Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. தினேஷின், அவர் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள், உரையாடல்கள் ஆராயப்பட்டுள்ளன, குற்றவாளியை நெருங்கி விட்டோம், கைது செய்யத் தயங்கமாட்டோம் என்றெல்லாம் விறுவிறுப்பை ஏத்திப்போட்டு, இப்போ; மாமிக்கு செய்தி அனுப்பினார், தற்கொலை செய்தார் என்று புதுப்புது செய்திகளை வெளியிட்டு முக்கோணத்தில, ஐங்கோணத்தில விசாரிக்கினமாம். இவர்கள் வேண்டுமென்றே குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள் காரணம் பணம். இத்தனை கொலைகளை செய்தவர்களுக்கு விடுதலை, மரியாதை, பதவி கொடுத்து மகிழ்பவர்களுக்கு இது என்ன பெரிய கொலை என்று அவசரங்காட்டுவதற்கு? நாளாந்தம் அரசியல் கொலைகள், பழிவாங்கல்கள் நடக்கிற நாட்டில் இதெல்லாம் சாதாரணம். இதனாலல்லவோ எல்லோரும் உங்கள் கடைக்கண் தங்கள் மேல் விழாதா என்று அழைக்கிறார்கள். நீங்கள்தான் அப்பப்போ ஓடி மறைந்து விடுவீர்கள்!
  2. ஆமா .... தனது தலைமுடியை தானே பிச்சுக்கொண்டார், பத்தாததுக்கு செத்த பிறகு கிரிகெற்க்காரனுக்கு செய்தி வேற அனுப்பியிருக்கிறாரு. இப்பிடி எத்தனையை போலீசு மாறி மாறி சோடிக்கும். களவு எடுக்குது, கஞ்சா கடத்துது, மதுபானம் கடனுக்கு கேட்டு கடைக்காரனை அடிக்குது போலீசு. இதையும் செய்துபோட்டு பழிப்போட ஆள்தேடுதாம். அட ... இவன்கள்தானே இத்தனை செய்தியையும் போட்டு குழப்பினவங்கள். கொலைகாரனை பிடிக்க முடியாவிட்டால் தற்கொலை என்று கதையை முடிச்சுவிடுவான்கள்.
  3. ஏன் சார், இலங்கை போலீஸ் இலாகா இந்த திரியை வாசிக்காதில்ல? நீங்கள் சொல்லி வைச்சிடாதீங்கோ. ஒரு பல்லியை கொல்லவே மனம் வராத ஆள் நான். அவ்வளவு பீச்சல் பயம் எனக்கு. நீங்கள் வேறை கொலை, அது இதென்று பீதியை கிளப்ப, வகையற்ற போலீசு வாசலில வந்து தட்ட எதுக்கு இந்த வில்லங்கத்தை? அரைச்ச மாவையே அரைச்சு விறு விறுப்பை ஏற்படுத்த முயற்சிக்குது போலீசு, கணவன் மனைவி இருவரில் ஒருவரின் இங்கிலாந்து பயணத்தை தடுப்பதற்காக கொலை நடந்திருக்கோ? ஒருவேளை தினேஷ் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. நாங்களும் எங்கள் பங்குக்கு போலீசுக்கு துப்பு கொடுப்போம்!
  4. இதை வாசித்தபின் சில சமயங்களில் விதி எழுதும் கதை விசித்திரமானது என்றே எண்ணத்தோன்றுகிறது. பணத்தாசை, தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவதில்லை. ஒரு பழமொழி "பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண் கொடு (எடு)." பொய்யல்ல.
  5. இல்லை, நான் அறியவில்லை. திறமையும், கடின உழைப்பும் கொண்ட அநேகர் தங்களைச்சுற்றியுள்ள நயவஞ்சகர்களை இனங்காண தவறுவதோடு, அவர்களையே கண்மூடித்தனமாக நம்பியும் விடுவது அவர்களின் துர்ப்பாக்கியம்!
