Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஒரு போர்குற்றவாளி தளபதியின் மகள். பாடல்கள் இலங்கை ஆமியை போற்றுவன. யாழிலும் ஒரு லங்காஅபிமானி இவவை பிரபல்யபடுத்த முனைந்தவர். அவர்தான் நேசனோ தெரியாது🤣
  2. தெலுங்கு பெண் என்பதால் வீரம் இல்லாமல் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவே மறத்தமிழச்சி விஜி அண்ணி என்றால் தெரிந்திருக்கும்.
  3. சீமான் வளர்வார். தமிழ் தேசியம் தேயும். இதில் ஒரு கெடுபிடியும் வராது. துப்பாக்கிதாரி தம் ஆள் என மத்திய புலனாய்வு அறிவித்தவுடன் - மாநில பொலிஸ் விலகி நடக்க தொடங்கிவிட்டது. அதுதான் non bailable offences எனப்படும் கடுமையான வழக்குகள் பாயவில்லை. வழமையாக ஒரு பேட்டரி இரெண்டு வயர் துண்டுடன் பிடி பட்டாலே தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும், வழக்கு போடும். ஆனால் இது சீமான் ரோவின் கைக்கூலி என்பதற்கு இன்னுமொரு வலுவான சந்தர்ப்பசாட்சியம். கயல் அண்ணி சாப்பிடுவதே திரள்நிதியில்தான். ஆதாரம்: கடந்த தேர்தலில் சீமான் மற்றும் கயல் அண்ணியின் சொத்து விபரம். அவர்களே சமர்பித்தது. மூன்று வருடத்தில் கிட்டதட்ட ஒரு மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வீடு எங்கே இருந்து வந்தது.
  4. தமிழ்நாட்டில் ஒருவருடன் கதைத்த மட்டில்: பொதுவாக சாதாரண இராணுவ சிப்பாய்கள் ஓய்வு பெற்றால் துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடையவே கிடையாதாம். குறைந்ததது கேப்டன் தரம் அதுவும் தக்க காரணங்கள் காட்டிய பின்பே அனுமதி கிடைக்குமாம். அப்படி கிடைக்கும் துப்பாக்கி அனுமதி கூட கைதுப்பாக்கிக்கு கிடைப்பது அரிதாம். அதே போல் அனுமதி குறித்த பயன்பாட்டுக்கு என வரையறுக்கப்படுமாம் (வனவிலங்கு, விலங்கு-களை எடுத்தல்). அந்த பயன்பாடு, இடம் தவிர வேறு இடத்தில் பயன் படுத்த முடியாதாம். தனி மனித பாதுகாப்புக்கு ஒரு போதும் இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகள் பாவிக்க படாதாம். அவை உத்யோக பூர்வமாக, மாநில அல்லது மத்திய அரசு ஆயுத படைகளால் வழங்கப்படுமாம் (விஜைக்கு வழங்கியது போல்). இந்த அடிப்படையில் இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற போர்வையில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சீமானுக்கு/ அவரின் குடும்பத்துக்கு வழங்கி வந்த ஆயுத பாதுகாப்பு என்கிறார். இதனால்தான் மாநில அரசு இப்போ இதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறதாம். உண்மையில் இதற்கு பிணையில் வரமுடியாத வழக்கே பதிவு செய்திருக்க வேண்டுமாம். ஆனால் மத்திய அரசு பிரசெரால் சாதாரண பிரிவில் வழக்கு போடப்பட்டதாம்.
  5. போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும். கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.
  6. இது எதிர் கட்சிகளின் அவதூறு உறவே. நம்ப வேண்டாம்🤣 பிறகு சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு எங்களை பழி சொல்லுங்கோ🤣 நாளைக்கு அவுஸ் வென்றால்…. அன்புமணி ஆகிய நான்….🤣
  7. எந்த பெரிய வீடு - நீலாங்கரை என்பது சரத்குமார், விஜை போன்ற பல பிரபலங்கள் வாழும் காஸ்ட்லியான பகுதி. தனியார் செக்யூரிட்டிக்கு இந்தியாவில் துப்பாக்கி வைத்திருக்க முடியுமா?
