Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதுக்கே சலிச்சுகிட்டா எப்படி… அடுத்து விஜி அண்ணி, திகதிகள் சம்பந்தமா சில fact-findings கேட்பேன் - சும்மா ஆடிப்போய்டுவியள், ஆடி 🤣.
  2. நாதம் நான் கொஞ்சம் பிசியா நிக்கிறன். Can you do some research, fact-check for me . பிரபாகரன் செத்த நேரத்திலும் என்னை சீரழித்தார் Seeman !! மீண்டும் புயலை கிளப்பிய Vijayalakshmi !! என்கிறது இந்த வீடியோ. ஆனால் அந்த நாள் சீமான் சிறையில் என்கிறீர்கள் நீங்கள். இதை கொஞ்சம் ஆதாரபூர்வமாக நிறுவி எழுத முடியுமா? இந்த அல்லது மற்ற ஐடி, எதில் இருந்தும் பதிலை எழுதலாம். பிகு நானே தேடிப்பார்ப்பேன் - உண்மையில் நேர்ரமில்லை. அத்தோடு கோஷான் பாணியில் எழுதுவதென்றால் - கோஷான் பாணியில் தேடலில் மினகெடவும் வேண்டும் 🤣. பிகு என்னை போல எழுத நானே டிரெயினிங் கொடுக்கிறேன் - இந்த நல்ல மனசு எவருக்கும் புரிவதில்லை🤣.
  3. பக்தர் எண்டா சொன்னேன்? வாய்ப்பில்லை, இருந்தால் தவறான வார்த்தை பிரயோகம். இலங்கை ஹைகொமிசன் இலண்டன் மீளவும் வேதனம் வழங்குவதை ஆரம்பித்துள்ளதாக கேள்வி பட்டேன். இனி இங்கே நீங்கள் தோசையை சுட, சுட, கையில காசுதானே. சும்மா நிண்டு விளாடுங்கோ. @பாலபத்ர ஓணாண்டி யும் இப்ப கொஞ்ச நாளா “உர்ர்” எண்டு திரியிறார். நெடுக சீரியசா எழுதாமல் கொஞ்சம் உங்கட சில்மிச கதைகளையும் கேட்டால்தான் ஜாலியா போகும்.
  4. இல்லை. வாயை மூடிய காரணம் - நான் போரின் வடுக்களை, அவரவர் குடும்ப மாவீரர் எண்ணிக்கையை ஏதோ சின்னவயதில் பள்ளிகூடத்தில் அஸ்டிரா மாஜரின் தந்த ஸ்டிக்கர், மைலோ தந்த பேட், கொக்காகோலா தந்த யோ-யோ, போல பாவிக்க விரும்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இழப்பு. வடு. இதில் கணக்கு பார்த்து நீ கூட, நான் குறை என சொல்லும் போது எமது இனத்தின் கூட்டு வலியை நாம் மலினப்படுத்துவதாக உணர்கிறேன். இந்த திரி மட்டும் அல்ல, எந்த திரியிலும் கதை இப்படி போகும் எனில் நான் வாயை மூடிக்கொள்வேன். ————- மற்றும்படி நான் பிறக்க முதல் இறந்த மனிதன் பெரியார். நீங்கள் தொலைவில் இருந்து அறிந்த மனிதர் தலைவர் (நானும் அவருக்கு அண்மையானவன் அல்ல). ஆகவே நாம் அவரிடம் கற்றோம், இவரிடம் கற்றோம் என்பதெல்லாம் சும்மா மேடை பேச்சு கவர்சிக்காக பேசும் உரை நடைகள். நாம் இருவரும் கேட்டதை, அனுபவித்ததை, வாசித்ததை வைத்து ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அவ்வளவுதான்.
  5. பார்க்கிறேன்… ஆனால் உங்கள் மீதுள்ள நம்பிகையால் - சீமான் பிக்காலி பையன் என்றுதான் சொன்னார், தே.பை என சொல்லவில்லை என ஏற்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. இல்லை… விஜையின் பின்னால் இருந்து இயக்குபவர்கள் தீவிர தமிழ் தேசியவாதிகள், திராவிட கொள்கையை கூடி-அழிப்பதே இவர்களினதும், விஜையினதும் நோக்கம் என நீங்கள் சொன்னதுக்கு ஆதாரம் தரவில்லையே.
