Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. கனடாவுக்கு போன அனுரா, அனுபவமுள்ள ஒருவரை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லையா? அல்லது அசம்பாவிதத்தை தவிர்த்துக்கொண்டாரோ? அது சரி... இலங்கையிலேயேதானே தேர்தல் வரப்போகுது, இவர் ஏன் கனடாவுக்கு பிரச்சாரம் செய்யப்போனார்? கோத்தா போல் வாக்காளர்களை இறக்குமதி செய்யபோகிறாரோ?
  2. விரட்டியது, விதியோ.... சதியோ..... என்கிற விவாதத்திற்கு இடமேயில்லை, அவரை விரட்டியது சரியே! அதாவது, அவரை தெரிந்தெடுத்தவர்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால். இதில் தமிழருக்கு பங்குமில்லை பாத்திரமுமில்லை அதனால் புலி, புலம்பெயர்ஸ் புலம்பல் இங்கில்லை. வெளிநாட்டு சக்தி என்று குறிப்பிடுகிறார். தன் பிழையை ஏற்றுக்கொள்ளாமல் பிறர்மேல் பழி போடுவது இவர்களது இயல்பு, அல்லது தமிழரின் வாக்கை குறி வைத்து பழைய பல்லவியை தவிர்த்துக்கொண்டாரோ?
  3. அட ..... சிங்கள பௌத்தர்களிடம் அப்படி ஒன்று இருக்கிறதா? வரலாறு அப்படி சொல்லவில்லையே. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே இத்தனை லட்ஷம் தமிழர்கள் கொலையுண்டு, சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். வேறு எந்த பௌத்த நாட்டிலும் இப்படி கொடுமை நடந்தேறவில்லையே. இவர் அப்பப்ப கனவிலே இருந்து எழும்பி வந்து உபதேசிப்பார், அந்த உபதேசம் சீறிப்பாயும்.
  4. பாத்துப்பேசுங்கோ பெருமாளு! காதில விழுந்திடப்போகுது, பிறகு, உங்களையும் இனவாதியாக சித்திரித்து ரசிக்கப்போகிறார்கள். இனவாத செயல்களும் பேச்சுகளும் இன்னும் முற்றுப்பெறவில்லை, ஆனால் அதை சுட்டிக்காட்டுவோரை இனவாதிகள் என முத்திரை குத்தி ரசிக்கினமாமெல்லே. தமிழர் தான் இனவாதிகளென வெகுசீக்கிரத்தில் நம்மவர்களே அறிக்கை விடுவினம் பாருங்கோ
  5. ம்ம்..... இவர்களை கைது செய்து, விசாரித்து, தடையங்களை தேடி, நீதிமன்றத்தில் நிறுத்தினால்; அலாக்காக சட்டத்தரணிகள் என்கிற அயோக்கியர்கள் அவர்களை நிரபராதிகளென விடுவித்து விடுகிறார்கள் காசுக்காக. அப்போ, இப்படிப்பட்ட பணக்காரர்களுக்கு இப்படிப்பட்ட ஏழைகள் பலியாகி விடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை இப்படிப்பட்ட காம வெறியருக்கு ஆஜராகும் சட்டத்தரணிகளே இவர்களை ஊக்குவித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
  6. மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.
  7. இங்கு களத்தில் நீங்களும் நானும் மட்டும் உரையாடவில்லை, பதிவை படித்தோருக்கு விளங்கும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்கப்போவதில்லை. நன்றி!
  8. உங்கள் கேள்வியென்ன.... அதற்கான எனது பதில் என்ன..... என்பதை ஒருதடவைக்கு மேல் விளக்கியுள்ளேன். இதற்குமேல் என்னால் முடியவில்லை. நீங்கள் சொல்வதை சொல்லி சரியென்று நிறுவுங்கள், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எந்தக்குடும்ப விவகாரத்தையும் அலசவில்லை. கபித்தனின் பதிவுக்கே, நாமேதோ ..... என்கிற பதிலை பதிந்தேன். யாராவது முடிந்தால் தயவு செய்து விளங்கப்படுத்துங்கபடுத்துங்களேன். இன்றைக்கு என்னோடு சன்னதமாடுவதென்றே வந்து நிற்கிறார்.
