Everything posted by goshan_che
-
தவெக உட்கட்சி மோதல்
உட்கட்சி மோதல் கூடாது… இப்போ நா த க வை எடுங்கள்… திமுக வை எடுங்கள்…. சபரீசன் பெட்டிக்கு பிறகு எப்படி இரு தரப்பும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வேலை செய்கிறார்கள். இந்த திரியில் கூட திமுக பாடகர் உச்ச ஸ்தாயில் பாட… நாதக தம்பிகள் எவ்வளவு அழகாக கோரஸ் பாடுகிறார்கள். மார்கழி சீசன் ஐப்பசியிலேயே வந்து விட்ட பீலிங்😂. இடையில் ஒரு தம்பிக்கு மெமோ போகவில்லை போலும், திராவிடம் எதையும் சாதிக்கவில்லை என போன சீசன் பாட்டை அபஸ்ஸ்வராமாக கட்டை குரலில் குறுக்கால இழுக்கிறார்😂. இவர்களை பார்த்து த வெ க ஒற்றுமையின் பலத்தை உணர வேண்டும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இண்டைக்கு கழிவு ஒயில் கொஞ்சம் அதிகமாக கிடைத்திருக்கும் போல… வழிய….வழிய பூசி கொண்டு நிக்கிறார் ஒனா கினா. வாசகர்களுக்காக Breach of fiduciary duty யும் fraud ஆக கருதப்படும். எப்போது? அந்த breach கள்ள எண்ணத்தில், களவு நோக்கில் செய்யப்பட்டிருப்பின் (bad faith, dishonesty ). இதைத்தான் மேலே ஒழுங்கான பத்திரம் கொடுத்து மோகேஜ் எடுப்பது vs கள்ள payslip கொடுத்து மோகேஜ் எடுப்பது என எளிய உதாரணம் மூலம் விளக்க முனைந்தேன். விளங்கினால் தானே. a breach of fiduciary duty can amount to fraud, especially when the breach involves dishonesty or a lack of good faith . While not every breach is fraudulent, fraud occurs when the fiduciary deliberately acts against the principal's interests, is reckless as to those interests, or acts with an absence of honesty. For example, a director who misuses company funds or improperly diverts business opportunities can be held liable for fraud. சஞ்சீவ் நுனிப்புல் மேயும் ஒயில் கிழவன் அல்ல 😂. விசயகாரன். அவருக்கு தான் செய்தது களவு எண்டு தெரியும். அதுதான் கடந்த வருடத்தில் மட்டும் கம்பனியில் இருந்து 3.2 மில்லியனை லவட்டி கொண்டு…. மனையியையிம் கூட்டி கொண்டு….. வீட்டை விற்க போட்டு விட்டு… யூகேயை விட்டு தப்பி ஓடியுள்ளார்
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
கேணல் கடாபியின் பொடிகாட்ஸ் போல ஆட்காளால் என்டால், கைதே தேவையில்லை தானாக போய் கூண்டுக்குள் அமர்ந்தே விடுவார் என்கிறனர் விபரம் அறிந்தோர்.😂 உண்மை பொய் தெரியவில்லை.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
தகவலுக்கு நன்றி
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
யாழ்கள ஆர்வலர்கள் சிலர்: கடல்கடந்து வர்த்தகம் செய்யும் போது இப்படியான சிக்கல் வருவது வழமைதான். ஆனந்தனை குற்றம் சொல்பவர்கள் பிழைக்கத்தெரியாத திண்ணை பேச்சுகாரர்😂.
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
நன்றி. ஜேவிபி மிக மெதுவாக, ஆனால் தெளிவாக, கிட்டதட்ட ரகசியமாக …. ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இலங்கையை நகர்த்தி வருவதாக எனக்கு படுகிறது. போதை மாபியா பற்றிய மக்களின் பயம் அவர்களுக்கு நன்றாக கைக்கொடுக்கிறது. இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல் என்றார் டில்வின். ஆனால் அது சம்பந்தமாக எதுவும் இல்லை. மிக விரைவாக, அரச இயந்திரம், முப்படைகள், பொலிசில் அதிகாரம் உள்ள பதிவிகளை தம் கொள்கை சார்ந்தோரால் நிரப்புகினறாம். யூ என் பி, சு க வின் தொழில்சங்கங்கள் கூட நெருக்குதலுக்கு ஆளாகிறனவாம். இத்தனை வருட தியாகத்தின் பின் கிடைத்த அதிகாரத்தை அவர்கள் அவ்வளவு லேசில் விடப்போவதில்லை. இது போக..போகத்தான் புலப்படும்.
