goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
Everything posted by goshan_che
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இலங்கையில் இந்த கார் £29,000. யூகேயில் 26,000. வெறும் £3000 தான் வித்தியாசம். ஒப்பீட்டளவில் இலங்கையில் பெற்றோல் காருடன் ஒப்பிடும் போது பைட் மலிவு…. எலக்ரிக் காருக்கு வரி குறைவு, பைட் இலங்கைக்கு profit margin ஐ குறைத்து விற்பதாக இருக்கலாம். ஏழை எண்டால் இப்ப நடுத்தர வர்க்கம்தானே அண்ணை🤣. அமெரிக்கா சீன வாகனங்களுக்கு கெடுபிடி (தம் வாகன உற்பத்தி துறையை பாதுகாக்க) என்பதால் பல நிறுவனங்கள் வருவதே இல்லை என கேள்விப்பட்டேன்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஆகச் சிறிய சீன இறக்குமதி பைட் ஒரு கோடி தாண்டுது. இல்லை. இவை ஆடம்பர வசதிகளை அடைய கூடிய விலையில் தரும் “ஏழைகளின் டெஸ்லா” இவை. பிரிதானியாவில் எலெக்ரிக்கார் மார்கெட்டில் மலிவான கார்களில் பைட்டும் ஒன்று. இன்றைய நடைமுறை தெரியாது. 2020 க்கு முன். நான் அறிந்தவரையில். Manufactured date இல் இருந்து 3 வருடத்துட்பட்ட கார்களைதான் இறக்க முடியும்( ஜப்பான் ரிகொண்டிசன் என்றாலும்) . வாகனத்தின் “லக்சறி” அளவை பொறுத்து 150% -300% வரி இருக்கும்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கொலையுண்டவர் டசின் கணக்காண கொலைகளில் தேடப்படுபவராம். கொண்டவர் சிரித்து கொண்டே வருவதை பார்த்தால் - மாபியா குழுக்களுகிடையான ஆட்புலம் வரையறுத்தல், உதாரண, பழிவாங்கல் கொலை என்றே நினைக்கிறேன். அரசாங்கம் செய்வதாயின் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வைத்து செய்து தம் முகத்தில் கரி பூச மாட்டார்கள். ஜெயில் அல்லது வரும் வழியில் ஈசியாக போடலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதாரத்தை தரவும், இல்லை எனில் மன்னிப்பு கேட்கவும் 🤣 எனக்கு கூவத்தூரில் ரிசார்ட் ரூம் + திரிஷா என்பதாக ஒரு தனி மடல் வந்துள்ளது 🤣
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அந்த நாமல் மீம்ஸ் வேற லெவல் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் நினைப்பது போல எல்லாம் இல்லை…தனியாகத்தான் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வந்தவரை இலாபம் 🤣 எல்லா நாளும் முடியாது…இண்டைக்கு வீட்டில் இருந்து வேலை. டிவியில் ஒரு கண். கணனியில் ஒரு கண். அங்க mute ஆகினால் இங்கெ un mute. இங்க mute ஆகினால் அங்க Un mute 🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣 கவாஸ்கர் முதலாவது உலக கோப்பையில் 60 ஓவரும் பட் பண்ணி (அப்போ இங்கிலாந்து சமர் டைம் மேட்சுகள் 60 ஓவர்), 34 சொச்சம் நாட் அவுட் அடித்த ஆள்🤣. ஆனால் எனக்கு இப்போதும் பிடித்த விளையாட்டு டெஸ்ட். அதுவும் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் மைதானம் நிரம்பி வழியும். போட்டியை நேரில் பார்க்க அருமையாக இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாஸ்…. உங்க நல்ல மனசால யாழை இழுத்து மூட பண்ணி போடாதேங்கோ🤣. அதுவும் உந்த ஸ்கை ஸ்போர்ட்ஸ்காரன் எல்லா மொழியிலும் ஆட்களை வைத்து தேடுவானாம் எண்டு கேள்வி🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Game tempo எண்டு ஒரு விசயம் இருக்கெல்லோ அண்ணா. 280+ எண்டா அவயளும் மும்மரமா துரத்துவினம். இப்ப விவேகானந்தா சபை, சைவ பரிபாலன சபை சோதனையில நாங்கள் எழுதுற மாதிரி ஆடுகினம் 🤣. எப்படியும் 45 ஓவருக்க முடிப்பினம். இந்த தொடரிலும் புள்ளி சமன் எனில் ரன் ரேட் பார்ப்பதுதான் என நினைக்கிறேன்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அடேய் சிங்களவனுகளா… வித்தியாசம், வித்தியாசம் எண்டு இங்கயாடா கொண்டு வந்து விடுவீங்க🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி, இந்தியா பேட் பண்ணுவதை எல்லாம் கண் கொண்டு பார்க்க முடியாது. ஸ்பானியர்கள் போல ஒரு சியெஸ்டா மதிய தூக்கம் போடப்போறேன். எழும்பி பார்ப்பம் என்ன ரிசல்ட் எண்டு. பிகு செம்பாட்டன் எங்க போட்டியள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சொன்னால் நம்ப மாட்டியள். ஷமியை போட்டு விட்டு…பின் அடித்து மாற்றினேன்😭
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பட்டேல் முதலாவது ஸ்பெல்லில் இருந்த வீரியம் இரெண்டாவதில் அறவே இல்லை. Hossain கேட்ச் பிரக்டிஸ் கொடுத்தது போல் அவுட்டாகமல் இருந்தால் வெளுத்திருக்கலாம். 8 டவுன்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
40 ஓவர் வரைக்கும் விக்கெட் இழக்காமல் ஓவருக்கு 3 படிதான் போக வேணும். வேற வழி இல்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம்… இந்த இணையாட்டம் இன்னும் 10 ஓவர் நிண்டால் 230 ஐ நெருங்கலாம்.
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
ஒரு சின்ன விளையாட்டுத்தான் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பங்களாதேஷ் 5 டவுன். 6 வது விக்கெட்டும் போயிருக்கும் ரோஹித் ஈசி கேட்ச் ஒண்டை விட்டிராவிட்டால். ரோஹித் கேட்சை விட்டதால் பட்டேலின் ஹட் றிக் வாய்ப்பும் இழப்பு. அமரிக்கா, கனடாகாரர் எழும்பி வரமுன்னம் மேட்ச் முடிஞ்சிடும் போல கிடக்கு.
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
நல்லது. இப்படித்தான் இருக்கும் என்றே எண்ணினேன். 🥺 யாழ் எம் சமூகத்கின் ஒரு குறுக்கு வெட்டுத்தானே.
-
CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
இதே கான்செப்ட் கமலின் தசாவதாரத்திலும் வரும். அந்த சிபிஐ கமலை பார்த்து சயண்டிஸ்ட் கமல் சொல்லுவார்… He knows five languages in Telugu 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கன்பியூசன் எதுவும் வேண்டாம் செம்பாட்டான். நீங்கள் திரியை கலகலப்பாக வைத்திருப்பதை நாம் எல்லோரும் ரசிக்கிறோம்🙏. தொடருங்கள். நாளைக்கு டொஸ் போடும் முன்னம் வரவும் 🤣
- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நீங்கள் மட்டும்தான் ஒத்து கொண்டுள்ளீர்கள்🤣