Everything posted by satan
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இது, வீட்டுக்காரிக்கு தெரியுமோ? இல்ல..... வீட்டுக்கும் இல்லாம, பக்கத்துக்கு வீட்டுக்கும் இல்லாம மிளகாய்த்தூள் குப்பையிலே போய் விழுந்திடுமோ என பயமாய் இருக்கு. பிறகு, சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறவைக்கும் மிளகாய்த்தூளால் அர்ச்சனை நடக்கலாம். சீ சீ ...... சிறியர் மருத்துவமையிலேயே ரொம்ப நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆளாச்சே!
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருடத்தில் ஒருநாள் உடுப்பு எடுப்பவர்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் எங்கோ போய் விடடீர்கள் தலைவா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் புத்தாண்டு, கொண்டாட்டம். அவர்களுக்கு வருடத்தில் ஒருநாள்... புத்தாண்டு! அதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து, வந்து கால் கடுக்க நிக்கிறார்கள். அதை படம் பிடித்து போட்டு உங்களை நிஞாயப்படுத்துகிறீங்களோ எண்டொரு சந்தேகம் எனக்குண்டு.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப தான், நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ? பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
அப்பாடா... நல்ல வேளை, நான் தப்பிச்சேன்! உதல்லாம் தற்கொலையாகாது சிறியர். தமன்னாவை பாத்திட்டு தற்கொலையா? ஒருவேளை அவாவோட போக முடியலை எண்ட கவலையால் வந்த விரக்தியாய் இருக்குமோ? உங்களுக்கு ஏற்றாற்போல் படங்களும் செய்தியும் வாய்த்து விடுகிறது, யாரும் ஏமாறாவிடாலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவீர்கள். கண்டிப்பாக பனைமரம் வெட்டிய செய்தி உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்த்தேன். புதினம் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, பனைக்கு கீழிருந்து பால் குடிக்கிறவர்கள், பட்டம் விடுகிறவர்கள் எல்லாம் பனைமரத்தின் அருமையை நினைத்து கவலையும் கோபமும் கொண்டிருப்பார்கள். அந்த பனைமரத்தின் அருமை அவர்களுக்குத்தான் புரியும்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
சாமியார்! அந்தப்பதிலுக்காகத்தான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கூழ் முட்டை மைத்திரியர் நாளைக்கு மறுப்பறிக்கை விடுவார் தான் அப்படி சொல்லவில்லை என. எப்படியிருந்தாலும் மூஞ்சூறு தானே போய் பொறியில தலையை மாட்டிருச்சு. யாருக்காக மாட்டினாரோ தெரியல. ஒன்று, சிறை அல்லது மனநோயாளர் வைத்தியசாலை காத்திருக்கு இவருக்கு. ஆனால் என் மனம் இந்தப்பொறி பத்தியெரியாதா என ஏங்குது!
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
மக்கள் ஏமாளிகளாய் இருந்தால், எத்திப்பிழைக்கும் கூட்டம் பெருகிக்கொண்டே போகும். இந்த துரோகிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் போகுது.
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....
-
முன்னாள் போராளிகளின் நலன் பேணவுள்ள முரளிதரன்
இதெற்கெல்லாம் காரணம் யாரோ? விநாயக மூர்த்தி முரளிதரன் அவர்களே! இந்நாள்வரை இது உங்கள் கண்களுக்கு தெரியாமல் இப்போ தெரிய வந்ததன் காரணந்தான் என்னவோ? கோயிற் திருவிழா வந்தால் பிச்சைக்கார கூட்டமும், திருடர் குழாமும் சுவாமி தரிசிக்க விழுந்தடித்து போவார்கள். ரணில் பிரித்தெடுத்த இந்தச் சாத்தானை மகிந்த குடும்பம் பயன்படுத்தியது, இதுவும் ரணிலை சாடினார். இப்போ; மகிந்த கோஸ்ட்டி இவரை கண்டுகொள்வதில்லை, மறுபடியும் ரணில் பல்லவி, ஆதரவு என கிளம்பி விட்டார். பிரேதசவாதம் பேசி வடக்கு மக்களை துரத்திய பிசாசு அணைக்க துடிக்குது.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
தாமரை கோபுரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்களும் செய்திகளில் படித்தறிந்தவர்களும் யாரோ இணைத்த படத்தை பார்த்து இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து, அனுபவித்து, ரசிப்பவர்களும் உண்டு. பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. உண்மையில் நான் சொன்னவை நான்கண்டு அனுபவித்தவையே, பச்சை மிளகாய் ஒன்று, நூறு கிராம் மரக்கறி என்று வாங்குவோரும் உண்டு. அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள். கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு, அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு எந்த சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை. இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை. இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காய் தேடி தெருவில் அலைவோரை பார்த்து ஆறுதல் சொல்வாருமில்லை. இவையெல்லாம் பார்க்கப்படாத மறைக்கப்பட்ட உண்மையின் மறுபக்கங்கள். நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓடியோர் சொர்க்கபுரியாக வர்ணிக்கும் நாள் அதிக தூரமில்லை. இது சிங்களத்தின் ஒரு வெற்றியே. அது எங்கிருந்து இந்தப்பணத்தை பெற்று ஏன் இப்படி அலங்கரிக்கிறது என்று யாரும் சிந்திக்கபோவதுமில்லை. எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம் ஆனால் அவர்கள் பார்க்காத கதைக்க விரும்பாத உண்மைகள் இவை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஆமா ...... அவர் சுற்றுலா போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
தேர்தலுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன?
