Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. எம்ஜிஆர் நடித்த படங்களில் எப்போதும் ஒரு இனிமையான மெலோடி பாடல் இடம்பெறும். எம்ஜிஆரின் இந்தப் பாணியை இயக்குனர் எஸ்.சங்கரும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். எம்ஜிஆர் படங்களின் மெலோடி பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ் போன்ற மென்மையான குரலுடைய பாடகர்களை அவர் பயன்படுத்தினார். சில சமயங்களில் ரி.எம்.எஸ். பாடியபோது, பெண் குரலுக்கு எஸ்.ஜானகியை இணைத்திருப்பார். அறுபதுகளில் எம்ஜிஆர் பட பிரபல மெலோடி பாடல்கள் என, குலேபகாவலி – ஏ.எம்.ராஜா& ஜிக்கி பாடிய "மயக்கும் மாலை பொழுதே நீ போ..." மஹாதேவி – ஏ.எம்.ராஜா & சுசீலா பாடிய "கண்மூடும் வேளையிலும் கலை என்ன…" திருடாதே – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம்..." பாசம் – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "பால் வண்ணம் பருவம் கண்டு..." என்று பலதை சொல்லிக் கொள்ளலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் வர்ணத்திரைப்படமாக வெளியான படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ஆகும். அந்தப் படத்தின் "மாசிலா உண்மைக் காதலே" பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வண்ணப் படத்தின் பாடல் காட்சி இங்கே கறுப்பு வெள்ளையில் வந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த இந்தப் பாடல், அன்றைய காதலர்களை கட்டிப்போட்ட இனிமையான மெலோடியாக இருந்தது.
  2. துணையோடு போனதால் 20 யூரோ போச்சு. ஆனால் எழுதுவதற்கு ஒன்று கிடைத்தது.
  3. அவகேடோ(avocado) என்ற சொல் Nahuatl மொழியில் ahuacatl என்பதிலிருந்து உருவானது, அதன் அர்த்தம் ஆண் விதைப்பை. அடுத்தமுறை அவகேடோ வாங்கும் போது உங்கள் நினைவுக்கு வரும்
  4. அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
  5. “புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆
  6. "ஆடவாங்க அண்ணாச்சி..." "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில் ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா. எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது. பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.
  7. உண்மை. இப்படியே போனால் அடுத்த முதலமைச்சர் அந்தப் பக்கம் இருந்துதான்.
  8. பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி. அப்படியே மாத்தரைப் பக்கம் போய் பாலசிங்கம் நடேசனின் மனைவி விசித்திராவின் தாய், தந்தை மற்றும் அவரது குடும்பப் படங்களை இணைத்தீர்களென்றால் நல்லது. உங்களால் முடியாதா என்ன?
  9. ஜமுனாராணியும் இணைந்து பாடியிருப்பார் அன்றைய பிரபலமான பாடல். பல மொழிகளில் இந்தப் பாடல் இருக்கிறது. யேர்மனிய மொழியிலும் கேட்டிருக்கிறேன்
  10. Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று. பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது. பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன். பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது. போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில் இல்லாத ஒரு தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது. பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில் Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குள் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன. “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப் பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப் பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!” புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான் ஹரி போட்டர் கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி போட்டர் ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப் பிள்ளைகளும் ஹரி போட்டர் ரசிகர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன். நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில் “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது. Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.