Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. தனது நலனுக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக, குற்றமேதும் செய்யாத தமிழரை ராஜீவ் காந்தியின் கொலையுடன் பயன்படுத்திக்கொல்கிறது இந்தியா. இது தொடரும் .......
  2. முப்பத்தியிரண்டு ஆண்டுகளின் பின் கிடைத்த விடுதலையை, சிறை வாசத்தை இன்னொரு சிறப்பு முகாமில் கழித்து தன் வாழ்நாள் இறுதி ஆசை நிறைவேறாமலே இந்த உலகை அயல் மண்ணில், உறவுகளற்ற நிலையில் வாழ்ந்து முடித்துவிட்டார் சாந்தன். தமக்கு விடுதலை கிடைக்காதா, உறவுகளை பார்க்க மாட்டோமாஎனும் ஏக்கத்தோடு காத்து இருப்பவர்களையாவது தங்கள் சொந்த மண்ணில் சொந்த உறவுகளோடு இருக்கும் சொற்ப காலத்தையாவது கழிக்க தமிழக அரசியல்வாதிகள், உறவுகள் முன்வரவேண்டும்.
  3. ஹி.... ஹி.....ஹி .....சாத்தான் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள், சொல்வது சாத்தான் தானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள்.
  4. நீங்கள் அவருக்கு செய்த சேவையிலும், பரிவிலும் அவர் யேசுவைக்கண்டிருக்கலாம் அல்லது உங்கள் வடிவில் ஏசுவே வந்திருக்கலாம். இருந்தாலும் இந்த வார்த்தை உங்களை ஏசுவைபோல் வாழ உறுதி எடுக்க வைத்திருக்கும். இயேசுவின் நிறம் அழகு எல்லாம்: நாம் நம்மை அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய்வதே!
  5. சிங்களமே ஒரு கட்டத்தில் களைத்துப்போய் எமது உரிமைகளை தந்தாலும் அதை தட்டிப்பறிக்கும் சகுனி இந்தியாவும், அவர்களிடமே பெற்ற உரிமைகளை திருப்பிக்கொடுத்து விசுவாசம் காட்டி இந்தியாவுக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் வக்கற்ற தலைமைகளையும் கொண்ட நாம் அதிகாரம் என்றெல்லாம் கனவு காணக்கூடாது என்பதே எனது எண்ணம்.
  6. சாந்தனின் மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.
  7. இனம் எனும் விருட்ஷத்தை இலகுவாக அழித்து விட முடியாது, அப்படி வெளிக்கிட்டால் பல இழப்புகள், ஆபத்துகள் ஏற்படும். அதன் கிளைகளை, வேர்களை முதலில் அழித்து மரத்தை தனிமைப்படுத்தினால் அது தானாகவே பட்டு வீழ்ந்துவிடும். எதிரி இவ்வளவு பலத்தோடும் வீரத்தோடும் எம்மை விழுத்துகிறான் என்றால்; அது அவனின் சமயோசிதம் எமது விலைபோகும் தன்மையும், விலகிப்போகும், அமைதிகாக்கும் தன்மையும் காரணம். யாழில் மத, சமூக விழாக்களுக்கு கண்டி நடனம், நம்மளால அவர்கள் விழாக்களில் இடங்களில் பரதநாட்டியம் ஆடமுடியுமா, விடுவார்களா? நமது பூர்வீக தனியார் நிலங்களில் விகாரைகள் கேட்பாரின்றி எழுகின்றன, சைவ ஆலயங்கள் கேட்பாரின்றி முற்றுகை இடப்படுகின்றன, உடைத்தெறியப்படுகின்றன தடுக்க முடிந்ததா நம்மால்? பிறரால் நம்மவர் மதம் மாற்றப்படுகிறார்கள் என்று குறை கூறும் நாம், மற்றவர்களை மதம் மாற்றவேண்டாம், நம்மவர் மதம் மாறாமல் தடுக்க முயலலாமல்லவா? எமது கொள்கையில் உறுதியாய் ஒற்றுமையாய் நிற்கலாமல்லவா? முடியுமா நம்மால்? நாம் எமது தலைவர்களை எமது சார்பாக அனுப்பிவைத்தால், அவர்கள் தங்கள் சொந்த நலன்களை பெற்றுக்கொள்வதோடு திருப்தியடைந்து விடுகிறார்கள். தாங்களும் செய்வதில்லை செய்பவர்களையும் விடுவதில்லை, தடைக்கற்களாக செயற்படுகிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டு அனுமதி பெற முடியுதென்றால், ஏன் அதை தமிழாக கேட்க முயற்சிக்கக்கூடாது? ஆங்கிலமாக கேட்டால் என்ன சிங்களமாக கேட்டால் என்ன அவர்கள் தானே பயனடைகிறார்கள், அதனடிப்படையில் ஆக்கிரமிக்கிறார்கள். இதற்குத்தானா இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைக்கிறார்கள்?
