Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. முதலில் தனியொருவனாக புலிகளை மலினபடுத்தாமல் உயர்வாய் வைத்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள். ஒரு பொது கருத்து தளத்தில் தனிமனித தாக்குதலின்றி கருத்துக்கு கருத்து எழுதும்போது கீழ்தரம் மேல்தரம் எல்லாம் இல்லை, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் எனக்கு புரிந்ததை நான் எழுதுகிறேன். புலிகளால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது எப்போது? தேசிய கூட்டமைப்பு தோற்றத்திற்கு முன்னா பின்னா? அறிந்துகொள்ள ஆவல்.
  2. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு அப்புறம் உலகின் அனைத்து அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்ட இயக்கங்களிற்கும் பயங்கரவாத இயக்கங்கள் என்றும் அவை அழிக்கப்படவேண்டியவை என்றும் முத்திரை குத்தி அமெரிக்கா வாள் தூக்கியதால் உலகின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிந்த அனைத்து இயக்கங்களும் பேரழிவின் விளிம்புக்கு அப்போது வந்தன. போராட்ட சக்திகளுக்கெதிரான உலகின் அக்கால போக்கை சமாளிக்க உருவாக்கப்பட்டதே தேசிய கூட்டமைப்பு. அதில் புலிகளாலும் மக்களாலும் வெறுக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட முன்னாள் ஆயுத அரசியல் குழுக்கள் இயக்கங்கள் இருந்தன. அவர்கள் எவரையும் மனதார எமது போராட்ட சக்திகள் என்று மக்களோ புலிகளோ ஏற்றுக்கொண்டதில்லை, அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால் புலிகள் அரசு பேச்சு வார்த்தையில் சர்வதேச மட்டத்திலிருந்து உள்நாடுவரை அவர்களும் அடக்கப்பட்டிருப்பார்கள். ஒருதடவை புலிகள் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது கஜேந்திரன் தலைவர் முன்னாடியே பிரேமச்சந்திரனின் பிரசன்னத்தை விமர்சித்திருந்தார் , அதற்கு அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கட்டாயம் என்ற பாணியில் தலைவர் அவரை அமைதி படுத்தியிருந்தார். ஆம் அது உலகத்துக்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு, ஒரு காலபகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நின்றவர்களை தலைவர் மறந்திருப்பாரென்று நாம் எண்ணிக்கொண்டால் அது ஒரு தவறான வரலாற்று தொகுப்பு.
  3. மாவைக்கு வயது 81 , ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலத்தைவிட அதிகம். வயதின் மூப்பால் எலும்புகளும் திசுக்களும் தேய்வடைய முதுமையும் நோயும் இயற்கை எய்துவதும் கட்டில் படுத்திருக்கும் மாவையும் கருத்து சொல்லும் நானும் எதிர்நோக்க வேண்டியதும் தப்பிக்க முடியாததும் ஒன்றுதான். மக்களில் ஒருவனாகிய நான் செத்தால் ஏன் செத்தான் என்று மட்டும் கேட்பார்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று தம்மை சொல்லிக்கொண்டவர்கள் போய்விட்டால் என்ன செய்துவிட்டு போனார் என்று கேப்பார்கள். தள்ளாத வயது என்பதற்காக இவர்கள் செய்தவைபற்றி கேள்வி கேக்காமல் எவரும் தள்ளி வைத்துவிட்டு போகமாட்டார்கள். ஐயா குணமடையட்டும்.
  4. அரசியல் போராட்டகாலத்திலும் ஆயுத போராட்ட காலத்திலும் பின்னி பிணைந்தும் பின்புலத்தில் நின்றதும் யாழ்பல்கலைகழக சமூகமே. அவ்வாறான எம் அறிவார்ந்த போர்கூடம் கடந்தகால எம் சுத்துமாத்து தமிழ்கட்சிகளை இனம் காணவும் துடைத்தெறியவும் புதியவர்களை எம் மண்ணுக்காக மாற்றீடான தலைமைகளாக இனம் காட்ட வேண்டியதும் அவர்களை தேர்தலின்போது ஒன்றிணைப்பதும் எம் இனத்திற்கான தமது வரலாற்று கடமையாக கொள்ளவேண்டும். தெருவுக்கு தெரு எம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்திலேயே பொங்குதமிழ், மாவீரர் நினைவேந்தல் என்று நெஞ்சுறுதியுடன் சிங்களத்தை எதிர்கொண்டு சிங்கள படைகளின் நடுவில் வாழ்ந்த எம் மக்களை தேசிய நலனுக்காய் ஒன்றுதிரட்டிய எம்மின பொக்கிஷ பல்கலைகழக சமூகம் இக்கால கட்டத்தில் பழைய தமிழ்கட்சிகள்போல் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்று கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தன்னலமற்ற எம் புதிய அரசியல் தலைமை ஒன்றின் உருவாக்கத்திற்கும் அடையாளபடுத்துதலுக்கும்,ஒன்றிணைப்பதற்கும் பழையனவற்றின் அகற்றலுக்கும் நீங்கள் சாட்டை எடுத்து சுழற்றலாம் யாரும் தவறென்று சொல்ல போவதில்லை.
