Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. எந்த சிங்கள ஜனாதிபதி தனது இனமும் படைகளும் போர் குற்றமிழைத்தது என்று ஒப்புக்கொள்வார் அவர்களை ஐநா விசாரணையின் முன் நிறுத்துவார் என்று எதிர் பார்க்கிறோம்? ஒரு சிங்கள தேச தலைவர் தமிழர் பக்கம் நின்று தீர்வுக்கு ஒத்துழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பை கொண்டிருந்தால் அநுர அல்ல நாம்தான் ஏமாளிகள். சர்வதேச அழுத்தத்தின் மூலமே தமிழர் தீர்வு சாத்தியம் அப்படி ஒரு தீர்வை ஐநா கொண்டுவந்தாலும் வீட்டோ அதிகாரத்தை பாவித்து சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை காப்பாத்தும், உலகத்தையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் உக்ரேன் ரஷ்ய போர் விவகாரத்திலேயே வீட்டோ நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, வீட்டோ அதிகாரமுள்ள ஒரு நாடு எதிர்த்தாலும் எந்த முடிவையும் எட்ட முடியாது என்ற நிலையில் ஏறக்குறைய அனைத்து வீட்டோ நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ள இலங்கையை எவர் சிறைக்கு அனுப்புவார் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்? சிங்களவனை தீர்வை நோக்கி தள்ள உறுதியான தமிழ் தலைமை ஒன்றும் ஒருத்தர் சொன்னால் எல்லோரும் கேட்கும் தலைவனும் உள்ளூரில் இருக்கவேண்டும் அப்படி யார் இருக்கிறார்கள்? மஹிந்த வந்தால் அவனுடன் சேர்ந்து சிங்ககொடி பிடிக்கிறார்கள், மைத்திரி வந்தால் அவனிடமே சிங்கள அதிரடிபடை பாதுகாப்பு கேட்கிறார்கள், ரணில் வந்தால் பங்களா கவுஸ் சொகுசு கார்கள் , சாராய அனுமதிபத்திரம் என்று கையேந்துகிறார்கள் பின்பு தேர்தல் வரும்போது சிங்கள தலைமைகளை சர்வதேசத்தின் முன் நிறுத்துவோம் என்று தமிழர் பகுதிகளில் ரீல் விடுகிறார்கள். இங்கே எம்மை ஏமாற்றுவது அதிகம் சிங்கள தலைமைகளா தமிழ் தலைமைகளா? அநுர சாமானியமக்களின் அடிப்படை தேவைகளையும் அதிகாரமிக்கவர்கள் பொதுமக்கள்மேல் செலுத்தும் ஆதிக்கத்தையும் இன மதம் பாராது வாட்டும் ஊழலையும் தடுத்து வேலை வாய்ப்பு விலைவாசி குறைப்பு , மொழி தொடர்பாடல் என்று பூர்த்தி செய்தால் அனைவரும் அவனவன் வேலையை பார்க்கபோய்விடுவான் இனபிரச்சனை அது இது என்று குரலெழுப்பமாட்டான் , அப்படி குரலெழுப்பினால் குட்டையை குழப்புகிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கெதிராக சொந்த இனமே திரும்பும் என்ற கொள்கை முன்னெடுப்பில் மிக சாதுரியமாக காய் நகர்த்துகிறான், அதில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது, தமிழர்கள் அநுரவை ஆதரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற பதவியை பிடிக்க துடிக்கும் தமிழ்தலைமைகள் அநுரவின் ஆதரவை எப்படி பெறலாம் என்பதற்கு ஓடி திரிகிறார்கள் என்பதே தற்போதுள்ள யதார்த்தம். பொது தேர்தலின் பின்னர் எப்படி அநுரவின் கடை கண் பார்வையை பெறலாம் என்ற சிந்தனையிலேயே ஐயாக்கள் ஆளுக்கொரு பைல்களுடன் ஓடியோடி கட்சிகூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அநுர ஜனாதிபதியான பின்னர் அவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை பார்த்து எந்த தமிழ்கட்சியும் அவர் ஆட்சிக்கெதிராக எந்த கடும் வார்த்தைகளையும் இன்றுவரை உச்சரிக்கவில்லை. எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும். இதனால் சிங்கள ஆதரவு கோஷம் என்று பொருள் கொள்ளவேண்டாம், எம்மிடம் எமது அரசியல்பற்றி என்ன தெளிவுள்ளது