Everything posted by goshan_che
-
சிம்பொனி என்றால் என்ன?
இந்த இனம் மிக நெடியது அண்ணை. எந்த ஒரு தனி மனிதனும் அவர்களின் செயலும் இந்த இனத்தின் பெருமையை கூட்டாது, குறைக்காது. எங்கே நான் எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன் - எனது பார்வையில் இளையராஜா செய்தது சாதனைதான் ஆனால் இந்தளவு ஓவர் பில்டப் தேவையில்லை. அடுத்தது அவரின் அகங்காரம் - அது நிச்சயமாக கண்டிக்கபட வேண்டும். தமிழர் நல்லா இசையமைப்பார் என்பதால் அநாகரீகமாக நடக்கும் உரிமையை அவர் பெறவில்லை.
-
காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
முஸ்லீம்கள் அல்லாவை பயந்து கொள்ளுங்கள் என சொல்வார்கள். யாழ்கள சீமானியர்கள் இந்த வீடியோவை பார்த்த பின்… விஜயலட்சுமி சொல்வது எல்லாமும் பொய் ஆக இருக்கவேண்டும் என கடவுளை வேண்டி கொள்ளுங்கள்.
-
சிம்பொனி என்றால் என்ன?
பீத்தோவன் என நினைக்கிறேன் பதின்மவயதுக்கு வர முன் குழந்தையாக சிம்பொனி அமைத்தாராம். யாரோ ஒரு பையன் எனக்கும் சிம்பொனி அமைக்க ஆசை என சொல்ல - நீ செய்வது சினிமா பாட்டு போல இருக்கிறது என பொதுவெளியில் அவமானபடுத்தி உள்ளாராம் ராஜா. புளுசட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.
-
சிம்பொனி என்றால் என்ன?
ரஹ்மான், ராஜாவை நான் ஒப்பிடவில்லை. ஆனால் ராஜா நிச்சயம் விருதுகளுக்கு பின்னால் ஓடும், அதற்காக அரசியல் சாயம் கூட பூசி கொள்ளும் ஒருவர். எல்லோரும் ஆஸ்கார் நாயகன், ஆஸ்கார் அது, இது என அலப்பறை பண்ணி கொண்டிருக்க சத்தமில்லாமல் 2 ஆஸ்காரை ரஹ்மான் எடுத்து வந்தார். என்னை பொறுத்தவரை ரஹ்மான் ஆஸ்கார் எடுத்தது ராஜாவின் கர்வத்தின் மீது விழுந்த மரண அடி என்றே நினைக்கிறேன். தன்னோடு கோவித்து கொண்டு, மணிரத்னமும், பாலச்சந்தரும் சேர்ந்து, அறிமுகபடுத்திய தனக்கு வேலை பார்த்த பையன். ஆஸ்காரை தனக்கு முன் எடுத்துவிட்டான் என்பதை அவர் இன்று வரை ஏற்றுகொள்ள முடியாமல் அவதிபடுகிறார். இனி ஆஸ்கார் எடுத்தும் பயனில்லை (ரஹ்மானுக்கு பிறகு எனவே வரலாறு பதியும்). ஆகவே நானும் ரெளடிதான் என பத்மவிபூசண், சிம்பொனி என எதை எதையோ எல்லாம் முயல்கிறார். இது எதுவுமே தேவையில்லை - அவருக்கான இடம் அபப்டியேதான் இருக்கிறது.
-
சிம்பொனி என்றால் என்ன?
