Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 12 APR, 2025 | 09:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார். https://www.virakesari.lk/article/211855
  2. நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஏப்ரல் 2025, 02:36 GMT சிஎஸ்கே அணியின் நேற்றைய பேட்டிங் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரையும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்பதால் கூடுதல் உற்சாகத்தோடு வந்திருந்த ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது. 104 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 20 ரன்களுக்குள் 7 விக்கெட் சிஎஸ்கே அணியில் டேவன் கான்வே(12), திரிபாதி(16), விஜய் சங்கர்(29), துபே(31) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தனர். 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 20 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் பேட்டிங்கை மறந்தவாறு பேட்டர்கள் ஆடியது போல் தெரிந்தது. விஜய் சங்கர் களத்துக்கு வந்தவுடனே டக்அவுட்டில் ஆட்டமிழக்க வேண்டியவர் ஆனால் வெங்கடேஷ் கேட்சை நழுவவிட்டதால் தப்பித்தார். விஜய் சங்கர் போராடியும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியின் ஒரே பிக்ஹிட்டர் என்று அறியப்படும் ஷிவம் துபே நேற்றைய ஆட்டத்தில் களத்துக்கு வந்து 17 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் முதல் பவுண்டரி, சிக்ஸரை அடித்தார். பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத வீரர்களான திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, கான்வே ஆகியோரை அணியில் சேர்த்து தோல்விக்கு மேல் தோல்வியை சிஎஸ்கே சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேயின் பேட்டிங் திறமை, திறன் என்ன என்பதை கொல்கத்தா அணி வெளிப்படுத்தி(எக்ஸ்போஸ்) செய்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு இன்னமும் ஆபத்தாக அமையப்போகிறது. வரும் ஆட்டங்களில் சிஎஸ்கேயின் பலவீனத்தை மற்ற அணிகள் இன்னும் ஆழமாகப் பயன்படுத்தப் போகின்றன. வந்தார், சென்றார் தோனி சிஎஸ்கே அணியில் விக்கெட்டுகள் மளமள சரிந்தநிலையில்கூட தோனி 8-வது விக்கெட்டுக்குதான் களமிறங்கினார். சிஎஸ்கே அணி டாப்ஆர்டர்களை இழந்தவுடனே தோனி களமிறங்கி இருந்தால், ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை கொண்டு வந்திருக்லாம். ஆனால், தொடர்ந்து தோனி ஏன் கடைசி வரிசையில் களமிறங்குவது புரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் நரைன் பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரு பவுண்டரிகூட அடித்தது இல்லை. அதனை உணர்ந்து, கேகேஆர் அணி நரைனையே தோனிக்கு எதிராகப் பந்துவீச வைத்தது. அதற்கு ஏற்றபடி தோனி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். தோனி கால்காப்பில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. தோனி களத்துக்கு வந்த வேகத்தில் 4 பந்துகளில் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். ஒரு பவுண்டரிக்காக காத்திருந்த ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே பேட்டர்கள் நேற்று பவுண்டரி அடிக்கும் திறமையை மறந்துவிட்டதுபோல் பேட் செய்தனர். 8வது ஓவருக்குப் பின் சிஎஸ்கே அணி அடுத்த பவுண்டரியை அடிக்க 63 பந்துகளை எடுத்துக்கொண்டது. 18.3 ஓவரில்தான் அடுத்த பவுண்டரியை ஷிவம் துபே அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பவுண்டரி அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 3வது அணியாக சிஎஸ்கே மாறியது. இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட தீபக் ஹூடா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமல் நரைன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தமே 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. பேட்டிங் கற்றுக்கொடுத்த கொல்கத்தா பட மூலாதாரம்,GETTY IMAGES எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், டீகாக் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை நொறுக்கித்தள்ளினர். சிக்ஸர் எப்படி அடிக்க வேண்டும் என்று சிஎஸ்கே பேட்டர்களுக்கு பாடம் எடுப்பது போன்று விளாசித்தள்ளினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ஆட்டத்தையே கொல்கத்தா அணி முடித்துவிட்டது. டீகாக் 21 ரன்னில் 3 சிக்ஸர்களுடன் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 5 சிக்ஸர்கள் உள்பட 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஹானே(20) ரிங்கு சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கம் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் முதல்முறையாக ஒரு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. அத்துடன், ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கேவை சிதைத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை கொல்கத்தா அணியின் சுனில் நரைன், மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்துவீ்ச்சாளர்களும் சிதைத்துவிட்டனர். சிஎஸ்கே அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது ஆகியோர் இருந்த போதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மொயின் அலி, சுனில் நரைன், வருண் ஆகியோர் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 34 டாட் பந்துகள் அடங்கும். அதாவது 12 ஓவர்களில் ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்கள். இதில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடவில்லை. ஐபிஎல் தொடரில் 16-வது முறையாக சுனில் நரைன் 4 ஓவர்களை முழுமையாக வீசி எதிரணியை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளார். சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி எடுத்து மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை சிஎஸ்கே அணி இதைவிட மோசமாக ஸ்கோர்களை எடுத்துள்ளது. அந்த வகையில் 103 ரன்கள் என்பது 3வது மோசமான ஸ்கோராகும். இதற்கு முன் 2013ல் மும்பையிடம் 79 ரன்களிலும், 2022ல் மும்பையிடம் 97 ரன்களுக்கும் சிஎஸ்கே ஆல்அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது, முதல்முறையாகவும் இந்த சீசனிலும் தொடர்ந்து 5வது தோல்வியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் 3வது முறையாக சிஎஸ்கே தோற்றுள்ளது. கொல்கத்தா அணியும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 2வது அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக 60 பந்துகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான் ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2020ம் ஆண்டில் 46 பந்துகள் மீதமிருக்கையில் சிஎஸ்கே தோற்றிருந்தது. 3வது முறை 10 ஓவர்களில் சேஸிங் ஐபிஎல் வரலாற்றில் எதிரணி அடித்த ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் சேஸிங் செய்த ஆட்டங்கள் 3வதுமுறையாக நடந்துள்ளன. இதற்கு முன் 2021ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 90 ரன்களை 8.2 ஓவர்களில் மும்பை அணி சேஸ் செய்தது. 2024 சீசனில் லக்னெள அணியின் 165 ரன்களை சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் சேஸ் செய்தது. இப்போது சிஎஸ்கேயின் 103 ரன்களை 10.1 ஓவர்களில் கொல்கத்தா சேஸ் செய்துள்ளது. கொல்கத்தாவுக்கு சாதகமான மைதானம் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கருப்பு மண் கொண்ட மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மண் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது கிடைக்கும் சவுகரியத்தை கொல்கத்தா அணி நேற்று பெற்றது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா இருவரும் மிகத்துல்லியமான லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை நடுங்க வைத்தனர். சிவப்பு மண் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டரை நோக்கி வரும் அப்போது அடித்து ஆட வசதியாக இருக்கும். ஆனால், கருப்பு மண் அதாவது களிமண் ஆடுகளத்தில் பந்து சற்று நின்று பேட்டரை நோக்கி மெதுவாக வரும். இத்தகைய சூழலில் பேட்டர் ஆங்கர் ரோல் எடுத்து, சற்று நிதானமாக ஷாட்களை அடிக்க வேண்டும். பந்து வரும்வேகத்தைவிட பேட்டை சுழற்றினால் விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த மைதானத்தின் தன்மையைத்தான் கொல்கத்தா கேப்டன் ரஹானே தெரிந்து கொண்டு அதுகுறித்து எதுவும் பேசவில்லை மைதானத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் 2வது ஓவரிலேயே மொயின் அலியை இடதுகை பேட்டர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார். அதற்கு ஏற்றார்போல் தடுமாறிய கான்வே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா காலியானார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின், ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியைத் தவிர்த்து அதன்பின் 5 போட்டிகளாக அஸ்வின் தனது பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த ஆட்டத்தி்கூடஅஸ்வின் ஓவருக்கு 10 ரன்ரேட்டில் வீசினார். 