என்பதை அறியவே அவா. இனப்பிரச்சனையின் குரலாக எம் தரப்பிலிருந்து கடைசிவரை போர் வடுவின் ஆதாரமாக ஒலிக்கபோவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அழுகுரல்கள் மட்டுமே, அந்த குடும்பங்களுடன் ஒன்றிணந்து அனைத்து தமிழர்தரப்பும் போராட்டம் நடத்தினால் ஓரளவாவது நெருக்கடி கொடுக்கலாம்,அதுமட்டுமே போர்குற்றத்தின் முன் சிங்களத்தை நிறுத்த உதவகூடிய பெரும் துருப்பு சீட்டு, ஆனால் எவனாவது அவர்கள் பக்கம் திரும்பிகிறார்களா என்று பாருங்கள்? சிங்களவன் கொடுத்த சொகுசுகாரில் கண்ணாடியை உயர்த்திவிட்டு போராட்டம் நடத்தும் அவர்களை கடந்துபோகிறார்கள் அந்த அளவில்தான் இருக்கிறது நிலமை. காலம் முழுவதும் எமக்கான தீர்ப்பை வாங்கி தாருங்கள் என்று சொல்லி தமிழர்கள் வாக்களித்து தமிழர் பிரதிநிதிகளை கொழும்பு நோக்கி அனுப்பினார்கள், இந்த தேர்தலில் , தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களுக்கு தீர்ப்பெழுதி வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என்ற நிலமையே நிலவுவதாக தெரிகிறது. சிங்கள அரசியலும் தமிழ் அரசியலும் கொள்கையளவில் ஒன்றேதான் , அது ஏமாற்றுவது.
  2. திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்......... நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும் இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள், மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட அனைவருக்கும் தந்தையும் அவர்தான், அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்> சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம், எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம். அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது. தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள். விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது? ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள், உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை, அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.
  3. மக்கள் பிரதிநிதி என்று தமிழர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஒரு முதலைமச்சராக இருந்தவர் அவரே தவறணைக்கு அனுமதிப்பத்திரத்திற்கு சிபாரிசு கடிதம் என்ற பெயரில் தரகர் வேலை பார்த்திருக்கிறார் என்றால் என்றால் அந்த கீழ்தரமான வேலையை சரியென்று நீங்களோ நானோ வாதிடபோவதில்லைம் தவறென்று தெரிந்த ஒன்றை வைத்து நீங்களோ நானோ அவருக்கு வாக்களித்த வட புலமக்களோ ஜோக்கடிக்க போவதில்லை, நீங்கள் உங்கள் கருத்தையிட்டு தவறென்று உணர்ந்தால் வருந்திக்கொள்ளலாம். புத்திசாலிதனமாக இந்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று ஒதுங்கிவிட்டார், இல்லையென்றால் நிச்சயமாக விக்னேஷ்வரன் பொதுதேர்தலில் மக்களால் தூக்கியெறியப்பட்டிருப்பார். அத்தனை ஆவேசமாக விக்னேஷ்வரன் சமூக ஊடகங்களிலும் அங்குள்ள பெரும்பாலான மக்களாலும் காறி துப்பப்பட்டுக்கொண்டிருக்கிறார் .
  4. டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார். இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை. எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை. பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை. தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.
