Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதில் எடப்பாடி மிஸ்ஸின். உண்மை. இது எமக்கு புரிவது போல் மக்களுக்கும் புரியும். திமுகவை இந்த விடயத்தில் விமர்சிக்காமல், விஜையை போட்டு தாக்கோ தாக்குவது எதிர்மறை விளைவையே நாதகவுக்கு கொடுக்கும். அதுவும் விகடன் சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி விட்டார் என விகடன் எழுதிய பின், இப்படி நடப்பது கிட்டதட்ட பெட்டி வாங்கியே உள்ளார் என்பதை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதிக்கும். ஒரு ஈழதமிழனின் நியாயமான மனநிலை. ஆனால் இதன் பிரதியீடு பாஜக அமைசர்கள் உள்ள தமிழ் நாடு அரசு எனில் - அதை விட தமிழக மக்கள் நலனுக்கு திமுக ஆட்சி தொடர்வதே உசிதமானது.
  2. கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன? Shyamsundar IUpdated: Monday, October 13, 2025, 12:12 [IST] முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். Also Read ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி 2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றவர், உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. Recommended For You வழக்கு பின்னணி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அவரின் பெயரில் வழக்கு பதியப்பட்டது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று இவர்கள் மனுதாக்கல் செய்தனர். இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. அதாவது அரசு நியமித்த SIT மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் SITஐ கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/who-is-retired-judge-ajay-rastogi-who-will-lead-the-cbi-investigation-in-tvk-vijay-karur-incident-742699.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  3. 🤣 அவர் அப்படி ஒரு கூட்டணி (பாஜக வோடு சேர்ந்து) சேர்ந்தால் - எனது மானசீக வாக்கு திமுகவுக்கு. பிகு நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள்தானே அண்ணை? எனது நிலைப்பாடு என்ன என்பதையிட்டும் நீங்கள் கனவில் இருப்பது போல உள்ளது.
  4. இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர். யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு… ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣. ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.
  5. இஸ்ரேலுக்கு முழு பலஸ்தீனத்தையும் தாரை வார்க்காமல் ஹமாஸ் ஓயமாட்டார்கள்.
  6. நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா? அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪 தேசம் நெட் ஜெயபாலனுக்கு ஒரு கொப்பி ரைட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்🤣
  7. நான் நினைக்கிறேன்… விஜை அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க போவதில்லை…. சில தம்பிகளின் பிளட் பிரசரை கூட்டியதை தவிர. இருக்கிறதே 8% அதிலையும் பங்கு கேட்டா கோவம் வருமா இல்லையா🤣.
  8. பிகு ஒண்டை கவனித்தீர்களா? ஆகஸ்டு 2025 கருணாநிதி நினைவுநாளில், சீமானின் ஏவலர்களானா தூஷண துரை வகையறாக்கள், கருணாநிதி vs பிரபாகரன் என்ற அவதூறு போரை, அதை தொடர்ந்து இரு பகுதியும் இந்த இருவரையும் மாறி மாறி கேலி செய்யும் கீழ்தரமான சண்டையை முன்னைய வருடங்கள் போல் செய்யவில்லை? ஏன்? #சபரீசன் பெட்டி
