Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா? அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்! இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து. உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.
  2. தமிழ் மக்களின் வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட கப்பமா, கட்சியை பிரித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனதற்கு கூலியா, தேர்தலின் பின் புதிய கட்சி அமைக்க கொடுக்கப்பட்ட நிதியா இது? அது அபிவிருத்திக்கு தந்த பணம் என்பார்கள் இருவரும்.
  3. கனடாவிலேயே சுமந்திரனை பேச விட முடியவில்லை இவரால், சும்மா தனிப்பட்ட விசுவாசத்தை காட்டுகிறார் அவர்.
  4. என்ன, திடீரென்று சுருதி மாறுது. நாங்கள் எப்பவெல்லாம் இவர்களுக்கு வாக்கு போடுங்கள் என்று சொன்னோமோ, அவர்களுக்கே மக்கள் வாக்களித்தனர், இந்த முறையும் சஜித்துக்கு வாக்களிக்கச் சொல்கிறோம், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார் இவர். மக்களை செம்மறியாட்டுக்கூட்டங்களாக கருதி கருத்து தெரிவிக்கிறார். மக்கள் தெளிந்து விட்டார்கள். நீங்கள் சொன்னதை நம்பி ஏமாந்த மக்கள், இனியும் ஏமாற தயாரில்லை. தமிழரசுக்கட்சி தலைவர் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தோன்றுகிறார். இவரோ, தான் தமிழரசுக்கட்சி என்கிறார். இவர் மட்டும் ஒரு கட்சியா? ஒருவரின் வயலில் அவரின் விளைச்சலை தான் அறுவடை செய்ய வேண்டுமென துடிக்கிறார். எனக்கென்னவோ, ரணிலும் சஜித்தும் சேர்ந்தே இந்த கரட்டி ஓணானை இயக்குகிறார்களோ என்கிற சந்தேகமாயிருக்கிறது. ஒப்புக்கு சும்மா எல்லோருடனும் பேசினேன், இவர்தான் நமக்கு சாதகமான பதிலளித்தார் என்று புலுடா விடுகிறார்.
  5. இவருக்கு வாக்குப்போடவும் முடியாது, இவர் நாட்டிலுமில்லை, பிறகு ஏன் இவர் அரற்றுகிறார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வாக்குபோடும்படி மக்களை கேட்டவர் யார்? எதைபெற்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? சுமந்திரனுக்கு அன்று ரணில் வேண்டும், இன்று சஜித் வேண்டும் என்றால், மக்கள் என்ன அவரின் அடிமைகளா? அப்படி சுமந்திரன் என்ன பெரிய ராஜதந்திரி, செயல் வீரனா அவருக்கு எதிராக மற்றைய கட்சிகள் ஒன்று திரள? ஒன்றாக இருந்த கட்சிகளை வெளியேற்றினார், அதற்கான காரணங்களை முதலில் அவர்களுக்கு தெரியப்படுத்தினரா சுமந்திரன்? கட்சிக்குள் இருந்தவர்களை முரண்டு பிடித்து வெளியேற்றியது யார்? இன்று கட்சி நீதிமன்ற படியேறி இருப்பது யாரால்? தங்கள் மேல் பிழையை வைத்துக்கொண்டு, முந்திக்கொண்டு மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது. இவருக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் இருந்தால் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். சுமந்திரன் மக்களோடு இல்லை, அவர்களுக்கு சேவை செய்யவில்லை, இப்போ சிங்களத்தோடு வந்து அவர்களுக்காக வாக்கு கேட்கிறார். மக்கள் ஏன் அவருக்கு செவி மடுக்க வேண்டும்? மக்களுக்கு பணி செய்யாதவர்கள் அவர்களை வாக்கு போடும்படி கேட்க உரிமையில்லை. வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, பகுத்தறிவுமில்லை. உன் நண்பனைப்பற்றி சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. சுமந்திரன், சஜித்துக்கு வாக்கு கேட்கிறார், கனடாக்காரர் ஏதோ சுமந்திரன் தேர்தலில் நிற்பது போலவும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரளுகின்றனர் என்பது போலவும் கதையளக்கிறார். சுமந்திரன் இது வரையில் எதை செய்து சாதித்து விட்டார்? ஏதோ சிங்களத்துக்கு நாம் வாக்குபோடுவதுபோல் ஆளாளுக்கு துள்ளிக்குதிக்கிறார்கள், சிங்களவனே பேசாமல் இருக்கிறான்.