  5. அடுத்தவர் பிரச்சனையை எம் வீட்டு பிரச்சனையாக நினைத்து எமது சமூகமும் ஊடகங்களும் 100% பொங்கியெழுவது, ஆண் பெண் காதல் கல்யாணம் ஓட்டம் விவகாரங்களில் மட்டும்தான். ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அந்த சமூகத்தின் வறுமை, கல்வி வேலை வாய்ப்பு, கவனிப்பாரற்ற குடும்பங்கள், விதவைகள், பெண் தலைமைத்துவத்தில் மட்டும் வாழ்க்கையோடு போராடும் குழந்தைகள், மருத்துவம், மாற்றுதிறனாளிகள், தகர கொட்டைகைகளில் வெயில்காலத்தில் நெருப்புடனும், மழைகாலத்தில் வெள்ளத்துடனும் பாம்பு பூச்சிகளுடனும் குழந்தைகளுடன் அல்லாடும் ஏழைகள் என அனைத்து விடயங்களுக்காகவும் இதே வேகத்தில் அக்கறை செலுத்தினால் இந்த அஞ்சலோட்டங்கள் பற்றியும் பேச அருகதை கொண்டுள்ளோம். சிறுமி அல்லது சிறுவன் வயதில் உள்ளவர்கள்மீது தவறான காதல் , தனித்து அழைத்து சென்று குடும்பம் நடத்துதல் என்றால் மட்டும் எம்மில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற செய்திகள் பற்றி பேச உரிமை கொண்டுள்ளோம் , மற்றும்படி இது விவாதத்துக்குரிய ஒரு விஷயமல்ல அது அவரவர் மனமொத்த விஷயம். தம்மை சுற்றியவர்கள்பற்றி எந்த கவலையும் கொள்ளாது தமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் பற்றி சுற்றியிருப்பவர்கள் எதற்கு மனம் நொந்து சாவணூம்? இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மேலைநாடுகளில் அடுத்தவர் வாழ்க்கைமுறையை விமர்சிப்பது மூக்கை நுழைப்பது விவாத பொருளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  6. தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும். ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை. அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,
  7. அவர்கள் அடம் பிடிச்சாலும் இஸ்ரேல் மெளனிக்க வைக்கும் என்கிறீர்களா?
  8. மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல் செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
  9. புதிதாக பதவியேற்ற அநுர என்பவர் தற்போது வீசும் அநுர அலையை தக்க வைக்கவேண்டுமென்றால், திடீரென தமிழ் மக்களிடம் அவர் பக்கம் வீச தொடங்கிய நன்மதிப்பை தக்க வைக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தமிழர் சார்பில் பாராளுமன்றத்திலும், அரசிலும் அங்கம் வகித்த எவரையும் தனது அரசவையிலோ மக்கள் நிர்வாக சேவைகளிலோ சேர்த்து கொள்ளவே கூடாது. அதுவே தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.
  10. தமிழ்கட்சிகளின் சாணக்கியத்தால் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்ட அனுர கடந்தகால ஆட்சியாளர்கள்போல் டக்ளசையும், பிள்ளையான் கோஷ்டியையும் மீண்டும் அழைத்து பதவிகள் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜனாதிபதி பதவி ஏற்பில் அநுர பேசும்போது தனக்கு வாக்களித்தவர்களை மட்டுமல்ல தனக்கு வாக்களிக்காதவர்களையும் மனசில் கொண்டுள்ளேன் என்று கூறியிருக்கிறான், என்ன அர்த்தமோ இறைவனுக்கே வெளிச்சம். மதில்மேல் பூனையாக இருந்த முஸ்லீம்கள் அனுர வென்றதும் தெய்வமே நீங்களே வரவேண்டுமென்று நாங்கள் எல்லோருமே வாக்களித்தோம் அதுவே நடந்துபோச்சு இறைவனுக்கு நன்றி என்கிறார்கள். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் அனுரபோய் வாக்குபெட்டிகளை செக் பண்ணியா பார்க்க போகிறார் என்று. ஒரு பேச்சுக்கு, பேசாமல் பொது தேர்தலில் வடகிழக்கு மக்கள் அனுரகட்சிக்கு வாக்களித்து என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம். அரை நூற்றாண்டுகளுக்கு மேலாய் இந்த தமிழ்கட்சிகள் பேச்சை கேட்டு இதுவரை எதுவுமே நடந்ததில்லை, ஆக குறைந்தது அநுரவோடு ஒத்துபோயாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்தே அழுத்தங்கள் கொடுத்து பார்க்கலாம். ஆளும்கட்சிக்குள்ளிருந்தே குடைச்சல் கொடுத்து சர்வதேசத்துக்கு எமது பிரச்சனையின் தாக்கத்தை வெளிப்படுத்தலாம். ஆக குறைந்தது எமது பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் கல்விக்கு முக்கியத்துவம் கோரலாம். சந்தர்ப்பம் சூழ்நிலைகள் கருதி ஒரு மாறுதலுக்காக ஓடுகிற குதிரையில் பணம் கட்டி பார்க்கலாம், மாற்றம் எதுவும் இல்லையென்றால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழ்கட்சிகளின் பேச்சை கேட்டு நடந்துக்கலாம். இது சிங்களவனிடம் பிச்சை எடுக்குறமாதிரி தோன்றலாம், தமிழ்கட்சிகளிடமிருந்து பிச்சைகூட கிடைக்கவில்லையென்பதே யதார்த்தம். இது அநுரவுக்கானதோ அல்லது சிங்களவனுக்கான ஆதரவோ என்று பார்க்காமல் தமிழ்கட்சிகளின்மீதான வெறுப்புனும் நோக்கலாம்.
  11. ஜனநாயகத்தின் காவலன் இதோ உங்கள் முன் , முகத்தில் ஒருவித பயமும் சோகமும் தெரிகிறது.
  12. ஒருவேளை அரியநேந்திரன் வேட்பாளராக நிறுத்தபடாது இருந்திருந்தால் தமிழர்பகுதியின் வாக்குகள் அநுரவைவிட சஜித் எப்போதோ முன்னணியில் இருந்திருக்ககூடும். எது எப்படி என்றாலும் சிங்களதேசம் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்தவிதமான அக்கறையும் இல்லை அப்படி ஒரு சம்பவம் நடந்தால் , எப்படி சஹ்ரான் தேவாலயங்களுக்கு குண்டு வைத்து ஒட்டி உறவாடிய சிங்களவர் முஸ்லீம்கள் உறவுக்கு ஆப்படித்து தனது இனத்துக்கு தானே குழிபறித்தானோ அதேபோல் சிங்களவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழர் தீர்வு விவகாரத்தில் ஐநா பொறுப்புக்கூறல் விவகாரத்துக்கு, நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை பயங்கரவாதத்தை தான் அழித்தோம் என்று இன்றுவரை சமாளித்துவரும் சிங்களம் ஒரு இனகலவரத்துக்கு முயன்றால் ஆடு தானே கொண்டுபோய் கத்திக்கு தலையை நீட்டினமாதிரி ஆகிவிடலாம். அதனால் சர்வதேசம் ஒவ்வொரு மனிதனின் காற் சட்டைக்குள்ளிருக்கும் கைபேசிக்கு வந்துவிட்ட இக்காலத்தில் தமிழர்களுக்கெதிரான ஒரு கலவரம் என்றால் 83 போல் அல்லாமல் சிங்கள தனது இனத்தின் சர்வதேச பாதுகாப்பு கருதி அரசு இயந்திரம் முடிந்தவரை பெரும் எடுப்பில் அடக்க பார்க்கும் என்று நம்பலாம்.
