Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. மக்களை ஏமாற்றி வாயால் செய்யும் அரசியல் இனிவருங்காலத்தில் கைகொடுக்காது, கைகொடுக்க மகிந்த கோஸ்ட்டியும் இனிமேல் இல்லை. அவர்களுக்கே இது வாழ்வா சாவா போராட்டம். அப்பவும் பாருங்கள்.... தேர்தலின் பின் ஓய்வு என்கிறார், வாய்த்தால் ஓய்வு இல்லாமல் உழைப்பார். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம் எல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற ஏலாது. எதுக்கும் ஒரு முடிவு உண்டு .இவர் மக்களை ஏமாற்றி காலத்தை கழித்தவர்.
  2. ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்? அங்கே, வார இறுதியில் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான் நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை...... எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே? அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ? சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி. எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....
  3. மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு! காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய முடியும். ஐயா சிறியர்! விரைவாக வந்து பக்கத்தை நிறைவு செய்து விடுங்கள். இதுக்கு மேலேயும் தாக்குப்பிடிக்க முடியாது என்னால்.
  4. இப்போ நகரங்களில் உள்ள பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும், காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம். இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வறுமை என்னோட கூடப்பிறந்தது. மறக்க வழியேயில்லை ......
  5. ஏன் சிறியர்.... மூக்கு வேர்க்கிறது என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். கண் வேர்க்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுவியர் ஏதோ, யாருக்கோ பயத்தில உளறுகிற மாதிரி இருக்கு. பாவம் நீங்கள்! ஆளைப்புரியாமல் கருத்தை விட்டிட்டியள். உங்களின் வெள்ளாந்தி மனம் புரியுது. இனி, கருத்து இணைக்கும் ஆளைப்பாத்து, பதிவிடுங்கோ!
  6. ம் .... நானும் பாத்தேன். வயது போனால் எதுக்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேணும்? அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்திருக்கலாமே? அது தானே வயது போவதை குறிக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். விதைத்ததை அறுக்காமல் மண்ணுக்குள்ள போக விடக்கூடாது இவரை. நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். பக்கங்கள் நீழுவதால், வசியின் நெஞ்சு பக்கு........ பக்கு..... என அடிப்பது எனக்கு கேட்கிறது!
  7. வாசகர்களை ஏமாற்றக்கூடாதேயென்று நாங்கள் கண்விழித்து எழுதிக்கொண்டிருக்கிறோம், எங்கள் தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
  8. சிறியர்! இந்த தலைப்பை பார்த்ததும் ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.முந்தா நாள் ஒரு செய்தி வந்தது. இந்த வார்த்தையை முன்பு சொல்லி அனுப்பிய புள்ளி ஒன்று அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி ஒன்று வந்தது. தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாராம் ஆனால் மக்கள் ஆணை கொடுக்க வில்லையாம், அதனால் விலக இருக்கிறாராம். விலக இருப்பவர் ஏன் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்? சட்டுப்புட்டென்று விலக வேண்டியானே. என்னடா.... எனக்கு வாக்களித்தால் தமிழருக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்று கண்ட இடமெல்லாம் புலம்புகிறவர் என்று யோசித்தேன், கருணாநிதி மாதிரி நான் தேர்தலில் பங்கெடுப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி மக்களிடம் அனுதாப வாக்கு சேகரிக்கிற தந்திரம் என்று பிறகு வந்து பாத்தா விளங்கிச்சு. அந்த செய்தி வாபசோ தெரியவில்லை, செய்தியை காண முடியவில்லை. நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும் போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது.
  9. முயலுக்கு கொம்பு முளைக்கும் என்கிறார் இவர். இருப்பது, நாட்டில் சிங்களமே பிரதானமானது என சட்டம் கொண்டுவந்த கட்சியில். தனது கட்சிக்காரரிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர், நாட்டிலே மாற்றத்தை ஏற்படுத்தப் போறாராம். எவ்வளவோ விட்டுக்கொடுப்புகள், தோள் கொடுப்புகள் கொடுத்தும் நம்மை இனமாக இந்நாட்டின் குடிகளாக ஏற்றுக்கொள்ளாமல், விரட்டி நம் இடங்களை அபகரித்து வைத்திருப்பவர்களை நாங்கள் அணைக்க வேண்டுமாம். அந்நிய நாடுகள் முதலிடலாம், வாழலாம் ஆனால் நாம் நம் பூர்வீக இடங்களில் வாழக்கூடாது நம் வழிபாட்டிடங்களில் வழிபடக்கூடாது என்று அடம் பிடிக்கும் பிக்குகளுக்கு தர்மத்தை படிப்பிக்கட்டும் பாப்போம். இவர் ஒரு புத்தர் தமிழருக்கு பாடம் எடுக்க வந்துவிடுவார்கள். தேர்தல் காலத்தில் வடக்கில் சுதந்திர கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நல்ல ஒரு ஆள் கிடைத்திருக்கிறது.
