Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. LIVE 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League Punjab Kings 245/6 Sunrisers Hyderabad (4/20 ov, T:246) 60/0 SRH need 186 runs in 96 balls. Current RR: 15.00 • Required RR: 11.62 Win Probability: SRH 26.40% • PBKS 73.60%
  2. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை! 12 APR, 2025 | 09:31 PM மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக நாளை (13) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பின் மின் உற்பத்தியாளர்கள் தங்கள் சூரிய மின் அமைப்புகளை தாமாக முன்வந்து நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நீண்ட விடுமுறை காலம் மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக, தேசிய மின்சார தேவை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பு தேசிய மின் கட்டமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, மின் கட்டமைப்பில் ஸ்திரமற்றதன்மை ஏற்பட்டுள்ளது. இது திடீர் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கம் கூட நாடளாவிய ரீதியில் அல்லது பகுதியவில் மின் தடையை ஏற்படுத்தக்கூடும். இதனால் தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தனமையை பேண உங்கள் ஒத்துழைப்பை இலங்கை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211933
  3. பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 12:21 PM (நா.தனுஜா) பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த சத்சர நிமேஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவர் பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில், கடந்த 2 ஆம் திகதி பொலிஸ்காவலின் கீழ் பதிவான சத்சர நிமேஷின் உயிரிழப்பு, கடந்த பல ஆண்டுகளாகப் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி இச்சம்பவமானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் எத்தகைய மோசமான, மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டுமொரு முறை உணர்த்துகிறது. இருப்பினும் உயரதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த உண்மையை உணரமுடியவில்லை அல்லது அவர்கள் உணர மறுக்கிறார்கள். பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்போது, சில மணித்தியாலங்களின் பின்னரோ அல்லது சில நாட்களின் பின்னரோ குறித்த சம்பவம் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைப்பதால் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் அவ்வேளையில் பெருமளவான ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ அல்லதுசாட்சியங்கள் சிதைக்கப்பட்டோ இருக்கக்கூடும். அதுமாத்திரமன்றி பொலிஸ்காவலின் கீழிருந்த பிறிதொரு நபர் அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலும், அவர் தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக சாட்சியமளிக்க முன்வருவது மிகக்கடினமானதாகும். கடந்த பல ஆண்டுகளாக பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். இருப்பினும் அச்சம்பவங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும். மேலும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதையும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன என்பதையும் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211872
  4. INNINGS BREAK 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League PBKS chose to bat. Punjab Kings (20 ov) 245/6 Current RR: 12.25 • Last 5 ov (RR): 68/2 (13.60) Sunrisers Hyderabad Win Probability: PBKS 87.96% • SRH 12.04%
  5. தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள், புராண/இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இரவு நேரங்களில் வீதிகளில் மேடை அமைத்து இது நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சம்பந்தன், தமிழ்நாட்டின் மூத்த தெருக்கூத்து கலைஞர்களில் ஒருவர். தயாரிப்பாளர்: சிராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல் #Therukoothu ##TherukoothuSongs இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  6. Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 05:04 PM மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மலேசியாவின் ஷா ஆலம் டமான் ஆலம் இண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் ஆவார். கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/211910
  7. INNINGS BREAK 26th Match (D/N), Lucknow, April 12, 2025, Indian Premier League LSG chose to field Gujarat Titans (20 ov) 180/6 Current RR: 9.00 • Last 5 ov (RR): 45/3 (9.00) Lucknow Super Giants Win Probability:GT 53.01% • LSG 46.99%
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே கனமழை பதிவாகியுள்ளது. இது வெப்பச்சலன மழை என்றும், வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெப்பச்சலனம் மட்டுமின்றி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் கூட தற்போதைய மழைக்கு காரணம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கோவையில் கடந்த ஆண்டு கோடையில் அதீத வெப்பம் நிலவிய நிலையில், இந்தாண்டு அதிக மழை பெய்துள்ளது. இந்த அதீத வெப்பத்திற்கும் அதிக மழைக்கும் என்ன காரணம்? காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கோவை எதிர்கொண்டுள்ளதா? 2024 ஏப்ரலில் வரலாறு காணாத வெப்பநிலை; 2025 ஏப்ரலில் மழை! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத மாதத்தில் முந்தைய 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கோவையில் வெப்பம் பதிவானது. அதையடுத்து மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியது. கோவையில் அதுவரை பதிவான வெப்பநிலையில் அதுவே அதிக அளவு என்று வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியது. ஆனால் தமிழகத்தில் அதே ஆண்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட 33 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த சராசரி கோவையில் இன்னும் அதிகமாக இருந்தது. அந்தளவுக்கு கோவை, நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாகியிருந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி மாதத்திலும் பகலில் அதிக வெயிலும், இரவில் அதிகமான குளிரும் உணரப்பட்டது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆய்வகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.2 டிகிரி செல்சியஸ் அளவிலும், பிப்ரவரி மாதத்தில் 32.4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவரை பிப்ரவரி மாதங்களில் பதிவானதில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் இதன் காரணமாக, இந்த ஆண்டில் கோடையில் மேலும் வெப்பம் அதிகரிக்குமென்று மக்கள் மத்தியில் ஒரு வித அச்சவுணர்வு எழுந்திருந்தது. அதற்கு மாறாக, கடந்த மார்ச் மாதத்திலிருந்தே இதமான காலநிலையும் இடையிடையே மழையும் பெய்து வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு, கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய சந்தோஷ் கிருஷ்ணன், இந்த வெப்பச்சலன மழை மதியத்திலிருந்து இரவு வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பெய்யும் என்றும் கணித்திருந்தார். வெப்பச்சலன மழை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன், ''வெயில் அடித்து காற்றில் ஈரப்பதம் மேலேழும்புவதே வெப்பச்சலனம் எனப்படுகிறது. பகலில் வெயில் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், இரவில் மழை பெய்வதை வைத்தே அதை வெப்பச்சலன மழை என்று அறியலாம். கொங்கு மண்டலத்தில் சில நாட்களுக்கு மதியம் வரை நல்ல வெயில் இருக்கும். மாலை மற்றும் இரவில் மழை பெய்யும். இது இயற்கையான அறிவியல் நடைமுறைதான்.'' என்றார். வெப்பச்சலன மழை பற்றி எளிமையாக விளக்கிய புதுக்கோட்டை அன்னை தெரசா வேளாண் கல்லுாரியின் முதல்வரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான பாலசுப்பிரமணியம், கிராமங்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைப் பார்க்கும்போது, மாலையில் இன்று மழை பெய்யும் என்று கணிப்பது இந்த வெப்பச்சலன மழையைத்தான் என்று தெரிவித்தார். பருவமழை, வெப்பச்சலன மழை இரண்டிலும் மழை பெய்வதற்கான இயற்கையின் நகர்வுகள் ஒன்றுதான் என்றும் அவர் விளக்கினார். ''பருவமழை தவிர்த்து, வெப்பக்காற்று மேலேழும்போது, மேகத்திலுள்ள நீர்த்துளிகள், ஆங்காங்கே மழையாகப் பெய்வதே வெப்பச்சலன மழை. இதை மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி என்றும் சொல்வார்கள். இந்த மழை பரவலாகப் பெய்யாது. தொடர்ந்தும் பெய்யாது. 