Everything posted by satan
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் இரத்து
எந்தபாராளுமன்ற உறுப்பினர் இந்த திட்டத்தை ஏற்பர்? இப்பவே அனுரவை கலைக்க பேதங்களை மறந்து ஒன்று சேருவர்.
-
ஒற்றுமையாக போட்டியிட முயற்சி!- இந்தியத் தூதுவருக்கு வாக்குறுதி.
இவ்வளவை இழந்தபோது ஒற்றுமையாக செயற்பட விரும்பவில்லை, மக்கள் கோரிக்கை வைத்தபோது கேட்கவில்லை, இந்தியா பாடம் எடுத்தவுடன் கேப்பினமாம். பின் தேர்தல் முடிய பிடுங்குப்படுவினமாம். சுமந்திரன்தானே கூட்டுக்கட்சிகளை விட்டு பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதென்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை அவர்கள் பாவிக்கக்கூடாது என்றும் சட்டம் போட்டவர். பிறகு எப்பிடி அவர்களோடு இணைந்து போயிருப்பார் இந்தியாவிடம் பாடம் கேட்க? அதோடு அவர் தனியாகத்தானே சந்திப்புக்களை நடத்துகிறவர். நீங்கள் சொல்வது போல் அமெரிக்க தூதுவரை தனியாக சந்திக்க சென்றாரோ தெரியவில்லை.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
அனுராவுக்கு இலவசமாய் பிரச்சாரம் நடக்கின்றது. இவைகளை பார்க்கும் நம் தலைவர்களுக்கு வயிறு கலங்கப்போகுது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகாவும் களத்தில் குதித்திருக்கிறா. காரணம்; அரசியல் வாதிகளின் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாகும், இவரது ஆட்சி நிலைத்தால். எல்லோரும் கூட்டுச்சேருகிறார்கள். நம்மவர்களுக்கும் இப்போதான் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது. காரணம், மக்களுக்காகவல்ல தாம் சேர்த்ததை கட்டிக்காக்க. பாதையின் ஆரம்பத்தை பார்த்து முழுப்பயணமும் இப்படியேதான் இருக்கும் என மனக்கணக்கு போடக்கூடாது. சந்திரிகா வந்தபோதும் இப்படித்தான் மனக்கணக்கு போட்டோம், பெண்ணென்றால்; பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இந்தப்பெண் பேயாக எங்கள்மேல் குண்டுகளை பொழிந்ததே! நினையாத நல்லதும் நடக்கலாம், கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து விட்டோமே எனவும் வருந்தலாம்.
-
புங்குடிதீவில் விஷமிகளின் அட்டூழியம்...dk karththik dkvann
விசுகரில கோபமுள்ள ஆக்களாய் இருக்குமோ?
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும், யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா? விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை. இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார். "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
வீட்டை ஒப்படைப்பது மாத்திரமல்ல, மேலதிகமான காலத்திற்கு வாடகை ,மின்சார பாக்கி, ஏனைய பாக்கிகளெல்லாம் செலுத்தப்படவேண்டும். இப்படி அறவிட்டால் நாடு பெற்ற கடன் எல்லாவற்றையும் அடைத்து விடலாம். நாடு பெற்ற கடன் எல்லாம் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்கைக்காகவே.
-
ஜனாதிபதியின் கிராம வீட்டில் தமிழ் யூருப்பர்
இவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறார். இவர் பதவியை விட்டுபோகும்போதும் இப்படியே இருக்குமா? இவரது வீடு, கிராமம், உறவுகள் ஜனாதிபதியென்கிற களையோ, மக்கள் பட்டாளமோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கிறது. உறவுகளும் ரொம்ப எளிமையாக தெரிகிறார்கள். பதவி, இவர்களையும் வாழ்க்கைச்சூழலையும் சுற்றுப்புறத்தையும் மாற்றுமா? பொறுத்திருந்து பாப்போம். அனுர, அதிக அவசரம் காட்டுவதுபோல் தெரிகிறது. ஒன்று இந்த அவசரம் ஊழல்வாதிகளை துரத்தியடிக்கும் அல்லது இவரை அரசியலில் இருந்து துரத்தியடிக்கும்.
-
பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய
ஐயோ..... உலக மகா கொள்ளைக்காரர் எல்லாம் நிறைந்து இருக்கும் இடம் இந்த போலீஸ் இலாகா. இவர்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கோ. முடிந்தால், இவர்கள் திரும்பும் திசையெல்லாம் தெரியாமலே தொடர வேண்டும்.
