Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய் Dec 13, 2025 - 07:05 PM 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி - ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmj4c9shv02pgo29nwy80r7y6
  2. 19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை எதிர்த்தாடவுள்ள இலங்கை வம்சாவளி ஆஸி. Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 03:12 PM (நெவில் அன்தனி) நமீபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இலங்கையை எதிர்த்தாடவுள்ளனர். சிட்னி பெரும்பாகத்தில் அமைந்துள்ள பராமட்டா மாவட்ட கிரிக்கெட் கழகத்திற்காகவும் நியூ சௌத் வேல்ஸ் மாநில அணிக்காகவும் விளையாடிவரும் நிட்டேஷ் சமுவேல், நேடென் குறே ஆகிய இரண்டு வீரர்களே அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்களாவர். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒரே குழுவில் இடம்பெறுவதால் இந்த இரண்டு இலங்கை வம்சாவளி வீரர்களும் இலங்கையை எதிர்த்தாடுவார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது. பேர்த்தில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சம்பின்ஷிப் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற நியூ சௌத் வேல்ஸ் மெட்ரே அணிக்காக விளையாடிய இவர்கள் இருவரும் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சுற்றுப் போட்டியில் நிட்டேஷ் சமுவேல் 129 ஓட்டங்கள் என்ற அதிகூடிய எண்ணிக்கையுடன் 91.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியைப் பதிவுசெய்து மொத்தமாக 364 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியின் நாயகன் விருதை வென்றெடுத்தார். இவரை விட வேறு எவரும் இந்த சுற்றுப் போட்டியில் 200 ஓட்டங்களை எட்டவில்லை. இதேவேளை பந்துவீச்சில் நிட்டேஷ் சமுவேலின் சக அணி வீரர் நேடென் குறே 17.82 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆவது இடத்தைப் பெற்றார். அவரது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களாகும். அவர்கள் இருவரும் சுற்றுப் போட்டியின் சிறப்பு அணியிலும் பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி மாநகரை அண்மித்த பராமட்டா மாவட்டத்தில் தமிழ், சிங்களம் பேசக்கூடிய இலங்கையர்கள் வாழ்ந்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/233182
  3. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து 12 Dec, 2025 | 02:05 PM (நெவில் அன்தனி) வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து வெற்றிகொண்டது. 2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார். முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை. கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர். களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை. ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது. மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எண்ணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.) நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.) ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி. https://www.virakesari.lk/article/233177
  4. புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம் 13 Dec, 2025 | 10:15 AM இந்தியத் தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றின் தரம் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 400–450 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை, வீதிகளில் காணப்படும் தூசி, கட்டுமான பணிகளின் போது வெளியேறும் தூசி , நிலக்கரி எரித்தல் மற்றும் எரிபொருள்கள் போன்றிலிருந்து வெளியாகும் வாயுக்களால் புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனா, குறிப்பாக பெய்ஜிங், கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன. இதன்படி நிலக்கரி எரிக்கும் கொதிகலன்களை மூடுதல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், புதிய ஆற்றல் வாகனங்களை அறிமுகப்படுத்தல், தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப சீர்திருத்தம், புதுமை மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. https://www.virakesari.lk/article/233244
  5. யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு! Published By: Digital Desk 1 13 Dec, 2025 | 11:23 AM கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான காற்று காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 137 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் சூறாவளியால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233253
  6. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel Marketing (Pvt) Ltd நிதி நன்கொடை! 13 Dec, 2025 | 12:03 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel Marketing (Pvt) Ltd இனால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Asriel Marketing (Pvt) Ltd இன் தலைவர் சிரான் பீரிஸ் நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Asriel Marketing (Pvt) Ltd இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டீ.எல்.பீ. வீரசூரிய, சாகல மஹவெல கீர்த்திபால மற்றும் என்.ஆர்.பீ. விக்ரமரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233259
