Everything posted by satan
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஜனாதிபதி பொது வேட்பாளரை முழுமூச்சுடன் எதிர்ப்பேன் என்றவர் களத்தில் குதிக்கலாம்.... ஆனந்திக்கு அச்சுறுத்தல்கள், தூதுகள், வசைகள் வரலாம்..... நீ, நான் போட்டிகள் எழலாம்.....எது வேண்டுமானாலும் நேரலாம், இதெல்லாம் நமக்கு புதிதல்ல. பொது வேட்பாளர் வென்றால்; தாம் காட்டிக்கொடுத்து தரகு பணம்பெறுவது ஊரை பேய்க்காட்டி உலா வருவது தடைப்படுமே என்கிற ஏக்கத்தில், ஏதோ தமிழருக்கு சிங்களமே ஜனாதிபதியாகவேண்டுமென்று கொக்கரிக்கிறார். இவ்வளவுகாலமும் யார் ஜனாதிபதியாக இருந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர் ஏதிலிகளானார்கள் என்று தெரியவில்லை, ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர் போல் கதையளக்கிறார் ஒருவர். அவரை முதலில் உண்மையை உணர செய்யுங்கள், தற்போதைய முடிவுக்கு தமிழர் வரக் காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தி, ஜதார்த்ததை ஏற்றுகொள்ளச்செய்யுங்கள். கற்பனையில் வாழும் ஒருவரை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள். ஏற்கெனவே தான்தான் ஜனாதிபதி எனும் நப்பாசையை வெளியிட்டவர் அவர். மூர்க்கமாக தமிழரை அழிக்க கங்கணம் கட்டும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழருக்கு என்னத்தை வாங்கித்தரப்போறார்?
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும். ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
என்னமா மக்கள் மேல் பாசம் பொங்கி வழியுது இவருக்கு தேர்தல் காலங்களில். மக்கள் வீதியில் அலையும்போது அவர்களோடு இவர் இல்லை, சிங்களத்தோடு கிச்சுமுச்சு விளையாடி மகிழ்ந்திருந்து விட்டு, இப்போ ஓடி வருகிறார் மீண்டும் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று ஏன் அரசு பிரச்சாரம் செய்தது? மிகுதிப்பேர் அவ்வளவானோரையும் கொல்வதற்காகவா? சரி, மக்களை மீட்க போர் நடத்தியதாக கூறும் பொறுப்புள்ள அரசு, அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பதாக என்ன ஆயத்தம் செய்திருந்தது? வெட்ட வெளியில் முள்ளுக்கம்பிகளுக்கிடையில் மந்தைகளைப்போல் தண்ணீர் வசதியில்லை, உணவு வசதியில்லை, சுகாதாரம் கிஞ்சித்துமில்லை. தொற்று நோயாலேயே பல மக்கள் இறந்தார்கள். அப்போ போர்நிறுத்தம் கோரியிருந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள்? வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு அறிவித்தே சென்றார்கள். அவர்களின் மரணத்திற்கு இவர்களின் பதிலென்ன? புலிகளை அழித்த பின்னே தமிழருக்கு தீர்வு என்று சொன்னவர்கள், அவர்களை அழித்த பின் இப்போ, புலிகள் இல்லை தமிழருக்கு தீர்வு என்பது தேவையற்றது, தமிழர் இங்கு வாழ விரும்பினால் வாழலாம் தீர்வு எதுவும் கேட்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன? நம் தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுக்காத விடையங்களா? செய்யாத சமரசங்களா? எழுதாத உடன்படிக்கைகளா? செய்யாத அஹிம்சை போராட்டங்களா? அவைகளை மதித்ததா சிங்களம்? எதற்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இந்தப்பிரச்சனை நீடிக்கின்றன? உண்மையான நோக்கத்துடன் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ செயற்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனை எப்போதோ சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் சிங்களமே பலதடவை சொல்லியிருக்கு நாங்கள் பிரச்சனைக்குரிய தீர்வை வைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா எங்களை அழைத்து அறிவுறுத்துகிறது என்கிறார்கள். இதுவரையில், நாட்டில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது எதனால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது எனஅடையாளம் காணத்தெரியாதவர்களால் எப்படி என்ன தீர்வை வைக்க முடியும்? தமிழருக்கு நாட்டில் பிரச்சனை இல்லை என்கிறார்கள், அபிவிருத்தியே அவர்கள் பிரச்சனை என்கிறார்கள், அயர்லாந்து கொள்கையை யோசிக்கிறோம், தென்னாபிரிக்க கொள்கையை பரிசீலிக்கிறோம் என்று ரீல் விடுகிறார்கள். ஆனா தீர்வேதும் இல்லாமலே தமிழரை அவர்தம் நிலங்களிருந்து விரட்டுகிறார்கள், கோயில்களை உடைக்கிறார்கள். பிரச்னையேதும் இல்லாமலா தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன? எரியூட்டப்பட்டன? பேச்சுக்கள் நடந்தன? உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன? போராட்டம் நடந்தது?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா மௌனம் காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
இலங்கையில் யார் அரச கட்டிலேறினாலும் அதை யாழில் உற்சாகமாக கொண்டாட ஒரு வேலையற்ற கூட்டமுண்டு, இந்தியாவில் யார் ஏறினாலும் கொண்டாட ஒரு மத கூட்டமுண்டு, இவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை, அவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை நம்மினத்துக்கு. இதனால் என்ன லாபம்? என்று கேட்டால்; ஒரு பதிலுமில்லை விழா எடுப்போரிடம், தம்மை அசிங்கப்படுத்துவதைவிட.