  13. இன்றுவரை தமிழக ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தமிழக அரசோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்கள் என்றோ அ;ல்லது மீன் பிடித்தார்கள் என்றோ ஒத்துக்கொள்வதும் இல்லை ஒருவரி செய்தி எழுதுவதும் இல்லை. எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் .. இலங்கை கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கச்சதீவுக்கு அருகிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது..இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அல்லது இந்திய கடற்பரப்பில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் என்றும் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பின்பு அதே வாயால் இலங்கை தமிழர்கள் உரிமையை, அவர்கள் வாழ்வு மேம்பாட்டை வலியுறுத்துகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். மூன்று தசாப்த காலமாக உயிர் உடமை இழந்து போருக்குள் வாழ்ந்த ஈழ தமிழர்கள் இப்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் அது தவறென்று எந்த தரப்புமே தமது மீனவர்களுக்கு சொன்னதும் இல்லை தவறை சுட்டிக்காட்டியதும் இல்லை காலம் காலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆரை தவிர்த்து ஏனைய தமிழக கட்சிகளும் ஊடகங்களும் செய்வது வெறும் அரசியல் வியாபாரமும் ஊடக வியாபாரமும் மட்டுமே. உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள இந்தியாவால் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பல ஆயிரம் படகுகள் நடுவே கஞ்சா தங்கம் ஆயுதம் கடத்தும் ஒருசில படகுகளையே கண்டறியும் இந்திய கடற்படையால் நூற்றுக்கணக்கில் எல்லை தாண்டும் மீன்பிடி படகுகளை கண்காணிப்பது அத்தனை சிரமம் அல்ல, ஆனாலும் கண்டுக்காமல் இருப்பார்கள், ஒருதடவை கடலுக்கு போய்வர இழுவை படகுகளுக்கு சில லட்சம் வாடகை பணம் செலுத்தும் அன்றாடங்காய்ச்சி மீனவர்கள் பணத்தை செலுத்துவதற்காகவே தமது பகுதியை வெறுமையாக்கிவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர். மத்திய மாநில அரசுகள் எல்லை தாண்டும் மீனவர்களுக்கெதிராய் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினால் கொஞ்சமாவது பயப்படுவார்கள், ஆனால் அரசுகளே அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே அப்புறம் எப்படி தண்டனைகள் சாத்தியம்? ஒருதடவை எல்லைமீறும் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் அவர்கள் வரும் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு ஐடியா கொடுத்தார் , அதன்படி இலங்கையும் நடந்து கொண்டது,பறிமுதல் செய்யப்பட்ட வள்ளங்கள் கரையோரங்களின் நிறுத்தப்பட்டு உக்கிபோனது. அப்போது ஓரளவு அத்துமீறுதல் கட்டுக்குள் வந்தது, பின்பு இந்திய அரசின் பேச்சுவார்த்தையால் அது கைவிடப்பட்டது, எனக்கு தெரிந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை தமிழருக்கு நன்மையாக செய்த ஒரேயொரு முதலும் கடைசியுமான காரியம் அதுதான். மீனவர்கள் கைது செய்யப்படும்போது இந்திய ஊடகங்களில் பின்னூட்டமிடும் இந்திய தமிழர் பலர் , ஈழத்து அகதிகளுக்கு நாங்கள் இங்கே குடியுரிமை கொடுக்க வலியுறுத்துகிறோம், வீடுகட்டி கொடுக்கிறோம், சோறு போடுகிறோம், ஆனால் அவர்கள் எமது மீனவர்களை தாக்குகிறார்கள் கைது செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஈழத்து அகதிகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை நன்றியுணர்வுடன் நோக்கத்தான் வேண்டும், அதற்காக இலங்கையில் உள்ள கரையோர மக்களை பட்டினி போடலாம் தப்பில்லை என்பதுபோல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையை எந்த வழியில் புரிந்து கொள்வது? வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை ஆயுதபடைகளின் உதவியை கேட்கும் அளவிற்கு நிலமை இன்றுள்ளது.அவர்களுக்கு வேறு வழியில்லை. எந்த சிங்கள படைகளுக்கு எதிராக போரிட்டோமோ அதே சிங்கள படைகளுடன் ஈழ தமிழர்களை சேர்த்து வைக்கும் வேலையை தமிழகம் செய்கிறது.
  14. ஆழ்ந்த அனுதாபங்கள் நுணாவிலான், இந்த துயரை தாங்கும் வலிமையை இறைவன் தங்களுக்கு அருளுவாராக.
  15. வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம் ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத மர்மம். 23 வயது என்பது கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள். ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும் ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா? பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.
