Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஐ!!! அதே பழைய “திமுக செய்யலாம், நாங்க செய்ய கூடாதா” இத்து போன லாஜிக்🤣. நாளைக்கு சீமான் 2 ஆயிரம் கோடி ஊழலை மறைக்க இனப்படுகொலைக்கு ஆதரவளித்தாலும் - திமுக செய்யலாம் நாம் செய்யகூடாத என்பார்கள். திமுக ஆபாசத்தை பற்றி கதைக்க முடியாது - நாங்கள் கதைக்கலாம்… ஏன் என்றால் இந்த ஆபாச ஆமைகுஞ்சு பயன்படுத்துவது எங்கள் மாவீர செல்வங்களின் பெயரை, தியாகத்தை. ஒருத்தர் நீண்ட நித்திரையில் இருந்து எழும்பி வந்து ஆஜர்🤣
  2. நாளைக்கு யார் வென்றாலும் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. மழையே, மழையே என் செய்ய நினைத்தாய் கோஷானை 🤣.
  3. இங்கிலாத்தில் கூட 2023/24 ஆண்டில் கோர்ட்டுக்கு போன பாலியல் வன்கொடுமை (rape) வழக்குகளில் வெறும் 53% சதவீதமே குற்றம் என தீர்ப்பாகின. ஆகவே இந்த வழக்கில் சீமான் தப்பவே வாய்ப்புகள் அதிகம். குற்றம், குற்றம் அல்ல என்பதற்கு அப்பால் - 15 வருடமாக ஒரு வழக்கை தானே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கிடப்பில் போட வைத்து விட்டு, இப்போ அதையே காட்டி ”15 வருடாமாயிற்று, நான் பிள்ளை பெற்றுகொண்டேன்” என தப்ப நினைப்பது மிகவும் கீழ்தரமானது. அதைவிட கீழ்தரமானது, கயல் அண்ணியை பொலிஸ் ஸ்டேசன் கூட்டி வருவதும் பேச வைப்பதும். நாம் தமிழர் பெண் பிள்ளைகளை தன்னை சூழ நிற்கவைத்து கொண்டு “சோளக்காட்டில் தூக்கி போய் கற்பழித்தேனா” என வக்கிரம் கக்குகிறார். பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை இந்த தமிழ் சமூகம் புறம்தள்ளி 30+ வருடங்கள். அதன் பெயர் பாலியல் வன்கொடுமை. சோளக்காட்டில் நடந்தாலும், சொகுசு அறையில் நடந்தாலும் - அது பாலியல் வன்கொடுமைதான். ஆனால் சீமானை போன்ற காமவெறியர்கள் ஏதோ தாம் ஒரு பெண்ணின் கற்பை அழித்து விட்டதாக இன்னும் எண்ணி கொண்டிருக்கிறார்கள். சீமான் எப்படி பட்ட ஒரு கீழ்தரமான ஆணாதிக்க, பிற்போக்குவாதி என்பது இதில் வெளிப்பட்டது. தும்புத்தடிக்கு சேலை சுத்தினாலே பாய்ந்து குதறி விட கூடிய காமாந்தகன் சீமான் -இந்த இலட்சணத்தில் அவரிடம் நாட்டை கொடுக்க வேணுமாம்.
  4. மிகவும் நேர்மையான கட்டுரை. சீமானோடு அரசியல் செய்யும் பெண்கள் அனைவரும் “பெண்ணுறுப்பை கவர்ந்து இழுப்பேன்” என சொன்ன பின்பும் அவருக்கு ஆதரவ கொடுக்கும் பெண் டிரம்ப் விசுவாசிகள் போன்றனரே. இங்கே யாழில் கூட சீமானுக்கு இந்த விடயத்தில் ஆதரவாக எழுதும் பலரை பார்த்தால், தாம் பாலியல் ஒழுக்கம் கெட்டவர்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவர்களும், சிறுவர் துஸ்பிரயோகத்தை நியாயப்படுத்தி எழுதுபவர்களும் அதில் அடக்கம் என்பதை காணலாம். இந்த நீதிபதி உத்தரவு வந்ததுமே, அமித் ஷா மூலம் சீமான் வழக்கை முடிக்க பார்ப்பார் என எழுதினேன். அதன் முதல்படிதான் இது. மிக அருமையாக, இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக எல்லாம் சீமானுக்கு எப்படி உதவின என்பதை பட்டியல் இட்டுள்ளார் ஆசிரியர். காலத்தின் தேவை இது.
