Everything posted by Maruthankerny
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் கடந்த 10 வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ?
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா?
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது - அம்பிகா சற்குணநாதன்
தங்களுடைய இருப்புக்கும் பாதுகாப்பும் குறித்த வேலைகளை செய்த பின்னர் பின்பு இப்படி வெட்டுவோம் வீழ்த்துவோம் என்று பதவிகளை தக்கவைப்பது கொழும்பு எலீட்டுகளின் லீலை என்பதை கடந்த 40 வருடமாக பார்த்து வருகிறோம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புலிகேசி ஒரு பயந்த நகைசுவை சுபாவம் கொண்டவரே தவிர சேலன்ஸ்கிபோல கொடியவன் அல்ல ........ செலென்ஸ்கி மிக கொடூரமானவன் அவனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. செலென்ஸ்கி ஒரு சியோனிஸ்ட் அவனுக்கு உக்ரைன் மக்கள் இறப்பு என்பது ஆனந்தமானது உக்ரைனுக்கு உதவிக்கு என்று கொடுத்த மில்லியன் டாலர்களை சுருட்டிக்கொண்டு இருக்கிறான். மார்ச் மாதம் தேர்தல் வைக்க வேண்டும் .... அப்படி நடந்தால் உக்ரைன் மக்கள் அடித்தே துரத்துவார்கள் என்பது அவனுக்கு நான்கே தெரியும் என்பதால் இந்த போரை சாட்டி அவன் தேர்தலை வைக்கப்போவதில்லை. இனி மேற்கு அண்ணர் வாக்கு சாவடிகளை களவாடும் வேலை எல்லாம் செய்து முடித்த பின்னர்தான் ஒரு சுத்துமாத்து தேர்தலை வைப்பார்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பொதுமக்கள் குடியிருப்புக்கள் வழிபாட்டு தலங்கள் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் மீது சர்வாதிகாரி புட்டின் நடத்தும் இவ்வாறான தாக்குதல்களை கண்டிப்பதோடு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நானும் கேட்டு கொள்கிறேன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சிலர் இஸ்திரேல் பாலஸ்தீன பிரச்சனையை அக்டோபர் 7ஆம் திகதியில் தொடங்கிய பிரச்சனைபோல பேசிக்கொண்டு இருப்பது போலவே உங்கள் கருத்தும் எனக்கு தெரிகிறது மன்னிக்கவும். ரஷியா நேரடியான படை நடவடிக்கை தொடங்கு முன்பே உக்ரைன் எவ்வளோ ஊடுருவல் தாக்குதல்களை ரசிய நிலப்பரப்பில் செய்து இருக்கிறது. உக்ரைன் அரசுகளால் மிக கீழ்த்தரமாக நடத்தப்பட்ட ரஷ்ய எல்லைப்பகுதி மக்கள் ஏற்கனவே உக்கரைனுடன் இனி சேர்ந்துவாழ முடியாது என்று போராடி பிரிந்து தனித்துவமாக ரசிய ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்கள் கிரிமியா மக்களை கூட தேர்தலின் மூலம் உக்ரைனில் இருந்து பிரிவதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். மேற்குலகிடம் விலை போய் தமது தனித்துவத்தை இழந்து சொந்த சகோதர்களான ரசியர்களை மேற்குலகின் விருப்புக்கு அழிவுக்கு உடப்படுத்தும் துரோக தனத்தை எதிர்த்து தனியாக வாழவிடுங்கள் என்று பிரிந்த மக்களை வகை தொகை இன்றி உக்ரைன் இராணுவம் கொன்று குவித்து இருக்கிறது. இப்போது ரசியா கைப்பற்றி வைத்திருக்கும் பெரும்பாலான நிலப்பரப்பு ரசிய ஆதரவு மக்கள் வாழும் பகுதியாகவே இருக்கிறது. இது புட்டின் தொடங்கிய போர் அல்ல .... ரசியா மீது திணிக்கப்பட்ட போர் மேற்குலகின் டிவி பெட்டியை பார்த்துக்கொண்டு நாங்கள் எழுதிக்கொண்டு இருந்தால் அப்பாவி பலஸ்தீன குழந்தைகளை காமாஸ் தீவிரவாதிகள் என்றுதான் எழுதிக்கொண்டு இருப்போம் சிலர் யாழ்களத்தில் அப்படிதான் எழுதுகிறார்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செலென்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அதோடு இஸ்திரேலி சியோனிஸ்ட்டுக்களுக்கும் யூதர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்றும் தேடி பாருங்கள். ரஸ்யா உக்ரைன் விரும்பினாலும் போரினால் கோடிக்கணக்கான பணத்தை லாபம் பார்க்கும் கூட்டம் ஏன் போரை நிறுத்தவேண்டும்? இந்தியாவுக்கும் மொக்கு மோடிக்கும் கொம்பு சீவி இப்போது லாபகமாக இந்தியாவையும் போருக்கு இழுத்து செல்லும் வேலை மிக நன்றாக நடக்கிறது ஹிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத வேலை என்றாலும் சுற்றி எதிரிகளை