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
நீங்களும் தும்பளையானும் சொல்லும் கோணமும் நியாயமானதே. ஆனால் எனது gut feeling - இந்த களை எடுப்பு அரசாலும் நடத்தபடுகிறது என்பதே. பார்ப்போம், ஸ்டாலின், பொல்பொட், இடி அமீன், பிலிபைன்ஸ் அதிபர் பலரும் ஆரம்பத்தில் இப்படித்தான் களை எடுத்தார்கள். மக்களும் ஆதரித்தனர். அடுத்து பயிர்களையும் மேய ஆரம்பித்தனர். ஜேவிபி இதை செய்யும் காலம் தொலைவில் இல்லை என்பது என் ஆரூடம்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நன்றி. இரெண்டு பவுண் - உங்கள் அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது. நான் அப்போது பதின்ம வயதையும் அடையவில்லை. ஆகவே விளக்க குறைபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை பார்த இரு குடும்பங்களுக்கு ஏழ்மை காரணமாக விலக்கு அளித்தார்கால். நான் ஜப்னா ரோயல் 😂
-
கைகூ வடிவில்!
சீண்டுவார் சீண்டல் எத்தகை ஆகினும் நாவினை காத்தல் தலை - புதுக்குறள்-
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
அப்ப பெப்ரவரி 4 ம் தேதி பூட்டான்காரனுக்கா😂
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
சுருக்கம் அதிகம் என்பதால் தான் சூட்டை பற்றி எழுதினீர்கள் என புரிந்து கொள்கிறேன்😀.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
கருத்து பா(ப)ஞ்(சம்)😂
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
பிகு நீங்கள் உட்பட யாழில் எழுதும் பலர் கடன் அட்டையை நான் மேலே சொன்னபடி responsible ஆக பாவிப்போர்தான் என்பது அவரவர் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ஆனால் யாழுக்கு வெளியே இறாலுக்கு ஆசைபட்டு சுறாவை இழந்த எமது மக்கள் அதிகம். குறிப்பாக அடுத்த சந்ததி…கொஞ்சம் பயமாகவே உள்ளது😂
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
நானும் டிக்கெட் வாங்க கடனட்டையைத்தான் பாவிப்பேன். விமான டிக்கெட்டுகளை IATA அதிகாரமுள்ள ஏஜெண்டிடம் வாங்கினும் கடன் அட்டை தரும் section75 உத்தரவாதம் ஒரு மேலதிக பாதுகாப்பு. 30-50 நாள் வட்டி இல்லை. Avios போன்ற புள்ளிகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி அனுகூலங்கள் பல. ஆகவே ஏர் டிக்கெட் மட்டும் அல்ல, சாண்ட்விச் வாங்குவது, டயருக்கு காத்தடிப்பது ஈறாக கடன் அட்டையில்தான். ஆனால் இலவச கடன் அட்டைகள் மட்டும்தான். வாழ்நாளில் மாத சந்தா கடன் அட்டைக்கு கட்டியதே இல்லை. அதேபோல் அடுத்த தவணைக்குள் முழுவதுமாக (0%வட்டியில்) கட்டி முடிக்க பார்ப்பேன். சில சமயம் அது அடுத்த மாதம், 3ம் மாதம் என தள்ளி போகும் (எதிர்பாரா செலவுகள் தொடர்ந்து வரும் போது). ஆனால் வட்டி கட்டும் ஒவ்வொரு மாதமும் வங்கியுடனான போட்டியில் தோற்று விட்டேன் என மனம் அல்லல்படும்😂. ஆனால் ஒரு போதும் ஹொலிடே கடன் அட்டையை நம்பி போவதில்லை என்பது கல்லில் எழுத்து. போய் வந்து அடுத்த தவணைக்குள் கட்ட வேண்டிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே ஹொலிடே. இல்லை எண்டால் ஐரோப்பாவுக்குள் போய் வரலாம். அதுவும் இல்லை எண்டால் யூகேயில் பார்க்க எவ்வளவோ இருக்கு. அதுவும் இல்லை எண்டால் - டிவியில் போகும் ஹொலிடே நிகழ்சிகளை பார்த்து இன்புறலாம் 😂. ஆனால் வட அமெரிக்கா வாழிகளானா உங்களின் அலுப்பும் புரிகிறது. டிரான்சிட்டிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். உங்களுக்கு ஏர்போர்ட் லவுஞ்சுகள் சொகுசு என்பதை மேவி தேவை என்ற எல்லைக்குள் வரும் என நினைக்கிறேன். சும்மா பகிடியண்ணை