  5. அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும் ஓடி போகட்டுமெண்டு
  6. நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல. ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன். ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்? நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே. விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.
  7. அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை. I hurt myself என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன, நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும்,
  8. கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்
  9. புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை. தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.
  10. இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?
  11. எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள், சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும். தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள் பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா? இந்த லட்சணத்தில் சிங்களவன் சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில் சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும். அந்த பெருமையெல்லாம் எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம், மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல. வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.
  12. அதானே திருடர்கள் வீட்டிலேயே திருடியிருக்கிறார்கள்.
  13. சிங்கப்பூர் சிவாஜிகணேசன் எனப்படும் இந்த கலைஞர் ஸ்மார்ட்போன் காலத்தில் சிவாஜி வாழ்வதுபோல் அச்சு அசல் அவர்போலவே தோற்றம் நடிப்பு உடல்மொழி என்று பிரமிக்க வைத்தார். பார்க்கவே சந்தோஷமாக இருந்த இந்த காட்சி மிகபெரும் சோகத்தில் முடிந்தது, இந்த பாடல் முடிவில் மாரடைப்பினால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார் இந்த அற்புத கலைஞர்.
  14. அதைதான் பலரும் யோசிப்பார்கள், ஒரு சில கிலோமீற்றர் நீளமான வல்லைவெளி வாகனங்களின் எண்ணிக்கை குறைவான காலங்களிலேயே விபத்துக்கும் உயிர்பலிகளுக்கும் பெயர் போனது, இப்போ வீட்டுக்கு மூன்று இரு சக்கர மற்றும் வாகனங்கள் உள்ள காலத்தில் விபத்துக்கான சாத்தியங்கள் சொல்லவே தேவையில்லை.. அந்த இடத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டு 40 வருடங்களுக்கு முற்பட்ட சமிஞ்சைகளை கையாள்வது அந்த ஊழியர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆப்பு வைக்கும் செயல், அவர்களை சில முரட்டு ஆசாமிகள் மதிக்கவும் போவதில்லை, குறுந்தூர இடைவெளியில் வேக தடுப்புகளூம் அங்கங்கே போக்குவரத்து பொலிசாரை நிறுத்தி பெரும்தொகை அபராதமும், சாரதி அனுமதி பத்திரம் பறிமுதலும் செய்தால் அரசுக்கும் வருமானம் ஆகும், அங்கவீனம் மற்றும் உயிர்பலிகளும் குறையும்.
  15. ஒரு பாகிஸ்தான்காரர் சொன்னார், பாகிஸ்தானில் நடக்கும் 70% குண்டுவெடிப்புகள் கொலைகளுக்கு பின்னாலிருப்பது இந்திய உளவு பிரிவு றோ என்றும், தமது நாட்டில் ஏதாவது ஒரு சர்வதேச பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டால், அடுத்த வாரமே சர்வதேசத்தின் கவனத்தை பெறும் அளவிற்கு தற்கொலை குண்டுதாக்குதல்களோ, அல்லது துப்பாக்கி சூடுகளோ நடந்து அனைத்தும் கெடுக்கப்படுகிறது என்றும் சொன்னார். தற்போது தலீபான்களுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ஆப்கான் பக்கமிருந்தும் தங்களுக்கு நெருக்கடியை தருவதாகவும் சொன்னார். அதற்காக பாகிஸ்தானியர்கள் பெரிய யோக்கியம் என்று சொல்லவரவில்லை, ஆனால் இந்தியாவைபற்றி அறியவேண்டுமென்றால் ஈழதமிழர்களிடம்தான் தான் யாரும் கதை கதையாக கேட்கவேண்டும் பங்களாதேஷத்திலும் றோவின் உளவு பிரிவின் ஆதிக்கத்தால் அரசியல் நெருக்கடிகள் பொருளாதார சீர்குலைவுகள் உட்பட்ட பல உண்டு என்றும் மேலும் சொன்னார் . ஆனால் இந்தியர்களை கேட்டால் நாங்கள் காந்தியவாதிகள் பாகிஸ்தான் தான் இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்பி எங்களது ‘’அப்பாவி’’ ராணுவவீரர்களை கொல்கிறது என்கின்றனர். உண்மை பொய் பற்றி யாரறிவார் ஆனாலும் அந்த அப்பாவி இந்திய வீரர்கள் மற்றும் றோ பற்றி எம்மையன்றி யார் அதிகம் அறிவார்?.