  5. ”சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை Mani Singh SUpdated: Saturday, March 1, 2025, 19:36 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை நடிகை வாபஸ் பெற்றார். எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்ணக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளேயே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 க்கு பிறகு தொடர்பு இல்லை" என்று காட்டமாக பேசினார். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்குனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேனு மிரட்டுவாங்க.. இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த.. நடிகை யாருன்னே தெரியாது... திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத" இவ்வாறு அவர் நடிகை பேசினார். நடிகை பேசிய வார்த்தைகள் அப்படியே இங்கே எழுதப்பட்டுள்ளன. https://tamil.oneindia.com/news/chennai/actress-release-new-video-and-replies-to-ntk-chief-seeman-allegations-684125.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  6. நான் மேலே எழுதியவாறு, obtaining consent though deception (rape), bigamy இரெண்டு வழக்கில் இருந்தும் தப்பும் வகையில்…நான் விஜயலக்சுமியோடு வெறும் casual sex மட்டுமே வைத்துகொண்டேன் என்பதே சீமானின் எதிர்வாதமாக இருக்கப்போகிறது. இந்த எதிர்வாதம் வெல்லலாம் அல்லது வெல்லாது போகலாம். ஆனால் இதுதான் இந்தியசட்டத்தின் நிலைப்பாடு. இனி சீமான் சொல்வதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதா அல்லது வழக்கை நடத்தி, விசாரித்து முடிவு காண்பதா என முதலில் பொலிசும் பின் கோர்டும் முடிவு செய்யும். வழக்கை விசாரிப்பது என முடிவானால் - அதன் பின் வழக்கு சாட்சியங்கள் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்.
  7. ஆனால் இன்றும் கஸ்மீரிலும் ஏனைய இடங்களிலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஓர் வல்லாதிக்க இராணுவத்துக்கு, எம்மை இம்சித்தவர்களுக்கு ஏன் ஒரு தமிழ் தேசிய கட்சியில் தனி விங் அமைத்து கொடுக்க வேண்டும்? முன்னாள் துப்பரவு தொழிலாளர், முன்னாள் பேரூந்து ஓட்டுனர்கள், முன்னாள் மூட்டை தூக்குபவட்களுக்கெல்லாம் நாதகாவில் ஒரு விங் உள்ளதா? இது மத்திய, மாநில, அரசுகளும் நாதகவும் சேர்ந்து ஆடும் நாடகம். இவர்களும், துப்பாக்கியோடு பிடிபட்டவரும் சீமானோடு இருக்கும் மத்திய புலனாய்வு அதிகாரிகள். நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஆர்வகோளாறில் போய் ரகசியத்தை பரகசியமாக்கிவிட்டார். இப்போ அவரை பழைய கேஸ் ஒன்றை தூசுதட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்களாம். மத்திய புலனாய்வு அதிகாரிகளை expose பண்ணியமைக்காக அவருக்கு அலைச்சல் ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு ஊரிலும் ஒரே ரெஜிமெண்ட் நிற்பதில்லையே. அடிபடும் முன்னரங்கில் கூர்காக்கள், பஞ்சா ரெஜிமெண்ட் வருவது வழமை. நான் கேள்விபட்ட வகையில் ஆக்டோபரில் யுத்தம் ஆரம்பித்த பின் - களப்பணியில் மெட்டிராஸ் ரெஜிமெண்ட் அதிகம் பயன்படவில்லை, ஆனால் புலானாய்வு தேவைப்பட்ட ஊர்களில் இவர்கள் சுழற்சி முறையில் வந்து போயினர். எமது ஊரில் இருந்த முகாமில் 3 மாதம் ஒருக்கா சுழற்சி இருக்கும். இது கூட உள்ளூர்மக்கள் மீது நட்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் என சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரை இந்தியன் ஆமி, இந்தியன் ஆமிதான். அதில் இனம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. கெட்ட சயனைடுகள்.