10 நிமிடங்கள் பெய்யும், பின்பு நின்று விடும். பருவமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும். இது சற்று மாறுபடும் '' என்றார் பாலசுப்ரமணியம். அதீத வெப்பத்துக்கும், அதீத மழைக்கும் காரணம் காலநிலை மாற்றம்தான் என்கிறார் அவர். இந்த வெப்பச்சலன மழை, கொங்கு மண்டலம் மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களிலும் வெயில் மேலும் அதிகரிக்குமென்றும் கூறினார். ''கொங்கு மண்டலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அந்த பகுதியில் வழக்கத்தை விட, இந்த முறை கோடையில் பெய்யும் வெப்பச்சலன மழை அதிகமாகவுள்ளது. வழக்கமாக கோவைக்கு அதிகபட்சமாக 18–20 செ.மீ. (200 மில்லி மீட்டர்) கோடை மழை கிடைக்கும். ஆனால் ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாகவே 14 செ.மீ. கோடை மழை பதிவாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.'' என்கிறார் சந்தோஷ் கிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வெப்பம் குறைவதற்கு காரணம் இதுதான்! ஆனால் இது வழக்கமான இயற்கையான நடைமுறைதான், அதிகமென்று சொல்ல முடியாது என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான முனைவர் கீதாலட்சுமி. கோடை காலங்களில் வழக்கமாக நடக்கும் மேலடுக்கு சுழற்சியின் ஒரு பகுதிதான் தற்போது பெய்யும் மழைக்குக் காரணம் என்கிறார் அவர். இந்த வெப்பச்சலன மழை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெய்வதற்கும், கடந்த ஆண்டில் அதீத வெப்பம் இருந்தபோது, இந்த மழை பெய்யாததற்குமான காரணம் குறித்து கீதா லட்சுமி கூறுகையில், ''கடந்த ஆண்டில் அதீத வெப்பத்துக்கு இயற்கையான சில மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். வெப்பச்சலன மழையைப் பொருத்தவரை, இந்தப் பகுதியில்தான் பெய்யும் என்பதைக் கணிக்க முடியாது.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''பொதுவாக நீர்நிலைகள், கடல் உள்ள பகுதிகளில்தான் காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும். அதற்காக அதே பகுதியில் மழை பெய்யுமென்று கூற முடியாது. காற்று எந்த திசையில் அடிக்கிறது, அதன் வேகம் எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்தே மழை பெய்யும் இடத்தை இயற்கை தீர்மானிக்கிறது.'' என்றார். பிபிசி தமிழிடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான சத்தியமூர்த்தி, ''இந்த ஆண்டில் கொங்கு மண்டலத்தின் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது; அதற்கு மழை ஒரு காரணமாகவுள்ளது. ஆனால் இந்த மழை, வழக்கத்துக்கு மாறான நடைமுறையாகத் தெரிகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்தது வெப்பச்சலன மழையாக இருக்கலாம். ஆனால் கோவையில் ஒரே நாளில் 70 மி.மீ. மழை பெய்ததற்கு, வழக்கத்துக்கு மாறாக கோடையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தான் காரணம்.'' என்றார். ''கடந்த சில ஆண்டுகளாக கோவைக்கு 150 மில்லி மீட்டர் (15 செ.மீ.) வரை கோடை மழை பெய்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் இந்த அளவு பெய்ய வேண்டிய மழை, இப்போதே 102 மி.மீ. அளவுக்குப் பதிவாகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மேலே இருப்பதால் இந்த ஆண்டில் கோடை மழையின் அளவு மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கலாம்.'' என்றும் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார். சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய சத்தியமூர்த்தி, இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் 28 மில்லி மீட்டரும், ஏப்ரலில் 10 நாட்களுக்குள் 74 மில்லி மீட்டரும் மழை பெய்ததே வெப்பத்தின் தாக்கம் குறைந்ததற்குக் காரணம் என்கிறார். ''ஆனால் மே மாதத்தில் வெப்பத்தின் அளவு எப்படியிருக்குமென்பதை இப்போதுள்ள இயற்கைச் சூழ்நிலையை வைத்துக் கணிக்க முடியாது. மழை தொடர்ந்தால் வெப்பம் குறையும். மழை குறைந்து விட்டால் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோன்று தமிழகத்துக்கான தென்மேற்குப் பருவமழையையும் மே இரண்டாம் வாரத்தில்தான் கணிக்க முடியும்.'' என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2wxqjlz5zo
  9. வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதனால், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது. மறுபுறம், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வட கொரியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை புதுப்பிக்க விரும்புவதாகக் கூறிவருகிறாா். இதற்கு வட கொரியா இதுவரை பதிலளிக்காத நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கிம் ஜாங் உன் என தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த வாரம் நடத்திய மாநாட்டில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்க உறுதிபூண்டன. இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரியும் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிப்பவருமான கிம் யோ ஜாங், “வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று நினைப்பது வெறும் பகல் கனவு. அணு ஆயுத பலம் பெற வேண்டும் என்பது நாட்டின் அரசியல் சாசனத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடா்பாக பிற நாடுகள் ஆலோசிப்பது நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் ஆகும். வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதை இது நியாயப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316987
  10. 12 APR, 2025 | 01:30 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்கள் 10 - 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றமும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது சிறுவர்கள் பயத்தில் அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது. மாலை நான்கு மணி வரை மதிய உணவின்றி சிறுவர்களை பொலிஸார் பாடசாலையின் அறையில் அடைத்து வைத்ததையடுத்து, பெற்றோர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். “பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், எனவே அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு பொலிஸார் நடந்துகொள்ள வேண்டும்” என பொலிஸாருக்கு வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, சிறுவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பெற்றோர் இந்த பிரச்சினையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211887
  11. பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி 12 APR, 2025 | 10:31 AM முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211862