உருவாக்கி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு ஆயுதங்கள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு காலை எழுந்தால் காலைக்கடன் முடிக்க கூட வசதி இல்லை. இத்தாலிக்கும் குளை அடித்து இப்போ பெரும் ஆயுத வியாபாரம் செய்து நீங்கள் துருக்கியை விட பலமாகிக்கொண்டு இருக்கிறீர்கள் அதுதான் பாதுகாப்பு என்று நம்பவைத்து ஆயுதம் விற்கிறார்கள். தைவானை கைகாட்டி பிலிப்பைன்ஸ் ஜப்பானுக்கு விற்கக்கூடிய இரும்பெல்லாம் விற்கப்படுகிறது உங்கள் வரிப்பணத்திற்கும் செலவுவைக்க பல பல பெயர்களில் நேவி கப்பல் ஓடடம் நடக்கிறது இவற்றையெல்லாம் பின்தொடர்ந்தால் ....... ஒரே ஒரு குழுதான் கடந்த 100 வருடமாக எந்த மனித நேயமுமற்று மக்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது அவர்கள் ஒரே இலக்கு பணம் அதன்மூலம் அதிகாரம். இன்று இஸ்திரேல் செய்துகொண்டு இருக்கும் அக்கிரமத்தை ரஸ்யா நினைத்திருப்பின் கிவையே தரைமடடம் ஆக்கி இருப்பார்கள் கைப்பற்றிய கீவ் அணுமின் நிலையத்தை கூட விட்டுவிட்டு பின்வாங்கினார்கள் உக்ரைனில் இருப்பவர்களும் பாதிக்கு மேல் ரஷ்யர்கள்தான் டிசம்பர் தொடக்கத்தில் செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) இங்கு அமேரிக்காவுக்கு வந்தபோது 10 அதி உயர் விமான எதிர்ப்பு மிஸைல் ( பல மில்லியன் பெறுமதியான) கொடுத்து அனுப்பினார்கள் ரசியர்கள் 8 ட்ரான்களை வேண்டும் என்றே அனுப்பி 8 மிசைல்களை வேண்டும் என்றே அடிக்க வைத்து வீணடித்து விட்டார்கள் பல ஆயிரம் மில்லியன்கள் ஒரு வாரத்தில் புகையாகி போனதில் எனது வரிப்பணமும் உண்டு என்பதுதான் எனக்கு உறுத்தல் ஆன விடயம்
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு பொதியை பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் குறித்த பொதியை ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா? எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும். இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள் தலைக்குள் வைத்தது பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள் அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள் உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான். 24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors) பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும். இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள் இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால் இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே யார் தங்கத்துடன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான் மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) .
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
இது சமூகத்துக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் இதை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்துமா என்றுதான் தெரியவில்லை தவிர சிங்கள அரசின் அடாவடித்தனம் இல்லாமல் இருக்கவும் வேண்டும் ஒரு வழி பாதை என்று இருக்கும் சமூகத்துக்கு பல வழிகளை திறப்பது மிகவும் பயன் தர கூடியதே
-
யாழ்ப்பாண உணவகத்தில் ஒரு கிளாஸ் வெந்நீர் 100 ரூபாய்க்கு விற்பனை
12 பேர் தோசையும் (வடையும் ப்ரோட்டவும்) சாப்பிட்டு இருக்கிறார்கள் எல்லோரும் டீ கோப்பி யும் 3 தண்ணீர் போத்தலும் வாங்கி இருக்கிறார்கள் ஏன் 12 சுடுதண்ணி என்று எனக்கு புரியவில்லை? நீங்கள் யாரவது உணவகம் சென்று சுடுநீர் வாங்கி குடித்து இருக்கிறீர்களா?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இனத்தை எப்படி அழித்தொழிப்பது என்று நன்கு திடடமிட்டு செயல்படுபவன் பொருளாதார சிக்கல் சொந்த சிக்கல் வரும்போது அதை இடை இடையே மறந்துவிடுவான் நாங்கள்தான் அடிக்கடி போய் அவனுக்கு நினைவுபடுத்தவேண்டும் அப்பத்தான் ஓ இதை வேற நான் மறந்துவிட்டேன் என்று தொடர்வதுக்கு ஏதாவது செய்துகொண்டு இருப்பான்
