Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கனடா மீது 100% வரி விதிக்கப்படும் : சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 11:15 AM கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடிய பொருட்கள் மீதும் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "சீனா கனடாவை உயிரோடு விழுங்கிவிடும். அந்நாட்டின் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சீனா முற்றிலுமாக அழித்துவிடும். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும்," என பதிவிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ட்ரம்பின் மிரட்டலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், "வெளிநாடுகளில் இருந்து நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது, நாம் நமது சொந்த நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும். ஏனைய நாடுகள் செய்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்கான சிறந்த வாடிக்கையாளராக நாமே இருக்க முடியும்," என காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஜனவரி மாதம் 16 ஆம் திகதி, கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதை ஆதரிப்பதாகக் கூறியிருந்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சீனாவுடன் 'சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (Free Trade Deal) எதையும் செய்யவில்லை எனவும், சில வரி தொடர்பான சிக்கல்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதாகவும் கனடா அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்த முயற்சிப்பதைக் கனடா பிரதமர் விமர்சித்ததைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விரிசல் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/236936
  2. சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி மீது விசாரணை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 10:07 AM சீன இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (CMC) துணைத் தலைவரும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவருமான ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஊழல் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சீன இராணுவத்தில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகாரமிக்க இடத்தில் ஜெனரல் ஜாங் யூக்ஸியா உள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான 'பொலிட்பீரோ' (Politburo) உறுப்பினராகவும், நேரடிப் போர் அனுபவம் கொண்ட மிகச்சில தளபதிகளில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார். ஜாங்குடன் இணைந்து, சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் கூட்டுப் பணியாளர் பிரிவின் தலைமை அதிகாரியான லியு ஜென்லி (Liu Zhenli) என்பவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் "சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாக" (suspected serious violations of discipline and law) சந்தேகிக்கப்படுகிறார்கள். சீனாவில் இது பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிக்கும் சொல்லாகும். சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வரும் வேளையில், அதன் மிக மூத்த தளபதிகளே விசாரணைக்குட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஷி ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இராணுவத்தில் ஊழலை ஒழிக்கவும் மேற்கொண்டு வரும் அரசியல் களையெடுப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/236925
  3. அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க Published By: Vishnu 28 Jan, 2026 | 03:51 AM (இராஜதுரை ஹஷான்) ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழலுக்கு அனைவரும் எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் சமூககட்டமைப்பில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துள்ளது என்பதை ஆராய வேண்டும். ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. ஒருசில அரச நிறுவனங்களில் மேலதிகமாக பணம் பெறுவது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று கருதுகிறார்கள். அண்மையில் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பிரதி பணிப்பாளர் நாயகத்தின் காரியாலயத்தின் அலுமாரியில் இருந்து 41 இலட்சம் ரூபாவை கைப்பற்றினோம். பெற்றுக்கொள்ளும் இலஞ்ச பணத்தை வார இறுதியில் பகிர்ந்துக்கொள்ளும் ஒருமைப்பாடு தான் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டிய தரப்பினர் ஊழலுக்கு துணைபோகும் போது சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றதாகும். ஒரு நிறுவனத்தில் எவரேனும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு தகவல் வழங்கினால் அந்த நபருக்கு எதிராக செயற்படும் போக்கு காணப்படுகிறது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் ஊழல் தொடர்பில் தகவல் வழங்குபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/237184
  4. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது? 28 ஜனவரி 2026, 04:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிசிஏ தகவலின்படி, அந்த சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரது தனி உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார். பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்து காலை 8:48 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விமானம் VTSSK, LJ45 வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும். பட மூலாதாரம்,ANI லியர்ஜெட்-45 (LJ45) என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பல வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க முடியும். இது சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு விமானமாக அறியப்படுகிறது. பாராமதியில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 விமானம் 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல் அஜித் பவார் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். "பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் உட்பட பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் துயரமானது. அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் குறிப்பாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் அவரின் சிறப்பான பங்களிப்புக்காக நினைவு கூறப்படுவார். அவரின் குடும்பம், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இந்த இழப்பை தாங்கிக் கொள்வதற்கான சக்தியை கடவுள் வழங்கப்பட்டும்," என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "பாராமதியில் ஏற்பட்ட விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு சக்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI அஜித் பவாரின் அரசியல் பின்னணி அஜித் பவார், மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959-ஆம் ஆண்டு பிறந்தார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவர், 1991-ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதை அவரது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இதைத்தொடர்ந்து, அவர் அப்பகுதியின் அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்தார். 1991-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டுவரை, பாராமதி தொகுதியில் போட்டியிட்டு ஏழுமுறை தொடர்ந்து வென்றார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் உத்தவ் பட்சல்கரின் கருத்துப்படி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அப்பகுதியில் அரசியல் செய்துவந்த காலத்தில், அஜித் பவார் கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டுவந்தார். சித்தப்பா சரத் பவாருக்காக எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தபின் அஜித் பவார் தன் கவனத்தை மாநில அரசியல் பக்கம் திருப்பி ஆர்வமாக ஈடுபடத் துவங்கினார். 1991ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான இணை அமைச்சராக இருந்தார். அதன்பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் மும்பையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அதைச் சமாளிக்க, அனுபவசாலியான சரத் பவாரை முதல்வராக்கினார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். உடனடியாக பதவியேற்ற சரத் பவார், அஜித் பவாரை மின்சாரத் துறை அமைச்சராக்கினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சரத் பவாருடன் அஜித் பவார் (கோப்புப் படம்) அதன்பின், 1995-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று, சிவசேனா-பா.ஜ.க கூட்டணி வென்றது. சரத் பவர் மீண்டும் எம்.பி ஆனார். அஜித் பவாரோ மாநில அரசியலிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கினை மேம்படுத்தி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தான் சரத் பவாரின் அரசியல் வாரிசு என்ற நிலையை உருவாக்கினார், என்று தனது கட்டுரை ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் கிரண் தாரே கூறுகிறார். அதன்பின் 1999-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரானார். 