  12. யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு முக்கிய சாலை திறப்பு - அதில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 59 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீதியொன்று கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி பகுதியின் அச்சுவேலி முதல் பருத்தித்துறை வரையான வீதி, சுமார் 35 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி திறக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த பிரதேச மக்கள் வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM கட்டுப்பாடுகள் என்ன? பலாலி அதிவுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ராணுவ குடியிருப்பின் ஊடாக இந்த வீதி செல்வதாக அந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அந்த அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாளாந்தம் அதிகாலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே இந்த வீதி திறக்கப்பட்டிருக்கும். இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் மற்றும் திருப்புதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த வீதியில் நடைபயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அதிகூடிய வேகமாக 40 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM படக்குறிப்பு,இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீதியில் என்ன இருக்கின்றது? யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதி முழுமையாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு என அழைக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் காணிகளை ராணுவம் கையகப்படுத்தியிருந்தது. இவ்வாறு பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட ராணுவ பயன்பாட்டுக்கள் இடம்பெற்று வந்த பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில், கடந்த கால அரசாங்கங்கள் பல காணிகளை விடுவித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு முன்நகர்வாக இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை 35 வருடங்களின் பின்னர் இந்த வீதியூடாக பயணித்தவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அந்த வீதியின் தற்போதைய நிலைமை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டனர். இந்த வீதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள், ராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர். ''இந்த வீதி விடுவிக்கப்பட்டமைக்கு மக்களை பொருத்தவரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதேபோன்று எங்களுடைய காணிகளை சும்மா தான் வைத்திருக்கின்றார்கள். பலாலி மாத்திரமன்றி, வலிகாமம் வடக்கில் வசாவிலான், கட்டுவான், குரும்பசிட்டி, பலாலி, மயிலிட்டி, ஊரணி என்று சொல்லி ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றையும் விடுவித்து தர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.'' என வீதி திறப்பிற்காக வருகைத் தந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கின்றார். மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ''இந்த பிரதேசத்திலுள்ள ஏனைய விடயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்பட வேண்டியிருக்கின்றது. இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இவற்றோடு மக்களின் குடியிருப்பு காணிகள் இன்னும் விடுப்பட வேண்டியிருக்கின்றது, உடனடியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. படிப்படியாக இந்த தேவைகளை பூர்த்தி செய்து, மக்கள் சுபீட்சமாக சந்தோசமாக வாழ்வதற்காக ஏதுவான காரணிகளை செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்'' என இந்த இடத்திற்கு வருகைத் தந்த மதக்குரு ஒருவர் கோரிக்கை விடுத்தார். ''எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். எங்களுடைய நிலத்தில் நாங்கள் குடியேற வேண்டும். எங்களுடைய காணிகளில் நாங்கள் சாவதற்கு முன்னர் குடியேற வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக இருக்கின்றது. நான் செத்த பிறகு என்னுடைய பிள்ளைக்கு காணி தெரியாது. நான் வந்து காட்டினால் தான் காணி பிள்ளைக்கு தெரியும். எங்களுடைய காலத்தில் விடுவிக்கப்பட வேண்டும்'' என அந்த பிரதேசவாசி ஒருவர் குறிப்பிடுகின்றார். டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் ''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்ல'' இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட 'உயர் பாதுகாப்பு வலயம்' அல்ல. மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை இதனை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா? எனவும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?10 ஏப்ரல் 2025 நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,MOD SRI LANKA படக்குறிப்பு,நலின் ஹேரத் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டன - ராணுவம் பிபிசிக்கு தெரிவிப்பு யுத்தக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''ஏனைய காணிகளை நாங்கள் மீளாய்வுகளின் பின்னர் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூகோள ரீதியில் முக்கியத்துவமாக உள்ள காணிகளே விடுவிக்கப்படாது காணப்படுகின்றன. உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். முடியுமான காணிகளை நாங்கள் விரைவில் விடுவிப்போம். 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதிலுள்ள காணிகளை மீளாய்வு செய்து, ராணுவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டிய காணிகளை வைத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்து காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். '' என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy0yy4wqg2lo
  13. 12 APR, 2025 | 08:51 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர். ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் இலங்கையில் இடம்பெற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இவ்வாறானதொரு நிலையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211853
  14. மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்... இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள். பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார். "இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த வலி எனது ஆசைக்குத் தடையாக இருக்கிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விஷயத்தைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது" என்று கூறுகிறார் சூசன். மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்றதற்குப் பிறகு கழிக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹார்மோன் சுரக்கும் அளவு குறைவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்று போவதே மெனோபாஸ் எனப்படுகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு பெண்களால் குழந்தை பெற முடியாது. பெண்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதுதான் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதனால்தான் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இவர் பிரிட்டனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வியை மக்களிடையே ஊக்குவித்து வருகிறார். ஆனால் பெண்கள் உடலுறவு பற்றிப் பேசுவது இன்னும் பல கலாசாரங்களில் ஒரு தடையாக இருக்கிறது. "உடலுறவின்போது வலி ஏற்படுவது இயல்பானது என்று கருதும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் உடலுறவுகொள்ளும்போது ஓர் ஆணை மகிழ்விக்க இந்த வலியைத் தாங்கிக் கொள்வது தனது பொறுப்பு என்று நம்பும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இதுபோன்ற நம்பிக்கைகள் காரணமாகப் பல பெண்கள் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மருத்துவர்களிடம் வருவதைத் தவிர்த்து அமைதியாக அவதிப்படலாம் என்று மருத்துவர் அஸிசா கூறுகிறார். 