Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 🤣 சீச்சீ அப்படி உங்களை சொல்வேனா. நீங்கள் வாத்தியார்….துரோணர் நியாயம் முழுவதும் விளங்கினாலும்…கெளரவ சேனையில் நிற்பது உங்கள் கடன் என நினைக்கிறீர்கள்🤣. நான் நிச்சயமாக அர்ஜுனன் இல்லை. யுத்தகளத்தில் நிண்டு ஓவர்திங்கிங் செய்வதில்லை நான் 🤣. கும்பகர்ணன் போல் துன்னுவான், தூங்குவான், எழும்பினா துலைச்சுபோடுவான் கரெக்டர் ஏதும் மஹாபாரதத்தில் உள்ளதா? அப்படி எண்டால் அதுதான்🤣. இல்லாவிடில் - சீமானியர் கேட்காமலே கொடுப்பதால் கர்ணன் 🤣.
  2. எதிர்க்கலாம் அருணன்…. பாலியல் குற்ற வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்று மூலம் தப்பிக்க நீங்கள் உதவ வேண்டும்… ரெடியா🤣
  3. மண்ணாகட்டி….. அப்படி அண்ணன் ஏற்று கொள்ளவில்லை. நன்றாக நினைவுள்ளது எனக்கு… சவாலில் தோற்ற பின் அவர்கள் பல கட்சிகளின் கூட்டு, நா தனியே, எனவே நாந்தான் உசத்தி என ஆமை ஓட்டை அப்படியே திருப்பி போட்டார்🤣. தம்பிகளும் திருவெம்பாவை காலத்தில் காலை எழுந்து நகரசங்கீர்தனம் போகும் பக்தர்கள் போல் சிங்கி சா போட்டார்கள். சீமான் பேரா வை “லூசாய்யா நீயீ” என ஒருமையில் கேட்க, பேரா “நீதான்யா லூசு” என பதில் சொல்ல…இருவரின் மேடை நாகரீகத்தையும் பார்த்து நாமெல்லாம் புல்லரிக்க…. அதெல்லாம் ஒரு காலம் 🤣.
  4. இதுக்கே டென்சன் ஆனா எப்படி. கீழே உள்ள பதிவில் அந்த கெட்டவார்த்தையை நெடில் அல்ல குறில் என்ற ரீதியில், வ நாவுக்கு பதிலாக டுனாவை போட்டு, கிட்டதட்ட நேரடியாகவே பதிவிட்டுள்ளார். நெல்லை செல்வின் பதிவின் ஊடாக. தமிழில் புலவரா…தூசணத்தில் புலவரா என எண்ணத்தோன்றுகிறது. புலவருக்கு: நீங்கள் தமிழ் நாட்டு அரசை, ஊடகங்களை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள்… அது உங்களுக்கும், ஸ்டாலினிற்கும், நிர்வாகத்துகும் உள்ள பிரச்சனை. ஆனால் நான் எழுதிய கருத்தை (பகிர்ந்த செய்தியை அல்ல) கோர்ட் செய்து….திராவிட ஊடகவியளார்கள் இப்படித்தான் என எழுதினால் - அது என்னைத்தான் குறிக்கும். வித்தியாசம் விளங்கும் என நினைக்கிறேன்.