2004ஆம் ஆண்டு, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வென்றன. காங்கிரசுக்கு 69 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 71 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் கூட்டணிக் கணக்குகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் சரத் பவார். அப்படிச் செய்திருக்காவிட்டால், அப்போது அஜித் பவார் முதல்வராகியிருக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, துணை முதல்வராகப் பதவியும் ஏற்றார். கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்க, அஜித் பவார் துணை முதல்வராக தொடர்ந்தார். அஜித் பவரின் அரசியல் வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும், 2005ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுப்ரியா சூலேவுடன் அஜித் பவார் (கோப்புப் படம்) சுப்ரியா சூலே - அஜித் பவார் போட்டி 2006-ஆம் ஆண்டு, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்தார், ராஜ்ய சபா உறுப்பினரானார். அப்போது, அஜித் பவாருக்கும் சுப்ரியாவுக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை, என்கிறார் அபய் தேஷ்பாண்டே. "ஆனால் சுப்ரியா சூலே தேசியவாதியாக அறியப்பட்டு, அவரது தலைமை பரவலாக வெளியே தெரிந்தது. அஜித் பவாரின் செல்வாக்கும் கட்சிக்குள் வளர்ந்ததால் அவர்களிடையே போட்டியும் வளர்ந்தது," என்கிறார். 2009-ஆம் ஆண்டு, சுப்ரியா சூலேவுக்கு, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அஜித் பவாரின் செல்வாக்கு மிக்க பகுதி. ஆனால் அஜித் பவாரும் சுப்ரியா சூலேவும் தங்களுக்கிடையே போட்டி இல்லை என்று கூறிவந்திருக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dm2l21zglo
  5. 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது Published By: Vishnu 27 Jan, 2026 | 08:57 PM (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், நீதியமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இரண்டாவது தடவையாக 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் கடந்த வாரம் முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு இன்று புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் (சட்டத்தரணி)சுனில் வட்டகல, வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237179
  6. '20 ஆண்டு தீரா பகையில் 17 கொலைகள்' - போலீஸ் என்கவுன்டரில் பலியான அழகுராஜா யார்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக, நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 23-ஆம் தேதியன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். படக்குறிப்பு,தாக்குதல் நடத்திய கும்பல் காரில் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை 'உணவருந்தும்போது வெடிகுண்டு வீசி தாக்குதல்' நீதிமன்றப் பணிகள் முடிந்த பிறகு சென்னை புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஓர் உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர். "மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த நேரத்தில் வெள்ளைக்காளியை தாக்குவதற்காக அவர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்" என்கிறார், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன். இந்தச் சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது? ஓராண்டில் 60% விலையேற்றம்: தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா? பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது அப்போது உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை. படக்குறிப்பு,ஐ.ஜி பாலகிருஷ்ணன் அழகுராஜா கொல்லப்பட்டது ஏன்? ஐ.ஜி விளக்கம் இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ள ஐ.ஜி பாலகிருஷ்ணன், "ஊட்டியில் வைத்து கொட்டு ராஜா என்ற அழகுராஜாவை தனிப்படை போலீஸ் கைது செய்தது. இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மூன்று கொலை வழக்குகள் உள்ளன" என்கிறார். அழகுராஜாவுடன் சேர்த்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ''ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்தைக் காண்பிக்குமாறு அப்பகுதிக்கு அழகுராஜாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.'' ''அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை திடீரென காவலர்கள் மீது வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ ஒருவர் அழகுராஜாவை பிடிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா தலையில் காயம் ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார் பாலகிருஷ்ணன். அவரை அங்கிருந்து காவல் வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும் ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். படக்குறிப்பு,அழகுராஜா (இடது), வெள்ளைக்காளி (வலது) மோதல் தொடங்கிய பின்னணி காவல்துறை கூற்றுப்படி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை பூர்வீகமாகக் கொண்ட வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகியோர் அடிப்படையில் உறவினர்களாக உள்ளனர். இவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் தி.மு.கவில் வி.கே.குருசாமியும் அ.தி.மு.கவில் ராஜபாண்டியும் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது சுவரொட்டி ஒட்டுவதில் ஏற்பட்ட சிறு மோதலால் இருவர் இடையே பகை ஏற்பட்டது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இருதரப்பின் நபர்களும் பழிக்கு பழியாக கொல்லப்பட்டனர். படக்குறிப்பு,தாக்குதல் நடந்த உணவகம் 'இதுவரை 17 பேர் கொலை' 2003-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இரு தரப்பிலும் தற்போது வரை சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ராஜபாண்டியின் ஆதரவாளரான வெள்ளைக்காளி கைது செய்யப்பட்டார். அவரைக் கொல்வதற்கு குருசாமியின் உறவினரான அழகுராஜா முயன்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல்துறை சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார். "அரசியல்ரீதியாக ஏற்பட்ட பகை, பல்வேறு கொலைகளுக்கு காரணமாக மாறியது. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கு இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.'' என்கிறார் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் புகழேந்தி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8p23v9xyeo
  7. உக்ரேன் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 இலட்சம் இராணுவத்தினர் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் Published By: Digital Desk 3 28 Jan, 2026 | 09:38 AM ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனோர் உட்பட இராணுவ ரீதியான மொத்த பாதிப்புகள் சுமார் 20 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தரவுகளின்படி, சுமார் 12 இலட்சம் மொத்த பாதிப்புகளில், ரஷ்ய தரப்பில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,25,000 ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எந்தவொரு பெரிய வல்லரசு நாடும் இவ்வளவு பெரிய அளவிலான உயிரிழப்புகளையோ அல்லது பாதிப்புகளையோ சந்தித்ததில்லை என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்தபோதிலும், ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் மிக மெதுவாகவே முன்னேறி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. உக்ரேன் தரப்பிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், உக்ரேன் இராணுவத்தின் மொத்த பாதிப்புகள் 5,00,000 முதல் 6,00,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,000 முதல் 1,40,000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேன் தரப்பில் மொத்த இராணுவப் பாதிப்புகள் 18 இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இது 2026 வசந்த காலத்திற்குள் 20 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ வீரர்களைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும் இந்த போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதிக பொதுமக்களின் உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 15,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி சுமார் 46,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது என்று கருதுகின்றனர். அதேபோல், ரஷ்யாவின் பிபிசி சேவை மற்றும் மீடியாசோனா போன்ற ஊடகங்கள் இதுவரை 1,63,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237209