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு8 ஏப்ரல் 2025 ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 ஹார்மோன்களும் மறைந்திருக்கும் அறிகுறிகளும் பட மூலாதாரம்,GETTY IMAGES உடலுறவு கொள்ள ஆசையைத் தூண்ட ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (இதையும் கருப்பைகள் சுரக்கின்றன) ஹார்மோன்கள் காரணமாக இருப்பதாக மருத்துவர் அஸிசா விளக்குகிறார். இந்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும்போது உடலுறவின் மீதான ஆசையில் மாற்றங்களை அனுபவிப்போம் என்கிறார் அவர். ஜெர்மனியில் வசிக்கும் ரோஸிக்கு 45 வயதாகிறது. அவரது 30 வயதில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கட்டாய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அனுபவித்த மாற்றங்கள் தீவிரமானவை என்று அவர் பிபிசியிடம் அவர் கூறினார். "எனக்கு உடலுறவு கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் திடீரென்று அந்த ஆசை போய்விட்டது. அதனால் என்னால் எந்த உடல் ரீதியான தூண்டுதலையும் அனுபவிக்க முடியவில்லை," என்றார். உடலுறவில் ஆசை குறைவது மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுவது ஆகிய இரு பிரச்னைகளுக்காகத்தான் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியாவில் மனநல மருத்துவராகவும் உடலுறவு சார்ந்த சிகிச்சையாளராகவும் பணியாற்றும் மருத்துவர் நசானின் மாலி. ''பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முடங்கிப் போகிறார்கள். பல பெண்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இல்லை. ஆனால், ஆணுறுப்பை தன்னுள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு இல்லாமல் போகிறது" என்று அவர் விவரிக்கிறார். ஆனால் பெண்ணுறுப்பில் வறட்சியோ, உடலுறவு கொள்வதில் ஆசை குறைவதோ மட்டும் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதற்குக் காரணமாக இருப்பதில்லை. பிரிட்டனில் வசிக்கும் 49 வயதான யாஸுக்கு தொடர்ந்து சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது அவருக்கு உடலுறவு மீதான ஆசை குறையக் காரணமாக இருந்தது. ''ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும், அதன் பிறகு மிகவும் வலி மிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உடலுறவு கொள்வதில் எனக்கு சுத்தமாக ஆசை இல்லை. இந்தப் பிரச்னை மெனோபாஸுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கண்டறியவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதன் விளைவாக சிறுநீர்ப் பாதையில் தோற்றுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் ஸெஸே தெரிவிக்கிறார். "ஈஸ்ட்ரோஜன் வெறும் மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த ஒன்று என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்ட்ரோஜன் என்பது நமது உடல் முழுவதும் செயல்படும் ஓர் அற்புதமான ஹார்மோன்". "பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் குழாயை வழுவழுப்புத் தன்மையுடன் வைத்திருக்க உதவுவது ஈஸ்ட்ரோஜன்தான். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது , சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள திசுக்களை மெல்லியதாகவும், வறண்டதாகவும் மாற்றி நோய்தொற்றுக்கு ஆளாக்குகிறது" என்று அவர் விவரிக்கிறார். பல கலாசாரங்களில் பெண்கள் உடலுறவு கொள்வது என்பது இனப்பெருக்கத்தோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலுறவு கொள்வது நின்றுவிடும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது. பெண்களின் இளமைக்காக அவர்களை மதிப்பது என்பது அவர்கள் வாழ்வின் இந்தக் காலகட்டத்தைக் கடினமாக்கிவிடும் என்று கூறும் மருத்துவர் மாலி, "சில பெண்களுக்கு இது கஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கலாம்" என்கிறார். ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு தங்கள் வாழ்க்கையின் சிறந்த உடலுறவை வைத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்?8 ஏப்ரல் 2025 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற பல லட்சம் ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?8 ஏப்ரல் 2025 என்ன சிகிச்சைகள் இருக்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) மாத்திரைகள், பேட்ச்கள், ஜெல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. "மெனோபாஸ் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. பெண்கள் உடலுறவு கொள்ளவும், கூடுதல் இன்பத்தை அனுபவிக்கவும் பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத தீர்வுகள் இருக்கின்றன" என்று மருத்துவர் மாலி கூறுகிறார். லண்டனில் வசிக்கும் ஹால்டிடாவுக்கு 65 வயதாகிறது. அவரது மெனோபாஸ் காலகட்டத்தை ஒட்டி அவருக்கு விவாகரத்து ஆனதால், அதன் பிறகுதான் அவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக மாறத் தொடங்கியது. "எனக்கு 43 வயதானபோது எனக்கு விவாகரத்தானது. எனது 45-46 வயதில் பெரிமெனோபாஸ் காலகட்டம் தொடங்கியது. அதன் பிறகுதான் நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளத் தொடங்கினேன். நான் சந்தோஷமாக உணர்ந்தேன். ஒருவழியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டுவதற்கான வழிமுறையைப் பற்றிப் பேசும் மருத்துவர் மாலி, "உடலுறவு குறித்த உங்களது எண்ணத்தை மறுமதிப்பீடு செய்யுங்கள்" என்று கூறுகிறார். "நம் எல்லாருக்குமே உடலுறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான உடலுறவு எப்படி இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கும். ஆனால் நம் உடலில் மாற்றம் ஏற்படும்போது, அதற்குத் தகுந்தாற்போல் நமது எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உடலுறவு என்றால் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?" என்று அவர் கூறுகிறார். ஃபோர்ப்ளே மற்றும் ஆணுறுப்பை உள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளாமல் பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் வழிகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார். "பெண்ணுறுப்பின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் உணர்திறன் குறையலாம். அதனால் வைப்ரேட்டர் போன்ற பாலியல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார். மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றால், "மருத்துவ உதவியை நாடுங்கள், தேவைப்பட்டால் மருத்துவரை மாற்றுங்கள், மனம் தளரவேண்டாம், இதைக் கண்டு கூச்சமடையவும் வேண்டாம்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) முதலில் வழங்கப்படும். அவை மாத்திரைகள், ஜெல், ஒட்டக்கூடிய பேட்ச்கள் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. சிலரால் ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை கலக்கும் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சிலருக்கு பெண்ணுறுப்பில் நேரடியாக பூசிப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளும் இருக்கின்றன" என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார். நியூசிலாந்தில் வசிக்கும் நெடா, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. "எனது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த எனக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வேண்டும் என்று கேட்டபோது பெண்ணுறுப்பில் பூசும் க்ரீம் எனக்குத் தரப்பட்டது. எனக்கு மிக மோசமான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் எனது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என்கிறார் அவர். கடைகளில் கிடைக்கும் லூப்ரிக்கன்ட்கள் மற்றும் பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் மாய்ஷரைஸர்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஸெஸே. இடுப்பு தசைகளில் (pelvic muscles) வலு குறைந்தவர்கள் அதற்காக இருக்கும் ஃபிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். ஆனால் மாதவிடாய் நின்றாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, புகை பிடிக்காமல் இருப்பது, உடல் எடையைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார். "நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை கொள்வது சுயநலமான விஷயமல்ல. உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒரு சூப்பர்வுமன் என்று நினைத்துக்கொண்டு பல விஷயங்களை நம்மீது போட்டுக்கொள்கிறோம். உதவி கேட்பதில்லை என்பதே முக்கியப் பிரச்னை. உதவி கேளுங்கள். உதவி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறொருவர் தாமாக உதவி செய்ய முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c87p15131plo
