Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. பரவாயில்லையே AIயும் என்னைப் போலவே சிந்தனையை கொண்டிருக்கிறதே.😇 நீண்ட கதையானாலும் முடிவுவரை கட்டிப்போட்டிருந்தது உண்மை. ஆனாலும் AIயின் முடிவுரை உண்மைதான். இப்படியான நிகழ்வுகளின் வலிகள் வாழ்நாள் முழுதும் தொடரும் என்பது உண்மையே.
  2. இங்கேயும் அப்படித்தான். அவர்கள் பார்வையில் இந்தியனாகத்தான் என்னைப் பார்த்தார்கள். ஒரு சிலர் “ஆபிரிக்காவா?” என்றும் கேட்டதுண்டு. அதிகம் எதற்கு, என்னை முதன் முதலாக சந்தித்த போது, தமிழ்சிறி என்னை பிறேஸிலியன் என்றே நினைத்துக் கொண்டாராம். சரி..சரி.. நானும் ஒத்துக்கொள்கிறேன்😊 தமிழ், சிங்களம் எனப் பிரிந்திருந்தாலும் ஆங்கிலம் எங்களுக்குப் பொது மொழியாகவே இருக்கிறது. ஒருவேளை கூட்டுக் கோழிக்கு, அவர்களுடனான பழக்கத்தில் அந்தத் தொனி வந்திருக்கலாம்.
  3. நீண்ட கதை. பார்த்தவுடன் பிறகு வாசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதிகாலையில், அமைதியான நேரங்களில்தான் நான் அதிகம் வாசிப்பேன். இன்று 'அமரசிறி'யை வாசிக்க முடிந்தது. வாசிக்கத் தொடங்கியபோது, பல நினைவுகள் வந்து குழப்பிக் கொண்டிருந்தன. அதனால், நின்று நிதானித்து வாசிக்க, நினைத்த நேரத்தை விட கொஞ்சம் அதிகமான நேரம் எனக்குத் தேவைப்பட்டு விட்டது. சில விஷயங்கள், அதை நாங்களே செய்யாவிட்டாலும், பார்வையில் விழுந்து விட்டாலே நினைவில் தங்கிவிடும். என்னிடமும் பல நினைவுகள் இருக்கின்றன. இன்றுவரை அதை மறக்க முடியவில்லை. எப்போதாவது, அவை வந்து போகின்றன. 'அமரசிறி'யை வாசிக்கும் போதும், அந்த நினைவுகள் வந்து நின்று தொல்லைகளும் தந்தன. எண்பதுகளின் ஆரம்பம். வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதற்கான எண்ணம் எனக்குள் தோன்றிய காலம். பத்திரகாளி கோவில் வாசலோடு இருந்த திண்ணையில் அமர்ந்து, நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென வீதியில் சலசலப்பு. வெள்ளை வானில் இருந்து கைகள் கட்டப்பட்டவரை ஒருவர் அழைத்து வந்தார், இல்லை, இழுத்துக் கொண்டு வந்தார். அவர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய இருவர் வந்து கொண்டிருந்தனர். இழுத்துக் கொண்டு வந்தவர் எனக்கு நன்கு தெரிந்தவர், பின்னாளில் கடற்படைத் தளபதியான சூசை. அப்போதிருந்த பதட்டத்தில் எல்லோரும் போல், நானும் எழுந்து கொண்டேன். என்னை கடந்து போகும் போது, சூசை மட்டுமல்ல, இழுத்து வந்தவரும் என்னைப் பார்த்தார், அல்லது எங்களைப் பார்த்தனர். அந்த மனிதர், "தண்ணீர்" என்று கேட்டார். ஒரு நொடிதான், இழுத்துக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார். அந்த ஒரு நொடியிலான அவரது பார்வையும், "தண்ணீர்" கேட்ட அவரது குரலும், இன்றும் நினைவில் வந்து, வந்து போகின்றன. நடப்பதைப் பார்க்க கூட்டம் கூடியது. நான் பத்திரகாளி கோவிலின் முன்னாலேயே நின்று விட்டேன். "காட்டிக் கொடுப்பவர்களுக்கும், துரோகிகளுக்கும் இதுதான் தண்டனை" என்ற சூசையின் குரல் கேட்டது. தொடர்ந்து ஒரு துப்பாக்கியின் வெடிச்சத்தம். நின்று கொண்டிருந்த காந்தி சிலைக்குப் பின்னால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவரின், தலை தொங்கிய நிலையில், நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நகரத்தில் நடந்த முதல் சம்பவம் இதுதான். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் சிவனுகணேசன். நாற்பது வருடங்களுக்கு மேலாக, அடிக்கடி என்னிடம் வந்து போகிறவர்களில் சிவனுகணேசனும் ஒருவர்.
  4. தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்.. தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன் ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது. நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில் நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன். தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம். ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான். இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.
  5. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘ஹெய்சா’, இப்போ ‘வீழ்ச்சி’. எங்கே தேடி எடுக்கிறீங்கள் இப்படியான கதைகளை? “எதையாவது வாசிச்சு தொலைக்கட்டும்” என்று வீட்டிலே விட்டுட்டாங்களா? சும்மா சொல்லக் கூடாது கதைகள் இரண்டும் அழகாக சொல்லப்பட்டிருந்தன. வீழ்ச்சியின் முடிவை ஓரளவு ஊகிக்க முடிந்திருந்தது. இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்தாமல் இருக்க, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை’யும், ‘சித்தாந்த வினாவிடை’யும் தேவைப்படுகிறது. பிழைக்கத் தெரிந்த ஆள்.
  6. நீங்கள் பதிவிட்டிருக்கும் படத்தைப் பார்த்தவுடன் 98இல் பிரபலமான Tank manநஆன் நினைவுக்கு வந்தது. அருமை. நல்ல கவிதை. அதிலும் கடைசி வரிகள் சுப்பர். சிலர் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்ற நிலையில் இருந்து மாறவே மாட்டார்கள். அதற்காக பேசாமல் இருக்க முடியாது. இன்னும் எழுதுங்கள். எங்கள் வீட்டுக்குள் ஒரு பலசாலி வந்தால் எழுந்து ஓடிவிடுவோம் தூரப் போய் நின்று வீரம் பேசுவோம் வெட்டி வீழ்த்திவிடுவோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.