  6. இறங்க வேணுமா இல்லையா என்ற தார்மீக கேள்விக்கோ…. நாம் இறங்காமல் ஓடி வந்து விட்டு அவர்களை நோகலாமா? என்ற நியாயமான கேள்விக்கோ கூட பதில் தேவையில்லை. இறங்க மாட்டார்கள். நாமும் அவர்களுக்காக இறங்க மாட்டோம். ஜல்லிகட்டு இலண்டன் போராட்டத்துக்கு நான் போனேன் - மருந்துக்கு கூட ஈழதமிழரை காணவில்லை. சில இளையோரை தவிர. இந்தியன் ஹைமிசன் முன் வெளிநாட்டிலோ, இலங்கையிலோ காவிரி, நீட், தூத்துகுடி விடயங்களில் நாம் போராடி உள்ளோமா? இதுதான் எமது தொப்புள்-கொடி உறவின் யதார்த்தம். இரு பக்கத்திலும்.
  7. அதுக்கு ஆதாரம் தந்துதிட்யாளா? நான் மிஸ் பண்ணி விட்டேன் போல ? மிச்ச விடயம் எல்லாம் அப்படியேதான் இருக்கு “சைக்கிளை விடும் போது வாடகை தரலாம்” என சுற்றுபவர் நீங்கள்தான்.🤣 ப்பா…இப்பவே முட்ட தயார் பண்ணிடிங்களே பையா 🤣. (ஆனால் உங்கள் லொஜிக்கலான பதில் 👌).
  8. கலந்து கொள்லாவிட்டால் என்ன முட்டு கொடுக்கலாம் என்பதையும் இப்போதே யோசிக்க தொடங்குங்கள்🤣.
  9. இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லி கட்டு இவை இரெண்டும் மட்டுமே எனக்கு நினைவில் வருகிறன. ஆனால் இங்கே சிலர் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலோனோர் சுயநலமற்ற தமிழ் உணர்வாளர்கள் என ஒரு மாயை தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைக்கிறார்கள். அப்படி அல்ல…அவர்களுக்கு தமிழ் உணர்வு, இன உணர்வு உள்ளது, ஆனால் அது தமது வாழிடத்தில் தமக்கு இன்னல் எனும் போதுதான் வெளிகிளம்ப்பும். அதுவும் மேலே சொன்ன இரு உதாரணங்கள் போல. 1983 இல் எமக்கு பாரிய ஆதரவு அலை இருந்தது - ஆனால் த.நா வில் அது பாரிய போராட்டமகவில்லை. 80 களின் மத்தியில் பம்பாயில், 1991 இல் - பக்கதில் இருந்த கர்நாடகா தமிழர் அடித்து துரத்தபட்ட போது கூட தமிழ் நாடு கொதிக்கவில்லை. நாடளாவிய பந்த் - ஒரு நாள். இதுதான் தாம் சம்பந்த படதா விடயங்களில் தமிழ் நாட்டு மக்களின் போராட்ட எல்லை. முன்பே எழுதியுள்ளேன். கருணாநிதி பதவி விலகினால், மத்திய ஆதரவை விலக்கி இருந்தாலும், போர் நின்றிராது - ஆனால் அவர் விலகி இருக்க வேண்டும். ஈழத்தமிழரை போலவே தமிழ்நாட்டு தமிழரும் சுயநலமிகள். அத்தோடு அவர்கள் எதையும் முதலில் இந்தியன் என்ற கோணத்தில்தான் அணுகுவார்கள், ஆகவே ஒரு அளவுக்கு மேல் அவர்கள் எமக்காக இறங்க மாட்டார்கள்.
  10. பெரியார்-செல்வா காலம் அல்ல, இன்று வரைக்கும் இதுதான் உண்மை. யதார்த்தம். பாகிஸ்தானின் நதிகள் பல ஆரம்பமாவது இந்தியாவில் - ஆனால் அவற்றை மறித்து இந்தியா அணை கட்ட முடியாது. காரணம் சர்வதேச ஒப்பந்தங்கள். ஆனால் - கர்நாடகா, ஆந்திரா, கேரளா தமிழ் நாட்டுக்குள் பாயும் நதியை மறிக்கலாம். உச்ச நீதி மன்றம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தமிழக தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே போலத்தான் நீட்…. வடநாட்டுக்காரர் குடியேற்றம்…. இந்திய ஒன்றியத்தில் அங்கமாக தமிழ் நாடு இருக்கும் வரை, சீமான் அல்ல, தலைவர் பிரபாகரனே தமிழ் நாட்டின் முதல்வர் ஆனாலும் இதுதான் யதார்த்தம். இதைத்தான் பெரியார் தமது அடிமை நிலை என்றார்.