  15. Published By: VISHNU 12 APR, 2025 | 01:37 AM மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கலாசாரங்களை கொண்டுள்ளது. இதனை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பங்களிப்பை வழங்குவோம். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைத்தீவு மண்ணில் சுமார் 80 ஆயிரம் பேர் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று சுமார் 10500 பேர் மாத்திரமே வாழ்கிறார்கள். இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். சரியான வசதிகளும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக இப்பிரதேசத்தை மேம்படுத்த முடியும். ஆகவே உரிமம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நாம் வழங்குவோம். தென்பகுதியில் உள்ள மக்கள் இப்பகுதி மக்களை நேசிக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முகங்கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, சுகாதாரம்; மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய பல துறைகளில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வைப்பெற்றுக்கொடுப்போம். 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தனர். ஊழல் அற்ற அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். அதைப்போன்று பாராளுமன்ற அதிகாரத்தை முழுமையாக எமக்களித்தார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் இன, மத விடயங்களுக்கு அப்பாற்பட்டு திறமையான மற்றும் ஊழலற்;றவர்களை தெரிவு செய்ய வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். ஸ்திரமான நிலையில் இருந்து கொண்டு தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அரச சேவையானது நாட்டு மக்களுக்கு வினைத்திறனதாக அமைய வேண்டும். அதற்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரசசேவை தற்போது சுயாதீனமாக இடம்பெறுகிறது. மாகாணசபைத்தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு என்றும் முன்னுரிமையளிப்போம். இந்த மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும்; கண்டுள்ளது. அதனை ஆற்றுப்படுவதற்கான பொறுப்பு எமக்குண்டு. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என்றார். https://www.virakesari.lk/article/211850
  16. 12 APR, 2025 | 09:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார். https://www.virakesari.lk/article/211855
  17. நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஏப்ரல் 2025, 02:36 GMT சிஎஸ்கே அணியின் நேற்றைய பேட்டிங் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரையும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்பதால் கூடுதல் உற்சாகத்தோடு வந்திருந்த ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது. 104 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 20 ரன்களுக்குள் 7 விக்கெட் சிஎஸ்கே அணியில் டேவன் கான்வே(12), திரிபாதி(16), விஜய் சங்கர்(29), துபே(31) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தனர். 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 20 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் பேட்டிங்கை மறந்தவாறு பேட்டர்கள் ஆடியது போல் தெரிந்தது. விஜய் சங்கர் களத்துக்கு வந்தவுடனே டக்அவுட்டில் ஆட்டமிழக்க வேண்டியவர் ஆனால் வெங்கடேஷ் கேட்சை நழுவவிட்டதால் தப்பித்தார். விஜய் சங்கர் போராடியும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியின் ஒரே பிக்ஹிட்டர் என்று அறியப்படும் ஷிவம் துபே நேற்றைய ஆட்டத்தில் களத்துக்கு வந்து 17 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் முதல் பவுண்டரி, சிக்ஸரை அடித்தார். பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத வீரர்களான திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, கான்வே ஆகியோரை அணியில் சேர்த்து தோல்விக்கு மேல் தோல்வியை சிஎஸ்கே சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேயின் பேட்டிங் திறமை, திறன் என்ன என்பதை கொல்கத்தா அணி வெளிப்படுத்தி(எக்ஸ்போஸ்) செய்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு இன்னமும் ஆபத்தாக அமையப்போகிறது. வரும் ஆட்டங்களில் சிஎஸ்கேயின் பலவீனத்தை மற்ற அணிகள் இன்னும் ஆழமாகப் பயன்படுத்தப் போகின்றன. வந்தார், சென்றார் தோனி சிஎஸ்கே அணியில் விக்கெட்டுகள் மளமள சரிந்தநிலையில்கூட தோனி 8-வது விக்கெட்டுக்குதான் களமிறங்கினார். சிஎஸ்கே அணி டாப்ஆர்டர்களை இழந்தவுடனே தோனி களமிறங்கி இருந்தால், ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை கொண்டு வந்திருக்லாம். ஆனால், தொடர்ந்து தோனி ஏன் கடைசி வரிசையில் களமிறங்குவது புரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் நரைன் பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரு பவுண்டரிகூட அடித்தது இல்லை. அதனை உணர்ந்து, கேகேஆர் அணி நரைனையே தோனிக்கு எதிராகப் பந்துவீச வைத்தது. அதற்கு ஏற்றபடி தோனி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். தோனி கால்காப்பில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. தோனி களத்துக்கு வந்த வேகத்தில் 4 பந்துகளில் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். ஒரு பவுண்டரிக்காக காத்திருந்த ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே பேட்டர்கள் நேற்று பவுண்டரி அடிக்கும் திறமையை மறந்துவிட்டதுபோல் பேட் செய்தனர். 8வது ஓவருக்குப் பின் சிஎஸ்கே அணி அடுத்த பவுண்டரியை அடிக்க 63 பந்துகளை எடுத்துக்கொண்டது. 18.3 ஓவரில்தான் அடுத்த பவுண்டரியை ஷிவம் துபே அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பவுண்டரி அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 3வது அணியாக சிஎஸ்கே மாறியது. இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட தீபக் ஹூடா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமல் நரைன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தமே 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. பேட்டிங் கற்றுக்கொடுத்த கொல்கத்தா பட மூலாதாரம்,GETTY IMAGES எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், டீகாக் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை நொறுக்கித்தள்ளினர். சிக்ஸர் எப்படி அடிக்க வேண்டும் என்று சிஎஸ்கே பேட்டர்களுக்கு பாடம் எடுப்பது போன்று விளாசித்தள்ளினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ஆட்டத்தையே கொல்கத்தா அணி முடித்துவிட்டது. டீகாக் 21 ரன்னில் 3 சிக்ஸர்களுடன் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 5 சிக்ஸர்கள் உள்பட 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஹானே(20) ரிங்கு சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கம் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் முதல்முறையாக ஒரு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. அத்துடன், ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கேவை சிதைத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை கொல்கத்தா அணியின் சுனில் நரைன், மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்துவீ்ச்சாளர்களும் சிதைத்துவிட்டனர். சிஎஸ்கே அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது ஆகியோர் இருந்த போதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மொயின் அலி, சுனில் நரைன், வருண் ஆகியோர் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 34 டாட் பந்துகள் அடங்கும். அதாவது 12 ஓவர்களில் ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்கள். இதில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடவில்லை. ஐபிஎல் தொடரில் 16-வது முறையாக சுனில் நரைன் 4 ஓவர்களை முழுமையாக வீசி எதிரணியை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளார். சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி எடுத்து மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை சிஎஸ்கே அணி இதைவிட மோசமாக ஸ்கோர்களை எடுத்துள்ளது. அந்த வகையில் 103 ரன்கள் என்பது 3வது மோசமான ஸ்கோராகும். இதற்கு முன் 2013ல் மும்பையிடம் 79 ரன்களிலும், 2022ல் மும்பையிடம் 97 ரன்களுக்கும் சிஎஸ்கே ஆல்அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது, முதல்முறையாகவும் இந்த சீசனிலும் தொடர்ந்து 5வது தோல்வியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் 3வது முறையாக சிஎஸ்கே தோற்றுள்ளது. கொல்கத்தா அணியும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 2வது அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக 60 பந்துகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான் ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2020ம் ஆண்டில் 46 பந்துகள் மீதமிருக்கையில் சிஎஸ்கே தோற்றிருந்தது. 