  9. ரஸ்யா படை எடுத்து உலக மக்களின் அமைதியை கெடுத்தது என்று நான் கூறவில்லை. அதை தேடிப்பிடிக்க எனக்கு அறிவு காணாது. ஆனால், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எத்தனையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுத்து அதிகார வர்க்கத்தை காப்பதும் மக்களின் அமைதி வாழ்வை கெடுப்பதே. வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இனி, புடின் ஆட்சிக்கு வந்தாலும் அவரால் முன்னுபோல் ஆட்சி செலுத்த அவரது உடல், பிற காரணிகள் இடம் கொடுக்குமா என்பதும் கேள்விக்குறியே. இவருக்கென ஒரு துரோகி பிறக்காமலா இருப்பார்?
  10. இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.
  11. என்னது.... ? அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களா? நான் எழுதினேனா? எங்கேயென காட்டுங்கள். நான் எழுதியது, கொலையாளியை பற்றியதும் இலங்கை செய்திகள் பற்றியதும். வேறேதும் யான் அந்தக்குடும்பத்தை பற்றி எழுதவில்லை.
  12. ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.
  13. ஐயா...! நான் ஒன்றும் நடக்காததை இட்டு வைச்சு காழ்ப்புணர்வில் சொல்லவில்லை. உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில் கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே, கொழும்பில் பல காரணங்களுக்காக போலீசில் பதிந்து வசித்த தமிழரை சுற்றி வளைத்து பிடித்து தாக்குதல் நடத்த வந்த புலிகள் என செய்திகள் வெளியிட்டு சிங்களம் மகிழவில்லை? மக்களை ஏமாற்றவில்லை இலங்கை செய்திகள்? அப்பாவி இளைஞரை கொன்றுவிட்டு அவர்ளுக்கு அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து, உறவுகளை இவர்கள் புலிகள் என்று கைப்பட எழுதித்தந்தாற்தான் உடலை உங்களிடம் கையளிப்போமென மிரட்டி கையெழுத்து வாங்கி பத்திரிகைகளில் வெளியிடவில்லை? இங்கு இறந்தவர்களை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை, கொலை செய்தவனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளையுமே விமர்சிக்கிறோம். அது ஏன் பலருக்கு வெறுப்பை உண்டாக்கி வேறு திசையில் கொண்டு போகிறார்கள்? விடுதலைப்புலிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து பாற்சோறு உண்டு, வெடி கொழுத்தி கொண்டாடி, அந்த வெற்றியை நாடளாவிய ரீதியில் பெரிய அளவில் கொண்டாட முனைப்புகள் செய்யும் போது மழை கொட்டிதீர்த்து தென்பகுதி வெள்ளத்தில் மிதந்தபோது, தம் அழிவிலிருந்து மீண்டெழாத தருணத்திலும் அந்த மக்களுக்கு உணவுகளை திரட்டி வாகனகளில் அனுப்பி வைத்தவர்கள் நாம். மணலாற்றில் போர்முனையில் இறந்த போராளிகளின் உடல்களை அவமானப்படுத்தி மகிழ்ந்து வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியவர்கள் யார்? தங்கள் மாவீரரின் புகழுடலுக்கு தாம் இறுதி மரியாதை செய்வது போல், இறந்த இராணுவ வீரரும் இராணுவ இறுதி மரியாதைக்குரியவர்களே என எண்ணி, அவர்களுக்குரிய உடை அணிவித்து, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்தபோது, அவர்களின் உடலை வாங்க மறுத்து அந்த இடத்திலேயே கொழுத்தி அவமரியாதை செய்தவர்கள் யார்? அதன்பின் விடுதலைப்புலிகள் இறந்த இராணுவத்தினரின் உடலை தகனம் செய்து சாம்பலை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஏதோ நாங்கள் நாகரிகம் அற்றவர்கள் என பாடம் நடத்துபவர்கள், நடந்த உண்மை தெரியாமல் பகட்டுக்கு எழுதித்தள்ளுகிறார்கள்.
  14. புடின் தேர்தலில் தோல்வியுற்றால், அவரின் நிலை என்னாகும்? யாரின் நிலையோடு ஒப்பிடலாம் அவரை? கிட்லர்.....? முசோலினி....? எதற்கும் ஒரு முடிவுண்டு. அது அவரின் அழிவோடுதான் தொடங்கும். இருபது ஆண்டுகளாக உலக மக்களின் மன அமைதியை அழித்து ரசித்தது போதாதா இவருக்கு?