  16. 52 வயது என்பது ஒரு மனிதன் பேரன் பேத்திகளை காணும் வயசு. இந்த வயசில் 25 வயசு பெண் தனக்கு மாட்டிவிட்டது என்று நினைத்து ஏகப்பட்ட லட்சங்களை என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் எடுத்து விசுக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சபலம்? இவர்களை பருவ வயதில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு அங்கிள் தாத்தா என்று சொல்லி வரவேற்பதுகூட மிக அபாயகரமானது. கல்யாணம் என்பது சிலருக்கு அந்தந்த வயதில் தவறிபோகலாம், ஆனால் வசதியும் வதிவிட உரிமையும் உள்ள இவர் விதவைகளாக , இனி வாழ்வு எங்கே சென்று முடியும் என்று தெரியாமல் கல்யாண வயதை கடந்தும் இன்றும் முதிர் கன்னிகளாக ஏழைகளாக வாழ்விழந்து போயிருக்கும் ஏகப்பட்ட நடுத்தர வயது பெண்கள் வாழும் எம் மண்ணில் சட்டப்படி அணுகி திருமணம் செய்திருந்தால் இவரை வாழ்த்துவதற்கு வரிசையில் பலர் நின்றிருப்பார்கள். இவரை குறிப்பிடவில்லை, எல்லோரையும் குறிப்பிடவுமில்லை பெரும்பாலும் இவர் வயதையொத்த வெளிநாட்டில் நீண்டகாலம் திருமணம் செய்யாதவர்களில் பெரும்பாலோனோர் ஆபத்துக்குரியவர்கள். வாலிப வயது முழுக்க வேலைக்கும் போகாமல் கஞ்சா, தண்ணியடி, காட்ஸ் விளையாட்டு , அடுத்தவன்கிட்ட கடன் வாங்கிவிட்டு குடுக்காமல் விடுறது, காலம் முழுக்க ஆபாச படங்களுடன் காலம் கழிப்பது,கடன் அட்டை ஏமாத்துவேலை என்று வயதுகளை தவற விட்ட பின்னர் வாழும் நாட்டில் இவர்களைபற்றி தெரிந்து விடுவதால் நாடுகள் கடந்து யாரையாவது காசையும் விசாவையும் காட்டி வலையில் விழுத்தி நாசமாக்க பார்ப்பார்கள். இவர்களை மோசடிபேர்வழிகளே மிக இலகுவில் வலையில் வீழ்த்துவார்கள் அந்த வலையில் ஐயாவும் தன்னை சொருகி கொண்டார். செக்ஸ் என்பது மனிதனின் வாழ்வியலின் ஒரு அங்கம் வழிமுறை தவறி போகாதவரை அது ஒன்றும் கொலை குற்றமும் அல்ல,, இப்படி ஏமாளியாகி அள்ளியிறைத்த பணத்திற்கு மேற்குநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாலியல் நிலையங்கள் சென்று பல வருடங்கள் தமது உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இப்படி எல்லாத்தையும் பறி கொடுத்து யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் செய்திகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு இவரின் செய்தியை பிரதானமாக்கும் அளவிற்கு போயிருக்க கூடாது.
  17. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும். நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியது கேவலத்தின் உச்சம், நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு. சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில், இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று நம்மவர்கள் கூப்பாடு. இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர் புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும். அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள். புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.
  18. அப்படியென்றால் காலனித்துவங்கள் அறிமுகபடுத்திய உடைகள் அணிந்து கல்வி கற்க செல்வதும், காலனித்துவ மொழியான ஆங்கிலத்தில் கல்வி கற்பதும் அவனது பாடதிட்டங்களை பின் தொடர்வதும், அதன்மூலம் பட்டம் பெறுவதும் அந்த பட்டங்களை வைத்து காலனித்துவநாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்வதும் அங்கு நிரந்தர குடியுரிமைபெற விண்ணப்பிப்பதும் நிரந்தரமா அங்கேயே குடியேறுவதும், குடியேறியநாடுகளிலிருந்து அந்நிய செலாவணியை அள்ளி அள்ளி சொந்தநாட்டுக்கு அனுப்புவதையும் தடை செய்ய வேண்டுமே. மத்திய அரசு செய்யுமா? காலனித்துவத்தின் வாசனை எந்த வடிவத்திலிருந்தாலும் மாற்றம் செய்துதானே ஆக வேண்டும்.