  8. ம் .... ஏமாற்று, கடத்தல், கொலை, கொள்ளை செய்பவரெல்லாம் ஜனாதிபதிக்கு பக்கத்தில் அமைச்சர் பதவி. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை. உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வக்கத்த நீதித்துறை. இவர்களை அழைத்து பக்கத்தில் வைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர்களின் யோக்கியதை என்னவென்று இதிலிருந்து தெரிகிறது. இதில, இவர்வேற மன்னித்து புனிதராகி விட்டாராம்.
  9. சில ரசிகர்களின், தொண்டர்களின் கேள்வியும், வருத்தமும், கோபமும் இதுவே. விஜயகாந்த் நோயுற்றிருக்கும்போதும் வடிவேலு அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவிக்கவில்லை, அவர் இறந்த போதும் காணொளியிலோ பத்திரிகை வாயிலாகவோ இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்பதே. அது வடிவேலுவுக்கும் வடிவாக தெரியும் அதனாலேயே தவிர்த்துக்கொண்டார். வடிவேலுவை எல்லோரும் ரசிக்க வேண்டும், எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது பேச்சு தெளிவாக விளக்குகிறது. விஜயகாந்தின் வாழ்வு துதிப்பதற்கு உரியதென மக்கள் காண்பித்துள்ளனர்.
  10. வடிவேலுவின் பெருந்தன்மை பேச்சு, உண்மை முகம், கொஞ்சம் கூட சபை நாகரிகம் இல்லாமல் அரசியல் மேடையை நகைச்சுவை மேடையாக பாவித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். நாளைக்கு நமக்கும் இதுதான் என்று உணராதவர்களும், தான் வெளியே தனித்து நிற்பேன் என்று அப்போ உணராத வடிவேலுவும். நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலுங் கூட மிதிக்கும் என்பார்கள். ஆனால் வடிவேலுவை பற்றி விஜய காந்த் பேசியதாக எங்கேயும் காண்பிக்கப்படவில்லை. பல தடவை விஜயகாந்த் சொல்லியதை கேட்டிருக்கிறேன், "என்னைப்பற்றி யார் எது வேண்டுமானாலும் பேசினால் பேசிற்று போகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், நான் செய்ய வேண்டியதை செய்து போட்டுபோவேன்." என்பார். சொன்னார், செய்தார். அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கடைசியில் நிரூபித்தார்கள், மக்களின் மனதை வென்றார். கள்ள வோட்டு வாங்காதவர்.
  11. என்னது.... வடக்கிற்கு பதின்மூன்றாம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டு விட்டதா? எப்போ? அதை நமக்கு சொல்லவேயில்லை நம்ம அரசியல்வாதிங்க. ஐயாவுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் வீற்றிருப்பவர்களை பார்த்த பின்புமா உங்களுக்கு அந்த சந்தேகம்?
  12. என்னது கந்தையருக்கு வந்த சோதனை? என்னைக்கேட்டால்; பேசாமல் வீட்டுகார அம்மாவையும் உங்கள் வேலையில் சேர்த்து விடுங்கள். சந்தோசமாக வேலையும் செய்யலாம், மனமும் அலையாது, நித்திரையும் கொள்ளலாம், பிரச்சனையும் அண்டாது என்றுதான் சொல்வேன். ஏன் ஆலோசனை கேட்டோம் என்று இருக்கா? எதற்கும் கோசானையும் அழைத்து கேட்டால், உங்களுக்கு தகுந்த ஆலோசனை அருள்வார் என்று நினைக்கிறன். எங்கே ஆளை காணேலை? விஷயம் கேள்விப்பட்டால், ஆள் குஷியாகி விடுவாரே! கந்தையருக்கு இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன். எதற்காம்.....?
  13. எதை ஏற்க மாட்டீர்கள்? பென்ஷனையா, வயோதிபத்தையா? சாமியாருக்கு அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. களத்தில விடலையள் கூடிப்போச்சு.
  14. ஊரடங்குச் சட்டம் போட்டால், சனம் கூடாது, மக்கள் வரவேற்பு என கைக்கூலிகள் படமும் போடேலாது, மாத்தையா யாரோடு கலந்துரையாடுவதாம்? என்ன இருந்தாலும், அவரின் கைக்கூலிகளுக்கு காட்சி கொடுத்து அவர்களை பிரபல்யப்படுத்த வருகிறார், இதற்கு கலந்துரையாடல் என்கிற விளம்பரம். இங்கு மக்களுக்கு என்ன இருக்கிறது கலந்துரையாட? கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, மேலதிகமாக வெறும் வாக்குறுதி அளிக்கப்படும்.
  15. வயோதிபர் என்றால் எத்தனை வயதுடையோர், என்று தாங்கள் சொன்னால் போச்சு, ஒவ்வொருத்தர் வெவ்வேறாக கருதுவர். மரணத்துக்கு: வயது வித்தியாசமில்லை, காரணம் தேவையுமில்லை.
