Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. உங்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர். அவருக்காக ஒருதடவை சிறப்புச்சான்றிதழ் அளித்தவர் நீங்கள்.
  2. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி சலிக்கவில்லையோ இவர்களுக்கு? கடந்த காலங்கள், அது நடைபெறாதென நிரூபித்துள்ளன, சட்டத்தாலும் தமிழர் தாயகத்தை பிரித்தாயிற்று. இப்போ, அங்கிருக்கும் முஸ்லீம், நமது இனத்துரோகிகளும் இணைய விடமாட்டோம் என போராடுகிறார்கள். இவர்கள் இந்த துண்டை தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள் உறவை வளர்க்க, வாழ்த்துசொல்லவென. நான் சொல்லுறது போல சொல்லுறன், நீ மறுக்கிற மாதிரி மறு, இரண்டு பக்கமும் நான் குளிர் காய்கிறேன்.
  3. இந்த வெறிக்குட்டி, தான் வெறியில் விழுந்தெழும்பி காலை உடைத்துப்போட்டு, அவுஸ்ரேலிய உல்லாச விடுதியில் பெற்ற தண்டப்பணத்தை மீள செலுத்துமாறும் சேர்த்து உத்தரவிடுங்கள் நீதிபதியவர்களே!
  4. இவையெல்லாம் தமிழ் இனத்துக்கு அபசகுனமாச்சே! மாறாக முட்டுக்கடைகளையே உருவாக்கும். அது சரி, இந்த ஓணான் இன்னும் ஏன் மூக்கை நீட்டுது?
  5. நீங்கள் எவ்வளவுதான் அடிச்சுக்கேட்டாலும், சிறியர் ஜேர்மனியிற்தான் இருக்கிறார் என்கிற உண்மையை உங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று சொல்லுவேன். போதுமா சிறியர்?
  6. கடந்த காலத்தை விடுங்கள், இவரின் எதிர்கால வாழ்க்கை மறுபடியும் இப்படி எழுதப்படுமானால் வாழ்த்தப்படக்கூடியது. எங்கள் வலி, தாகம் யாரும் சொல்லாமலே அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். அப்போது அரசு எதை செய்திருக்க வேண்டுமென போராடினாரோ, அதை அவர் மக்களுக்கு செய்து நிரூபிக்க வேண்டும் தாங்கள் செய்த போராட்டம் நிஞாயமானதென.
  7. நிஞாயமான கேள்வி! பறிகொடுத்தவர் வெளிநாட்டுக்காரர், பெரிய பணத்தொகை, இவர்களும் ஒருவகை திருடரே. இனிமேல் கண்டு கொள்வர். இல்லையென்றால், வேலையிழப்பு கைலஞ்சம் பெற்றமையில் உள்ளே போக நேரிடும். அநுர சொன்னதை செயலில் காட்டினால்,
  8. இழந்தவை மட்டுமல்ல, இவன் மட்டுமல்ல, இவன் போன்றவர்கள் அரசியலில், போராட்டத்தில் எப்போதும் நமது இனத்துக்கு ஒரு தடைக்கல். கோழைகள்! வீர வசனம் பேசி தம்மை உயர்த்துவது.
  9. இது அவரது சொந்தக்குணம், மாற்ற முடியாது. மாற்றிப்போடுவது, நழுவுவது, அடாவடி பண்ணுவது. "உன் நண்பனைப்பற்றி சொல்லு, நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு. அது சரி சிறியர்..... நான் ஒருவரை கனநாளாக தேடுகிறேன், தகவலேதும் இல்லை. தேர்தல் வேலைக்காக போய்விட்டாரோ? அல்லது இரட்டை வேடம் வேண்டாமென களைந்து விட்டாரோ?
  10. ஹி ஹி .... தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில் காட்டிய மௌனம் ஏன்? திடுதிப்பென்று காட்டும் அவசரம் என்ன? ஆளாளுக்கு அவசரம், அக்கறை, கோரிக்கை மதுபான அனுமதிப்பத்திரம் பற்றி காட்டுபவர்கள் இதன் மூலம் சொல்ல வருவது என்ன? தாங்கள் சமூக அக்கறை கொண்ட நல்ல தலைவர்கள் எனக்காட்டி ஒருவரை விழுத்தி தம்மை உயர்த்தி வாக்கு சேர்க்க அதிரடி காட்டுகிறார்களா? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முனைவது எல்லாம் தேர்தல் திருவிழா கூட்டத்தில் தம்மை புனிதர்களாக்க விழைகிறார்கள். இப்பவொரு கலாச்சாரம்! எது வேண்டுமானாலும் செய்துவிட்டு, நான் மனநிலை பாதிக்கப்பட்டவன், போதைப்பொருளுக்கு அடிமை என்று சொல்லி தப்பித்துக்கொள்வது. மனநிலை பாதிக்கப்பட்டவர் தானாக அதை சொல்ல முடியுமா? எல்லாம் சரியாக செய்கிறார்கள், யார் யாருக்கு எதிராக, சாதகமாக, என்ன, எங்கே செய்தால் இலகுவாக மக்களை போய்ச்சேருமென கணித்து செய்கிறார்கள். அகப்பட்டவுடன் என்ன சொல்லி தப்பலாமெனவும் தெரிகிறது. அப்படியான நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை ஏன் பெறவில்லை? அகப்பட்டவர்களை சும்மா விடாது, அதற்குரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தால்; இந்த கலாச்சாரம் தானாக மறையும். தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள 'தில்' இல்லாதவனெல்லாம் இந்த வேலையில் இறங்கக்கூடாது.
