Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இரான், இஸ்ரேல் சண்டையில் நடந்த 8 சம்பவங்கள் : 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், சீன் செடன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 13 முதல், இஸ்ரேல் இரானின் ராணுவ உள்கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி அடுத்து 24 மணி நேரத்தில், இன்னும் வேகமாக பல நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின. ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்கா இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்து விடும் நிலையில் இருந்தது. இப்படித்தான் அந்த நாள் முழுதும் நிலையற்ற சூழல் காணப்பட்டது. ' பாதுகாப்பாக இருங்கள் ' பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம். இந்தப் புகைப்படம் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 23 ஜூன் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் மத்திய கிழக்கை பாதிப்புக்கு உள்ளாக்கும் மோதல் வளைகுடாவிற்கும் விரைவில் பரவலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு, அமைதியான மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்க அரசு, "நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குங்கள்" என பரிந்துரை செய்தது. இது "அதிக எச்சரிக்கைக்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கத்தாரில் அமெரிக்கா மீது பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு, இரானுக்கு எப்போதும் இருந்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய அளவிலான அல்-உதெய்த் ராணுவத் தளத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமான நடவடிக்கைகள் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன. மலைக்கு அடியில் அமைந்துள்ள இரானின் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளம் உட்பட, இரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, கடந்த வார இறுதியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர். இரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமனெயி பதுங்கு குழியில் தங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாயத் தளங்களில் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று அவர் ஒரு உத்தரவை வெளியிட்டதாகத் தெரிகிறது. 'உண்மையான அச்சுறுத்தல்' 12:00 வாஷிங்டன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ் / 19:30 டெஹ்ரான் கத்தாரின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்தது. தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசரமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கினர். மேலும் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின. பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது இரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்று ஒரு "உண்மையான அச்சுறுத்தல்" இருப்பதாக பிபிசி அறிந்து கொண்டது. கத்தார் திசையை நோக்கி ஏவுகணைகள் குறிவைத்து வருவதைக் கண்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், இரானிய ஆயுதங்களை இடைமறித்துத் தாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் உருவான ஒளிப்பாதைகளால் நிரம்பியிருந்தது. 'பலம் அல்ல, பலவீனம்' 13:00 வாஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 டெஹ்ரான் இரான் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது நேரத்தில், இரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது. "இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பலம் அல்ல, மாறாக பலவீனங்கள்" என அது தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதல் விரைவில் முடிவடைந்தது. அமெரிக்காவிற்கு முன்பாக, கத்தார் அந்தத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றியது. தாக்குதலின் இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளம் தான் என்றாலும், அதன் இறையாண்மை இந்த "தீவிரமான தாக்குதல்" மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது. ஆனால் முக்கியமாக, தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்தத் தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை. அதே நேரத்தில், இரான் உச்ச தலைவரின் எக்ஸ் தளப்பதிவில், ஒரு சர்ச்சைக்குரிய படம் பகிரப்பட்டது. அந்தப் படம், ஒரு அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிவதையும் சித்தரித்தது. இருப்பினும், அழிவைப் பற்றி எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், "நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்று அவர் பதிவிட்டார். அதனையடுத்து, இரான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வெளிப்புற ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தத் தாக்குதல் இரான் தலைவர்கள் தங்களின் மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆனால் மோதலைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றியது. அமெரிக்கர்களுக்கு எதிராக தாங்கள் பழிவாங்கியதாக தங்களது மக்களிடம் கூற இரானுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த எதிரியை நேரடியாகச் சண்டைக்கு இழுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தாமல் அந்த தாக்குதலை மேற்கொண்டனர். பிறகு பதற்றம் தணிவதற்கான சூழல் உருவாவதைப் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எப்போது தோன்றுவார் என்பதை எதிர்பார்த்து உலகம் காத்திருந்தது. 'அமைதிக்கான நேரம்' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜூன் 15 அன்று டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஷரன் எண்ணெய் கிடங்கு உட்பட இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது. 16:00 வாஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 டெஹ்ரான் "பலவீனமானது." "எதிர்பார்க்கப்பட்டது." "திறம்பட எதிர்கொள்ளப்பட்டது." இரானின் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் விவரித்தார். ஆனால் அதன் பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனி காணப்பட்டது. தாக்குதல் குறித்து "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக" நன்றி என, இரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், "அவர்கள் தங்களது கோபத்தை வெளியிட்டுவிட்டனர்" என்று கூறினார். "ஒருவேளை இரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம். இஸ்ரேலும் அவ்வாறே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரான் அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் இரானுக்கு எதிராக இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த காலங்களில் உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், தீய சக்தியாகவும் அந்த நாட்டை விவரித்திருந்த டிரம்ப், சண்டை நிறுத்தம் குறித்து, அதன் தலைவர்களிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வெளியிட்ட தொடர் பதிவுகளை நிறுத்திவிட்டு, "உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!" என்று பின்னர் பதிவிட்டார் டிரம்ப். '12 நாள் போர்' பட மூலாதாரம்,MAXAR படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய பின்னர், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்தது. 