2012 முதல் 2015வரை அஸ்வின், ஜடேஜாவும் சேர்ந்து தலா 55 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக எடுத்தனர். சேப்பாக்கத்தை சிஎஸ்கேவின் கோட்டையாக வைத்திருந்தனர். இப்போது இருவரும் மீண்டும் இணைந்தபோதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில் அஸ்வின் இதுவரை ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கொடுத்திருந்தநிலையில் ஜடேஜா 8 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை அஸ்வின் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட அஸ்வின் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் 30 பந்துகள் வீசி 78 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 2012 முதல் 2015 வரை அஸ்வினின் பவர்ப்ளே எக்னாமி ரேட் 6.25 ஆக இருந்தநிலையில் தற்போது 15.60 அதிகரித்துள்ளது. "யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை" தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சில போட்டிகள் நாங்கள் விரும்பியபடிஇல்லை. அணியின் தோல்வியை ஆழமாக ஆலோசிக்க, ஆய்வு செய்ய வேண்டும். சவால்கள் இருக்கின்றன அதை சமாளிப்பது அவசியம். இன்று எதிர்பார்த்த ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. பந்து களத்தில் நின்று வந்தது, 2வது இன்னிங்ஸிலும் அப்படித்தான் இருந்தது. பார்ட்னர்ஷிப்பும் எங்களுக்கு அமையவில்லை. எங்கள் ஆட்டத்தை மற்ற அணியுடன் ஒப்பிட்டு பார்க்கவிரும்பவில்லை. எங்களிடமும் தரமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அடிக்கடி ஸ்கோர் போர்டைப் பார்த்து வெறுப்படையக்கூடாது. சில பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் நகர்ந்துவிடும். நடுப்பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த தொய்வு ஒருபோதும் வரக்கூடாது" எனத் தெரிவித்தார். நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததைச் செய்த சிஎஸ்கே சிஎஸ்கே அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஒரு ஆறுதலான அம்சம் நடந்துள்ளது. அதுஎன்னவென்றால், இந்த ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் ஒரு அணியால் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்ததில். சிஎஸ்கே அணி நேற்று 61 டாட் பந்துகளை சந்தித்து, ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள் வீதம் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்தது. இந்த சீசனில் இதுவரை எந்த அணியும் இதுபோல் டாட்பந்துகளை ஒரு போட்டியில் விட்டதில்லை. இன்றைய ஆட்டங்கள் முதல் ஆட்டம் லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் இடம்: லக்னெள நேரம்: மாலை 3.30 இரண்டாவது ஆட்டம் சன்ரைசர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 நேரம்- இரவு 7.30 இடம் – லக்னெள மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 நேரம்- இரவு 7.30 மணி இடம் – டெல்லி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – ஜெய்பூர் நேரம்- மாலை 3.30 மணி பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-288 ரன்கள்(5போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-273 ரன்கள்(5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) சாய் கிஷோர்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்) முகமது சிராஜ்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jx5yz1nn3o
  3. Published By: RAJEEBAN 08 APR, 2025 | 11:15 AM தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார். அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின் பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா. இது பழங்குடி இனமக்களிற்கு தன்னை ஒரு தேசமாக காட்டிக்கொண்டாலும், எந்த நாட்டாலும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை, ஐநாவும் இதனை அங்கீகரிக்கவில்லை. தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும், பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு அறிவித்துக்கொண்ட, நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார். ஈக்குவடோர், பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், (அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது) இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. செப்டம்பர் - நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர். நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை. அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி. அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார். கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.' இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும். https://www.virakesari.lk/article/211454
  4. Chennai Super Kings 103/9 Kolkata Knight Riders (6/20 ov, T:104) 71/1 KKR need 33 runs in 84 balls. Current RR: 11.83 • Required RR: 2.35 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability:KKR 99.41% • CSK 0.59%
  5. Published By: RAJEEBAN 11 APR, 2025 | 03:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நான் வெள்ளை மாளிகைக்கு எழுதப்போகின்றேன் மக்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி உலகின் மிகப்பெரிய சந்தையை தனக்கு சாதகமாக கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் நிதிசேவை குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பங்குசந்தை இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களில் டொனால்ட் டிரம்ப் இது பங்குகளை கொள்வனவு செய்வதற்கான தருணம் என தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னரே அவர் உலக நாடுகளிற்கான தனது புதிய வரியை 90 நாட்களிற்கு ஒத்திவைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். டிரம்ப் தனது சமூகஊடகமான ட்ரூத்சோசியல் பதிவில் டிஜிடி என்ற எழுத்துக்களுடன் கையெழுத்திட்டிருந்தார். இது அவரது முதல் எழுத்து என்பதுன் அவரது ஊடக நிறுவனமான டிரம்ப் மீடியா டெக்னோலஜி என்பதன் சுருக்கமாகும். இதேவேளை விசாரணைக்கான தேவை உள்ளதாக ஒழுக்ககோவை தொடர்பான வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி ரிச்சட்பெயின்டர் தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதிகள் முதலீட்டு ஆலோசகர்கள் இல்லை என தெரிவித்துள்ள அவர், இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி சந்தையை தனக்கு சார்பாக கையாளும் குற்றச்சாட்டிற்கு ஆளாகநேரிடும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோல்ஸ்ரீட்டில் தனக்கு நிதி வழங்குபவர்களிற்கு நன்மையளிக்கும் விதத்தில் பங்குசந்தையை பயன்படுத்த முயன்றாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என அமெரிக்க செனெட்டர் எலிசபெத் வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிரம்ப் தனது வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் மூலம் தனக்கு சார்பானவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு உதவினாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது குற்றச்செயல் போல் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211809
  6. மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை ; அரசாங்கங்களிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை ; சதொச மனித புதைகுழி அகழ்வு சட்டமா அதிபரின் தலையீட்டால் பாதிக்கப்பட்டது - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் Published By: RAJEEBAN 11 APR, 2025 | 05:26 PM ரஜீவன் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது : பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் மிகவும் பாரதூரமானது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர், நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இறுதி முடிவொன்று இல்லாததால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த துயரத்தை அனுபவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தங்கள் இறுதிநாட்கள் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் துயரத்தை அனுபவிக்கின்றனர். செம்மணி, வந்தாறுமூலை, மன்னார் சதொச, கொக்குத்தொடுவாய் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீண்டும் சமீபத்தில் மாநகரசபையினர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவேளை அதற்காக தோன்றியவேளை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. செம்மணியில் புதிதாக மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெற உள்ளன. எனினும் இதற்கான நிதி இன்னமும் ஒதுக்கப்படவில்லை. மனித புதைகுழிகளை அரசாங்கம் உரிய முறையில் கையாளவில்லை. இந்த விடயத்தில் முற்றிலும் அரசியல்உறுதிப்பாடு அற்ற நிலையே நிலவுகின்றது. பொலிஸாரும் உரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது அதற்கான ஆட்களை ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் உள்ளன. மனித புதைகுழி அகழப்படும் விடயத்திற்கு பல நிபுணர்கள் தேவை - ஒருங்கிணைத்து செயற்படவேண்டும், எங்கள் நாட்டை பொறுத்தவரை இது புதிய விடயம். ஆர்ஜென்டீனா, சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளை தோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர். மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது. ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை. மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் தலையீட்டால் முடங்கின. இது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அங்கு அகழ்வுதான் இடம்பெற்றதே தவிர குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை. ஆகவே அது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அவரின் தலையீட்டால் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டது. சதொச மனித புதைகுழி அகழ்வின் போது சம்மந்தப்பட்ட தரப்புகள் சட்டமா அதிபரை உள்ளே கொண்டுவந்தன. அரசாங்கம் மனித புதைகுழிகள் தோண்டப்படுவதை குழப்புவதற்கு பல வழிமுறைகளை கையாளும், நிதியை விலக்கிக்கொள்வதன் மூலம் அகழ்வை குழப்பும். அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நிதி இல்லை என தெரிவிப்பார்கள். ருவாண்டா, சிலி போன்ற நாடுகளில் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு அரசாங்கங்கள் நிதியை வழங்கின. ஆனால் இங்கு அரசாங்கங்கள் வெளிநாடு நிதியை கூட தடுக்கின்றன, இதுதான் எங்களின் அனுபவம். அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளை குழப்பும்போது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். நாங்கள் மீண்டும் அவர்களிடம் செல்லும்போது என்ன பிரயோசனம் என கேட்கின்றார்கள், ஆனாலும் ஒத்துழைப்பைவழங்குகின்றார்கள். மீட்கப்படும் மனித எச்சங்கள் எந்த காலத்தை என்பதை அறிவதற்காக ஆய்வுகூடங்களிற்கு அனுப்பவேண்டும், வெளிநாட்டு ஆய்வு கூடங்களிற்கே அவற்றை அனுப்பவேண்டும். ஆனால் அரசாங்கம் நிதி வழங்க மறுக்கின்றது. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்கள் என கருதப்படும் 42 உடல்களை மீட்டுள்ளோம். செம்மணியில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் கருதுகின்றனர். கைதுசெய்யப்பட்ட 600 பேரின் பெயர் விபரங்கள் அவர்களிடம் உள்ளன. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். இது மிகவும் கடினமான பணி ஆனால் எவ்வளவு தூரத்திற்கு இந்த அகழ்வு பணியை சிறப்பாக முன்னெடுக்கமுடியுமோ அவ்வளவு தூரம் முன்னெடுக்கின்றோம். மிகமிக முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கங்களிடம் இது தொடர்பில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதே, எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் 100 வீத ஆதரவை வழங்க தயாரில்லை, சந்திரிகா அரசாங்கமாகயிருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமாகயிருந்தாலும் சரி. https://www.virakesari.lk/article/211836
  7. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக நான் தயார் - ரணில் 11 APR, 2025 | 03:51 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆஜராகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை (10) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பல விடயங்களை அறிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211814
  8. 25th Match (N), Chennai, April 11, 2025, Indian Premier League KKR chose to field. Chennai Super Kings (19.6/20 ov) 103/9 Current RR: 5.15 • Last 5 ov (RR): 29/2 (5.80) Kolkata Knight Riders
  9. பட மூலாதாரம்,X 11 ஏப்ரல் 2025, 10:31 GMT 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியை சென்னையில் அமித் ஷா அறிவித்துள்ளர். கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வெள்ளிக்கிழமையன்று மாலை அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமித் ஷா, " பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,X எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளித்தார். "சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையுமா" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது. அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்" எனக் கூறினார். "வெற்றி பெற்றால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஆவார்களா?" எனக் கேட்டபோது, "வெற்றி பெற்ற பிறகு அதற்கான பதிலைக் கூறுகிறோம். தற்போது இதுபோன்ற எந்தக் குழப்பத்துக்கும் ஆளாக்க விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு கூறுகிறோம்" எனத் தெரிவித்தார். "கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இருந்து நிபந்தனைகள் எதாவது விதிக்கப்பட்டதா?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "எந்தவிதமான நிபந்தனையும் அ.தி.மு.க தரப்பில் இருந்து வைக்கவில்லை. இது இயல்பான கூட்டணி" எனக் கூறினார். "கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்களா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, "அ.தி.மு.கவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப் போவதில்லை. தேர்தல் விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம்" எனக் குறிப்பிட்டார். செய்தியாளர் ஒருவர்,"மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, "இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில தலைவராக என் பக்கத்தில் தான் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்" எனக் கூறினார். திமுக மீது விமர்சனம் "நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பாஜக இதற்கு எதிராக உள்ளபோது மக்களை எவ்வாறு அணுக முடியும்?" என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே தி.,மு.க இதைப் பயன்படுத்துகிறது" என அமித் ஷா கூறினார். தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்த அமித் ஷா, "சில முக்கிய பிரச்னைகளை தி.மு.க எழுப்பி வருகிறது. ஊழல்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே சனாதன தர்மம், தொகுதி மறுவரையறை, மும்மொழி விவகாரம் ஆகியவற்றை தி.மு.க பேசுகிறது" எனக் கூறினார். "தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கும்போது அவர்கள் உண்மையிலேயே என்ன மாதிரியான துன்பத்தில் அவதிப்படுகிறார்களோ, அதைப் பிரசாரத்தில் கொண்டு செல்வோம். தி.மு.க-வை போல மக்களை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்? முன்னதாக தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டும் வேட்புமனு பெறப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,''தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அண்ணாமலை செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் கட்சியின் திட்டங்களை கிராமம், கிராமமாக கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது'' எனத் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்புரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளும் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாளை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தலைவர் அறிவிப்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்கரவர்த்தி தெரிவித்தார். அண்ணாமலை மாநில தலைவராக இருப்பது தமிழக பாஜகவுக்கு பலமா? பலவீனமா?17 ஜூன் 2023 கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMITSHAH படக்குறிப்பு,சென்னை வந்துள்ள அமித் ஷா, மறைந்த குமரி ஆனந்தன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார் 10 ஆண்டுகள் விதி தளர்த்தப்பட்டதா? தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சக்கரவர்த்தி வியாழக்கிழமையன்று அறிவித்தார். தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் எனவும் சக்கரவர்த்தி கூறியிருந்தார். அதன்படி, தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள், பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 'புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படலாம்' என பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், நயினார் நாகேந்திரன் 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார், 2025ஆம் ஆண்டில் பாஜக உறுப்பினாராக 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. எனவே 'அவரால் தலைவர் பதவிக்கு அவரால் போட்டியிட முடியுமா?' என்ற விவாதம் எழுந்தது. இந்த நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். 10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர். பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் உள்பட உயர் பொறுப்புகளில் திருநாவுக்கரசர் நியமிக்கப்படும் போது அவருக்குக் கட்சிப் பணியில் 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை எனவும் எஸ்.ஆர்.சேகர் குறிப்பிட்டார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6jr21gwlo