  9. மேலே சொன்னவை அனைத்தும் தமிழக தமிழர் நலனுக்கு சீமான் ஏன் கேடு என்பதற்க்காக வாதங்கள். எமக்கு சீமான் ஏன் கேடு என்பதற்கு இன்னும் சில பத்திகள் எழுத வேண்டும். சுருக்கமாக 2009 க்கு பின் ஈழத்தமிழர் ஒரு இனமாக மீண்டும் திரள்வதை தடுக்க, அவர்களுக்கான வெளி ஆதரவை தடுக்க பலர் பல இடங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். புலத்தில் - அருண், சுமன், கருணா, பிள்ளையான் இத்யாதிகள். புலம்பெயர் தேசத்தில் - ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரிந்து மாவீரர் தினம் கொண்டாடும் கள்ளர். போலிகா குரூப். தலையில்லாத செயலலகம், மாட்டு பண்ணை இத்யாதிகள். தமிழ் நாட்டில் சீமான். 2009 க்கு பின் இருந்த எம்மீதான பரிவை….மடை மாற்றி… திமுக, அதிமுக, காங், பிஜேபி, விசிக, திக என கிட்டதட்ட தமிழ்நாட்டின் 90% வாக்காளரை…. புலிகள்/ஈழத்தமிழர் அவர்களின் எதிரிகள் என கொண்டு போய் நிறுத்தியவர் சீமான். எமக்கு அடைக்கலம் தந்த அதே மக்களில் இருந்து சிலர் சீமானின் வருகையின் பின் எம்மை “அகதி” என திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு காலத்தில் கட்சி வேறுபாடின்றி மாவீரன் என போற்றப்பட்ட தலைவர் உருவ கேலிக்கு ஆளானார். இவை அனைத்தும் - சீமான்… தமிழக தலைவர்கள் vs பிரபாகரன் என்ற ஒரு தேவையில்லாத ஆணியை புடுங்கியதன் விளைவு. இதை அவர் திட்டமிட்டே செய்தார். செய்கிறார். இதன் உள்நோக்கம் 2/3 பங்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழருக்கும் மாறாத பகைகை மூட்டி விடுவது.
  10. இங்கே நீங்கள் எழுதியவற்றுக்கான பதில் முன்பே பல தடவை யாழில் விவாதிக்கப்பட்டு உள்ளது. இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு. சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல். எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும். இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது. 2009 க்கு முதல் அன்றாடம் காய்ச்சியாக இருந்த அதன் பின் எந்த தொழிலும் இன்றி நீலம்க்கரையில் 6 கோடி பங்களா, அதி சொகுசு ஜப்பான் பஜெரோ, மலைநாட்டில் கோப்பி தோட்டம் என வலம் வருவது, அவர் அரசியலை பாவித்து களவு எடுத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது. அவர் கட்சியில் பொலிஸ் கிராப்புடன் திடீரென தோன்றிய “முன்னாள் இந்திய இராணுவ வீரர்” விங், அவர் வீட்டில் ஆயுதம் தாங்கிய சிவில் உடை தரித்தோர் இருப்பது - அவர் ரோ ஏஜெண்ட் என்பதை காட்டி நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக சுப முத்துகுமார் மரணம் அதில் சீமான், தூஷண துரைமுருகன் பங்கு. சீமான் தமிழ் இனத்தில் தோன்றியிள்ள புற்று நோய் கட்டி. இது வளர்வது போல் தோன்றினாலும் அது வளர்ச்சி அல்ல. வெட்டி வீசி விடுவதே ஒரே வழி. பிகு : மக்கள் ஆதரவு. புலிகளின் அதிபுச்ச புள்ளியில் கூட டக்லஸ் யாழ்ப்பாணத்தில் 10% வாக்கு எடுத்தார். சீமானுக்கு விழும் வாக்க்கில் பலது நோட்டோவுக்கு சமனாக மக்கள் வேறு தெரிவின்றி போடுவது. அப்படி அவருக்காக விழும் வாக்கு கூட அவரின் நயவஞ்சகம் புரியாத, மேடையில் அவர் பேசுவதுதான் அவரின் உண்மையான முகம் என நம்பும் அப்பாவிகளின் வாக்கு.
  11. நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை. ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது. அவரை அரசியலில் முடமாக்குவதே தமிழக, ஈழ தமிழருக்கு நன்மை என்பது என் நிலைப்பாடு. ஆனால் சீமான் பற்றி விகடன் போன்ற ஒரு நிறுவனம் நேர்மறையான கட்டுரை எழுதினால், அதில் எழுதபட்டதை விமர்சிப்பேனே ஒழிய, விகடன் நாதக ஊதுகுழல், அல்லது சீமானிடம் காசு வாங்கி கொண்டு எழுதுகிறது என சொல்வதில்லை. இதுதான் வித்தியாசம். ஆனால் தம்பிகளின் யூடியுப் சேனல்களை, உ+ம் தூசண துரை, முன்னர் அய்யநாதன், ராவணன் குடில் - அவை பிரச்சார தளங்கள் என அடையாளம் காட்டுவேன். சண்டிவி, கலைஞர் டிவிக்கும் அதுவே.