  19. யசோ சுற்றுலாத்துறையில் வேலை செய்பவர்கள் நிகருக்கு தகவல்கள் அறிந்து வைத்திருக்கிறார்.
  20. அந்த கத்தரிகோலை பயன்படுத்தி யாராவது விமான கடத்தலில் ஈடுபடலாம் என்ற அச்சம்தான்
  21. தாக்குதல் நடந்தபோது இருந்த காருக்கும், இப்போ பொன்சேகா பார்வைக்கு வைச்சிருக்குற காரின் ஓட்டைகளுக்கும் உள்ள வித்தியாசம். நம்மில் பலர் குண்டுகளோடு குண்டுகளாய் வாழ்ந்துவிட்டும் பல குண்டுவெடிப்புகளை பார்த்துஇட்டும் வந்தவர்கள் . எந்த ஊரில் குண்டு வெடிச்சா இப்படி சமச்சீராக பொட்டு வைச்சமாதிரி ஒரே அளவிலிருக்கும்? அனுதாபம் தேடுவதற்காக ஒடிஜினல் ஓட்டைகளோடு கராஜ்சுக்கு கொண்டுபோய் எக்ஸ்ட்ராவா ஓட்டைபோட்டு கொண்டு வந்திருக்காரு போலும். இது ஸ்மார்ட் போன் காலம் வெறும் உணர்ச்சி பேச்சுக்கள் உசுப்பேத்தல்களை வைச்சு ஆட்சியை பிடிப்பதும் ஆக்களை ஆக்கள் ஏமாற்றுவதும் இயலாத காரியம் என்பதை மஹிந்த குடும்பம் ஆட்சியை பறிகொடுத்து ஓட்டமெடுத்தபோதே பொன்சேகா உணர்ந்திருக்கணும்.
  22. போர்க்காலங்களிலும் பேரழிவு காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களை எந்த சமூகமும் மதம் சார்ந்து அதனை பார்க்ககூடாது ஏனெனில் அது ஒரு அவசரகால நிலை, இந்தகால கட்டங்களில் எத்தனையோ சைவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன, எத்தனையோ கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் நாம் அதனை தூக்கி பிடித்து சர்ச்சையாக மாற்றியதில்லை, முஸ்லீம்கள் மட்டும் எந்த நெருக்கடியான காலங்களில்லும் தமது மதத்தை மட்டும் தூக்கிபிடித்து கதறுவது எதிலும் மத வியாபாரம் செய்யும் எரிச்சலின் உச்சம். தமிழர் பகுதியில் நின்று எமது சமூகம் எமது சமூகம் என்று தனது சமூகம் நோக்கி வெறிதனமாக கத்துகிறார் மைத்திரியின் ஆட்சியின்போது கிழக்கே ஹிஸ்புல்லா என்பவர் தமிழர்களின் நிலம் அபகரிப்பு, இஸ்லாமிய பல்கலைகழகம், பாடசாலைகள் , பள்ளிவாசல்கள் , கிராமங்கள் ,ஆளுனரிலிருந்து முதல்வர்வரை முஸ்லீம்கள் என்று என்று அதிவேகமாக தமிழர் நில அபகரிப்பில் ஈடுபட வடக்கே ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை ஏறக்குறைய முழுமையாக அபகரித்து,வவுனியா பகுதிகளில் தமது சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்து, அடுத்தகட்டமாக முல்லைதீவில் காடுகளை அழித்து முஸ்லீம் பரவலாக்கலுக்கு எத்தனங்கள் செய்து அப்படியே முஸ்லிம்கள் பெருமளவில் இல்லாத கிளிநொச்சியில் ஏற்கனவே ஐந்து பள்ளிவாசல்களிருக்க புதிதாக பள்ளிவாசலை மறைமுகமாக இவரே பின்னணியின் நின்று நகர பகுதியில் நிறுவியும்,பிறவற்றை புனரமைத்தும் என்று படிப்படியாக யாழ்ப்பாணம் நோக்கி நகரும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போதுதான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டு முஸ்லீம்களுக்கான ஆதரவு சிங்களவர்களிடையே முற்றாக சரிந்தது அவர்கள் கபளீகரமும் நின்று போனது. கெடுதல்களிலும் சில நன்மைகள் முளைக்கத்தான் செய்கின்றன.