  10. தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் (Kurunegala) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.04.2025) இடம்பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “1994 ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கியது. பட்டலந்த விவகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தரப்பினர் சித்திரவதைக்காரர் என்று குற்றம்சாட்டுகின்றார்கள் ஆனால் 2015 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கினார்கள். 1994 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி பட்டலந்த விவகாரம் மற்றும் விஜயவீர படுகொலை பற்றி பேசவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு பட்டலந்த விவகாரத்தை குறிப்பிடாமலிருந்தால் இன்று இந்த விடயத்தை எவரும் பேசியிருக்கமாட்டார்கள். மனித படுகொலைகள் இரண்டு பக்கத்திலும் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. கட்சியை தடை செய்ததால் ஆயுதமேந்தியதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதனை ஏற்க முடியாது. ஏனெனில் அக்காலப்பகுதியில் கம்யூனிசக் கட்சி, மாணவர் சங்கம் உட்பட பல கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவ்வாறாயின் அவர்களும் ஆயுதமேந்தியிருக்க வேண்டும் , 1971 ஆம் ஆண்டு ஆயுதமேந்தியதற்கான காரணம் என்ன? ஆகவே உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம். 1979 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டது. 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்க போராட்டத்துக்கு எதிராக சோமபால சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். 1980 ஜூலை கலவரம் தோற்றம் பெற்றது. இவ்வாறான பின்னணியில் தான் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி பொது மக்களையும் தமது கட்சி உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. ரோஹண விஜயவீர விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது. 1988 காலப்பகுதிகளிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் சுமார் 64 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.மறுபுறம் சொத்துக்களை அழித்தீர்கள். விடுதலைப் புலிகள் நூலகத்துக்கு தீ வைக்கவில்லை. அவர்கள் தமது மக்களுக்கு சிறந்த முறையில் கற்பித்தார்கள். விடுதலை புலிகள் பாடசாலை, பல்கலைக்கழகங்களை, தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கவில்லை. இராணுவத்துக்கு எதிராகவே செயற்பட்டார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தீ க்கிரையாக்கியது . ஆகவே கடந்த காலத்தை மறந்து விட்டு தூய்மையானவர்களை போல் பேசக்கூடாது” என்றார். https://ibctamil.com/article/mp-dayasiri-jayasekara-parliament-speech-1744361828#google_vignette
  11. பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் : மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி பலஸ்தீன (Palestine) அரசை பிரான்ஸ் (France) அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ள கருத்திற்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால், மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இஸ்ரேல் அரசை அங்கீகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா உட்பட சுமார் 150 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முதன்மையான மேற்கத்திய நாடுகள் இதுவரை பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. அதேவேளை, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலையும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அது பயங்கரவாதத்திற்கான வெகுமதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பதிலடி மேலும், கற்பனையான ஒரு பலஸ்தீன நாட்டை எந்த ஒரு நாடும் ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது, நாம் அனைவரும் அறிந்த யதார்த்தத்தில், பயங்கரவாதத்திற்கான பரிசாகவும், ஹமாஸ் படைகளுக்கு ஒரு ஊக்கமாகவும் இருக்கும் என அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருபோதும் கொண்டு வராது என குறிப்பிட்டுள்ள அவர், நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார். https://ibctamil.com/article/france-could-recognise-palestinian-state-1744359024
  12. அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. பாடசாலைகளுக்கான இந்த ஆண்டின் முதல் தவணையின் இரண்டாவது கட்டம் இன்று நிறைவடைகிறது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதல் தவணையின் மூன்றாவது கட்டம் அதன்படி, மூன்றாவது கட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் தவணையின் மூன்றாவது கட்டம் மே மாதம் 9ஆம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/april-15-public-holiday-school-holiday-sri-lanka-1744340752
  13. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார். அபராதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஒரு மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உரிமங்கள் இல்லாத கடைகள் குறித்து ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத வணிகர்கள் இருந்தால், உடனடியாக உரிய உரிமத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/trc-raids-on-unregistered-phone-shops-in-sl-1744338808
  14. டொமினிகன் இரவு விடுதியில் பலி 221 ஆக அதிகரிப்பு சான்டோ டொமின்கோ: கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமின்கோவில் கடந்த 8ம் தேதி அதிகாலை இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரவுவிடுதியில் இருந்தனர். மேற்கூரை இடிந்ததில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த மீட்பு பணியில் பலி எண்ணிக்கை 221 ஆக அதிகரித்தது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 நாள் மீட்புப் பணியில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதால் மாயமானவர்களின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். https://www.dinakaran.com/dominican_nightclub_bali/ டொமினிகன் குடியரசு இரவு விடுதி விபத்து: 221 ஆக உயர்ந்த பலியானோர் எண்ணிக்கை டொமினிகன் குடியரசில் இரவு விடுதி கூரை சரிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த இரவு விடுதி டொமினிகன் குடியரசு நாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் சிமெண்ட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த துர்திஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக வியாழக்கிழமை நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. அதே நேரத்தில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய எஞ்சிய நபர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் மூலம் சான்டோ டொமிங்கோவின் தேசிய திரையரங்கம் துயரத்தின் மையமாக மாறியுள்ளது. மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டனர். இருப்பினும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் யாரும் உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விபத்தில் 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் எட்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த பேரழிவுகரமான சரிவின் காரணங்கள் குறித்து விசாரணைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு இந்த பெரிய இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. https://news.lankasri.com/article/dominican-republic-nightclub-death-toll-rise-1744302457