  5. எதையோ ஒண்ட கொடுத்து ஆளை அமைதிபடுத்த பார்க்கோணும்… இல்லாட்டில்…எனக்கா பரிசு இல்லை…பண்றேன் பார் எண்டு… மீண்டும் காசா போரை கூட ஆரம்பிக்க கூடிய ஆள்🤣. டிரம்பை கையாள ஸ்டிராமர் வழிதான் சிறந்தது. கூப்பிட்டு ஒரு ரெட் காப்பெட்…சார்ல்ச்சோட சான்ட்விச் அண்ட் டீ….. சொன்ன இடத்தில கையெழுத்து போடும் மனிசன்🤣
  6. ஜேவிபியும் ஏனைய சிங்கள கட்சிகள் போலத்தான். ஒரே வித்தியாசம் - நீங்கள் அவர்களோடு வர்க்க போரில் துணை நின்றால் உங்களை பாதுகாப்பார்கள். அதே நேரம் குழுவாக சேர்ந்து தமிழரை தாக்குவதில் ஒரு கை போடாவும் பின் நிற்க மாட்டார்கள். கொள்கை ரீதியில் தமிழரை ஒடுக்குவதில் ஏனைய கட்சிகள் “ஒரே இலங்கையர்” எனும் ஈரச்சாக்கை கையில் எடுத்தால்… ஜேவிபி…நாம் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் என்ற ஈரச்சாக்கை கையில் எடுப்பார்கள். ஆனால் வடக்கு-கிழக்கை பிரிக்க வழக்கு போட்டு வெல்வார்கள். இத்தனை வருட இழப்பின் பின் தமிழருக்கு கிடைத்த ஒரே சிறிய நன்மை வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு. எந்த இனவாத கட்சியும் அதை நீக்க துணியவில்லை. அதிகாரத்தில் இல்லாத போதும் கோர்ட்டுக்கு போய் ஜேவிபி நீக்கியது. அதே போல் முள்ளிவாய்க்கால்… நடப்பது மிக பெரும் அழிவு என தெரிந்தும்…மாட்டி கொண்ட தமிழர் பலர் உழைக்கும் வர்க்கம் என அறிந்தும்…: போரை, மேற்கின் வேண்டுதலுக்கு பணியாமல், விரைந்து முடிக்க மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் அனுர. யூ என் பி, சுக, ஹெல உறுமய முகத்துக்கு நேரே இனவாதிகள் - சையனைடு. ஜேவிபி ஆசனிக்.
  7. சங்ககார குடும்பம் கூட இப்படி செய்தனர். கொழும்பு நெல்சன் பிளேஸின் பல தமிழ் குடும்பங்கள் இன்று உயிர்வாழ டாக்டர் ஜெயதில வீடுதான் காரணம். ஆனால் இவர்கள் விதிவிலக்குகள். 1948-2009 முதல் இப்படியான விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் - ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் கூட்டு மனோநிலையும்….. எந்த எல்லைக்கும், எந்த மோசமான அடக்குமுறையையும் பாவித்து தமிழர்களை அடக்கி விட வேண்டும் என்பதாகவே இருந்தது. 2009 -2021 வரை கூட அது மாறவில்லை. …. அடக்க வேண்டும் என்ற வெறி…அடக்கி விட்டோம் என்ற இறுமாப்பாக மாறி இருந்தது. 2021 ற்கு பின் கூட்டு மனோநிலை மாறிவிட்டதா? தெரியவில்லை.
  8. வெண்ணை எடுத்தவன் தப்பி விட்டான்… விரல் சூப்பியவன் மாட்டி கொண்டான் என்ற நிலைதான்… திட்டமிட்ட சூத்திரதாரி ஜே ஆர்…ஆனால் அமைப்பாக திரண்டு mob mentality யோடு அலைந்தவர்களில் பல ஜேவிபியினரும் அடக்கம். நான் கண்கண்ட சாட்சிகளிடம் பேசியுள்ளேன். வேலை முடிந்ததும் ஜே ஆர் மொத்த பழியையும் தூக்கி ஜேவிபி மீது போட்டார். வெண்ணை எடுத்தவன் தப்பி விட்டான் என்பதால் மட்டும் விரல்சூப்பியவன் குற்றவாளி இல்லை என்றாகாது. இன்றுவரை ஜேவிபி இதில் தனக்குள்ள பங்கை ஏற்கவோ, சுயவிமர்சனம் செய்யவோ இல்லை.
  9. பேசாமல் மன்னிப்புக்கும் ஒரு நோபல் பரிசு கொடுக்குமாறு சீஸ்லாந்து நாட்டை கோரலாம்🤣
  10. நோபல் கிடைக்காட்டி ஒண்டாச்சு…, நீ வா தல…நாங்க உனக்கு… ஜேர்மன்-யூகே தமிழர் சார்பாக… No balls பரிசுதாறம் என கேட்டுப்பாப்பமா, தம்பர🤣. பிகு இந்த பரிசுக்கான நாமினேஷன் ஜனவரியோடு குளோசாம். இப்பதானே காசா தீர்வு சூடு பிடிக்குது, அடுத்த வருடம் தம்பருக்குத்தான்🤣
  11. டில்வின் ப்ரோ, 1983 இல் முன்னுக்கு நிண்டு தமிழர்களை அடித்ததில் ஜேவிபிக்கு என்ன பங்கு என்பதை மறந்து விட்டீர்களா ப்ரோ? ஜே ஆர் அதன் சூத்திரதாரி… ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது. 52 தொடக்கம் நடந்த திட்டமிட்ட இன வன்முறைகளின் உச்ச புள்ளியே 83. அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது. 83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom). அதற்கு ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பாத்திரவாளிகள்.