  23. பையன் சொல்றது உண்மைதான், சமாரி அட்டபட்டுவ பாத்தா நமக்கே நித்திரை வருது, ஓவரா சாப்பிட்டு வாத்துமாதிரி நடக்குது பொண்ணு., ஆனாலும் அதிரடியில் பொம்பள ஷேவாக். ஆண்கள் அணியில் வெல்லாலகே இனிவரும் காலங்களில் இலங்கை அணியின் முதுகெலும்பாக இருக்கபோகிறார். பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிக சிறந்த ஒரு ஆல்ரவுண்டர் . இலங்கை அணி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை வென்றதுக்கு காரணமே வெல்லாலகேதான்.
  24. கடந்த சில வருடங்களாக ஸிம்பாப்வே அணியின் ரேஞ்சுக்கு தரம் இறங்கிய இலங்கை அணிகள், ஆண்களுக்கான ஒருநாள் தொடரிலும், பெண்களுக்கான ஆசியகோப்பை போட்டியிலும் ஆனானப்பட்ட இந்திய அணியையே ஊதி தள்ளி படிப்படியாக பழைய பலமான நிலைக்கு திரும்பி வருவதுபோல் ஒரு உணர்வு. அதுநிற்க, பாரம்பரியமிக்க வீரகேசரி நாளிதழ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையை வர்ணிக்கும் விதம் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும் எண்டால் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு . ஒருவேளை இந்த எபெக்ட்டா இருக்கலாம் >>>
  25. இரண்டுமேதான், இலங்கைக்குள் இன்னொருநாட்டை உருவாக்குவதை சர்வதேசங்களில் எந்தநாடும் இப்போதும் சரி அப்போதும் சரி ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனால் தனிநாடு எமக்கு விருப்பில்லை என்றில்லை, சாத்தியப்பாடான அணுகுமுறைகளையே முதலில் ஆராய வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் கொடிகளையும் எமது தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளின் புகைப்படங்களையும், மஞ்சள் சிவப்பு கொடிகளாய் எமது அடையாளத்தையும் தாங்கி நிற்கலாம் என்பதே மனசில் தோன்றுவது, மஞ்சள் சிவப்பு கொடிகளை தமிழர் பகுதிகளிலேயே எமது மக்கள் அடையாளமாய் தாங்கி நிற்கிறார்கள், சிங்களவனும் அதற்கு தடை விதித்ததாய் தெரியவில்லை. ஆகவே அது எம் பொது அடையாளமாய் இருக்கலாம். ஓரிரு தினங்களின் முன்னர் பிரம்டன் நகரபிதா எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராய் போராட்டம் நடத்திய சிங்களவர்களுக்கெதிராய் காட்டமான பதிலையும் வழங்கி உறுதியாய் குரல் கொடுத்ததெல்லாம் மிக பெரும் விஷயங்கள் அதை கனடாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களை பின் தொடர்வதே சாணக்கியம். கனடாவின் வரைமுறைகளை மீறி அவரைபோன்றவர்கள் எமக்காக செயல்படபோவதில்லை, போனால் அவர்கள் மீதும் சட்டம் பாயும் அவ்வாறான நிலமை உருவாக எமது அணுகுமுறைகள் இருக்க கூடாது என்பதே அவா. மீறி வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி எழுந்தமானமாய் போனால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கேஸ்தான். எமக்கான வாய்ப்புகளை சரியான பயன்படுத்துவதும் தவறாகிபோவதும் வலிமையுள்ள எம்மவர்களின் அமைப்புக்களின் கைகளிலேயே உள்ளது. எம்மை போன்ற சாமானியர்களால் எழுத்தில் மட்டுமே கவலைகளை முடியும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.