Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அமெரிக்கா வெளி ஏறினால் என்ன? ரஸ்யா இலங்கையை பொறுப்பு கூற வைக்கும் 🤣.
  2. ஹசாரேயை விட கிரண் பேடி அடித்த யூ டர்ன் இன்னும் மெய்சிலிர்க்க வைத்தது. பிரசாந்த் பூஷணும் பின்னர் ஏதோ சிக்கலில் மாட்டி கொண்டார் என நினைக்கிறேன். இப்பொ கேஜ்ரிவால் மீதும் ஊழல் வழக்கு. ஒரு காலத்தில் தான் கறுப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கினேன் என்பதை மேடையில் ஏற்று கொண்ட ரஜனி, ஷிஷ்டம் சேஞ் பற்றி இஷ்டம் போல் கதைக்கவில்லையா🤣. இலங்கையில் இனவாத ஒழிப்பும், இந்தியாவில் ஊழல் ஒழிப்பும் வெறும் கோசங்கள் மட்டுமே. பா உ க்கள் தங்கள் பிரேத்தியேக செயலாளராக உறவினரை வைப்பது இலங்கையிலும், யூகேயிலும் கூட ஏற்று கொள்ளபட்ட நடைமுறைதான். ஆனால் ஆய்வு அலுவலகராக நியமிப்பது தக்க வழிமுறைகள் வழி வர வேண்டும். அதைவிட அரச ஊழியர் ஒருவருக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தை, அவரின் மேலதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர் பெறக்கூடாது. அவருக்கு experience தான் வேணும், சம்பளம் வேண்டாம் என்றால் அதை திறைசேரிக்கு மீள கொடுக்க வேண்டும். இது ஊழல்தான். ஆனால் மிக சின்ன ஊழல்.
  3. இறக்குமதி தடை ஒரு முக்கிய காரணம். ஆனால் 2019 ற்கு முன்பே இலங்கை ரூபாய் மதிப்பில் அநேகமான என் நண்பர்கள் வாங்கிய விலையை விட கூடிய விலைக்குத்தான் கார்களை விற்றுள்ளார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரித்து செல்லும் இறக்குமதி வரி காரணமாக. மேலே நான் சொன்ன பவுண்சுக்கு மாற்றி பார்ப்பது வெளிநாட்டவர் நோக்கில் மட்டும்தானே. அநேகமான இலங்கை கார் நுகர்வோர் வாங்குவதும், விற்பதும் இலங்கை காசில்தானே.
  4. இல்லை - கார் 15 வருடம் பாவனை, மைல்லேஜ்ஜுக்கு பிறகும் வாங்கிய விலையை விட (2011 நாணய மாற்று வீத அடிப்படையில்) அண்ணளவாக 1. 5 இலட்சத்தால் (£1000) கூடியுள்ளது. ஏனைய நாடுகளில் முதல் 3 வருடத்தில் ஷோ ரூம் விலையில் 45-50% போய்விடும். மேலே அக்னி சொன்ன இன்றைய மதிப்புக்கு இலங்கையில் £30,000 பெறுமதியான கார் யூகேயில் £500-1000 தான் போகும்.
  5. அடப்பாவமே…எப்படி புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டுமாம்.
  6. ஊழல்வாதிகளை விட ஊழலை புடுங்குவோம் என வெளிக்கிடுபவர்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது. பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣. இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார். அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான். இப்போ இவர்.
  7. கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள். ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset. மேலே அக்னி சொல்லி உள்ளார் பாருங்கள் - 2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம். அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ 370 ரூபாய். ஆனால் கார் விலை டபிளாகி கூடியுள்ளது.
  8. இந்த முறை மாத்தும் போது டெஸ்லாவில் மனம் போய், மொடல் 3 டெஸ்ட் டிரைவும் செய்து பார்த்தேன், ஆனால் வாங்கிற காசுக்கு உள்ளே ஒன்றும் இல்லை. சரியான minimalistic, அத்தோடு இன்னும் எலக்டிரிக் பெற்றோல் போல் இலகுவாக வரவில்லை. கூடவே ஒவ்வொரு வருடமும் போன் பட்டரி போல் பேட்டரி ஸ்டோரேஜ் 4% ஆல் குறையுமாம். இந்த 4 மில்லியன் இலங்கை ரூபாய் - ஐரோப்பாவில் அந்த காரின் விலை. இதை இலங்கைக்கு கொண்டு போய் வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் கட்டி முடிய சிம்பிளாக 10 மில்லியன் தாண்டும். இதை ஒத்த Wagon R ஒரு கோடிக்கு போகும் என்கிறது மேலே செய்தி.