  8. வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள் 1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும். இந்த இரண்டு கோள்களையும் ஆய்வு செய்யப் போதுமானதாக குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தொழிற்படக்கூடியவாறு வொயேஜர் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டன. வியாழன், சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்யவென புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு அதற்கும் அப்பால் இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களையும் அருகே சென்று நோட்டம் விட்டு பூமியில் இருக்கும் மூளைகளுக்கு பல புதிய விருந்துகளை அனுப்பிவைத்தன. வொயேஜர் விண்கலம் பூமியில் இருந்து புறப்படும் போது அவற்றின் நோக்கம் ஐந்து வருடங்களில் வியாழன், சனி ஆகிய கோள்களையும் அவறின் துணைக் கோள்களையும் ஆய்வு செய்வதே, ஆனால் பூமியில் இருந்து அவற்றை வெற்றிகரமான ப்ரோக்ராம் செய்து ஐந்து வருட திட்டத்தை 12 வருட திட்டமாக மாற்றி மாற்றிய இரண்டு கோள்களையும் ஆய்வு செய்து இன்று நாற்பது வருடங்களாக வெற்றிகரமாக விண்வெளியில் சூரியத் தொகுதியைவிட்டு விண்மீனிடைவெளி நோக்கி இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பல விஞ்ஞான புத்தகங்களை மாற்றி எழுதும் அளவிற்கு நான்கு கோள்களைப் பற்றியும், அவற்றின் 48 துணைக்கோள்களைப் பற்றியும், கோள்களின் காந்தப்புலம் பற்றியும் எண்ணிலடங்கா தகவல்களை வொயேஜர் விண்கலங்கள் திரட்டித் தந்துள்ளன. விண்ணியலிலும், கோள் விஞ்ஞானத்திலும் பல புதிய பாதைகளை வொயேஜர் விண்கலங்களின் தரவுகள் திறந்துவைத்தது எனலாம். 1970 களின் கடைசியில் அமைந்த அபூர்வமான கோள்களின் சுற்றுப்பாதை அமைப்பினால் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை குறைந்தளவு எரிபொருள் கொண்டு, குறைந்த காலப்பகுதியில் சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு உருவானது. இப்படியான சுற்றுப்பாதை அமைப்பு ஒவ்வொரு 175 வருடங்களுக்கு ஒருமுறை வரும். இந்த அமைப்பினால் ஒரு கோளைச்சுற்றிவிட்டு அடுத்த கோள் என கோள்களின் ஈர்புவிசையை கவன்போல பாவித்து குறைந்த எரிபொருளில் பயணித்துவிட முடியும். இப்படியாக ஈர்புவிசையை பாவித்து வேகத்தை அதிகரித்து பயணிப்பது “ஈர்ப்பு உதவி” என அழைக்கப்படுகிறது. 1973-1974 காலப்பகுதியில் நாசா வெள்ளி, மற்றும் புதனை ஆய்வு செய்ய அனுப்பிய மேரினர் 10 விண்கலம் ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்தி பயணம் செய்ததால் நாசாவிற்கு ஏற்கனவே இந்த முறையை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துவது என்று தெரிந்திருந்தது. இந்த ஈர்ப்பு உதவி முறையை பயன்படுத்தினால் இறுதியாக இருக்கும் நெப்டியூனை சென்றடைய 30 வருடங்களுக்கு பதிலாக வெறும் 12 வருடங்களே போதும். நான்கு கோள்களையும் ஆய்வு செய்வது முடியுமான காரியம் என்று தெரிந்தாலும், நான்கு கோள்களையும் ஆய்வு செய்யக்கூடியவாறு விண்கலத்தை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக அமையும் என்று நாசா கருதியது. அவ்வளவு தொலைவு பயணிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு ஆய்வுக் கருவிகளை செயலிழக்காமல் பாதுகாப்பதும் மிகவும் கடினமான காரியமாகும். இதனால் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மட்டுமே வொயேஜர் விண்கலங்கள் ஆய்வு செய்யுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10,000 இற்கும் அதிகமான பயணப்பாதைகள் கருத்தில் எடுக்கப்பட்டு இறுதியாக இரண்டு பாதைகள் தெரிவு செய்யப்பட்டன. இந்தப் பாதைகள் வியாழன் மற்றும் அதன் துணைக்கோள் Io, சனி மற்றும் அதன் பெரிய துணைக்கோள் டைட்டன் ஆகியவற்றை அருகில் சென்று ஆய்வு செய்யவும், பின்னர் வொயேஜர் 2 முடியுமானால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை சென்றடையுமாறும் தெரிவுசெய்யப்பட்டன. நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து வொயேஜர் 2 ஆகஸ்ட் 20, 1977 இல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் வேகமானதும் குறைந்த தூரம் கொண்ட பாதையில் செல்லுமாறு விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் Titan-Centaur ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வேகமாக பயணித்த வொயேஜர் 1, வியாழனை மார்ச் 5, 1979 இல் அடைந்தது. அதன் பின்னர் சனியை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. வோயஜெர் 2 விண்கலம் வியாழனை ஜூலை 9, 1979 இலும், சனியை ஆகஸ்ட் 25, 1981 இலும் அடைந்தது. வோஜெயர் 1 இன் பயணப்பாதை விண்கலத்தை சனியின் துணைக்கோள் டைட்டன் இற்கு மிக அருகிலும், சனியின் வளையங்களுக்கு பின்னாலும் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. வோஜெயர் 2 இன் பயணப்பாதை சனிக்கு அருகில் சென்றால் அதன் ஈர்ப்புவிசையால் வொயேஜர் 2 யுரேனஸை நோக்கி பயனப்ப்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. சனிக்கு அருகில் வொயேஜர் 2 செல்லும் போது, அதனது ஆய்வுக்கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் இருந்ததால் யுரேனஸை நோக்கி முழு செயற்பாட்டுடன் பயணிக்கக்கூடியவாறு இருந்தது. பூமியில் நாசா வொயேஜர் 2 ஐ யுரேனசிற்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. மேலும் அதனை நெப்டியுனுக்கு செல்லும் திட்டமாகவும் மாற்றியமைத்தது. வொயேஜர் மற்றும் பயனியர் விண்கலங்களின் பயணப்பாதைகள் வொயேஜர் 2 ஜனவரி 24, 1986 இல் யுரேனஸை சென்றடைந்தது. முதன்முதலாக பூமிக்கு யுரேனஸ், அதன் துணைக்கோள்கள், அதன் காந்தப்புலம் மற்றும் யுரேனஸை சுற்றிய கருப்பு வளையும் ஆகியவற்றின் படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பிவைத்தது. இதே காலப்பகுதியில் வொயேஜர் 1 சூரியத் தொகுதியை விட்டு வடக்கு நோக்கி வெளியே செல்லும் பாதையில் பயணத்தை தொடர்ந்தது. மனிதன் உருவாக்கிய கருவிகளில் இதனது கருவிகள் தான் முதன் முதலாக heliopause பிரதேசத்தை உணரும். Heliopause எனப்படுவது சூரியனது காந்தப்புலத்தின் எல்லை முடிவடைந்து விண்மீனிடைவெளி (interstellar space) தொடங்கும் பிரதேசமாகும். ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனை நெருங்கிய வொயேஜர் 2, அதன் பின்னர் தெற்கு நோக்கி விண்மீனிடைவெளி பிரதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. இரண்டு வொயேஜர் விண்கலங்களும் விண்மீனிடைவெளியை நோக்கி பயணிப்பதால், இன்று வோஜெயர் திட்டம் – வோஜெயர் விண்மீனிடைவெளித் திட்டம் என அழைக்கப்படுகிறது. இன்று வொயேஜர் 1 பூமியில் இருந்து 20 பில்லியன் கிமீ தொலைவில் ஏற்கனவே விண்மீனிடைவெளியில் பயணித்துக்கொண்டிருகிறது. ஆகஸ்ட் 2012 இல் வொயேஜர் 1 விண்மீனிடைவெளியை அடைந்துவிட்டது. இதனது தற்போதைய வேகம் (சூரியனுக்கு சார்பாக) செக்கனுக்கு 16.9 கிமீ. வொயேஜர் 2 தற்போது Heliosheath எனப்படும் பிரதேசத்தில், பூமியில் இருந்து 17 பில்லியன் கிமீ தொலைவில் பயணிக்கிறது. Heliosheath எனப்படும் பிரதேசம் heliosphere பிரதேசத்தின் வெளி எல்லையாகும். இந்தப் பிரதேசத்தின் சூரியக்காற்றின் (solar wind) விண்மீனிடைவெளி வாயுக்களின் அழுத்தத்தால் குறைவடையும். இதன் தற்போதைய வேகம் செக்கனுக்கு 15.3 கிமீ (சூரியனுக்கு சார்பாக). வோஜெயர் விண்கலங்கள் அதனது சக்தி முதலில் இருந்து சக்தி கிடைக்கும் வரை தொடர்ந்து எமக்கு அது சேகரிக்கும் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அணுச் சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாகும் இந்த வோஜெயர் விண்கலங்களில் வொயேஜர் 1 இன் சக்திமுதல் 2025 வரை தொழிற்படும் எனவும் வோஜெயர் 2 இன் சக்திமுதல் 2020-2025 வரை தொழிற்படும் எனவும் கணக்கிட்டுள்ளனர். எனவே குறைந்தது அந்தக் காலம் வரை தொடர்ந்து எமக்கு தரவுகளை இந்த விண்கலங்கள் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதன் பின்னர் எமக்கு இவை தகவல்களை அனுப்பாவிட்டாலும் தொடர்ந்து அதனது வேகத்தில் பயணித்துக்கொண்டே இருக்கும். இன்னும் 300 வருடங்களில் வொயேஜர் 1 ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசத்தை அடையும். ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசம் சூரியனைச் சுற்றிக் காணப்படும் ட்ரில்லியன் கணக்கான சிறிய பனிப்பாறைகளால் ஆன பிரதேசமாகும். அண்ணளவாக 50,000 AU தொடக்கம் 200,000 AU (0.8 ஒளியாண்டுகள் தொடக்கம் 3.2 ஒளியாண்டுகள் வரை) வரை இந்தப் பிரதேசம் அகண்டு காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரதேசத்தைக் கடக்க வோஜெயர் 1 இற்கு அண்ணளவாக 30,000 வருடங்கள் எடுக்கும். வோஜெயர் 1 எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை, எனவே ஊர்ட்மேகப் பிரதேசத்தை கடந்தவுடன், ஏதாவது விண்பொருளுடனும் முட்டிமோதாவிட்டால் பால்வீதியில் தன்னந்தனியாக பயணித்துக்கொண்டே இருக்கும். வோஜெயர் 2 விண்கலம் 2016 இல் விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது 2019 அல்லது 2020 இல் இது விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வொயேஜர் 2 விண்கலமும் எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை எனவே இதுவும் வொயேஜர் 1 ஐ போல பால்வீதியில் உலாவரும். வொயேஜர் விண்கலங்களைப் பற்றி மேலும் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உண்டு. இந்த இரண்டு விண்கலங்களும் தங்கத்தாலான தரவுத் தட்டுக்களை கொண்டு செல்கின்றன. வேறு ஏதாவது அறிவுள்ள ஏலியன்ஸ் உயிரினம் வொயேஜர் விண்கலங்களை கண்டறிந்தால், அவற்றில் உள்ள தரவுத் தகட்டில் இருந்து பூமியைப் பற்றியும் அதன் அமைவிடம் பற்றியும் அறிந்துகொள்ளமுடியும். வொயேஜர் விண்கலங்கள் கொண்டு செல்லும் தங்கத்தரவுத் தகடு. பூமியின் படங்களும், பூமியில் உள்ள உயிரினங்களின் படங்களும், உலகின் 55 மொழிகளில் வணக்கம் தெரிவித்து செய்திகளும், பூமியின் இயற்கை ஒலிகள், குழந்தை அழும் சப்தம், அலைகளின் சப்தம், மற்றும் மொஸார்ட் போன்ற மேதைகளின் இசையமைப்புகளும் என்று பல விடையங்களை இந்த தங்கத் தகடு கொண்டுள்ளது. மனித இனமே அழிந்தாலும் மனிதன் என்கிற அறிவுள்ள உயிரினம் வாழ்ந்ததற்கு சாட்சியாக வொயேஜர் விண்கலங்கள் பால்வீதியை சுற்றிவரலாம். தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, இணையம் மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam https://parimaanam.wordpress.com/2017/09/06/voyager-spacecrafts-40-years/