- இன்று மாவீரர் தினம்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்? எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ நடந்தை யாருக்கும் சொல்லவில்லை who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் கருத்து எழுதும் கருத்தாளர்களையும் பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் ஐ லைக் யூ வெரி மச் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் எதை எதிர்க்கிறார்கள்? என்று நீங்கள் விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே மற்றவர்கள் சொல்வதும் எழுதுவதும் புரிந்துகொள்ளப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசிலவாதிகள் முதல் பொருளாதாரம்வரை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள் இங்கு உணவு எனும் பெயரில் நஞ்சு விற்கப்படுகிறது உடனடியாக கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். இங்கு விற்கும் உணவுக்கு உங்கள் நாட்டில் கூட தடை ஐரோப்பிய யூனியனில் கூட தடை. பணம் எப்படி பெறுவது என்று பார்ப்பார்கள் தவிர நீங்கள் நோய் கொண்டாலும் அதில் எப்படி லாபம் பெறுவது? எனும் சிந்தனைதான் இங்கு உண்டு. புடின் சென்ற வருடம் அனைத்து ஜி எம் ஓ GMO பயிர் செய்கைக்கும் ரஷியாவில் தடை விதித்து இருக்கிறார். ஏற்கனவே உணவு தட்டுப்பாடு இருக்கும் சீனா இதில் எந்த நிலை எடுக்கும் என்று தெரியவில்லை பல மெட்ரிக் டோன்ஸ் பசளைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது அதன் இரசாயன கலவைகள் இப்போது மிக மிக குறைவு ஆனால் பின்னாளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெண்களின் கைஜெனிக் தயரிப்புகள் அனைத்தும் டயோக்சின் ப்ளீச் Dioxin, Bleach, போன்ற கெமிக்கல் கொண்டிருக்கின்றன இதில் குறிப்பாக தம்பான் என்பதை பெண்கள் தங்கள் பெண் உறுப்புக்குள் செருகிறார்கள் அது இலகுவாகவே இரத்தத்தோடு கலக்கிறது கேன்சருக்கு அடித்தளமாகவே மைகிறது. இவர்கள் உக்ரைன் இஸ்திரேலிகள்க்கு அழுதால்? அதற்குள் எவ்வளவு பண லாபம் இருக்கும் இம்முறை எப்பபோதும் இல்லாததுபோல் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஜூடிஷ்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சியோனிஸ்ட்டுக்களுக்கு எதிராகவும் ஆர்ப்படடம் செய்கிறார்கள் பார்த்திருப்பேர்கள் என்று நம்புகிறேன். காரணம் சியோனிஸ்ட்டுக்களின் போர் வெறி உலக மக்களிடம் இருந்து யூதர்களை பிரித்துக்கொண்டு இருக்கிறது ...... மற்றவர்கள்போல அவர்களால் சுதந்திரமாக எல்லா நாடுகளிலும் திரிய முடியவில்லை. தவிர சியோனிஸ்ட்டுகளின் கொலைவெறி அவர்களுக்கே வெறுப்பை கொண்டுவரும் அளவுக்கு இருக்கிறது
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வெறும் வாய் மட்டும்தான் ! கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு இன அழிப்பு போரை ஒரு இன அழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு கருத்து எழுதி புரியவைக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பணத்தை பின் தொடர்ந்தால் எல்லாமும் புரியக்கூடியயதாக இருக்கும் இராணுவம் என்பதே பொருளாதார பாதுகாவலர்கள்தான் ஏழை நாடுகள் கூட ஏன் பாதுகாப்பு செலவுக்கு கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்று பலரும் சிந்திப்பதில்லை உண்மையில் ஏழைநாடுகள் கொட்டுகிறார்களா? வற்புறுத்த படுகிறார்களா என்பதுகூட பலருக்கு தெரியாது. மத்தியவங்கி என்றால் என்ன? தேசியவங்கி என்றால் என்ன? உலகவங்கி என்றால்? எங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் கேள்விகள்கூட பலருக்கு இல்லை. அனால் புட்டினுக்கும் உக்ரைனுக்கும் அரசியல் பாடம் எடுத்தால் அதில் போய் எழுதி அதை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். அங்கு நடக்கும் செய்திகளை இணைக்க வேண்டும்தான் யாரவது படிப்பார்கள் அதை நான் செய்வதில்லை சுய ஆக்கம் என்று கூட யாழில் எதையும் எழுதுவதில்லை காரணம் நேரம் இல்லை ஏழு நாளும் வேலை செய்கிறேன். அப்படி ஒன்றை செய்துவந்தால் எனக்கும் அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் ஆனால் இந்த போர் பற்றிய