  12. 😂 இல்லை…. ஒரு கருத்தை சொல்லும் போது….. பத்தி பத்தியாக எழுதாமல்…. இப்படி ……போட்டு இடைவெளிவிட்டு எழுதும் பாங்கு. ஏதோ நிறைய எழுதினமாதிரியும் தெரியும் 🤣. அதைவிட முக்கியமாக வாசிப்பவர் கவனம் தேவையான புள்ளியில் படியும். சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்கட்சி அரசியல்வாதி மாரினா மச்சாடோ வுக்கு போயுள்ளது.
  13. ஜேம்ஸ்பாண்டுக்கு நிகரான சூப்பர் ஹீரோ “இலையான் கில்லர்” க்கு முன்பு இந்த அவதாரை பாவித்தீர்கள் என நினைக்கிறேன் ? முன்பெல்லாம் யாழை வாசிக்கும் போது கண்ணை சட்டென கவர்ந்தவை உங்கள் பகிடிகள்+அவதார்கள். யாழில் உங்களின் ஒரு பாணியை நான் கொப்பி அடிக்கிறேன்…… குறிப்பாக ஒரு கருத்தை ஊண்டி (emphasise) சொல்ல….. என்ன என கண்டுபிடிக்க முடிகிறதா?
  14. "பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!" நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன். என்பது கிஸ்ணன் வாக்கு. உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன் என்பது ஜஸ்டின் வாக்கு 😂. #ஆதாரபுருஷர்❤️ நன்றி 🙏
  15. புலவர் உங்கள் தலைவர் சீமான் போல நீங்களும் தரக்குறைவான வார்த்தைகளை சக கள உறவுகள் மீது பாவித்து அதன் மூலம் உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்வதை பார்க்க கவலையாக இருக்கிறது. ஒரு எழுத்தை மாத்தி போட்டு - உங்களை இன்னொரு “விடியாத” கருத்தாளர் என எழுத எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறீர்கள்? ஆனால் நான் சீமானின் தம்பி அல்ல. ஆகவே நான் அப்படி செய்ய போவதில்லை. நாதக சமூகவலை உலகில் முன்னெடுக்கும் அவமரியாதை கலாச்சாரத்தை தயவு செய்து யாழுக்கு எடுத்து வர வேண்டாம். சகலதுக்கும் ஒரு எல்லை உண்டு. நான் கிண்டலும் கேலியுமாக எழுதினாலும் அந்த எல்லையை அநேகம் மீறுவதில்லை. அரிதாக மீறிய சந்தர்பங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளேன், பகிரங்கமாக. எனவே கொஞ்சம் கஸ்டப்பட்டாவது நா-நயம் பேணுவீர்கள் என நினைக்கிறேன். யாழ்களத்தில் இருவரை அவர்களின் நடத்தை காரணமாக இக்னோர் லிஸ்டில் போட்டு இரெண்டு வருடமளவு ஆகிறது. அதில் ஒருவர் நீங்கள் இப்போ என்னை திராவிட ஊடகவியளாலர் என ஆதாரம் அற்று அவதூறு சொல்வது போல, ஏதோ ஒரு வெறிகுட்டியை பப்பில் கண்டு பேசி விட்டு அதுநாந்தான் என தினமும் யாழில் என் உயிரை வாங்கினார். உங்களுடனான எனது சம்பாசணைகளும் அதே வழியில்தான் போக வேண்டும் என்பது விதி என்றால் அப்படியே ஆகட்டும். உங்களுக்கு ஜஸ்டின் அண்ணா கொடுத்த பதில்தான் எனது பதிலும். சீமான் சென்னை ஹைகோர்ட்டில் போய் என்ன கேட்டார் என்பது ஒன்றும் ஹைதர் கால வரலாறு அல்ல. மிக அண்மையில் நடந்தவை. அதற்கான முழு ஆதாரமும் இதே தமிழக செய்தி பகுதியில் கொஞ்சம் கீழே போனால் உள்ளது. நான் சொன்னதுதான் உண்மையான வரலாற்று தரவு. பொலிசை என் மீது வழக்கு போட சொல்லுங்கள் என சென்னை கோர்ட்டை கேட்கும் அளவுக்கு சீமான் என்ன முழு லூசா? அவர் சென்னை கோர்ட்டை கேட்டது - முன்பே வாபஸ் வாங்கிய புகாரின் அடிப்படையில் வழக்கை தூசு தட்டுகிறார்கள். இந்த விசாரணையை தடுத்து, வழக்கை, விசாரணையை ரத்து செய்யுங்கள் என. ஆனால் சென்னை ஹைகோர்ட் அப்படி இல்லை - வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என பொலிஸுக்கு உத்தரவிட்டது. இதுதான் தரவுகளின் அடிப்படையிலான வரலாறு. மிக முக்கியமான விடயம்… நீங்களும், விசுகு அண்ணையும் சொல்வது போல் - சீமான் சென்னை கோர்ட்டை தன்னை விசாரிக்கும்படி கேட்டார் என்பது உண்மை எனில்…. சென்னை ஹைகோர்ட் அப்படி ஒரு உத்தரவை கொடுத்த பின்… ஏன் டெல்லி கோர்ட்டுக்கு ஓடி.. அந்த சென்னை கோர்ட் உத்தரவுக்கு தடை வாங்கினார்? லொஜிக் மண்டையை பொத்தி அறைகிறதா புலவர் ஜி?🤣 சும்மா முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் வாயில் வருவதை எல்லாம் சொன்னால் இப்படித்தான் ஆகும். யாழ்களம் ஒன்றும் இராவணன் குடிலோ, தூஷண துரையின் சேனலோ அல்ல, இங்கே தலையால் சிந்திப்போர் அதிகம். லொஜிக் இல்லாமல் ஆமை, முயல் கதையள் சொன்னால்…. பேர்….ரிப்பேர் ஆகிவிடும்.
  16. தேர்தல் நேரம் சொல்லியது போல்…. ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரஸ்ய - உக்ரேன் போரை டிரம்ப் நிறுத்தியமைக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது🤣…. ஆனால் காசாவில் யுத்த தவிர்ப்பு, ஹமாஸ் ஆயுத களைவு, இடைக்கால நிர்வாகசபை, காசாவின் பாதுகாப்பு அரேபிய அமைதிபடைகளிடம், பணய கைதிகள் விடுவிப்பு - இத்தனையையும் அண்மைய டிரம்பின் அமைதி முயற்சிகள் சாதித்தால் அவருக்கு நூறு நோபல் பரிசு கொடுத்தாலும் தகும். அடுத்த வருடம் வாய்ப்புள்ளது. எல்லாம் ஹமாஸ், நெந்தன்யாகு கையில்தான் உண்டு. ஆனால் ஒரு நிரந்தர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை பரிசை கொடுத்தல் ஆகாது. டிரம்ப் இதில பழியா கிடந்து மெனகெடுவதே பரிசை குறி வைத்துத்தான். ஒண்டும் செய்யாமல் ஒபாமாவுக்கு கொடுத்தவங்கள்… நான் என்ன தக்காளி தொக்கா என தலை கேட்பதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை🤣
  17. இதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். சாவச்சேரி பக்கம் குடுக்கிறவையோ🤣. அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனில் இருந்து அல்ல, நோர்வேயில் இருந்து என நினைக்கிறேன்.
  18. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறீர்கள். காத்திருப்போம். பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. பாஜகவுக்கு 20 சீட்டுக்கு கீழே ஒதுக்கல். திமுக ஆட்சியை இழத்தல் இவைதான் எனது முன்னுரிமைகள் (priorities). இதே வரிசையில்.
  19. தமக்கு விளங்காவிடிலும் கூட, Chat GPT யிடம் கேட்டு அதை அப்படியே யாழில் கொண்டு வந்து கொப்பி பேஸ்ட் போடும் பசைவாளி காவடியை மறந்து போனீர்களோ அல்லது அவையடக்கமோ🤣.
  20. திருச்சிற்றம்பலம்…. இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு. ஆனால்…. நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது…. புதுசு கண்ணா…புதுசு… அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க….. படிக்க, படிக்க… அட…..அட… இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல…. ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து….. தேன்…தேன்… தித்திக்கும் தேன். நீங்களும் பருகுங்காள்….மக்காள். முழுத் தொகுப்பு எனக்குப் பிடித்த பகுதி😂 15 நிமிட காணொளியாக. இதை மீள பிரபலபடுத்தியவர் இவர் என எண்ணுகிறேன்.