  9. மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி! 27 Jan, 2026 | 04:37 PM எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த.முத்துக்குமாரசாமி அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்…. 146,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 30,000க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் நீதி வேண்டி நாங்கள் இன்றும் அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த நீண்ட போராட்டப் பயணத்தில், ரி. குமார், என்றழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களை ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும், துயரத்துடனும் நினைவுகூருகிறோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் அரசியல் முயற்சிகளின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில் அவர் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தின் இரண்டாம் தலைமுறையில் ஒரு முக்கிய ஆளுமையாக உருவெடுத்தார். முறிந்துபோன வாக்குறுதிகளுக்கும், பாராளுமன்ற அரசியலின் மாயைகளுக்கும் அப்பால், அவர் மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை தமிழ் மக்களின் போராட்டத்தின் மையத்தில் வைத்தார். அம்னெஸ்டி இன்டர்நேஷனலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கைதியாகவும், 'மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட கைதியாகவும்', குமார் துன்பத்தை ஒரு கோட்பாடாக அல்லாமல், ஒரு நேரடி யதார்த்தமாக அனுபவித்தார். அவரது கல்விஅறிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்காக முழுமையாக அர்ப்பணித்தார். வாஷிங்டன் டி.சி. மற்றும் ஜெனீவாவில், T. குமார் தமிழர்களுக்காகப் பேசிய மிகவும் செல்வாக்கு மிக்க மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார். அந்த வேதனையை அவர் அமெரிக்க காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை மன்றங்கள் வரை எடுத்துச் சென்று, தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்களின் போது, கொழும்பில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களை, லங்கா ராணி என்ற பயணக் கப்பல் மூலம் தமிழ் தாயகமான வடகிழக்கிற்குச் செல்ல T. குமார் அவர்கள் முக்கியப் பங்காற்றினார். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களின் போது, அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருந்தபோதும், அகதி முகாம்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி, பல தமிழர்கள் பாதுகாப்பாகத் தங்கள் தாயகத்தை அடைய உதவினார். உள்நாட்டு விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது; ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.இன்றைய வரலாறு அவரது எச்சரிக்கையை உண்மையென நிரூபித்துள்ளது. சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு சுயநிர்ணய வாக்கெடுப்பு மட்டுமே தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஜனநாயக வழி என்று ஆழமாக நம்பினார், மேலும் அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.குரலற்ற மக்களுடன் அவர் உறுதியாக நின்றார்.நாங்கள் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்ற ஒரு மனிதர் என்றனர். https://www.virakesari.lk/article/237163
  10. பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது! Jan 27, 2026 - 08:59 PM வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmkwr4rs704i7o29neuwegeco
  11. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம் Jan 27, 2026 - 04:32 PM பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குமாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்விடயங்கள் பின்வருமாறு: 01.சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை (Cyber crimes) கையாள்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல். 02.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய, 'சிறுவர் உரிமைகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 03.2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 04.வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்புக்காக புதிய சட்டத்தை உருவாக்குதல். 05.1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 06.1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சிறுவர் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 07.1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல். https://adaderanatamil.lk/news/cmkwhl9r204hro29nlda7zu5k
  12. 'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் துளசி பிரசாத் ரெட்டி பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்) ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். கே.சி. கால்வாய் கரை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கீழே விழுந்த மருத்துவருக்கு உதவுவது போல நடித்த இருவர், அவருக்கு தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியுள்ளனர். கர்நூல் டிஎஸ்பி பாபு பிரசாத் இந்த வழக்கு பற்றி பிபிசிக்கு விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கைகளில் ஊசியுடன் இருக்கும் புகைப்படம். வழக்கு விவரம் குறித்து கர்னூல் டிஎஸ்பி பாபு பிரசாத் கூறுகையில், "கே.சி. கால்வாய் சாலையில் ஒரு பெண் மருத்துவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனே அங்கிருந்த இரு பெண்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆட்டோவில் ஏற்றினர். அந்த சமயத்தில், அவர்கள் தனக்கு ஏதோ ஒரு ஊசியைச் செலுத்துவதை அந்த மருத்துவர் உணர்ந்தார். இது குறித்து அவரது கணவர் புகார் அளித்தார்" என்று கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செவிலியர். தான் காதலித்த நபர் , தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்தச் செவிலியர், அவருக்கு இந்த ஊசியைச் செலுத்தத் திட்டமிட்டிருந்தார்." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல் இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது? அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பார்த்து வியந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து, மற்றொரு செவிலியரின் உதவியுடன் அவர் ஹெச்ஐவி வைரஸ் கலந்த ரத்தத்தைச் சேகரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். "தனது தோழி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் உதவியுடன் இந்த ஊசியைச் செலுத்திவிட்டு அவர் தப்பி ஓடினார். காவல்துறை விசாரணையில் அதுகுறித்துத் தெரியவந்த பிறகு, நாங்கள் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தோம். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அந்த ஊசியில் இருந்தது என்ன வகையான வைரஸ் என்பது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். இந்த வழக்கில் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை நாங்கள் கவனமாகச் சேகரித்துள்ளோம்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபருக்கு ஒரு நண்பர் மற்றும் அவரது குழந்தைகள் உதவி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 'காதலர் ஏமாற்றிய கோபத்தில் பெண் போட்ட திட்டம்' தனது முன்னாள் காதலர் மீதான கோபத்தில் அந்தப் பெண் இந்தச் செயலைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். "படிக்கும் போது, அந்த மருத்துவர் தனது வகுப்புத் தோழியுடன் நட்பு கொண்டிருந்தார். இருவரும் காதலித்தனர். பின்னர், அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியராக இருந்த அந்தப் பெண் திருமணமாகாமல் இருந்தார்". "திருமணமான அந்த மருத்துவரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட பெண் பொறாமை கொண்டிருந்தார். அவரைத் தன் காதலரிடமிருந்து பிரிக்கும் நோக்கில், அவருக்குத் தெரியாமலேயே ஊசி போட விரும்பினார். மருத்துவமனையில் தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் அவர் எச்.ஐ.