Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இராணுவத்தினர் தங்கள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்கிற செய்தி அறிந்தவுடன் உடுத்த உடையுடன் மாற்றுத்துணி கூட எடுக்காமல் மக்கள் ஏன் தப்பி ஓடினார்கள்? அவர்கள் கையில் தாம் அகப்பட்டு விடக்கூடாதே என்கிற பயத்தில். அவ்வாறு ஓடாமல் இருந்தவர்களுக்கும் தமது வீட்டை பார்ப்பதற்கு, பாத்திரங்களை எடுத்து வருவதற்கு சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், கடலில் மீன் பிடிக்க சென்ற வீட்டு தலைவனை சுட்டுக்கொன்ற சம்பவங்களும் ஏராளம். வன்னியில் இத்தனை லட்ஷம் மக்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? ஒவ்வொரு இடமாக சுற்றி வளைத்து, மனித குலத்திற்கு எதிரான போர் ஆயுதங்களை பயன்படுத்தி குண்டுபோட்டு தாக்கியழித்ததால் மக்கள் அவர்கள் முன்னேறும் பிரதேசங்களை விட்டு வெளியேறினர், அவர்களை புலிகள் அழைத்துச் செல்லவில்லை. தலைநகருக்கு கிளாலிவழியாக சென்ற மக்களை கடலில் அழித்தது யார்? நவாலி தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மேல் எதற்காக குண்டு போட்டார்கள்? புலிகள் தடுத்ததாலா? தமது மரணத்தை கழுத்திலே சுமந்தவர்கள் அவர்கள். மக்களை பலிகொடுத்து அவர்கள் வாழவில்லை. சரணடைந்த புலிகளும் மக்களும் கொல்லப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் கூட்டிச்சேர்த்த மக்கள், போராளிகள் எல்லோரையும் கொன்று குவித்து, மக்களை புலிகள் கொன்று விட்டார்கள் நாங்கள் புலிகளை அழித்தோம் என்று அறிக்கை விட்டு எல்லோரிடமும் பாராட்டு பெறவே சிங்களம் விரும்பியது, அதற்காகவே தொண்டு நிறுவங்களை பலாத்காரமாக வெளியேற்றியது உண்மை வெளியே வராமல் இருப்பதற்காக, அங்கிருந்த மக்களின் தொகையை குறைத்துக்கூறியது, மக்களை மீட்கப் போர் செய்தவர்கள் அந்த மக்களுக்கான எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை, இறுதி நேரத்தில் தொண்டு நிறுவனங்களை செல்ல அனுமதியளித்து நல்ல பிள்ளை ஆகிக்கொண்டது. பெற்றோரால் கையளிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, விசாரணை செய்து போட்டு விடுகிறோம் என்று அழைத்துச் சென்ற புலிகளுக்கு, கூடச்சென்ற பாதிரியாருக்கு என்ன நடந்தது? சொல்லும் பதில்: அவர்களை புலிகள் கொன்று விட்டார்கள், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள். ஆதாரம் இருக்கிறதா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றதற்கு? முள்ளிவாய்க்காலில் எல்லாமே மௌனிக்கப்பட்டபின்பு உலங்கு வானூர்தியில் அந்த பிரதேசத்தை பார்வையிட்டமுன்னாள் ஐ. நா. செயலாளர் பான் கி மூன் தெரிவித்தது. பல அடி உயரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததை அவதானித்ததாக. அதை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? இதுதான் சிங்களம்! கடைசியில் அரசு, சர்வதேசம் சொல்வதை இந்தியா உட்பட காது கொடுத்து கேட்கவுமில்லை, மதிப்பளிக்கவுமில்லை. அதை அவர்கள் பலதடவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். புலிகள் ஆற்றியது தங்களின் தார்மீக கடமையையும், நம்பியது சர்வதேசத்தின் நடுவுநிலையையும், தங்கள் போராட்டத்தின் நிஞாயத்தை சர்வதேசம் புரிந்து உதவி செய்யுமென்றும். எல்லாம் முடிந்து அவர்களும் மடிந்து விட்டார்கள். அவர்களாலேயே இலங்கையில் நடந்த அடக்கு முறைகள் வெளிவந்திருக்கிறது. அவர்கள் போராடாமல் இருந்திருந்தாலும் எம் இனம் மௌனமாக அழிந்திருக்கும். இவர்களின் போராட்டத்தினால் காலம் தாழ்த்தியிருக்கிறது, வெளிஉலகிற்கு தெரிந்திருக்கிறது. எய்தவன் இருக்க அம்பை நோகும் உங்களை சொல்லிப்பயனில்லை, உங்களுக்கு எங்கள் வலியும் இழப்பும் தெரியப்போவதுமில்லை. யூட், கற்பகம் உட்பட. நீங்கள் விரும்பியபடி எழுதி மகிழுங்கள். சம்பந்தரின் இழப்பை விட, கில்மிசாவின் இசையும் காளியாட்டமுமே மக்களுக்கு முக்கியம் என்பதே இங்கு ஒப்பீடு.
