-
Posts
1536 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by valavan
-
அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை. I hurt myself என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன, நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும்,
-
கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்
-
புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை. தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.
-
இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?
-
எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள், சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும். தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா? இந்த லட்சணத்தில் சிங்களவன் சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில் சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும். அந்த பெருமையெல்லாம் எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம், மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல. வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.
-
யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!
valavan replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
அதானே திருடர்கள் வீட்டிலேயே திருடியிருக்கிறார்கள். -
சிங்கப்பூர் சிவாஜிகணேசன் எனப்படும் இந்த கலைஞர் ஸ்மார்ட்போன் காலத்தில் சிவாஜி வாழ்வதுபோல் அச்சு அசல் அவர்போலவே தோற்றம் நடிப்பு உடல்மொழி என்று பிரமிக்க வைத்தார். பார்க்கவே சந்தோஷமாக இருந்த இந்த காட்சி மிகபெரும் சோகத்தில் முடிந்தது, இந்த பாடல் முடிவில் மாரடைப்பினால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார் இந்த அற்புத கலைஞர்.
-
- 1
-
அதைதான் பலரும் யோசிப்பார்கள், ஒரு சில கிலோமீற்றர் நீளமான வல்லைவெளி வாகனங்களின் எண்ணிக்கை குறைவான காலங்களிலேயே விபத்துக்கும் உயிர்பலிகளுக்கும் பெயர் போனது, இப்போ வீட்டுக்கு மூன்று இரு சக்கர மற்றும் வாகனங்கள் உள்ள காலத்தில் விபத்துக்கான சாத்தியங்கள் சொல்லவே தேவையில்லை.. அந்த இடத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டு 40 வருடங்களுக்கு முற்பட்ட சமிஞ்சைகளை கையாள்வது அந்த ஊழியர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆப்பு வைக்கும் செயல், அவர்களை சில முரட்டு ஆசாமிகள் மதிக்கவும் போவதில்லை, குறுந்தூர இடைவெளியில் வேக தடுப்புகளூம் அங்கங்கே போக்குவரத்து பொலிசாரை நிறுத்தி பெரும்தொகை அபராதமும், சாரதி அனுமதி பத்திரம் பறிமுதலும் செய்தால் அரசுக்கும் வருமானம் ஆகும், அங்கவீனம் மற்றும் உயிர்பலிகளும் குறையும்.
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
valavan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார். அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால் ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும் பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால் அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல உண்டு என்றும் மேலும் சொன்னார் . ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள் பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர். உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?. -
ஆம் நீங்கள் சொல்வதுபோல் பலதரப்பட்ட தகவல்களை தருகிறார்கள், இப்படியும் ஒரு தகவல் உள்ளது. மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றவாளி இராகவன் சாவடைந்தார் மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை சாவடைந்தாக அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மற்றொரு தலைவரான கிசோர் மரண செய்தியை பெரும் துயரத்தோடு அறியத்தருவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பணிப்பின் பேரில் இலங்கை புலனாய்வு துறை முகவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கூலிப்படை சகிதம் கொலையை முன்னெடுத்திருந்தனர். அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://vidiyel.com/ஈழத்தீவு/மாமனிதர்-தராகி-சிவராம்-க/