  15. பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும் கட்டுரை தகவல் எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 ஏப்ரல் 2025 ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். 'ராஸ்மஸ் மங்க்' என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய "இன்டர்மீடியா" எனும் ஒருவகை இனிப்பு தின்பண்டத்துக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல அலைமோதும் கூட்டம் காணப்படுகிறது. பிரெட் அல்லது காய்கறிகளில் பூஞ்சை பூத்துவிட்டால் அருவருப்புடன் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், இந்த இன்டர்மீடியா தின்பண்டத்தில் தங்க நிறத்தில் இருக்கும் இந்த உணவானது நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சை பூத்த பிறகுதான் பக்குவப்படுகிறது. அறிவியலையும் சமையல் கலையையும் கலந்திணைப்பு செய்து வயு-ஹில்-மைனி (Vayu Hill-Maini) எனும் நுண்ணுயிரி பொறியாளர் துணையோடு இந்த உணவுப் பண்டத்தை உருவாக்கியுள்ளார்கள். பெரியவர்கள் தாய்ப்பால் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்குமா? ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம் தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்? உணவில் பூஞ்சை தாவரம், விலங்கு, மீன், பூச்சிகள் போலவே பூஞ்சை இனமும் மனித உணவுகளில் பல்வேறு வகையில் பங்களிப்பு செலுத்துகிறது. சாக்கரோமைசஸ் செரிவிசியா எனும் ஈஸ்ட் வகை ஒரு செல் உயிரியைக் கொண்டு நொதிக்க வைத்துத்தான் ரொட்டி, பீர், ஒயின், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளைத் தயார் செய்கிறார்கள். ஐரோப்பாவில் பிரபலமான ப்ளு சீஸ் எனப்படும் உணவை ஒரு வகையான பெனிசிலியம் எனும் பூஞ்சையின் உதவியோடு தயார் செய்கிறார்கள். ஆஸ்பெர்கிலஸ் ஓரிசேயி எனும் பூஞ்சை இனத்தை வைத்து மிசோ, சோயா சாஸ், ஜப்பானிய/கொரிய பீர் வகையான ஷேக் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. பேசிலஸ் புமிலஸ் எனும் பூஞ்சையைக் கொண்டு இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் புரோபயாடிக் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள். கற்பாசி எனப்படும் பதர் கே பூல் அல்லது தாகப் பூல் என்பது ஒருவகைப் பாசி. பர்மோட்ரேமா பெர்லாட்டம் எனப்படும் இந்த உயிரி உள்ளபடியே ஒருவகை ஆல்கே பூஞ்சையுடன் கூட்டுவாழ்வு உறவைக் கொண்ட கலவை. வட இந்தியாவின் கரம் மசாலா, செட்டிநாட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் இந்தப் பூஞ்சை சாதாரணமாக எந்தச் சுவைமனமும் கொண்டிருக்காது. ஆனால், சூடான எண்ணெய் அல்லது நெய்யில் தாளிக்கும்போது புகை, மரம், மண் வாசனையைத் தூக்கி உணவின் சுவை மணத்தைக் கூட்டுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயாரிப்பது எப்படி?31 மார்ச் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 கலந்திணைப்பு பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,வயு ஹில்-மைனி, சிறுவயதில் இருந்தே சமையல் மற்றும் அறிவியல் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் வயு-ஹில்-மைனியின் தந்தை கியூபாவை சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர். பின்னர் நார்வேவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தாயின் முன்னோர்கள் கென்யாவில் இருந்து ஸ்வீடனுக்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினர். அவரது தாய் அக்கம்பக்கம் குடியிருந்தவர்களுக்கு இந்திய சமையல் கலை கற்றுக் கொடுத்து வந்தார். எனவே, அவரது வீட்டில் எப்போதும் உலகின் பல்வேறு உணவுகளின் சுவை மணம் பரவி விரவியிருந்தது. "சிறு குழந்தையாக இருந்தபோது சமையல் அறையில்தான் நான் வளர்ந்தேன்" என நினைவுகூர்கிறார் ஹில்-மைனி. பல்வேறு பண்பாடுகள் கொண்டவர்கள் அவர்களுடைய வீட்டில் இருந்ததன் காரணமாக உலகின் பல்வேறு பண்பாடு சார்ந்த கறிமசால் பொருள்கள், சுவைமனம் ஊட்டும் பொருள்கள் அவர்கள் வீட்டில் இருந்தன. இவற்றைக் கலப்பு செய்து சிறுவயது முதலே புதுப்புது சமையல்களைச் செய்து பரிசோதனை செய்வதில் ஆர்வம் கொண்டார். அதுபோலவே பள்ளியில் அறிவியல் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். "சிறுவயது முதலே சமையல் மீதும் அறிவியல் மீதும் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது" என்கிறார் ஹில்-மைனி. சமையலறை அறிவியல் பள்ளிக் கல்வி முடிந்த பின்னர் அல்கிமிஸ்ட் உள்பட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னணி சமையல் கல்விக் கூடங்களில் சமையல் கலையைப் பயின்றார். பின்னர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கே முதலில் பல உணவகங்களில் கடைநிலை சிப்பந்தியாகவும் சமையல் எடுபிடியாகவும் கலையை மேலும் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். இவர் தயாரித்த புதுவித சாண்ட்விச்சை சுவைத்துப் பார்த்த ஓர் உணவக முதலாளி வியந்து இவருக்கு வாய்ப்பு அளித்தார். சமையல் கலையில் திறமை கூடியது; அதே நேரத்தில் அறிவியலின் துணை கொண்டு சமையல் கலையை அணுகும் ஆர்வமும் முளைத்தது. உணவகங்களில் வேலை செய்துகொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் 2020இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கே உணவு உள்பட நாம் உட்கொள்ளும் பல்வேறு வேதிப் பொருள்கள் மீது குடல் நுண்ணுயிரிகள் எத்தகைய உயிரி வேதிவினை ஆற்றுகிறது என ஆய்வு செய்தார். உற்பத்தியாகும் உணவும் சமைக்கப்படும் உணவும் பெருமளவில் வீணாவது கண்டு கவலை கொண்டார் ஹில்-மைனி. அமெரிக்காவில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது," என்கிறார். முட்டையின் ஓடு, பழத்தோல் போன்றவை மட்டுமல்ல பெருமளவில் உணவே வீணாகிறது எனப் பல்வகை ஆய்வுகள் சுட்டிக்கட்டுகின்றன. உலகளவில் உணவுத் துறை ஏற்படுத்தும் கார்பன் மாசில் பாதிக்குப் பாதி அளவு உணவு வீண் செய்யப்படுவதால் ஏற்படுகிறது. எனவே, விவசாயக் கழிவுகளை உணவாக மாற்ற முடியுமா என அடுத்து ஆய்வு செய்ய ஆர்வம் கொண்டார். பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 சனி கிரகத்தை போலவே பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்தனவா? புதிய கண்டுபிடிப்பு30 மார்ச் 2025 பாரம்பரிய இந்தோனீசிய உணவு பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,வாயு ஹில்-மைனி நியூரோஸ்போரா வெற்றுருவங்களை ஆய்வு செய்தார். அவற்றில் ஒன்று மனித உணவுக் கழிவுகளுக்குத் தகவமைத்து படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளது என அறிந்துகொண்டார் உணவகங்களில் வேலை செய்தபோது சக இந்தோனீசியா சமையல் கலை வல்லுநர்கள் தங்கள் நாட்டில், குறிப்பாக மேற்கு ஜாவா தீவில் விரும்பி உண்ணும் அஹ்ன்சாம் எனும் உணவை அறிமுகம் செய்திருந்தனர். சோயா விதைகளை அழுத்திப் பிழிந்து சோயா பால் எடுத்த பிறகு எஞ்சும் கழிவில் இருந்தும் நிலக்கடலையைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் கழிவில் இருந்தும் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. பாலில் தயிராய் சிறிதளவு உறையூட்டித் தயிர் செய்வது போல இந்தக் கழிவுகள் மீது சிறிதளவு நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சையை இடுவார்கள். பூஞ்சை வளர்ந்து கழிவை நொதித்து மனிதன் உண்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உணவைத் தயார் செய்துவிடும். உயிரி வேதிவினை நடைபெறும்போது உமிழும் சில வேதிப்பொருள்கள் பக்குவம் செய்த கழிவு ஸ்பான்ஜ் போன்ற பதமும் செட்டார் சீஸ் வைத்து டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டி போன்ற சுவை மனத்தையும் பெற்றுவிடும். ஈஸ்ட் எனும் பூஞ்சை ரொட்டி மாவை நொதிக்கச் செய்து ரொட்டி தயார் செய்கிறது என்றாலும் உணவுப் பொருளை வேறு வடிவு கொண்ட உணவுப் பொருளாக மாற்றுகிறது. ஆனால் இந்தோனீசியா அஹ்ன்சாம் உணவில் நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை கழிவைப் பதப்படுத்தி உணவாக மாற்றுகிறது. நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சையை ஹில்-மைனி தனது முனைவர் பட்ட மேலாய்வுக்கு எடுத்துக்கொண்டார். மேலும் தனது ஆய்வுக்காக, தான் படித்த சமையல் கலை நிறுவனங்களையும் அங்குள்ள சமையல் கலை வல்லுநர்களையும் இணைத்துக்கொண்டார். மரபணுவியல் இந்தோனீசியாவில் இருந்து ஆய்வுக்காக என அங்கே பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அஹ்ன்சாம் மாதிரிகள் பலவற்றை வரவழைத்து ஆய்வு செய்தார். பக்குவம் செய்த இந்த உணவில் என்னென்ன வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா உள்ளது என மரபணு வரிசை செய்து ஆராய்ந்து பார்த்தார். ஆய்வில் இன்டர்மீடியாவின் வேற்றுருவும் எல்லா அஹ்ன்சாம் மாதிரிகளில் இருந்த வேற்றுருவும் வேறுவேறு என்று புலப்பட்டது. அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா வேற்றுரு வேறு எங்கும் காணப்படவில்லை; அதே போல அஹ்ன்சாம் உணவு மாதிரிகளில் வேறு எந்த வேற்றுருவும் இருக்கவில்லை. மனிதன் அணியும் ஆடையில் உள்ள சீலைப் பேன் தலை முடியில் வளர முடியாது; அதேபோல, தலைமுடியில் வாழும் பேன் வகை சீலை போன்ற ஆடைகளில் வாழ முடியாது. பரிணாமப் படிநிலையில் இரண்டும் இருவேறு இடங்களில் வாழும் தன்மையைப் பெற்றுவிட்டன. அதேபோல, மனிதன் விவசாயம் செய்யத் துவங்கிய பின்னர் பல்வேறு விதமான விவசாயக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உருவாயின. இந்தப் புதிய இடங்களுக்குத் தக்கவாறு தகவமைத்து அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை பரிணமித்தது என்கிறார் ஹில்-மைனி. அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி29 