3வது முறை 10 ஓவர்களில் சேஸிங் ஐபிஎல் வரலாற்றில் எதிரணி அடித்த ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் சேஸிங் செய்த ஆட்டங்கள் 3வதுமுறையாக நடந்துள்ளன. இதற்கு முன் 2021ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 90 ரன்களை 8.2 ஓவர்களில் மும்பை அணி சேஸ் செய்தது. 2024 சீசனில் லக்னெள அணியின் 165 ரன்களை சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் சேஸ் செய்தது. இப்போது சிஎஸ்கேயின் 103 ரன்களை 10.1 ஓவர்களில் கொல்கத்தா சேஸ் செய்துள்ளது. கொல்கத்தாவுக்கு சாதகமான மைதானம் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கருப்பு மண் கொண்ட மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மண் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது கிடைக்கும் சவுகரியத்தை கொல்கத்தா அணி நேற்று பெற்றது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா இருவரும் மிகத்துல்லியமான லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை நடுங்க வைத்தனர். சிவப்பு மண் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டரை நோக்கி வரும் அப்போது அடித்து ஆட வசதியாக இருக்கும். ஆனால், கருப்பு மண் அதாவது களிமண் ஆடுகளத்தில் பந்து சற்று நின்று பேட்டரை நோக்கி மெதுவாக வரும். இத்தகைய சூழலில் பேட்டர் ஆங்கர் ரோல் எடுத்து, சற்று நிதானமாக ஷாட்களை அடிக்க வேண்டும். பந்து வரும்வேகத்தைவிட பேட்டை சுழற்றினால் விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த மைதானத்தின் தன்மையைத்தான் கொல்கத்தா கேப்டன் ரஹானே தெரிந்து கொண்டு அதுகுறித்து எதுவும் பேசவில்லை மைதானத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் 2வது ஓவரிலேயே மொயின் அலியை இடதுகை பேட்டர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார். அதற்கு ஏற்றார்போல் தடுமாறிய கான்வே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா காலியானார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின், ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியைத் தவிர்த்து அதன்பின் 5 போட்டிகளாக அஸ்வின் தனது பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த ஆட்டத்தி்கூடஅஸ்வின் ஓவருக்கு 10 ரன்ரேட்டில் வீசினார். 2012 முதல் 2015வரை அஸ்வின், ஜடேஜாவும் சேர்ந்து தலா 55 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக எடுத்தனர். சேப்பாக்கத்தை சிஎஸ்கேவின் கோட்டையாக வைத்திருந்தனர். இப்போது இருவரும் மீண்டும் இணைந்தபோதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில் அஸ்வின் இதுவரை ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கொடுத்திருந்தநிலையில் ஜடேஜா 8 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை அஸ்வின் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட அஸ்வின் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் 30 பந்துகள் வீசி 78 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 2012 முதல் 2015 வரை அஸ்வினின் பவர்ப்ளே எக்னாமி ரேட் 6.25 ஆக இருந்தநிலையில் தற்போது 15.60 அதிகரித்துள்ளது. "யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை" தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சில போட்டிகள் நாங்கள் விரும்பியபடிஇல்லை. அணியின் தோல்வியை ஆழமாக ஆலோசிக்க, ஆய்வு செய்ய வேண்டும். சவால்கள் இருக்கின்றன அதை சமாளிப்பது அவசியம். இன்று எதிர்பார்த்த ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. பந்து களத்தில் நின்று வந்தது, 2வது இன்னிங்ஸிலும் அப்படித்தான் இருந்தது. பார்ட்னர்ஷிப்பும் எங்களுக்கு அமையவில்லை. எங்கள் ஆட்டத்தை மற்ற அணியுடன் ஒப்பிட்டு பார்க்கவிரும்பவில்லை. எங்களிடமும் தரமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அடிக்கடி ஸ்கோர் போர்டைப் பார்த்து வெறுப்படையக்கூடாது. சில பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் நகர்ந்துவிடும். நடுப்பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த தொய்வு ஒருபோதும் வரக்கூடாது" எனத் தெரிவித்தார். நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததைச் செய்த சிஎஸ்கே சிஎஸ்கே அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஒரு ஆறுதலான அம்சம் நடந்துள்ளது. அதுஎன்னவென்றால், இந்த ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் ஒரு அணியால் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்ததில். சிஎஸ்கே அணி நேற்று 61 டாட் பந்துகளை சந்தித்து, ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள் வீதம் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்தது. இந்த சீசனில் இதுவரை எந்த அணியும் இதுபோல் டாட்பந்துகளை ஒரு போட்டியில் விட்டதில்லை. இன்றைய ஆட்டங்கள் முதல் ஆட்டம் லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் இடம்: லக்னெள நேரம்: மாலை 3.30 இரண்டாவது ஆட்டம் சன்ரைசர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 நேரம்- இரவு 7.30 இடம் – லக்னெள மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 நேரம்- இரவு 7.30 மணி இடம் – டெல்லி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – ஜெய்பூர் நேரம்- மாலை 3.30 மணி பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-288 ரன்கள்(5போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-273 ரன்கள்(5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) சாய் கிஷோர்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்) முகமது சிராஜ்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jx5yz1nn3o
  18. Published By: RAJEEBAN 08 APR, 2025 | 11:15 AM தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார். அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின் பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா. இது பழங்குடி இனமக்களிற்கு தன்னை ஒரு தேசமாக காட்டிக்கொண்டாலும், எந்த நாட்டாலும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை, ஐநாவும் இதனை அங்கீகரிக்கவில்லை. தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும், பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு அறிவித்துக்கொண்ட, நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார். ஈக்குவடோர், பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், (அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது) இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. செப்டம்பர் - நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர். நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை. அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி. அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார். கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.' இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும். https://www.virakesari.lk/article/211454