18:00 வாஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 டெஹ்ரான் அமெரிக்கா, இரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரான் உடன் நடைபெற்ற மோதலில் சிறிது காலம் இணைந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசினார். இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் அதன் செய்தி எனத் தெளிவாக தெரிந்தது. இதற்கிடையில், டிரம்பின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும், இரானியர்களை நேரடியாகவும் ரகசிய ராஜ்ஜீய வழிகளிலும் அணுகினர். மத்திய கிழக்கில் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும், டிரம்ப் மிகவும் மதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க, அமெரிக்காவில் இருந்து அவரது குழு அவசரமாக செயல்பட்டது. அந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல்களும் அதற்கெதிரான மறுப்புகளும் பரவத் தொடங்கின. ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்தவுடன், நிலைமை முன்னேறத் தொடங்கியது. பின்னர், பிஎஸ்டி நேரப்படி காலை 11:00 மணிக்குப் பிறகு, அதிபர் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். "அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று அவரது செய்தி தொடங்கியது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான சண்டை நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். "செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள் "நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும். இனி, இந்த மோதல் "12 நாள் போர்" என்று அழைக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அங்கிருந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில், அடுத்த நாள் விடியத் தொடங்கியது. 'ஏவுகணைத் தாக்குதல்களின் கடைசி சுற்று' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் பீர்ஷெபாவில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. 22:00 வாஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 டெஹ்ரான் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்ல மக்கள் உத்தரவிடப்பட்டனர். இரானிலிருந்து ஏவுகணைகள் வந்துகொண்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன. 60 நிமிடங்களுக்குள், இரான் மூன்று சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. காலைக்குப் பிறகு, மேலும் பல ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இரானிய ஏவுகணை நேரடியாக தாக்கியது. பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்த மூன்று பேர் உட்பட, நால்வர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இரான், தங்களின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றை குடியிருப்புகள் மீது பயன்படுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், இரானிய ஊடகங்கள், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேவில் இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபேரியும் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் "முற்றிலும் அழிக்கப்பட்டன. அங்கு ஏற்பட்ட வெடிப்பால் சுற்றியுள்ள வீடுகளும் பல சேதமடைந்தன" என்று பிராந்திய துணை ஆளுநர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் தெளிவாகக் காணப்பட்டன. பட மூலாதாரம்,BBC PERSIAN படக்குறிப்பு, இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இரானின் காட்சி. சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குமுன், இஸ்ரேல் 'கடைசி சுற்று' ஏவுகணைகளை ஏவியதாக இரான் குற்றம் சாட்டியது." இஸ்ரேலிய ராணுவம் இரவு முழுவதும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக பின்னர் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இராக் அரசு, டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள தளங்களைக் குறிவைத்ததாகக் கூறியது. இரானிய ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள் இராக்கில் செயல்பட்டு வருகின்றன. எந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கடைசி நிமிடம் வரை மோதல் தொடர்ந்து நடைபெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ' சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திங்கட்கிழமை இரவு படம்பிடிக்கப்பட்டன. 01:00 வாஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 டெஹ்ரான் "சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!' என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கம் சண்டை நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது. இரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழித்ததன் மூலம், இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றியதாகவும், இப்போது அது 'உலக வல்லரசுகளின்' வரிசையில் இணைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இரான் தயாராக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி, நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:00 மணிக்குள் நிறுத்தினால், "அதற்குப் பிறகு எங்கள் பதிலடியை தொடர எங்களுக்கு எந்தவித எண்ணமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த சண்டை நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் ஆகவில்லை. இரானிலிருந்து ஏவுகணை பாய்ந்ததையடுத்து, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இரான் அந்த கூற்றுகளை மறுத்தபோதிலும், டெஹ்ரானின் மையத்தில் உள்ள ஆட்சியின் இலக்குகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களுக்கு" உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், "தெஹ்ரான் அதிர்ச்சியடையும்" என்று எச்சரித்தார் வலதுசாரி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச். அதனையடுத்து, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் விரைவாக ஏற்படுத்திய ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது போல் தோன்றியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானின் தலைநகரை நோக்கிச் சென்ற நிலையில், "அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் வீசினால், அது ஒரு பெரிய ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனே நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!" என்று டிரம்ப் மீண்டும் பதிவிட்டார். ' இஸ்ரேலும் இரானும் அமைதியடைய வேண்டும்' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் வாஷிங்டன் டிசியில் மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்து வந்தார். அங்கு ஒரு ஹெலிகாப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது. அறிவிப்புகள், கூற்றுகள் மற்றும் மறுப்புகளால் குழப்பமடைந்த இரவிற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க செய்தியாளர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இஸ்ரேலும் இரானும் சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் அவர்களிடம் கூறினார். ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். ஜெட் விமானங்களைத் திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதைக் குறிப்பிட்ட டிரம்ப், "ஒரு [இரானிய] ஏவுகணை இருந்தது, அது காலக்கெடுவுக்குப் பிறகு கடலில் ஏவப்பட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கச் செல்கிறது. இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்" எனக் கூறினார். இரானிய ஏவுகணை "ஒருவேளை தவறுதலாக" ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அது "தரையிறங்கவில்லை" என்றும் டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்ப் கோபமாகக் காணப்பட்டார். ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், "நான் இதற்கு முன்பு பார்த்திராத" அளவிலான தாக்குதல்களை நடத்தியதற்காக, "இஸ்ரேலிடம் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார். "இரானைக் குறித்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை," என்றும் டிரம்ப் கூறினார். டிரம்ப் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, இஸ்ரேல் மற்றும் இரான் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 'இவர்கள் இவ்வளவு நாட்களாக சண்டையிட்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை' என்று அவர்களைக் கடுமையாகச் சாடினார். நெதர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்கவிருந்தார். விமானத்தில் ஏறிய பிறகு, டிரம்ப் நெதன்யாகுவை அழைத்தார். அந்த உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிகிறது. இஸ்ரேலிய பிரதமருடன் அதிபர் "மிகுந்த உறுதியுடனும் நேரடியாகவும்" பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரம் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தது. நெதன்யாகு, சூழ்நிலையின் தீவிரத்தையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கவலைகளையும் புரிந்து கொண்டார்" எனக் கூறப்பட்டது. இரானைத் தாக்க தயாராக இருந்த இஸ்ரேலிய விமானங்களை திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதாக, விமானப் பயணத்தின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இரானில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை உருவாக்குவது, இப்போது அவர்களின் மனதில் "கடைசி விஷயமாக"இருக்கும் என்று கூறினார் டிரம்ப். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3en488x5dko
  2. பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன் - தேசபந்து தென்னக்கோன் 25 JUN, 2025 | 12:40 PM “2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன்” என தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவில் தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த போதே தேசபந்து தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னை கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.” “பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் நான் குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் தான் இருந்தேன்.” “ஆனால் பொலிஸார் என்னை தவறான இடங்களில் தேடினர்.” “குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தினேன்.” “நான் அந்த வீட்டில் தனியாக தான் இருந்தேன்” என தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் சார்பில் 15 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. விசாரணை குழு நாளை வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் கூடும். https://www.virakesari.lk/article/218412
  3. மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் : ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 25 JUN, 2025 | 12:58 PM நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படாமல் இருத்தலானது சமாதானத்தின் நிலைபேறான தன்மையைப் பாதிக்கும். மாறாக என்ன நேர்ந்தது என்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் பயணிக்க முடியும் என அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செவ்வாய்க்கிழமை (24) மாலை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித உரிமைகளே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் முன்நோக்கிப் பயணிப்பதற்குமான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் நீண்டகால உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது நிலவும் சமாதானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது அவசியம். உள்நாட்டு மோதல், தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட சகல உரிமைகளையும் அழுத்தங்களின்றிப் பேண வேண்டும். தற்போது இலங்கை தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டு பொறிகளுக்குள் சிக்கியிருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய வழிமுறைகளை இலங்கையர்கள் ஆராய வேண்டும். நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என்றார். அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் “தீர்வுகளை நோக்கிய பாதையாக மனித உரிமைகள்” எனும் தலைப்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218420
  4. ஆக்ஸியம் 4: 28,000 கிமீ வேகத்தில் சென்றாலும் 400 கிமீ உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ்சை அடைய 28 மணி நேரமாவது ஏன்? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீகாந்த் பாக்‌ஷி பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் விண்வெளி பயணத்தில் இந்தியா மற்றுமொரு சாதனையை புரிய உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 27 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவர் கூட இந்தியர் இல்லை. அந்த சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், பூமியில் இருந்து வெறும் 400 கி.மீ. உயரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இந்த குழுவுக்கு ஏன் 28 மணி நேரமாகிறது? பட மூலாதாரம்,X/INTERNATIONAL SPACE STATION படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் குழுவினர் நீண்ட பயணம் ஏன்? ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு மணிநேரத்தில் 28,000 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் அதனால் பயணிக்க முடியும். ஆக்ஸியம் 4 திட்டம், பூமிக்கு மேலே தோராயமாக 370 முதல் 400 கி.