  9. ஸ்கெண்டிநேவியன், ஜேர்மன், பிரிட்டிஷ்… இந்த ஒழுங்கில்தான் என் விருப்பம். இத்தாலியன் சிலதில் மனம் போவது உண்மைதான்…ஆனால் நம்பிக்கை, உதரவாதம் இல்லை….அல்லது எமக்கு கட்டுபடியாகாது 🤣. இன்னும் காரை பற்றித்தான் கதைக்கிறன்🤣.
  10. விளங்கவில்லை அண்ணை. நான் சொல்வது இலட்சம் அல்ல, லாட்சம். காணி அளவிடும் அலகு. இலங்கையில் ஓடும் கன, மத்திய ரக வாகனங்கள் பலதும் இந்தியந்தான். கார்கள் ஜப்பான் ஆதிக்கம் கூட. ஆனால் அதிலும் இப்போ இந்தியன் ஹொண்டா, இந்தியன் டொயோட்டா இறங்குது. வான் - இன்றுவரை ஜப்பாந்தான்.
  11. பத்மினி மாரி… Fiat Padmin வேற ஏதும் நினைக்க வேண்டாம்🤣. பிகு எனகு long wheel base saloon அல்லது convertible - இலண்டன் வந்ததும் வாங்க பட்ட சத்தியங்களில் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட மாட்டேன். இதுதான் அடுத்த தெரிவு. ஓம் என் மகனின் நண்பனின் தாய் ஒரு Sandreo வச்சிருக்கிறா…மிகவும் basic ஆனால் நகர்புற ஓட்டத்துக்கு நல்லாகத்தான் போகுது. Jogger Extreme கொஞ்சம் வசதியாயும், விலை குறைவாயும் தெரிகிறது. 7 சீட்கள் வேறு.
  12. 🤣 சிரிக்க வைத்த உதாரணம். காணி அளவீடு பற்றி கேட்டால் தலை சுத்தும். 1 பரப்பு =1.2 லாட்சம் ஆ? அல்லது 1 பரப்பு = 1 லாட்சம் ஆ? பல பேரிடம் கேட்டு விட்டேன். ஆளுக்கு ஒரு கதை.
  13. தகவல்களுக்கு நன்றி. சமாதான காலத்தில், பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டியில் சொன்னதை என் மனதில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அது இதுதான். 30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம். திராவிட நாடு கோரிக்கை கைவிடலை, சொந்த நாட்டு விடுதலை போரில் பங்கெடாமல் ஓடி வந்த நாம் பரிகாசிப்பது ஒரு முரண்நகை என்பதற்கும் அப்பால்…. அதன் பின்னால் உள்ள சிக்கலான அரசியலையும், அந்த கைவிடலை ஏற்று கொண்ட மக்களையும் black or white பார்வையுடய நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
  14. தகவல்களுக்கு நன்றி. BYD இங்கேயும் முழு வீச்சில் இறங்கியுள்ளார்கள். 0% உம் உண்டு. ஆனால் எனக்கு ஷேப் பிடிக்கவில்லை. JAECOO என ஒண்டு புதுசா வருது. டெஸ்ட் டிரைவ் கேட்டிருக்கிறேன்.
  15. ரணில் காலத்தில் குருநாகலவில் VW ஒரு அசெம்பிள் பண்ணும் ஆலை உருவாக்கியே விட்டது என்றார்கள். அது அப்படியே போய்விட்டது. மிக வினோதமான வாகனசந்தை இலங்கையுடையது. 1988 ஆம் ஆண்டு டொயோட்டா டொல்பின் வான் வாங்கும் காசுக்கு இலண்டனில் 2025 புத்தம் புது Dacia Jogger 7 seater வாங்கலாம். வாகன விலைகளை இந்த சைட்டில் போய் பாருங்கள். https://riyasewana.com
  16. இல்லை. இலங்கை காசு 5 மில்லியன் எண்டால் அண்ணளவாக £13,000. யூகேயில் ஒரு யாரிஸ் £23,000 க்கு மேல்தான். ஜப்பானில் கூட ஒரு யாரிஸ் கார் brand new இந்த விலைக்கு வாங்க முடியாது என நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சந்தைக்கென தயாரிக்கப்படும் டொயோட்டா கிலன்சா 700,000 இந்திய ரூபாய் (£7000, 2.6 மில்லியன் இலங்கை ரூபாய்). https://www.toyotabharat.com/pricelist/
  17. ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம் = 10 மில்லியன். கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣
  18. வணக்கம் மஹாராஜா, புது உறவோ நல்வரவு வைப்பம் எண்டு பார்த்தால் 2019 இல் இருந்து யாழில் உள்ளீர்கள். ஆனால் இரெண்டு கருத்து, ஒன்று ஜேசு நாதர் பற்றி மற்றையது இது மட்டும்தான் பதிந்துள்ளீர்கள். மஹாராஜா என்பது சொந்த பெயரோ? மேலும் கருத்துக்களோடு இணைந்திருங்கள். விச செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும். இல்லாவிட்டால் வளரும் நிலத்தையே நஞ்சாக்கி போடும்.