  6. இப்படித்தான் கொலைகாரன் தானாக வந்து நான்தான் இந்தக்கொலையை செய்தேன் என சரணடையும் வரை காத்திருப்பீர்களாக்கும்? இத்தனை துப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது கொலைகாரனை இனங்காண்பதற்கு.
  7. கொலைகாரன் தினேஷ் வைத்தியசாலையில் இறக்கும்வரை கூடவே இருந்து தினேஷின் அலைபேசியை கையாளுமளவுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான். மரணத்தை நிறைவேற்றும் அவசரம், பதட்டம் காரணமாக கிறிக்கெற் பிரபலத்துக்கு செய்தி அனுப்பி அவரை சிக்க வைத்து தான் தப்பிக்கொள்ளும் உத்தியை மறந்திருக்கலாம், அவர் இறந்தபின் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்கிற செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. தினேஷின் மனைவி அவரது இருக்குமிடத்தை இணையவழி தேடி அவரது வாகனம் மயானத்துக்கு போகிறது எனக்கண்டறிந்து ஆளை அனுப்பியதன் காரணம் என்ன? அப்படியென்றால் தினேஷ் தனது மனைவியிடம் தான் சந்திக்க போகும் நபரை சந்திக்கும் இடம், நேரத்தை அறிவித்து விட்டு சென்றிருக்கவேண்டும். அப்படியானால் அது எந்த இடம் என்ன நேரம்? அத அவர் ஏன் போலீசாரிடம் குறிப்பிடவில்லை? கார் பாதை மாறிப்போகிறது, கணவன் ஆபத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவையென ஆள் அனுப்பியவர், போலீசாரை அணுகாமல் சம்பந்தப்பட்டவரை தனியாக அனுப்பியதன் நோக்கமென்ன? சும்மா நான் பணத்தை மீளப்பெறப்போகிறேன் என்று சொல்லி, அதுவும் பணிப்பாளருக்கும் அறிவித்து விபரம் தெரிவிக்காமல் செல்வது, மனைவி விபரம் அறியாமல் அனுப்பிவிட்டு அவர் போகும் இடத்தை தேடுவது நம்புவதுபோல் தெரியவில்லை. பெறப்போகும் தொகை சாதாரணமானதல்ல தனிய போய் கையில வாங்கிக்கொண்டு வருவதற்க்கு. அதற்கென்று நடைமுறைகள் உண்டு. அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, தன்னிச்சையாக செயற்பட முடியாது. அவரது மனைவி ஒன்றும் நாட்டுக்கட்டையோ, வெகுளியோ கிடையாது இதை புரிந்து கொள்ளாமலிருப்பதற்கு. சாரதி இல்லாமல் அவசர காரணமாக மயானத்திலிருந்த ஒருவரை அழைத்து வர அனுப்பப்படிருக்கலாம். அப்பாவி மனிதன் துரோகத்தால் மாண்டிருக்கிறார். பக்கத்திலிருந்து அவர் எதிர்பாரா விதமாக கழுத்தை நெரித்திருக்கிறான். அவர் தன் கைக்கு எட்டிய வரையில் அவனது தலைமயிரை இழுத்திருக்கிறார். தினேஷ் தான் கிறிக்கெற் பிரபலத்தை சந்திக்க இருந்திருந்தால் தனியாக சந்திக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவரை சந்திப்பதற்காக சம்பந்தப்படவருடன் நடத்திய உரையாடலோ, செய்திப்பரிமாற்றமோ அலைபேசியில் கண்டறிந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே இது கொலைகாரர் கூறும் காரணமாக இருக்கலாம். தினேஷின் அலைபேசியில் பல சந்தேகங்களுக்கு விடை உண்டு. தினேஷின் மனைவி தினேஷுக்கு உண்மையில் அழைப்பெடுத்தாரா? எப்போ அழைப்பெடுத்தார்? இருப்பிடத்தை கண்டறிந்த பின்னா, முன்னா? இவர் இப்படி கணவர் வெளியில் போன பின் அழைப்பெடுத்து கண்டறியும் பழக்க முன்பு இருந்ததா? பொலிஸாருக்கு இது தெரியாமலில்லை, ஏதோ தடுக்கிறது. இது பணப்பரிமாற்றம் அல்லது கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலையென என விசாரணையை திசைதிருப்பவும் இடமுண்டு. இங்கு பணம் பாதாளம் மட்டும் பாய்ந்து கொலைகாரரும், காரணங்களும் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புமுண்டு.