  19. Chennai Super Kings 103/9 Kolkata Knight Riders (6/20 ov, T:104) 71/1 KKR need 33 runs in 84 balls. Current RR: 11.83 • Required RR: 2.35 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability:KKR 99.41% • CSK 0.59%
  20. Published By: RAJEEBAN 11 APR, 2025 | 03:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நான் வெள்ளை மாளிகைக்கு எழுதப்போகின்றேன் மக்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி உலகின் மிகப்பெரிய சந்தையை தனக்கு சாதகமாக கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் நிதிசேவை குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பங்குசந்தை இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களில் டொனால்ட் டிரம்ப் இது பங்குகளை கொள்வனவு செய்வதற்கான தருணம் என தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னரே அவர் உலக நாடுகளிற்கான தனது புதிய வரியை 90 நாட்களிற்கு ஒத்திவைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். டிரம்ப் தனது சமூகஊடகமான ட்ரூத்சோசியல் பதிவில் டிஜிடி என்ற எழுத்துக்களுடன் கையெழுத்திட்டிருந்தார். இது அவரது முதல் எழுத்து என்பதுன் அவரது ஊடக நிறுவனமான டிரம்ப் மீடியா டெக்னோலஜி என்பதன் சுருக்கமாகும். இதேவேளை விசாரணைக்கான தேவை உள்ளதாக ஒழுக்ககோவை தொடர்பான வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி ரிச்சட்பெயின்டர் தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதிகள் முதலீட்டு ஆலோசகர்கள் இல்லை என தெரிவித்துள்ள அவர், இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி சந்தையை தனக்கு சார்பாக கையாளும் குற்றச்சாட்டிற்கு ஆளாகநேரிடும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோல்ஸ்ரீட்டில் தனக்கு நிதி வழங்குபவர்களிற்கு நன்மையளிக்கும் விதத்தில் பங்குசந்தையை பயன்படுத்த முயன்றாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என அமெரிக்க செனெட்டர் எலிசபெத் வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிரம்ப் தனது வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் மூலம் தனக்கு சார்பானவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு உதவினாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது குற்றச்செயல் போல் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211809
  21. மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை ; அரசாங்கங்களிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை ; சதொச மனித புதைகுழி அகழ்வு சட்டமா அதிபரின் தலையீட்டால் பாதிக்கப்பட்டது - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் Published By: RAJEEBAN 11 APR, 2025 | 05:26 PM ரஜீவன் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது : பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் மிகவும் பாரதூரமானது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர், நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இறுதி முடிவொன்று இல்லாததால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த துயரத்தை அனுபவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தங்கள் இறுதிநாட்கள் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் துயரத்தை அனுபவிக்கின்றனர். செம்மணி, வந்தாறுமூலை, மன்னார் சதொச, கொக்குத்தொடுவாய் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீண்டும் சமீபத்தில் மாநகரசபையினர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவேளை அதற்காக தோன்றியவேளை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. செம்மணியில் புதிதாக மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெற உள்ளன. எனினும் இதற்கான நிதி இன்னமும் ஒதுக்கப்படவில்லை. மனித புதைகுழிகளை அரசாங்கம் உரிய முறையில் கையாளவில்லை. இந்த விடயத்தில் முற்றிலும் அரசியல்உறுதிப்பாடு அற்ற நிலையே நிலவுகின்றது. பொலிஸாரும் உரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது அதற்கான ஆட்களை ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் உள்ளன. மனித புதைகுழி அகழப்படும் விடயத்திற்கு பல நிபுணர்கள் தேவை - ஒருங்கிணைத்து செயற்படவேண்டும், எங்கள் நாட்டை பொறுத்தவரை இது புதிய விடயம். ஆர்ஜென்டீனா, சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளை தோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர். மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது. ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை. மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் தலையீட்டால் முடங்கின. இது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அங்கு அகழ்வுதான் இடம்பெற்றதே தவிர குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை. ஆகவே அது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அவரின் தலையீட்டால் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டது. சதொச மனித புதைகுழி அகழ்வின் போது சம்மந்தப்பட்ட தரப்புகள் சட்டமா அதிபரை உள்ளே கொண்டுவந்தன. அரசாங்கம் மனித புதைகுழிகள் தோண்டப்படுவதை குழப்புவதற்கு பல வழிமுறைகளை கையாளும், நிதியை விலக்கிக்கொள்வதன் மூலம் அகழ்வை குழப்பும். அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நிதி இல்லை என தெரிவிப்பார்கள். ருவாண்டா, சிலி போன்ற நாடுகளில் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு அரசாங்கங்கள் நிதியை வழங்கின. ஆனால் இங்கு அரசாங்கங்கள் வெளிநாடு நிதியை கூட தடுக்கின்றன, இதுதான் எங்களின் அனுபவம். அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளை குழப்பும்போது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். நாங்கள் மீண்டும் அவர்களிடம் செல்லும்போது என்ன பிரயோசனம் என கேட்கின்றார்கள், ஆனாலும் ஒத்துழைப்பைவழங்குகின்றார்கள். மீட்கப்படும் மனித எச்சங்கள் எந்த காலத்தை என்பதை அறிவதற்காக ஆய்வுகூடங்களிற்கு அனுப்பவேண்டும், வெளிநாட்டு ஆய்வு கூடங்களிற்கே அவற்றை அனுப்பவேண்டும். ஆனால் அரசாங்கம் நிதி வழங்க மறுக்கின்றது. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்கள் என கருதப்படும் 42 உடல்களை மீட்டுள்ளோம். செம்மணியில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் கருதுகின்றனர். கைதுசெய்யப்பட்ட 600 பேரின் பெயர் விபரங்கள் அவர்களிடம் உள்ளன. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். இது மிகவும் கடினமான பணி ஆனால் எவ்வளவு தூரத்திற்கு இந்த அகழ்வு பணியை சிறப்பாக முன்னெடுக்கமுடியுமோ அவ்வளவு தூரம் முன்னெடுக்கின்றோம். மிகமிக முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கங்களிடம் இது தொடர்பில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதே, எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் 100 வீத ஆதரவை வழங்க தயாரில்லை, சந்திரிகா அரசாங்கமாகயிருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமாகயிருந்தாலும் சரி. https://www.virakesari.lk/article/211836
  22. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக நான் தயார் - ரணில் 11 APR, 2025 | 03:51 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆஜராகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை (10) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பல விடயங்களை அறிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211814
  23. 25th Match (N), Chennai, April 11, 2025, Indian Premier League KKR chose to field. Chennai Super Kings (19.6/20 ov) 103/9 Current RR: 5.15 • Last 5 ov (RR): 29/2 (5.80) Kolkata Knight Riders
