Everything posted by ஏராளன்
-
ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை
Published By: DIGITAL DESK 2 10 JUL, 2025 | 05:24 PM ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் புதன்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூபா. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219669
-
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார். இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
-
தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் தோல்வியடைந்திருந்த காலத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தேசிய பாதுகாப்பை பலமிழக்கச் செய்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். சுதந்திர காலத்தில் இருந்து 78 வருடங்களாக அரசியல் அதிகாரங்களுடனேயே அரசியல் நிறுவனங்கள் இருந்துள்ளன. சுயாதீனமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடுகளுடையே நடந்துள்ளன. இதுவே உண்மையாக காரணங்கள் இந்த விடயங்களுக்கு. இந்த அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உள்ளக விசாரணைகளின் நீதியை எதிர்பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரிப்பது எப்படி நியாயமாக அமையும். செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கமொன்றே குற்றவாளியாக இருக்கின்றது. இந்த அரசாங்கமும் யுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க காலத்திலேயே செம்மணி புதைகுழிகள் உருவாகியுள்ளன. அங்கே முதல் அகழ்வின் போது 15 எலும்புகூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அக்கால அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் குற்றவாளியின் வாக்குமூலத்தில் 500 முதல் 600 வரையிலான உடல்களை புதைப்பதற்கு தான் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றில் 15 எலும்புகூடுகளே மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கமே அதன் குற்றவாளி தரப்பாக இருக்கின்றது. தற்போது அதற்கு அருகில் இன்னுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே குற்றமொன்று நடந்துள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இன்றி இதில் உண்மைகளை கண்டறிய முடியாது. இந்த அரசாங்கம் போருக்கு ஆதரவளித்துள்ளது. குற்றமிழைத்த தரப்பே விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும். இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை கட்டமைப்பை கோருகிறோம். செம்மணி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219632
-
செம்மணி மனித புதைகுழிக்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல்போனோர் அலுவலகமோ செல்லவில்லை ; ரவூப் ஹக்கீம்
09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளை பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன. யூடியுப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆராய்கின்றார். ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன. பல்வேறு மனித புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள். உங்களுடையவர்களின் மனித புதைகுழிகளைகூட இன்னும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு முன்னால் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது, பெயருக்கு கைக்கட்டிகொண்டு பார்த்துக்கொண்டிருக்கவா காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இருக்கின்றது. அதிகாரங்களை பயன்படுத்த முடியும். அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடுகின்றீர்கள் என்றால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அபுஹிந் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய இன்னுமொரு அபு இருந்தார். பக்தம்அபு என்பவரே அவர். அவர் இஸ்ரேலை சேர்ந்தவர். அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சஹரானின் மனைவியிடமும் முறையாக விசாரித்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். இவரிடம் சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு கேட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், பல்வேறு விடயங்களை பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி காலத்தினால் மூடி மறைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கம், அரசாங்கம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். யார் அவர்கள் என்று நாட்டுக்கு வெளிபடுத்துங்கள். நீங்கள் வயிற்றுக்கு தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மைகளை உண்மையாகவே வெளியிட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார். https://www.virakesari.lk/article/219619
-
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது! 10 JUL, 2025 | 09:00 AM யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219631 உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன. திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து - மூடும் அமைப்பு. இந்தத் தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர். இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், அது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கக்கூடும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும், திருவண்ணாமலை வட்டாட்சியருமான பாலமுருகன். இந்தக் கல்வெட்டில் "இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக்கூத்தன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் தூம்பு, தோரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூம்புகளின் தனித்துவமான கட்டுமானம் இந்த கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகளை அறிய முடிவதாகக் கூறுகிறார் பாலமுருகன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை தென்முடியனூர், தேத்துறை