Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இப்படி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும் எண்ணவும் தலைப்படுவோமானால் எல்லாமே நாங்கள் அனுபவித்து பழகியவைதானே என்று நமது இழப்புகள் அழிவுகள் எல்லாம் அடிபட்டுப்போகும், நமக்கு நடந்தவையை பெரிது படுத்த தேவையேயில்லை என்று போய்விடும்.
  2. சிக்கனமாக இருப்பது தவறல்ல, பிச்சையெடுப்பதை, மற்றவரை ஏமாற்றுவதை விட சிக்கனமாக வாழுவது நன்றே. ஆனா ஒரு ஏமாற்றை நிஞாயப்படுத்துவதும் ஏழைகள் இப்படித்தான் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பதுந்தான் சிக்கனத்தை சந்தேகம் கொள்ளச்செய்கிறது.
  3. நீங்களுமா விட்டுபோனீர்கள்? சந்தேகமாக இருக்கிறது! திறைசேரியில் பல அடுக்கு பாதுகாப்போடு இருந்ததையே காணேலையாமே? சொல்லக்கேள்வி! அவர்கள் அம்மணமாய் திரிந்தாலும் உருவுவதை தகுதி பார்த்தே உருவுவார்கள். நம்மைப்பாத்தா ஏதாவது போடுவமா என்று யோசிப்பார்கள் அல்லது விலகிப்போவார்கள். அப்படி ஒரு செற்றப் நம்மளது. விமானத்திலேயே அதிக பொதிகளை எப்படி குறைந்த கட்டணத்தில் தள்ளுவது என யோசனை பண்ணி பொதி செய்து பயணம் செய்பவர்களல்லவா நாம்! இதில அவர்கள் என்னத்தை உருவுவது நம்மளிடம்? ஏமாற்றுபவர்களுக்கு தெரியும் யாரை இலகுவாக ஏமாற்றலாமென்பது. அதிலும் அவர்கள் கஸ்ரப்பட விரும்புவதில்லை.
  4. அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார். கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.
  5. அடே... நம்நாட்டில் அப்படி ஒன்று இருக்கா? மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென. இப்போ வெளிநாட்டு இங்கையர். இப்போ விமானநிலையத்திலேயே வரவேற்பு அவர்களுக்கு! வெளிநாட்டினர் தங்கலாம், வேண்டியதெல்லாம் செய்யலாம் இலங்கையில் ஆனால் தமிழர் மட்டும் விரட்டப்படவேண்டியவர்கள். நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும் தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்! நீங்கள் இலங்கையில் இருந்து இதை எழுதியிருந்தால் அதற்கு வரவேற்பு அதிகமாக இருந்திருக்கும். டும்... டும்.... தேர்தல் வரப்போகுது, ஐயா பலாலிக்கு ராணுவத்தோட போட்டு வந்திட்டார். அதுதான் சரியான திசை, அவரோடு பயணியுங்கள், பிடுங்கினதெல்லாம் திரும்ப பறிச்சிடுவார். காலத்துக்கு காலம் அரங்கம், நாடகம், வசனம், மாறவேண்டாமோ? எத்தனை வருடங்களாக உறவுகளை தொலைத்தவர்கள் தெருவிலே அலைகிறார்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கமுடியவில்லை அவர்களை சந்திக்க திராணியில்லை, இராணுவத்தினரோடு பவனி, யாரை ஏமாற்றுகிறார் தன்னையா?
  6. சும்மா.... சாரை குஷிப்படுத்துவோம் என்றால்; உங்களுக்கேன் இவ்வளவு பொறாமை? இப்படி ஏற்றி விட்டு, அடுத்தமுறை மிளகாய்தூளுக்கு சொல்லி பாருங்கள்... எவ்வளவு என்கிற கேள்வியே இல்லாமலே சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து தருவார். உங்களுக்கும் குஷி வரும்!
  7. நீங்கள் எல்லோரும், வருடத்தில் ஒருநாள் விழுந்தடித்துக்கொண்டு வாழ்த்துவீர்கள், மிகுதி நாட்களெல்லாம் அதை எப்படி சீர்குலைப்பது என்று திட்டமிட்டு செயற்படுவீர்கள். அதனாலேயே நாட்டில் உறவும் ஒற்றுமையும் அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துவோரின் மனம், செயல் உண்மையாயின் அவர்கள் கொடுக்கும் வாழ்த்தும் நிகழும். அழிவையும் வீழ்ச்சியையும் சிந்தித்துக்கொண்டு வாழ்த்தும் சம்பிரதாய வாழ்த்து ஒரு வாழ்த்தா? அது வாழ்த்துவோரின் இதயத்திலிருந்து வரவேண்டும் அது நிலைக்கும்!