இளையராஜா என்ற இசையமைப்பாளரை நான் குறை ஏதும் கூறவில்லை. ஆனால் இளையராஜா என்ற தனிமனிதன் வேறு, இளையராஜா என்ற இசையமைப்பாளர் வேறு, இளையராஜா என்ற பிரபலம் (celebrity) வேறு. செலிபிரிட்டி என்றால் சமூகம் செலிபிரேட்பண்ணும் அதாவது கொண்டாடும் மனிதன். அப்படி சமூகம் கொண்டாடும் மனிதருக்கு அவர் அலப்பறை பண்ணினால், சமூகத்தில் இருந்து விமர்சனங்கள் வருவது தவிர்க்கவியலாதது. அவரின் மிக உன்னதமான இசையை ரசிக்கிறோம் ஆனால் நாம் ரசித்ததுதான் அவரின் இன்றைய சுக வாழ்வுக்கு காரணம். ஆகவே அவர் ஒரு service provider நாம் ஒரு customer. கஸ்ட்மர் முகம் சுளிக்கும் படி நடந்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும், இளையராஜா ஆயினும், இலோன் மஸ்க் ஆயினும். அவரின் இசையை ரசிப்பதால் அவரின் அலப்பறைகளை சகித்துகொள்ள வேண்டியதில்லை.
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
அப்போது கூட தெரியவராத ரகசிய கூட்டணிகளும் உண்டு.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
நான் அறிந்தவரை இப்படி எல்லை தெரியாமல் வர வாய்புகள் இல்லையாம். அநேகமாக டிரோலர்கள் அனைத்தும் எல்லையை காட்டும் செய்மதி கருவிகள் உள்ளனதானாம். விஜையும் ஏனையோரை போல நோக்கம் ஏதுமற்ற ஒரு வெற்று போராடத்தைதான் செய்யபோகிறார். ஆனால் ஆக்ரோசமாக செய்து மத்திய மாநில அரசுகளை சாடினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும். மேற்குநாடுகள் போல் “நீங்கள் பிரேரிக்கும் தீர்வு என்ன?” என யாரும் தமிழ் நாட்டு பத்திரிகையாளர்கள் கேட்கமாட்டார்கள்🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
இளசுக்கு தாழ்வுசிக்கல், அதை மறைக்க வெளிப்படுத்தும் உயர்வுச்சிக்கல் நடவடிக்கைகள், அவரின் வாய் இவற்றால்தான் பிரச்சினை வருபதாக நான் எண்ணுகிறேன். வித்யாகர்வம் தனக்கு இருப்பதாக காட்டி கொள்ள வேண்டும் என்றே நடப்பதாகவும் நான் நினைப்பதுண்டு. உங்களிடம் பழகியதில் இவை இருப்பதாக தெரியவில்லை.
-
கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
நாளை முதல் நாடெங்கும்…. பூமர் அங்கிளும், பொருந்தாத காதலும். முழு நீல திரைப்படம். தினசரி காட்சிகள்.
-
சிம்பொனி என்றால் என்ன?
பத்திரிகைகள் மட்டுமல்ல… ராஜாவும் சரியான அற்பன். அவரை தமிழ் கூறு நல்லுலகம் இனம் கண்டு பாராட்டுகிறது. ஆனால் ஏனைய மொழிகளில் அவ்வளவு ரீச் இல்லை. ஆனால் ரஹ்மானின் இசையை உலகமே கொண்டாடுகிறது. ஏனையவர்கள் ரசிக்கவில்லை என்பதால் அவரின் இசை அற்புதமானது அல்ல என யாரும் சொல்லமுடியாது. ஆனால் அவருக்கு அந்த validation தேவைபடுகிறது. சாதி விடயத்தில் கூட அப்படித்தான். ஆம் நான் டேனியல்தான். மிகவும் பிற்படுத்தபட்ட சாதியில் பிறந்தவந்தான் ஆனாலும் என் இசைக்கு நீங்கள் எல்லோரும் ரசிகர்கள் என இறுமாப்பாய் இருக்கலாம். ஆனால் பொய்க்கு பிராமண வேஷம் போட்டு, அவங்கள் கோவிலுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தும் படி நடப்பார். # எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணம் இருக்கு
-
சிம்பொனி என்றால் என்ன?