ஆண்டபட்டு, வலையாம்பட்டு உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தூம்புக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் பாலமுருகன். அதோடு, அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளும் நீர்ப்பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தன என்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் சான்றாக அமைவதாகவும் அவர் விளக்கினார். படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தூம்பு மதகு என்பது ஏரிகளில் தேக்கி வைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அமைக்கப்பட்ட ஒரு திறன்மிக்க அமைப்பு என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த குமிழித் தூம்பு கட்டுமான அமைப்பை சோழ அரசர்கள் அதிக அளவில் செய்துள்ளதாகவும் கூறுகிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்தக் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், "இந்தத் தூம்பு அமைப்பில் தேவையான அளவில் தண்ணீரை வெளியேற்ற உதவும் வகையில் கட்டுமானம் அமைந்திருக்கும். தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கல்பெட்டியின் மேலே அரையடி விட்டத்தில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துளை நீரோடித் துளை எனக் குறிப்பிடப்படும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல்லைக் கொண்டு மூடி வைத்திருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு - மூன்று துளைகள் இருக்கும். அவற்றை சேரோடித் துளை என்பர். ஏரியின் தரைமட்டத்திற்குக் கீழே இந்தக் கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்" என்று விவரித்தார். சோழர்கள் போற்றிய நீர் மேலாண்மை கட்டமைப்பு இந்தக் கட்டமைப்பில் நீர் திறந்துவிடப்படும் நுட்பம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியம், "பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவார்கள். அப்போது ஏரியின் நீரோடித் துளை வழியாக 80 விழுக்காடு நீரும், சேரோடித் துளை வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும் விதமாக கல் மண்டபங்களையும் அமைத்திருப்பார்கள்" என்று விளக்கினார். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் கண்டராதித்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தின் பேரில் வெட்டிய ஏரி இது. படக்குறிப்பு, கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இதன் மதகு ஒன்றுக்கு, கண்டராதித்தன் தான் வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயரைச் சூட்டியுள்ளார். மேலும், புதுக்கோட்டை அருகே உள்ள குமிழித் தூம்புக்கு ராஜராஜன் என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சோழர்கள் இந்த அமைப்பை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார்கள் என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன். "ஆங்கிலேயர் காலத்தில் பொதுப் பணித்துறை ஏரிகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அதிலிருந்து இந்தத் தூம்புகள் கைவிடப்பட்டன. பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட இத்தகைய குமிழித் தூம்புகளின் தூண்களில் இருக்கும் அரச மரபினர் காலத்துக் கல்வெட்டுகளும் அரசு சின்னங்களும் தெய்வச் சிற்பங்களும் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு செய்திகளை நமக்குத் தற்போதும் உணர்த்துகின்றன," என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23grgeglevo
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 JUL, 2025 | 03:59 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/219668
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
2) வீட்டுத்திட்ட பணிகளுக்கு உதவுவதற்காக திரு @ஈழப்பிரியன்(அமெரிக்கா (இருபாலை) அவர்கள் 29970 ரூபாவை (100$) திரு லக்ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 08/07/2025 அன்று வைப்புச் செய்துள்ளார். ஈழப்பிரியன் அண்ணாவிற்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
-
சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி
09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219580
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு! 09 JUL, 2025 | 09:01 PM யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அந்த வகையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது. முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள், இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.virakesari.lk/article/219625
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே கைது? கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர். கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmcw1aqft00yhqp4k5rtnruf6
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/ பதிவு செய்யலாம் என மேலுள்ள இணைப்பு காண்பிக்கிறது அண்ணை.
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? - 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட சச்சின்-ஆன்டர்ஸன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள். லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்து வீரர்கள் நல்ல முறையில் ரன்களைக் குவித்தனர். அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம், அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் கடந்த 2வது டெஸ்டில் ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். முதல் டெஸ்டில் பீல்டிங்கில் செய்திருந்த தவறுகளை 2வது போட்டியில் திருத்தி, கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டை விட 2வது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக 2வது டெஸ்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் இளம் இந்திய அணியினர் படைத்தனர். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்த ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு வெகுவாக ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆடுகளமாகும். மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று தாழ்வாக இருக்கும் என்பதால், பந்து பேட்டரை நோக்கி சீறிக்கொண்டு வரும். ஆதலால், பேட்டர்கள் இங்கு பொறுமை காத்து, நிதானமாக பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் இந்திய அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார். அதேபோல இங்கிலாந்து அணியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக ஆர்ச்சர் 2021ம் ஆண்டு ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்றார். அதன்பின் முழங்கால் காயம், முதுகுதண்டுவட சிகிச்சை ஆகியவற்றால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆர்ச்சர் நாளைதான் களமிறங்க இருக்கிறார். இங்கிலாந்து அணிக்குள் ஆர்ச்சர் வருவது மிகப்பெரிய பலமாகும், பந்துவீச்சாளர் ஜோஸ் டங்கிற்குப் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், இதைத்தவிர பெரிதாக எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து அணி செய்யவில்லை. இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றத்தையும் இந்திய அணி தரப்பில் செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது. 'புற்றுநோயுடன் போராடும் அக்காவுக்காக...' - 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் தீப் உருக்கம் கேப்டன்சி, பேட்டிங் அபாரம்: கேப்டனானதும் புதுப்புது நுட்பங்களை வெளிக்காட்டும் சுப்மன் கில் புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது? ஆர்ச்சர் வருகையால் நம்பிக்கை இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்டிலேயே ஆர்ச்சர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. 2வது போட்டியிலிருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சரை தீவிரமாகக் கண்காணித்த பின், பயிற்சியாளர் மெக்கலம் 3வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். இங்கிலாந்து அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். வோக்ஸ், ஸ்டோக்ஸ் தவிர ஜோஸ் டங், கார்ஸ், இருவருமே அனுபவம் குறைந்தவர்கள். ஜோஸ் டங் இரு போட்டிகளில் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தாலும், ஓவருக்கு 4.5 ரன்ரேட் வழங்குவது பெரிய கவலையாக இருந்தது. கார்ஸ், வோர்ஸ் இருவரும் இரு போட்டிகளில் சேர்த்து சராசரியாக 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளனர். ஆனால், பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடமாட்டார். சர்ரே கவுண்டி அணிக்காக ஆட இருப்பதால் கடைசி டெஸ்டில் அட்கின்சன் வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் மட்டுமே மாற்றமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். ஆர்ச்சரைப் பொருத்தவரை 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கடைசியாக 2021ம் ஆண்டுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர இங்கிலாந்து நிர்வாகம் மிகவும் மெனக்கெட்டது. அதனால்தான் அவருக்கு 2வது போட்டியில் போதுமான ஓய்வும், பயிற்சியும், கண்காணிப்பும் செய்து அணிக்குள் கொண்டு வருகிறார்கள். இவர் தவிர கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு மார்க்வுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், கடைசி டெஸ்டில் மார்க்வுட், அட்கின்சன் அணிக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது. லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். கார்ஸ், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் கடந்த 2 போட்டிகளாக இந்திய பேட்டர்களுக்கு பந்துவீசி அவர்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஆதலால், லார்ட்ஸ் மைதானத்தில் இன்னும் எளிதாக இந்திய பேட்டர்களை அணுக முடியும். சுழற்பந்துவீச்சுக்கு பஷீர், அவருக்கு துணையாக 5வது பந்துவீச்சாளராக ஜோ ரூட் பந்துவீசுவார். மற்றவகையில் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை முழுமையாக நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட், ஸ்மித், ப்ரூக் ஆகியோர் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். கிராளி, ஆலி போப், ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் இதுவரை ஃபார்முக்கு வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய கவலையாகும். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதற்கு டக்கெட்டின் பேட்டிங்கும், ப்ரூக், ஸ்மித்தின் சதமும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை, ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள், நல்ல வியூகங்களை வகுக்கிறார். ஜோ ரூட் அனுபவமான பேட்டராக நடுவரிசையில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தாலும், நிலைத்தன்மை அவரின் பேட்டிங்கில் இல்லை. லாட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ், டக்கெட், போப் ஆகிய 3 பேருமே கடந்த காலங்களில் சதம் அடித்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கும். வோக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே லார்ட்ஸ் மைதானத்தில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது பெரிய பலமாகும். அதிலும் 145 கி.