  8. இல்லை…நாம் வெல்லவில்லை ஆகவே செலன்ஸ்கியும் வெல்லகூடாது என்பதே காதல்-தோல்வி-தாடி அண்ணாக்களின் ஒரே எண்ணம் 🤣.
  9. ஸ்டாமர் காலிலும் விழாமல், மேர்ஸ் போல் முறுக்கவும் செய்யாமல், ஒரு வித்தியாசமான பாதையை கையில் எடுக்கிறார். அது டிரம்ப்பின் சின்னபிள்ளைதனத்துக்கு தீனி போட்டு, அதன் மூலம் காரியம் பார்ப்பது. யாருக்கும் கொடாத கெளரவமான 2வது அரச விருந்தினர் அழைப்பு, மன்னரின் கடிதத்தை கண்டதும் டிரம்ப் ரொம்பவே குசி ஆகிவிட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. உக்ரேனில் ஒரு உடன்படிக்கை வரும் என தான் நினைப்பதாக டிரம் கூறினார் (ஸ்டாமர் உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்திய பின்னும்) சாகோஸ் தீவுகள் முடிவை அங்கீகரித்தார் யூகே-யூஎஸ் வர்த்தக உடன்படிக்கை பற்றி சாதகமான கருத்து சொன்னார் ஸ்டாமரின் பயணம் வெற்றி என்றே படுகிறது. நிரந்தரமா, தற்காலிகமா? தெரியாது. மேலதிகமாக செலன்ஸ்கியையும், உக்ரேனிய இராணுவத்தையிம் புகழ்ந்தார். இரெண்டு நாளைக்கு முன் சொன்னதற்கு நேர் எதிராக, நான் செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என சொன்னேனா? என்னால் அதை நம்பமுடியவில்லை 🤣 என கூறினார். நாளை டீல் குழம்பினால் மீண்டும் திட்டுவார், மிரட்டுவார் 🤣.
  10. ஒரு பக்கம் இந்திய பிராந்திய வல்லாதிக்கம், மறுபக்கம் சிங்கள பேரினவாதம் என்ற வரலாற்று எதிரி. தலைவர் இருவரையும் எதிர்த்து போராடினார். முடிவு இருவரும், ஏனையோர் எல்லோரையும் கூட்டு சேர்த்து அவரை தோற்கடித்தனர். ஒரு பக்கம் டிரம்பின் கொள்ளை , மறுபக்கம் புட்டின்/ரஸ்யா என்ற வரலாற்று எதிரி. முடிந்தளவு டிரம்ப்போடு ஒரு டீலை (50:50) போட பார்க்கிறார் செலன்ஸ்கி. முடிவு? காலம்தான் சொல்லும். தலைவரின் அசோகா ஹொட்டல் பயணத்துக்கும், நாளைய செலன்ஸ்கியின் வெள்ளைமாளிகை பயணத்துக்கும் அநேக ஒற்றுமைகள் உள்ளன.
  11. மேலே நான் எழுதியுள்ள 4 பொயிண்ட்சையிம் பச்சை குத்தி விட்டீர்களா 🤣? டிரம்ப் அல்லாத எந்த அமெரிக்க அதிபரோடும் செலன்ஸ்கி/உக்ரேன் போட்ட, போட்டிருக்க கூடிய டீல்கள் சவுதி/கட்டார்/யூ ஏ ஈ/ ஜோர்தானுடன் அமெரிக்கா போட்ட்டுள்ள டீல்களை ஒத்தன. டிரம்ப் கேட்பது, இப்போ செலன்ஸ்கியை ஒத்து கொள்ளவைத்துள்ள, 100%, 50% டீல்கள் போல அல்ல அவை. புட்டின் எப்போதும் கேட்பது 100%, பெலரூசை போல உக்ரேன் தனக்கு வேணும் என.