  6. இதை சுமந்திரனின் அதிபுத்திசாலித்தனம் என்பதா, ராஜதந்திரம் என்பதா? சுமந்திரன் தெற்கில் ஒன்று சொல்வார், வடக்கில் அதற்கு வேறு விளக்கம் கொடுப்பார். கேட்டால்; பத்திரிகைக்காரர் நான் சொன்னதை திரித்து எழுதி விட்டார்கள் என்பார், அல்லது தனது கருத்துக்கு சரியான சொல் சிங்களத்தில் இல்லை, ஆங்கிலத்தில் இல்லை என்று மழுப்புவார். இனி வருங்காலத்தில் சுமந்திரம் எனும் பத்திரிகையில் அவரின் சுத்து மாத்தெல்லாம் சுதந்திரமாய் வெளிவரும். அதை வாசிப்பது சஜித்தாகத்தான் இருக்கும்.
  7. ஈஸ்ரர் குண்டு வெடிக்கும்போது நாட்டை விட்டு வெளியேறி, தனது கைகள் சுத்தம் என்று தனது கைகள் சுத்தம் என்று வாதிட்ட மைத்திரி நினைவுக்கு வருகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்த போது, ஜெனீவா கூட்டத்தொடருக்கு போவதாக முடிவெடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு சுரேஷ் இந்தியாவுக்கு போன தருணத்தில் சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தோடு கூடிக்குலாவி, சுரேஷ் இந்தியாவில் இருக்கும்போதே தாம் ஜெனீவாவுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து அறிவித்த வித்தகர்கள். நல்ல வேளை, ஒராள் இப்போது குறையுது அல்லது அவரும் தன் பங்குக்கு அவிழ்த்து விட்டிருப்பார் புளுகு மூட்டையை.
  8. ஆமா..... ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறுதான் கூவிக்கூவி மக்களின் வாக்கை வாங்கி கொட்டினார், ஏதாவது சொன்னதை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தாரா? இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று என்றாரே, அதுக்கு என்னாயிற்று? ரணில் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் என்றாரே, அது எங்கே போனது? ஏதோ தமிழர் அயல்நாட்டுக்கு வாக்களிப்பதுபோல் துள்ளுகிறார். வாக்கு என்பது அவரவர் உரிமை, அதை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், இவர் யார் அதை தடுப்பது? முதலில் தமிழரசுக்கட்சியை ஒழுங்காக இயங்க விடவேண்டும். இவர் தன்னிச்சினையாக, தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடும்போது இவருக்கெதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று தமிழரசுக்கட்சி இந்தளவுக்கு சிதறுண்டிருக்காது. யோசிக்க தெரியாத ஆள். எழுபத்தைந்து ஆண்டுகளாக சிங்களத்துக்கு வாக்களித்து என்ன கண்டோம்? வாக்கு வாங்கி கதிரை ஏறும்வரை ஒன்று சொல்வார்கள், அதன்பின் வந்தேறு குடிகள், உரிமை ஏதும் கோர முடியாது என்கிறார்கள். சரி... வாக்கு வாங்கி ஏமாற்றியது போதும், இனிமேல் சொன்னதை நிறைவேற்றியபின் வாக்கு வழங்கப்படும் மறு தேர்தலில். எந்த சிங்கள கட்சிக்கு வாக்களித்தாலும் நமக்கு ஏதும் தரப்போவதில்லை என்பது தெரியும், ஆனால் நாம் ஏதோ ஒன்றுக்குத்தான் வாக்களிக்க முடியும் என்பதாலேயே இந்த நாடகம் தொடருது. நாங்கள் ஜனாதிபதியாக வரப்போவதில்லை, ஆனால் இனியும் சிங்களத்துக்கு எங்கள் வாக்கு இல்லை, நாங்களும் ஒரு தேசிய இனம், எங்களுக்கும் உரிமை, வேணவா உண்டு, எமக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை தெளிவு படுத்துவதே இதன் நோக்கம். இது வருங்காலத்திலும் தொடர வேண்டும், இது முதல் நடவடிக்கை!