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இலங்கைத்தமிழருக்கு தனிப்பிரதேசம், உரிமை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக தலையால் நடக்கும் கிந்தியா அதற்கு சம்மதிக்குமா? அங்கே ஒரு இனவழிப்பு நடந்தேறும்.
-
அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
இதுதான் இலங்கையில் பெற்ற அனுபவம்! பல நாடுகள் சேர்ந்து தர்மத்துக்கு எதிராக செய்ததை இலங்கை தான் செய்தேன் என்று வெற்றி விழா எடுக்குது, அதற்கு இந்தியா பக்கத்துணை என்குது. சேர்ந்து நின்ற நாடுகளுக்கு அது எப்படி யாரால் ஆனது என்கிற உண்மை தெரிந்த படியால் உடனேயே உளவாளிகள் மாட்டுப்பட்டு விடுகின்றனர். இவர்கள் மட்டில் மேற்கு நாடுகள் மிக எச்சரிக்கையாக இருக்கின்றன. இவர்களோ; தாங்கள் பெரிய சீன உளவாளிகள் என்கிற நினைப்பு!
-
அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
சிங்கள அரசு சலுகைகளையும் சில்லறைகளையும் விட்டெறிந்து உளவாளிகளை வாங்கி பூந்து விளையாடியிருக்கும். ஆனா மேற்கு நாடுகள் அப்படியல்ல, விலைபோனதுகள் விலைபோய்க்கொண்டே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். பெற்றதாயையும் (இனம்) பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுப்பவனுக்கு பெரிதாக இருக்கப்போகுது?
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
ம்ம்..... திருடர் தாயகத்தில் மட்டுமல்ல, எங்கே போனாலும் திருடர் ஏமாற்றுக்காரர் தம் தொழிலை விடுவதில்லை. இரத்தத்தோடு பிறந்த குணம். தம்மை பெற்றெடுத்த பெற்றோரையே ஏமாற்றி அவர்களது கடைசி நேரத்தில் கைவிடும் பிள்ளைகளும் பெருகுகின்றனர்.
-
அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன், மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும்.
-
இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்
இந்த ஆளுக்கு இலங்கையை மறக்கவும் முடியவில்லை அங்கு வராமல் இருக்கவும் முடியவில்லை. இவர் எப்போதுதான் உண்மையை பேசினார்? ஹிஹி..... அது இவரது மனைவிக்கு தெரியுமோ?
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!
-
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் செய்யப் போறீங்களா, ஒரு நிமிடம் இதை படியுங்கள்.
நாம் உதவி செய்கிறோம் எனும் பெயருக்காகவும் பாராட்டுக்காகவும் எங்களுக்காகவும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்யும் உதவி அவர்களுக்கு வேண்டியதா அதனால் அவர்கள் பயனடைவார்களா என்று அவர்களுடன் கலந்தாலோசித்து செய்வதே உண்மையான உதவி. உதவியென்கிற பெயரில் அவர்களுக்கு உடல் உபாதைகளை வருவிக்க கூடாது.
-
பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டுவாரா? நிலாந்தன்!