எதுக்கும் கொஞ்சம் மெதுவா கதையுங்கோ, இளையராஜா மீது இவர்களுக்கு அழுக்காறு என கிளம்பி வரபோகிறார்கள். இளையராஜா இசையில் ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிம்பொனி இசைப்பது அப்படி ஒன்றும் அதீத சாதனை அல்ல. இதை செய்ய எந்த அமைப்பின் அனுமதியோ, அழைப்போ தேவையில்லை என்கிறார்கள். ஆனாலும் இது ஒரு சாதனைதான். இவ்வளவு பில்டப் ஓவர். ஆகவே கோஷானால் முடியாதுதானே என யாரும் கேட்க கூடாது🤣 இந்த லிஸ்டில் பீத்தோவன் போன்ற பல மேதைகளும் உள்ளார்கள். 1992/3 வாக்கில் நான் ஷார்ட்ஸ் போட்ட காலத்தில் இதே போல் இளையராஜா தான் இலண்டன் போய் சிம்பொனி இசைத்ததாக பெரிய அறிவிப்புகள் விட்டவர். அப்ப வீரகேசரியில் வாசிப்பதை விட வேறு வழி இல்லை என்பதால் அப்படியே நம்பி விட்டேன். இப்போ பார்த்தால் 2025 இல் செய்ததை debut கன்னி முயற்சி என்கிறனர். அப்போ 90களில் விட்டது கஞ்சா கப்ஸா கதையா?🤣
-
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!
Prosper-Haniel இல் இருந்த கடைசி நிலக்கரிச் சுரங்கம் 2018 இல் மூடப்பட்டுள்ளது.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல, சாதாரண தொழில்முறை மீனவர்களும் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். முதலாளிகள் படகை ஓட்டுவதில்லை. வலை வீசுவதில்லை. ஆகவே இது எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு களவு. இதை சகல கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள். கடல் முற்று முழுதாக, மத்திய அரசின் படைகளின் கட்டுப்பாட்டில். தமிழக கடலை மொட்டை அடிப்பதை, அல்லது இலங்கை கடல் எல்லைக்குள் போய் மீன் வளத்தை சுரண்டுவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையிம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ சமூகத்துக்கு மாற்று தொழில் இல்லை என்பது பச்சை பொய் - ரெயில் ரெயிலாக கட்டுமான துறையில் வேலை தேடி வரும் வட மாநில இளைஞர்களே சாட்சி. இதில் மீனவர்களின், முதலாளிகளின், அத்தனை அரசியல்வாதிகளினதும் சுயநலனே பிரதான காரணி. நான் முன்வைக்கும் தீர்வு எல்லை தாண்டும் மீனர்வர்களை பிடிக்க வேண்டும். அடிக்க கூடாது. கொல்ல கூடாது. இலங்கை சட்டத்தை வலுவாக்கி, அதன் கீழ் வழக்கு போட்டு 5-10 வருடம் சிறையில் போட வேண்டும். சிறையில் கட்டாய வேலை கொடுத்து - அதற்கு வெளி உலகில் உள்ள சம்பளத்தையும் கொடுத்து, அதை மீனவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறை வைக்கும் செலவை இந்திய மத்திய அரசு ஏற்க வேண்டும். படகுகள், இலங்கையருக்கு ஏலம் விடப்படலாம். மீதி உடைக்கப்படவேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் அதிகாரம் உள்ள அமைப்புகள்.
-
காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
இதென்ன விவேக்கின் உண்டியலில் விழுவது எல்லாம் அம்மனுக்கே சொந்தம் எண்ட பகிடிமாதிரி… கோவில் கார்பார்க்கும் கோவில்தானே எண்டுறியள்🤣. சட்டப்படி கோவிலில் இந்து முறை படி நடந்தால் மட்டுமே அது திருமணம். கோவில் கார்பார்க்கில், ஆட்டோஸ்டாண்டில், தெப்பகுளத்தில், கோவிலின் பின்புறம் உள்ள பற்றைக்குள் நடப்பவை திருமணமாகாது🤣. இது விஜி அண்ணியின் ஏறுக்குமாறான கதைதான். இதை கோர்ட் விசாரிக்க வேண்டும். அதற்கு வழக்கை முடக்க கூடாது. நாங்கள் எழுதத்தான் இலாயக்கு, விளக்கம், கணக்கு-வழக்கு எல்லாம் உங்க டிப்பார்ட்மெண்ட்🤣
-
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!