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்
ம்.... சில சமயம் நம் சரிவர சிந்திக்க மறந்து விடுகிறோம். தமிழராக ஒரு ஆளுநர் வைந்தாலும் சிங்கள ஆளுநர் செய்வதையே அல்லது அதற்கு மேலேயும் செய்வார், ஆட்டுவிப்பது சிங்கள எஜமானர், அதற்கு அவருக்கு பதவி, சம்பளம். வடக்கில் இருந்த தமிழ் ஆளுநர்கள் எப்படி செயற்பட்டார்கள், செந்தில் தொண்டமான் பதவி வகித்த லட்ஷணம் தெரியுது. இவர் நல்லது செய்வார் என எதிர்பார்ப்போம்.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
இவர்கள், குத்துவிளக்கை வைத்திருப்பதா சங்கூதி அணைப்பதா என்று முடிவெடுப்பதற்குள் தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலும் வந்துவிடும், அதற்க்காவேனும் பயன்படட்டும் சின்னம். குத்துவிளக்கும் வேண்டாம் சங்கும் ஊதவேண்டாம் என்று மக்கள் ஒதுங்கப்போகிறார்கள். ஒரு விடயத்தில்தானும் ஒத்துப்போகிறார்களா இவர்கள் மக்களுக்காக? இப்பவே இப்படி குத்தி முறிகிறார்கள் என்றால் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மக்களை தயார் படுத்தாமல்? எதிரி தன் ஆட்களை புகுத்த இவர்கள்தான் காரணம்!
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
கொள்கைக்காரர் என்று தவறுதலாக மாற்றி வாசித்து விட்டேன்.
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
இது பொய்ப்புகாராக இருக்கலாம், இந்தியாவில் ஒரு நாளைக்கு பெண்களுக்கெதிரான தொண்ணூறு பாலியல் வன்கொடுமை, கொலை நடப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தெரிந்தே இவ்வளவென்றால், தெரியாமல் எவ்வளவோ? சிலது பொய்யாகவும் சோடிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அதற்கான காரணம்; வகைதொகையின்றி நடக்கும் இப்படியான குற்றங்களை சிலர் தமது லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். பொலிஸாரின் அஜாக்கிரதை, அலைக்கழிப்பு இதனால் உண்மையாகவே பாதிக்கப்படுபவர்கள், பாதுகாப்பு தேடுவதில் பாதிப்பு, தாமதம் ஏற்படுகிறது, உயிரையும் இழக்க நேரிடுகிறது.
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
இந்த அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவுகாலமும் தலைவராக இருந்தார் என்பதே உலக அதிசயம். அதனாற்தான் நேற்று நுழைந்த சுமந்திரன் இவ்வளவு சர்வாதிகாரம் செலுத்த முடிந்தது கட்சிக்குள். இனிவருங்காலத்தில் தேர்தல் வந்தால்; மாவையரின் இந்த நகைச்சுவையை மக்கள் மறக்க மாட்டார்கள் யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே! காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம். ஆமா...... சுமந்திரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? ஒருவரும் அதை கூறியதாக தெரியவில்லை, அல்லது நான் தவறவிட்டு விட்டேனோ? பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்திவிட்டு அதன் பின் அதற்காக பாராட்டுப்பெறுபவர்களை அனுரா கவனியாமலா இருந்திருப்பார்? கனடாவில் இருக்கிற தங்கமயிலே, சாணக்கியன் பேசியதை தனது அறையில் இருந்து கவனித்த கோத்தா, பின் அவரை அழைத்து பாராட்டியதாக புளகாங்கிதம் அடைந்தாரே. இவ்வளவுதான் அவர்களது உரை. பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பேசுவார்கள், பாடுபடும் மக்களுக்காகவல்ல. தங்கள் சாணக்கியத்தை காட்டுவதற்கு கிடைத்த அரங்கமே பாராளுமன்றம். இப்போ தங்கள் சொந்த கட்சியையே விமர்ச்சிக்கிறார்கள் பாராளுமன்றில்.
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள், மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.
-
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
முக்கியமான பணி இது, இலகுவானதல்ல, இதனாலேயே நாம் அரிய தலைவன் ரவிராஜை இழந்தோம். சாணக்கியன் செய்யலாம், செய்வாரென் எதிர் பார்த்தேன் ஆனால் செய்ய மாட்டார்.
-
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு
பாடசாலைகளில் இராணுவ முகாம் அமைப்பது ....? உடனடியாக இராணுவத்தில் கைவைக்க மாட்டார் ஏற்கெனவே சந்திரிகா உறுதியளித்துவிட்டு இராணுவம் முறுக அப்படியே திருப்பி போட்டார். ஆகவே இராணுவத்தோடு மெதுவாகவே மாற்றங்களை கொண்டுவரவேண்டும். இனவாதத்தை ஊட்டி முறுக்கேற்றபட்டவர்கள் அவர்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு : சிக்கிய ஊழியர்
தெளிவாகத்தானே பிரசுரித்திருக்கிறார்கள்!