மீக்கு மேலே பூமியின் தாழ்வட்டப் பாதையில் (low-Earth orbit) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். இன்று மதியம் 12 மணியளவில் செலுத்தப்படும் ஃபால்கான் 9 ராக்கெட் 28 மணிநேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 26 அன்று மாலை 5 மணிக்கு தான் அடையும். மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட், 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஏன் 28 மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதற்கான காரணத்தை இங்கே அறியலாம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, கணக்கு பாடத்தில் காலம், வேகம் மற்றும் தொலைவு குறித்து படித்திருப்போம். அதன்படி, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு கார், 400 கி.மீ. தொலைவை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை கணக்கிட்டிருப்போம். அதாவது, 4 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த கணக்கு விதிமுறைகள் பூமியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும், விண்வெளி பயணத்துக்கு அல்ல. ஏனெனில், பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது அது மாறாத, நிலையான ஒன்றாக உள்ளது. அந்த இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு மாறாது. ஆனால், விண்வெளி பயணம் அப்படியல்ல. விண்வெளியில் உள்ள எந்தவொரு பொருளும் நிலையானது அல்ல. அவை, ஒவ்வொரு சுற்றுப் பாதையிலும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. உதாரணமாக, கோள்கள் சூரியனையும் செயற்கைக்கோள்கள் கோள்கள் மற்றும் சிறுகோள்களையும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. அவை அப்படி சுழலவில்லை என்றால், அவை கோள்களின் ஈர்ப்புவிசைக்கு உட்பட்டு, அவற்றின் திசையிலேயே சென்று அவற்றுடன் மோதிவிடும். இதே விதிமுறை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் பொருந்தும். சர்வதேச விண்வெளி நிலையம், தாழ்வட்டப் பாதையில் பூமியை மணிக்கு 28,000 கி.மீ எனும் வேகத்தில் சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் அது சுழலவில்லை என்றால், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழுந்துவிடும். அதனால்தான் அது நிலையான வேகத்தில் பூமியை சுற்றிவருகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார் (கோப்புப்படம்) பயணத்தின் வெவ்வேறு கட்டங்கள் ஆக்ஸியம் 4 திட்டத்தின்படி, பூமியின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதிலிருந்து தப்பிக்க (escape velocity) ஃபால்கான் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்தால் தான் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குள் நுழைய முடியும். இந்த பாதை நேரானது அல்ல. அந்த பாதை ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும். புவியீர்ப்பு புலத்தைக் கடந்து பயணித்த பின், அந்த ராக்கெட்டில் உள்ள முதல் கட்ட உந்துகலன்கள் அதிலிருந்து பிரிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கும். ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டதிலிருந்து ராக்கெட் இரண்டாம் கட்டத்தை அடைய சில நிமிடங்களே எடுக்கும். அங்கிருந்து ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என்கிறார், தி பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன். முதல் கட்டத்தில் புவியீர்ப்பு விசையை தாண்டி பயணிக்க ராக்கெட்டுக்கு அதிகளவிலான எரிபொருள் தேவை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து பயணித்த பின், குறைந்த எரிபொருள் மூலமாகவே நீண்ட தொலைவு மிக வேகமாக பயணிப்பது சாத்தியம். ஃபால்கான் 9 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடு என்பது சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும். இதன்பின், அந்த ராக்கெட் பூமியை தொடர்ந்து சுற்றி, அதன் வேகம், திசை மற்றும் சுற்றுவட்டப் பாதையை மாற்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும். எனினும், இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டில் உள்ள வழிகாட்டும் அமைப்பே கவனித்துக்கொள்ளும். இத்திட்டத்தின் தலைவர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் சுபான்ஷு சுக்லா ராக்கெட்டில் தங்கள் முன்பு உள்ள மானிட்டர்கள் மூலம் இதை கண்காணித்து, அது சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள். சில நிமிடங்களில் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், இரண்டாம் கட்டம் நிறைவடைய 23 முதல் 25 மணி நேரமாகும் என ரகுநந்தன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. கடினமான கட்டம் நாசாவால் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய படங்கள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் மிக குறைவான வேகத்தில் நகர்வது போன்று காட்டுகின்றன. ஆனால், உண்மையில் அது மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கும். பயணம் தொடங்கி 25 மணிநேரம் கழித்து, டிராகன் விண்கலம் அதே வேகத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும். அதன்பின், மெதுவாக வேகத்தை அதிகரித்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணையும் செயல்முறை தொடங்கும். அந்த சமயத்தில், இரண்டும் விண்வெளியில் நிலையாக உள்ளது போன்று தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டும் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலை பூமியில் நடப்பதாக கற்பனை செய்து பார்ப்போம். அருகருகே மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால், ஒரு காரில் உள்ளவர்கள் மற்றொரு காருக்குள் செல்வதைப் போன்றது. அதனால்தான் டிராகன் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நெருக்கமாக செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது. அனைத்து சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும். இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் உடனடியாக திறக்காது. சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சேர்ந்து, விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகு, காற்று வெளியேறாமல் தடுக்கும் வகையில் மூடப்பட்ட பின்னரே, இரண்டுக்கும் இடையேயான கதவுகள் (hatches) திறக்கப்படும். இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglz0knxe8wo
  5. பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆற சில காலம் தேவை - அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 12:19 PM பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை செவ்வாய்க்கிழமை (24) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218408
  6. 25 JUN, 2025 | 12:16 PM யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது. தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, https://www.virakesari.lk/article/218407
  7. 25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/218406
  8. 25 JUN, 2025 | 10:31 AM யாழ் - பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை நிறுத்த பொலிஸார் ஆணிக்கட்டைகளை டயரில் வீசி மடக்கி பிடித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரணத்தினாலேயே பொலிஸார் டயரிற்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். ஆணிகட்டைகள் டயரில் சிக்கியதால் கனரக வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் கனரக வாகனத்தினை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/218385
