி அதனால் மனம் புண்பட்டதாக வேறு சொல்கிறீர்களே? வெட்கமாக இல்லையா? உண்மைக்கு நன்றி. அபாய அறிவிப்பு நல்லூரில் எனது அக்கா வீட்டில் மச்சம் சமைக்க மாட்டார்கள், அல்லது எனது அண்ணா வீட்டில் மாதம் ஒரு முறைதான் மச்சம் சமைப்பார்கள் ரீதியில் எழுதும் நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மன்னிக்க வேண்டும். நீங்களும் சசி வர்ணம் கிளப்பிய அவதூறு புயலில் சிக்கி கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். நான் எங்கும் “தீவார்” என குறிப்பிடவில்லை. தீவு பகுதி மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன். மற்றும் முன்பே ஒரு முறை யாழில் சொன்னது போல் என் தாய் வழி பாட்டனார் பல தலைமுறைக்கு முன் நெடுந்தீவு, அதேபோல் என் அம்மம்மாவின் அம்மா, பிறந்தது நாரந்தனை. ஆகவே நான் தீவார் என சொல்லவில்லை, அப்படி சொன்னால் அதை என்னை நானே சொல்வது போல் ஆகும். ஆனால் நான் சொன்ன கருத்தில் - நல்லூரில் இப்போ இருக்கும் பலர் கடந்த 50 வருடத்துள் தீவுபகுதியில் இருந்து வந்து குடியேறியோர் எனவே அவர்களுக்கு ஊரின் வரலாறு தெரியாது இருக்ககூடும் என்பதில் மாற்றம் இல்லை. அது ஒரு பாகுபாடான கருத்தும் இல்லை. அதேபோலத்தான் ஒருவர் சொல்லாததை சொன்னதாக பாசாங்கு செய்யும் இந்த போலியான நானும் பாதிக்கப்பட்டென் என்ற நடிப்பும், தமிழரின் சொத்து என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறீர்கள்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
ஊமைக்குத்து என கூகிளில் தேடினேன், லிங் - இந்த பக்கத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
“தமிழ் தாலிபானில்” என்ன தரம் குறைகிறது? தலிபான்கள், சங்கிகள் போல மதவெறி தலைக்கேறிய தமிழர்களை அப்படி குறிப்பிட்டேன். “வந்தான் வரத்தான்” - இது ஒரு ஊரில் வந்து குடியேறிவர்களை குறிக்க பாவிக்கப்படும் வார்த்தை. “தீவார்” - இதை நீங்கள்தான் பாவித்தீர்கள். நான் மிக கண்ணியமாக தீவக மக்கள் என்றே அழைத்தேன். அவர்கள் நல்லூரில் பெரும் எடுப்பில் வந்து குடியேறி (அவர்கள் ஊரில் வீடுகளில் ஆட்கள் இருக்காமல் மாடு மேய்கிறது) உள்ளார்கள். அதை நான் தப்பென கூறவில்லை, ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன். “ஐயரின் கை ஜுஸ்” - பஞ்சாமிர்தத்தை ஐயர்தானே கையால் பிசைகிறார், அதில் அவரின் கை வியர்வையும் சேரும் அல்லவா, அப்போ அது ஐயரின் கை ஜுஸ் தானே? நீங்கள் உங்கள் மலின புத்தியால் வேறு வகையில் விளங்கி கொண்டீர்கள் போலுள்ளதே சகோ🤣
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
உண்மைதான். புணர்ச்சி-ஊக்க நீக்கம் சரியான பதமோ? இப்போதைக்கு குற்றவாளிகள் ஓம்பட்டால் மட்டுமே இதை செய்வார்களாம். பிரச்சனை என்னெவெண்டால் யூகேயில் சிறைகள் 99% நிரம்பி விட்டது. இந்த தண்டனைக்கு ஓம்படும் ஆட்களை வெள்ளனவாக வெளியில் விட திட்டமிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் இவை 60% மட்டுமே வினைதிறனானவையாம். 40% இல ஒருவர் யாரும் பிள்ளையள் மீது கைவத்த்தால் - வெளியால விட்ட அமைச்சர் (பாகிஸ்தானி வம்சாவழி பெண்) கதி அதோ கதிதான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாங்கள் மொக்கன் கடை மாட்டு ரோல்சை டேக் எவே எடுத்து, பாரிஸ்டாவில் போய் ஒரு சுகர் ப்ரீ காப்பாச்சீனோ வை வாங்கி, அங்கே இருந்து அருகே இருக்கும் கற்பகத்தில் வாங்கிய பனங்கட்டியை நக்கி நக்கி கூட குடிக்க முடியும்…ஏன்னா நாங்க நடுநிலை நக்கிகள் 🤣. ஆனால் வன்போக்கு நக்கிகள் (அட அதுதாங்க extremists) கோவிலில் கிடைக்கும் ஐயரின் கை ஜூசை (அதாங்க பஞ்சாமிர்தம்) மட்டுமே நக்க முடியும்.