  12. தலைவர் காலத்தில், களத்தில், டிரம்ப் போன்ற ஒருவர் இருக்கவில்லை, டிரம்ப் புட்டினுக்கு சேவகம் செய்வதை போல இலங்கை/இந்தியாவுக்கு சேவகம் செய்யவில்லை என்பதும், இப்போதும் செலன்ஸ்கி வளைந்து கொடுத்தே போக முனைகிறார், நெகிழ்வுதன்மையை காட்டுகிறார் என்பது இரு பாரிய வேறுபாடுகள் ஆனால் இருவர் மீதான அளுத்தமும் ஒன்றே. 2000-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கை, உக்ரேனின் வளங்களை இப்போ சவுதியின் வளங்களை பாவிப்பது போல் பாவிக்கும் ஒரு திட்டம். டிரம்ப் கேட்பது 100%. இப்போ செலன்ஸ்கி ஒத்து கொள்வதாக சொல்லப்படுவது 50%. எந்த நாடும் தர்மஸ்தாபனம் நடத்துவதில்லை. எல்லாம் உள்நோக்கோடுதான்.
  13. இல்லை. வழக்கை விசாரிக்குக் நீதிபதி அல்லது ஜூரி - ஒட்டுமொத்தமாக குற்றசாட்டை ஆம் இல்லை என முடிவு செய்யும் போது, ஒவ்வொரு defence புள்ளியையும் துறை போக ஆராய தேவையில்லை. அதை நம்புவதா இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்வார்கள். இந்த பையன் எந்த corroborating evidence ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு அதிகாரி எனக்கு சொன்னார் என சொன்னால் - அதை நம்பாமல் விடுவார்கலே ஒழிய பையன் சொல்லுவதற்கு ஆதாரம் தேடுவது நீதிமன்றின் வேலை அல்ல. அதை பற்றி வியாக்கியானம் செய்வதும் நீதிபதியின் வேலை அல்ல. மிகவும் யோசிக்க வேண்டிய விடயம் - ஒட்டுமொத்த ஜேர்மனியில் 30 வயதுக்கு கீழான ஆண்களிடம் AfD தான் முதலாம் இடம்!!! இதில் உண்மை இல்லாமலும் இல்லை. பிரித்தானியாவிலும், தமிழ் நாட்டிலும், first past the post முறை என்பது உண்மை ஆகினும், இனவாத கட்சிகள் விகிதாசாரம் இப்படி வராது.
  14. ஓட விட்டுத்தான் சொல்ல முடியும். என் கருத்து: டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல. மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம். டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும். செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது. மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு… போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம். பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என. நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும். ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம். புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம். ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது. டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.
  15. யாழ்கள உறவுகளுக்கு short term memory loss என நினைக்கிறேன். சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள். கீழே உள்ளதை உங்கள் உடம்பில் பச்சை குத்தி வைத்து கொள்ளவும். கருத்து எழுதமுன் இதை படித்து விட்டு எழுதவும். 2024 டிசம்பரில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றார் அவர் இதுவரை கடைபிடித்து வந்த அமெரிக்காவின் உக்ரேன்/ரஸ்யா கொள்கையை 180 பாகையால் திருப்பி, கனிம கொள்ளையிலும் ஈடுபட முனைகிறார். டிரம்ப் இப்போ வைக்கும் கனிம கொள்ளை கோரிக்கையை பைடனோ, வேறு எந்த மேற்கு நாடோ வைக்கவில்லை. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.
  16. 96 உலக கோப்பை இறுதி ஆட்டம் நினைவிருக்கும். வார்ண் பந்தை துணியால் ஒத்தி ஒத்தி போடுவார். அப்படி இருந்தது பனிப்பொழிவு (அந்த மேட்சில் அவுசுக்கு ஆடிய ரைபில், இந்த தொடரில் அம்பயர்). அதன் பின் நடந்த இன்னொரு தொடரிலும் இறுதி ஆட்டத்தில் பனி பெரும் பங்கு வகித்தது. லாகூரின் எந்த மேட்சிலும் இந்த தொடரில் அவ்வளவு பனிப்பொழிவு இல்லை. ஆனால் அந்த மேட்ச் நடந்தது மார்ச் மாதம் நடுப்பகுதியில். ஒருவேளை மார்ச்சை நெருக்க பனிபொழிவு கூடக்கூடும். நண்பரிடம் கேட்டுபாருங்கள். கொசுறு லாகூர் இப்போதும் பஞ்சாபில்தான் உள்ளது. Pakistani Punjab. 1992 செமிபைனலை நினைச்சா இப்பவும் ரத்த கண்ணீர் வரும்😭
  17. ஆக மொத்தத்தில். ஒரு பிரித்தானிய பிரஜைக்கு, அவரின் பெற்றார் எங்கே பிறந்தார்கள் என்பதை மட்டும் வைத்து, வேலை மறுக்கப்படாது.