  11. ஏன் இண்டைக்கு ஜஸ்டீன் வரவில்லையோ என் மேல பாயுறியள் திரி, திரியாக🤣. ஆனால் யாழில் குழுமோதலின் சூத்திரதாரி திரும்பி வந்து பலவாறு முயற்சித்தாலும்…அந்த பழைய சகதியில் நான் இறங்க விரும்பவில்லை.👇 நாதம் என்னை போல ஒரு ஐடியை இறக்கி எழுத வைக்காவா உங்களுக்கு ஒரு வருட விடுப்பும் பயிற்சியும் தேவைபட்டது 🤣. ஆனால் ஒரு கொண்டையை மறைக்க மறந்து விட்டீர்கள். அதையும் நானே சொல்லித்தாறன். நான் கருத்தின் முடிவில் ஆங்கிலத்தில் எழுதுவது நானாக எழுதுவது அல்ல, பொதுவாக ஒரு மேற்கோளை அல்லது ஒரு பழமொழியைத்தான் எழுதுவேன். ஆனால் இதற்கு ஆங்கில பழமொழி, உலக மாந்தர் கூறிய மேற்கோள்கள் தெரிந்திருக்க வேண்டும், அதை சந்தர்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மற்றைய ஐடியில் நீங்கள் எழுதும் ஆங்கில வார்த்தைகள் - அது உங்களுடைய பொருத்து-ஆங்கிலம் என்பதை காட்டி கொடுக்கிறது. உங்கள் தமிழின் எழுத்து பாணியை வலிந்து என்னை போல் மாற்றியதை போலவே ஆங்கில பாணியையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பிகு ஆனால் யார் என்ன நோக்கத்துக்காக எழுதினாலும் “சீமானை பற்றிய விமர்சனம் எழுதப்பட்டால் எனக்கு போதுமானது”. ஆகவே அந்த ஐடியில் என்னை போல் நீங்கள் எழுதுவதையும் நான் என் profit இல்தான் சேர்க்கிறேன்🤣. அதுவும் நீங்களே மாங்கு மாங்கு என சீமானை விமர்சிக்கும் போது - அப்படி ஒரு நிலைமையை நான் உருவாக்கி உள்ளேன் என எண்ணும் போது - மனம் ஆனந்த கூத்தாடுகிறது (உண்மையிலேயே). ஒன்று தெரியுமா. கோஷான் செவ்வியன் என்ற ஐடியில் வருவதாக 12 வருடமாக என்னை அறிந்த உறவுகள் நம்பமாட்டார் என நினைக்கிறேன். அப்படி நம்பினாலும் எனக்கு அதில் பெரிய பிரச்சனையும் இல்லை. அடிப்படையில் எவர் என் மீது வைத்துள்ள அபிமானமும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆகவே… செவ்….மன்னிக்க வேண்டும், நாதம் 🤣 Keep calm and carry on…
  12. செவ்வியன் செவ்வனே செய்வதால்… எனக்கு நேரம் மிச்சம். நன்றி செவ்வியன். பிகு யார் எழுதுகிறார் என்பதை கிட்டதட்ட கண்டு பிடித்தே விட்டேன். ஆனால் இது நல்லதுக்குத்தான். சீமானின் டவுசர கழட்டனும் அதை நேர்மையாக கழட்டினானும் போலியாக கழட்டினாலும் - டிரவுசர் கழண்டா போதும். It’s a win-win situation for me 🤣. பிகு AI வந்தாலும் கோஷானை கொப்பி அடிக்க முடியாது 🤣
  13. சந்தேகத்தை தீர்க்கும் வரை என் கட்டை வேகாது🤣. உங்களுக்கு மட்டு அல்ல… பலருக்கு…. எனக்கு பிடித்த யாழ்கள உறவுகள் பலருக்கு🙏.
  14. அவரையும் லிஸ்டில் சேர்த்து நான்காக்கி கொள்ளுங்கள். ஆனால் நால்வரும் ஒன்றே.
  15. ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன். ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள். நீங்கள் சொல்வது சரிதான். யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣. அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை.