-
அதென்ன வடக்கு மக்கள்? அதாவது வடக்கு மக்கள் சிங்கள தேசத்திலிருந்து விசேடமான பிரிவை சேர்ந்தவர்கள் என்று அநுர சொல்ல வருகிறாரா? ஒருவகையில் அதுவும் உண்மைதான், இங்கே சந்திக்கும் பல சிங்களவர்கள் யாழ்ப்பாணம் தாங்கள் போய் வந்தோம் யாழ்மக்கள் நல்லவர்கள் என்று என்னமோ ஐரோப்பா அமெரிக்கா போய் வந்தோம் என்பதைபோல பெருமையாகவும் வியப்பாகவும் சொல்வார்கள். சொல்லிவிட்டு எமது கண்களை கூர்ந்து பார்ப்பார்கள். அத்தனை லட்சம் அவர்களின் படைகள் இன்றும் வடக்கில் குவிந்திருந்தாலும் அவர்களுக்கு அது அவர்களின் லங்கா என்பதில் திருப்தியில்லை அந்த பயமும் கெளரவமும் தனித்துவமும் கரிகாலன் தந்தது. கிழக்கு ஏற்கனவே பறிபோய்விட்டது இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் கிழக்கின் விடிவெள்ளிகள் சிங்களவனுடன் பார்ட்டி வைத்து பகிர்ந்தளிக்கிறார்கள் சிங்களவன் எமக்கான தீர்வொன்றை தானாக ஒருபோதும் தரபோவதில்லை, அப்படி ஒரு காலம் ஏதோ ஒரு முனையிலிருந்து எம் கதவை தட்டும்வரை.... வடக்கையாவது முழுமையான தமிழர் பிரதேசமாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க முடிந்தவரை தமிழர்களின் நிலங்களை பிறர் இனங்களுக்கு விற்காமல், எமது மதங்கள், கலாச்சாரங்கள்,வியாபார நடவடிக்கைகள் மொழியின் ஆளூமை அனைத்தையும் முழுமையாக முழு வீச்சாக கடைப்பிடித்தால், சிங்களவர்கள் காலபோக்கில் எம் நிலத்தை தின்னமுன்னர் வன்னி முல்லை கிளிநொச்சியில் மக்கள் இல்லாத நிலபரப்புகளை நிலபுலனற்ற மலையக தமிழர்கள், வடகிழக்கின் தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை குடியேற்றி பெருமெடுப்பில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து முழுமையாக எம் மக்களால் சூழப்பட்ட மாகாணமாக உருவாக்கி நேர்மையானதும் ஒழுக்கமானதுமான புதிய அரசியலை பிரசவித்தால் எம் மண் சிங்கள தேசத்துக்குள்ளேயே தனித்துவமாக இயங்கும், சிங்களவர்கள் விருந்தாளிகள்போல் வந்து போகட்டும், இதுநாள்வரை எம்மிடையே இருந்த கட்சிகள் இல்லாமல் நேர்மையும் இளமையும் ஒழுக்கமும் கலந்த தமிழர் பிரதிநிதிகள் உருவாகி காலத்திற்கேற்ப சிங்கள அரசியலுடன் முட்டி மோதாமல் எமது சக்தியை வைத்து எம் மக்களின் நலன்களுக்கான ஒரு பேரம் பேசும் அரசியல் செய்து எம் மக்களை தனித்துவமானவர்களாக்கலாம். அதிலாவது சிறு நிம்மதி.
-
ஒருவேளை அநுர மூன்றில் இரண்டுக்குமேல் பெரும்பான்மை பெற்று எவர் கூட்டணியுமின்றி இலங்கை ஆட்சியை கைப்பற்றினால், அநுரவா டக்ளசா என்று வந்தால் இந்தியா அநுர பக்கமே நிக்கும். காலம் காலமாக இந்தியா தமிழர் நலனுக்காக இலங்கையுடன் முட்டிமோதி நின்றதேயில்லை, தனது நலனுக்காகவே அது நின்றிருக்கிறது. இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் வாங்கி தந்திருப்பார் என்று இன்றும் நம்பும் தமிழர்கள் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள், பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கு திமிர்காட்டிக்கொண்டு ,சோவியத் நட்புறவு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவையே அழிக்கப்பார்த்த அமெரிக்கா பக்கம் அதி நெருக்கம் காட்டிய ஜேஆரை தனது பிடிக்குள் கொண்டுவரவே இந்திராகாந்தி இலங்கை தமிழர் பிரச்சனையை அக்கறையாக கையிலெடுத்தார், மற்றும்படி தமிழருக்கு தமிழீழம் வாங்கிதர என்பதெல்லாம் கிடையாது. இந்தியா தனது பிராந்திய நலனுக்காக இலங்கையில் எப்போதுமே சிங்களவன் பக்கமே நிக்கும், சிங்களவன் இந்தியாவை மதிக்கவில்லையென்று தெரியவந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையில் திடீர் பாசம் காட்டும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்.