ஓம்..சாத்தியத்துக்கு அப்பால், இன்னும் 30 வருடத்தில் இப்படியான நிலக்கீழ் எரி பொருளுக்கான தேவையும் இருக்காது.
-
காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
D Jeya DeviPublished: Wednesday, March 12, 2025, 12:25 [IST] அதில், சீமான் கூட நான் வாழ்த்துக்கள் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் மூலமா தான் சீமான் எனக்கு பழக்கமானார். ஆரம்பத்தில் இருந்த எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. எனக்கு எப்போதுமே கடவுள் முருகன் மீது, ஈடுபாடு உண்டு. இதனால் எப்போது படப்பிடிப்பு நடந்தாலும் நான் முருகரை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். ஆனால், சீமான் அவர்கள் என்னிடம் பேசியம் போதே உங்களை நான் கோவிலுக்கு போகவிட மாட்டேன் என்று தான் சொன்னார். முருகரை பிறகு தரிசனம் செய்து கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பில் இருக்கிறவர்களுடன் நன்றாக பழகி பேசுங்கள் என்று சொன்னார். அப்பொழுதே எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இதனால் நான் எப்போதுமே அவர் இருந்தால் நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்க மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறேன். பழக்கம் ஏற்பட்டது: அந்த நேரத்தில் தான் என்னுடைய அக்கா குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய அக்காவின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தி பலவிதமான பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான், நான் சீமானின் உதவியை நாடி சென்றேன். அப்போது, அவர் எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார். என் அம்மா இலங்கை தமிழர் என்பதால் சீமானை எங்க அம்மாக்கு மிகவும் பிடித்து விட்டது இருவரும் மிகவும் அன்பாக பழகி வந்தார்கள், அந்த நேரத்தில் தான் எனக்கும் அவருக்கும் பழக்கம். Abhinay Suffer Liver Cirrhosis | ரூ.2 இட்லிக்கு தவிக்கும் அபிநய் | FilmiBeat Tamil காரில் திருமணம்: இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, சீமானை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அப்போது சிறையில் இருந்து பலமுறை என்னிடம் அவர் பேசி இருக்கிறார். அதன் பிறகு மதுரை மதுரையிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, நானும் அவருடன் தங்கி இருந்தேன். யார் வந்தாலும் என்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார். பலருக்கும் நான் வீட்டில் இருப்பதே தெரியாது அந்த நேரத்தில் தான் சேரன் அவர்கள், இப்படி இருப்பது சரி இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால் தவறாகிவிடும் என்று சொன்னார். போட்டோவை தரவில்லை: அதன் பிறகு தான் நான்,அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். அவர் கிறிஸ்டின் என்பதால் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வதற்கு தயங்கினார். பிறகு கோவிலுக்குள் கூட அவர் வரவில்லை, காரில் இருந்தபடியே எனக்கும் அவருக்கும் மாலை மாற்றி திருமணம் நடந்தது அப்போது எடுத்த போட்டோக்களை கூட அவரை வைத்துக் கொண்டார் என்னிடம் அந்த போட்டோக்களை கூட அவர் தரவில்லை. அப்போதே அந்த போட்டோவை வாங்கி நான் சேரனிடம் அனுப்பி இருந்தால், இன்று சேரன் எனக்காக பேசி இருப்பார். அதை நான் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று இப்படி ஏமாந்து போய் இருக்கிறேன். தேன்மொழியுடன் நிச்சயம்: இந்த நேரத்தில் தான் தேன்மொழி இடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது, அந்த தேன்மொழி யார் என்று விசாரிக்கும் போது தான் தேன்மொழிக்கும் சீமான் அவர்களுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமான விஷயம் எனக்கு தெரிந்தது. இது குறித்து நான் சீமானிடம் கேட்ட பிறகு தான் எனக்கும் அவருக்குமே பிரிவு ஏற்பட்டது. அந்த தேன்மொழி