  7. AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிராபத்துக்களை குறைக்கலாம் - அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் 13 Dec, 2025 | 11:03 AM (ஸ்டெப்னி கொட்பிறி) AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவிக்கையில், Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் (Association of Natural Disaster Risk Management Professionals) சங்கமானது, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களை தயார்ப்படுத்தவும் முடியும். இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும். இந்த திட்டமானது, இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த அனர்த்த தாங்கும் திறன் செயல்முறையை பிரதிபலிக்கிறது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எனவே தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது சிறந்ததொரு முயற்சியாகும். இந்த திட்டமானது இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் பங்களிப்பு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. Geo செயற்கை நுண்ணறிவானது அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் பாரிய சவால்களை முறிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் உதவும் என்று நாம் நம்புகிறோம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் வழங்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல், இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் சீரற்ற வானிலை, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூக பொருளாதார பாதிப்புகள் காரணமாக இலங்கை பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுகிறது. இலங்கையில், வெள்ளம், மண்சரிவு, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருவதால் பல உயிரிகள் சேதமடைகிறது மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்கு முறையான செயல்முறைகள் இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை மற்றும் கால தாமதமான தகவல்களுடன் செயற்படுகின்றனர். இதனால், Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. Geo செயற்கை நுண்ணறிவு மூலம் வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக கண்டறியந்து மதிப்பீடு செய்ய முடியும். புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) மூலம் வீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள், பாதுகாப்பற்ற பகுதிகள் மற்றும் அனர்த்தத்தினால் சேதமடைந்த பகுதிகளை வரைப்படமாக காட்சிப்படுத்த முடியும். எனவே, இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். https://www.virakesari.lk/article/233248
  8. மனிதர்களுக்கு பாதுகாப்பும் தேவை தான். வாழ்த்துகள்.
  9. அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை : ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் ! 13 Dec, 2025 | 11:23 AM அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்காஜிட் (Skagit) நதி கரைபுரண்டு ஓடியதன் காரணமாக, பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ப்யூஜெட் சவுண்ட் அருகே அமைந்துள்ள பர்லிங்டன் (Burlington) நகரம் முழுவதும், சுமார் 9,200 பேர் வசிக்கும் பகுதியாகும். இந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக வெள்ளிக்கிழமை (12) அதிகாலை அங்கிருந்து முழுமையாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. மவுண்ட் வெர்னன் பகுதியில் ஸ்காஜிட் ஆற்றின் நீர்மட்டம் 38 அடி (11.6 மீட்டர்) உயரத்தை எட்டியதாகவும், இது இதுவரை பதிவான அதிகபட்ச நீர்மட்டம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டு மேற்கூரையில் சிக்கிய இருவர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்பு வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், வீட்டு மேற்கூரையில் தஞ்சமடைந்த இருவர், அமெரிக்க தேசிய காவல் படையினரால் ஹெலிக்கொப்டர் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அமெரிக்க தேசிய காவல் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் வீடு வீடாக சென்று மக்களை வெளியேற்றினர். சில இடங்களில், வெள்ள நீரில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு காரணமாக, கடலில் உருவாகும் ‘Atmospheric River’ எனப்படும் ஈரப்பதம் நிறைந்த வளிமண்டல ஓட்டங்கள் மேற்குப் பசிபிக் பகுதிக்குள் நுழைந்ததே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வானிலை கணிப்பு மையத்தின் தகவலின்படி, கடந்த 7 நாட்களில் 6 முதல் 60 அங்குலம் வரை மழை பதிவாகியுள்ளது. “ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்துள்ளது” என வானிலை நிபுணர் ரிச் ஒட்டோ தெரிவித்தார். ஸ்காஜிட் நதியின் கரையோர அணைகள் தற்போது நிலைத்து இருந்தாலும், கடும் அழுத்தம் காரணமாக அணை உடைப்பு அபாயம் தொடர்கிறது. இதனால், நதியின் கீழ்ப்பகுதிகளில் Flash Flood Watch அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டன் மாகாண ஆளுநர் பாப் பெர்குசன் மற்றும் செனட்டர் மரியா கான்ட்வெல் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அவசர நிலையை (Federal Emergency Declaration) அறிவித்துள்ளார். தற்காலிகமாக மழை குறைந்தாலும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை மீண்டும் புதிய Atmospheric River புயல் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீதிகள், ரயில் பாதைகள், கனடாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233252
  10. காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி 13 Dec, 2025 | 09:47 AM காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காசாவுக்குள் அவசர உதவிப் பொருட்கள், தங்குமிட வசதிகள் மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/233237