மீ வேகத்துக்கு அதிகமாக பந்துவீசும் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பும்ராவின் வருகை 2வது டெஸ்ட் போட்டியில் வென்ற அதே இந்திய அணிதான் சிறிய மாற்றத்துடன் 3வது போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் மாற்றம் இருக்காது என கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் ஃபேட்டிங் ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்டில் வாய்ப்புக் கிடைத்தும் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் அவரை மாற்றாமல்தான் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் பும்ராவுக்குத் துணையாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 4வது பந்துவீச்சாளராக நிதிஷ் ரெட்டியும் இருப்பார். சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, வாஷிங்டன் இருவர் இருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இல்லாத இடத்தை நிறைவு செய்துவிட்டார். சிராஜும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மோதுவதற்கான களமாக இருப்பதால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் திறனை உரசிப்பார்க்கும் போட்டியாக இருக்கும். இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரன் காஃப் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா வருகைக்குப்பின், 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்பது பார்க்க உற்சாகமாக இருக்கும். அதேசமயம், இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து பந்துவீச்சு சற்று பின்னடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார். இந்திய அணி செய்ய வேண்டியது என்ன? பேட்டிங்கைப் பொருத்தவரை ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள் அரைசதம், சதம், தொடர் சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் பேட்டிங் மட்டுமே கவலையளிப்பதாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிவரை பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலம். ஆனால், கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. பேட்டர்கள் பொறுமையாக, நிதானமாக செயல்பட்டால்தான் ரன்களை நோக்கி நகர முடியும் என்பதால், பேட்டர்களின் திறனை உரசிப்பார்க்கும் உரைகல்லாக இருக்கும். பேட்டர்களை தவறு செய்ய வைக்கும் வகையில் பந்தில் பவுன்ஸர், ஸ்விங், சீமிங் இருக்கும் என்பதால், பேட்டர்கள் ஏமாந்து வி்க்கெட்டை விடாமல் பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. லார்ட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை முதலில் சோதனைக்குள்ளாவது டாப்ஆர்டர் பேட்டர்கள்தான். ஆதலால், ராகுல், ஜெய்ஸ்வால் மிகுந்த பொறுமையுடன் முறைப்படியான டெஸ்ட் போட்டியில் பேட் செய்வதைப் போல் பேட் செய்து முதல் செஷனைக் கடந்தால்தான் அடுத்துவரும் பேட்டர்களுக்கு நெருக்கடியில்லாமல் விளையாட முடியும். முதல் செஷனிலேயே விக்கெட்டை இழந்தால், அதன்பின் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆதலால், இந்த மைதானத்தில் முதல் செஷன் ஆட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதுதான் இங்கு சரியான முடிவாக இருக்கும். இங்கு டாஸ் வென்ற அணிதான் 55 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது. முதல் செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முதல் செஷன் வரை இந்திய பேட்டர்கள் விக்கெட்டை விடாமல் பொறுமையாக பேட் செய்விட்டால் நிலைத்துவிடலாம். ஆனால், முதல் செஷனில் புதிய பந்து, காற்றின் வேகம், ஆடுகளம் ஆகியவற்றால் மின்னல் வேகத்தில் பந்து பேட்டரை நோக்கி வரும் என்பதால் விக்கெட்டை காப்பாற்றி பேட்டர்கள் ஆடுவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி இருக்கும்? கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் முதல் செஷன் என்பது 5 நாட்களுமே முக்கியமானதாக இருக்கும். ஆடுகளத்தில் புற்கள் இருக்குமாறு பராமரித்துவருவதால், இயல்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கமே இங்கு அதிகமிருக்கும் பேட்டர்கள் சற்று சிரமப்பட்டுதான் பேட் செய்ய வேண்டியதிருக்கும். சிறிய தவறு, தவறான ஷாட் ஆட முயன்றாலும் விக்கெட்ட இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானம் (ஃபைல் புகைப்படம்) இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் கடைசி நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருக்கும். முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 300 ரன்கள் சேர்ப்பதே கடினம்தான். ஓவருக்கு 2 முதல் 3 ரன்கள் தான் சேர்க்க முடியும் என்பதால் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். லார்ட்ஸில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது? இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1932ம் ஆண்டிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்திய அணி 1986ம் ஆண்டுதான் முதல் வெற்றியை கபில் தேவ் தலைமையில் பெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2வது வெற்றிக்காக காத்திருந்து தோனி தலைமையில் ஒரு வெற்றியும் 2021ல் விராட் கோலி தலைமையில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றது. இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சதம் அடித்துள்ளார், ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஒரு போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இப்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் என்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும். இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வென்றுள்ளது, 35 போட்டிகளில் தோல்வி அடைந்து 51 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தாலும், பேட்டர் அரைசதம், சதம் அடித்தாலும் அது அவருக்கு வாழ்நாளில் மிகப்பெரிய நினைவலையாக இருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vrxdlynlyo
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 09 JUL, 2025 | 04:14 PM யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும். பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219587
-
செம்மணி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் - சாணக்கியன்..!