  9. இந்த மனிதன் ஒரு ஒழுக்கமுள்ள பிக்குவாக இருப்பதைவிட; அடிதடி, மிரட்டல், மோசடி, நீதிமன்ற விசாரணை, சிறை என்று ஓய்வில்லாமல் அலைகிறாரே! இவருக்கு இன்னும் எதற்கு காவி? போதைப்பொருள் விநியோகமும் செய்வார் போலிருக்கே! மத அறிவை போதிப்பதற்கு பதிலாக இனவாத, மதவாத வெறியை ஊட்டியதன் விளைவாக இருக்குமோ?
  10. ஆமா.... இவர்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு மக்கள் கடந்த காலத்தில் கேள்வி கேட்காமல் வாக்களித்தார்கள். காரணம், மக்கள் தமது மண்ணை, தேசத்தை நேசிக்கிறார்கள், அதன் பெயரில் போட்டியிட்ட பச்சோந்திகளை, தலைவர்கள் என நம்பி வாக்களித்தார்கள். ஆனால் தமிழரசு, தமிழ்த்தேசியம் எனும் குதிரையில் ஏறி சவாரி செய்தார்கள். இன்றும் அதேபோல் தொடர்ந்து சவாரி செய்யலாமென சுமந்திரன் கனவு காண்கிறார். அன்று, விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு இவர் ஒரு சவால் விட்டார். முடிந்தால், தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு வெளியேறி இன்னொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார், விக்கினேஸ்வரன் வென்று காட்டினர். இவர்கள் வாக்குறுதி கொடுத்து யாருக்கு வாக்களிக்கும்படி கேட்டார்களோ, அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்தினார்கள். அதிகாரம் பெற்றவர்களும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, வாக்கு வாங்கி கொடுத்தவர்களும் சொன்ன வாக்கை பெற்றுக்கொடுக்கவுமில்லை, அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரவுமில்லை, மக்களிடம் கேட்டு சஜித்துக்கு இவர் உத்தரவாதம் வழங்கவோ அல்லது மக்கள் இவருக்குத் தான் வாக்களிப்போம் என்று சுமந்திரனுக்கு சொல்லவுமில்லை. தமிழரசு கட்சிக்கு வாக்களித்த மக்களோடுசுமந்திரன் உடன்இருந்தாரா? அவர்களின் தேவை என்னவென்று கேட்டாரா? அவர்களுக்காக உழைத்தாரா? அவர்களது இழப்பில் பங்கு கொண்டு தேற்றினாரா? அல்லது விடுதலைக்காக உறவுகளை இழந்தாரா? போரட்ட மண்ணில் வாழ்ந்தாரா? இவர் எங்கோ இருந்து கொண்டு போடும் உத்தரவுகளுக்கு மக்கள் ஏன் அடிபணிய வேண்டும்? தமிழசுக்கட்சியே கேள்விக்குறியாக சேடம் இழுக்குது. இவரை நம்பி அந்தக் கட்சி இனிமேல் இல்லை என்பதை வெகு விரைவில் இவர் உணரும்போது இவரை விட்டு சிங்களம் வெகு தூரம் போய் விடும். மக்களை ஏமாற்றி, தான் சுகம் அனுபவித்ததை இனியும் தொடர முடியாது. இவர் அடித்தொண்டையால் கத்தட்டும், வெருட்டட்டும், சவால் விடட்டும், சபிக்கட்டும், ஏதும் ஆகப்போவதில்லை. யாரும் இவரை கேட்கவோ, தடுக்கவோ போவதில்லை. தமிழ்த்தேசியத்தை உடைத்தார், தமிழரசுக்கட்சியை இரண்டாக்கினார், இதற்காகவே களமிறக்கப்பட்டவர் இவர். அது கைகூடாமலேயே இவரது அரசியல் அஸ்தமனமாகப்போகிறது, இருந்த இடமும் தெரியாமல் போகப்போகிறார். தமிழ்த்தேசியம், தமிழரசு என்று இருந்ததனாலேயே இவருக்கு அரசியல் செய்ய ஒரு களம், காலம் கிடைத்தது. அதை இல்லாமல் செய்வதோடு அவரது அரசியலும் மறைந்து விடும். முன்பு யாரோ களத்தில் ஆரூடம் சொன்னார்கள்; சுமந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டால், வெற்றி பெறுவார் என்று. முடிந்தால் வெற்றி பெற்றுக்காட்டட்டும். இல்லையென்றால் இனி வருங்காலத்தில் டக்கிலசோடு கூட்டுசேரலாம். அவரும், வரும் தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பும் முன்பொரு தடவை வெளியாகியது. இருவரும் சேர்ந்து தொடர, இயங்க பொருத்தமாக இருக்கும்.