வி வைரஸைச் சேகரித்தார். அன்றைய தினம் அவர் அந்த ரத்தத்தை மருத்துவரின் உடலில் ஊசி மூலம் செலுத்தியுள்ளார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தோழி மற்றும் அவரது பிள்ளைகளின் உதவியைப் பெற்றுள்ளார். அவர்களும் இந்த குற்றத்திற்கு துணை போயுள்ளனர்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கை விசாரிப்பதில் தொழில்நுட்ப சான்றுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்? குற்றம் சாட்டப்பட்டவர் தனது தோழி மற்றும் அதோனியில் வசித்து வந்த அவர்களது பிள்ளைகள் மூலம் இதைத் திட்டமிட்டதாக கர்நூல் காவல்துறை அதிகாரி சேஷையா பிபிசியிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பரும் அவரது மகனும் அதோனியிலிருந்து வந்திருந்தனர். முதலில் பைக்கில் சென்று ஸ்கூட்டியில் மோதியதால், பெண் மருத்துவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் நண்பரின் மகளும் குற்றம் சாட்டப்பட்டவரும் பின்னால் வந்து ஊசி போட்டதாகவும் காவல்துறை அதிகாரி சேஷையா கூறினார். "அவர்கள் ஊசி போட்டது குறித்து மருத்துவர் சந்தேகித்தபோது, தன் செல்போனில் அவர்களின் முகங்கள் தெரியும் வகையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினோம். வாகன எண்ணை கண்டறிந்து, அது யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் தெரிந்துகொண்டோம். அது குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் இருந்தது. ஆனால் எவ்வளவு விசாரித்தாலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை," என சேஷையா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தனது குற்றத்தை எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பதையும் சேஷையா விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், "அவரின் செல்போனில் அழைப்புப் பட்டியலை நாங்கள் சரிபார்த்தோம். அவர் பேசிய 17 பேரில் 15 பேர் எங்களின் தொடர்பில் வந்தனர். இருவர் மட்டும் தொடர்பில் வரவில்லை. தொடர்பில் வந்தவர்களில் அனைவரும் இயல்பாகப் பேசினர். ஆனால் ஒருவர் மட்டும் பொய் சொன்னார். நாங்கள் அவரை விசாரித்தோம். தொடர்பில் வராத மற்ற இருவரையும் பிடித்தோம்" என்றார் சேஷையா. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பைக்கை வேறு ஒருவரிடம் கொடுத்திருந்தார். அந்த பைக் யாரிடம் கொடுக்கப்பட்டது என்று விசாரித்தபோது, இன்னொரு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம். அந்த எண்ணும் அவரின் அழைப்புப் பட்டியலில் இருந்தது. தொடர்பில் வராதவர்களின் எண்களுடன் அவரது எண்ணும் இருந்தது. அவர்கள் அனைவரும் குற்றம் நடந்த இடத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். "அவர்களை அழைத்து வந்து குற்றம் சாட்டப்பட்டவரின் முன் நிற்க வைத்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,வழக்கின் விவரங்களை ஊடகங்களுக்கு கர்நூல் காவல்துறையினர் விளக்கினர். எச்.ஐ.வி மாதிரி எப்படி வெளியே வந்தது? குற்றம் சாட்டப்பட்ட செவிலியர், கர்நூல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு செவிலியரின் உதவியுடன் எச்.ஐ.வி மாதிரியைச் சேகரித்ததாக கர்நூல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வர்லு பிபிசியிடம் தெரிவித்தார். "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் மூலம் அந்த எச்.ஐ.வி மாதிரி சேகரிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் பயிற்சியின் போது சந்தித்துள்ளனர். அந்தச் செவிலியர் இரவுப் பணியில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடம் இந்த எச்.ஐ.வி மாதிரியைக் கொடுத்துள்ளார். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்தச் செவிலியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும் எங்கள் மருத்துவமனையில் தான் பணிபுரிகிறார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார்," என்று கர்நூல் அரசு மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மற்றொரு செவிலியர் (அவரது தோழி) எந்த அடிப்படையில் எச்.ஐ.வி மாதிரியை வழங்கினார் என்பது விசாரணைக்குப் பிறகு உறுதியாகும் என்றும், அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேஷய்யா தெரிவித்தார். "குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்யாமல் பெண் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவர் பொறாமைப்பட்டுளார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்தப் பெண் நர்சிங்கில் முதுகலை முடித்துள்ளார். முன்பு செவிலியராகப் பணியாற்றிய அவர், தற்போது பணியில் இல்லை"என்று கூறிய அவர், "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் இவருக்கு ஏன் ஹெச்ஐவி ரத்த மாதிரிகளைக் கொடுத்தார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்," என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் தொலைபேசி மூலம் பேச, பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களிடம் பேச முயன்றபோது, அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. (தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அவர்களின் பதவி குறித்த கூடுதல் விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp80pkjgl8po
  13. காசாவிலிருந்து இறுதி பணயக் கைதியின் உடலும் மீட்பு - இஸ்ரேல் அறிவிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 11:14 AM 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 251 பேரில் எஞ்சியிருந்த இறுதி பணயக் கைதியான ரான் கிவிலி (Ran Gvili) என்பவரது உடலை இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்திலிருந்து மீட்டுள்ளன. 24 வயதான ரான் கிவிலி விசேட அதிரடிப்படை வீரர் (Yamam) ஆவார். ஒக்டோபர் மாதம் 07 தாக்குதலின் போது போரிட்டு உயிரிழந்த இவரது உடலை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு எடுத்துச் சென்றிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் இவரது உடல் மீட்கப்பட்டது. "நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்; இறுதி பணயக் கைதி வரை அனைவரையும் மீட்டுவிட்டோம்," என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள அமைதித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாம் கட்டம் அமுலுக்கு வரவுள்ளது. காசாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச பாதுகாப்புப் படை (International Stabilization Force) நிலைநிறுத்தப்படும். இந்தப் படைக்கு அமெரிக்க ஜெனரல் ஜஸ்பர் ஜெஃபர்ஸ் (Jasper Jeffers) தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும். இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான பிரதான எல்லையான ரஃபா (Rafah) எல்லைக் கடவை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்களின் நடமாட்டத்திற்குப் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237123
  14. அமெரிக்காவில் பனிப்புயல் : 30 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 10:42 AM அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர் உயிரிழந்துள்ளனர். மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவில் பனி அகற்றும் வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மிசிசிப்பி மற்றும் டென்னசி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. பனிப்புயல் காரணமாக இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வீதிகளில் பனி மலைபோல் குவிந்துள்ளதால் பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் போன்ற நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மிசிசிப்பி பல்கலைக்கழகம் இந்த வாரம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை -31°C (மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்) வரை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/237118
  15. இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 05:05 PM இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பழம் தின்னும் வௌவால்கள் (Fruit Bats) மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களிடையே பரவுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை காணப்படுகின்றன. நோய்த்தொற்று தீவிரமடைந்தால் மூளை அழற்சி (Encephalitis) ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. இதனால், இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னுரிமை நோய்த்தொற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முன்னைய நிபா வைரஸ் பரவல்களின் போது, இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்றை தொடர்ந்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “தற்போதைக்கு இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், பிராந்திய நிலைமைகளை கவனமாக கண்காணித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், தைவான் உள்ளிட்ட பல நாடுகளின் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பிராந்திய நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/237167
  16. அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில் Jan 27, 2026 - 03:17 PM அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது. அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkwex3r604hjo29nu7p1uu8a
  17. அத தெரண கருத்துப்படங்கள்.