  11. எல்லாவற்றுக்கும் தாங்கள் தான் தலையாரி என்று உங்களை பிரிச்சுவிட்டவை, இப்போ உங்களுக்கு அடங்கி சேவையாற்ற உடன்படுகினமே? அவர்கள்தான் முன்னிலை மற்றவரெல்லாம் அவர்கள் சொற்கேட்டு வாய்பொத்தி இருக்க வேணும். நீங்கள் பாருங்கோ.... உங்களின் திமிர், இருக்கிற கட்சிகள் போதாதென்று இன்னொரு கட்சியை உருவாக்கி, பின்னாளில் அதற்கு தூது விட வேண்டிய நிலை உருவாக்கப்போகுது. தமிழ் மக்களின் சனத்தொகை குறைவு, அதற்கு எத்தனை கட்சி தலைமை. அத்தனை பெருமையும் தமிழரசுக் கட்சியையே சாரும்.
  12. இல்லை, நாட்டிலே ஒரு மாற்றம் வந்ததோ வரேல்லையோ இவர்கள் வந்துவிடுவார்கள், உறவு கொண்டாடி, அழைப்பு விடுத்து கட்டுப்படுத்த.
  13. அனுமதிப்பத்திரம் வழங்கியவர் இவருடைய தோஸ்த்துதானே, அவரிடமே கேட்டுத்தெரிந்திருக்க வேண்டியதுதானே? அனுமதி கொடுக்கும் போது தடுத்திருக்கலாம். இவருடைய எதிரிகள் சிறீதரன், விக்கினேஸ்வரன் இப்போ. நாடாளுமன்றத்தேர்தலில் இவர் கவிழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இவர்களின் பெயரை வெளியிட்டு பழிவாங்க முனைகிறார். மக்கள் மேல் இவருக்கு அவ்வளவு அக்கறை, அயராது உழைப்பதால் இதுவரை காலமும் இதை கண்டுக்க அவருக்கு நேரமில்லை கண்டியளோ...... இப்பதான் வேளை வந்திருக்கு, வாக்கு கேட்ட களைப்போடு ஓடி வந்திட்டார் அனுரவை தேடி. தேர்தல் மேடைகளில் அவர்கள் மேல் சேறடித்து, உரத்து சவால் விடலாம் என்று கணக்கு போட்டிட்டார்.
  14. ம்...... வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் நாட்டை ஆண்டார்கள், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக , கட்டளைத்தளபதியாக இருந்தார்கள், நாட்டின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், நாட்டை சுரண்டி வெளிநாடுகளில் பதுக்கினார்கள். அவர்களிடம் சிங்கள மக்கள் நாட்டையாளும் பொறுப்பை கொடுத்தனர், உயர் பதவிகளை கொடுத்தனர். இவர்களெல்லாம் சந்தர்ப்பவசத்தால் இடம் பெயர்ந்தவர்கள் கிடையாது. இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும்போது இந்த நாட்டு மக்களுக்கோ, நாட்டுக்கோ நன்மையேதும் செய்ததில்லை. ஆனால் பதவிகளுக்காக வந்தவர்கள். நம்மவரோ நாட்டின் இயல்பற்ற தன்மையால் விரட்டப்பட்டவர்கள், இன்னும் தாயக கனவோடு தாகத்தோடு வாழ்பவர்கள். சிலர் பதவிகளுக்காக சிங்களத்துக்கு முண்டு கொடுப்பவர்களும் உண்டு. அதற்காக எல்லோரையும் தள்ளி வைப்பது நல்லதல்ல.
  15. எல்லோரும் செய்த தவறையே இவரும் செய்ய வாய்ப்புள்ளது. போறதுதான் போறார், முதல், ஒரு ராசியான நாட்டிற்கு போகக்கூடாதா? கொள்ளிக்கண் நாட்டிற்கா போக வேண்டும்?