-
சிவராமை போட்டது கருணா இல்லை புளொட் என்றே பேச்சு உண்டு தமிழ்சிறி., அதேபோல பத்திரிகையாளர் நிர்மலராஜனை சுட்டுக்கொன்ற வழக்கை எடுத்தால் டக்ளஸ் மாட்டிக்கொள்வார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை துரிதபடுத்தினால் பிள்ளையான் & கருணா இனியபாரதி என்று அப்படி நீண்டுகொண்டே போகும். பொது தேர்தலின் பின்னர் எப்படி போகுமோ தெரியாது, ஆனால் கருணாவில் மிக கடுமையாக சிங்களவன் கை வைக்கமாட்டான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் சிங்களத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. இல்லாவிட்டால் அரந்தலாவ பிக்குகள் படுகொலை மற்றும் சரணடைந்த 600 பொலிசார் கொலைக்கு கருணாவுக்கு எப்போதோ ஆப்படிச்சிருப்பார்கள். அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும் அரசியல் அஸ்தமனம்தான்.
-
முப்பது வருடங்களாக பெரும்பாலான தமிழர் உணர்வுகளையும் , தமிழீழ போராட்ட சக்தியையும் எதிர்த்துக்கொண்டு தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிங்கள அரசிலும் சிங்கள அரச பதவியிலும் நீடித்திருக்கிறார். புலிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பினால் தான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று போராட்ட காலங்களில் ஆயிரம் தடவை சொல்லியிருப்பார், இன்று புலிகள் இல்லை இன்றுவரை அரசியலில் நீடிக்கிறார். இந்த முப்பது வருடத்தில் அவர் சொன்ன பட்டியலை கையிலேந்தி அவர் சார்ந்த அரசின் முன் நின்றதாக இதுவரை செய்திகளேதுமில்லை, நேற்று வந்த அநுரவிடம் தமிழர்மேல் திடீர் பாசம் பொங்கி வழிய பட்டியலை நீட்டுகிறார். அவர் நீட்டும் பட்டியல் அநுரவுக்கானதல்ல இளிச்சவாய் தமிழர்களிடம் நானும் தமிழ்மக்கள் நலன்மேல் அக்கறை கொண்டவன் என்று பல்லு விளக்கிவிடத்தான், அதை சொல்லி அநுரவிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத்தான். அநுர வெல்வதும் வெல்லாததும் பற்றி அங்குள்ள எம் மக்கள் தீர்மானிக்கட்டும், ஆனால் காலம் காலமாக தமிழர்களின்மேல் குதிரையோடிய டக்ளஸ், தமிழரசுகட்சி ,விநாயகமூர்த்தி பெத்த வீணாபோனது உட்பட்ட தமிழ்கட்சிகள் அனைத்தையும் எம் மக்கள் உதவியுடன் அடியோடு எம் மண்ணிலிருந்து அநுர அகற்றினால் நானும் அநுர ரசிகன்தான்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தேசியத்தை உதறிதள்ளிவிட்டு சிங்களவனுடன் சேரவா என்று கேட்கிறீர்கள் தற்கால தமிழர் அரசியலில் தேசியத்தை விசுவாசமாக காவி திரியும் தமிழர் தலைமை எவரும் இல்லையென்றும் நீங்களே பதிலும் சொல்கிறீர்கள். நான் தற்போதைய நிலமைபற்றி சொன்னது தமிழர்கள் இப்படி செய்தால் நல்லாயிருக்கும் என்பதல்ல, இப்படித்தான் செய்யபோகிறார்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆயுதபோராட்டகாலத்தில் தாயகமும் புலமும் சேர்ந்து நின்று எம் தேச அரசியலில் நின்றோம், இன்று அவ்வாறல்ல அங்கு தமிழர் அரசியல் கட்சிகளுக்கு நம்பி வாக்களிக்கும் மக்களே தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் , எம்மால் அந்த கட்சிகளின்மீது எந்த செல்வாக்கும் செலுத்தமுடியாது மனதில் பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுமட்டுமே எம் எல்லை. அதனால்தான் அங்கே கட்சிகள் ஆளுக்கொரு திசையில் ஆடுகிறார்கள். நாம் மக்களில் ஒருவர் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, 2009 இன் பின்னரான இலங்கை தமிழர் அரசியலில் புலம்பெயர்ந்தவர் நாம் என்ன செய்தோம் என கேட்க முடியாது நமது மக்கள் அங்கே நம்பி தேர்வு செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று மட்டுமே கேட்க முடியும், எமது இனம் என்ற ஒன்று அங்கிருக்கும்வரை, அவர்கள் உறவென்று நாம் இங்கிருக்கும்வரை ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொண்டேயிருப்போம். ஆயுதபோராட்ட காலத்தில்தான் நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேட்கமுடியும்,ஏனெனில் புலமும் அகமும் சேர்ந்து செதுக்கியது அந்த காலகட்டம். தன்னால் முடிந்ததை தாயக விசுவாசமுள்ள ஒவ்வொரு தமிழனும் எமது இயக்கத்துக்கும் மக்களுக்கும் தன்னையறியாமல்கூட தன்னால் முடிந்தவரை உதவியிருக்கிறான், உதவியிருப்பான் நீங்களுட்பட. அதனால் நாம் என்ன செய்தோம் என்று இப்படி ஒரு கேள்வியை இன்னொருமுறை எழுப்பாதீர்கள். -
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆக நான் முக்கி முக்கி எழுதினதில் நீங்கள் புரிந்து கொண்டது ஜேவிபியுடன் தமிழர்களை இணைய சொல்கிறேன் என்பதா விசுகு அண்ணா? சிங்களவனுடன் நான் இணைய சொல்லவில்லை சிங்களவர்களுடன் தமிழர்களை இணைக்கும் வேலையை தமிழர் கட்சிகளே செய்து கொண்டிருக்கின்றன என்ற கள யாதார்த்தத்தை தட்டிவிட்டிருக்கிறேன். சரி என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டதால் உங்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரேவரியில் சொல்லிவிடுங்கள். தமிழர்தேசத்தில் தற்கால தமிழர் அரசியலில் தமிழ் தேசியத்தையும் தமிழர் நிலப்பரப்பையும் அடையாளமாய் விசுவாசமாய் விட்டுக்கொடுப்பில்லாமல் தாங்கி நிற்கும் தமிழ் கட்சியும் தலைவரும் எது & யார்? -
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எந்த சிங்கள ஜனாதிபதி தனது இனமும் படைகளும் போர் குற்றமிழைத்தது என்று ஒப்புக்கொள்வார் அவர்களை ஐநா விசாரணையின் முன் நிறுத்துவார் என்று எதிர் பார்க்கிறோம்? ஒரு சிங்கள தேச தலைவர் தமிழர் பக்கம் நின்று தீர்வுக்கு ஒத்துழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பை கொண்டிருந்தால் அநுர அல்ல நாம்தான் ஏமாளிகள். சர்வதேச அழுத்தத்தின் மூலமே தமிழர் தீர்வு சாத்தியம் அப்படி ஒரு தீர்வை ஐநா கொண்டுவந்தாலும் வீட்டோ அதிகாரத்தை பாவித்து சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை காப்பாத்தும், உலகத்தையே நெருக்கடிக்கு உள்ளாக்கும் உக்ரேன் ரஷ்ய போர் விவகாரத்திலேயே வீட்டோ நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, வீட்டோ அதிகாரமுள்ள ஒரு நாடு எதிர்த்தாலும் எந்த முடிவையும் எட்ட முடியாது என்ற நிலையில் ஏறக்குறைய அனைத்து வீட்டோ நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ள இலங்கையை எவர் சிறைக்கு அனுப்புவார் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்? சிங்களவனை தீர்வை நோக்கி தள்ள உறுதியான தமிழ் தலைமை ஒன்றும் ஒருத்தர் சொன்னால் எல்லோரும் கேட்கும் தலைவனும் உள்ளூரில் இருக்கவேண்டும் அப்படி யார் இருக்கிறார்கள்? மஹிந்த வந்தால் அவனுடன் சேர்ந்து சிங்ககொடி பிடிக்கிறார்கள், மைத்திரி வந்தால் அவனிடமே சிங்கள அதிரடிபடை பாதுகாப்பு கேட்கிறார்கள், ரணில் வந்தால் பங்களா கவுஸ் சொகுசு கார்கள் , சாராய அனுமதிபத்திரம் என்று கையேந்துகிறார்கள் பின்பு தேர்தல் வரும்போது சிங்கள தலைமைகளை சர்வதேசத்தின் முன் நிறுத்துவோம் என்று தமிழர் பகுதிகளில் ரீல் விடுகிறார்கள். இங்கே எம்மை ஏமாற்றுவது அதிகம் சிங்கள தலைமைகளா தமிழ் தலைமைகளா? அநுர சாமானியமக்களின் அடிப்படை தேவைகளையும் அதிகாரமிக்கவர்கள் பொதுமக்கள்மேல் செலுத்தும் ஆதிக்கத்தையும் இன மதம் பாராது