  11. இவ்வளவு விளங்கப்படுத்தியும் விளங்காதவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காது, அவர்களின் தமிழ் கிரகிப்பு அவ்வளவுதான். தந்தையர் மேல் இவ்வளவு கோபமா? ஏன் இப்படி திணிக்கிறார்கள்?
  12. ம் .... யானை பாத்த குருடரின் கதையாயிற்று! யாரோ செய்த தவறுக்கு கந்தையரை தண்டிக்க வேண்டுமாம். சிரிப்பு குறி போட பயமாக இருக்கிறது.
  13. தேர்தல் என்று வந்து விட்டால், தமிழருக்கு எதிராக வீராவேசமாக கத்தி கூட்டம் நடத்துவார்கள், அப்போதும் அவர்களுக்கே வாக்களித்தோம். இப்போ நயவஞ்சகமாக ஏதும் தராமலேயே வாக்கு போடும்படி வற்புறுத்துகிறார்கள், அப்பவும் அடிமைகள் சிங்களத்துக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன கண்டோம்? கூண்டோடு அழித்துவிட்டு வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்கிறார்கள். தமிழரின் வாக்குகளை வீணாக, எந்த நிபந்தனையுமில்லாமல், இனாமாக வாங்கிக்கொடுத்து அவர்களின் உணர்வுகளையும் நிலங்களையும் பறிகொடுத்து பலவீனமாக்கியதே தமிழரசுக்கட்சிதான். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்பதை இல்லாதொழிக்கவே சுமந்திரன் புகுத்தப்பட்டார். இந்ததேர்தலோடு அவரும் அவரது அரசியலும் இல்லாமல் போகவேண்டும். பொது வேட்ப்பாளர் தோற்றாலென்ன வென்றாலென்ன எதுவும் நமக்கு குறையப்போவதில்லை, ஆனால் இனிமேல் எங்களை வைத்து தேர்தலில் வெற்றியடையும் ஏமாற்றும் தந்திரம் நிறுத்தப்படும். அதோடு சிங்கள மக்கள் எதிர் காலத்தில் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து வாக்களிக்க முடியுமென்றால், அவர்கள் ஏன் நமக்கு அளிக்கக் கூடாது? குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன் எனும் நிலை மாறவேண்டும்.
  14. மதில்மேல் இருக்கிற இந்தப்பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியவில்லையே? அனுரா கூறிய கருத்துக்கு இவர் விளக்கம் கொடுக்க எப்படி முடிந்தது? மொத்தத்தில் எல்லா கட்சிகளும் இனவாத பிரச்சனையில் ஒரே கொள்கை, அதில் இவர் பங்குதாரர் அவ்வளவே. ரணில் உறுதியளித்தார் என்கிறார், ரணிலோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்றவுடன் நாமல் இவர் வீட்டுக் கதவை தட்டினார். அப்புறம் சஜித் என்கிறார், இப்போ அனுராவுக்கு வக்காலத்து? மக்கள் எந்தப்பக்கம் என்று தெரியாமலேயே கொப்புக்கு கொப்பு தாவித்திரியிறார்.
  15. இதை முன்பு எங்கோ கேட்டமாதிரி இருக்கே! சரி, வெற்றி பெற பாராட்டுக்கள். பிறகு ஏன் தமிழர் வாக்கு அளிக்க வேண்டுமென்று அச்சுறுத்தல் என்பதுதான் விளங்கவில்லை. அந்த வெற்றியல் பங்குதாரர்களாக இருப்பதில் நமக்கு என்ன நன்மை? கடந்த காலத்திலும் அதை செய்த நம்மை அளித்தீர்களே மறந்து விடுவோமா என்ன?