செய்திகளை செய்ய முடியாது. நான் இப்போ மெயின் ஸ்ட்ரீம் மீடியா செய்திகள் பார்ப்பதே இல்லை தேவையற்ற இரத்த அழுத்தம். இன்டெலிஜென்ஸ் தளம் ஒன்றில் பணம் செலுத்தி பலவருடமாக அங்கத்தவராக இருக்கிறேன் அவர்கள் ஒரு வாரம் 5 கட்டுரைகள் அனுப்புவார்கள் அதை வாசிப்பதோடு சரி. இங்கு ஓரளவு நடுநிலையான என் பி ஆர் NPR என்று ஒரு ரேடியோ உண்டு அதுதான் இவ்வளவுகாலமும் தொடர்ந்து கேட்பேன் காரில் வேலையில் கூட கேட்பது உண்டு. ரஷ்ய உக்கரைன் காஸா போர் தொடங்கியதில் இருந்து அதுவும் கேட்பதில்லை தமிழ் பாட்டு மட்டுமே கேட்க்கிறேன். எனது நேரத்தை செலவழித்து எனக்கு இரத்த அழுத்தம் கூடுவதைத்தானே ...... சொந்த செலவில் சூனியம் என்று சொல்வோம். அதை ஏன் தெரிந்துகொண்டும் செய்ய வேண்டும். அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால் கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு நான் வாங்கி விற்கும் பங்குகளையும் இணைத்து விடுகிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடிவேலுவின் காமெடிமாதிரி ........... வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எதோ ஒரு மூடத்தனம் மாயைக்குள் நானும் அடங்குகிறேன் எல்லோரும் அடங்குகிறோம் இதில் ஒருவரை ஒருவர் சாட என்ன இருக்கு? என்றே எழுதினேன் அதுக்கும் பதில் இப்படி எழுதுகிறீர்கள் மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் இங்கு marketing territory ரொம்ப முக்கியம்...... எதிர்கால சேமிப்பே இங்குதானே? தீயாய் வேலை செய்யணும் குமாரு
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் நான் கருத்துக்களை இப்போ அதிகம் வாசிப்பதில்லை ஏதும் புது தகவல் செய்தி இருப்பின் வாசிப்பேன் அல்லது கடந்து போய்விடுவேன் "ஆதிக்கத்தனமான" கருத்துக்களை கருத்தாளர்களை பார்க்கும்போது மட்டும் அதற்கு ஏற்ற பதில் கொடுக்கவேண்டும் என்று எண்ணி அதற்கும் நேரம் இருந்தால் மட்டும் எழுதுவேன். மற்றும்படி இப்போ நல்ல நகைசுவை கருத்துக்களாகவே ஒரு இனஅழிப்பு திரியே போய்க்கொண்டு இருக்கிறது அதில் எழுத என்ன இருக்கிறது? யார் எழுதி ... யார் மாற போகிறார்கள்? எதோ ஒரு மாயையில் எல்லோரும் லயித்து இருக்கிறோம். விலைகொடுத்து வாங்கி மூளையை சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் வைத்திருக்க எல்லோரும் கொஞ்சமாவது குடிக்கிறோம் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அது நன்றாகவும் இருக்கிறது. சிலர் இல்லாத கடவுளை முழுமையாக நம்பி அதில் லயித்து வாழ்கிறார்கள். மூடத்தனமாக வாழ்தல் என்பதில் ஒருவரை ஒருவர் சாட முடியாமலும் இருக்கிறது அளவுகள் விடயங்கள்தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர எல்லோரும் எதோ ஒன்றை செய்கிறோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாட்டும் நானே பாவமும் நானே என்று நீங்கள் பார்த்த வீடியோவுக்கு நீங்களே பதில் எழுதுகிறீர்கள் ஆனாலும் மற்றவர்களை சாடுகிறீர்கள். நல்ல தெளிவாகவும் அறிவாகவும் எழுதுவீர்கள் பின்பு இப்படி எழுந்ததனமாக ஏதும் பிதற்றலாகவும் எழுதுகிறீர்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும் எல்லா திரியிலும் எழுதவேண்டும் எல்லா விடயமும் எல்லோரைவிட எனக்கு அதிகம் தெரியும் அப்படியான ஏதும் எண்ணம் நிலைப்பாடு இருப்பின் அதை தலைக்கணம் என்று தமிழில் சொல்லுவார்கள் அது கூடாதது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த உந்துதலில் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரிவதில்லை ......... கொஞ்சம் வேக கவனம் பலவிதத்தில் பாதுகாப்பு என்று முளுமையாக நம்புகிறேன். நீங்கள் தெளிவாக எழுதினாலும் ..... வாசிப்பவரிடம் தெளிவு இல்லை என்றால் அது ஒரு வீண் வேலை என்றே எண்ணுகிறேன். குறித்த தலைப்பு .......... குறித்த கருத்துக்கள் என்று மட்டும் எழுதினால் யாழ்களமும் சிறப்புறும் என்று எண்ணுகிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் நான் அதை பார்க்கவில்லை பார்த்திருப்பின் சுட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன்