Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இலங்கையில் யார் அரச கட்டிலேறினாலும் அதை யாழில் உற்சாகமாக கொண்டாட ஒரு வேலையற்ற கூட்டமுண்டு, இந்தியாவில் யார் ஏறினாலும் கொண்டாட ஒரு மத கூட்டமுண்டு, இவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை, அவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை நம்மினத்துக்கு. இதனால் என்ன லாபம்? என்று கேட்டால்; ஒரு பதிலுமில்லை விழா எடுப்போரிடம், தம்மை அசிங்கப்படுத்துவதைவிட.
  2. இலங்கைத்தமிழருக்கு தனிப்பிரதேசம், உரிமை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக தலையால் நடக்கும் கிந்தியா அதற்கு சம்மதிக்குமா? அங்கே ஒரு இனவழிப்பு நடந்தேறும்.
  3. இதுதான் இலங்கையில் பெற்ற அனுபவம்! பல நாடுகள் சேர்ந்து தர்மத்துக்கு எதிராக செய்ததை இலங்கை தான் செய்தேன் என்று வெற்றி விழா எடுக்குது, அதற்கு இந்தியா பக்கத்துணை என்குது. சேர்ந்து நின்ற நாடுகளுக்கு அது எப்படி யாரால் ஆனது என்கிற உண்மை தெரிந்த படியால் உடனேயே உளவாளிகள் மாட்டுப்பட்டு விடுகின்றனர். இவர்கள் மட்டில் மேற்கு நாடுகள் மிக எச்சரிக்கையாக இருக்கின்றன. இவர்களோ; தாங்கள் பெரிய சீன உளவாளிகள் என்கிற நினைப்பு!
  4. சிங்கள அரசு சலுகைகளையும் சில்லறைகளையும் விட்டெறிந்து உளவாளிகளை வாங்கி பூந்து விளையாடியிருக்கும். ஆனா மேற்கு நாடுகள் அப்படியல்ல, விலைபோனதுகள் விலைபோய்க்கொண்டே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். பெற்றதாயையும் (இனம்) பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுப்பவனுக்கு பெரிதாக இருக்கப்போகுது?
  5. ம்ம்..... திருடர் தாயகத்தில் மட்டுமல்ல, எங்கே போனாலும் திருடர் ஏமாற்றுக்காரர் தம் தொழிலை விடுவதில்லை. இரத்தத்தோடு பிறந்த குணம். தம்மை பெற்றெடுத்த பெற்றோரையே ஏமாற்றி அவர்களது கடைசி நேரத்தில் கைவிடும் பிள்ளைகளும் பெருகுகின்றனர்.
  6. நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன், மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும்.
  7. இந்த ஆளுக்கு இலங்கையை மறக்கவும் முடியவில்லை அங்கு வராமல் இருக்கவும் முடியவில்லை. இவர் எப்போதுதான் உண்மையை பேசினார்? ஹிஹி..... அது இவரது மனைவிக்கு தெரியுமோ?
  8. ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!
  9. நாம் உதவி செய்கிறோம் எனும் பெயருக்காகவும் பாராட்டுக்காகவும் எங்களுக்காகவும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்யும் உதவி அவர்களுக்கு வேண்டியதா அதனால் அவர்கள் பயனடைவார்களா என்று அவர்களுடன் கலந்தாலோசித்து செய்வதே உண்மையான உதவி. உதவியென்கிற பெயரில் அவர்களுக்கு உடல் உபாதைகளை வருவிக்க கூடாது.
  10. தங்களது இனவாதமும் அதன் பின்னால் உள்ள திட்டங்களும் மாற்றமடைந்து இதுவரை தாம் பறித்தவற்றை இழந்துவிடுவோமோ, தாம் ஏற்படுத்திய இனவாதம் தங்களுக்கு எதிராக திரும்பி தம்மையே தாக்குமோ, இதனை தொடர்ந்து வருங்காலத்தில் பெரும்பான்மையின மக்களே தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையும் தோன்றலாம் என்றொரு பயம் அவர்களுக்கு. இன்னொரு புறம் எந்தவொரு தகுதியும் இல்லாமல் இனத்தை விற்று அடிமைகளாக சேவகம் செய்து போலிவாக்குறுதிகளும் செல்வாக்கும் காட்டி அமைச்சராக வலம் வருபவர்கள் வருந்தி உழைக்கவேண்டும், கொள்ளையடித்தவற்றை இழக்கவும் தண்டனை அனுபவிக்கவும் வேண்டி வருமேயென திணறுகிறார்கள். ஆனால் தமிழ் வேட்பாளர் எப்படி கருமமாற்றுவார் என்பது வேறு கேள்வி. ஏனெனில் வருபவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய் வாக்கு பெற்று அல்லது கைகாட்டி வாக்கு பெற்றுக்கொடுத்து அரியணை ஏற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார்கள்? எவ்வளவோ முயற்சித்து விட்டோம் இதையும் முயற்சிப்பதில் தவறொன்றுமில்லை. அப்படி செய்யும்போது, துரோகிகளையும் அவர்களின் செயற்பாட்டையுமாவது தடுக்காலாமாவென பார்க்கலாம். இவர்கள் வெளிப்படுத்தும் பயம், தமிழ் வேட்ப்பாளரை தடுக்கும் ஆர்வமெல்லாம் இந்த நாட்டில் இனவாதம் என்று ஒன்று வேரூன்றி நாட்டையும் ஜனநாயகத்தையும் தனி மனித சுதந்திரத்தையும் அழிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
  11. ஒருபுறம் அல்லாஹ்வின் பெயரால் கொலை, இன்னொரு புறம் புத்தரின் பெயரால் இனவழிப்பு. இது இரண்டும் நம் நாட்டில் தமிழரை குறிவைத்து இயங்குகிறது. மதத்தின் பெயரால் குறி வைத்து நிகழ்த்தப்படும் வன்முறை உலகுக அமைதிக்கே அச்சுறுத்தல்!
  12. பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.
  13. ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.
  14. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." அது கிடைக்கவில்லையே என ஏங்குவதை விட்டு எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த சுகம் எனக்கு கிடைத்திருக்கிறதே என இருப்பதைநினைத்து மகிழ்வடைந்தால் எல்லாமே நிறைவாகும். "உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு."
  15. முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும்.
  16. அதுசரி ..... கைது செய்யப்பட்டவர்களிடம் முறையாக விசாரணை செய்து விநியோகஸ்தர்களை கைது செய்து ஏன் தண்டிக்கவில்லை? கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுக்கு என்ன நேர்ந்தது? நீதிமன்ற முன்னிலையில் அழிக்கப்பட்டதா? இன்று கைப்பற்றப்படும் போதைப்பொருள் நாளைக்கு நுகர்வோர் சந்தைக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமாகும்? கைப்பற்றல், கைது நாடகம் இதனால் யாருக்கு என்ன லாபம்? எய்தவனை விட்டுவிட்டு வெறும் அம்பை நோவதேன்?
  17. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நியமிக்கப்பட்டவர்களே காவற்துறையினர். அவர்களோ, சட்டத்தை மீறுகின்றனர், நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து கேள்விக்குள்ளாக்குகின்றனர், வன்முறைகளை தூண்டுகின்றனர், குற்றவாளிகளை பாதுகாத்து தப்ப விடுகின்றனர், சமூக விரோதிகளை காக்கின்றனர், போதைப்பொருளை கடத்துகின்றனர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குகின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர். இவர்களுக்கு சட்ட அறிவுமில்லை பொது அறிவுமில்லை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தெரியாதவர்கள், தேவையற்ற, தமக்கு அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அமைதியை குழப்பி பிரச்சனைகளை சிக்கலாக்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர், அதிகாரங்களை துஸ்ப்பிரயோகம் செய்கின்றனர். நீதிமுறை தெரியாத, ஒழுக்கமற்ற இவர்கள் எதற்காக இங்கு நிலைநிறுத்தப்பட்டுளார்கள்? இவற்றை எங்கள் பிரதேசங்களில் ஊக்குவிக்கப்பதற்காக சம்பளம் கொடுத்து அரசாங்கம் வளர்க்கிறது. இவர்களை காவற்படை என அழைப்பதை விடுத்து காவாலிப்படை என விளிப்பதே பொருத்தமானது!
  18. அட இவ்வளவுதானா தமிழ் படுகிற பாடு காணாதென்று எதிர்காலத்திலுமா? எனது பேரப்பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் பெயருக்காக அடிபட வேண்டி வந்தால்?
  19. தொடர்ந்து போலீசாரின் விசாரணை (வியாபாரம்) நடைபெறுமென நம்பலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலும் அநீதியுமே தொடரும்.
  20. உந்தகுசும்புதானே கூடாது சாமியார். அவர்தானே நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார். இப்போ, எண்களும் சுயம் மாறி வேலை செய்யுமோ இல்லையோ? இனி, தாங்கள் தடக்கி விழுந்தாலும் சோதிடம் கேட்டு சோதிடப்பிரியர்களின் தொல்லை தொடரப்போகுது கந்தையாப்பாவுக்கு! தெரியாமல் வாயை கொடுத்து விட்டார் பாவம். தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் தொடருவோரின் வாழ்வு!
  21. பாவம் சிறியர்! அவர்கள் பெயர் வைப்பதில் முந்திவிட்டார்கள். பரவாயில்லை, நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன். களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?
  22. இப்போ, வரன் தேடுபவர்கள் பணம், அழகு, சண்டித்தனம், போலிக்கௌரவம் இத்யாதிகளையே தேடுகின்றனர். அறிவு, பண்பு, நேர்மை, சகிப்புத்தன்மை, சிக்கனம், உதவும் மன்னிக்கும் மனப்பான்மை இவையெல்லாம் வேண்டாதவை. அவை இப்போ பிள்ளைகளுக்கு போதிக்கப்படுவதுமில்லை.
  23. மறக்காமல் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சியுங்கள். அது, காலத்தின் கட்டாயம். வரலாறு என்றும் உங்களை நினைவு கூரும்.... நன்றி.
  24. ம்ம்.... அதுதான் பெரிய பிரச்சனை! ஊரிலே பரம்பரை பரம்பரையாக போர்காலத்திலும் சரி இப்போதும் சரி தொடர்ந்து இருப்பவர்களின் காணியிலேயே புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டுக்காசை கொண்டு வந்து, ஆனால் இனாமாக அடாவடியாக ஏழைகளின் காணியை அபகரிக்க முயற்சிப்பதை என்ன சொல்வது? ஊர்ல மட்டும் கள்ளர் காடையர் இல்லை, இங்கிருந்து பெயர்ந்து போன கள்ளர் காடையர் மீண்டும் வரும்போதெல்லாம் தமது தொழிலை விட முடியவில்லை தொடர்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் என்று அவர்கள் செய்யும் தொழிலை களவு என்று யாரும் பேசுவதில்லை.
  25. அது உங்கள் பணியல்லவா, அது யார் இப்போது குத்தகை எடுத்தார்கள் உங்களிடமிருந்து?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.