Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. எங்களைக் காப்பாற்றுங்கள்! கண்ணீர் வடிக்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்களைக் கைவிடாமல் காப்பாற்றுமாறு முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கதறியழத் தொடங்கியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது 14 ஆயிரம் கரம் பலகைகள் மற்றும் 11 ஆயிரம் டாம் விளையாட்டுப் பலகைகள் என்பவற்றைக் கொள்வனவு செய்து முறைகேடான வழியில் விநியோகித்த குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகளும், மஹிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹிந்தானந்தவின் மைத்துனரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான அனுராத ஜயரத்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்றிருந்த சமயம், அவர்கள் இருவரும் அழுதுபுலம்பியுள்ளனர். தங்களைக் கைவிடாமல் காப்பாற்றி வெளியில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளனர். https://tamilwin.com/article/sri-lanka-political-crisis-npp-1750086103
  2. பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி 16 ஜூன் 2025, 02:00 GMT இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது. தங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக உள்ள அணு உலைகளை இஸ்ரேல் ''பொறுப்பற்ற முறையில்'' தாக்கியுள்ளதாக, இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். பதிலடியாக இரானும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. உலகளாவிய அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் நடான்ஸ் அணு உலை இயங்கி வந்ததாகவும், அங்கு தாக்குதல் நடத்தியது ''கதிர்வீச்சு பேரழிவு'' ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பாஸ் அராக்சி கூறினார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார். "இரானைத் தடுக்கவில்லை என்றால், அது குறுகிய நேரத்தில் அணுகுண்டை உருவாக்கக் கூடிய நிலைக்குச் செல்லும்" என கூறிய அவர், இதன் காரணமாகவே இஸ்ரேல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறினார். "அது ஒரு ஆண்டாக இருக்கலாம். சில மாதங்களுக்குள்ளேயும் இருக்கலாம்" என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதை அந்நாடு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா? அணு குண்டு வெடிப்பைத் தூண்டும் கருவி, யுரேனியம் உலோக கோர் (Uranium metal core) போன்ற ஒரு அணுகுண்டுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது. "இரான் அணு அயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது என நெதன்யாகு கூறினாலும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை" என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கையின் இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறினார். அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை ஏற்கெனவே பெரும்பாலும் இரான் உருவாக்கிவிட்டது, பல மாதங்களாக இதே நிலையில்தான் இரான் உள்ளது என அவர் கூறினார். ''இரானால் சில மாதங்களில் எளிய அடிப்படை வடிவிலான அணுகுண்டை தயாரிக்க முடியும் என்ற கணிப்பும் புதிது அல்ல'' இரானின் சில நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அணு ஆயுதத்தை முழுமையாக உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய பணியில் இரான் இன்னும் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அவர் கூறினார். இரான் யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவு அதிகம் செறிவூட்டியுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்காத ஒரு நாடு இப்படிச் செய்வது விசித்திரமானது என, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை இன்னும் நம்புவதாக அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார். இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது மட்டுமே நெதன்யாகுவின் ஒரே கவலை என்றால், அது குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கலாம் மற்றும் தொடக்கத்திலேயே இரானின் அனைத்து முக்கிய அணு ஆலைகளைத் தாக்கியிருக்கலாம் என டேவன்போர்ட் கூறினார். இரான் 60% தூய தன்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்துள்ளது என்றும் அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய தன்மை தேவைப்படும் நிலையில், அதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், அது குவித்து வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 9 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது அணு ஆயுத பரவல் தடைக்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அந்த அமைப்பு கூறியது. நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இரான் அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என தங்களால் சொல்ல முடியாது எனவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட யுரேனியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறித்த விசாரணைக்கு இரான் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை தெரிந்தது என்ன? தனது அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களை உருக்க நினைத்ததில்லை எனவும் இரான் கூறுகிறது. ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகளில் இரான் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இரானில் பத்தாண்டுகளாக விசாரணை நடத்திய சர்வதேச அணுசக்தி முகமை கண்டறிந்தது. பிராஜக்ட் அமத் எனும் ரகசிய அணு திட்டத்தை இரான் 2003-ல் நிறுத்தும் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகள் இருந்தது. 2009 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ஃபோர்டோ நிலத்தடி செறிவூட்டல் வசதியின் கட்டுமானத்தை வெளிப்படுத்தியது வரை, இரான் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு அணு ஆயுத மேம்பாடு குறித்த "நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை'' என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது. 2015ஆம் ஆண்டில், இரான் 6 உலக வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் கீழ் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பை அனுமதித்தது. இதற்குப் பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. இந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்த டிரம்ப், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வலிமையாக இல்லை என அவர் கூறினார். இரான் கட்டுப்பாடுகளை, குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி இதற்குப் பதிலடி கொடுத்தது. அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டோவில் உள்ள அணு உலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த செறிவூட்டலும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கியது. வியாழக்கிழமை, சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளின் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடையை மீறுவதாக அறிவித்தது. 