  16. தன் தலைவனையும் இனத்தையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவன் துரோகி. என்று, அந்த போராட்டத்தில் இருந்து சலுகைகளுக்காக விலகினானோ அன்றே, அந்த போராட்டத்தில் இருந்து பெற்ற புகழ், பெயர் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான். ஆகவே இயக்கம் அளித்த பெயர் "கருணா அம்மான்." என்கிற பெயருக்கு தகுதியற்றவனாகிறான். ஆகவே இயற்பெயரால் அழைப்பதே பொருந்தும்.
  17. ஓமோம்.... அபிவிருத்திதான் எம் மக்களுக்கு இப்போது அவசியம் அதிகாரப்பகிர்வல்ல என்று முழங்கி அரசியலில் குதித்த அங்கயன்,விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என விளக்கிவிட்டு, இவர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதிகாரம் முக்கியம் என்று போனவர்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து இப்போ அபிவிருத்தி என்கிற க(கு)திரையில் ஏறி இன்னும் எழுபது வருடம் சவாரி செய்ய நினைத்துவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அபிவிருத்தியும் இல்லை, அதிகாரமும் இல்லை இனி சிங்களத்தோடு மக்கள் அடிபணிந்து தமது நாளாந்த வாழ்க்கையை ஓட்டப்பழகி விட்டார்கள். இதற்கு தரகர் எல்லாம் இனிமேல் தேவையில்லை.
  18. அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தாரே! இந்தபெருச்சாளிகளுக்கு இப்போ ஒரு சிக்கல், இவர்கள் அரசியலில் இருந்தாலும் பிரச்சனை, விலகினாலும் பிரச்சினை. இவர்களின் உதவி அனுராவுக்கு தேவையில்லை, தனக்கு வேண்டியதை தானே நேரடியாக செய்து முடிப்பார். அது நல்லதோ கெட்டதோ. தரகர் எல்லாம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் இவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். இவர்களும் ஓடிப்போய் காலில் விழுந்திருப்பர். இந்தபெருச்சாளிகளுக்காக நேரம் செலவழிக்கவோ, பணம் விரையம் பண்ணவோ விரும்ப மாட்டார். அழைப்புக்காக காத்திருந்து இப்போ இவரே அழைப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இருந்த கொஞ்ச நஞ்ச வாக்குகளும் இனி கிடைக்காது இவருக்கு. மண் கொள்ளை, ஆட்களை கடத்தி கப்பமும் பெற முடியாது. என்ன செய்யப்போகிறார்? நல்ல வேளை, சம்பந்தர் தப்பித்தார், வீட்டைப் பறிமுதல் செய்ய முன்.
  19. தேர்தலில் போட்டியிட்டு அனுராவோடு கூட்டுச்சேர்ந்து பதவியை பெற்றுவிட்டால்; தப்பித்து விடலாமென பழைய பாணியில் கனவு காண்கிறார் போலும். அப்படி நடந்தால்; அனுராவும் துரத்தியடிக்கப்படுவார்.
  20. ம்..... உந்த கூத்தாடியின்ர குணம் தெரிந்து. கூட்டுக்கட்சிகள் தாங்கள் தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இனிமேல் இவரின் பருப்பு வேகாது. சுமந்திரனின் பேச்சுக்கு தலையாட்டிய மாவையர், எல்லோரின் வேண்டுகோள், சேர்ந்து போட்டியிடுவதே என கதை விட்டுப்பார்க்கிறார். இவர்களை தள்ளிவைப்பதோடு, கூட்டுக்கட்சிகளும் மக்களுக்காய் தங்களை மா ற்றாவிடில் இவர்களும் தள்ளிவைக்கப்படுவர். மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியும் வந்துவிட்டது. இனிமேல் யார் புதுசாய் வருகிறார்களோ அவர்கள் பின்னால் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை நம்பி தமிழுணர்வும் வலிமையிழந்து, நிலங்களும் பறிபோய், உறவுகளும் இழந்து அநாதரவாக நிற்பதால், இனி தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்களால் தள்ளப்பட்டுள்ளனர். இனி எதை, யாரை வைத்து வியாபாரம் நடத்தப்போகிறார்கள்? சிங்களமும் திரும்பிப்பாராது இவர்களை, மக்கள் இல்லையென்றால் வாக்குகளும் இல்லை. தனித்து விடப்பட்ட இவர்களை எதற்கு? அப்போ புரியும் மக்களின், இனத்தின், தேசியத்தின் வீரியம், ஒற்றுமையின் பலம் என்ன