  9. 25 JUN, 2025 | 10:22 AM மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/218388
  10. இஸ்ரேல் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஈரான் போர் நிறுத்தத்தை மதிக்கும் Published By: VISHNU 24 JUN, 2025 | 08:18 PM அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேலும் அதே நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மதிக்கப்படும் என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெகியான் கூறியுள்ளார். "சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் அதை மீறாது" என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் பெசெகியான் கூறியதாக வெளிநாட்டு வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218366
  11. இரான் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லையா? அமெரிக்காவின் தாக்குதல் பற்றி கசியும் புதிய தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கூற்றுகளில் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடு சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை "பதுங்கு குழி" குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் "அப்படியே" இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. "இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன." என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் இரான் அணுசக்தி திட்டத்தை "சில மாதங்கள்" பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது சேதங்களை சரி செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொருத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலனாய்வுத் தகவல்கள் கசிவு - டிரம்ப் விமர்சனம் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார். "போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'தேசத்துரோகம்' என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை "தேசத் துரோகம்" என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார். "இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் "அழிக்கப்பட்டன" என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அவர் கூறினார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் டிவிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு கிளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார். "ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!" விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்: - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c056mjgqp8go
  12. கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது. "அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218301
  13. ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் - யுத்த நிறுத்தத்திற்கு இணங்குகின்றோம் - இஸ்ரேல் 24 JUN, 2025 | 12:19 PM ஈரான் குறித்த தனது இலக்குகளை எய்திய பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானிடமிருந்து இஸ்ரேலிற்கு உருவாகிய இருப்பு குறித்த இரட்டை ஆபத்துக்களான அணுவாயுத ஆபத்து மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை ஆபத்து ஆகியவற்றை அகற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவதலைமைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம்,அந்த நாட்டின் பல இலக்குகளை அழித்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218307
  14. "செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம் Published By: RAJEEBAN 25 JUN, 2025 | 10:37 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான உங்களது விஜயத்தினையும் நாட்டிற்குள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னகர்த்துவது குறித்த உங்கள் அர்ப்பணிப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம். உங்களது விஜயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக கொண்டது என்பதை நாங்கள் அறிந்துகொண்டுள்ள அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி குறித்த விடயங்கள் உங்கள் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செம்மணி மனித மனித புதைகுழிக்கான விஜயத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் வலுவான வேண்டுகோளை விடுக்கின்றோம். செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும், இந்த விடயத்தின் தீவிரதன்மையை மீண்டும் வலுப்படுத்தும். https://www.virakesari.lk/article/218393
  15. வெற்றியை தாரை வார்த்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்தும் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தனர். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், முதல் இன்னிங்ஸில் பெற்ற 6 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 371 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து ஆட்டத்தை முடித்தது. கடைசி நாளான நேற்று 350 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பேஸ்பால் ஃபார்முலாவை கையில் எடுத்து இங்கிலாந்து அணி பெறும் வெற்றியாகும். லீட்ஸ் மைதானம் மீண்டும் சேஸிங்கிற்கு சொர்க்கபுரி என்பதை நிரூபித்துள்ளது . இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆன்டர்ஸன்-டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்னும் புள்ளிக்கணக்கை தோல்வியால் தொடங்கவில்லை. இங்கிலாந்து சாதனை தொடக்கம் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட், கிராவ்லி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். புதிய பந்தை பயன்படுத்திய போதும் இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா மாறிமாறிப் பந்துவீசியும் இருவரின் விக்கெட்டுகளை நீண்டநேரம் எடுக்க முடியாதபோதே ஆடுகளத்தின் தன்மை புலப்பட்டது. பென் டக்கெட் ஒருநாள் போட்டி போன்று பேட் செய்து 66 பந்துகளில் அரைசதத்தையும், 121 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எந்தவிதமான சிரமத்தையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வழங்கவில்லை. ஓவருக்கு சராசரியாக 3 முதல் 4 ரன்களை பவுண்டரி மூலமோ அல்லது ஒற்றை அல்லது இரு ரன்கள் மூலம் எடுக்க வழியமைத்துக் கொடுத்தனர். ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து பென் டக்கெட், ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது, ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. உயிரைக் கொடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 121 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த பென் டக்கெட் பென் டக்கெட் சேர்த்த 149 ரன்கள் என்பது டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக எந்த பேட்டரும் சேர்க்காத அதிகபட்சமாகும். இதற்கு முன் ஜோ ரூட் 142 ரன்களை 2022ம்ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களில் 4வது இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தவர் என டக்கெட் பெருமை பெற்றார். இதற்கு முன் 1995ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மைக் ஆதர்டன் 185 ரன்களை கடைசி நாளில் தொடக்க வீரராக இருந்து சேர்த்தார். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸில் சேர்க்கப்பட்ட 5வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இங்கிலாந்தைப் பொருத்தவரை கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இதற்கு முன் 1991ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரஹாம் கூச் - ஆதர்டன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோல்விக்கான காரணம் என்ன? இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதங்கள் ஒரே டெஸ்டில் விளாசப்பட்டன. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை விளாசியிருந்தார். 5 சதங்களை விளாசியும், ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றது என்பது வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். இந்த டெஸ்டில் சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இந்த 4 பேட்டர்களைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் ரன்கள் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் என்று சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஜடேஜாவும் ஏமாற்றினர், ஸ்பெஷெலிஸ்ட் பேட்டர்களாக எடுக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனும் ஜொலிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் சுப்மன் கில்லுடன் உரையாடும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி வரிசை 4 பேட்டர்கள் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 ரன்கள்தான் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது, பேட்டிங்கில் மற்ற வீரர்களால் ஏற்பட்ட தோல்வியாகும். அதிலும், லீட்ஸ் போன்ற தட்டையான ஆடுகளத்தில் பேட்டர்கள் இந்த அளவு மோசமாக பேட் செய்தது தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும். அடுத்ததாக கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டது தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்று. கடந்த 20ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் இதுபோன்று அதிகமான கேட்சுகளை ஒரு போட்டியில் கோட்டைவிட்டதில்லை என்ற பெயரை இந்திய வீரர்கள் பெற்றனர். பும்ரா பந்துவீச்சில் மட்டும் முதல் இன்னிங்ஸில் 3 கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. மோசமான பந்துவீச்சு அடுத்ததாக பும்ரா, சிராஜ் தவிர 3வது, 4வது பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பங்களிப்பு குறித்து பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது. ஐபிஎல் தொடரில் கூட 3 ரன் ரேட்டில் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பந்தவீசியுள்ளார். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா உருவெடுத்து, ஓவருக்கு 6.28 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார். அதேபோல, ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து ஓவருக்கு சராசரியாக 5.60 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இருவரின் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ரன்கள் சேர்க்க ஏதுவாக இருந்தது, இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 310 ரன்கள் வரை வாரி வழங்கியுள்ளனர். பந்துவீச்சில் ஒருவிதமான கட்டுப்பாடு, ஒழுங்கு இருக்க வேண்டும். ஆனால், பிரசித், ஷர்துல் இருவரும் இங்கிலாந்தின் காலநிலை, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பந்துவீசவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார் பும்ரா எனும் பிரமாஸ்திரம் பந்துவீச்சில் பும்ரா ஒருவரை நம்பித்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பயணித்து வருகிறது. அடுத்த 2 போட்டிகளுக்குப்பின் பும்ரா இல்லாத நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, எப்படி தயாராகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சர்வதேச பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பும்ரா மட்டுமே பந்துவீசி எகானமி ரேட்டை 3 ரன்களுக்குள் இரு இன்னிங்ஸிலும் வைத்திருந்தார். கடைசி நாளில் 350 ரன்களை டிஃபெண்ட் செய்வதற்காக எந்த மாதிரியான திட்டத்துடன் பந்துவீச்சாளர்கள் வந்தனர் என்பது புலப்படவில்லை. இதில் பும்ரா மட்டுமே சரியான அளவில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறவிட்டார். முகமது சிராஜ் கடைசி நாளில் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல, புதிய பந்து எடுத்தபின் கடைசி 15 ஓவர்களில் பும்ராவுக்கும் அவர் ஓவர் வழங்கவில்லை. பீல்டிங் மோசம் பீல்டிங்கில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக மோசமாக செயல்பட்டனர். அதிலும், ஸ்லிப்பில் நின்று ஏராளமான கேட்சுகளை தவறவிட்டு அவப்பெயரைப் பெற்றனர். அடிக்கடி ரிஷப் பந்த் பேசியது மைக்கில் நன்றாக எதிரொலித்தது, "பீல்டிங்கை தவறவிட்டீர்கள், பரவாயில்லை, சீக்கிரம் தவறை திருத்தி மீண்டு வாருங்கள், தொடர்ந்து தவறு செய்யாதீர்கள்" எனப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலிருந்து பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எதையுமே முறையாக பயன்படுத்தவில்லை. அது வெற்றிக்கான வாய்ப்புகளாக வீரர்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது சிராஜ் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது தவறவிட்ட வாய்ப்புகளால் தோல்வி இந்திய அணியைப் பொருத்தவரை இளம் வீரர்கள், அனுபவமற்ற வீரர்கள் என்ற ஒற்றை வார்த்தையுடன் தோல்விக்கான காரணத்தை பூசி மெழுகிவிட முடியாது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு தொடக்கம் முதல் கடைசிவரை ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை அனைத்தையுமே இந்திய வீரர்கள் பயன்படுத்தவில்லை, தவறவிட்டனர் என்பதுதான் நிதர்சனம். ஒரு அணியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 சதங்கள் அடிக்கப்பட்டும், அந்த அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது இதுதான் வரலாற்றில் முதல் முறையாகும். ஏராளமான கேட்ச் மிஸ்ஸிங், பீல்டிங்கில் கோட்டை, டி20 போட்டியைவிட ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள், கடைசி வரிசை வீரர்களின் மட்டமான பேட்டிங் முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட் என தோல்விக்கான காரணங்களாகப் பட்டியலிடலாம். டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக முதல்முறையாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு வெற்றி பெற கிடைத்த அருமையான வாய்ப்பை தனது அனுபமின்மையால் வெற்றியாக மாற்ற தவறவிட்டார். பும்ரா இன்னும் இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யப் போகிறது இந்திய அணி என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு 6-வது வெற்றி, ஸ்டோக்ஸ் நிம்மதி லீட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பெறும் 7வது தோல்வியாகும். டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது, இந்திய வீரர்கள் இரு இன்னிங்ஸிலும் அடித்த சதம் ஸ்டோக்ஸின் முடிவை கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஆனால், இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் ஸ்டோக்ஸுக்கு பெருத்த ஆறுதலையும், நிம்மதியையும் இப்போது கொடுக்கும். இங்கிலாந்து சாதனை ஹெடிங்லி மைதானத்தில் 371 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்தது என்பது டெஸ்ட் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்ச சேஸிங்காகும், இந்திய அணிக்கு எதிராக 2வது பெரிய சேஸிங்காகும். 