'பாதுகாப்பான இடத்தில்' ஒரு புதிய யுரேனியம் செறிவூட்டல் வசதியை அமைப்பதன் மூலமும், ஃபோர்டோ ஆலையில் உள்ள பழைய யுரேனியம் செறிவூட்டல் இயந்திரங்களை புதிய மற்றும் வேகமாகச் செயல்படும் இயந்திரங்களாக மாற்றுவதன் மூலம் இதற்குப் பதிலடி தரப்படும் என இரான் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது' இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பு என்ன? வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தனது முதல் கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடான்ஸில் உள்ள நிலத்தடி அமைப்புகளையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியதாகக் கூறியது. நடான்ஸில் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை மற்றும் மின்சார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகச் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். நிலத்தடி கட்டமைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மின்சார துண்டிப்பு அங்குள்ள இயந்திரங்களைப் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார். பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் அழிவு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த வசதி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட மையவிலக்குகளை (entrifuges) உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் கூறியது. நடான்ஸில் நடந்த தாக்குதல்கள் அணு ஆயுதத்தை உருவாக்கும் இரானின் திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், இது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போதே சரியாகக் கூற முடியாது என டேவன்போர்ட் கூறினார். ''சர்வதேச அணுசக்தி முகமை அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் வரை, எவ்வளவு விரைவாக இரான் அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்கும் அல்லது யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்துக்கு மாற்றியதா போன்றவை குறித்து நமக்குத் தெரியாது'' என்றார் டேவன்போர்ட். ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தொழில்நுட்ப மையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்திருந்தது. இஸ்ஃபஹானில் நடந்த தாக்குதல் மூலம் "யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வசதி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை" தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. "ஃபோர்டோ செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் இன்னும் அணு ஆயுத பெருக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆயுத தர நிலைகளுக்குச் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை ரகசிய இடத்துக்கு அனுப்பவோ இரானுக்கு வாய்ப்பு உள்ளது" என்று டேவன்போர்ட் கூறினார். "இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள்" இந்த நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார். ஆனால், இது அடைய முடியாத இலக்கு என்கிறார் டேவன்போர்ட். ''தாக்குதல்கள் தளங்களை அழிக்கலாம், விஞ்ஞானிகளைக் குறிவைக்கலாம். ஆனால், இரான் அணுசக்தி குறித்து பெற்றுள்ள அறிவை அழிக்க முடியாது. இரானால் மீண்டும் கட்டமைக்க முடியும். யுரேனியம் செறிவூட்டலில் கடந்த காலத்தை விட மிக விரைவாக அதனால் கட்டமைக்க முடியும்''என்று அவர் கூறினார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04e4r960w0o
  3. Published By: VISHNU 16 JUN, 2025 | 09:38 PM போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன். இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே மக்கள் செயற்கையான தட்டுப்பாட்டு நிலைவரத்தை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றேன். https://www.virakesari.lk/article/217666
  4. எனக்கு நீங்கள் வீட்டுக்காறிக்கு பயப்பிடுகிறீங்களோ என்று சந்தேகமாக இருக்கு?!!
  5. யாழில் வீதி புனரமைப்பை தடுத்து நிறுத்திய உபநகரபிதா! வழங்கியுள்ள விளக்கம் யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீசாலை அல்லாரை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் பொது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர். இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தரோடு கலந்துரையாடி அப்பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்றினை உருவாக்கிய பின்னர் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புனரமைப்பு வேலை அதுவரை புனரமைப்பு வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை மீறி நேற்றைய தினம் புனரமைப்பு பணிகள் தொடரப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட வீதிக்கு சென்ற உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்பு கொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர், மக்களை தெளிவு படுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறு கேட்டதோடு அதுவரை புனரமைப்பை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து புனரமைப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. https://tamilwin.com/article/road-reconstruction-halted-1750037253#google_vignette
  6. 16 JUN, 2025 | 09:11 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும். மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன. அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது. ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர். அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர். இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல. இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர். என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர். எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர். பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார். https://www.virakesari.lk/article/217625
  7. ரஸ்யா v உக்ரேன் இஸ்ரேல் v ஈரான் மற்றது எது அண்ணை?
  8. @கிருபன் ,@கந்தப்பு ,@goshan_che அண்ணாக்கள் யாராவது மகளிர் கிண்ணப் போட்டிகளை நடத்தலாமே?
  9. நம்புங்க, அப்ப தான் அடுத்த போட்டியில் முதலிடம் பெறலாம்.
  10. ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது. இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும். மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும். இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும். இலங்கையின் போட்டிகள் செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு முழு அட்டவணை (Full Schedule) https://www.virakesari.lk/article/217658
  11. ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது? வோல்ஸ்ரீட் ஜேர்னல் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 04:00 PM ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து நன்கறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி சூட்கேஸ்கள் டிரக்குகள் டாங்கர்கள் மூலம் இஸ்ரேல் இந்த ஆளில்லா விமானங்களைவெடி பொருட்களுடன் ஈரானிற்குள் கொண்டு சென்றது என தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் வர்த்தக நோக்கங்களுடன் செல்லும் வாகனங்களை பயன்படுத்தி ஆளில்லா விமானங்களை மொசாட் கொண்டு சென்றது ஈரானிற்குள் இருந்த அதன் முகவர்கள் அவற்றை பொருத்தினார்கள். அதன் பின்னர் வார இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரிடம் கையளித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் செயற்படும் குழுக்களின் தலைவர்களிற்கு முதலில் மூன்றாவது நாடொன்றில் வைத்து பயிற்சியளித்தது இஸ்ரேல், அதன் பின்னர் அவர்கள் ஈரானிற்குள் இருந்த தங்கள் அணிகளிற்கு உத்தரவுகளை வழங்கினார்கள். நடவடிக்கை ஆரம்பமானதும், இஸ்ரேலின் இரகசிய படைப்பிரிவினர் ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகளிற்கும் ஏவுகணை ஏவும் பகுதிகளிற்கு அருகிலும் நிலைகொண்டனர். வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் இஸ்ரேலின் சில அணியினர் ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறைகளை செயல் இழக்கச்செய்தனர், ஏனையவர்கள் ஏவுகணை செலுத்திகளை இலக்குவைத்தனர். ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல டிரக்குகளும் தாக்கப்பட்டன. ஈரானால் ஏன் ஆரம்பத்தில் பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பதை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகின்றது. புதுமையான விதத்தில் செலவின்றி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. ரஸ்யாவின் விமானங்களை தாக்குவதற்காக உக்ரைன் இவ்வாறான தந்திரோபாயங்களை பயன்படுத்திய சில நாட்களின் பின்னர் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள இவ்வாறான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. ஈரான் தனது ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை இல்லாமல் செய்வதற்கு மொசாட்டின் ஆளில்லா விமான நடவடிக்கை உதவியது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. பயன்படுத்துவதற்கான நிலையில் காணப்பட்ட பல ஏவுகணைகளை இஸ்ரேலின் விசேட படைப்பிரிவுகள் அதிகாலையில் அழித்தன. இதன் பிறகே ஈரான் வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதனால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனினும் இஸ்ரேல் இதனை விட கடுமையான பதில் தாக்குதலை எதிர்பார்த்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொசாட் இந்த நடவடிக்கைக்காக பல வருடங்களாக திட்டமிடல்களை மேற்கொண்டது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மற்றும் தனது விசேட படைப்பிரிகளை எங்கு நிறுத்தவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து திட்டமிடல்களில் இஸ்ரேல் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217633
  12. 16 JUN, 2025 | 04:58 PM முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217645
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது. விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன. அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும். சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை. அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது. மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார். அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார். விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. விமானி சல்லன்பெர்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார் அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது. சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார். 1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o
  14. Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும். அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார். இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217627
  15. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர். இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/217623
  16. இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் 16 JUN, 2025 | 12:39 PM சர்வதேச நாணய நிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தினை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக மாற்றுவோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார் - இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்தது போல இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு தேவைப்படும் இறுதி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217608
  17. விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள் படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தரின் லாதம் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன. இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது. "விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? "உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ் "விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை." விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும். மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது." பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன? "விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்." விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார். அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது. டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார். எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது "பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக் ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன. "விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை." ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன. விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . 1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார் ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு. விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும். மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை. இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும் எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன. நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும். பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது . "சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம் உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்." பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும். "பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்." பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார். ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்." பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார். இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார். விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்." கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை. "நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்." ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது." விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o
  18. சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு - ஐ.நா எச்சரிக்கை Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 05:53 PM சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணையாளர், வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217654