என்பது. எல்லா சிங்கள அரசியல்வாதிகளும், நேற்று அரசியலுக்கு வந்த நாமலும் கூறுகிறார்கள், தமிழ்கட்சிகள் தம் மக்களின் பிரச்சனைகளுக்காக எந்த விதமான அழுத்தத்தையும் கொடுப்பதில்லை, அப்படி அவர்கள் செய்திருந்தால்; எப்பவோ அவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்களென்று. ஆனால் அதற்கு, நம்மவர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி செய்தால் தாம் பெற்ற சலுகைகள் வெளிவந்துவிடும் என்கிற பயமோ தெரியவில்லை. சலுகை அளித்து அவர்களை விலைக்கு வாங்கியவர்கள், தங்களை இந்த கனவான்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்தே காட்டிக்கொடுக்கிறார்கள். காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள். தேர்தல் வரபோகுதென்று போன ஆண்டு கதை எழுந்தபோது, கூட்டுக கட்சிகளை விரட்டியடித்த சுமந்திரனை, யாரும் தங்களோடு இணைத்துக்கொள்ள தயாரில்லை. வேண்டுமானால் டக்கிளசுக்கு தூது விட்டுப்பார்க்கலாம், குணங்கள் ஒரே மாதிரி, இனத்தை விற்று, எதிரிக்கு வாலாட்டுவது. அநுர இவர்களை கணக்கிலெடுக்கவும் மாட்டார். ஏதோ முயற்சித்துப் பார்க்கட்டும். வடக்கின் வசந்தம் சொல்லிப்போட்டார், இந்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விடைபெறப்போவதாக. அவர் என்ன. யாரிடம் இருந்து விடைபெறுவது? எல்லோருமே வீணர்களை வீட்டுக்கு அனுப்புவதாக முடிவெடுத்து விட்டனர்.
  21. அவர், போவென்று விரட்டுவாராம், பிறகு வாவென்று வரவேற்பாராம், எல்லோரும் இவர் வைத்த ஆட்கள், தான் சொல்வதுபோல் ஆட வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு இவருக்கு. இனிமேல் தனித்து ஆடிப்பாக்கட்டும். தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்காவிட்டால் சந்தர்ப்பத்தை குழிதோண்டி புதைப்பது போலாகுமென்றவர், ஒருவரும் பொதுக்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறைகூவல் விட்டிட்டு, இப்போ இணைந்து போட்டியிட வாருங்கள் என்றால் யார் போவார்? ஒருவேளை சஜித் வென்றிருந்தால்; மற்றைய தமிழ் வேட்பாளரின் நிலை என்னவாக இருந்திருக்குமென கற்பனை பண்ணிபாருங்கள். ஒருமுறை சேனாதிராஜா எடுத்த எடுப்பு யாருக்காவது நினைவிருக்கா?
  22. நான் அனுராவின் ஆள் என்று சொல்லியா கலகம் விளைவிப்பார் அனுராவின் ஆள்?தேர்தலில் அனுராவுக்கு விழப்போகும் வாக்குகளை குறைத்து, தாம் பதவிக்கு வர பல கட்சிகள் பல தரகர்களை இறக்குவினம், இதுகள் சொதப்ப போகுதுகள். கலோ, போலீஸ்! என்று கூப்பிட்டான், பிறகு பதிலை காணோம் சம்பந்தரை போய் கேட்கட்டாம். சம்பந்தர் இறந்ததும் தெரியாது, யாரிடம் நீதிகேட்டு இவர்கள் போராடுகிறார்கள், ஏன் இவர்களிடம் கேட்கிறார்கள் என்பதும் தெரியாது, இத்தனை வருடங்களாக போராடுகிறார்கள் இவன் இப்பதான் நித்திரையால எழும்பினவன் போல வாறான். ஒருவேளை கூலிக்கு மாரடிக்கிறானோ? தேர்தலில் எஜமானருக்காக போட்டியிடப்போகிறானோ தெரியவில்லை. ஒன்றுமட்டும் தெரிகிறது, எல்லோரும் வாயடங்கி இருக்கும்போது, இந்தபுத்தியில்லாதது வாயை கொடுத்து மாட்டப்போகுது!
  23. நேற்றுத்தான் அநுர புகழ் பாடி ஒரு காணொளி வெளிவந்தது, அதற்குள் இன்னொரு நிறுவனம் இந்த தரகரை இறக்கியுள்ளது. பாவம் இவன் தரகு வேலை பாத்து தானும் உள்ள போய் தன்னை பணிக்கமர்த்திய நிறுவனத்தையும் காட்டிக்கொடுக்கப்போறான். உப்பிடி எத்தினை தரகர் வருவினம். முதல் அருண் சித்தாத்தன் என்றொரு கோமாளி ஓடித்திரிஞ்சு அடியும் வாங்கினது. இப்ப வேறை ஒன்று விஷயம் தெரியாமல் இறங்கி நிக்குது.
  24. காலம் தவறிய முடிவென நினைக்கிறன். காற்றுள்ள போதே தூற்றியிருக்க வேண்டும், இனிமேல் கஸ்ரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.