வாட்டும் ஊழலையும் தடுத்து வேலை வாய்ப்பு விலைவாசி குறைப்பு , மொழி தொடர்பாடல் என்று பூர்த்தி செய்தால் அனைவரும் அவனவன் வேலையை பார்க்கபோய்விடுவான் இனபிரச்சனை அது இது என்று குரலெழுப்பமாட்டான் , அப்படி குரலெழுப்பினால் குட்டையை குழப்புகிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கெதிராக சொந்த இனமே திரும்பும் என்ற கொள்கை முன்னெடுப்பில் மிக சாதுரியமாக காய் நகர்த்துகிறான், அதில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது, தமிழர்கள் அநுரவை ஆதரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற பதவியை பிடிக்க துடிக்கும் தமிழ்தலைமைகள் அநுரவின் ஆதரவை எப்படி பெறலாம் என்பதற்கு ஓடி திரிகிறார்கள் என்பதே தற்போதுள்ள யதார்த்தம். பொது தேர்தலின் பின்னர் எப்படி அநுரவின் கடை கண் பார்வையை பெறலாம் என்ற சிந்தனையிலேயே ஐயாக்கள் ஆளுக்கொரு பைல்களுடன் ஓடியோடி கட்சிகூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அநுர ஜனாதிபதியான பின்னர் அவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை பார்த்து எந்த தமிழ்கட்சியும் அவர் ஆட்சிக்கெதிராக எந்த கடும் வார்த்தைகளையும் இன்றுவரை உச்சரிக்கவில்லை. எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும். இதனால் சிங்கள ஆதரவு கோஷம் என்று பொருள் கொள்ளவேண்டாம், எம்மிடம் எமது அரசியல்பற்றி என்ன தெளிவுள்ளது என்பதை அறியவே அவா. இனப்பிரச்சனையின் குரலாக எம் தரப்பிலிருந்து கடைசிவரை போர் வடுவின் ஆதாரமாக ஒலிக்கபோவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அழுகுரல்கள் மட்டுமே, அந்த குடும்பங்களுடன் ஒன்றிணந்து அனைத்து தமிழர்தரப்பும் போராட்டம் நடத்தினால் ஓரளவாவது நெருக்கடி கொடுக்கலாம்,அதுமட்டுமே போர்குற்றத்தின் முன் சிங்களத்தை நிறுத்த உதவகூடிய பெரும் துருப்பு சீட்டு, ஆனால் எவனாவது அவர்கள் பக்கம் திரும்பிகிறார்களா என்று பாருங்கள்? சிங்களவன் கொடுத்த சொகுசுகாரில் கண்ணாடியை உயர்த்திவிட்டு போராட்டம் நடத்தும் அவர்களை கடந்துபோகிறார்கள் அந்த அளவில்தான் இருக்கிறது நிலமை. காலம் முழுவதும் எமக்கான தீர்ப்பை வாங்கி தாருங்கள் என்று சொல்லி தமிழர்கள் வாக்களித்து தமிழர் பிரதிநிதிகளை கொழும்பு நோக்கி அனுப்பினார்கள், இந்த தேர்தலில் , தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களுக்கு தீர்ப்பெழுதி வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என்ற நிலமையே நிலவுவதாக தெரிகிறது. சிங்கள அரசியலும் தமிழ் அரசியலும் கொள்கையளவில் ஒன்றேதான் , அது ஏமாற்றுவது. -
திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்......... நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும் இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள், மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட அனைவருக்கும் தந்தையும் அவர்தான், அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்> சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம், எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம். அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது. தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள். விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது? ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள், உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை, அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.