  2. அவருக்குத்தான் எத்தனை சோலி, பாவம் அவர். நேற்றுத்தான் ஆளுநர் காரியாலயத்துக்கு முன்னால் கல்வி பணிப்பாளருக்கு எதிராக கோஷம் போட்டவர், நாளைக்கு ஆளுநருக்கு எதிராக ருத்திரத்தாண்டவம் ஆடப்போறார். ஆளுநர் சாள்ஸ்தான் சச்சியரின் கண்ணில் தெரிவார்.
  3. கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் வேளைகளில் மஹிந்த மாத்தையா சொன்னவை, "நீங்கள் போரில் இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாவற்றயும் திருப்பி தந்துவிடுகிறேன்." என்று உறுதி கூறினார். மக்கள் ஆதரித்தனரா அவரை? தேர்தல் முடிந்த பின்னர் சொன்னார், வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தினேன், காப்பற்தெருக்களை அமைத்தேன், அதை செய்தேன், இதை செய்தேன் ஆனால் தமிழ் மக்களின் மனதை என்னால் வெல்ல முடியவில்லை, காரணம் அவர்களின் தலைவனை நான் அழித்தேன்." என்பதே. மாவீரர் மாதம் பிறந்தாலே அத்தனை தடைகளையுந்தாண்டி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தம் வீர புருஷர்களுக்கு வணக்கம் செலுத்த முண்டியடிக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன? எத்தனை போக்கிரித்தனம் செய்தாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் தாரக மந்திரம் என்ன? அன்று தலைவர், அரசியல் பொறுப்பை இவர்களை நம்பி ஒப்படைத்ததால் அதை தோல்வியடையாமல் மக்கள் தாங்கிப்பிடிக்கிறார்கள். இதுதான் மக்களின் கருத்து. யார் என்ன சொன்னாலும் செய்தாலும் மக்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். சிலருக்கு அது புரிவதில்லை அல்லது புரியாததுமாதிரி கதையளப்பர். அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள்.
  4. அதுசரி... யாழ் கல்வி பணிப்பாளருக்கும் சிவசேனை சச்சிக்கும் என்ன கோவம்? அதுக்கு எதுக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்? இவருக்கு கல்வியறிவு இருந்திருந்தால் இப்படி செய்வாரா? நாளைக்கே யாழ் ஆளுநருக்கு எதிராகவும் கோசம் எழுப்புவார். என்னத்தை கனவு காண்கிறாரோ அதுக்கு அடுத்தநாள் வேலையில்லாத சோம்பேறிகளை அழைத்துக்கொண்டு வந்து கூப்பாடு போடுவார். பிக்குகளுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு? இவர்களை கல்லால் எறியாமல் பாயும் படுக்கையும் தேநீரும் கொடுத்து உபசரித்தால் போதும். பதுங்கி புத்துக்குள் இருந்ததெல்லாம் படமெடுத்து ஆட வெளிக்கிட்டுதுகள். தன் மதத்தை பௌத்த சிங்களத்திடம் இருந்து காக்க துப்பில்லை, விகாரையில் விழுந்து கும்பிட்டுக்கொண்டு சிவசேனை அமைப்பாம். சிரிப்பாய்க்கிடக்கு.
  5. ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின் கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள் எங்கிருந்து கோரிக்கை வைத்தார்களோ அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர் சந்தித்து ஆறுதல் சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின் கீழ் மக்களுக்காக அரசியல் செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல் யாசகர்கள் ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும்.