  24. பட மூலாதாரம்,X 11 ஏப்ரல் 2025, 10:31 GMT 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியை சென்னையில் அமித் ஷா அறிவித்துள்ளர். கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வெள்ளிக்கிழமையன்று மாலை அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமித் ஷா, " பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,X எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளித்தார். "சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையுமா" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது. அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்" எனக் கூறினார். "வெற்றி பெற்றால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஆவார்களா?" எனக் கேட்டபோது, "வெற்றி பெற்ற பிறகு அதற்கான பதிலைக் கூறுகிறோம். தற்போது இதுபோன்ற எந்தக் குழப்பத்துக்கும் ஆளாக்க விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு கூறுகிறோம்" எனத் தெரிவித்தார். "கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இருந்து நிபந்தனைகள் எதாவது விதிக்கப்பட்டதா?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "எந்தவிதமான நிபந்தனையும் அ.தி.மு.க தரப்பில் இருந்து வைக்கவில்லை. இது இயல்பான கூட்டணி" எனக் கூறினார். "கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்களா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, "அ.தி.மு.கவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப் போவதில்லை. தேர்தல் விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம்" எனக் குறிப்பிட்டார். செய்தியாளர் ஒருவர்,"மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, "இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில தலைவராக என் பக்கத்தில் தான் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்" எனக் கூறினார். திமுக மீது விமர்சனம் "நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பாஜக இதற்கு எதிராக உள்ளபோது மக்களை எவ்வாறு அணுக முடியும்?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே தி.,மு.க இதைப் பயன்படுத்துகிறது" என அமித் ஷா கூறினார். தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்த அமித் ஷா, "சில முக்கிய பிரச்னைகளை தி.மு.க எழுப்பி வருகிறது. ஊழல்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே சனாதன தர்மம், தொகுதி மறுவரையறை, மும்மொழி விவகாரம் ஆகியவற்றை தி.மு.க பேசுகிறது" எனக் கூறினார். "தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கும்போது அவர்கள் உண்மையிலேயே என்ன மாதிரியான துன்பத்தில் அவதிப்படுகிறார்களோ, அதைப் பிரசாரத்தில் கொண்டு செல்வோம். தி.மு.க-வை போல மக்களை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்? முன்னதாக தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டும் வேட்புமனு பெறப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,''தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அண்ணாமலை செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் கட்சியின் திட்டங்களை கிராமம், கிராமமாக கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது'' எனத் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்புரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளும் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாளை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தலைவர் அறிவிப்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்கரவர்த்தி தெரிவித்தார். அண்ணாமலை மாநில தலைவராக இருப்பது தமிழக பாஜகவுக்கு பலமா? பலவீனமா?17 ஜூன் 2023 கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMITSHAH படக்குறிப்பு,சென்னை வந்துள்ள அமித் ஷா, மறைந்த குமரி ஆனந்தன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார் 10 ஆண்டுகள் விதி தளர்த்தப்பட்டதா? தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சக்கரவர்த்தி வியாழக்கிழமையன்று அறிவித்தார். தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் எனவும் சக்கரவர்த்தி கூறியிருந்தார். அதன்படி, தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள், பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 'புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படலாம்' என பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், நயினார் நாகேந்திரன் 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார், 2025ஆம் ஆண்டில் பாஜக உறுப்பினாராக 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. எனவே 'அவரால் தலைவர் பதவிக்கு அவரால் போட்டியிட முடியுமா?' என்ற விவாதம் எழுந்தது. இந்த நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். 10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர். பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் உள்பட உயர் பொறுப்புகளில் திருநாவுக்கரசர் நியமிக்கப்படும் போது அவருக்குக் கட்சிப் பணியில் 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை எனவும் எஸ்.ஆர்.சேகர் குறிப்பிட்டார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6jr21gwlo
  25. தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் (Kurunegala) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.04.2025) இடம்பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “1994 ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கியது. பட்டலந்த விவகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தரப்பினர் சித்திரவதைக்காரர் என்று குற்றம்சாட்டுகின்றார்கள் ஆனால் 2015 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கினார்கள். 1994 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி பட்டலந்த விவகாரம் மற்றும் விஜயவீர படுகொலை பற்றி பேசவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு பட்டலந்த விவகாரத்தை குறிப்பிடாமலிருந்தால் இன்று இந்த விடயத்தை எவரும் பேசியிருக்கமாட்டார்கள். மனித படுகொலைகள் இரண்டு பக்கத்திலும் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. கட்சியை தடை செய்ததால் ஆயுதமேந்தியதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதனை ஏற்க முடியாது. ஏனெனில் அக்காலப்பகுதியில் கம்யூனிசக் கட்சி, மாணவர் சங்கம் உட்பட பல கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவ்வாறாயின் அவர்களும் ஆயுதமேந்தியிருக்க வேண்டும் , 1971 ஆம் ஆண்டு ஆயுதமேந்தியதற்கான காரணம் என்ன? ஆகவே உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம். 1979 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டது. 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்க போராட்டத்துக்கு எதிராக சோமபால சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். 1980 ஜூலை கலவரம் தோற்றம் பெற்றது. இவ்வாறான பின்னணியில் தான் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி பொது மக்களையும் தமது கட்சி உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. ரோஹண விஜயவீர விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது. 1988 காலப்பகுதிகளிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் சுமார் 64 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.மறுபுறம் சொத்துக்களை அழித்தீர்கள். விடுதலைப் புலிகள் நூலகத்துக்கு தீ வைக்கவில்லை. அவர்கள் தமது மக்களுக்கு சிறந்த முறையில் கற்பித்தார்கள். விடுதலை புலிகள் பாடசாலை, பல்கலைக்கழகங்களை, தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கவில்லை. இராணுவத்துக்கு எதிராகவே செயற்பட்டார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தீ க்கிரையாக்கியது . ஆகவே கடந்த காலத்தை மறந்து விட்டு தூய்மையானவர்களை போல் பேசக்கூடாது” என்றார். https://ibctamil.com/article/mp-dayasiri-jayasekara-parliament-speech-1744361828#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.