  16. ஆம் நீங்கள் சொல்வதுபோல் பலதரப்பட்ட தகவல்களை தருகிறார்கள், இப்படியும் ஒரு தகவல் உள்ளது. மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றவாளி இராகவன் சாவடைந்தார் மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை சாவடைந்தாக அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மற்றொரு தலைவரான கிசோர் மரண செய்தியை பெரும் துயரத்தோடு அறியத்தருவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பணிப்பின் பேரில் இலங்கை புலனாய்வு துறை முகவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கூலிப்படை சகிதம் கொலையை முன்னெடுத்திருந்தனர். அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://vidiyel.com/ஈழத்தீவு/மாமனிதர்-தராகி-சிவராம்-க/
  17. அதென்ன வடக்கு மக்கள்? அதாவது வடக்கு மக்கள் சிங்கள தேசத்திலிருந்து விசேடமான பிரிவை சேர்ந்தவர்கள் என்று அநுர சொல்ல வருகிறாரா? ஒருவகையில் அதுவும் உண்மைதான், இங்கே சந்திக்கும் பல சிங்களவர்கள் யாழ்ப்பாணம் தாங்கள் போய் வந்தோம் யாழ்மக்கள் நல்லவர்கள் என்று என்னமோ ஐரோப்பா அமெரிக்கா போய் வந்தோம் என்பதைபோல பெருமையாகவும் வியப்பாகவும் சொல்வார்கள். சொல்லிவிட்டு எமது கண்களை கூர்ந்து பார்ப்பார்கள். அத்தனை லட்சம் அவர்களின் படைகள் இன்றும் வடக்கில் குவிந்திருந்தாலும் அவர்களுக்கு அது அவர்களின் லங்கா என்பதில் திருப்தியில்லை அந்த பயமும் கெளரவமும் தனித்துவமும் கரிகாலன் தந்தது. கிழக்கு ஏற்கனவே பறிபோய்விட்டது இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் கிழக்கின் விடிவெள்ளிகள் சிங்களவனுடன் பார்ட்டி வைத்து பகிர்ந்தளிக்கிறார்கள் சிங்களவன் எமக்கான தீர்வொன்றை தானாக ஒருபோதும் தரபோவதில்லை, அப்படி ஒரு காலம் ஏதோ ஒரு முனையிலிருந்து எம் கதவை தட்டும்வரை.... வடக்கையாவது முழுமையான தமிழர் பிரதேசமாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க முடிந்தவரை தமிழர்களின் நிலங்களை பிறர் இனங்களுக்கு விற்காமல், எமது மதங்கள், கலாச்சாரங்கள்,வியாபார நடவடிக்கைகள் மொழியின் ஆளூமை அனைத்தையும் முழுமையாக முழு வீச்சாக கடைப்பிடித்தால், சிங்களவர்கள் காலபோக்கில் எம் நிலத்தை தின்னமுன்னர் வன்னி முல்லை கிளிநொச்சியில் மக்கள் இல்லாத நிலபரப்புகளை நிலபுலனற்ற மலையக தமிழர்கள், வடகிழக்கின் தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை குடியேற்றி பெருமெடுப்பில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து முழுமையாக எம் மக்களால் சூழப்பட்ட மாகாணமாக உருவாக்கி நேர்மையானதும் ஒழுக்கமானதுமான புதிய அரசியலை பிரசவித்தால் எம் மண் சிங்கள தேசத்துக்குள்ளேயே தனித்துவமாக இயங்கும், சிங்களவர்கள் விருந்தாளிகள்போல் வந்து போகட்டும், இதுநாள்வரை எம்மிடையே இருந்த கட்சிகள் இல்லாமல் நேர்மையும் இளமையும் ஒழுக்கமும் கலந்த தமிழர் பிரதிநிதிகள் உருவாகி காலத்திற்கேற்ப சிங்கள அரசியலுடன் முட்டி மோதாமல் எமது சக்தியை வைத்து எம் மக்களின் நலன்களுக்கான ஒரு பேரம் பேசும் அரசியல் செய்து எம் மக்களை தனித்துவமானவர்களாக்கலாம். அதிலாவது சிறு நிம்மதி.