என்ற பெண்ணும், நிறைய பணம் நகைகளை கொடுத்து ஏமாந்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு தெரிந்து கேட்ட போது, அது தேவை இல்லாத கதை அதை பற்றி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அப்போது, தான் சீமானின் ஆட்கள் சிலர் எனக்கு போன் செய்து இங்கே இருக்காதீர்கள், பெங்களூருக்கு சென்று விடுங்கள், அண்ணனின் வாழ்க்கை மாறப்போகுது. இனிமே, நீங்கள் இங்கே இருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்காது என்று மிரட்டினார்கள். அதன் பிறகு தான், நான் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் கொடுத்தேன். மாறிவிட்டார்: நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த போது கூட அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புகார் கொடுத்தேன். ஆனால், நான் பணம் வாங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள். நான் எப்போதும், பணம் கேட்டது இல்லை. அப்போதிலிருந்து இப்போது வரை, அவர் ஏன் என்னை விட்டு சென்றார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்போதும் கூட அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகவே இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. என் அம்மா கூட இறக்கும் நேரத்தில் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என்று சொன்னார்கள். ஆனால், என்னால் சீமானை என்றுமே மறக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம். அன்று என்னுடன் வாழ்ந்த சீமான். எப்போதும் இல்லை, அவர் பணம், புகழ் எல்லாம் வந்துவிட்டதால், அவர் மொத்தமாக மாறி இருக்கிறார். நிர்வாண வீடியோ: அந்த புகாருக்கு பிறகாவது என்னை அவர், திருமணம் செய்து கொள்வார் என்று உறுதி அளித்ததால் நான் அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டேன். ஆனாலும், என்னை திருமணம் செய்து கொள்ளாமல் என்னை புறக்கணித்தார். பல இடங்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதாவது என் நிர்வாண வீடியோவை வெளியிட்டுவோம் என்றும் பலவிதமான மிரட்டல்கள் வந்தனர். இதனால், தான் நான் என்ன செய்வது என்ன செய்வது பயந்துவிட்டேன். அதன் பிறகு தான் துணிந்து முடிவு எடுத்து 14 வருடமாக போராடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு என் கணவர் வேண்டும் அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும், சீமானின் மனைவி நான் தான் என்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் போராடினேன். கண்ணீர் பேட்டி: ஆனால், இன்று அவர் என்னை ஒரு பாலியல் தொழிலாளி என்று பேசியிருக்கிறார். பாலியல் தொழிலாளியாக இருந்தால், அந்த வேலையை தான் நான் பார்த்துக் கொண்டு சென்று இருப்பேன். சீமான் தான் வேண்டும் என்று இவ்வளவு தூரம் நான் போராடிக் கொண்டு இருக்க மாட்டேன். இனிமேலும் சீமான் தான் வேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தால், அதில் அர்த்தமே இருக்காது. இந்த அளவுக்கு அவர் பேசிய பிறகும் மனதில் ஒரு வெறுப்பு தான் வந்து இருக்கிறது. தற்போது சீமான் பேசுவதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார். என்னையும் அவரும் பற்றி விஷயம் தெரிந்த பலரும் சீமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்று நடிகை அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். https://tamil.filmibeat.com/interview/actress-vijayalakshmi-interview-abou-seeman-controversy-speech-154553.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards&_gl=1*771huo*_ga*NTcyMjM1ODc2LjE3Mzc3NDE1MDE.*_ga_09Y63T23W1*MTc0MTc2NTU0OS4xOTQuMC4xNzQxNzY1NTQ5LjAuMC4w டிஸ்கி முதலில் கோவிலில் மாலை மாற்றினோம் என்றார்… இப்போ காரில்….. இதில் எது உண்மை? இரெண்டும் பொய்யா? வழக்கு நடத்தபட்டால், இதில் உள்ள உண்மை, பொய் வெளியே வரும்.