  8. குறைக்கப்படும் படையினரை எங்கே கட்டி வைத்து எப்படி சாப்பாடு போடப்போகிறார்கள்? ஏற்கெனவே சட்டம் ஒழுங்கை மீறிய கும்பலாச்சே!
  9. அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்! இத்தனை காலமாக இங்கு நின்று களமாடும், கொழுத்தாடும் எனக்கு, யாரோடு எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். நீங்கள் பகிடிக்குத்தான் எழுதினீர்கள் என்பது தெரிந்தும், நான் பொதுவாக எச்சரிக்கையாகவே எழுதினேன். இங்கு நானும் நீங்களும் மாத்திரம் உரையாடுவதுமில்லை, வாசிப்பதுமில்லை. பொருத்தமானவர்கள் பொருத்தமான கருத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பொருமுறை எதேச்சையாக எழுதிய கருத்துக்கு நான் தன்னை உளவு பார்ப்பதாக கள உறவொன்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாற்தான் அப்படி எழுதி, குறிப்பிட்டவர்கள் என்னோடு தொடர்பாடலை தவிர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டேன். நன்றி!
  10. பெரும்பாலும் கள்ளக்காதலன் புலம்பெயர்ஸிலிருந்து வந்து கொலை செய்திருப்பாரோ?
  11. தமிழரை இரண்டுபடுத்தி, அடிபட விட்டு தம் காரியம் சாதித்தவர்களுக்கு இதுகூட தெரியாதா என்ன ......? ஒரு சிங்கள அரசியல்வாதியை ஜனாதிபதியாக்க அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாளிகளாக்குவார்கள். ஆனால் தாம் ஒரு ஜனாதிபதியை உருவாக்கவோ உருவாகவோ விரும்ப மாட்டார்கள்! இவர்கள் யாரும் தமிழ்த் தலைவர்களை பேச்சுக்கு அழைத்ததாக கூட செய்திகள் ஏதுமில்லை, போன சுமந்திரனையும் அழையா விருந்தாளியென விமர்சித்திருக்கிறார் ஒருவர். சுமந்திரன் எதுக்காக அங்கு போனார் என்பது வேறு விடையம். அவர் அவ்வாறுதான் யாருக்கும் தெரியாமல், தெரிவிக்காமல் போவதும் சந்திப்பதுவும் வழமை என்பதுகூட தெரியாத ஒரு பேச்சாளர் போலுள்ளது.
  12. அட தெய்வமே! நீங்கள் இன்னுமா நிக்கிறீர்கள்? ம்ம்..... சும்மாவே சாத்தான் எத்தனை பக்கங்கள் எழுதுகிறார், எத்தனை பேர் பச்சை குத்துகிறார்கள்? என்று என்னை பின்தொடர்வது தாங்கள், அதில் என்னை கொழுவி வலிய இழுப்பது. களத்தில் நாங்கள் அறிமுகமானோம், அங்கேயே உரையாடலும் உறவும் கொள்ளுப்பாடும் அதோடு முடிந்துவிடும். அதை வெளியில் கொண்டு போவது, தேடுவது எனது குணமல்ல. இதை நீங்கள் நம்பலாம். இல்லையேல் என்னோடு உரையாடுவதை தவிர்க்கலாம். முப்பத்தாறு டொலர்கள் இலங்கை மதிப்பில் எத்தனை ரூபாய்கள்? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன், வேறு ஒன்றுமில்லை ... நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!
  13. இவர் சொல்லும் கருத்தை அவர் மாறி சொல்லிவிட்டார். அது சரி.... இது என்ன புதுவிதமாக பவ்வியமான கருத்து இவரிடமிருந்து? எலி காரணமில்லாமல் சும்மா அம்மணமாக ஓடாதே.... செய்தி தயாரிப்பாளரை மாற்றி விட்டாரோ?
  14. "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.
  15. மக்களை ஏமாற்றி வாயால் செய்யும் அரசியல் இனிவருங்காலத்தில் கைகொடுக்காது, கைகொடுக்க மகிந்த கோஸ்ட்டியும் இனிமேல் இல்லை. அவர்களுக்கே இது வாழ்வா சாவா போராட்டம். அப்பவும் பாருங்கள்.... தேர்தலின் பின் ஓய்வு என்கிறார், வாய்த்தால் ஓய்வு இல்லாமல் உழைப்பார். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம் எல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற ஏலாது. எதுக்கும் ஒரு முடிவு உண்டு .இவர் மக்களை ஏமாற்றி காலத்தை கழித்தவர்.
  16. ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்? அங்கே, வார இறுதியில் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான் நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை...... எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே? அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ? சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி. எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....
  17. மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு! காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய முடியும். ஐயா சிறியர்! விரைவாக வந்து பக்கத்தை நிறைவு செய்து விடுங்கள். இதுக்கு மேலேயும் தாக்குப்பிடிக்க முடியாது என்னால்.