  11. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd நிதி நன்கொடை! 13 Dec, 2025 | 10:22 AM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Almas Holdings (Pvt) Ltd இன் தலைவர் இம்தியாஸ் புஹார்தீன்(Imtiaz Buhardeen) நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். கண்டி மாவட்டத்தில் வெள்ள நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு தொடர்ந்தம் ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாக தலைவர் இம்தியாஸ் புஹார்தீன் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தார். Almas Equities Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷமீர் புஹார்தீன், பணிப்பாளர்களான ரிஸ்வி அப்துல் மஜீத் (Risvi Abdul Majeed)‍, ருஸ்லி ஷம்சுதீன்(Ruzly Shamsudeen), Almas Equities Pvt Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி இபாத் மரிக்கார் (Ifadh Marikar) மற்றும் Almas Holdings Pvt Ltd ஆலோசகர் (மூலோபாய அபிவிருத்தி) தக்சில ஹுலங்கமுவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233245
  12. யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது Published By: Vishnu 13 Dec, 2025 | 02:22 AM வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார். அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர். அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு வெள்ளிக்கிழமை (12) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/233228
  13. டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகம் - காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை Published By: Vishnu 12 Dec, 2025 | 09:48 PM வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்ழமுக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளின் வடகிழக்கு மழைக்கால புள்ளிவிபரங்களை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அறிக்கையின் படி; வட மாகாணத்தில் சாதாரணத்தை விட அதிக மழை பெய்யக்கூடும். வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண அளவிற்கு அண்மித்த மழைவீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை சாதாரணத்தை விட குறைவாக இருக்கக்கூடும். ஆனால், டிசம்பர்–ஜனவரில் புதிய தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவானால், இந்த முன்னறிவிப்புகள் மாறக்கூடும் எனவும் அதிகாரி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233224
  14. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு Published By: Vishnu 12 Dec, 2025 | 08:20 PM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது. இதன் படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233219
  15. நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் ! Published By: Vishnu 12 Dec, 2025 | 08:06 PM அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது. இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின. மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின. இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன. இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233218
  16. நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு Published By: Vishnu 12 Dec, 2025 | 07:31 PM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நோர்வே சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் தெரிவித்துள்ளார். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர். அந்தவகையில் நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட், 'இலங்கையில் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை நோர்வே வழங்கிவருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் வசதிகள் என்பன முறையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதும் இன்றியமையாததாகும்' எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்பவற்றுக்கு நோர்வே அரசாங்கம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இவ்வாறான பரந்தளவிலான அனர்த்தங்களின்போது நோர்வே போன்ற நாடுகள் முன்வந்து பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் எனவும் நோர்வே அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/233216
  17. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited நிதி நன்கொடை 12 Dec, 2025 | 06:17 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited (CWIT)இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் Satyanjal Pandey மற்றும் Colombo West International Terminal (Private) Limited இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Munish Kanwar ஆகியோரினால் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார். எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி Devika Lal, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிருஷான் பாலேந்திர,Colombo West International Terminal இன் Zafir Hashim மற்றும் Anandhan Nagaysayanu Raj ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233202