  12. காங்கிரஸ் விஜையை வைத்து ஆட்சியில் பங்கு என ஆரம்பித்து கொஞ்சம் அதிக சீட் கேட்பதோடு அடங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜை+அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சேர்க்கை. விஜையோடு தனியே காங்கிரஸ் சேர்ந்தால் விஜை ஒரு சீட் காங்கிரசுக்கு ஏதும் இல்லை என்பதே கரூருக்கு முன்பு கூட நிலமை. இப்படி இருப்பதையும் கெடுக்க காங்கிரஸ் விரும்பாது. அதுவும் செல்வபெருந்தகை இருக்கும் வரை. கூடவே பீகாரில் நித்கிஷ், பிஜேபி இடையே லடாய் என்கிறார்கள். ஆகவே இந்தியா கூட்டணியை பலமாக்க கிடைக்கும் சந்தர்பத்தில் பலவருடம் கூட நின்ற திமுகவை விட்டு, விஜையோடு வருவதில் தேசிய, மாநில மட்டங்களில் காங்கிரசுக்கு எந்த அனுகூலமும் இல்லை. இப்படித்தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் விஜை கொஞ்சம் மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும். டெண்டுல்கர் ஆயினும் டிரெசிங் ரூமில் இருந்து செஞ்சுரி அடிக்க முடியாது🤣.
  13. இந்த கோணத்தில் நானும் சிந்தித்து பார்த்தேன். இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் சேருவோம் என டெல்லி தலைமை முடிவெடுத்தாலும்… உள்ளூர் பாஜக ரொம்பவே சோர்ந்து போய்விடுவார்கள். இது வானதி உட்பட அத்தனை சிட்டிங் எம் எல் ஏ களும் பதவி இழப்பதை உறுதி செய்யும். அடுத்த அண்ணாமலையின் இத்தனை வருட உழைப்பு வீண். நயினார் முதல் ராஜா வரை ஆவலோடு காத்திருப்போர் நிலை? இப்படி ஒரு முடிவை டெல்லி எடுத்தால்… தமிழக பாஜக ரொம்பவே துவண்டு போகும். அது என்றோ ஆட்சியை பிடிக்கும் நீண்டகால திட்டத்தை பாதிக்கும். எனவே இப்படி ஒரு முடிவு வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள். கூட்டணி நன்றாக ஜெல் ஆகிவிட்டது. இனி பிரிவது கடினம்.
  14. கண்ணதாசன் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இதை பார்த்த போது நானும் நினைத்தேன், இவ்வளவு பகுத்தறிவோடு ஆன்மீகத்தை அணுகிய மனிதனை, மண்ணை சோறாக்கினார், மூங்கிலை வெட்டி தங்கம் எடுத்தார் என விட்டலாச்சார்யா கதை போல திரித்து பின்னாளில் அசிங்கபடுத்தியுள்ளார்கள் என. இது யேசுவுக்கும் புத்தருக்கும் கூட நடந்த விடயம்தானே.