  18. இப்போ நகரங்களில் உள்ள பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும், காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம். இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வறுமை என்னோட கூடப்பிறந்தது. மறக்க வழியேயில்லை ......
  19. ஏன் சிறியர்.... மூக்கு வேர்க்கிறது என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். கண் வேர்க்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுவியர் ஏதோ, யாருக்கோ பயத்தில உளறுகிற மாதிரி இருக்கு. பாவம் நீங்கள்! ஆளைப்புரியாமல் கருத்தை விட்டிட்டியள். உங்களின் வெள்ளாந்தி மனம் புரியுது. இனி, கருத்து இணைக்கும் ஆளைப்பாத்து, பதிவிடுங்கோ!
  20. ம் .... நானும் பாத்தேன். வயது போனால் எதுக்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேணும்? அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்திருக்கலாமே? அது தானே வயது போவதை குறிக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். விதைத்ததை அறுக்காமல் மண்ணுக்குள்ள போக விடக்கூடாது இவரை. நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். பக்கங்கள் நீழுவதால், வசியின் நெஞ்சு பக்கு........ பக்கு..... என அடிப்பது எனக்கு கேட்கிறது!
  21. வாசகர்களை ஏமாற்றக்கூடாதேயென்று நாங்கள் கண்விழித்து எழுதிக்கொண்டிருக்கிறோம், எங்கள் தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
  22. சிறியர்! இந்த தலைப்பை பார்த்ததும் ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.முந்தா நாள் ஒரு செய்தி வந்தது. இந்த வார்த்தையை முன்பு சொல்லி அனுப்பிய புள்ளி ஒன்று அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி ஒன்று வந்தது. தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாராம் ஆனால் மக்கள் ஆணை கொடுக்க வில்லையாம், அதனால் விலக இருக்கிறாராம். விலக இருப்பவர் ஏன் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்? சட்டுப்புட்டென்று விலக வேண்டியானே. என்னடா.... எனக்கு வாக்களித்தால் தமிழருக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்று கண்ட இடமெல்லாம் புலம்புகிறவர் என்று யோசித்தேன், கருணாநிதி மாதிரி நான் தேர்தலில் பங்கெடுப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி மக்களிடம் அனுதாப வாக்கு சேகரிக்கிற தந்திரம் என்று பிறகு வந்து பாத்தா விளங்கிச்சு. அந்த செய்தி வாபசோ தெரியவில்லை, செய்தியை காண முடியவில்லை. நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும் போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது.
  23. முயலுக்கு கொம்பு முளைக்கும் என்கிறார் இவர். இருப்பது, நாட்டில் சிங்களமே பிரதானமானது என சட்டம் கொண்டுவந்த கட்சியில். தனது கட்சிக்காரரிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர், நாட்டிலே மாற்றத்தை ஏற்படுத்தப் போறாராம். எவ்வளவோ விட்டுக்கொடுப்புகள், தோள் கொடுப்புகள் கொடுத்தும் நம்மை இனமாக இந்நாட்டின் குடிகளாக ஏற்றுக்கொள்ளாமல், விரட்டி நம் இடங்களை அபகரித்து வைத்திருப்பவர்களை நாங்கள் அணைக்க வேண்டுமாம். அந்நிய நாடுகள் முதலிடலாம், வாழலாம் ஆனால் நாம் நம் பூர்வீக இடங்களில் வாழக்கூடாது நம் வழிபாட்டிடங்களில் வழிபடக்கூடாது என்று அடம் பிடிக்கும் பிக்குகளுக்கு தர்மத்தை படிப்பிக்கட்டும் பாப்போம். இவர் ஒரு புத்தர் தமிழருக்கு பாடம் எடுக்க வந்துவிடுவார்கள். தேர்தல் காலத்தில் வடக்கில் சுதந்திர கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நல்ல ஒரு ஆள் கிடைத்திருக்கிறது.
  24. மிகச்சரியான கருத்து! குரைக்கிறதுக்கு கல் எறிஞ்சால், இதுதான் நடக்கும். குரைக்க விட்டால், நமக்கு பல அனுகூலங்கள் உண்டு. புலிகள் முறியடிக்கப்பட்ட போது விழா கொண்டாடிய ஒரு பெண் பின்னாளில் அதற்காக வருத்தம் தெருவித்திருந்தாள். விடுங்கள்.... ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் கொண்டு செல்ல முடியாது. அவர்களது இயலாமை, பொறாமையின் விளைவு அது. அதுமட்டுந்தான் அவர்களால் முடிந்தது. சலுகைகளுக்கும் சில்லறைகளுக்கும் விலை போவோரின் செயலது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.