  18. 3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது. கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர். இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. கருந்துளை என்றால் என்ன? கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை. பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'அந்தரங்க பகுதிகளைத் தொடுவது வன்கொடுமை அல்ல' - என கூறிய உயர் நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம் 'விடுமுறை முடிந்து வரும்போது கர்ப்ப பரிசோதனை' - விடுதி மாணவிகள் புகாரின் பின்னணி என்ன? சாப்பிட்ட உடனேயே மலம் - உணவு உங்கள் உடலில் சேரவில்லை என அர்த்தமா? அகண்டா - 2 விமர்சனம்: பாலகிருஷ்ணாவின் திரைப்படம் எப்படி உள்ளது? End of அதிகம் படிக்கப்பட்டது இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன. அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம். அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன. பட மூலாதாரம், ESA/Hubble/Nasa/MC Bentz/DJV Rosario படக்குறிப்பு, இந்த மிகப்பெரிய கருந்துளை பூமியிலிருந்து 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள என்.ஜி.சி 3783 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திற்குள் அமைந்துள்ளது இரண்டு தொலைநோக்கி மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும். இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும். "ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார். ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி. மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) தொலைநோக்கி. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது. ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார். இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார். மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Solar Orbiter/EUI Team/ESA/Nasa படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையம் தலைமையிலான சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பிப்ரவரி 15, 2022 அன்று ஒரு பெரிய சூரிய வெடிப்பைப் படம் பிடித்தது பேரண்டத்தின் ரகசியங்கள் கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது. அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது. ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது." மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxq342l573o
  19. வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ கட்டுரை தகவல் வனேசா புஷ்லூட்டர் லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீதான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரோவைப் பிடிப்பதற்கான தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதியையும் டிரம்ப் நிர்வாகம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. யார் இந்த நிக்கோலஸ் மதுரோ ? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார். நிக்கோலஸ் மதுரோ இடதுசாரித் தலைவரான ஹியூகோ சாவேஸ் மற்றும் அவரது வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் (United Socialist Party of Venezuela - PSUV) தலைமையில் முக்கியத்துவம் பெற்றார். முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார். சாவேஸும் மதுரோவும் ஆட்சியில் இருந்த 26 ஆண்டுகளில், அவர்களின் கட்சி தேசிய சட்டமன்றம் , நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளால் சேகரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கைகள், அவர்களின் வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் அமோக வெற்றி பெற்றதாகக் காட்டின. முதன்மை எதிர்க்கட்சித் தலைவரான மரியா கோரினா மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக கோன்சலஸ் நிறுத்தப்பட்டார். "சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அவரது போராட்டத்திற்காக" அவருக்கு அக்டோபர் மாதத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதனையடுத்து, மச்சாடோ பயணத் தடையை மீறி, பல மாதங்களாக மறைவில் இருந்த பின்னர், டிசம்பர் மாதம் பரிசைப் பெறுவதற்காக ஓஸ்லோவுக்குப் புறப்பட்டார். டிரம்ப் ஏன் வெனிசுவேலா மீது கவனம் செலுத்துகிறார்? வெனிசுவேலாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வந்ததற்கு, டிரம்ப் மதுரோவையே குற்றம் சாட்டுகிறார். 2013-ஆம் ஆண்டு முதல் வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக, சுமார் 80 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்படுகிறது. ஆதாரம் எதுவும் வழங்காமல், மதுரோ தனது "சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களை காலி செய்து", அங்கிருந்தவர்களை அமெரிக்காவுக்கு குடியேற "கட்டாயப்படுத்துவதாக" டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் போன்ற போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதிலும் டிரம்ப் கவனம் செலுத்தியுள்ளார். அவர் வெனிசுவேலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். பிந்தைய குழுவுக்கு மதுரோவே தலைமை தாங்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தான் ஒரு போதைப் பொருள் குழுத் தலைவர் என்ற கூற்றை மதுரோ வலுவாக மறுத்துள்ளார். மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக, தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா "போதைப் பொருள் மீதான போர்" என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என்பது ஒரு படிநிலை அமைப்பு அல்ல, மாறாக ஊழல் மிகுந்த அதிகாரிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் என்றும், இவர்கள் வெனிசுவேலா வழியாக கோகெய்ன் கடத்தலை அனுமதித்து லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கா ஏன் கரீபியனுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது? பட மூலாதாரம்,US Navy/Reuters படக்குறிப்பு,கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் ஒன்றாகும். வெனிசுவேலா கரையோரத்தில் அமெரிக்கா எண்ணெய் டாங்கரை கைப்பற்றியபோது அது செயல்பாடுகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா 15,000 வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான விமானந்தாங்கி கப்பல்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், மற்றும் நீர் தாக்குதல் கப்பல்கள் ஆகியவற்றை கரீபியன் பகுதிக்கு அனுப்பியுள்ளது. 