  18. "சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது" உண்மை. அண்ணை, தகவல்களை வெளிப்படையாக பகிர்வதற்காகவும் வாசகர்களை சென்றடைவதற்காகவும், யாழ் இணையத்தை எம்மை ஒன்றுபடுத்தும் ஊடகமாக பாவிக்கிறோம். ஏனைய உறவுகளின் கருத்துகளையும் பெற்றபின் தீர்மானிப்போம். @Kavi arunasalam ஐயா நீங்கள் இலச்சினை ஒன்றை எமக்காக உருவாக்கி தாங்கோ. பனர் விரைவாக செய்தால் நல்லது, வேலைத்திட்டங்கள் முடிய அங்கு கொண்டுபோய் வைத்து சிறு காணொளி, படங்கள் எடுக்கலாம்.
  19. சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்: பொதுமக்களை அணிதிரட்டும் யாழ். பல்கலை மாணவர்கள் Published By: Vishnu 27 Jan, 2026 | 03:56 AM இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்று சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர். தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/237095
  20. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில 26 Jan, 2026 | 06:20 PM (இராஜதுரை ஹஷான்) 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக இருந்து ஐந்து ரூபா கடன் பெற்றார்கள். இதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்தால் அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தவறான எடுத்துக்காட்டாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பிரபல்யமான தீர்மானத்தை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது? ஏனைய நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகிறதா? ஏன் என்பதை ஆராயாமல் ஊழலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1947 முதல் 1970 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்கள். அதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இருந்து பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் ஐந்து ரூபா கடன் கேட்பார்கள். இதனை கண்டு தமது எதிர்கால நிலைமையின் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு 1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோல் சுதந்திர கல்வியின் தந்தையான கண்ணங்கர தான் வாழ்வதற்கு வழியில்லாமல் மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி பிரதமர் டட்லி சேனாநாயக்கவுக்கு கடிதம் எழுதிய பிரபல்யமாக கதையும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவை உறுப்பினராக இருந்த அமைச்சர் விமலா கண்ணங்கர வாழ்வில் இறுதி காலத்தில் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தமது சொந்த காணியை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார். நாட்டுக்காக சேவையாற்றிய பலர் இன்றும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவில் தான் வாழ்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்தால் சேவையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்து எதிர்காலத்துக்கு தேவையான நிதியை சேகரித்துக் கொள்வார்கள். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் தவறான தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/237078
  21. இந்தியா – இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி – குடியரசு தின உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 26 Jan, 2026 | 10:07 PM இந்தியா - இலங்கையின் நம்பகமான மற்றும் நெருங்கிய பங்காளி என்பதுடன் அபிவிருத்தி, ஒத்துழைப்பு, மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு எப்போதும் இருக்கும். இந்தியா – இலங்கை உறவுகள் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுகளின் அடிப்படையில் மேலும் வலுப்பெறுகின்றன எனவும் இந்தியா–இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 77வது இந்திய குடியரசு தின விழாவில், தலைமையேற்று உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வணக்கத்துக்குரிய மதகுருமார்களே, இன்றைய தினம் எமது நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களே, பெருமதிப்புக்குரிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளே, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களே, ஆளுநர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகளே, இராஜதந்திர துறையினைச் சேர்ந்த சக அதிகாரிகளே, இலங்கை அரசாங்கத்தின் உயரதிகாரிகளே, வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே, ஊடகவியலாளர்களே, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் உட்பட இந்திய சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே, மதிப்புக்குரிய விருந்தினர்களே, சீமாட்டிகளே கனவான்களே, இனிய மாலை வணக்கம், நமஸ்கார், ஆயுபோவன், 77 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய இல்லத்துக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். இன்றைய தினம் எம்முடன் இணைந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி. உங்களது பிரசன்னம் மற்றும் உங்களது ஆதரவு ஆகியவையே எமது பலத்திற்கான மூலாதாரங்கள் ஆகும். ஓர் ஆழமான பங்குடமையை நோக்கி பணியாற்றுவதற்கு ஏனைய பிறகாரணிகளைக் காட்டிலும் இதுவே எமக்கு தைரியமூட்டுகின்றது. 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களது நட்புறவுக்கும் பங்களிப்புக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். 76 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே இந்திய மக்கள் எமது அரசியலமைப்பை அங்கீகரித்திருந்தனர். அன்று முதல் நாம் பாரிய ஜனநாயக நாடாக வளர்ந்திருக்கும் அதேசமயம், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாகவும் உள்ளோம். இந்த வருடத்தின் குடியரசு தினத்தின் இரு தொனிப்பொருட்களாக வந்தே மாதரம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவை காணப்படுகின்றன. வந்தே மாதரம் சுதந்திரத்தின் சிந்தனைகளை கொண்டாடுகின்றது. ஆத்ம நிர்பார் பாரத் சுபிட்சத்துக்கான எங்களின் அபிலாசைகளை முன்கொண்டு செல்கின்றது. வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய பாடலாகும். இந்த பாடல் உருவாக்கப்பட்டமையின் 150 ஆண்டுகளை நாம் நினைவு கூறுகின்றோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போதான சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருமித்த கோஷமாக அது அமைகின்றது. இந்திய தாய் பற்றிய எமது பெருமிதத்தின் வெளிப்பாடாகவும் இது காணப்படுவதுடன் இன்று கூட ஓர் உத்வேகத்தின் காரணியாகவும் உள்ளது. ஒரு தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான எங்களது எதிர்கால முயற்சிகளை குறிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆத்ம நிர்பார் பாரத் என்பதாகும். இது தனிமைப்படுத்தலை முக்கியத்துவப் படுத்தவில்லை பதிலாக துரிதமானதும் முழுமையான வளர்ச்சிக்கான ஓர் அபிலாசையாகும். உலகளாவிய ரீதியில் ஓர் நம்பத் தகுந்த பங்காளராவதற்கான திறன்களை உள்ளூரில் கட்டி எழுப்புவதையே இது குறித்து நிற்கின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்காக, வரிகள் முதல் தொழில்துறை வரையிலும்; விண்வெளி முதல் பாதுகாப்பு மற்றும் அணு துறைகள் வரையிலும்; உட்கட்டமைப்பு முதல் உற்பத்தி துறை வரையிலும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வரையிலும் நாங்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாமல் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்குரிய தேவைகளை குறைத்தல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளடங்குகின்றன. ஸ்திரமான வளர்ச்சி, குறைவடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவடைந்து வரும் பண வீக்கம் ஆகியவற்றுடன் இந்தியா மிகச்சிறந்த தருணத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா நான்காவது பொருளாதார நாடாக வருவதில் எந்தவிதமான அதிசயமும் இல்லை. அத்துடன் இந்த தசாப்தத்தின் நிறைவுக்கு முன்னதாக மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக வருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். உலகளாவிய ரீதியில் நம்பகமான ஒரு பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட கடப்பாட்டுடன் இந்தியாவின் எழுச்சி இணைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஒரு நம்பகமான பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட உணர்வினையும் கொண்டிணைந்ததாக இந்திய எழுச்சி காணப்படுகின்றது. விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா என்ற இலக்கானது உலகுக்கான ஒரு நண்பன் அல்லது ஒரு விஸ்வ மித்ரா என்பவற்றுக்கான எங்களது நோக்குடன் ஒன்றிணைந்ததாகவே காணப்படுகின்றது. எங்கள் அயலுறவுக் கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் போது மகாசாகர் மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய கொள்கைகளில் இந்த அணுகுமுறையானது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத எங்களது பிணைப்பானது எங்களின் நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது. நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது. இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளது. 