  8. இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம் கெட்ட இந்தியன் ஆமியின் அதிகாரிகள், அவர்களுக்கு விங் வேறு . இதுதான் சீமானின் தமிழ் தேசியத்தின் இலட்சணம். இவர்கள் வயதையும் தோற்றத்தையும் பாத்தாலே தெரிகிறது. இவர்கள் தற்போதும் இந்திய மத்திய அரசுக்கு வேலை செய்யும் அதிகாரிகள் என்பது.
  9. பெரிய கருணாநிதி செய்ததை சின்ன கருணாநிதி எப்போதோ செய்திருப்பார். ஆனால் நான் அறிந்தவரையில் இருவரும் துணைவி ஸ்தானத்துக்கு தயார் இல்லை. இங்கேதான் ஜட்ஜின் “விஜி அண்ணிதான் முதல் மனைவியா?” என்ற கேள்வி சட்ட முக்கியத்துவம் பெறுகிறது. விஜி அண்ணியினை மாலைமாற்றி திருமணம் செய்தது நிரூபிக்கப்பட்டு அது முதல் திருமணமாக ஏற்கப்படின், அவர்தான் மனைவி. கயல் அண்ணி துணைவி. அப்போ கயல் அண்ணியிடனான திருமணம் செல்லாது. விஜி அண்ணியை டிவோர்ஸ் பண்ணி, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். Polygamy வழக்கை எதிர்கொள்ள வேண்டும். பின் வேண்டும் என்றால் கயல் அண்ணியை முறைப்படி முடிக்கலாம். துணைவி மகளானதானும் துணைவியாக கூடாது என்பது விஜி அண்ணியின் (நியாயமான) நீண்டகால எதிர்பார்ப்பாம். அண்ணன் இரெண்டு அண்ணிகளின் கனவுகளோடு, வாழ்க்கையோடு, உணர்வுகளோடு தன் காமத்தை மட்டுமே கருதி விளையாடி உள்ளார். உண்மையில் இரு அண்ணிகளும் பரிதாபத்துக்குரியோரே. சொந்த உறவை அவள் விடுவாளோ, கொண்ட உறவை இவள் விடுவாளோ. வாங்க வாலி சார்…என்னென்னமோ நடக்குது தமிழ்நாட்ல. நீங்க அப்செண்ட். உங்களை போல தமிழக அரசியல் விடயஞானம் உள்ள இன்னொருவர் ரசோ அண்ணை. உங்கள் வெற்றிடத்தை அவரால் நிரப்பி கொள்கிறேன்😃.
  10. சாதாரண மனிதருக்கு கூட அநேகம் இப்படி உறவுகள் இருப்பது வழமை (இருபாலாருக்கும்). ஆனால் எவர் ஆனாலும் சட்டபடி இரு திருமணம் கட்ட முடியாது. மனைவி+துணைவி(கள்) ஓக்கே (கயல் அண்ணி கூட காளிமுத்துவின் தெலுங்கு துணைவி மகள்தான்). ஆனால் மனைவி+மனைவி குற்றம்.