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். 1998/99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் மொழிந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? DNA பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை. அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ் அறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை. 2004ம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கலில் என்பவர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர். சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை? இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன. “மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்.” என மைத்திரிபால சிறிசேன அவர்களின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை? ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார். அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல். இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. https://www.virakesari.lk/article/219585
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிள்ளையானிற்கு உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது - நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 09 JUL, 2025 | 02:17 PM கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219576
-
பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ; 100 பேர் காயம்
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார். தங்கள் வீடுகளை விட்டு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தீயணைப்பு வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். "காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்கள் மீது எங்கள் சிந்தனைகள் உள்ளன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார். மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Bouches-du-Rhône பகுதியில் மே மாதம் 19 ஆம் திகதி முதல் ஒரு சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது. ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று சுமார் 41 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். https://www.virakesari.lk/article/219549
-
செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 12:31 PM பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் இறுதியாக இந்த குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றியபோது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்க்ள வெளிப்படுத்திய ஆதரவிற்கும் நான் உங்களிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். உங்களிற்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும், இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டன் தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தியடைகின்றேன். சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக. இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம். ஆனால் கவலையளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர். அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? https://www.virakesari.lk/article/219562
-
ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 8 ஜூலை 2025 ஏமனில் கொலை வழக்கில் சிக்கிய கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம், நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னமும் வழியிருப்பதாக கூறியுள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு தொடர்பாக பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தது? ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிமிஷா பிரியாவை மீட்பதற்கு 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார். ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 'ப்ளட் மணி (Blood Money)' என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத்(ஹூதி பிரிவு) கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார். மரண தண்டனை தேதி அறிவிப்பு நிமிஷா பிரியாவை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். மத்திய சிறையின் தலைவர் தொடர்புகொண்டு மரண தண்டனை தேதி முடிவு செய்யப்பட்டது குறித்துத் தனக்குத் தெரிவித்ததாக ஜெரோம் கூறுகிறார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நேற்று சிறைத் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தெரிவித்துள்ளேன். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் சனாவில் உள்ள இந்திய அதிகாரிகள் நேரடியாகச் சென்று மரண தண்டனை ஆவணத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதோடு, "நான் ஏமனுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சென்றபிறகு என்ன வாய்ப்புகள் நம் முன் இருக்கின்றன என்பதைப் பார்க்கவுள்ளேன். இன்னமும் இதில் இந்திய அரசு தலையிட முடியும்" என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஏமனில், கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஹூதி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை என்பதால், நிமிஷா பிரியா விவகாரத்தை சௌதியில் உள்ள இந்திய தூதரகமே கவனிக்கிறது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற இருக்கும் வழி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பை நிமிஷாவுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கடந்த 2023 டிசம்பரில் பிபிசி தமிழிடம் பேசியபோது, மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறிய ஜெரோம், "ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்புக்கான ஓர் அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுக்க முன்வந்தும்கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவேதான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது," என்றார். இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், "மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பார். அதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து 'நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்'. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்" என்று கூறினார். இப்போதுள்ள சூழலில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் முன்பு கூறியிருந்தார். நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா தனது கணவருடன் உள்ள புகைப்படம் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார். "மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்" என்று பிரேமா குமாரி தெரிவித்தார். அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை 'ஆபரேஷன் ரஹாத்' என்ற பெயரில் இந்திய அரசு மீட்டது. அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர். மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்துப் பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏமன் சென்றார் கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மஹ்தி, உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், "மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்" மற்றும் "நிமிஷா நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்தபோது, "மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்" கூறப்பட்டுள்ளது. "தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர்தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். கடந்த 2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். "இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்" என்று கூறுகிறார் பாலச்சந்திரன். தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது. நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார். ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5lvd1mgro