  8. எனக்கென்னவோ; இந்த கிரிக்கெட் வர்ணனையாளரை கொலையாளிகள் தமது கொலைக்கு சாதகமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இருவர் மட்டுமே அவர் கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க சென்றது, தனது பணத்தை மீளப்பெறுவதற்காக எனத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி தனியாக சென்று பணம் பெற நினைத்திருப்பார்? போனவருக்கு அவரது மனைவி ஏன் அவர் வருவரை காத்திராமல், அல்லது கணவனிடமிருந்து அழைப்பு வராமல் அழைப்பெடுத்தார்? இது அவரது சாதாரண வழமையான பழக்கமா? அதாவது கணவர் வெளியில் போனால் அழைப்பெடுப்பது. அல்லது கணவர் சொல்லிச்சென்றாரா என்னிடமிருந்து அழைப்பு வராவிடில் தேடுங்கள் என்று, அப்படியென்றால் அவருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என மனைவி எண்ணினாரா?அப்படி ஒரு சந்தேகமிருந்திருந்தால் அவர் போகும்போதே ஏதாவது முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் அல்லது கார் மயானத்திற்கு போவதை கண்டுபிடித்தவுடன் பொலிசாருக்கல்லவா அறிவித்திருக்க வேண்டும்? கொலைக்கு திட்டமிட்டவர் அவரை வேறொரு காரணத்தை சொல்லி மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம், வரவழைத்திருக்கலாம். தான் சந்திக்கப்போகும் நபருக்கு அந்த வேளையில் உணவு தேவையென கருதி தினேஷ் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றிருக்கலாம். கொலையாளி (சம்பந்தப்பட்டவர்) சாவகாசமாய் பக்கத்து ஆசனத்திலிருந்தபடியே இருந்து சாப்பிட்டுவிட்டு வயரை அவரது கழுத்தில் போட்டு இறுக்கியிருக்கலாம், மயானத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் அங்கு போய்ச்சேர்ந்ததை உறுதிசெய்தபின் கொலையை உறுதி செய்வதற்காக அல்லது கொலைசெய்வதற்காக ஆள் அனுப்பப்பட்டிருக்கலாம், அவரே கிறிக்கெற் வர்ணனையாளர்க்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் வர்ணனையாளர் தான் சந்திக்கும் நோக்கமில்லை என என பதில் அனுப்பியிருக்கிறார் என விசாரணை அறிவிக்கிறது. அப்போ அவரது மரணத்தை நடத்தியவர், உறுதி செய்தவரே அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கு. அவரது தொலைபேசி காணாமற் போகவில்லை தினேஷின் தொலைபேசியில் தான் கிறிக்கெற் வர்ணனையாளரை சந்திப்பதற்கான எந்தச்செய்தியுமில்லை. அப்படியிருக்க உனக்காக காத்திருக்கிறேன் என எப்படி இறந்தபின் செய்தி அனுப்ப முடிந்திருக்கும்? ஆகவே கொலைகாரன் இறுதிவரை அவரோடே இருந்திருந்திருக்கிறார். அவர் யார்?
  9. எதுக்கும் விசாரணை முடிவு வருமட்டும் பொறுத்திருப்போம். உன்னிப்பாக கவனிப்போம்!
  10. அப்படியெனில் அவரது மனைவியும், மனைவியால் மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட (தகவல் தெரிவிக்கப்பட்ட) பணிப்பாளருமா?