  6. வீம்புக்கு விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஆமா, தாம் உண்டு தம் தொழிலுண்டு என்று இருந்த தமிழரை கொன்று அவர் தம் சொத்துக்களை எரித்து உங்கள் பிரதேசத்துக்கு ஓடுங்கள் என்று கப்பலிலேற்றி சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக விரட்டியவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்துகொண்டு மக்களை ஏற்ற கப்பல் விடுவார்களாம் அதை அவர்கள் அனுமதிக்கவில்லையாம். சாதாரண பொதுமக்களே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் கோயில், வைத்தியசாலைகள் மீது குண்டு பொழிந்தது ஏன்? தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றியது ஏன்? உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு அழித்ததும் ஏன்? போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் தொகையை குறைத்து கணக்கு காட்டியது ஏன்? மீட்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? போரிலே சம்பந்தப்படாத சிறுவர் தங்கியிருந்த செஞ்சோலை மீது குண்டு போட்டு கொன்றதும் அங்கவீனர்களாக்கியதும் ஏன்? வன்னியில் சிக்குண்டவர்கள் தப்பித்துச் செல்லாதவாறும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகு அறியாதவாறு தடுத்ததும் யார்? அந்த மக்களுக்கான உணவு மருந்துகளை மறுத்தது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியது யார் மக்கள் மீது அவ்வளவு அக்கறையிருந்திருந்தால்? ஏன்.... கோத்தபாய கொம்பனி பலதடவை சொல்லியிருக்கிறார்கள், சர்வதேசம் போர்நிறுத்ததை வலியுறுத்தி தம்மை கட்டாயப்படுத்தியும் அதை ஏற்காமல் தாமே போரை நடத்தி புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்றாரே. அப்போ, சர்வதேசம் புலிகளை காப்பாற்றவா போர்நிறுத்தம் கோரியது? போரை உருவாக்கியதே சிங்களந்தான். புலிகள் எங்கிருந்து உருவானார்கள்? ஏன் உருவானார்கள்? அவர்கள் உருவாவதற்கு முன் தமிழ் மக்கள் காயப்படவில்லையா கொல்லப்படவில்லையா? அல்லது வன்னியில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்களா? மக்கள் ஏன் வன்னிக்கு சென்றார்கள்? தங்கள் சொந்த இடங்களை விட்டு, ஏன் மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார்கள் அரசாங்கம் மக்களை காப்பாற்றியிருந்தால்?
  7. சொன்ன வாக்கை நிறைவேற்றாமலேயே ஒரு சரித்திரம் மறைந்துவிட்டது. எத்தனை தாகம் இருந்திருக்கும் அவருக்குள்? இழந்தவை போக மிஞ்சியவையையும் தக்க வைக்க முடியவில்லை, தான் கொண்டுவந்த ஓணானை விரட்டவும் முடியவில்லை, அணைக்கவும் முடியவில்லை. வேறொரு தலைவரை உருவாக்கி தன் வெற்றிடத்தை நிரப்ப முயலவில்லை, தமிழ்த் தேசியம் எனும் குதிரையில் பலதடவை சவாரி செய்து சலித்து சென்றுவிட்டார். போய் அமைதியில் இளைப்பாருங்கள்!
  8. இதுதான் உண்மை! தமிழர் பிரதேசங்களில் சமூக, கலாச்சார சீர்கேடுகளை வளர்த்து பணத்துக்கு சேவை செய்து அவர்களை அடிபட வைத்து வன்மங்களை வளர்த்து வேடிக்கை பார்ப்பதோடு மக்களை பிரிந்து நின்று மோதவிட்டு தங்கள் திட்டங்களை இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். எங்கள் நிலத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என கட்டளை விதிப்பதற்கு இவர்கள் யார்? தங்கள் நாட்டில் சட்டம் நீதித்துறை எல்லாமே கேலிக்குரியதாக இருக்கும்போது, மற்றவர்களுக்கு உபதேசிக்க வரிஞ்சு கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.
  9. ம்ம்.... அவலங்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் சுமந்து ஆறுதல் தேடும் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கப்படவேண்டும் தாங்கள் தங்கள் மண்ணில் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்து தலைவர்களை தேர்ந்தெடுத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து ஏமாந்துள்ளார்கள். அவர்கள் தலைவர்களே தமது எதிரிகளை காப்பாற்றுகிறார்கள். தங்கள் நிலங்களில் நடந்த துயரங்களை எடுத்துச் செல்ல, சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தப்பிரச்சனை பேசப்படுகிறது அரசியல் செய்கிறது. இது வெறும் வாக்கு அரசியலா? அல்லது மாற்றம் ஏதும் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமா?