1989-இல் அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து, இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய படை இது தான். இதன் நோக்கம், அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் கடத்தலைத் தடுப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு இந்த கப்பல்களில் ஒன்றாகும். வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்படுவதற்கு முன்னர், இதிலிருந்துதான் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டேங்கர் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானில் இருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது" என்று அமெரிக்கா கூறியது. ஆனால், வெனிசுவேலா இந்த நடவடிக்கையை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கண்டித்துள்ளது. சமீப மாதங்களில், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீது சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். டிரம்ப் நிர்வாகம், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அமெரிக்கா ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளது என்று வாதிடுகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒழுங்கற்ற போர் நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, படகில் இருந்தவர்களை "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" என்று விவரித்தது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் "சட்டபூர்வமான ராணுவ இலக்குகளுக்கு" எதிரானவை அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, செப்டம்பர் 2 அன்று நடந்த முதல் தாக்குதல், கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அன்று ஒரு தாக்குதல் அல்ல, மாறாக இரண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்த ராணுவ நடவடிக்கை பொதுவாக அமைதியான காலத்தில் பொதுமக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட, முறையான தாக்குதல் எனும் பிரிவுக்குள் வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் "உயிர்களை அழிக்கும்... விஷத்தை எங்கள் கரைகளுக்குக் கொண்டு வர முயற்சிக்கும்" போதைப்பொருள் குழுக்களிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, ஆயுத மோதலுக்கான சட்டங்களின்படி தாங்கள் செயல்பட்டதாகத் தெரிவித்தது. வெனிசுவேலா போதைப்பொருட்களை அனுப்புகிறதா? உலகளாவிய போதைப்பொருள் கடத்தலில் வெனிசுவேலா ஒரு சிறு பங்களிப்பாளராகவே உள்ளது. இது, வேறு இடங்களில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லப் பயன்படும் ஒரு வழித்தட நாடாகவே செயல்படுகிறது என போதைப்பொருள் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியா, உலகின் மிகப்பெரிய கோகெய்ன் உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், இதன் பெரும்பகுதி வெனிசுவேலா வழியாக அல்லாமல், பிற வழிகளில் அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (US Drug Enforcement Administration - DEA) அறிக்கைப்படி, அமெரிக்காவை அடையும் கோகெய்னில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசிபிக் வழியாகவே கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் வேகப் படகுகள் மூலம் வரும் கோகெய்னின் அளவு மிகக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும்கூட, அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் கரீபியன் பகுதியில் தான் நடந்துள்ளன, பசிபிக் பகுதியில் சில தாக்குதல்களே நடந்துள்ளன. செப்டம்பர் மாதம், டிரம்ப் அமெரிக்க ராணுவத் தலைவர்களிடம், தாங்கள் குறிவைத்த படகுகளில் "வெள்ளை நிறப் பவுடர் நிரம்பிய பைகள் குவிந்துள்ளன, அதில் பெரும்பாலானவை ஃபென்டனைல் மற்றும் பிற போதைப்பொருட்கள்" என்று கூறினார். ஃபென்டனைல் என்பது ஹெராயினை விட 50 மடங்கு வீரியம் கொண்ட ஒரு செயற்கை போதைப்பொருள். மேலும் அமெரிக்காவில் ஓப்பியாய்டை அதிக அளவு உட்கொள்ளுதலால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணமாகவும் இது உள்ளது. ஆனால், முக்கியமாக மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானைல், அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடந்து நிலம் வழியாக அமெரிக்காவை அடைகிறது. அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய போதைப்பொருள் அச்சுறுத்தல் மதிப்பீட்டில் , அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் ஃபெண்டனைலின் மூல நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா குறிப்பிடப்படவில்லை. வெனிசுவேலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது ? எண்ணெய், மதுரோ அரசாங்கத்தின் வெளிநாட்டு வருவாய்க்கான முக்கிய ஆதாரம் ஆகும். இந்தத் துறையில் இருந்து