2022ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக 378 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹெடிங்லி மைதானத்தில் கடைசி நாளில் 350 ரன்களை இங்கிலாந்து அணி எட்டி வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் இதுவரை கடைசிநாளில் பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலியா மட்டுமே 404 ரன்களை 1948ம் ஆண்டு எட்டியிருந்தது. அதன்பின், இப்போது இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டியுள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியி்ல் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 835 ரன்களைச் சேர்த்து தோற்றுள்ளது. அதிகமான ஸ்கோர் செய்தும் இந்திய அணிக்கு ஏற்பட்ட 4வது தோல்வியாகும். இரு அணிகளும் சேர்ந்து இந்த டெஸ்டில் 1673 ரன்கள் சேர்த்தனர். இது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 1990ம் ஆண்டில் மான்செஸ்டரில் 1614 ரன்கள் சேர்க்கப்பட்டு அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1673 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது அதிகபட்ச ஸ்கோர், டிராவில் முடியாத டெஸ்டாகும். லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் 5-வது முறையாக சேஸ் செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 2வது முறையாக 350 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் சேஸ் செய்துள்ளது இங்கிலாந்து. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpd1xdq6pvxo
  16. Mossad Operations: போலியாக Resort; பகலில் ஹோட்டல் ஊழியர்கள் வேஷம் ; மொசாத் செய்தது என்ன? இஸ்ரேல் இரான் இடையேயான மோதலில், தலைநகர் டெஹ்ரான் உட்பட இரானின் முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாத் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் மொசாத்தின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே பொதுவெளியில் பேசுகிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாத் நிகழ்த்திய முக்கிய ‘ஆப்ரேஷன்கள்’ என்ன? அதனின் வெற்றி, தோல்வ் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. 24 JUN, 2025 | 05:43 PM ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது. பிரஜைகளுக்கும் விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சினை வரும்" என அண்மையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அவரது அரசாங்கத்தின் நிலைப்பாடுமாக மட்டும் கணிக்க முடியாது. அதனை சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் என்று தமிழர்களை எச்சரிக்கும் தொனியாகவே நாம் கொள்ளலாம். அது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் சிங்கள பௌத்தத்தை கவசமாகக் கொண்டு தமிழர் தேசத்தில் முன்னெடுக்கும் சட்டவிரோத சமய ஆக்கிரமிப்புகளுக்கு திறந்த அனுமதி பத்திரமாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும். இதுவா தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணம்? என இன நல்லிணக்கத்தையும் அரசியல் நீதியையும் விரும்பும் மக்கள் அமைப்புகள் தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தல் வேண்டும். தையிட்டியில் அரசியல் நோக்கம் கொண்டு அரச பயங்கரவாத இராணுவத்தால் சட்ட விரோத விகாரையினை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் துணையோடு வெற்றி அடையாளமாகவே கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் எனக் கூறி ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது. தற்போதைய ஜனாதிபதி நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தை விரும்பினால் முதலில் நாட்டின் நடைமுறை சட்டங்களை மீறி தமிழர்களின் சுமுக வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் நடந்து முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். "விகாரைப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" எனக் கூறும் ஜனாதிபதி சிங்கள பௌத்த அரசியலை மையப்படுத்தி அவ்விகாரை பிரதேசத்தில் வேறெந்த கட்டடங்களோ அல்லது சிங்கள குடியேற்றங்களோ உருவாக்க மாட்டோம் என உறுதி கூறாது தவிர்த்தது ஏன்? அப்பிரதேசத்தில் தமிழர்களின் வாழ்விற்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எத்தனையும் செய்ய மாட்டோம் என உறுதி கூறாதது ஏன்? அதேபோன்று மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இறக்குமதி செய்யப்படும் சிங்கள பௌத்தர்களை குறித்து வாய் திறக்காது ஏன்? கடந்த கால நாட்டின் தலைவர்களைப் போலவே தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் பங்கேற்று சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்தும் அரசியலை முன்வைத்து தமிழர்களை குற்றவாளிகளாக்கி அரசியல் கொலைக்கு உட்படுத்த முனைவது நாட்டின் எதிர்கால நலனையே பாதிக்கும். தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்படும் சமூக புதைகுழிகள் இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ளதைப் போன்று சிங்கள பௌத்த தமிழின அழிப்புக்கு சாட்சியாக தையிட்டி விகாரை எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் வருகையோடு இடம்பெறும் “அணையா விளக்கு” போராட்டம் இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் தேசம் என்றும் விரிவடைய வேண்டும். அதேபோன்று சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் பௌர்ணமி போராட்டமும் மக்கள் மயமாக வேண்டும். அதுவே தமிழர் தாயக அரசியலை நோக்கி மக்கள் மீள் எழ வழி சமைக்கும் எனலாம். அதிகார கதிரைகளுக்குள் அரசியலை தேடிக்கொண்டிருக்கும் சக்திகள் மக்கள் அரசியலை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல அணையா விளக்கு போராட்டமும், பௌர்ணமி போராட்டமும் விடுக்கும் அழைப்பை ஏற்காவிடின் அதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218355
  18. 24 JUN, 2025 | 05:11 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்தஹ் 12 ஆண்டுகளாக என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்த கோபி சங்கர், பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும், என்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இடமாற்றம் பெற்று செல்லும் வைத்திய நிபுணருக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/218347 @நிழலி அண்ணை கதைகள் வருமா?