  18. தலையிடமுடியாது என்பதை விட. தலையிட வேண்டிய தேவை இங்கே எழவில்லை. நீதிமன்றம் ஏன் இதில் தலையிட வேண்டும்? வழக்கு போட்டவர் குற்றத்தை நிருபிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் தன் நிரபராதி என ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பிரெஞ்சு நீதிமன்றங்கள் போல், பிரித்தானிய நீதிமன்றங்கள் inquisitorial அல்ல. அதேபோல் இது ஒரு public inquiry யும் அல்ல. இது உங்கள் speculation. ஒரு ரேசிஸ்ட் அதிகாரி பொய்யாக அந்த பையனை discourage பண்ண சொல்லி இருக்கலாம். உங்களை போல் விளக்கம் பத்தாமல் அந்த அதிகாரி இப்படி சொல்லி இருக்கலாம். அந்த அதிகாரி அப்படி எதுவும் சொல்லாமல், வழக்கில் இருந்து தப்ப அந்த பையன் பொய் சொல்லி இருக்கலாம் இதில் எதுவாவது ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதுதான் நடைமுறை என்பது அல்ல.
  19. நான் சொல்வது தியரி அல்ல. Both in theory and in practice எழுத்திலும் நடைமுறையிலும். அதுதான் என் வாழ்ந்த அனுபவத்தை my own lived-experience எழுதினேன். Windrush - ஒரு scandal -அதாவது சட்டத்திலோ, guidance இலோ, இல்லாதாவிடயத்தை, சட்டத்தை மீறி செயல்பட்டது. ஒரு இடத்தில், விடயத்தில் scandal நடந்தத்தால் அனைத்து விடயத்திலும் அப்படி என கூற முடியாது. குறிப்பாக வாழ்ந்த அனுபவம் lived experience வேறாக இருக்கும் போது. யாரும் தலையிடமாட்டார்கள் ஏன் என்றால் அது ஒருவர் தான் வழக்கில் இருந்து தப்ப சொன்ன பொய். எத்தனையோ வெளிநாட்டில் பிறந்தவர்களே DV கிளியரன்ஸ் எடுத்திருக்கும் போது, ஒருவர் தான் தப்ப, ஒரு defence case argument இல் இப்படி சொன்னால் அதை யாரும் கணக்கில் எடுப்பதில்லை.
  20. குடுத்து வச்ச மனிசன் ஜி நீங்கள் ஆப்கானிஸ்தான் 300 தாண்டியவிடனேயே இங்கிலாந்து கிட்டப்போய் தோற்கும் என நினைத்தேன். ஆனால் ஒவர்டன் நிண்டு ஆடியபோது மாற்றியும் யோசித்தேன். வாழ்த்துக்கள் முதல்வர்💐💐💐. இவ்வண், மாண்பு மிகு துணை-முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர்🤣
  21. 👍 கடைசி ஐந்து ஓவர் பார்த்தேன். தோத்தாலும் இங்கிலாந்து டிக்கெட் காசுக்கு குறை வைக்காமல் தோத்தார்கள்🤣.
  22. எனக்கு மட்டினில் சுழல் பந்து வீசி அனுபவம் இல்லை. ஆனால் 13 கீழ் போட்டியில் ஒரு மணிக்கட்டால் சுழற்றுபவர் மட்டினில் நல்லா போட்டார்.
  23. ஓம்…இதை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்தது. வேகபந்தில் பல விடயங்கள் ரூட்டின் குழம்பினால் குழம்பிவிடும். கிட்டதட்ட மசள் மெமரி போல. அல்லது எனக்குத்தானோ தெரியாது. இரெண்டும் என நினைக்கிறேன்.
  24. வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் (தலைவர்), மானம் காத்தோர் (பெரியார்) சரித்திரம் தனிலே நிற்கின்றார்❤️. நன்றி நன்றி. சூழமைவு இல்லாமலும் பார்க்கலாம் என்பதில் உடன்பாடே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.