கிடைக்கும் லாபம் அரசாங்க பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான நிதியை வழங்குகிறது. தற்போது வெனிசுவேலா ஒரு நாளைக்கு சுமார் 900,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாக சீனா உள்ளது. அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, வெனிசுவேலா உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அந்த வளத்தை மிகக்குறைவாகவே பயன்படுத்துகிறது. தொழில்நுட்ப மற்றும் பட்ஜெட் சவால்கள் காரணமாக, 2023-ஆம் ஆண்டில் வெனிசுவேலா உலகளாவிய கச்சா எண்ணெயில் 0.8% மட்டுமே உற்பத்தி செய்ததாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தெரிவித்துள்ளது. எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை அறிவித்த பிறகு, டிரம்ப் செய்தியாளர்களிடம், "எண்ணெயை நாங்கள் வைத்துக்கொள்வோம் என கருதுகிறேன்" என்று கூறினார். மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நாட்டின் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை அணுகுவதற்கான முயற்சி என்று வெனிசுவேலா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா இதற்கு முன்னர் மறுத்துள்ளது. வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியுமா? அதிபர் டிரம்ப், நவம்பர் 21 அன்று மதுரோவுடன் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார். தொலைபேசி உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை என்றாலும், டிரம்ப், மதுரோவுக்கு அவருடைய நெருங்கிய குடும்பத்துடன் வெனிசுவேலாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதுகாப்பான வழியில் வெளியேறும் அந்த வாய்ப்பை மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியது. இந்த காலக்கெடு முடிவடைந்த ஒரு நாள் கழித்து, வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை மூடப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப். வெனிசுவேலாவின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக "நிலம் வழியாக" நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளார். ஆனால், அத்தகைய ஒரு நடவடிக்கை எவ்வாறு செயல்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. டிரம்பின் பத்திரிகைச் செயலாளர், வெனிசுவேலாவில் அமெரிக்கத் துருப்புக்களை நிலத்தில் நிலைநிறுத்தும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை. "அதிபரின் வசம் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் அந்த வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவில்லை என்றாலும், கரீபியன் பகுதியில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள படைகள், ஒரு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையானதை விட மிகப் பெரியது என்று ராணுவ ஆய்வாளர்கள் பல வாரங்களாக சுட்டிக்காட்டியுள்ளனர். எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் அதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக சிபிஎஸ் நியூஸுக்கு நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் அளித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyxxn6wdrjo
  20. மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல் 12 Dec, 2025 | 05:15 PM மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு. மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார். இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல். அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு. மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது. அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும். மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும். தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது. நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும். இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233198
  21. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 12 Dec, 2025 | 03:53 PM (எம்.நியூட்டன்) இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகள் வெள்ளிக்கிழமை (12) காலை போராட்டத்தை முன்னேடுத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியும், இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஐனாதிபதிக்கான மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். போராட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கே வந்து மகஜரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாழ். இந்திய துணைத்துதுவரிடம் கையளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்துபேரை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233179
  22. மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு! Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 05:16 PM மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233199