  10. ம்...... சிறுபான்மை இனத்தை சர்வதேச உதவியுடன் விரட்டி விரட்டி துடிக்க துடிக்க கொல்லும்போது ஒத்தாசை புரிந்து கள்ள மௌனம் சாதித்து ரசித்து விட்டு, இப்போ திடீரென்று சிறுபான்மை மதத்தினர் மீது கரிசனை பிறந்து, கண்டன குரல் எழுப்புவதன் நோக்கமென்ன? ஏதோ பேரம் படியவில்லையோ என நினைக்கத்தோன்றுகிறது. உந்த சலசலப்பிற்கெல்லாம் பிக்குகள் அஞ்சாதுகள்.
  11. அது என்ன தாலிக்கொடியா சங்கிலியா? பெண்களுக்கு அணிவிப்பதை மறந்து தங்களுக்கு அணிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.
  12. உலகமெலாம் அறிந்த உண்மை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஈராக்கில் என்ன செய்தது என்பது. அதற்காக ஜூலியன் அசாஞ்செயை சிறை வைப்பதாலோ அல்லது அவரை நிர்பந்தித்து செய்யாத குற்றத்தை ஒப்புவிக்க வைத்து விடுதலை செய்வதாலோ அமெரிக்கா செய்தவை ஒன்றும் செய்யவில்லை என்றாகாது. அது தொடர்ந்து தனது நலனுக்காக பல நாடுகளை பகடை காயாக பயன்படுத்திக்கொண்டே வருகிறது.
  13. அட..... இது யாருக்கு இந்த உபதேசம்? தங்களைப்பற்றியே திரி ஓடுது என்று தெரியாமல்.
  14. எல்லோருக்கும் வடக்கு கிழக்குத்தான் கண்ணுக்கை குத்துது. தங்களிடம் உள்ளதை பாடுபட்டு பயன்பெறதெரியாது, தமிழன் கஸ்ரப்பட்டு சேர்த்ததை தாம் சுரண்ட வேணும். முற்றுந்துறந்த துறவி பேசுது.
  15. படித்த புத்திஜிவிகளும் மத தலைவர்களும் வடகிழக்கில் இரத்த ஆறு ஓடவேண்டும் சம அந்தஸ்து தமிழருக்கு வழங்கக்கூடாது என்று கூப்பாடு போடும்போது, பாடசாலைகள் இருந்தென்ன விகாரைகள் இருந்தென்ன? இவையெல்லாம் உங்கள் அதிகாரத்தை காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. நல்லிணக்கம் என்பது உங்களைப்போல் மற்றவர்களையும் சமகாக மதித்து ஏற்று வாழ்வதே. சிங்களபாடசாலைகளும் பௌத்த விகாரைகளும் வரலாற்றை திரித்து, இன முரண்பாடுகளை போதித்து வளர்க்கிறது. இதில வடக்கு கிழக்கிலே பாடசாலை வந்தென்னை வராமலென்ன எந்த மாற்றமும் வராது உங்களை திருத்தாவிடில். பௌத்தர் இல்லாத இடத்தில விகாரை, மாணவர் இல்லாத இடத்தில் பாடசாலை என்று அடம்பிடிக்குதுகள். இதுக்குள்ள எங்களுக்கு சிங்களத்தைப்பற்றி பாடம் வேற எடுக்கினம் சிலபேர். இலங்கையில் உள்ள வளங்கள் பெயராலும் துறைகள் பெயராலும் இன்னும் என்னென்ன இருக்குதோ அதுகள் பெயராலும் தமிழர் பூர்வீகங்களை கையகப்படுத்தி வேறு நாடுகளுக்கு தாரை வாருங்கோ.
  16. காணியில் இருந்து அகற்றிய வீடுகளுக்கு என்ன பதில்? இதை வைத்து அரசியல் செய்பவர்கள் அந்த மக்கள் இழந்தவர்களை கணக்கில் எடுப்பார்களா? இருந்தவாறே காணிகளை அளவீடு செய்து எல்லைகளை இட்டுகொடுப்பார்களா அல்லது மக்களை அடிபட விட்டு வேடிக்கை மட்டும் பார்ப்பார்களா?