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த, துஷ்மன்த அசத்தல்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை Published By: VISHNU 08 JUL, 2025 | 10:21 PM (பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையைப் பேணி வரும் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் ஆகியவற்றுடன் அவர்கள் 4ஆவது விக்கெட்டில் 117 பந்துகளில் பகிர்ந்த 124 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இலங்கையின் வெற்றியில் வேகபந்துவீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரின் இணைப்பாட்டத்திற்கு இணைப்பாட்டத்திற்கு முன்னர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 63 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய விதம் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மோசமான பந்துகள் எதையும் விட்டு வைக்காமல் சிதறடித்தவாறு குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்ததுடன் சரித் அசலன்கவுடன் இணைந்து அணியை பலமான நிலையில் இட்டார். கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது. இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க (1) தொடர்ச்சியான 3ஆவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து பெத்தும் நிஸ்ஸன்க (33), குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முன்னாள் தலைவர் குசல் மெண்டிஸ், தற்போதைய தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகத் திறமையான வியூகங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். சரித் அசலன்க 68 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 16ஆவது அரைச் சதமாகும். இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 6அவது சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 114 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். துனித் வெல்லாலகே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடனும் துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தன்ஸித் ஹசன் (17), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (0), பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (28), அணித் தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் (28), ஷமிம் ஹொசெய்ன் (12) ஆகிய ஐவரும் துடுப்பாட்டத்தில் பிரசாகிக்கத் தவறினர். (124 - 5 விக்) மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையுடன் போராடிய தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துஷ்மன்த சமீரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர். பங்களாதேஷின் கடைசி துடுப்பாட்ட வீரரான ஜாக்கர் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை துடுப்பாட்டத்தில் எருவரும் தாக்குப் பிடிக்கவில்லை. பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குசல் மெண்டிஸ் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/219524
-
குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,UGC 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்." குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன" என கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சில படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே டிரக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்றொருபுறம், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் கூறுகையில், "விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தை மட்டும் அங்கே நிறுத்தியுள்ளோம். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருகிறது. ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன." என தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற உள்ளூர் மக்கள் சொல்வது என்ன? சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்ட எகல்பரா கிராம தலைவர் தஞ்சிபாய் பதியார் கூறுகையில், "பாலம் இடிந்ததாக கேள்விபட்டதும் அரை மணி நேரத்தில் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் இங்கு வந்தபோது. நான்கு கார்களும், ஒரு பைக்கும் ஆற்றில் விழுந்திருந்தன." என்றார். பாலம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். முஜ்பூர் கிராமத் தலைவர் அபேசிங் பர்மார் பாலம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அனைத்து இடங்களிலும் குழிகள் இருந்ததாகவும் தெரிவித்தார். பாலத்தில் கம்பிகள் வெளியே தெரிந்தன. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்தனர். "நாங்கள் பட்கானா என்கிற பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடன் ஆறு பேர் இருந்தனர். அவர்களில் என்னுடைய இளைய மகனும், கணவரும், மருமகனும், மைத்துனரும், மற்றவர்களும் உள்ளே இருந்தனர்." என ஒரு பெண்மணி தெரிவித்தார். பட மூலாதாரம்,@INFO_VADODARA படக்குறிப்பு,மீட்புப் பணிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஜக்மர் சிங் பதியா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நான் 7.30 மணிக்கு விபத்து பற்றி கேள்விபட்டேன். அதன் பிறகு இங்கு ஓடி வந்தேன். ஒரு ரிக்ஷா, லாரி, ஈகோ கார் மற்றும் சரக்கு ஏற்றும் மேக்ஸ் வாகனம் ஆற்றுக்குள் இருந்தன" என்றார். "மக்கள் மற்றவர்களையும் அழைத்தனர். காவல்துறையினரும் வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து சில சடலங்களை மீட்டனர். சில உடல்கள் இன்னும் மீட்கப்பட உள்ளன. தற்போது ஆற்றில் நான்கு அல்லது ஐந்து வாகனங்கள் உள்ளன, ஆனால் எந்த பைக்கும் இல்லை" என்றார். "இந்த விபத்தில் எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கினர், அதில் ஒரு பெண்மணி மட்டுமே பிழைத்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என மேலும் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜ்தீப் பதியார் பேசுகையில், "நாங்கள் காலை எட்டு மணியில் இருந்து இங்கு உள்ளோம். நாங்கள் கார்களை கயிறு கட்டி வெளியில் இழுத்தோம். உயிருடன் இருந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்." என்றார். முதலில் கிராம மக்கள் வந்ததாகக் கூறும் அவர் அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்ததாகத் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியை நோக்கி அதிக அளவிலான மக்களும் பாதசாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அல்லாமல் சில காவலர்களும் வாகனங்களும் பாலத்தின் மீது உள்ளது. ஒரு காணொளி சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. பட மூலாதாரம்,UGC முதலமைச்சர் கூறியது என்ன? விபத்தில் இறந்தவர்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். "கம்பீரா பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்." என்றார். பாலம் எவ்வளவு பழமையானது? பட மூலாதாரம்,NACHIKET MEHTA மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், "1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் தொடர்ச்சியாக அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. ரூ. 212 கோடி செலவீட்டில், புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். அதற்காக ஒப்பந்தம் கோருவது, மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் முதன்மை பொறியாளர் சி.பி. படேல் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "இந்த பாலம் 1985ம் ஆண்டில் திறக்கப்பட்டதாக" தெரிவித்தார். இந்த விபத்து எப்படி நடந்தது என கேட்டபோது, "இதுகுறித்த விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியும். அனைத்துப் பாலங்களிலும் பருவமழைக்கு முன்னதாகவும் அதற்கு பின்னரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆவணப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், இந்த பாலத்தின் நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்" என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் செயலாளர் பிஆர் படேலியா கூறுகையில், "இந்த பாலத்தின் ஒருபகுதி மஹி ஆற்றில் சேதமடைந்து விழுந்ததாக இன்று காலையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆராய நிபுணர்கள் குழுவினர் நிகழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் பட மூலாதாரம்,UGC மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது? வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்? வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயி குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், "இம்மாதிரியான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது ஏன்? இந்த பாலம் ஆபத்தான அளவில் இருந்திருந்தால், முன்பே அது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது." என்றார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், "இந்த பால விபத்து மனித தவறால் நிகழ்ந்துள்ளது. ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை தருகின்றனவா என்பதுதான் கேள்வி." என தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், "ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது இன்றைக்கு ஒருவர் அச்சத்தில் உள்ளார். அந்த பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6gy10vvwyo
-
பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை - தலிபான் தலைவர்களிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
09 JUL, 2025 | 10:33 AM பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளனர், பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219541
-
சிரிக்கலாம் வாங்க
உண்மை தான் அண்ணை, அந்த நேரம் அவர்கள் மீது சரியான கோபம் வந்ததே!