  16. ஆமா, இவர் என்ன புதுசா கண்டறிந்து வெளிப்படுத்தப்போறார்? இவ்வளவு காலமாய் நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாதவர், நாட்டின் ஜனாதிபதியாகப்போறாராம். இது எங்களுக்கு தெரியாதாக்கும், இவர் விளக்குகிறார், உடனே நீதிமன்றம் அவர்களை தண்டித்து விடுமாம். நாங்களும் பாத்துக்கொண்டுதானே இருக்கிறோம். சிங்களம் எல்லாமே ஒன்று கூடி ஆலோசித்து, தமிழர் பிரச்சனையை எப்படி கையாண்டு வாக்குகளை பெறுவது, அதற்கு எந்த தரகரை நாடுவது என்று பேசி முடிவெடுத்த பின்னே பேசுவார்த்தைக்கு வருகின்றன. வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தெரியும் யாம் ஒருவரும் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்கிற முடிவோடேயே தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது. எப்படியும் தங்களில் ஒருவருக்குத்தானே தமிழர் வாக்களிக்க வேண்டும் வேறு தெரிவு அவர்களுக்கில்லை ஆகவே எதை வேண்டுமானாலும் கூறுவோம் ஆனால் தீர்வை மட்டும் வாய்தவறியும் பேச மாட்டார்கள். இதுதான் சிங்களம் என்பது புரியாமல் நாங்களும் ஒவ்வொரு தேர்தலுக்கு ஒவ்வொருவரை நம்பி அவர் பின்னால் சுத்துறோம். ஒருவேளை சுமந்திரன் அப்படி சொல்லியிருப்பாரோ, அல்லது இவரின் கற்பனையோ? எங்களுக்கு தெரியாது என்ன நடந்தது என்று, இவர் விளக்குகிறார். அப்படியான நிலையில் நீதிமன்றம் தண்டிக்குமென்று கூறி யார் காதில் பூ சுற்றுகிறார் இவர்? விழுந்து போன இனத்தை கெஞ்சத்தேவையில்லை வெருட்டி பயமுறுத்தி வாக்கு வாங்கலாமென இவர் நினைக்கிறார். இவரது கட்சிதானே நீதிமன்றம் போய் வடக்கு கிழக்கை பிரித்தது?
  17. ஊடுருவி தாக்குதல் நடத்த போனார்களோ? அவர்களை இலகுவில் உக்ரேன் விடுவிக்குமா? போருக்கு பயந்து நுழைந்து தஞ்சம் கோரி இருப்பார்கள்? பொறுத்திருந்து பாப்போம்! ரஷ்யாவுக்காக போராடினால் அந்த துருப்புகளுக்கு என்ன தண்டனை வழங்குவார்களோ அதையே இவர்களுக்கும் வழங்க வேண்டும்.
  18. தாங்கள் நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் தாம் தப்பிப்பதற்காக உலகப்போரை சொல்லி அச்சுறுத்துவது, மற்றைய நாடுகளை தாம் ஊடுருவும் போது அதற்கு வேறொரு காரணம் கற்பிப்பது சர்வாதிகாரிகளின்குணம். ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஆரம்பியுங்கள்! எல்லாரும் சேர்ந்தே அழிவோம். அதை செய்ய மாட்டீர்கள், நீங்கள் அபகரிக்க வேண்டியது நினைத்தது நிலுவையில் இருக்கே.