  11. இதில் இரெண்டு சிக்கல்கள் உள்ளது. முன்னர் இதை பற்றி யாழில் கதைத்திருந்தோம். Obtaining consent through deception. உதாரணமாக யூகேயில் - ஒருவரை நான் ஏமாற்றி அதன் மூலம் அவர் உடலுறவுக்கு இசைந்தால் - அந்த இசைவு செல்லாது. ஆகவே அந்த உறவு பாலியல் வல்லுறவாக கொள்ளப்படலாம். இந்திய சட்டம், திருமணம் செய்வேன் என ஆசை வார்த்தை காட்டி, ஒரு பெண்ணின் இசைவை பெறுவதையும் இப்படி ஒரு குற்றம் என்றே கருதுவதாகத்தான் என் தேடல் காட்டுகிறது. ஆகவே - இந்த குற்றவியல் வழக்க்குக்கு - ஆம் விஜி அண்ணியை நான் திருமணம் செய்வதாக சொல்லி உடலுறவு கொண்டேன் என சீமான் ஏற்பது - குற்றத்தை ஏற்பது ஆகி விடும். மாறாக நான் அவரை சொல்லியது போல் திருமணம் செய்தேன் (கோவிலில் மாலை மாற்று) ஆகவே ஏமாற்றவில்லை என சீமான் சொன்னால். ஒரு பென்ணை டிவோர்ஸ் பண்ணாமல் இன்னொரு பென்ணை திருமணம் செய்த polygamy வழக்கில் குற்றத்தை ஒப்பு கொண்டதாகிவிடும். ஆகவே சீமானின் நிலை ஆப்பிழுத்த குரங்கு போல. இரெண்டே தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று விஜி அண்ணியிடம் எந்த வாக்குறுதியும் கொடாமல், தனியே sex for fun உறவு மட்டுமே வைத்தேன் என சொல்லுவது, அதை நிறுவுவது. அதன் மூலம் இரு குற்றசாட்டில் இருந்தும் தப்புவது. அல்லது எவர் காலில் விழுந்தாவது வழக்கை குழப்பி அடிப்பது. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். பேச்சு சுதன்ந்திரத்தை போலவே வழக்கு போடும் சுதந்திரமும் உள்ளது. வாயை வாடகைக்கு விட்டால், வாடகைக்கு வரி கட்டத்தானே வேண்டும்🤣.
  12. மிக சாதாரண விடயம். ஒரு முறை எமிரேட்சில் எனக்கு அருகில் இரெண்டு சீட்டை எடுத்து ஒருவரை பேச்சு மூச்சு இல்லாமல் வைத்திருந்தார்கள். விமானத்தில் இறந்த உடலை இப்படி ஏற்ற முடியாது என்பதால் - யாரோ ஒரு சீவன் சாவயதற்க்காக டுபாய் கூட்டி போவதை ஊகித்து கொண்டேன். Full flight - என்ன பண்ணலாம் என யோசித்து cabin upgrade க்கு நூல் விட்டேன் நடக்கவில்லை. நமக்கு அருகில் இருப்பவரின் உடல் நிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் செத்து கொண்டிருக்கலாம், அல்லது சாகலாம். எம்மையும் கூட்டி போகவில்லை என ஆறுதல் அடைய மட்டுமே முடியும்🤣. வேறு சீட் காலியாக இருந்தால் மாறி இருக்க கேட்டிருந்தால் நிச்சயம் விமான பணியாளர் விட்டிருப்பார்கள். அவர்களாகவே கேட்டிருக்கவும் கூடும்.
  13. இதற்கு மேல் இராணுவ ரீதியாக உதவமாட்டார்கள் என நினைக்கிரேன். ஸ்டாமர் - டிரம்ப், செலன்ஸ்கி இடையே ஒற்றுமைக்கு முயல்வதாக தெரிகிறது. ஹெங்கேரி இன்னொரு பெலரூஸ் - முழுவதுமாக புட்டின் காலில் விழ சொல்லுவார்கள். துருக்கிதான் இப்போதைக்கு உள்ளதில் நல்ல தீர்வு. புட்டினுக்கும் துருக்கி எண்டால் பயம்.
  14. இன்னொரு திரியில் இன்று செலண்ஸ்கியின் வெள்ளை மாளிகை விஜயம், 1987 இல் தலைவரின் டெல்லி அசோகாஹோட்டல் விஜயம் போன்றது என எழுதினேன். தலைவரை மூடிய அறைக்குள் அதிகாரிகள் மிரட்டினர், செலன்ஸ்கியை ஓவல் ஆபீசில் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மிரட்டினர். செலன்ஸ்கி வான்ஸ் என்ன செய்ய முனைகிறார் என்பதை புரிந்து - தூண்டிலில் சிக்காமல் விட்டிருக்கலாம். வாய் இருப்பதால் கட்டாயம் கதைக்க வேண்டியதில்லை. ஆம்…இதுவரை இரு கட்சிகளும் கடைபிடித்த மாறா வெளியுறவு கொள்கையை டிரம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.