-
இலங்கையில் ராஜபக்ஸவை விரட்டியடித்தது யார்? தமிழர்கள், வெளிநாட்டு சக்தி பற்றி அவர் கூறுவது என்ன?
ஆமாம். "இது சிங்கள பௌத்த நாடு" என ஆர்ப்பரித்து உங்களை அரச கட்டிலேற்றிய அந்த சிங்கள பௌத்தமே உங்களை கைவிட்டது விரட்டியது என்பதுதான் உண்மை. அது தவிர, போருக்கு முன் போர் ஆடைகளை அணியும் போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும்போதே வீரத்தையும் அதன் சிறப்பையும் பேச வேண்டும் என்பது உங்கள் அரசியலில் உண்மையாயிற்று. அது சரி... மிகப்பலம் வாய்ந்த விடுதலைப்புலிகளை அழித்த உங்களுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டத்தை அடக்கி ஆட்சியை தக்க வைக்க உங்களால் முடியவில்லை? எழுதியதுதான் எழுதினீர்கள், உங்களுக்கு விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய சர்வதேச சக்திகள் ஏன் உங்களுக்கு எதிராக திரும்பியது எனவும் விவரிக்கலாமே. ஆர்ப்பாட்டம் செய்து விரட்டியவர்களுக்கு தெரியும், தாம் யார், ஏன் அதை செய்தோம் என்பது, உங்களுக்கு விளங்காத மாதிரி கதை எழுதி மகிழுங்கள். போனதடவை தமிழ் கிறிஸ்தவர்களை கொன்று பதவியேறி பாதியில் இறங்கினீர்கள், இனியொரு இன, மத கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாமென கனவு காணாதீர்கள். அது உங்கள் கடந்தகால அரசியலையே கேள்விக்குறியாக்கி விடும். புத்தகம் வெளியிட்டு அனுதாபத்தை தேடி காலத்தை வீணாக்குவதை விடுத்து சிறை செல்லாமல் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல சட்டத்தரணியை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவரும் வழியைப் பாருங்கள், இல்லையேல் அதை நீங்கள் இழக்க நேரிடும். எல்லா இழப்பையும் உங்களால் தாங்க இயலுமா என்பது தெரியவில்லை, அடுத்தவருக்கு இழப்பை ஏற்படுத்தி மகிழ்ந்தவர்களல்லவா நீங்கள்!
-
இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் தேசிய தினம்
ம்ம் ... எவனெவனோ இலங்கையில் தமது நாட்டின் சுதந்திர தினத்தை, தமது தேசிய கீதத்தை இசைத்து கொண்டாடுகின்றனர் ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்காக உழைத்த தமிழர் தமது மொழியில் சுதந்திர கீதம் இசைக்கக்கூடாது, அவர்கள் இந்நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடாது. இது, இந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதா என தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
-
கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
நல்ல வேளை, பங்குத்தந்தையிடம் அளித்துள்ளார். அரசியல்வாதிகள், கர்தினாலை நன்கு அறிந்து வைத்துள்ளனர் போலும்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
கனடாவுக்கு போன அனுரா, அனுபவமுள்ள ஒருவரை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லையா? அல்லது அசம்பாவிதத்தை தவிர்த்துக்கொண்டாரோ? அது சரி... இலங்கையிலேயேதானே தேர்தல் வரப்போகுது, இவர் ஏன் கனடாவுக்கு பிரச்சாரம் செய்யப்போனார்? கோத்தா போல் வாக்காளர்களை இறக்குமதி செய்யபோகிறாரோ?