  18. ஒருவேளை அநுர மூன்றில் இரண்டுக்குமேல் பெரும்பான்மை பெற்று எவர் கூட்டணியுமின்றி இலங்கை ஆட்சியை கைப்பற்றினால், அநுரவா டக்ளசா என்று வந்தால் இந்தியா அநுர பக்கமே நிக்கும். காலம் காலமாக இந்தியா தமிழர் நலனுக்காக இலங்கையுடன் முட்டிமோதி நின்றதேயில்லை, தனது நலனுக்காகவே அது நின்றிருக்கிறது. இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் வாங்கி தந்திருப்பார் என்று இன்றும் நம்பும் தமிழர்கள் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள், பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கு திமிர்காட்டிக்கொண்டு ,சோவியத் நட்புறவு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவையே அழிக்கப்பார்த்த அமெரிக்கா பக்கம் அதி நெருக்கம் காட்டிய ஜேஆரை தனது பிடிக்குள் கொண்டுவரவே இந்திராகாந்தி இலங்கை தமிழர் பிரச்சனையை அக்கறையாக கையிலெடுத்தார், மற்றும்படி தமிழருக்கு தமிழீழம் வாங்கிதர என்பதெல்லாம் கிடையாது. இந்தியா தனது பிராந்திய நலனுக்காக இலங்கையில் எப்போதுமே சிங்களவன் பக்கமே நிக்கும், சிங்களவன் இந்தியாவை மதிக்கவில்லையென்று தெரியவந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையில் திடீர் பாசம் காட்டும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்.
  19. உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் இல்லை அவர் செய்திருக்கமாட்டார் இவர் செய்திருக்கமாட்டார் இவரை தவறாக நினைத்துவிட்டோம் என்று பிரித்து பார்க்க, நீங்களும் நானும் அறிந்ததை சொல்கிறோம் அவ்வளவுதான். அற்புதன் கொலையும் விசாரிக்கப்படவேண்டும்.
  20. சிவராமை போட்டது கருணா இல்லை புளொட் என்றே பேச்சு உண்டு தமிழ்சிறி., அதேபோல பத்திரிகையாளர் நிர்மலராஜனை சுட்டுக்கொன்ற வழக்கை எடுத்தால் டக்ளஸ் மாட்டிக்கொள்வார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை துரிதபடுத்தினால் பிள்ளையான் & கருணா இனியபாரதி என்று அப்படி நீண்டுகொண்டே போகும். பொது தேர்தலின் பின்னர் எப்படி போகுமோ தெரியாது, ஆனால் கருணாவில் மிக கடுமையாக சிங்களவன் கை வைக்கமாட்டான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் சிங்களத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. இல்லாவிட்டால் அரந்தலாவ பிக்குகள் படுகொலை மற்றும் சரணடைந்த 600 பொலிசார் கொலைக்கு கருணாவுக்கு எப்போதோ ஆப்படிச்சிருப்பார்கள். அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும் அரசியல் அஸ்தமனம்தான்.
  21. முப்பது வருடங்களாக பெரும்பாலான தமிழர் உணர்வுகளையும் , தமிழீழ போராட்ட சக்தியையும் எதிர்த்துக்கொண்டு தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிங்கள அரசிலும் சிங்கள அரச பதவியிலும் நீடித்திருக்கிறார். புலிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பினால் தான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று போராட்ட காலங்களில் ஆயிரம் தடவை சொல்லியிருப்பார், இன்று புலிகள் இல்லை இன்றுவரை அரசியலில் நீடிக்கிறார். இந்த முப்பது வருடத்தில் அவர் சொன்ன பட்டியலை கையிலேந்தி அவர் சார்ந்த அரசின் முன் நின்றதாக இதுவரை செய்திகளேதுமில்லை, நேற்று வந்த அநுரவிடம் தமிழர்மேல் திடீர் பாசம் பொங்கி வழிய பட்டியலை நீட்டுகிறார். அவர் நீட்டும் பட்டியல் அநுரவுக்கானதல்ல இளிச்சவாய் தமிழர்களிடம் நானும் தமிழ்மக்கள் நலன்மேல் அக்கறை கொண்டவன் என்று பல்லு விளக்கிவிடத்தான், அதை சொல்லி அநுரவிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத்தான். அநுர வெல்வதும் வெல்லாததும் பற்றி அங்குள்ள எம் மக்கள் தீர்மானிக்கட்டும், ஆனால் காலம் காலமாக தமிழர்களின்மேல் குதிரையோடிய டக்ளஸ், தமிழரசுகட்சி ,விநாயகமூர்த்தி பெத்த வீணாபோனது உட்பட்ட தமிழ்கட்சிகள் அனைத்தையும் எம் மக்கள் உதவியுடன் அடியோடு எம் மண்ணிலிருந்து அநுர அகற்றினால் நானும் அநுர ரசிகன்தான்.