  15. சங்கிகள் காங்கிரசின் பதவி சுகத்துக்கு ஆப்படித்தவர்கள். ஆகவே சங்கிளை அவர்கள் வளர்க்கவில்லை. ஆனால் 1990 களில் வடக்கே சங்கி ஆதரவு வாக்குகளை கவர காங்கிரஸ் முயன்றதே அதன் நிலை மாற்றத்துக்கும், இன்றைய அவல நிலைக்கும் காரணம். விபி சிங் என்ற அற்புதமான மனிதனை அகற்றி, மண்டல் கமிசன் விடயத்தில் பிஜேபி யோடு சேர்ந்து காங்கிரஸ் ஆடிய தப்பாட்டமே காங்கிரசின் வீழ்ச்சியின், பிஜேபியின் எழுச்சியின் முதல் அத்தியாயம். சங்கிகளை காங்கிரஸ் வளர்க்கவில்லை, ஆனால் ஜனதா வை அழிக்க காங்கிரஸ் செய்தவை+ வடக்கில் கிளறப்பட்ட மதவெறி பிஜேபி வளர ஏதுவானது. இதில் திமுக, அதிமுக என கூட்டணி வைத்த கட்சிகளுக்கும் பங்குண்டு. பிகு உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்… சீமானை பற்றி விகடன் எழுதினால் திமுக கைக்கூலி, விபச்சார ஊடகம் என எழுதுவதேன் புலவர்? ஒரே விகடன் சில சமயம் கணிகையாய், சில சமயம் கண்ணகியாய் அமைவது எப்படி?
  16. பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மேலே சில கட்சிகளை போலி என்றேனே? அப்படி ஒரு போலிதான் காங்கிரசும். ரஜீவை திமுக புலிகளை வைத்து கொலை செய்தத்து என்பார்கள் சில வருடங்களில் கூட்டணி. அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள். ஆகவே தான் -(சங்கி) கொள்கையில் தடம் மாறாமல் இருக்கும் பாஜக மிக ஆபதானவர்கள். ஜெயலலிதா பற்றி நீங்கள் எழுதுவதில், திமுகவில் சில குடும்பங்கள், தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் கூட, களைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நானே இவை பற்றி பலதடவை எழுதியிம் உள்ளேன்.
  17. ஐயா, உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இப்போ வாசகருக்கும் விளங்கி இருக்கும். நீங்கள் கோட் பண்ணி இருக்கும் எனது எழுத்துக்களை மீள ஒருதரம் வாசிக்கவும். அப்போதும் விளங்கவில்லை எனில் சொல்லவும், விரிவாக விளக்கம் தரலாம். புலவருக்கு விளங்கியாதால் லைக் போட்டுள்ளார்.
  18. சித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎…… பெண்ணடிமை, சாதி, மூடநம்பிக்கை….. என பல இழிவுகளை 9ம் நூற்றண்டில் லெப்டு ரைட்டு வாங்கியிருக்காப்பல 🤣
  19. இதை பகிர்ந்த அதே ஆள்தான் மேலே பாரதியாரை எல்லாம் இழுத்து சாம்பு மவன் வேம்பு, சங்கி இல்லை என எழுதினார் என்பதை சபையோர் கருத்தில் எடுக்க வேண்டும்🤣. NTK = RSSS என்பது இதைத்தான்.
  20. உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை. அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.
  21. விஜை சில சமயம் அதிமுக+பிஜேபி உடன் கூட்டணி போகாமல் - தனியே தொகுதி உடன்பாடு மட்டும் செய்துகொள்ள கூடும் என நினைக்கிறேன். 40-60 தொகுதிகளை விஜைக்கு ஒதுக்கி விட்டு, ஏனையவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடலாம். விஜை இந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தலாம். இரு பகுதியிம் ஆளை ஆள் திட்டாமல் அதே நேரம் ஒரே மேடை ஏறாமல் வாக்கு கேட்க லாம். பிகு தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான். திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம். நாதக போலித் தமிழ் தேசியம். கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.
  22. அஜித்குமார் மரணத்தில் யாழ்களம் உட்பட கொதித்த கொதிப்பு இங்கே ஏன் இல்லை? அதில் சம்பந்தபட்ட பெண் திமுக அரசின் உயர் அதிகாரி அல்லது அரசியல்வாதி தயவில் அதை செய்தார் என சந்தேகிக்கபடுவதால் அதை வைத்து தத்தம் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தேடலாம். இவர் பட்டியலின இளைஞர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.