  21. https://maps.app.goo.gl/x1nRS37xmGgpbGoPA?g_st=ipc இதுதான் அந்த சவக்காலை தங்குமிடம். நிரந்தரமாக மூடிவிட்டார்களாம். பிகு போதிய வசதிகள் செய்தால் - இந்தியன் சங்கிகளின் தலையில் இதுதான் இராமர் பாலம் என சொல்லி நன்றாக மிளகாய் அரைத்து உள்ளூர் வாசிகள் பயனடையலாம்.
  22. நல்லது. 3ம் தீவு வரை அலை தாழும் நேரம் (low tide) நடந்தே போகலாம். அலை மீளமுதல் திரும்பி விட வேண்டும். பெரிய அழகு என்றில்லை, ஆனால் ஒரு திரில் அனுபவமாக இருக்கும். வெறும் கூகிள் மேப், போகும் வழியில் கிடைத்த இரு வழிகாட்டிய சிறுவர்களுடன் போய் - வந்தேன். தலைமன்னாரில் ஒரு குடிசைகள் போன்ற தங்குமிடத்தில் தங்கினேன். அதன் உரிமையாளர்+நடத்துபவர் ஒரு ஜேர்மானிய வெள்ளை இனத்தவர். தங்குமிடம் போய் சேர இருட்டி விட்டது. அவர் ஒரு tree house மரத்தில் அமைத்து வாழ்ந்தார். நல்ல சாப்பாடு, கொண்டு போன ஒரு வெளிநாட்டு போத்தலை கொடுத்ததும் அவர் முகத்தில் அளவுகடந்த சந்தோசம். சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லை. எல்லாமுமே மிக அடிப்படையான வசதிகள். பாம்புகள் ஓடிய அடையாளம் எங்கும். படுத்தெழும்பி காலையில் பார்த்தால் …. தங்குமிடத்தை ஒரு முன்னாள் சவக்காலையில் அமைத்துள்ளார்🤣.
  23. இல்லை. சீமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் கேட்டது, வழக்கை விசாரியுங்கள் என்று அல்ல. இப்போது மாமா உச்ச நீதி மன்றம் செய்தது போல் விசாரிக்காமல் அடித்து மூடுங்கள் என்பதையே. ஆனால் அரிதாக ஒரு நியாயமான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - இது பாரிய கிரிமினல் குற்றசாட்டு இதை அப்படி நூக்க முடியாது… ஆனால் பொலிசும் இழுத்தடிக்க கூடாது… என காலவரையறை கொடுத்து… மிக, மிக நியாயமான தீர்ப்பை கொடுத்தார்…. தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார். இதுதான் நடந்த தரவு. யாழில் பல செய்திதிரிகளில் இதை காணலாம். சங்கு மட்டும் அல்ல, சவமும்தான் சுட்டால் வெண்மை (சாம்பல்) தரும்🤣. உப்புகல்லை வைரம் எண்டு சொன்னால்…. நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… - கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்-
  24. இந்திய நீதி துறையின் இலட்சணம் - சந்தி சிரிக்கிறது. இரெட்டை கொலை. ஒருவர் அருகில் உள்ள குழந்தை, மற்றது தாய். வழக்காடிய நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அப்படி என்ன கண்மூடித்தனமாகவா இருந்திருப்பார்கள்? இவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் மீள் விசாரணைக்கு கூட ஆணையிட்டதாக தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்காமல் தடுத்து, குற்றம் சுமத்தபட்டவரும், சுமத்தியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்ட “சாத்தப்பன் பஞ்சாயத்து” தானே இந்திய உச்ச நீதிமன்றம். கோமிய குடுக்கிகள் நீதிபதியானால், மைனர் குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான். அண்மையில் ஒரு சங்கி வக்கீல் தலைமை நீதிபதி மீது சப்பாத்தை வீசி தாக்கியுள்ளார். அந்தளவுக்கு சங்கிகளின் காலில் கிடக்கிறது இந்திய நீதித்துறை.
  25. இன்றும் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மேடையில் ஒப்பனாக விஜைக்கு தூதுவிடுவதை காணலாம். விஜை மீது விமர்சனம் எனக்கும் உண்டு ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு ஆனானப்பட்டதுதான். குறிப்பாக செல்லாகாசு சீமானுடன் ஒப்பிடும் போது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.