மார்ச் 2025 சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்29 மார்ச் 2025 கழிவிலிருந்து கருவூலம் பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,சமைத்த அரிசிச் சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி வைத்துத் தங்க நிறச் சாதத்தைத் தயாரிக்கும் முறை அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை 30 வகையான தாவரக் கழிவுகளில் இட்டு ஆய்வு செய்தனர். தாவரங்களில் உள்ள செலுலோஸ் போன்ற பொருள்களை மனிதனால் செரிக்க வைக்க முடியாது. மேய்ந்து உண்ணும் ஆடு மாடு போன்றவற்றால் இவற்றை ஜீரணிக்க முடியும். எனவேதான் நாம் அரிசி கோதுமை போன்ற தானியங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விவசாயக் கழிவாக அப்புறப்படுத்தி விடுகிறோம். முக்கிய தாவரக் கழிவுகளில் என்னென்ன வேதியியல் மாற்றங்களை இந்தப் பூஞ்சை தூண்டுகிறது என இனம் கண்டனர். சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரும்புக் கழிவு, தக்காளி கெட்சப் செய்த பின்னர் வரும் கழிவு, பாதாம் பருப்புக் கழிவு, வாழைப்பழத் தோல் உள்படப் பெருமளவில் குவியும் விவசாயத் தொழில் உற்பத்திக் கழிவுகள் மீது கவனம் செலுத்தினர். இந்தக் கழிவுகளில் உள்ள மனிதனால் ஜீரணிக்க முடியாத பெக்டின் செல்லுலோஸ் போன்ற தாவர செல்களின் சுவர் பாலிசாக்கரைடு பொருட்களைச் சுமார் 36 மணிநேரத்தில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய, சத்தான மற்றும் இனிமையான உணவாக இந்தப் பூஞ்சை மாற்றுகிறது என்று தங்கள் ஆய்வில் கண்டனர். மேலும் இயற்கை வேற்றுரு வகை போலன்றி மனிதன் உற்பத்தி செய்யும் விவசாயக் கழிவுகளில் வளரும் இந்த வகை நியூரோஸ்போரா பூஞ்சை மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த நச்சுப் பொருள்களையும் உற்பத்தி செய்யவில்லை எனவும் கண்டுபிடித்தனர். அதாவது இந்தப் பூஞ்சையை உண்பதில் தீங்கு ஏதுமில்லை. "பூஞ்சையை ஜீரணம் செய்து மாற்றம் செய்யும் விவசாயத் தாவரக் கழிவுகளில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய புரத உள்ளடக்கம் கூடுகிறது. அதே போல, பூஞ்சை செய்யும் வேதியியல் மாற்றம் காரணமாகக் கழிவின் சுவை மணத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. நாம் விரும்பாத சோயாபீன்களுடன் தொடர்புடைய சில சுவை மணம் முற்றிலும் அகன்று விடுகிறது. இப்போது அதே கழிவு கூடுதல் புரத ஆற்றலுடன் மனிதன் உண்ண ஏற்ற சுவை மணத்துடன் மாறிவிடுகிறது" என்கிறார் ஹில்-மைனி சுவைக்கும் உணவு சத்தான உணவாக இருக்கலாம்; ஆனால் சுவை இல்லை என்றால் யாரும் சீண்ட மாட்டார்கள்." "குறிப்பாக ஒரு சமையல் கலை வல்லுநருக்கு மிக முக்கியக் கேள்வி- இந்த 'உணவு சுவையாக உள்ளதா?'" என்கிறார் ஹில்-மைனி. பிரெஞ்சு மக்கள் விரும்பி உண்ணும் ப்ளு சீஸ் எனும் வகைப் பாலாடைக் கட்டியின் மணம் மற்றும் சுவையைக் கண்டு வேறுபல பண்பாட்டைச் சார்ந்தவர்கள் முகம் சுளிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கலாசாரச் சூழலுக்கு வெளியே மக்கள் அதை நேர்மறையாக உணரவில்லை என்றால் அனைவரும் ஏற்கும் வகையில் சுவை மணம் உள்ளது என அறியலாம். இதுவரை அஹ்ன்சாம் உணவைச் சுவைத்துப் பார்த்திராத ஐரோப்பிய நபர்களிடம் அல்கெமிஸ்ட் உணவகத்தில் வைத்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்தோனீசிய அஹ்ன்சாம் மட்டுமின்றி வேர்க்கடலை, முந்திரி, பைன் பருப்பு, அரிசிச் சோறு போன்றவற்றிலும் இந்தப் பூஞ்சையை வளர்த்து உணவு உருவாக்கி அல்கெமிஸ்ட் சமையல் கலை வல்லுநர்கள் பரிசோதனை நடத்தினர். பூஞ்சை வளர்ந்த அரிசிச் சோறு போன்றவற்றில் இனிமையான பழச் சுவை மனம் உருவானது. நூடுல்ஸ் போன்றவற்றில் காணப்படும் ஜப்பானிய சுவை மணமான உமாமி சுவை மணத்தையும், மிதமான காரச் சுவை மணத்தையும் உணர முடிந்தது என வாடிக்கையாளர்கள் கூறினார். சுவைத்துப் பார்த்த உணவாக வாடிக்கையாளர்களிடம் ப்ளூ சீஸ் போல விருப்பு அல்லது வெறுப்பு என்ற இரு துருவ நிலைப்பாடு ஏற்படவில்லை. எவரும் வெறுத்து ஒதுக்கவில்லை. கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 வெனிசுலாவில் இந்த சோம்பல் கரடி தனது இனம் முழுமைக்கும் உதவியது எப்படி?28 மார்ச் 2025 புதிய தின்பண்டம் பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,அல்கிமிஸ்ட் உணவகத்தில் பிரபலமாகி வரும் இன்டர்மீடியா இனிப்பு தின்பண்டம். இந்த ஆய்வின் தொடர்ச்சிதான் அல்கெமிஸ்ட் உருவாக்கிய இன்டர்மீடியா இனிப்புப் பண்டம். கீழே ஜெல்லி அடுக்கு. அதன் மேலே ப்ளம் ஒயின் அடுக்கு. இதற்கு மேலே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அரிசிச் சோறு கஸ்டர்ட். சமைக்கப்பட்ட சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி அறுபது மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். அரிசிச் சோறு தங்க நிறமாக மாறிவிடும். இந்த அரிசிச் சோற்றை வைத்துக்கொண்டு கஸ்டர்ட் தயார் செய்ய வேண்டும். இதன் மேலே எலுமிச்சையை சிறு துளி விடவேண்டும். வருத்த எலுமிச்சை தோல் சீவலைப் பொடியாகத் தூவிவிடவேண்டும். இதுதான் 'இன்டர்மீடியா' இனிப்புப் பண்டச் செய்முறை. "இந்தப் பூஞ்சை மிதமான காரச் சுவை மணம் தருவதால் முதலில் நாங்கள் காரத் தின்பண்டம் தயாரிக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால் சமைத்த அரிசிச் சோற்றில் இந்தப் பூஞ்சையை நொதிக்கும்போது ஊறுகாய் சுவையும் பழத்தின் சுவை மனமும் ஒருங்கே சேர்ந்து வருவதால் இனிப்புத் தின்பண்டம் செய்யத் துவங்கினோம். இறுதியில் நாங்கள் தயாரித்த இந்த இனிப்புப் பண்டம் எங்களுக்கே வியப்பாக இருக்கிறது," என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட அல்கெமிஸ்ட் உணவகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநரான மங்க். நேச்சர் மைக்ரோபையாலஜி எனும் ஆய்விதழில், "பாரம்பரிய நொதித்தல் துணை கொண்டு உணவுக் கழிவுகளை உணவுக்காகப் பதம் செய்தல்" என்கிற ஆய்வுக் கட்டுரையும் இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் காஸ்ட்ரோனமி அண்ட் பூட் சைன்ஸ் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. அதேபோல, "ஆய்வகத்தில் இருந்து உணவு மேசைக்கு: உணவாக உட்கொள்ளக்கூடிய நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை பயன்படுத்தி சமையல் கலை முனைப்பு காணுதல்" என்கிற ஆய்வுக் கட்டுரையையும் இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின் வெளிச்சத்தில் அறிவியல் துணைகொண்டு சமையல் கலையை வளர்த்து எடுக்கும் நோக்கில் அல்கெமிஸ்ட் உணவகம் "ஸ்போரா" என்கிற சமையல் கலை ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளது. "அறிவியல் பார்வையில் புதிய சமையல் கலை - உணவு குறித்த புதிய அறிவியல் பார்வை' இதுதான் நான் மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வு" என்கிறார் ஹில்-மைனி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0jzpq4ndleo
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நேற்று தெரிவித்தார். உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22 கிராட்) 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது. ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்கு (22 கிராட்) 65 ரூபாய் உயர்ந்து சுமார் 8,390 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் உயர்ந்து ஒரு கிராம் 8,660 ரூபாய்க்கு விற்பனையானது. பொதுவாக, பொருளாதார நெருக்கடி அல்லது சந்தை குழப்பத்தின் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதன் மீது முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை உயரும். ஆனால் இந்த முறை மாறாக டிரம்ப் வரி விதிப்புக்கு பிறகு, தங்கத்தின் விலை சரிந்து தற்போது உயர்ந்துள்ளது. டொனல்ட் டிரம்ப்: பங்குச்சந்தையின் மொத்த சரிவுக்கும் ஒற்றைக் காரணம்8 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தங்கத்தின் விலை ஏன் சரிந்தது? இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், எப்போதும் விலை உயர்ந்துகொண்டேதான் இருந்துள்ளது. 