  19. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெம்பா பவுமா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்." - இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது "ஜென்டில்மேன் கேமாக" இருக்க முடியும். தென் ஆப்ரிக்காவில் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG GOLDING/FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு,1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி. அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி 'சோக்கர்ஸ்' (chokers) என்ற பெயரையும் பெற்றது. மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG PRENTIS /ALLSPORT படக்குறிப்பு,1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி? தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது. பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறியால் தடை தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது. அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன. 1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது. இடஒதுக்கீடு அறிமுகம் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர். 1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது. விளையாட்டில் இடஒதுக்கீடு முறை இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினி மகாயா என்டினி குற்றச்சாட்டு தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். என்டினி பேசுகையில் "நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், 'சாப்பிடப் போகிறோம் வா' என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள். என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தார். வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், "தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது" எனத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் "கோட்டா ப்ளேயர்ஸ்", அதாவது 'இடஒதுக்கீடு வீரர்கள்' என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாசிம் ஆம்லா தொடர்ந்த நிறவெறி 2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார். உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர். கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை. இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் " நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார். என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்" என்று தெரிவித்தார். இடஒதுக்கீடு முறை தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது. மாற்றத்துக்கான வெற்றி தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்" என்றார். யார் இந்த பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமா கேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார். 2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார். 2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். டெஸ்ட் கேப்டன் பொறுப்பு 2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கனவிலும் நினைக்கவில்லை சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை." எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqe2xjgwqo
  20. கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் விளக்குகள் அழிப்பு - கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 10:23 AM பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 2025 இல் இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்படவேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட எங்கள் கனடா சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள் நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/217583
  21. 15 JUN, 2025 | 12:25 PM (நமது நிருபர்) உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இலங்கை பொலீஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பாடசாலை மாணவர்களுக்கு நடத்தினர். இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இருபத்தைந்து பாடசாலைகளுக்கு பாடசாலை வாகன ஒழுங்குபடுத்துனர்களுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் திட்டத்தை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தால் மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான திட்டம் என்று குறிப்பிடலாம். வீதி விபத்துகள் இன்று நாட்டில் பெரும் பேரழிவாக மாறியுள்ளன. இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் எமக்கு தேவையும் அர்ப்பணிப்பும் இருந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்பதாகும். வீதி விபத்துகளால் தினமும் ஏழு பேர் இறக்கின்றனர். இந்த துயரத்தை நாம் நிறுத்த வேண்டும். வீதி விபத்துகளில் இறப்பவர்கள் ஊனமுற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்களே. ஒருவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி அல்லது குழந்தை விபத்தில் சிக்கினால் அது அவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. இந்த விபத்து புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை ஒரு பெரிய கதையை எமக்குச் சொல்கின்றன. வீதி விபத்துகளைத் தடுப்பது என்பது சட்டத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்ல மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் உயிர்களைப் பாதுகாப்பதை தனது பொறுப்பாகக் கருதும் இரக்கத்துடன் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். அரசாங்கம் அத்தகைய அழகான நாட்டை உருவாக்கவே முயற்சிக்கிறது. தண்டனைக்கு முன் கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் முன்னுதாரணம். குற்றச்சாட்டுக்கு முன் கவனம் ஆகியவை அவசியம். பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் குறித்து பிள்ளைகளுக்கு தெளிவூட்டுவதைப் போன்றே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொலிஸார் மக்களுக்கு அதுபற்றி விளிப்புணர்வூட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217501
  22. மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீடடின் பெண் ஒருவருக்கு நாய் கடித்துள்ளதை அடுத்து அவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கடிவாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து நாயின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு சாராரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என தனக்கு நட்டஈடாக 40 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என கோரினார். இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbxmbtir01voqpbsqzhlgww3
  23. உலக தந்தையர் தினம்! ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக, ஜூன் 19, 1910ல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர், சோனாரா டாட் என்ற பெண்மணி. கடந்த, 1909ல், சர்ச் ஒன்றில், அன்னையர் தினம் பற்றி குறிப்பிட்டதை கேட்ட அவர், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதினார். அடுத்த ஆண்டே அதை நிறைவேற்றினார். பின்னர், 1966ம் ஆண்டு, தந்தையர் தினத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என, அறிவித்தார், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன். அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, 1972ல், ஒரு சட்டத்தின் மூலம், தந்தையர் தினத்தை, தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார், அதிபர் நிக்சன். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/world-fathers-day/70901
  24. யாழ், திருமலை, கண்டிக்கு விஜயம் செய்வார் வோல்கர் ; வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல் 15 JUN, 2025 | 10:58 AM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன. இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை. மேலும் ஆரம்பத்தில் 23 - 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/217493
  25. நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை 15 JUN, 2025 | 11:02 AM வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது. எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (14) அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனியடைடுத்து ஜனாதிபதி பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் ஜனாதிபதியை உற்சாகத்துடன் வரவேற்றனர். வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/217495

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.