  16. சரியாய் சொல்லுறவர்களுக்கு என்ன பரிசு என்று அறிவிக்க மறந்துட்டியளே.... புரட்சித்தலைவி, அம்மா!
  17. குறிப்பிட்ட இலக்கத்துக்குரிய போராளிகளை உறவினர், நண்பர் அறிந்திருக்க கூடும். அவ்வாறானவர்கள் யாரும் உயிரோடு இல்லையா அல்லது வெளிப்படுத்த அஞ்சுகின்றனரா?
  18. இதைச்செய்தவர்களும் நிம்மதியாக உறங்குகிறார்கள்தானே! முன்பெல்லாம் எமக்காக குரல் கொடுக்கும் தமிழகம் இப்போ மிகுந்த அமைதி காக்கிறது. எங்களுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.
  19. புதைகுழியில் தோட்டாக்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆகவே இராணுவத்தை குற்றம் சாட்ட முடியாது என்று நழுவிய இராணுவ அதிகாரி ஒருவர், இது மனித எச்சங்கள்தானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் இராணுவ ஊடகப்பேச்சாளர். இப்போ துப்பாக்கி தோட்டாக்கள் வெளிவந்திருக்கின்றன, இது விலங்கின் எச்சமல்ல விடுதலை கேட்டு போராடிய போராளிகளின் உடல்கள் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத்தின் மனித உரிமை மீறல் என பொறுப்பெடுக்குமா இராணுவம்? இதிலிருந்து விளங்குவது என்ன? நீதிமன்றம், புத்திஜீவிகள், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சேர்ந்து அகழ்வுப்பணியை மேற்கொள்கின்றன, உறவுகள் இது தங்களது உறவுகளாக இருக்குமோ என அங்கலாய்க்கின்றன, இவர்களது பேச்சு இவர்களின் பொறுப்பற்ற தன்மையை விளக்குவதோடு கேள்விகளை எழுப்புகின்றன. மனித புதைகுழிக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சம்பந்தப்பட்டவர்கள்? அல்லது அவை விலங்குகளின் புதைகுழிகள் என நிறுவப்பார்க்கிறார்களா இவர்கள்? எப்படி இத்தனை விலங்குகளின் எச்சங்கள் ஒரே புதை குழியில் வந்திருக்கும்? ஏன் அந்தபுதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? கிரிஷாந்தி புதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை புதைத்து சாதித்த அனுபவம் அவர்களை இப்படி எதிர்பார்க்கவும் சாதிக்கவும் வைக்கிறது. இவர்களின் வாயே இவர்களை காட்டிக்கொடுக்கவும் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்கிறது. "மூடர் தம்வாயாலேயே மாட்டுவர்."
  20. சில நாட்களுக்கு முன்பு, ஒரு இராணுவ அதிகாரியிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். துப்பாக்கி ரவைகள் இல்லையாயின் அது இராணுவம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியெனில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் எப்படி யாரால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும்? பெரிய குழிதோண்டும் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட போராளிகள் பொதுமக்களின் உடல்களை இராணுவம் புதைத்ததாகவும், பெரும் நெருப்புச் சுவாலை எழுந்ததாகவும் இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்து வந்த மக்கள் அறிவித்தனர். அப்போ, யாரும் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது மட்டுமல்ல இன்னும் நிறைய துயரங்கள் மண்ணிலே புதையுண்டு வெளிவர துடித்துக்கொண்டிருக்கின்றன.
  21. ஆமா இலங்கையில் சிங்கங்கள் ஆடை உடுத்திக்கொண்டன என மகாவம்ஷம் கூறுகிறது. இவர்கள் கூறும் பதில்களை பாத்து இவர்களின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. வர வர நகைச்சுவையாளர்களாக மாறி வருகிறார்கள்.
  22. இந்தச்சம்பவம் பத்திரிகையில் வெளிவந்தபோது, அந்தகாணெளியும் பத்திரிகையில் வந்தது. ஆனால் உண்மையில் இதோடு சம்பந்தப்பட்டதா என்பது தெரியவில்லை. மரணமடைந்தவர் அவரை தாக்குவதாகவும் தாக்கப்பட்டவர் தற்போது உயிருடன் இருந்தாலோ அல்லது அவரின் உறவினர்களோ தங்களுடன் தொடர்பு கொள்ளுபடி ஒரு செய்தியும் வந்திருந்தது.
  23. தாயின் வயிற்றில் இருந்த பிள்ளையை வயிற்றை கிழித்து எடுத்து கொன்றார்கள் எனும் புனைகதையோடு உலா வரும் சிவப்புதொப்பிக்கு பு ரியும். சிங்களத்துக்கும் நமக்கும் 98% உடன்பாடுள்ளது என எதைக்குறித்து சொன்னார்? மொழியால் ஒன்றுபட்ட இனத்துக்குள் 98%முரண்பாடுள்ளதாம், அந்த முரண்பாடு என்ன என்றும் விளக்கினால் திருத்திக்கொள்வோமில்ல அது உண்மையாக இ இருந்தால்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.