2000களின் தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு சுமார் 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின்போது தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் சுமார் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகு கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பிறகு ரஷ்யா – யுக்ரேன் போர் போன்ற பல காரணங்களினால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி, தற்போது ஒரு சவரன் சுமார் 67,000 முதல் 69,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ள தங்கத்தின் விலைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "டிரம்பின் வர்த்தக வரி விதிப்பின் காரணமாக உலக பொருளாதாரமே குழப்பத்தில் இருக்கிறது. அதனால்தான் தங்கம் விலை இறங்கி தற்போது எறியுள்ளது", என்று கூறினார். "தங்கம் ஒரு நிலையான முதலீடு. இதனால் மக்கள் மத்தியில் தங்கத்திற்கு அதிக தேவை இருக்கிறது. தற்போது பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தாலும், தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வை எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சி ஒரு குறுகிய கால தாக்கம் மட்டுமே", என்றும் அவர் குறிப்பிடுகிறார். தங்கம் வைப்பு திட்டத்தை நிறுத்திய மத்திய அரசு – தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு பாதிப்பா?3 ஏப்ரல் 2025 திருநங்கையுடன் திருமணம் - பாலியல் ஈர்ப்பில்லாமல் வாழும் தம்பதி சமூகத்தில் சந்திக்கும் சவால்கள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் டிரம்பின் வரி விதிப்பு காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 38 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மார்னிங்ஸ்டார் என்னும் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார். இது நடக்க வாய்ப்பில்லை என்று ஜோதி சிவஞானம் தெரிவிக்கின்றார். "வெறும் அமெரிக்காவின் வரி விதிப்பினால் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை'' என்று ஜோதி சிவஞானம் கூறுகிறார். "சமீபகாலமாக தங்கத்தின் விலையேற்றத்தில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தங்கத்தை கொள்முதல் செய்வது ஆகும். தங்கம் ஒரு நிலையான மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதலீடு என்பதாலும், அது வர்த்தக பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் சார்ந்துள்ளன", என்று பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார். உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் சுமார் 20% தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்குகின்றன. தங்கத்தை வாங்கும் துறைகளில், மூன்றாம் இடத்தில் மத்திய வங்கிகள் உள்ளன. அதிக அளவிலான தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம். தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,பேராசிரியர் ஜோதி சிவஞானம் "எப்போதும் எறிக்கொண்டே இருக்கும் அதன் விலை மற்றும் நிலைத்தன்மை காரணமாக இந்தியாவைப் போல மற்ற நாடுகளிலும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தாண்டி பொது மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணியாக இருக்கின்றது", என்று அவர் கூறினார். மேலும் பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவையும் சேர்ந்து தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டார் ஜோதி சிவஞானம். தொடர்ந்து பேசிய அவர், "இது போன்ற காரணிகளில் பாரிய மாற்றம் நிகழ்ந்து, தங்கத்திற்கான தேவை குறைந்தால் மட்டுமே அதன் விலையிலும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்படும். மற்றபடி, தங்கத்தின் விலையில் அவ்வப்போது சரிவு இருந்தாலும், அதன் மதிப்பு மேல்நோக்கி உயர்ந்துகொண்டேதான் இருக்கும்", என்று தெரிவித்தார். "அமெரிக்கா தொடங்கியுள்ள வர்த்தக போரால் தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பு முதலீடாக கருதப்படுகிறது. இது தங்கத்தின் விலையை நிச்சயமாக அதிகரிக்கவே செய்யும்", என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c98ggg7ery0o
  17. மின்சார சபையின் அறிவிப்பால் அதிருப்தியில் பயனாளர்கள் நாட்டில் உருவான மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சூரிய மின்கல திட்டத்தை (Solar Panel) நாடு முழுவதும் உருவாக்கி உள்ளது. இதில் சூரிய மின்கல திட்டத்தை பயன்படுத்தும் பாவனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மேலதிகமாக வரும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21வரை, அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளது. அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு.. ஏப்ரல் புத்தாண்டுக் காலத்தில் நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மின்சார அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் இதை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திடீர் அறிவிப்பினால் சூரிய மின்கல திட்டத்தை வாழ்வாதாரமாகவும் வங்கிக் கடன் அடிப்படையில் திட்டத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறித்த அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால் பயனாளர்கள் தமது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளனர். https://tamilwin.com/article/uninterrupted-power-supply-during-festive-season-1744362889#google_vignette
  18. Published By: DIGITAL DESK 3 09 APR, 2025 | 03:40 PM சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு விஞ்ஞானிகள் உயிர் கொடுத்துள்ளனர். டையர் ஓநாய் உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000 - 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஏனைய அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. எப்படி சாத்தியம்? இதற்காக விஞ்ஞானிகள் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். ஓநாய் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பின்னர் அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை ஈன்றுள்ளது. இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211592
  19. நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொருங்கிய ஹெலிக்கொப்டர் – சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி 11 APR, 2025 | 06:45 AM அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியவேளை அதில் காணப்பட்டுள்ளனர். ஹெலிக்கொப்டர் தலைகீழாக ஆற்றிற்குள் விழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நீச்சல் வீரர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள், ஹெலிக்கொப்டரிலிருந்து கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நால்வர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/211764
  20. 11 APR, 2025 | 03:30 PM முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கடந்த வருடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். அதற்கு தீர்வுகள் கிடைக்க பெறாத நிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை (10) கேப்பாபிலவு மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவி செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆவணங்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என கூறியிருந்தனர். இதனையடுத்தே இன்றையதினம் கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் ஐனாதிபதி செயலகத்தில் கூறப்பட்ட விடயங்களை கூறி அரச அபரிடம் புதிய மகஜரை கையளித்திருந்தனர். இதன்போது முல்லை மாவட்ட அரச அதிபர் கேப்பாபிலவு காணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரினையும் அதற்கான பதில் கடிதத்தையும் கேப்பாபிலவு மக்களுக்கு காண்பித்து அது தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார். கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம், ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் புதிய மகஜர் ஒன்றினை கையளித்து இருந்தனர். அத்தோடு எதிர்வரும் 26 ஜனாதிபதி அனுரகுமார திசாநயாக்கா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வருகைதர இருப்பதனால் அவரிடமும் கேப்பாபிலவு மக்கள் மகஜரினை கையளிக்க இருப்பதும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/211808
  21. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,121 முறைப்பாடுகள் பதிவு! 11 APR, 2025 | 02:44 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ) 1,121 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,062 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211803
  22. சஹஸ்தனவி மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்து! 11 APR, 2025 | 12:50 PM சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் (PPA) இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது திறந்த சுழற்சி செயல்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும். இம்மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும். சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தினால் 2028 ஆம் ஆண்டில் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு (R-LNG ) மாறி எரிபொருள் செலவுகளை 50 சதவீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றது. https://www.virakesari.lk/article/211789