  11. அது எங்கை என்று சொன்னால் நாங்களும் அறிவோம் கூட வருவோம் அல்லவா! அது ஒன்றுமில்லை சாமியார்! சாத்தான் என்று சொல்ல சிலர்க்கு ஒவ்வாமை அதாவது பயம்.
  12. அவ்வளவும் எனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் வெறுப்புத்தீ, சின்ன பொறி பட்டாலே பற்றி எரியும் நிலையில், கையாலாகாத்தனம், நப்பாசை என்றுஞ் சொல்லலாம்.
  13. நன்றி சார் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஐயா! யான் தவறொன்றும் இழைத்திலேன், சொன்னவர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன் நான். அதிலும் இன்றைய நாட்டின் நிலை கருதியும் அதனால் இந்த முட்டாள்கள் தினம் நினைவுக்கு வரவில்லை, எதிர்காலத்தில் இந்நாளை சிறியர் நினைவாக வைத்திருப்பேன். சிரிப்பேன், பகிர்வேன். மகன் பிரித்தானிய பிரஜையை செய்துள்ளாராம், இவரோ அமெரிக்க பிரஜை! இவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாட்டுப்பற்று பற்றி இப்போ புலம்பி என்ன பலன்? அரசியல் வங்குரோத்து ஆகிவிடும் என்பதால் இரகசியமாக செய்கிறார்கள் போலுள்ளது.
  14. ஒரேயடியாக பதவிப்பிரமாணம் செய்ய வருவதற்காகத்தான் மோடி இலங்கை விஜஜத்தை பின்போட்டாரோ? நாடே நாறப்போகுது!
  15. ராஜீவ் காந்திக்கு பிடரியில போட்ட கோபத்தையும் வைத்து சாத்துவான். இந்தியா, இலங்கை பட்ட கடன் பத்திரத்தை நீட்ட கோத்தா எந்தப்பக்கம் போவார்? இப்ப பிக்குகளும் சேர்ந்து சாத்தப்போகுதுகள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகரவும் சேர்ந்து திட்டுறார். நான் சொல்லேல .... ராஜபக்சாக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களை தலைமேல் ஏற்றி கொண்டாடி தலைகால் தெரியாமல் ஆடவைத்த கூட்டம், கலைத்து கலைத்து தாக்குது. அந்த முட்டாளுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
  16. இல்லையென்றால்; உள்நாட்டு கலவரத்தையடக்க கூட்டம் கூட்டமாக இராணுவ விமானங்களும், பெருந்தொகை இராணுவமும் கூப்பிட்டவுடன் கேட்டுகேள்வியில்லாமல் வந்து இறங்குவினமே? அவையும் ஆயத்தமாகத்தான் சந்தர்பத்துக்காய் காத்திருந்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறன்.
  17. அவர்களின் கையாலாகாத்தனத்தினாலேயே இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள் இனி இந்திய இராணுவம்; புலிகளை அழிக்க முடியாது என்று எல்லோரும் நம்பிய போது அவர்களை அடக்கிய இலங்கை இராணுவத்தை நாங்கள் அடக்கினோம் என்று தங்களை புகழ்ந்து கொள்வார்கள். சீனனை தடுக்க இதுதான் தருணம் என்று இந்தியா போர் இல்லாமல் வந்து புகுந்து கொண்டது. சிங்கள மக்கள் வருந்தி வினையை வேண்டினார்கள், வந்த வினையோ வலிய வேதனையை வருவித்துக்கொண்டது. நல்லது! பங்காளிகள் அடிபட்டு சாக, இலங்கை கடன் கொடுக்க வேண்டுமேயென்று முழிக்கத் தேவையில்லை. இலங்கை ஒரு கல்லில் பல மாங்காய்கள் என்கிற திட்டத்தோடதான் இந்திய இராணுவத்தை அழைத்திருக்கு. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?
  18. போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம், எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல் இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.