  19. இந்த நாட்டுக்கு தமிழ் இளையவர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதை தாம் விரும்புவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார், அதே கையோடு சுமந்திரனை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தார். நேற்று விட்ட அறிக்கையில் தாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலே நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆட்சி நடத்தலாமென்கிறார். அப்போ ..... சிங்களப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த இவரின் சித்தப்பு சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டோடி எங்கோ இருந்துகொண்டு நாட்டை தனிமனிதன் ரணிலிடம் ஒப்படைத்ததேன்? தந்தையார் ஓடி மறைந்ததேன் எனும் கேள்விகளுக்கும் சேர்த்தே விளக்கமளித்தால், வாக்களிக்கும் மக்கள் புரிந்து வாக்களிக்கலாம். இல்லையேல் இவரும் நாட்டை விட்டு ஓடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறலாம் என அறிக்கை விட்டவர்கள், சுமந்திரனை தேடிச்சென்றதன் நோக்கமென்ன? சுமந்திரனின் வாக்கு மட்டும் போதுமா இவர்கள் வெல்வதற்கு? இளையோர் என்கிறார், சம்பந்தராக, அவரின் ஆவியாக சுமந்திரனை கணக்கிட்டு சந்திக்க சென்றாரோ என்னவோ ...... தோற்றம் சம்பந்தர், மற்றவை சுமந்திரன். சம்பந்தரின் காலம் முடியுமட்டும் தமிழரை ஏமாற்றினோம், இனி வருங்காலத்தில் சுமந்திரன் காலம் முடியுமட்டும் ஏமாற்றுவோம், எனது வாழ்நாள், பரம்பரை வரையும் ஏமாற்றுவோம் என நாமல் அறிவிப்பதுபோலுள்ளது. இது தமிழ்த் தலைமைகளை தவிர இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் புரியும்! அதனாலேயே எந்த வேட்பாளர் ஆட்சிக்கு வந்தாலும் நமது பிரச்சனை தீர்ப்பதில்லை, தீர்க்கப்போவதுமில்லை.
  20. எமது நெஞ்சங்களில் வாழும் வீரர்களுக்கு நீதிமன்றங்களில் தடை விதித்து என்ன பயன்? ஏற்கெனவே புலிகள் தோன்றுவதற்கான காரணம் எங்கே எழுந்தது என்று கனடா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒன்றும் விடுதலைப்புலிகளை மட்டும் குறிவைத்து நீடிக்கப்பட்ட தடையல்ல, இதைப்புரியாமல் சிங்களம் குதிக்கட்டும், வரவேற்கட்டும் மகிழட்டும். அப்பப்போ கூடும் ஐ. நா. சபை போல இதுவும் ஒரு செயற்பாடு, தமது செயற்திறனை வெளிக்காட்டுவதற்கு எடுக்கப்படும் நிகழ்வு. இப்போ யாரும் புலிகளுக்கு நிதி சேகரிக்க வேண்டிய தேவை இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயற்பாட்டை இந்த நிரலுக்குள் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை. யாருக்கு இதனால் நட்டம் இலாபம் என்பதை விட இலங்கைக்கு பெரும் மகிழ்ச்சி, ஏதோ தான் சரியானதை செய்ததுபோல் அற்ப மகிழ்ச்சி. அவர்கள் பொது மக்களை அழித்தார்கள் என்பதை கனடா சொல்லியும் செய்தும் வருகிறது அது வரவேற்கத்தக்கது. அதனால் எமக்கு ஒரு நட்டமுமில்லை. விடுதலைப்போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வேறுபாடு முன்வைக்கப்படும்போது சிங்களம் தலைகுனிந்து நிற்கும், சர்வதேசத்தால் தடைவிதிக்கும் காலமும் உருவாகும். இதை புரியாமல் ரணில் தீர்வு தருவார் சிங்களத்திடமிருந்துதான் தீர்வு வரும் இந்தியா வாங்கித்தரும் என்று இலவுகாத்த கிளிபோல் ஏமாறாமல், நல்லதை நினைக்கும் நாடுகளோடு கூட்டுச்சேர்ந்தால் மாற்றம் வரும். இந்தியாவுக்கு உற்ற நண்பன் இலங்கை என அப்பப்போ இருவரும் மார்தட்டி மாறி மாறி தழுவிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரின் செயற்பாடுகளும் எப்படிப்பட்டது என்பது சிறுது சிறிதாக உணரப்படுகிறது.