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து
இந்தோனேசியாவில் எரிமலை குமுறல்; சாம்பல் சூழ்ந்த மேகம் Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 03:24 PM கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள லெவோதோபி லாகி லாகி எரிமலை திங்களன்று உக்கிரமாக குமுறி 18 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலையும் புகையையும் வெளித்தள்ளியுள்ளது. இதனையடுத்த இந்தோனேசிய பாலித் தீவுக்கான மற்றும் அந்தத் தீவிலிருந்தான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா தீவான புளோரஸிலேயே எரிமலையே குமுறியுள்ளது. பாலி சர்வதேச விமான நிலையத்துக்கான 24 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த புளோரஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியாவுக்கான விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் உள்ளன. இருப்பினும் சில செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின. நவம்பர் மாதத்திற்குப் பின்னர் திங்கட்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 11:05 மணிக்கு எழுந்த வெப்ப மேகங்கள் மிக உயர்ந்ததாக இருந்தது என புவியியல் நிறுவனத் தலைவர் முகமது வாஃபித் தெரிவித்துள்ளார். கார்கள் மற்றும் பஸ்களில் குடியிருப்பாளர்கள் ஏறி தப்பிச் செல்லும்போது எரிமலையின் சிகரங்களிலிருந்து சிவப்பு நிற எரிமலைக் குழம்பு வெளியேறுவதை இரவு முழுவதும் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன. இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் முகக்கவசங்கள் தேவைப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியா பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளது, அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுகின்றன, இதனால் அடிக்கடி எரிமலை மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. லெவோடோபி லக்கி-லக்கி இந்த ஆண்டு பல முறை குமுறியுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த நவம்பரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/219491
-
இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா?
பட மூலாதாரம்,BBC NEWS SINHALA படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது. கட்டுரை தகவல் சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். "அந்த யானை அக்குட்டியை கைவிட தயாராக இல்லை. அதனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது," என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் சஞ்சய மதுஷன். தன் வயிற்றில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் சுமந்த, தற்போது இறந்துவிட்ட குட்டியை, அந்த தாய் யானை பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நேரமல்ல. "தாய் யானை அதை மூன்று நாட்கள் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது" என்று பிபிசியிடம் கூறுகிறார் மதுஷன் . அப்போது பூங்காவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தாய் யானையை அவர் கண்காணித்தார். "முந்தைய நாள் பிறந்தவுடனே அந்தக் குட்டி இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்," என்றும் அவர் கூறினார். மரணம் நிகழ்ந்தால் விலங்குகளுக்கு அது புரியுமா? 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் சிறிய பரப்பளவைக் கருத்தில் கொண்டால் உலகிலேயே அதிக யானைகள் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானை துக்கம் அனுசரிக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட Elephas maximus maximus என்ற யானை இனம், ஆசிய யானைகளில் மிகப்பெரிதாகவும், மிகக் கருமையானதாகவும் அறியப்படுகிறது. இந்த யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இடமாக கவுடுல்லா தேசிய பூங்கா உள்ளது. "இங்கு 300க்கும் மேற்பட்ட யானைகள் கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், யானைகள் கூட்டமாக கூடுவதை அடிக்கடி பார்த்திருந்தாலும், இதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சியை நான் கண்டது இதுவே முதல் முறை," என்கிறார் மதுஷன் "ஆனால் அந்த யானை ஏன் இப்படி நடந்துகொள்கிறது? அது துக்கத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா?" என்று சமூக ஊடகங்களில் வியப்பை வெளிப்படுத்தும் பலரைப் போலவே அவரும் ஆச்சரியப்படுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை மற்றும் நலன் தொடர்பான இணைப் பேராசிரியரான முனைவர் லீன் ப்ரூப்ஸ் பேசுகையில், "இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம், இருப்பினும் இதேபோன்ற காட்சிகள் உலகம் முழுவதும் முன்னர் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறார். "மற்ற விலங்குகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்வது கடினம். அவை மரணத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொள்கின்றன