  23. 11 APR, 2025 | 03:51 PM தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு; சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது. இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி போல தோன்றுகின்றது. இவ்வாறான விடயங்களை செய்யவேண்டாம், என அரசாங்கத்தை வலியுறுத்தும் நான் தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். வீதியை திறக்கவேண்டும் என்றால் முழுமையான பாதுகாப்பு சரிபாப்பிற்கு பின்னரே அதனை திறக்கவேண்டும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்தவித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அதனை திறக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211817
  24. கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி பட மூலாதாரம்,PONMUDI கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், 'இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஏன்? சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியது என்ன? திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா, கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. தி.மு.க இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடந்த இந்த விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்படப் பலர் கலந்து கொண்டனர். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள இரான் விரும்புகிறதா? டிரம்ப் நினைப்பது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரடி மோதலில் ராமதாஸ், அன்புமணி - கட்சிக்குள் என்ன நடக்கிறது? கூட்டணிக் கணக்கு காரணமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்முடி பேசியது என்ன? பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றத்தை (18 வயதுக்கு மேற்பட்டோர்) திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பட்டிமன்றத்தில் நானும் சபாபதி மோகனும் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) கலந்துகொள்வோம். கோவையில் இந்தப் பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். இதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு திரளாகக் கலந்து கொள்வார்கள்" எனக் கூறினார். "பட்டிமன்ற தலைப்பு என்ன தெரியுமா?" எனச் சிரித்தபடியே கேள்வி எழுப்பிய பொன்முடி, மேடையில் இருந்தவர்களைப் பார்த்து, "அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது" எனக் கூறினார். "கடவுள் கொள்கைளில் காமச் சுமையை அதிகம் பரப்புவது சைவமா வைணவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும்" என்று குறிப்பிட்டார். மேலும், அந்தப் பட்டிமன்றத்தில் "ஓர் இடத்தில் சொல்வோம். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். "மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" என மீண்டும் கூறிவிட்டு இதற்கான விளக்கத்தையும் பொன்முடி அளித்தார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், "இவையெல்லாம் திராவிடத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள்" எனவும் அவர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, கருணாநிதியின் 'பராசக்தி' படம், திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் வெளியான 'ரத்தக் கண்ணீர்' படம் ஆகியவை குறித்துப் பேசினார். வங்கதேசம் இந்தியா வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதி மறுப்பு - சீனாவுடன் நெருங்கியது காரணமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?4 மணி நேரங்களுக்கு முன்னர் கனிமொழி கண்டனம், கட்சிப் பதவி பறிப்பு பட மூலாதாரம்,KANIMOZHI/X பொன்முடியின் இந்தப் பேச்சு குறித்த காணொளி, கடந்த வியாழக்கிழமை இரவில் இணையதளத்தில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து, தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஓர் அமைச்சரே இவ்வாறு அவதூறாகப் பேச முடியுமா? தி.மு.க கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். பொன்முடியின் பேச்சுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ' அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை' எனப் பதிவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?3 மணி நேரங்களுக்கு முன்னர் அதேநேரம், அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திராவிடர் கழக மேடைகளில் பேசியவற்றைத்தான் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவரது கட்சிப் பதவியைப் பறித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "1985ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகக் கூட்டங்களில் இதுபோன்று பேசப்பட்டு வந்தது. அதையே திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழா மேடையில் பொன்முடி பேசினார். அது ஏதோ புதிதாகப் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல" எனக் குறிப்பிட்டார். "கம்ப ரசம் என்ற பெயரில் இதுபோன்ற பேச்சுகளை அண்ணாவும் பேசியிருக்கிறார். அதையே பொன்முடியும் பேசினார். அதற்காக இப்படியொரு நடவடிக்கை தேவையில்லை" எனவும் கோவை கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார். நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 நொந்து நூடூல்ஸ் ஆனது யார்? ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வார்த்தை மோதல்7 ஏப்ரல் 2025 பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள் பட மூலாதாரம்,TPDK/X தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது இருந்தே சர்ச்சைப் பேச்சுகளில் அதிகம் அடிபடும் நபராக அமைச்சர் க.பொன்முடி இருந்து வருகிறார். தி.மு.க அரசின் திட்டங்களில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தத் திட்டத்தால் மாதந்தோறும் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை மகளிர் சேமிப்பதாகவும் மேடைகளில் அவர் குறிப்பிடுகிறார். இந்தத் திட்டம் தொடர்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகக் குறிப்பிட்டார். 'எல்லாம் ஓசி' எனவும் சிரித்தபடியே அவர் பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி, "ஓசி பயணம் என விளையாட்டாகக் கூறியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு மொழியில் கலோக்கியலாக பேசியதைத் தவறாகத் புரிந்து கொண்டனர்" எனக் கூறினார். முன்னதாக, விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதியில் உள்ள குறைகளைக் கூறிய பெண்களிடம், "ஆமாம்... நீங்க எல்லாம் அப்படியே எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சிட்டீங்க...' எனக் குறைபட்டுக் கொண்டார். இந்தப் பேச்சு இணையத்தில் அதிகமாகப் பரவியது. அடுத்து, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மணம்பூண்டியில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார். பட மூலாதாரம்,TNDIPR அப்போது முகையூர் ஒன்றிய குழு தலைவரைச் சுட்டிக்காட்டிய பொன்முடி, "அவரே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" எனக் கூறிவிட்டு அவரிடம் சாதியை உறுதி செய்துகொள்ளும் வகையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே வரிசையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், கே.என்.நேரு உள்பட சில அமைச்சர்களும் சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கினர். இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அப்போது பேசிய அவர், "என்னைத் துன்புறுத்துவது போல மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக் கூடாது. யாரும் புதுப் பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்" எனக் கூறினார். அனைத்து இடங்களிலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பொதுவெளியில் அமைச்சர்களும் கட்சியினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்ந்தன. கடந்த 2023 மார்ச் மாதம் திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, ஆட்சிக்கு வந்து 22 மாதங்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர், நிறைய குறைகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதை ஏற்காத பொன்முடி, அவரை ஒருமையில் பேசி அதட்டியதோடு, அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட செய்தியை கேலி செய்வது போலப் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தற்போது பாலியல் தொழிலாளர் குறித்த சர்ச்சைப் பேச்சில் தனது கட்சிப் பதவியை இழந்திருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czrv884g4z6o
  25. அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி - சீனா 11 APR, 2025 | 02:41 PM அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா எதிர்காலத்தில் விதிக்கவுள்ள வரிகளிற்கு பதிலளிக்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரிகள் சர்வதேச மற்றும் பொருளாதார விதிமுறைகளை அடிப்படை பொருளாதார சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா இது ஒரு தலைப்பட்சமான மிரட்டும் வற்புறுத்தும் தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.