  10. மிகச்சரியான கருத்து! குரைக்கிறதுக்கு கல் எறிஞ்சால், இதுதான் நடக்கும். குரைக்க விட்டால், நமக்கு பல அனுகூலங்கள் உண்டு. புலிகள் முறியடிக்கப்பட்ட போது விழா கொண்டாடிய ஒரு பெண் பின்னாளில் அதற்காக வருத்தம் தெருவித்திருந்தாள். விடுங்கள்.... ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் கொண்டு செல்ல முடியாது. அவர்களது இயலாமை, பொறாமையின் விளைவு அது. அதுமட்டுந்தான் அவர்களால் முடிந்தது. சலுகைகளுக்கும் சில்லறைகளுக்கும் விலை போவோரின் செயலது.
  11. இது, வீட்டுக்காரிக்கு தெரியுமோ? இல்ல..... வீட்டுக்கும் இல்லாம, பக்கத்துக்கு வீட்டுக்கும் இல்லாம மிளகாய்த்தூள் குப்பையிலே போய் விழுந்திடுமோ என பயமாய் இருக்கு. பிறகு, சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறவைக்கும் மிளகாய்த்தூளால் அர்ச்சனை நடக்கலாம். சீ சீ ...... சிறியர் மருத்துவமையிலேயே ரொம்ப நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆளாச்சே!
  12. வருடத்தில் ஒருநாள் உடுப்பு எடுப்பவர்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் எங்கோ போய் விடடீர்கள் தலைவா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் புத்தாண்டு, கொண்டாட்டம். அவர்களுக்கு வருடத்தில் ஒருநாள்... புத்தாண்டு! அதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து, வந்து கால் கடுக்க நிக்கிறார்கள். அதை படம் பிடித்து போட்டு உங்களை நிஞாயப்படுத்துகிறீங்களோ எண்டொரு சந்தேகம் எனக்குண்டு.
  13. அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப தான், நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ? பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!
  14. அப்பாடா... நல்ல வேளை, நான் தப்பிச்சேன்! உதல்லாம் தற்கொலையாகாது சிறியர். தமன்னாவை பாத்திட்டு தற்கொலையா? ஒருவேளை அவாவோட போக முடியலை எண்ட கவலையால் வந்த விரக்தியாய் இருக்குமோ? உங்களுக்கு ஏற்றாற்போல் படங்களும் செய்தியும் வாய்த்து விடுகிறது, யாரும் ஏமாறாவிடாலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவீர்கள். கண்டிப்பாக பனைமரம் வெட்டிய செய்தி உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்த்தேன். புதினம் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, பனைக்கு கீழிருந்து பால் குடிக்கிறவர்கள், பட்டம் விடுகிறவர்கள் எல்லாம் பனைமரத்தின் அருமையை நினைத்து கவலையும் கோபமும் கொண்டிருப்பார்கள். அந்த பனைமரத்தின் அருமை அவர்களுக்குத்தான் புரியும்.
  15. சாமியார்! அந்தப்பதிலுக்காகத்தான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கூழ் முட்டை மைத்திரியர் நாளைக்கு மறுப்பறிக்கை விடுவார் தான் அப்படி சொல்லவில்லை என. எப்படியிருந்தாலும் மூஞ்சூறு தானே போய் பொறியில தலையை மாட்டிருச்சு. யாருக்காக மாட்டினாரோ தெரியல. ஒன்று, சிறை அல்லது மனநோயாளர் வைத்தியசாலை காத்திருக்கு இவருக்கு. ஆனால் என் மனம் இந்தப்பொறி பத்தியெரியாதா என ஏங்குது!
  16. மக்கள் ஏமாளிகளாய் இருந்தால், எத்திப்பிழைக்கும் கூட்டம் பெருகிக்கொண்டே போகும். இந்த துரோகிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் போகுது.
  17. துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....
  18. இதெற்கெல்லாம் காரணம் யாரோ? விநாயக மூர்த்தி முரளிதரன் அவர்களே! இந்நாள்வரை இது உங்கள் கண்களுக்கு தெரியாமல் இப்போ தெரிய வந்ததன் காரணந்தான் என்னவோ? கோயிற் திருவிழா வந்தால் பிச்சைக்கார கூட்டமும், திருடர் குழாமும் சுவாமி தரிசிக்க விழுந்தடித்து போவார்கள். ரணில் பிரித்தெடுத்த இந்தச் சாத்தானை மகிந்த குடும்பம் பயன்படுத்தியது, இதுவும் ரணிலை சாடினார். இப்போ; மகிந்த கோஸ்ட்டி இவரை கண்டுகொள்வதில்லை, மறுபடியும் ரணில் பல்லவி, ஆதரவு என கிளம்பி விட்டார். பிரேதசவாதம் பேசி வடக்கு மக்களை துரத்திய பிசாசு அணைக்க துடிக்குது.