  22. தேசியத்தை உதறிதள்ளிவிட்டு சிங்களவனுடன் சேரவா என்று கேட்கிறீர்கள் தற்கால தமிழர் அரசியலில் தேசியத்தை விசுவாசமாக காவி திரியும் தமிழர் தலைமை எவரும் இல்லையென்றும் நீங்களே பதிலும் சொல்கிறீர்கள். நான் தற்போதைய நிலமைபற்றி சொன்னது தமிழர்கள் இப்படி செய்தால் நல்லாயிருக்கும் என்பதல்ல, இப்படித்தான் செய்யபோகிறார்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆயுதபோராட்டகாலத்தில் தாயகமும் புலமும் சேர்ந்து நின்று எம் தேச அரசியலில் நின்றோம், இன்று அவ்வாறல்ல அங்கு தமிழர் அரசியல் கட்சிகளுக்கு நம்பி வாக்களிக்கும் மக்களே தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் , எம்மால் அந்த கட்சிகளின்மீது எந்த செல்வாக்கும் செலுத்தமுடியாது மனதில் பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுமட்டுமே எம் எல்லை. அதனால்தான் அங்கே கட்சிகள் ஆளுக்கொரு திசையில் ஆடுகிறார்கள். நாம் மக்களில் ஒருவர் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, 2009 இன் பின்னரான இலங்கை தமிழர் அரசியலில் புலம்பெயர்ந்தவர் நாம் என்ன செய்தோம் என கேட்க முடியாது நமது மக்கள் அங்கே நம்பி தேர்வு செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று மட்டுமே கேட்க முடியும், எமது இனம் என்ற ஒன்று அங்கிருக்கும்வரை, அவர்கள் உறவென்று நாம் இங்கிருக்கும்வரை ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொண்டேயிருப்போம். ஆயுதபோராட்ட காலத்தில்தான் நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேட்கமுடியும்,ஏனெனில் புலமும் அகமும் சேர்ந்து செதுக்கியது அந்த காலகட்டம். தன்னால் முடிந்ததை தாயக விசுவாசமுள்ள ஒவ்வொரு தமிழனும் எமது இயக்கத்துக்கும் மக்களுக்கும் தன்னையறியாமல்கூட தன்னால் முடிந்தவரை உதவியிருக்கிறான், உதவியிருப்பான் நீங்களுட்பட. அதனால் நாம் என்ன செய்தோம் என்று இப்படி ஒரு கேள்வியை இன்னொருமுறை எழுப்பாதீர்கள்.
  23. ஆக நான் முக்கி முக்கி எழுதினதில் நீங்கள் புரிந்து கொண்டது ஜேவிபியுடன் தமிழர்களை இணைய சொல்கிறேன் என்பதா விசுகு அண்ணா? சிங்களவனுடன் நான் இணைய சொல்லவில்லை சிங்களவர்களுடன் தமிழர்களை இணைக்கும் வேலையை தமிழர் கட்சிகளே செய்து கொண்டிருக்கின்றன என்ற கள யாதார்த்தத்தை தட்டிவிட்டிருக்கிறேன். சரி என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டதால் உங்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரேவரியில் சொல்லிவிடுங்கள். தமிழர்தேசத்தில் தற்கால தமிழர் அரசியலில் தமிழ் தேசியத்தையும் தமிழர் நிலப்பரப்பையும் அடையாளமாய் விசுவாசமாய் விட்டுக்கொடுப்பில்லாமல் தாங்கி நிற்கும் தமிழ் கட்சியும் தலைவரும் எது & யார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.