  21. ம் ..... பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டது என நினைப்பது பூனையின் கற்பனையே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சுகாதார வசதிகளை தடுத்தது, வலிந்து இடம்பெயரச்செய்தது, பாதுகாப்பு இடங்களையும் சுகாதார நிலையங்களையும் உணவு களஞ்சியங்களையும் தாக்கி அழித்தது, மக்களை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து கொன்றது, சரணடைந்த பாலகர் தொடங்கி பெரியவர் வரை கொன்றது, காணாமல் ஆக்கியது, பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைத்தது, மரணப்புதைகுழிகளை சர்வதேச நாடுகள் விசாரணை செய்ய மறுப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்வளவையும் செய்து விட்டு போலிக்கு ஒவ்வொரு காரியாலயம் திறந்தீர்களே இது ஆதாரமில்லையா? வெறித்தனமான வெற்றி விழா கொண்டாடினீர்களே அது ஆதாரமில்லையா? சர்வதேசத்துக்கு உறுதிமொழி கொடுத்து கால அவகாசம் என இழுத்தடிப்பது ஆதரமில்லையா? எங்களுக்கு பண உதவி செய்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று உதவி வேண்டி விகாரைகளை கட்டியெழுப்பி பாதிப்பட்ட மக்களின் இருப்பிடத்தை இல்லாமல் செய்வது ஆதாரமில்லையா? தெருக்களில் நின்று பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் வீரவரலாறுகளை கூவி அந்த மக்களை அச்சுறுத்துவத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்களே அது ஆதாரமில்லையா? சிறையில் அடைத்து வைத்து அப்பாவி இளைஞர்களை கொன்கிறீர்களே அது ஆதாரமல்லையா? வரலாற்று நிலையங்களை அழித்து வரலாற்றை திரிக்கிறீர்களே அது ஆதாரமில்லையா? பருவத்துக்கு பருவம் எதற்காக பொய் அறிக்கைகளை தூக்கிக்கண்டு ஐ. நா. வுக்கு காவடி எடுக்கிறீர்கள்? உங்களோடு உறவு வைப்பதால் கனடாவிற்கு என்ன லாபம்? நீங்கள் உறவு வைத்தாலென்ன,. முறித்தாலென்ன அவர்களுக்கு எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் பாஷையிலே உங்களுக்கு விளங்கும்படியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சமாவது வெக்கம் இருந்தால்; அந்த நாட்டு இறையாண்மையில் தலையிடாமல் மூடிக்கொண்டு இருங்கள். இல்லையேல் உங்கள் வாய் வீரர்களை அழைத்து உங்கள் தேர்தல் வாக்குகளை நிரப்புங்கள். தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி, பின் ஒரு செயல் செய்யும் உங்களது கலாச்சாரம்போல் மற்றவர்களை எடை போடாதீர்கள். இதற்கு மேலும் மல்லுக்கு நிண்டால்; கனடாவைத்தொடர்ந்து எல்லா நாடுகளும் உங்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம். சொந்த குடிமக்களை அகதிகளாக்கி இருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டு அந்த நாட்டில் போய் நின்று ஜனநாயகம், உறவு பற்றி வெட்கமில்லாமல் வகுப்பெடுக்கிறார்கள். இறுதியாக! கனடா தமிழ் மக்கள், அந்த நாட்டுக்கு உண்மை உள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள். தாய் நாடு என்று நம்பிய எம்மை, முதுகில் குத்தி அழகு பார்த்ததுமல்லாமல் நாம் எழுந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, எமது சுதந்திரத்தை அழித்து அதன்மேல் நின்று எம்மண்ணில் தன் நாட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் இந்தியாவுக்கு காவடி எடுத்து என்ன பயன் கண்டனர் நம்மவர்? ஆகவே உண்மையோடு நம் இழப்புகளை உணர்ந்து ஆதரவும் ஆறுதலும் தரும் அந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து மற்றைய நாடுகளும் இந்த முற்சியை எடுக்க அந்தந்த நாட்டிலுள்ளவர்களும் உழைக்க வேண்டும்.
  22. கடந்த காலத்தில் மஹிந்தா சம்பந்தரை இப்படி சொல்லி குஷிப்படுத்த முயற்சித்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. நிற்க, இளம் தமிழரொருவர் நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதே தனது விருப்பம் என்று அறிக்கை விட்ட நாமல், இப்போ தாங்கள் ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ஒற்றை ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்கிறார்?
  23. அதிலென்ன சந்தேகம்? சுமந்திரனை சந்தித்து உறுதி மொழியும் வழங்கி விட்டாரே.... ஆனால், ஜனாதிபதியாவாரோ என்பது சந்தேகம். இவரை ஜனாதிபதியாக்க வெளிக்கிட்டு தனது அரசியல் வாழ்வையும் தொலைத்தவர் தந்தையார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.