என்பதும், மரணம் எல்லோருக்கும் வரும் ஒன்று, அது திரும்ப முடியாத ஒன்று போன்ற மரணத்தின் முக்கிய அம்சங்களையும் புரிந்துகொள்கின்றனவா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது," என்று முனைவர் லீன் ப்ரூப்ஸ் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானைகளின் கர்ப்ப காலம் மிக நீண்டது. இது 680 நாட்கள் நீடிக்கிறது. இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ துறையின் யானை நிபுணரான பேராசிரியர் அசோக தங்கொல்ல, இலங்கையில் ஒரு யானை இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்ப்பது இதுவே முறையாக இருந்தாலும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார். "ஏனென்றால் அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளை யானைகள் பகிர்ந்து கொள்கின்றன. தாய்-குட்டி பிணைப்பு மிகவும் வலுவானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "நான் இதை விலங்கினங்களில், குறிப்பாக குரங்குகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் யானைகள் இதைச் செய்வது கொஞ்சம் விசித்திரமானது," என்றும் அவர் விளக்கினார். அந்த யானை குழப்பமடைந்திருக்கலாம் என்றும் முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். "ஆனால் யானைகள் ஒரு உயிருள்ள குட்டியை சாதாரணமாக இழுத்துச் செல்லாது. அதனால், இது ஒருவித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை தான் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் இறப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி, இப்போது கம்பேரெட்டிவ் தானடோலஜி(Comparative Thanatology) எனப்படும் ஒரு புதிய அறிவியல் துறையில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துறையில் விஞ்ஞானிகள் இந்த நடத்தைகளை நெருக்கமாகக் கவனித்து ஆராய்கிறார்கள்" என்று அவர் விளக்கினார். "விலங்குகள் இறப்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கின்றன என்பதை உணர்வதற்காக, இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒரு முறையான வழியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார். மற்ற விலங்குகளிலும் இதேபோன்ற நடத்தை உள்ளதா ? யானைகள் மட்டும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. விலங்குகள், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்த அவற்றின் சக விலங்குகளின் அருகே தங்கியிருப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,KEN BALCOMB, CENTER FOR WHALE RESEARCH படக்குறிப்பு, திமிங்கலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது) 17 நாட்களுக்கு தனது இறந்த குட்டியின் உடலைத் தள்ளிக்கொண்டிருப்பது காணப்பட்டது. தஹ்லெக்வா (Tahlequah) என்ற திமிங்கலம், 2018-ஆம் ஆண்டு, இறந்துவிட்ட தனது குட்டியின் உடலை 17 நாட்கள் தொடர்ந்து தள்ளிச் சென்றபோது, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே திமிங்கலம் மற்றொரு குட்டியை இழந்த பிறகு மீண்டும் துக்கத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. "அந்தத் திமிங்கலம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால், அது இறந்த தன் குட்டியை தனது மூக்குப் பகுதியில் (ரோஸ்ட்ரம்) சமநிலையுடன் தக்கவைக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமானது. ஆனால், அது தனது குட்டியை இரண்டு வாரங்கள் பிடித்துக்கொண்டிருந்தது," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். இதற்கிடையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைக் கூட்டங்கள் இறந்த குட்டிகளை மண்ணால் மூடுவதைக் காணும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிலர் இதை 'புதைப்பது போன்ற செயல்பாடு' என விவரிக்கின்றனர். "யானைகள் உருவாக்கும் புதைகுழிகள் பற்றிய இந்த தகவல்களை விளக்குவது மிகவும் சிக்கலான ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, எறும்புகள் மற்றும் எலிகள் போன்ற பிற இனங்கள் உள்ளன. அவையும் இறந்தவற்றை புதைக்கும்," என்று முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். இலங்கையில் சமீப காலமாக, காடுகளை அழிப்பது மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மனித - யானை மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன, மற்றும் பல இளம் குட்டிகள் தாய் யானைகளை இழந்துவிடுகின்றன. யானைகள் தங்கள் அறிவை ஒரு தாய்வழி சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்கு கடத்துகின்றன. இளைய யானைகள் தங்கள் மூத்த யானைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றன. "ஒரு குழுவில் முதிய யானைகள் கொல்லப்பட்டால், மனிதர்களைப் போலவே, யானைகளுக்கும் கற்றுக்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், அவை புரிந்துகொள்ளவோ, அல்லது சரியான முறையில் நடந்து கொள்ளவோ முடியாது. அதனால், குடும்பங்கள் உடைந்துவிட்டால், அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939nwgq93eo