-
மக்கள் பிரதிநிதி என்று தமிழர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஒரு முதலைமச்சராக இருந்தவர் அவரே தவறணைக்கு அனுமதிப்பத்திரத்திற்கு சிபாரிசு கடிதம் என்ற பெயரில் தரகர் வேலை பார்த்திருக்கிறார் என்றால் என்றால் அந்த கீழ்தரமான வேலையை சரியென்று நீங்களோ நானோ வாதிடபோவதில்லைம் தவறென்று தெரிந்த ஒன்றை வைத்து நீங்களோ நானோ அவருக்கு வாக்களித்த வட புலமக்களோ ஜோக்கடிக்க போவதில்லை, நீங்கள் உங்கள் கருத்தையிட்டு தவறென்று உணர்ந்தால் வருந்திக்கொள்ளலாம். புத்திசாலிதனமாக இந்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று ஒதுங்கிவிட்டார், இல்லையென்றால் நிச்சயமாக விக்னேஷ்வரன் பொதுதேர்தலில் மக்களால் தூக்கியெறியப்பட்டிருப்பார். அத்தனை ஆவேசமாக விக்னேஷ்வரன் சமூக ஊடகங்களிலும் அங்குள்ள பெரும்பாலான மக்களாலும் காறி துப்பப்பட்டுக்கொண்டிருக்கிறார் .
-
டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார். இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை. எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை. பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை. தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
valavan replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
அடுத்தவர் பிரச்சனையை எம் வீட்டு பிரச்சனையாக நினைத்து எமது சமூகமும் ஊடகங்களும் 100% பொங்கியெழுவது, ஆண் பெண் காதல் கல்யாணம் ஓட்டம் விவகாரங்களில் மட்டும்தான். ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அந்த சமூகத்தின் வறுமை, கல்வி வேலை வாய்ப்பு, கவனிப்பாரற்ற குடும்பங்கள், விதவைகள், பெண் தலைமைத்துவத்தில் மட்டும் வாழ்க்கையோடு போராடும் குழந்தைகள், மருத்துவம், மாற்றுதிறனாளிகள், தகர கொட்டைகைகளில் வெயில்காலத்தில் நெருப்புடனும், மழைகாலத்தில் வெள்ளத்துடனும் பாம்பு பூச்சிகளுடனும் குழந்தைகளுடன் அல்லாடும் ஏழைகள் என அனைத்து விடயங்களுக்காகவும் இதே வேகத்தில் அக்கறை செலுத்தினால் இந்த அஞ்சலோட்டங்கள் பற்றியும் பேச அருகதை கொண்டுள்ளோம். சிறுமி அல்லது சிறுவன் வயதில் உள்ளவர்கள்மீது தவறான காதல் , தனித்து அழைத்து சென்று குடும்பம் நடத்துதல் என்றால் மட்டும் எம்மில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற செய்திகள் பற்றி பேச உரிமை கொண்டுள்ளோம் , மற்றும்படி இது விவாதத்துக்குரிய ஒரு விஷயமல்ல அது அவரவர் மனமொத்த விஷயம். தம்மை சுற்றியவர்கள்பற்றி எந்த கவலையும் கொள்ளாது தமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் பற்றி சுற்றியிருப்பவர்கள் எதற்கு மனம் நொந்து சாவணூம்? இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மேலைநாடுகளில் அடுத்தவர் வாழ்க்கைமுறையை விமர்சிப்பது மூக்கை நுழைப்பது விவாத பொருளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.