  23. பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 02:05 PM மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், பேரிடர்களை வென்று முன்னேறலாம் என இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேரிடர்களுக்கு பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு முழுவதும், பல்வேறு பேரிடர்களை எதிர் கொண்டு நாம் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நாம் சுனாமி, நீண்ட கால உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை எதிர் கொண்டுள்ளோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மீண்டெழுந்து ஒருவருக் கொருவர் ஆதரவளித்து, நமது தேசத்தை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பினோம். ஒருவருக்கொருவர் உதவுதல், தேவைப்படுபவர்களுக்கு செவி சாய்ப்பதன் மூலமும், இன்றைய நெருக்கடியையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முனைவோம். பாதுகாப்பான வீடுகள் மற்றும் வீதிகளை மட்டுமல்ல, வலுவான, புரிந்துணர்வுடைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவோம். பேரிடர்களுக்கு பின்னர் நீங்கள் மன அழுத்தம், கவலை, கோபம், பயம், பதட் டம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது. உங்கள் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் பேரிடர் தாக்கங்களை வென்று முன்னேறலாம். உதவும் விடயங்கள் 1. உங்கள் பலங்கள் மற்றும் சிறிய, நிர்வகிக்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்: சுத்தம் செய்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், உறவினர்களின் சுகம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் இணைதல் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்தல் ஆகியவை கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கும். இப்படியான சிறிய படிகள் மீட்சிக்கு வழிவகுக்கும். 2. மற்றவருடன் தொடர்பில் இருங்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனியுங்கள்: மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் ஆதரிக்கும்போது, முழு தேசமும் வலு வடைகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், முதியவர்கள் (குறிப்பாக தனியாக வசிப்பவர்கள்), உதவி தேவைப்படக் கூடிய குறைபாடுகள் உள்ளவர்கள், கூடுதல் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமூக உதவி பயனாளிகள், நீண்டகால நோய் அல்லது மனநோய் நிலைமைகள் உள்ள அனைவரையும் கவனியுங்கள் 3. சிறுவர்களை ஆறுதல்படுத்துங்கள் சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம். இன்றைய சூழ்நிலையை அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் எளிமையான அனைவரின் வார்த்தைகளில் பாதுகாப்பையும் விளக்குங்கள். பெரியவர்கள் உறுதி செய்வதில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். 4. ஆன்மீக மற்றும் கலாச்சார நடைமுறைகள் நன்மை பயக்கும் பிரார்த்தனைகள், தியானம், கலாச்சார சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் என்பன மனதிற்கு பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும். 5. வழக்கமான மருந்துகளைத் தொடரவும் நீங்கள் ஒரு நீண்ட காலநோய் ஒன்று க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதற்கான தினசரி மருந்துகளை தொடர் ந்து தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அருகிலுள்ள வைத்தியர் அல்லது வைத்தியசாலையின் உதவியை நாடுங்கள். தவிர்க்க வேண்டியவை 1. துயரமளிக்கும் செய்திகளைப் பார்ப்பது அதிகமாக துயரமளிக்கும் செய்தி களைப் பார்ப்பது அல்லது கேட்பது பயத்தை அதிகரிக்கும். அதிகாரபூர்வமான அரசு மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள் 2. தகவல்களைப் பகிரும்போது பொறுப்பாக இருங்கள்: வதந்திகளைத் தவிர்க்க வும்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட தரவு, அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் துயரமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் மற்றவருக்குப் பகிர்வதைத் தவிர்க்கவும் 3. மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும் பிரச்சினைகளைச் சமாளிக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவதைத் தவிர்க்கவும். அவை பின்னர் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் விரைவாக அதற்கான தொழில்முறை உதவியை நாடுங்கள். நீங்கள் ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம். 4. பேரிடர் சூழ்நிலையைப் தனிப்பட்ட நலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்: எந்தவொரு பேரனர்த்தத்திலும், மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை மற்றும் துன்பகரமான உணர்ச்சிகளை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அத்தகைய நேரங்களில் உதவியை நாட தயங்காதீர்கள். ஒருவர் உதவியை நாடுவது என்பது பலவீனத்தின் அல்ல, மாறாக அவரிலுள்ள பலத்தின் அடையாளம். தேசிய மனநல உதவி எண் 1926 க்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்வதன் மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேர இலவச ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம். அத்துடன் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலை மூலமாகவும் உங்களுக்கான மனநல சேவைகளைப் பெறலாம். இந்த கடினமான நேரத்தில், பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் இலங்கை உளவைத்தியர்கள் சங்கமாக, நாம் உறுதியாக இருக்கிறோம். “நாம் ஒன்றாக மீண்டெழுந்திடுவோம்!" வலிமையாகவும், உறுதியுடனும் https://www.virakesari.lk/article/233174
  24. 200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி Dec 12, 2025 - 12:50 PM இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3
  25. வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் 12 Dec, 2025 | 03:46 PM (எம்.மனோசித்ரா) வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம். எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். https://www.virakesari.lk/article/233189

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.