2025 ஏப்ரலில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன. பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன. இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம். மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு எரிசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ - ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது. எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமுல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் UPI கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது. எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எங்களது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் எங்களது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது. அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். அபிலாசைகளை கொண்டிருக்கும் சமூகங்களாக முழுமையானதும் சுபிட்சம் நிறைந்ததுமான ஓர் எதிர்காலத்தினை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கும் எமது வெற்றியில் அபிவிருத்தி ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் நிலையில் இதில் 850 மில்லியன் பெறுமதியானவை நன்கொடை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். எங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பு இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் விரிவடைகிறது. தேவைப்படும் தரப்பினருக்கு நலன்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களிலேயே நாம் பணியாற்றி வருகின்றோம். கடந்த வருடத்திற்கு மேலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கையர்களுக்காக நாம் எமது பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டங்களை விஸ்தரித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் வரையிலும் சிரேஷ்ட அதிகாரிகள் முதல் கணக்காய்வாளர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் வரையிலும், ஊடகவியலாளர்கள் முதல் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் வரையிலும் இவ்வாறான திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் மூலம் ஒவ்வொரு துறையையும் சேர்ந்த நிபுணர்கள் நன்மையடைந்து வருகின்றனர். இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரியதும் நம்பகமானதுமான பங்காளி என நான் அடிக்கடி கூறி வருகின்றேன். டித்வா புயல் தாக்கிய போது மீண்டும் ஒருமுறை முதற்கண் உதவி வழங்கியவர்களாக நாம் இருந்துள்ளோம். இலங்கையை புயல் தாக்க ஆரம்பித்த அதே நாளில் நாம் சாகர் பந்து நடவடிக்கையை ஆரம்பித்திருந்தோம். கொழும்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ என் எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் உதயகிரி ஆகிய எங்களது கடற்படை கப்பல்கள் உடனடியாகவே நிவாரண உதவிகளை வழங்கியதுடன் மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்திருந்தன. பின்னர் 1100 தொன்கள் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எங்களால் விநியோகிக்கப்பட்டன. 14.5 தொன்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உங்களால் வழங்கப்பட்டது. அத்துடன் 60 தொன்கள் சாதனங்களும் விநியோகிக்கப்பட்டன. போக்குவரத்து தொடர்புகளை மீளமைப்பதற்காக 228 தொன்கள் பெய்லி பாலங்கள் வான் மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. இந்திய விமான படையின் எம்ஐ 17 உலங்கு வானூர்திகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அணியினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டியருகில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட களமருத்துவனை மூலமாக கிட்டத்தட்ட 8,000 பேர் அவசர சிகிச்சை வசதிகளை பெற்றுக் கொண்டிருந்தனர். வான்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்த இரண்டு BHISHM அவசர மருத்துவ பராமரிப்பு அலகுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது எமது பதிலானது துரிதமாகவும் உடனடியாகவும் பரந்தளவிலும் வழங்கப்பட்டிருந்தது. ஒரு பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவின் உள்ளுணர்வு ஆகியவற்றின் வழிகாட்டலில் எந்தவித நிபந்தனைகளுமின்றி இவை முன்னெடுக்கப்பட்டன. டித்வா புயலின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சு. ஜெய்சங்கர் அவர்கள் பிரதமர் அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். எங்களின் கூட்டொருமைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காகவும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி பொதியினை அறிவிப்பதற்காகவும் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டித்வா புயலுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மீள கட்டியெழுப்புதல் முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் இந்த பொதி அறிவிக்கப்பட்டது. இதன்கீழ் பின்வரும் ஐந்து பரந்த துறைகள் உள்ளடங்குகின்றன. · வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் மீள் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு. · வீடுகள் நிர்மாணம் மற்றும் குடிநீர் விநியோகம் · சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான ஆதரவு · விவசாயம் மற்றும் கால்நடைகள் துறைக்கான ஆதரவு; மற்றும் · சிறந்த பேரிடர் மீட்பு மற்றும் தயார் நிலையினை நோக்கி செயற்படுதல் இந்தப் பொதியின் பயன்பாடானது அதனை நிறைவேற்றுதல் மற்றும் அதன் தாக்கங்களில் தங்கி உள்ளது என்பதனை நாங்கள் நன்கறிவோம். இத்திட்டங்களை உரிய காலப் பகுதியில் அமல்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இத்திட்டங்களின் அமுலாக்க பணிகள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதனை நான் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன். குறிப்பாக மிகவும் அவசர தேவைகளாக காணப்பட்ட பாலங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களை மீளமைத்தல், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை வேறு இடங்களில் அமைத்தல் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளாகும். எதிர்கால இயற்கை பேரிடர்களை தயார் நிலையுடன் எதிர்கொள்வதற்கான இலங்கையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. புவியியல் ரீதியாக மிகவும் நெருக்கமான அமைவிடத்தினை நாம் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை நாம் மிகைப்படுத்த முடியாது. எங்கள் அயல்பிராந்தியங்களில் பல்தேசிய குற்றவாளி அமைப்புகள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணப்படும் ஒத்துழைப்புகளில் இது வெளிப்படையாக உள்ளது. அதேபோல கடல் ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எங்களது கூட்டு நடவடிக்கைகளிலும் இது வெளிப்பட்டுள்ளது. டித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்நிலையில் அவற்றுக்கான களங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக இலங்கையின் பாதுகாப்பினை வலுவாக்குவதிலும் இது மிக முக்கியமானதாகும். குறிப்பாக பேரிடர் தணிப்பு மற்றும் நிவாரணமும் புனர்வாழ்வும் ஆகியவற்றில் இலங்கையின் திறன்களை கட்டி எழுப்புதல் போன்றவையும் இதில் உள்ளடங்குகின்றன. எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன்னர் உங்களது இயல்பான மக்கள் மக்கள் தொடர்புகள் குறித்து நான் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை பொறுத்தவரையில் எங்களிடையிலான உறவுகளில் இது மிகவும் விசேடமான அம்சமாகும். எங்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை போலவே, கிரிக்கெட் மற்றும் உணவுகள், யோகா மற்றும் ஆயுர்வேதம், நடனம் மற்றும் இசை போன்றவற்றுக்கான எமது ஆர்வமானது பகிரப்பட்ட ஒன்றாகும். இராமாயண சுவடாக இருந்தாலும் சரி, பௌத்த மத தடங்களாக இருந்தாலும் சரி, அது நவீன காலத்தில் ஆழமடைந்து வரும் நமது புராதன தொடர்பைப் பற்றிப் பேசுகின்றது. அடுத்த மாத ஆரம்பத்தில், கங்காராமை விகாரையில் புத்த பெருமானின் தேவ்னி மோரி சின்னங்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தப்படும்போது, பல நூற்றாண்டுகளாகப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட நமது உறவின் இந்த தனித்துவமான தன்மையை அது மீள உறுதிப்படுத்தும். இது நமது உறவுகளை ஏனையவற்றைப் போலல்லாமல் பிரத்தியேகமான ஒன்றாக உருவாகின்றது. பொதுவான சுபீட்சம் மற்றும் நல்வாழ்வின் எதிர்காலத்தை உருவாக்க நமது வரலாற்றின் இந்த செல்நெறியுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்வோம். இந்த கூட்டு முயற்சியில் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன். ஜெய்ஹிந்த். ஜெய் இந்தியா இலங்கை மைத்ரி! நன்றி. பஹுத் பஹுத் தன்யாவத். நன்றி . போஹமஸ் துதி இவ்வாறு மேலும் உரையாற்றினார். https://www.virakesari.lk/article/237088