  15. நானும் இப்படி எழுதுவதால் விளக்கம்: சீமான் இனதூய்மைவாதம் பேசாவிடில் இதை நான் கதைக்கபோவதில்லை. ஆனால் அவர் தூய (இனத்தூய்மை) தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்கிறார். ஆனால் அவரோ மலையாளி, அவரின் மனைவியோ தெலுங்கு+தமிழ் கலப்பின வழித்தோன்றல். இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது. உதாரணமாக நைஜல் பராஜ்தான் ஜேர்மன் பெண்ணமணம் முடித்து, தன் பிள்ளைகளுக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்தப்படியே, பிரெக்சிற்றினை நடத்தினார். அதை விமர்சித்தோம். அதேபோலத்தான் இதுவும். தமிழர் தலையில் மிளாகாய் அரைக்கபார்க்கிறார்.
  16. எனது சதிக்கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சதி யை இழந்து, கோட்பாடு ஆகிறது🤣. It’s all part of Putin’s plan. செலன்ஸ்கி கொடுக்க முடியாததை டிரம்ப் கேட்பது, பின்னர் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இப்படி சண்டை பிடிப்பது. அதை சாட்டி டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது. இப்போ அமெரிக்காவில் டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுக்க தேவையான political cover ஐ இந்த சந்திப்பு மூலம் ஏற்படுத்தி கொண்டார் டிரெம்ப். வான்ஸ் சண்டையை கிளப்பியது வேணும் எண்டேதான். டிரம்பும் வான்சும் சொல்லி வைத்து செய்தது அது (coordinated attack ).
  17. சில மணி நேரத்தில் பிளேட்டை மாத்திய சைமன். 👆👇 பேயுடன் சேர்ந்தாலும் நடக்கலாம். ரோவுடன் சேர்ந்தால் குல நாசம்.
  18. கல்யாணசுந்தரம், ரஜீவ், காளி, இன்னும் எத்தனையோ “தமிழர்கள்” நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். சீமான் அதில் இருக்கும்வரை நாம் தமிழர் ரோவின் சப் ஆபீஸ்தான்.
  19. நான் கழுத்துக்கு கீழே இருப்பதை பறறி மட்டுமே கதைக்கிறேன். தலை எனக்கு ஒரு பொருட்டல்ல 🤣 தமிழர் நிலம் தமிழர் கையில் இருக்க வேண்டும் என கூறி கொண்டு அப்பட்டமாக ரோவின் கைக்கூலி என தெரியும் ஒரு மலையாளியால் 100% கட்டுப்படுத்தப்படும் கட்சிக்கு ஆதரவு நல்குவது… முள்ளிவாய்க்காலோடு சிந்திக்கும் ஆற்றலையும் பல காதல் தோல்வி தாடிக்கார அண்ணை மார் புதைத்து விட்டனர் என்பதையே காட்டி நிற்கிறது அதை ஆரம்பித்த சுப முத்துகுமாரை ரோவோடு சேர்ந்து போட்டு தள்ளிவிட்டு, கட்சியை ரோவிடம் அடகுவைத்தவர் சீமான்.
  20. அதான் வச்சு செஞ்சிட்டே🤣 அவிங்க சூனியத்யில மழைய வைக்க🤣 நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு வாக்கில் தோல்வி🤣 எவரோ சீப்ப ஒழிச்சிட்டாங்க சார்🤣
  21. தமிழ் தேசியத்தில் கொட்டை போட்ட அண்ணையளே ரோ அணிவகுப்பை பார்த்து நெக்குருகி நிக்கினம். புது பட்ஜ் தமிழ் நாட்டு தம்பியளை ஏன் நோவான்.
  22. இந்த வீடியோவில் சீமானை பாதுகாக்கும் “முன்னாள்” இராணுவவீரர்கள் என்ற போர்வையில் வெளிவந்தவர்களின் screen grab. இதை பார்த்ததும் உங்களுக்கு “றோ” மணக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ENT specialist ஐ பார்க்க வேண்டும் 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.