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
போட்டா போட்டி போல்..இது நோட்டா போட்டி🤣
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
- ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
D Rajkumar RPublished: Wednesday, March 12, 2025, 1:43 [IST] சென்னை: சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் அமர்ந்திருந்த சீமானின் கைய பிடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அண்ணா விட்றாதீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க" என ஊக்கம் கொடுத்தார். Also Read ஆனாலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காரணம் பெரியார் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரி அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதே நேரத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வருவது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு ஊக்கம் தருவது போல பேசி இருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. சென்னையில் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சீமான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது எதிரே வந்த அண்ணாமலை காரின் அருகே சென்றார். தொடர்ந்து காரின் கண்ணாடியை இறக்கிவிட சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை," அண்ணா ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. விட்றாதீங்க.. ஸ்ட்ராங்கா இருங்க" என கூறிவிட்டுச் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/annamalai-encourages-seeman-amid-political-challenges-686817.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யாரிந்த அண்ணாமலை? ஹிந்தியை ஏற்காவிடில் கல்விக்கு நிதிதர மாட்டோம் என கூறும் கட்சியின் மாநில தலைவர்.- சிம்பொனி என்றால் என்ன?
நான் அறிந்தவரையில் ஒரு பிரபலமான மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி, போதியளவு ஆட்களை கொண்டு, விதிப்படி ஒரு சிம்பொனி நிகழ்வை எவரும் நிகழ்த்தலாமாம். கீழே தொடக்கம் முதல் சிம்பொனி இசைத்தவர்கள் லிஸ்ட் உள்ளது. அதில் சுபசிங்க எனும் ஒரு சிங்களவரும் அடக்கம். https://en.m.wikipedia.org/wiki/List_of_symphony_composers- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
பிடிபடுவதும் முழுக்க இலங்கை கடல் எல்லைக்குள் பல மைல் உள்ளே. போகாதே என்பதை தவிர வேறு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது. சும்மா வாய்க்கு வந்தமாரி சட்ட ஆலோசனை கொடுக்கலாம், சர்வதேச நீதிமன்றம் போகலாம் என எழுதலாம். ஆனால் போவதென்றால் டெல்லி மூலம்தான் போக முடியும். டெல்லி போகாது - பிழை இந்தியா மீது என்பதால். இதில் தமிழக மீனவர்கள் மீது தாக்குவது, கொலை செய்வது இவை இரெண்டும்தான் இலங்கை விடும் பிழைகள். இதை செய்ய வேண்டாம் என்பது மட்டும்தான் அவர்கள் பக்கத்தில் இருந்து வரகூடிய ஒரே ஒரு நியாயமான கோரிக்கை. அதை இலங்கை அரசுக்கு - இந்திய மத்திய அரசுதான் வைக்க முடியும். தமிழக அரசு அல்ல. தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் மட்டுமே வைக்கலாம்.- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
🤣 எல்லோர்ரையும் எம்மை போல நினைப்பது உயர் பண்பு என்பதற்காக இப்படியா செய்வது🤣. யாழில் ஜோசேப், யேசுநாதரை தெரியாத பபாக்கள் யாரும் இருப்பதாக நான் நம்பவில்லை.- உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!
அண்ணை உங்கள் கிணத்தில எனக்கு பங்கு உரிமை தருவியளே🤣 இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம். ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும். பிரான்ஸ் ஓக்கே - இங்கே யூகேயில் என்ன வளம் எடுத்தாலும் தனியார் கைக்குத்தான் போகும். நோர்வேயும் பிரிதானியாவும் ஒரே நேரத்தில் வடகடலில் எண்ணையை கண்டுபிடித்தன. நோர்வேயின் வளம் அரச நிதியம் ஆகியது. அதனால் இன்று சாதராண நோர்வேஜியர்கள் பணக்காரார். பிரிதானிய வளம் BP எனும் நிறுவனத்துக்கு. அதனால் பங்குதாரார்கள் அதீத பணக்காரார்கள்.- நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
ச்சா…இதுவெல்லா அமரக்காதல்🤣. அட அப்ப நீங்கள் ஈஸ்மெட்ன் கலரா? நான் வயசு இன்னும் குறைய எண்டு நினைச்சன்.- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை…. இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல… தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்.. இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣 - ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.