  15. ஹி... ஹி..... சிரிப்பு சிரிப்பாய் வருகுது. அழிக்க முடியாது என்று உலகநாடுகளால் சொல்லப்பட்ட, நம்பப்பட்ட விடுதலைப்புலிகளை அழித்த, சிறந்த, வீரம் மிகுந்த இலங்கை இராணுவப்படையால் இந்திய மீனவர்களை கண்காணிக்க, நாட்டுக்குள் கடத்தப்படும் போதைப்பொருளை தடுக்க முடியவில்லை, புலிகளை அழிக்க தோள்கொடுத்தவர்களின் வருகை தேவைப்பட்டிருக்கு என்று சொல்லுங்கோ இதுகளை கண்காணிக்க.
  16. ம்....பிச்சைக்காரனுக்கு தெரிவும் இல்லை, தடுப்பும் இல்லை, வெக்கமும் இல்ல. யார் போட்டாலும் தட்டு நிறைஞ்சா போதும் இப்போ. தட்டோட எடுத்துக் கொண்டு போகும் போதுதான் புரியும், அப்போதும் தட்டிக்கேட்க முடியாது, தமிழரை துணைக்கு கூப்பிடுவார்கள் தம்மைக் காத்துக்கொள்ள.
  17. எமது இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம். இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......
  18. ரொம்ப தலை குனிவாக இருந்திருக்கும், அது நமது தாயகத்தையும் பாதித்திருக்கும். தமிழர் மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதும் நண்பர்களைப்போல் உரையாடுவதும் கண்காணிப்பதுவும் அவசியம்.
  19. அரசியல்வாதிகளே கஞ்சா கடத்துவதும், அதை ஊக்குவிப்பதும், வளர்க்க சட்டம் இயற்றுவதும்,போலீசார் அதற்கு கப்பம் பெறுவதுமாக இருந்தால்; எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்
  20. இதெல்லாம் இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கெதிராக காலகாலமாய் சர்வசாதாரணமாக நடந்த சம்பவங்கள் தான், கனடாவில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். அதாவது, உயிர் பிழைத்தவர் காருண்யமானவர், அன்பானவர், சம்பந்தப்பட்டவருக்கு உதவும் நோக்கிலேயே அவரை அழைத்து வந்து தங்க வைத்ததாக செய்திகள் கூறுகின்றன, அதே நேரம் அவரின் மனோநிலையை அங்கிருந்த விக்கிராதிபதிக்கும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை? இங்கு பௌத்த மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடவைக்க முனையும் அவர்களால் வேறு எதை சாதிக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஆறுதல், வழமையாக தமிழர்தான் முன்னுக்கு ஓடிச்சென்று உதவி செய்து தாக்குபடுபவர்கள், இந்த முறை தப்பிக்கொண்டனர். அந்தப்பையன் இங்கிருந்திருந்தால் நம்மினத்துக்கு ஒரு சவாலாக இருந்திருக்க கூடும்.
  21. தேநீர், சிற்றுண்டி தூக்கப்போய், தாக்குதலில் இருந்து தப்பித்தவர் தாடியராய் இருப்பாரோ.....? இல்ல.... எதுக்கு சொல்லுறேனென்றால், எங்க போனாலும் அவருக்கு ஒரு அதிஷ்டம் இருக்கு, தான் உயிர் தப்ப மட்டுமல்ல, இளைஞர்களின் உயிரையும் பறிக்க. இன்றுவரையும் அது இருக்கு, இனிமேல் இருக்குமென்று சொல்ல முடியாது. இவரது அதிஷ்டம் இன்னொருவருக்கு கைமாறும்போது, அது இவருக்கு எதிராகவும் திரும்பலாம்....
  22. இலங்கையில் நீதி நிலைத்து இருந்தால்; இவர் எப்பவோ கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பார். வடக்கும் கிழக்கும் இணைந்து அமைதியாய் இருந்திருக்கும், நாங்களும் இங்கே சமத்துவம் அடைந்திருப்போம், சர்வதேசத்தை நாடிப்போக வேண்டிய தேவை வந்திருக்காது என்பதை உணரத் தெரியாத மனிதர். "எங்கே கல்லெறி பட்டாலும், காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடித்திரியுமாம்." பழமொழியைச் சொன்னேன் நான்.
  23. பாவம் அவர்கள்! அவர்களை குறை கூறாதீர்கள், அவர்களால் நடந்த அவலங்களை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ முடியவில்லை. அறிக்கை விட்டாவது தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும்.
  24. தனது நலனுக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக, குற்றமேதும் செய்யாத தமிழரை ராஜீவ் காந்தியின் கொலையுடன் பயன்படுத்திக்கொல்கிறது இந்தியா. இது தொடரும் .......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.