  19. Published By: DIGITAL DESK 2 24 JUN, 2025 | 05:11 PM இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அத்துடன், கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது." என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில் மீனவர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மன்னார், பேசாலையில் 2026 இல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்." என்றார். இந்திய மீனவர்களின் வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள் மற்றும் கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218346
  20. அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர். ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார். "நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார். சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்) மூளை அனீரிஸம் என்றால் என்ன? ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது. வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன. இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி மூளை மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது. மூளை அனீரிஸத்தின் வகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும். ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன. மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம். மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள் மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும். மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்: திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல) நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு குமட்டல் மற்றும் வாந்தி வெளிச்சத்தை பார்க்கும்போது வலி வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது? ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. புகைப்பிடித்தல் உயர் ரத்த அழுத்தம் குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்) சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன தலையில் ஏற்பட்ட காயம் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது. இதற்கு என்ன சிகிச்சை? அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது. மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை. சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும். சர்ஜிகல் கிளிப்பிங் இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது. சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும். எண்டோவாஸ்குலர் சிகிச்சை இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன. சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம். ஃப்லோ டைவர்சன் இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது. இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி? ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான். இந்த விஷயங்களை தவிருங்கள்: புகைப்பிடித்தல் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது கூடுதல் எடை அல்லது உடல் பருமன் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o
  21. RESULT 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India 471 & 364 England (T:371) 465 & 373/5 England won by 5 wickets PLAYER OF THE MATCH Ben Duckett, ENG 62 & 149
  22. பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் கொலை - இரட்டை சகோதரிகள் கைது Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 05:08 PM கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218345
  23. “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம் 24 JUN, 2025 | 09:29 PM (எம்.நியூட்டன்) “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. செம்மணியில் நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தெடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: செம்மணியில் அண்மைக்காலத்தில் புதிதாக அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை முறையாக அகழ்வு செய்ய வேண்டும் எனக் கோரி, நேற்றிலிருந்து மூன்று நாட்கள் “அணையா விளக்கு” என்ற பெயரில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்றது. பதினாறு வருடங்களாக தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் செம்மணியில் புதைகுழிகள் அண்மையில் மீளக் கண்டறியப்பட்டதும் அதன் அகழ்வின்போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. பொறுப்புக்கூறலுக்கான தேவையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் நீதியின் முன்னால் கொண்டு நிறுத்தப்படவேண்டிய தேவையையும், பொறுப்புக்கூறல் தொடர்பிலான தமிழ் மக்களுடைய அவாவினையும் குறித்த மனிதப் புதைகுழிகள் மீள ஞாபகமூட்டுகின்றன. மனிதப் புதைகுழிகளை மனித கௌரவத்தோடும் (human dignity) இறந்தவர்களுக்கு உரிய மரியாதையோடும் (respect for the dead) அணுகுவது என்பது அவசியமானது என சர்வதேச சட்டம் கூறுவதோடு, அவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை முறையாக அகழ்வது தொடர்பிலும், அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எச்சங்களை முறையான விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், முறையான விசாரணையின் தொடர்ச்சியாக, அந்த மனிதப் புதைகுழிகளில் இடப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விசாரித்து பொறுப்புக்கூறலை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச சட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகள் தாராளமாக உண்டு. அவற்றைப் பின்பற்றி குறித்த அகழ்வு நடைபெற வேண்டும் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. மேலும், செம்மணியில் மாத்திரம் அல்லாமல் மன்னாரிலும் கொக்கட்டிச்சோலையிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அப்புதைகுழிகளும் முறையாக விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், உண்மைகள் வெளிக்கொணரப்படுவதும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் அரசினுடைய அங்கங்கள் தொடர்பில் நம்பிக்கையற்று இருப்பது புதிய விடயமல்ல. எனவே இவ்வாறான மனிதப் புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பங்குபற்றலும், சர்வதேச கண்காணிப்பும், சர்வதேச உள்ளீடும் இருப்பது அவசியம் என தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகிறது. மனிதப் புதைகுழி அகழ்வு, அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தல், பின்னர் அது தொடர்பிலான குற்ற முறை, விசாரணை ஆகிய மூன்று கட்டங்களின் போதும் சர்வதேச கண்காணிப்பும் பங்களிப்பும் உள்ளீடும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகின்றது. மேலும், இவ்விடத்தில் தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறல் தொடர்பான தேவையானது ஒரு சர்வதேச விசாரணை மூலமாகவே பூர்த்தியடையும் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் இவ்விடத்தில் மீள ஞாபகப்படுத்துவதோடு, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீள ஞாபகப்படுத்தி, அதாவது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து முறையாக இலங்கை பொறுப்புக்கூறல் விடயமானது ஐ.நா பொதுச்சபைக்கு பலப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டு, ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்துகிறோம். குறித்த விடயங்களை இந்த போராட்டம் நடைபெறுகின்ற மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தில் கொண்டு இது தொடர்பிலான தனது பரிந்துரைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகிறது. இறந்தவர்களுடைய நினைவுக்கும் இறந்தவர்கள் மீது எங்களுக்கு உள்ள மரியாதையையும், அந்த இறப்புக்கான காரணங்களை தேடி அறிவதற்கான எமது தொடர் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் பெருமளவில் நாம் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென தமிழ் சமூக அமையம் தமிழ் மக்களை உரிமையோடு கேட்டு நிற்கிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218336
  24. காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் 24 JUN, 2025 | 06:15 PM (எம்.நியூட்டன்) “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்கள். சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். “நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்", "எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள். இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் முதலாளியாக ஆகிவிடுவேன் என்கிறார். நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில், நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார். நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218339
  25. 24 JUN, 2025 | 03:38 PM இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு, 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய் 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய் 2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய் 2024 ஆம் ஆண்டில் 16,476 ரூபாய் 2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய் https://www.virakesari.lk/article/218324

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.