-
கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?
விரட்டியது, விதியோ.... சதியோ..... என்கிற விவாதத்திற்கு இடமேயில்லை, அவரை விரட்டியது சரியே! அதாவது, அவரை தெரிந்தெடுத்தவர்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால். இதில் தமிழருக்கு பங்குமில்லை பாத்திரமுமில்லை அதனால் புலி, புலம்பெயர்ஸ் புலம்பல் இங்கில்லை. வெளிநாட்டு சக்தி என்று குறிப்பிடுகிறார். தன் பிழையை ஏற்றுக்கொள்ளாமல் பிறர்மேல் பழி போடுவது இவர்களது இயல்பு, அல்லது தமிழரின் வாக்கை குறி வைத்து பழைய பல்லவியை தவிர்த்துக்கொண்டாரோ?
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
அட ..... சிங்கள பௌத்தர்களிடம் அப்படி ஒன்று இருக்கிறதா? வரலாறு அப்படி சொல்லவில்லையே. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே இத்தனை லட்ஷம் தமிழர்கள் கொலையுண்டு, சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். வேறு எந்த பௌத்த நாட்டிலும் இப்படி கொடுமை நடந்தேறவில்லையே. இவர் அப்பப்ப கனவிலே இருந்து எழும்பி வந்து உபதேசிப்பார், அந்த உபதேசம் சீறிப்பாயும்.
-
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
பாத்துப்பேசுங்கோ பெருமாளு! காதில விழுந்திடப்போகுது, பிறகு, உங்களையும் இனவாதியாக சித்திரித்து ரசிக்கப்போகிறார்கள். இனவாத செயல்களும் பேச்சுகளும் இன்னும் முற்றுப்பெறவில்லை, ஆனால் அதை சுட்டிக்காட்டுவோரை இனவாதிகள் என முத்திரை குத்தி ரசிக்கினமாமெல்லே. தமிழர் தான் இனவாதிகளென வெகுசீக்கிரத்தில் நம்மவர்களே அறிக்கை விடுவினம் பாருங்கோ
-
மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
ம்ம்..... இவர்களை கைது செய்து, விசாரித்து, தடையங்களை தேடி, நீதிமன்றத்தில் நிறுத்தினால்; அலாக்காக சட்டத்தரணிகள் என்கிற அயோக்கியர்கள் அவர்களை நிரபராதிகளென விடுவித்து விடுகிறார்கள் காசுக்காக. அப்போ, இப்படிப்பட்ட பணக்காரர்களுக்கு இப்படிப்பட்ட ஏழைகள் பலியாகி விடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை இப்படிப்பட்ட காம வெறியருக்கு ஆஜராகும் சட்டத்தரணிகளே இவர்களை ஊக்குவித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
-
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.
மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு களத்தில் நீங்களும் நானும் மட்டும் உரையாடவில்லை, பதிவை படித்தோருக்கு விளங்கும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்கப்போவதில்லை. நன்றி!
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உங்கள் கேள்வியென்ன.... அதற்கான எனது பதில் என்ன..... என்பதை ஒருதடவைக்கு மேல் விளக்கியுள்ளேன். இதற்குமேல் என்னால் முடியவில்லை. நீங்கள் சொல்வதை சொல்லி சரியென்று நிறுவுங்கள், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எந்தக்குடும்ப விவகாரத்தையும் அலசவில்லை. கபித்தனின் பதிவுக்கே, நாமேதோ ..... என்கிற பதிலை பதிந்தேன். யாராவது முடிந்தால் தயவு செய்து விளங்கப்படுத்துங்கபடுத்துங்களேன். இன்றைக்கு என்னோடு சன்னதமாடுவதென்றே வந்து நிற்கிறார்.
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ரஸ்யா படை எடுத்து உலக மக்களின் அமைதியை கெடுத்தது என்று நான் கூறவில்லை. அதை தேடிப்பிடிக்க எனக்கு அறிவு காணாது. ஆனால், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எத்தனையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுத்து அதிகார வர்க்கத்தை காப்பதும் மக்களின் அமைதி வாழ்வை கெடுப்பதே. வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இனி, புடின் ஆட்சிக்கு வந்தாலும் அவரால் முன்னுபோல் ஆட்சி செலுத்த அவரது உடல், பிற காரணிகள் இடம் கொடுக்குமா என்பதும் கேள்விக்குறியே. இவருக்கென ஒரு துரோகி பிறக்காமலா இருப்பார்?
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.