தங்களது இனவாதமும் அதன் பின்னால் உள்ள திட்டங்களும் மாற்றமடைந்து இதுவரை தாம் பறித்தவற்றை இழந்துவிடுவோமோ, தாம் ஏற்படுத்திய இனவாதம் தங்களுக்கு எதிராக திரும்பி தம்மையே தாக்குமோ, இதனை தொடர்ந்து வருங்காலத்தில் பெரும்பான்மையின மக்களே தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையும் தோன்றலாம் என்றொரு பயம் அவர்களுக்கு. இன்னொரு புறம் எந்தவொரு தகுதியும் இல்லாமல் இனத்தை விற்று அடிமைகளாக சேவகம் செய்து போலிவாக்குறுதிகளும் செல்வாக்கும் காட்டி அமைச்சராக வலம் வருபவர்கள் வருந்தி உழைக்கவேண்டும், கொள்ளையடித்தவற்றை இழக்கவும் தண்டனை அனுபவிக்கவும் வேண்டி வருமேயென திணறுகிறார்கள். ஆனால் தமிழ் வேட்பாளர் எப்படி கருமமாற்றுவார் என்பது வேறு கேள்வி. ஏனெனில் வருபவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய் வாக்கு பெற்று அல்லது கைகாட்டி வாக்கு பெற்றுக்கொடுத்து அரியணை ஏற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார்கள்? எவ்வளவோ முயற்சித்து விட்டோம் இதையும் முயற்சிப்பதில் தவறொன்றுமில்லை. அப்படி செய்யும்போது, துரோகிகளையும் அவர்களின் செயற்பாட்டையுமாவது தடுக்காலாமாவென பார்க்கலாம். இவர்கள் வெளிப்படுத்தும் பயம், தமிழ் வேட்ப்பாளரை தடுக்கும் ஆர்வமெல்லாம் இந்த நாட்டில் இனவாதம் என்று ஒன்று வேரூன்றி நாட்டையும் ஜனநாயகத்தையும் தனி மனித சுதந்திரத்தையும் அழிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
ஒருபுறம் அல்லாஹ்வின் பெயரால் கொலை, இன்னொரு புறம் புத்தரின் பெயரால் இனவழிப்பு. இது இரண்டும் நம் நாட்டில் தமிழரை குறிவைத்து இயங்குகிறது. மதத்தின் பெயரால் குறி வைத்து நிகழ்த்தப்படும் வன்முறை உலகுக அமைதிக்கே அச்சுறுத்தல்!
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.
-
"நிம்மதியைத் தேடுகிறேன்"
"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." அது கிடைக்கவில்லையே என ஏங்குவதை விட்டு எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த சுகம் எனக்கு கிடைத்திருக்கிறதே என இருப்பதைநினைத்து மகிழ்வடைந்தால் எல்லாமே நிறைவாகும். "உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு."
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!
முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும்.
-
வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரிப்பு : மூலச்சக்திகள் யார்?
அதுசரி ..... கைது செய்யப்பட்டவர்களிடம் முறையாக விசாரணை செய்து விநியோகஸ்தர்களை கைது செய்து ஏன் தண்டிக்கவில்லை? கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுக்கு என்ன நேர்ந்தது? நீதிமன்ற முன்னிலையில் அழிக்கப்பட்டதா? இன்று கைப்பற்றப்படும் போதைப்பொருள் நாளைக்கு நுகர்வோர் சந்தைக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமாகும்? கைப்பற்றல், கைது நாடகம் இதனால் யாருக்கு என்ன லாபம்? எய்தவனை விட்டுவிட்டு வெறும் அம்பை நோவதேன்?
-
தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் : சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பியோட்டம் - சார்ள்ஸ் நிர்மலநாதன் கடும் காட்டம்
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நியமிக்கப்பட்டவர்களே காவற்துறையினர். அவர்களோ, சட்டத்தை மீறுகின்றனர், நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து கேள்விக்குள்ளாக்குகின்றனர், வன்முறைகளை தூண்டுகின்றனர், குற்றவாளிகளை பாதுகாத்து தப்ப விடுகின்றனர், சமூக விரோதிகளை காக்கின்றனர், போதைப்பொருளை கடத்துகின்றனர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குகின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர். இவர்களுக்கு சட்ட அறிவுமில்லை பொது அறிவுமில்லை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தெரியாதவர்கள், தேவையற்ற, தமக்கு அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அமைதியை குழப்பி பிரச்சனைகளை சிக்கலாக்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர், அதிகாரங்களை துஸ்ப்பிரயோகம் செய்கின்றனர். நீதிமுறை தெரியாத, ஒழுக்கமற்ற இவர்கள் எதற்காக இங்கு நிலைநிறுத்தப்பட்டுளார்கள்? இவற்றை எங்கள் பிரதேசங்களில் ஊக்குவிக்கப்பதற்காக சம்பளம் கொடுத்து அரசாங்கம் வளர்க்கிறது. இவர்களை காவற்படை என அழைப்பதை விடுத்து காவாலிப்படை என விளிப்பதே பொருத்தமானது!
-
அப்பா உடனே வாங்கோ.
அட இவ்வளவுதானா தமிழ் படுகிற பாடு காணாதென்று எதிர்காலத்திலுமா? எனது பேரப்பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் பெயருக்காக அடிபட வேண்டி வந்தால்?
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
தொடர்ந்து போலீசாரின் விசாரணை (வியாபாரம்) நடைபெறுமென நம்பலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலும் அநீதியுமே தொடரும்.
-
அப்பா உடனே வாங்கோ.
உந்தகுசும்புதானே கூடாது சாமியார். அவர்தானே நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார். இப்போ, எண்களும் சுயம் மாறி வேலை செய்யுமோ இல்லையோ? இனி, தாங்கள் தடக்கி விழுந்தாலும் சோதிடம் கேட்டு சோதிடப்பிரியர்களின் தொல்லை தொடரப்போகுது கந்தையாப்பாவுக்கு! தெரியாமல் வாயை கொடுத்து விட்டார் பாவம். தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் தொடருவோரின் வாழ்வு!