  19. தாமரை கோபுரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்களும் செய்திகளில் படித்தறிந்தவர்களும் யாரோ இணைத்த படத்தை பார்த்து இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து, அனுபவித்து, ரசிப்பவர்களும் உண்டு. பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. உண்மையில் நான் சொன்னவை நான்கண்டு அனுபவித்தவையே, பச்சை மிளகாய் ஒன்று, நூறு கிராம் மரக்கறி என்று வாங்குவோரும் உண்டு. அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள். கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு, அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு எந்த சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை. இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை. இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காய் தேடி தெருவில் அலைவோரை பார்த்து ஆறுதல் சொல்வாருமில்லை. இவையெல்லாம் பார்க்கப்படாத மறைக்கப்பட்ட உண்மையின் மறுபக்கங்கள். நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓடியோர் சொர்க்கபுரியாக வர்ணிக்கும் நாள் அதிக தூரமில்லை. இது சிங்களத்தின் ஒரு வெற்றியே. அது எங்கிருந்து இந்தப்பணத்தை பெற்று ஏன் இப்படி அலங்கரிக்கிறது என்று யாரும் சிந்திக்கபோவதுமில்லை. எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம் ஆனால் அவர்கள் பார்க்காத கதைக்க விரும்பாத உண்மைகள் இவை.
  20. ஆமா ...... அவர் சுற்றுலா போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!
  21. அது சரி ....... இலங்கை பெற்ற கடன்களை மீள செலுத்தி விட்டதா? பௌத்த விகாரைகளின் கட்டுமானப்பணிகள் குறைந்து விட்டதா? மக்கள் தங்கள் நிலங்களில் சுதந்திரமாக குடியேற அனுமதித்துள்ளார்களா?
  22. ஆமாம். "இது சிங்கள பௌத்த நாடு" என ஆர்ப்பரித்து உங்களை அரச கட்டிலேற்றிய அந்த சிங்கள பௌத்தமே உங்களை கைவிட்டது விரட்டியது என்பதுதான் உண்மை. அது தவிர, போருக்கு முன் போர் ஆடைகளை அணியும் போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும்போதே வீரத்தையும் அதன் சிறப்பையும் பேச வேண்டும் என்பது உங்கள் அரசியலில் உண்மையாயிற்று. அது சரி... மிகப்பலம் வாய்ந்த விடுதலைப்புலிகளை அழித்த உங்களுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டத்தை அடக்கி ஆட்சியை தக்க வைக்க உங்களால் முடியவில்லை? எழுதியதுதான் எழுதினீர்கள், உங்களுக்கு விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய சர்வதேச சக்திகள் ஏன் உங்களுக்கு எதிராக திரும்பியது எனவும் விவரிக்கலாமே. ஆர்ப்பாட்டம் செய்து விரட்டியவர்களுக்கு தெரியும், தாம் யார், ஏன் அதை செய்தோம் என்பது, உங்களுக்கு விளங்காத மாதிரி கதை எழுதி மகிழுங்கள். போனதடவை தமிழ் கிறிஸ்தவர்களை கொன்று பதவியேறி பாதியில் இறங்கினீர்கள், இனியொரு இன, மத கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாமென கனவு காணாதீர்கள். அது உங்கள் கடந்தகால அரசியலையே கேள்விக்குறியாக்கி விடும். புத்தகம் வெளியிட்டு அனுதாபத்தை தேடி காலத்தை வீணாக்குவதை விடுத்து சிறை செல்லாமல் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல சட்டத்தரணியை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவரும் வழியைப் பாருங்கள், இல்லையேல் அதை நீங்கள் இழக்க நேரிடும். எல்லா இழப்பையும் உங்களால் தாங்க இயலுமா என்பது தெரியவில்லை, அடுத்தவருக்கு இழப்பை ஏற்படுத்தி மகிழ்ந்தவர்களல்லவா நீங்கள்!
  23. ம்ம் ... எவனெவனோ இலங்கையில் தமது நாட்டின் சுதந்திர தினத்தை, தமது தேசிய கீதத்தை இசைத்து கொண்டாடுகின்றனர் ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்காக உழைத்த தமிழர் தமது மொழியில் சுதந்திர கீதம் இசைக்கக்கூடாது, அவர்கள் இந்நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடாது. இது, இந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதா என தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.