  17. சிறியர் வேண்டுமென்றே தனது வீட்டில் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என்று சாமியாரை தவிர்த்தாரோ? அல்லது நண்பனைப்பற்றி அறிந்திருக்கிற படியினால் சிறியர் தன்னை மட்டுமே, ஹாஹா... கவனிப்பார், எதற்கு அவருக்கு சிரமம் என்று சாமியாரே ஒதுங்கிக்கொண்டாரோ? "கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடுமாம்." ஆறுமுக நாவலர் பூட்டன் தமிழ் பேசா விட்டார்த்தான் ஆச்சரியம்! ஆறுமுக நாவலரைச்சாட்டி சிறியரோட சொந்தங்கொண்டாட ஆளாளுக்கு கிளம்ப போறார்கள். விழா எல்லாம் முடிந்தது. மகனின் கல்யாணத்தில் ஒன்று சேருவோம். இனி மகனுக்கு பெண் பார் படலத்தில் பிரச்சனை இல்லை சிறியருக்கு. நானும் ஆறுமுகநாவலரைப்பற்றி நிறைய வாசித்து அறிந்து வைத்திருக்கிறேன்.
  18. ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.
  19. பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே.. ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ மூவருக்கும்!
  20. ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!
  21. ராஜதந்திரம்! இவர்களுக்கு வாக்கு அளிக்கும் மக்களை என்ன சொல்வது? "ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரையாம்." இப்ப தேர்தல் வருகிறபடியால் ஒரு முடிவுக்கு வருகினை, இல்லையென்றால் ஒரு முடிவு காணாமல் விட்டிருக்க மாட்டினை.
  22. தேர்தல் காலம் வந்தால் எல்லா அரசியல்வியாதிகளுக்கும் மக்கள் நலனே முக்கியமாக தோன்றும், அதன்பின் வடை கௌவின நரியார்மாதிரி தலை தெறிக்க ஓடுவினம் மக்களை கண்டால். இது அரசியல் வியாதி! அரசியல் இல்லையென்றால் ஏன் சொல்லிக்காட்டவேண்டும், அதுவும் தேர்தல் நேரத்தில்? வாயால வடை சுடுற ஆக்கள் புலம்பி வாக்கு வாங்க கிளம்பி விட்டார்கள். திருவிழா கால பிச்சைக்காரர், திருடர் போல.
  23. என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்? அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
  24. இவர் கடல் வளத்துறை அமைச்சரல்லவா? எப்போ இந்த துறைக்கு மாற்றப்பட்டார், மாறினார் அல்லது தானாகவே எடுத்துக்கொண்டாரோ? தேர்தல் வருகிறது, தமிழ்த் தலைமைகளுக்கு யோசனை கூறுவது, அவர்கள் கேட்க்கும் தீர்வுகளுக்கு தான் உரிமை கோருவது, கட்சி தாவுவது, அது போலவே தனது அமைச்சு பொறுப்புகளை கைவிட்டு வேறு அமைச்சுக்கு தாவுவது. எதிலாவது நிலைத்து, இதுதான் எனது கொள்கை, இவர்தான் என் தலைவன் என்று இருந்திருக்கின்றாரா? இப்பவே சஜித்துக்கு தூது விட்டு அழைப்புக்காக காத்திருப்பார், அதே நேரம் ரணில் புகழும் பாடுவார், மறுநாள் சஜித்தே சிறந்த தலைவர் என்பார். இவரின் வாழ்வே ஒரு நகைச்சுவை தான்போங்கோ. இவர் மட்டுமல்ல இவர் போன்றோர் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், தீர்வுகள் இழுத்தடிக்கப்படுகின்றன, சமுதாயம் சீர்கெடுகின்றது, சட்ட ஒழுக்கம் பாதிப்படைகின்றது, அதிரடியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது அப்பாவிகள் நசுக்கப்படுகின்றனர். பலருக்கு தாங்கள் யார் தங்கள் பொறுப்பு என்ன? எதற்காக தமக்கு சம்பளம் தரப்படுகிறது என்கிற தெளிவே இல்லாமல் கதிரையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொறுப்பு கூற வேண்டிய தருணத்தில் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் படுப்பதும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதுபோல் நமது பிரதேசத்தில் உள்ள திறமையற்ற தங்கள் பொறுப்புக்களின் தாற்பரியம், ஒழுங்கு, கொள்கை, அறிவு இல்லாதவர்கள், தெரியாதவர்கள் ஆளுக்கொரு, நாளுக்கொரு விளக்கமளித்து மக்களை குழப்புவதும் பிரச்சனைகளை உருவாக்குவதும் பதில் கூற பொறுப்பெடுக்க வேண்டிய நேரத்தில் கடமைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மறைந்து விடுகின்றனர். இதற்கு யார் காரணம்? "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.