  19. செய்து தரலாம். ஆனால் உங்கள் target audience 90% க்குமேல் சிட்டுகுருவி அல்ல நீல திமிங்கில லேகியம் கூட பயன்படா வகுப்பினர் 🤣.
  20. நல்ல விடயம். ஆனால் ரத்ததானம் கொடுப்பவர்கள் ஏதும் தொற்று இல்லாதவர் என செக் பண்ணும் வழமை இலங்கையிலும் இருக்கும் என நினைக்கிறேன். ஒருக்கா இப்படித்தான் ரத்தம் கொடுக்க போய், கேள்வி கேட்ட போது டயபடீஸ் இருப்பதாக சொல்ல, அது தொற்றும் நோயல்ல எனிலும் எம் கொள்கைபடி உம்மிடம் எடுக்க முடியாது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். ரத்தம் கொடாமல் திரும்பி வரும் போது ஏனையோர் என்னை பார்த்த பார்வை இருக்கே🤣 ——— கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்சை கேட்டால் கன்னிகாதானம் என்கிறார்கள்🤣
  21. அன்ரியோடும், தம்பியோடும் நான் எவ்வளவு தன்மையாக நட்போடு பழகுகிறேன் என்பதும், அவர்கள் கலைக்கபட கூடியவர்கள் அல்ல, கலைக்கபடவும் இல்லை என்பதும் நீங்கள் அறியாததல்ல. ஆனால் - என்னை பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு பிரிவினையை அது எழும் சமயங்களில் எல்லாம் தலையில் ஒரு போடு போட்டே ஆக வேண்டும். அது வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ எழுந்தாலும். இதே சாக்கை யாழ் மையவாதிகளுக்கும் பாவித்துள்ளேன். ஆணி வேரை புடுங்கி விட்டு மரம் வளர்க்கமுடியாது. ஒற்றுமையின் பெயரில் பிரிவினைவாதத்தை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இதே போல ஒரு ஆபத்துதான் ஈழ/தமிழக தமிழர் இடையே சிண்டு முடிந்து விடுவதும்.
  22. போராட்டத்தின் பின் அவர்களின் செயலற்றதன்மையால் நட்டு கழண்ட அரசு என்ற பதத்தை அவர்களுக்கு கொடுத்தவன் நானே. ஆனால் 2009 க்கு முன் உருத்திரகுமாருக்கு கணிசமான பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார், TGTE வரைபை தயாரித் experts இலும் ஒருவர். கார்த்தி 2009 க்கு முன் பங்களிக்கவில்லை, ஆனால் போலிக்காவை இனம் காட்டியதில் மிக பெரிய பங்கை வகித்தார். இங்கே நீங்கள் இரெண்டு விடயத்தில் தவறு விடுகிறீர்கள். இங்கே யாரும் தாமாக பெரியார் புகழ்பாடி திரி திறப்பதில்லை. கருத்து கூட எழுதுவதில்லை. சீமான் எம் பின்னால் ஒழிந்து கொண்டு பெரியாரை, திராவிட கொள்கையை தாக்கும் போது, அது எமக்கு பாதகமானது என்பதால் சீமான் மீது தாக்குதல் நடக்கிறது. இரெண்டாவது கீழே உள்ள பதிலில்.
  23. இதில் ஒரு பின்ணனியையும் நான் காணவில்லை. அப்படி ஏதும் பின்ணனியில் இயங்கினால் பெரியாரை பற்றி சீமான் முதலில் மோசமாக கதைக்க தொடங்கிய போதே எதிர்திருப்பார்கள். காலதாமதமாகவேனும் சீமான் முடிந்து விடும் சிண்டு எமக்கு எவ்வளவு பாதகமானது என்பதை கண்ட பின்பே இப்போ எதிர்கிறார்கள். ஈரோடு கிழக்கில் அல்ல அதற்கு முன்பே சீமான் பெரியாரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.
  24. இது உண்மையில் வேலை செய்யுமா? சிலர் சொல்லிறார்கள் - பெற்றோல் மீளவும் நிரப்பிக்கு போய்விடுமாம், காரின் பெற்றோல் டாங்கில் நிரம்பாதாம். வீண் செலவு மட்டுமே என்று. அதனால் முன்பு குறைந்த விலை எண்டால் நானும் உப்பிடி ஆட்டுவதுண்டு, இப்போ நிறுத்தி விட்டேன்.
  25. ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை. ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது. தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல. 1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும் 2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும். அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன். அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள். நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன். 4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை. பிகு 4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.