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
ஒருவர் கட்டிக் கொடுத்தவர், மற்றையவர் கட்டி எடுத்துப் போனவர் 😂. நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம் 😂
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்
இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச் Mohanraj ThangavelPublished: Wednesday, October 22, 2025, 18:29 [IST] சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது. Also Read Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே! அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது. கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. Recommended For You Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர் பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. https://tamil.filmibeat.com/news/dude-movie-director-keerthishwaran-notable-speech-at-thanksgiving-meet-dude-success-165641.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இதை கண்டும் காணாமல் கடந்து போவது சரியில்லை. நீங்கள் ஜேர்மனியில் வந்து இறங்கிய நேரம் தொட்டு சான்சிலராகவா வேலை பார்த்தீர்கள்? அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்? இந்த கேள்வி உங்கள் கருத்துக்கு சிரிப்புகுறி இட்டவருக்கும்தான். புலம்பெயர் தேசத்தில் மொழி அறியாமல் நாய் பிஸ்கெட்ட்டை மனித உணவு என சாப்பிட்ட யாழ்ப்பாணத்தமிழன், இன்னொரு இனத்தை செருப்புதைப்பவன் என கிண்டல் அடிக்கலாமா? 90 க்கு முன் அவர்களும் கணிசமான வியாபார நிலையங்கள் யாழ் நகரில் நடத்தினார்கள். முண்ணனி பாடசாலைகளிலும் படித்தார்கள். சிலவேளை நாளைக்கு ஒரு பஸ் வரும் ஊரில் இருந்தவர்களுக்கு செருப்பு தைக்கும் முஸ்லிமை மட்டும்தான் தெரிந்திருக்கலாம்.
-
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!
போன வருடமும் வடகீழ் பருவ மழைக்கு இப்படி நிப்பாட்டினார்கள். இங்கே பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போகும் கப்பல் எல்லாம் வருடம் முழுவதும் போகும். பெயரிடப்பட்ட பெரும் சூறைக்காற்றுக்கு சில நாட்கள் நிப்பாட்டுவார்கள். ஒருவேளை இவை சிறிய கப்பல் என்பதாலோ?
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை. அனுரவுக்கும் ஆதரவு… ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்…. ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம். பிகு வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂. கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம். பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.
-
கைகூ வடிவில்!
நேற்றைய நான் இன்று கவிதையாகினேன் அனுபவம் 😂
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இஸ்லாம் பகட்டை எதிர்கிறதே ஒழிய, தங்கத்தை அல்ல. ஆண்களதிலம் தங்கம் அணிவதில்லை எனிலும், பெண்கள் அணிவார்கள் அத்தோடு அரபி நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு தெரியும் அவர்கள் தங்கத்தை செல்வத்தின் store value வாக எப்படி சேமிப்பார்கள் என்பது.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
சின்ராசு இதுக்கே இப்படி பயப்படுறானே…. இவனா பேரினவாததுக்கு தலைவாரி, பின்னல் கட்டப்போறான்😂