  22. டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நெருக்கடியில் தள்ளப்படுமா? பட மூலாதாரம்,AFP via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் கைவசம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபைச் சந்தித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். "பிரதமருடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. ஐசிசி விவகாரம் பற்றி அவரிடம் விளக்கினேன். அனைத்து வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இதனை தீர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கின்றன. இந்தத் தொடரில் வங்கதேசம் சேர்க்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். பட மூலாதாரம்,X படக்குறிப்பு,பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபை சந்தித்த புகைப்படத்தை மொஹ்சின் நக்வி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? மொஹ்சின் நக்வியின் கருத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோபமடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள செய்தியின்படி, இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், இந்தத் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மொஹ்சின் நக்வி பேசியதாக பாகிஸ்தான் செய்தித்தாளான டான் தெரிவிக்கிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது? அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பார்த்து வியந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன? டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விலகல் - இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசுவது என்ன? தன்னைத்தானே சுத்தப்படுத்தும் உடல் – நீங்கள் 5 எளிய உதவிகள் செய்தால் போதும் End of அதிகம் படிக்கப்பட்டது "ஐசிசி வாரிய கூட்டத்திலும் நான் இதையே தான் கூறினேன். ஒரு நாடு தனக்கு வேண்டுகிற முடிவை எடுப்பதோடு மற்ற நாடு என வருகிறபோது அதற்கு நேர்மாறாக செயல்படுவது என்கிற இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது. வங்கதேசம் ஒரு முக்கிய் பங்குதாரர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது," என அவர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த நக்வி, "இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுக்கும். பிரதமர் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார். பாகிஸ்தானின் மாற்றுத் திட்டம் பற்றிய கேள்விக்கு, "முதலில் முடிவு வரட்டும். எங்களிடம் பிளான் ஏ,பி,சி மற்றும் டி உள்ளன." என்று பதிலளித்தார். எனினும் இந்தத் தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகினால் கணிசமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பான முடிவை அந்நாட்டு அரசு எடுக்கும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "சர்வதேச அணிகளுடன் முத்தரப்பு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது. ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் பாகிஸ்தான் வெளியேற்றப்படலாம்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் ஆண்டு வருமானமும் இதனால் பாதிக்கப்படலாம். "பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசியின் வருவாய் பகிர்வு நிறுத்தப்படலாம்," என வாரிய அலுவலர்கள் தெரிவிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு, நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கான வருவாய் பகிர்வு முடிவு செய்யப்பட்டபோது ஐசிசியின் ஒட்டுமொத்த வருமானம் 600 மில்லியன் டாலராக இருந்தது. 2024-2027 காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 38.5% வருவாயும், இங்கிலாந்திற்கு 6.89% வருவாயும், ஆஸ்திரேலியாவிற்கு 6.25% வருவாயும் பகிர்ந்து கொடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 5.75% வருவாய் பகிர்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 34.51 மில்லியன் டாலர். முந்தைய சுழற்சியில் பாகிஸ்தானின் பங்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐசிசியின் வருவாய் பகிர்வு விதிமுறைகளில் தெளிவு இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாகிஸ்தான் கூறுகிறது. தற்போது உலக கோப்பையிலிருந்து விலகிக் கொண்டால் ஐசிசியில் இருந்து வழங்கப்படும் வருவாய் நிறுத்தப்படலாம். இது மேலும் நிதி நெருக்கடியை உருவாக்கக்கூடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இல்லை என்கிறார் மூத்த விளையாட்டு செய்தியாளரும் எழுத்தாளருமான நீரு பாட்டியா. "ஐசிசி வருவாய் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமாகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் புறக்கணித்தால் இத்தகைய பெரிய அளவிலான தொகை கிடைக்காது. அது இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவது கடினமாகிவிடும்." என்றார். "இன்று பாகிஸ்தான் புறக்கணித்தால் எதிர்வர இருக்கும் ஐசிசி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டில் இருந்தும் விலகும் நிலை உருவாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,AFP via Getty Images இந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்தால் ஐசிசிக்கும் இழப்பு ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 2027 வரை பாகிஸ்தானில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை முறையே பிடிவி (பாகிஸ்தான் தொலைக்காட்சி) மற்றும் மைகோவிற்கு ஐசிசி வழங்கியது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான தொகையை ஐசிசி வெளியிடவில்லை. எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படும். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அது ஐசிசி வருவாயை கடுமையாகப் பாதிக்கும். பாகிஸ்தான் விளையாடினால் நிச்சயம் இந்தியா உடன் ஒரு போட்டி இருக்கும். ஐசிசிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் போட்டிகளில் அதுவும் ஒன்று. ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமாகிறது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி தனது தி கேம் பிளான் என்கிற யூடியூப் சேனலில் பேசுகையில், "பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் சிக்கலைச் சந்திக்கும். பாகிஸ்தான் வெளியேறினால் எந்த அணி அதன் இடத்தை நிரப்பும். வேறு ஒரு அணியுடன் இந்திய அணி விளையாடினால் அந்தப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்குமா?" எனத் தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன. ஐசிசிக்கு இழப்பு ஏற்படுவது யதார்த்தமானது எனக் கூறும் நீரு பாட்டியா, "இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பிலும் இழப்பு ஏற்படும்." எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் அந்த ஆபத்தான முடிவை எடுக்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images இழப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தத் தொடரிலிருந்து விலகும் ஆபத்தான முடிவை பாகிஸ்தான் எடுக்குமா என்கிற கேள்வி எழுகிறது. "வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் முழு அனுதாபங்களும் உள்ளன. ஐசிசியின் கடுமையான நடத்தையால் நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை என்கிற கேள்விக்கே இடமில்லை." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக நேஷனல் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. "ஐசிசி உறுப்பு நாடுகள் விளையாடும் ஒப்பந்தத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 2027 வரை அனைத்து ஐசிசி நிகழ்வுகளையும் கலப்பு முறையில் நடத்தும் முடிவுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நேரத்தில் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரை புறக்கணிக்கும் யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வாசிக் அக்ரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "வங்கதேசம் விளையாடவில்லை என்பதற்காக பாகிஸ்தான் உலக கோப்பையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு வங்கதேசம் என்ன செய்துள்ளது? இதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் தன் மீது கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தி உலக கோப்பை வெல்ல வேண்டும்," என்றார் வாசிம் அக்ரம். இந்த நேரத்தில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முடிவை பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்கிறார் நீரு பாட்டியா. "ஐசிசி தொடரில் கலந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர் கட்டணம் பெற முடியும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளுக்கு நிறைய அணிகள் வருவதில்லை. அதனால் ஐசிசி தொடர் என்பது அவர்களுக்கு மிகப் பெரிய நிகழ்வு. பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்தாலும் ஐசிசியில் அதன் நிலை பலவீனப்பட்டு போகும். ஏனென்றால் பாகிஸ்தானிற்கு ஆதரவாக எந்த உறுப்பினரும் வர மாட்டார்கள்." எனத் தெரிவித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1zdpnyvmo
  23. கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம் ; ஆளுநர் வேதநாயகன் 26 Jan, 2026 | 05:18 PM (எம்.நியூட்டன்) கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம். தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு திங்கட்கிழமை (26) காலை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. 'நேர்மையான தேசத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது. மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் 'அன்பளிப்பு' என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை. கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார். https://www.virakesari.lk/article/237067
  24. மேலுள்ள காணொளியில் கடைசி 5 நிமிடத்தில் முன்னோடி செயற்திட்டம் பற்றியும் அதற்கு முன் வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை மலசலகூடப் புனரமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, @யாயினி அக்கா, @ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கள உறவுகள் கவனத்திற்கு. மேலுள்ள காணொளியில் மஞ்சள் வேட்டி, தாடியோடு இருப்பவர் எனது தந்தையார்.
  25. இல்லை அண்ணா தைப்பூசத்திற்குள் வேலைகள் முடிந்து, வீடும் குடிபுக உள்ளார்கள் என்று T/O கூறினார். பணத்தை வங்கியில் இருந்து மீளப்பெற T/O கையொப்பம் இடவேண்டும். இன்று தான் பணம் எடுக்க வங்கி மீளெடுக்கும் சீட்டு பெற்று பணம் எடுக்க உள்ளார்கள். இன்றும் காரைநகர் திட்டமிடல் உத்தியோகத்தருடன் கதைத்தேன், T/O விடுமுறையாம். நாளை அளவுத்திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.