  16. ஈழத்தமிழருக்கு… எப்படி? எமக்கும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சி சார், சாரா 92% மக்களிற்கும் இடையே மலையாளி-தமிழர், சோனகர்-தமிழர் பிணக்கு போல் ஒரு வரலாற்று பிணக்கு வராமல் தடுப்பது ஈழத்தமிழருக்கு இலாபமே. அப்படி ஒருவர் வராமலே போனால் கூட, சீமான் உருவாக்கும் எதிர்மறை தாக்கத்தை விட அது பரவாயில்லை. ஆனால் விஜை அப்படி ஒரு தலைவராக வரலாம். வருவார் என சொல்லவில்லை. வரலாம். சீமான் முழு மலையாளி. விஜைக்கு அப்பாவாவது தமிழன்.
  17. மன்னிக்க வேண்டு அண்ணை. என்னை பொறுத்தமட்டில் கருணா, கேபி, போல ஒரு விசம்தான் சீமான். இந்த மூவரினையும், அவர்களின் ஆதரவாளர் முன்வைக்கும் கருத்த்தையும் எதிர்ப்பதில் எந்த சமரசமும், எல்லையும் எனக்கு இல்லை.
  18. வீடியோவை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. கேணல் சூசை அனுப்பியதாக சொல்லப்படும் ஆடியோ இவருக்குத்தான் அனுப்ப பட்டதாம். இப்படியானவர்களே சீமானின் உண்மை முகம் கண்டு விலகும் போது - இங்கே சிலர் பெட்டை கோழி கெக்கெரிப்பது போல் இன்னும் முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஒ… இதுதான்.. ஆட்டுக்க மாட்ட விடுவதா 🤣. சீமானை பற்றிய திரிக்கும் ஆட்டுக்கும் என்னையா சம்பந்தம். செய்யிற கோக்கு மாக்கை எல்லாம் செய்து போட்டு… பிறகு நிர்வாகத்தின் மீது பிராது🤣.
  19. பையன்ஸ், மேலே விசுகு அண்ணா எழுதியது இந்த திரியில் சீமானை எதிர்க்கும் பலர், புலிகளை மிக கேவலமாக பலவீனப்படுத்தியோர் என. அப்படி யார் எப்படி பலவீனப்படுத்தினார்கள் என்பதற்கே ஆதாரம் கோருகிறேன்.
  20. நான் சொன்னேனே நாதம்… களம் மாறிவிட்டது🤣. உப்பிடி எல்லாம் செய்தால் பூமர் அங்கிள் எண்டு சொல்லி போடுவினம், கவனம் 🤣.
  21. இன்னுமொரு விடயம் நான் இங்கே கொள்ளுவது புலிகள் மீதான “கருணை” அல்ல. புலிகள் 2009 ற்கு பின் இல்லை. சீமான் மட்டுமா? புலத்தில் கூட பலர் அவர்களை வித்துத்தான் வாழ்கிறார்கள். ஆகவே தனியே புலிகளை மட்டும் சீமான் வித்தால் - போய் தொலை சனியனே என கூட விட்டு விடலாம். ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார். இதற்கு புலிகளுக்கு கண்மூடிதனமான பக்தியை காட்டியவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. தன் இனத்தின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள எந்த ஈழத்தமிழனும் செய்யலாம்.
  22. இது இன்னொரு சீமான் ஆதரவு “பெரியவர்” யாழில் அடிக்கடி சொல்வதுதான். அதாவது….இந்த இரு கனவாங்களுக்கும் சீமானால் ஈழ தமிழர் தமிழகத்துடன் பகைத்து நாசாமாய் போனாலும் பரவாயில்லையாம்…சீமானால் தமிழக தமிழர் நல்லா இருந்தா போதுமாம்🤣. அநேகமாய் பிரான்ஸ் அரசு செவேலியே கொடுக்க வாய்பிருக்கு🤣. பிகு பிஜேபி க்கு கதவு திறந்து விடும் சீமானால் - தமிழக்கத்து சதா ஆபத்துல் அல்ல, உயிராபத்து! ஆனால் அது அந்த மக்களுக்கு தெரியும். அதனால்தான் 15 வருடத்தில் ஒரு பஞ்சாயத்து போர்ட்டை கூட கொடுக்கவில்லை. பிகு, பிகு இப்ப கருணாநிதிதான் பிஜேபியை முதலில் உள்ள கொண்டு வந்தார் என இன்னும் ஒருவர் சருவசட்டிய தூக்கி கொண்டு வருவார்🤣. ஓம்…ஆர் இல்லை எண்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.