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
இந்தியா சொல்வதற்குமுன் அதன் உளவு அமைப்பு றோ இன்னும் தடுமாறுது போலுள்ளது.
-
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி?
அவர்கள், இத்தனை காலமும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டாலும் கொள்கை ஒன்று, ஆட்கள் மாறி மாறி வெல்லும் கட்சியில் உட்காருவார்கள். இப்போ மட்டும் ஏன் கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள்? அதிகாரம் தங்களது கைவிட்டு போனால், இனிமேல் தங்களுக்கு அரசியல் கிட்டாது என்று தெரிந்து விட்டார்கள் போலும். தமக்குள்ளே மாறி மாறி வைத்திருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எங்கே, தட்டுத்தவறி தமிழருக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து விடுவாரோ, பின் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை என்பதும் கவலையாயிருக்கும்.
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
ம்...... அப்படியென்றால்; மற்றவர்கள் இனவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்ல வந்தாரோ என்னவோ?அதில் இணைந்தால்; தானும் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தே அவர்களுக்கு வாக்களித்தாரோ? இதுதான் இவரது ராஜதந்திரம், தூர நோக்கு.
-
இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள் - சிவமோகன் அழைப்பு
யாரின் இருப்பை காக்கப்போகிறீர்கள்? ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைத்தானே பல்லவியாக பாடுகிறீர்கள். நீங்கள் இல்லாமலேயே தீர்வு பெறும் காலம் நெருங்கி விட்டது. அதை தடுக்காமல் தள்ளி நில்லுங்கள். முதலில் அரசியல்வாதிகள் நீங்கள் ஒற்றுமையாக வந்து வாக்கு கேளுங்கள், மக்கள் ஒருமித்து வாக்களிப்பார்கள். இல்லையேல்; உங்களது இருப்பு கேள்விக்குறியாகும். தேர்தலுக்கு முன் ஒன்று, தேர்தலுக்கு பின்னொன்று, தேர்தலின் போதொன்று, தென்னிலங்கையிலொன்று, வடக்கிலொன்று, பாராளுமன்றத்திலொன்று, சர்வதேசத்திலொன்று, பத்திரிகையிலொன்று, பேட்டியிலொன்று என மாறி மாறி திரித்து மக்களை பிரித்து அரசியல் செய்தது இனியும் எடுபடாது. ஒரு கட்சியாக இருந்து, ஒருமித்த கட்சியாக இருந்து, பல கட்சிகளாகி, மக்களுக்கு என்று ஒரு கட்சியுமேயில்லாமல் தள்ளாடுது தேசியம். தேர்தல் வரும்போது ஏக பிரதிநிதிகள் நாங்கள், உங்கள் ஏகோபித்த ஆதரவை தாருங்கள் என்று கெஞ்சுவீர்கள். அதன் பின் நீங்கள் மக்கள் கண்களில் படமாட்டீர்கள், உங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியாது, அவர்களின் கோரிக்கைகளைவிட சிங்களத்தின் கோரிக்கையே உங்களுக்கு முதன்மையானது. இதற்கு மக்கள் வாக்கெதற்கு உங்களுக்கு?
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும்; மாவையிடம் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை
மாவையருக்கு விளங்கிப்போச்சு, அடுத்த தேர்தலில் மண் கவ்வப்போகுது தமிழரசுக்கட்சி என. உடனடியாக தேர்தலும் வருவதால், உடனடியாக முயற்சிக்கிறார். தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுமென அறிவித்தவர்களும் இவர்கள் தான், இப்போ சேர்ந்து போட்டியிடுவோம் என்பவர்களும் இவர்கள் தான். காலம்..... தமிழரை வாழ விடுவதில்லை என முடிவெடுத்து விட்டது. உள்ளுக்குள் இருந்து குடைச்சல் கொடுப்பதென்றே முடிவெடுத்து விட்டார். ம்..... ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர், அதற்கு ஆதரவு வழங்கியோருக்கு எதிராக நடவடிக்கை என அச்சுறுத்தினார் ஒருவர், இவரோ வேறொன்று சொல்கிறார். ஒரு கொள்கையில்லை, ஒரு தலைவனில்லை, ஒன்று சேர்ந்து முடிவெடுப்பதில்லை, மக்கள்மேல் மதிப்பில்லை. மக்களே இவர்களை என்ன செய்வதென்று முடிவெடுப்பார்கள்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அந்த பழரச போத்தல் சின்னத்தில் வாக்கு கேட்டால் தேர்தலில் முன்னிலை வாக்குகள் அவருக்குத்தான். இந, மத வேறுபாடில்லாமல்.