Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபௌலூஃப் & அலெக்ஸ் பாய்ட் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து வெளியேறக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர். துப்பாக்கி, தடி போன்றவற்றை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைத்து, அவர்களில் பலரைத் தாக்கினர். ஹமாஸை விமர்சிக்கும் ஆர்வலர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ பதிவுகளில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் லாஹியாவின் தெருக்களில் "வெளியேறு, வெளியேறு, ஹமாஸ் வெளியேறு", என்று முழக்கமிட்டுக் கொண்டே இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றதை காட்டின. "சந்தேகத்துக்குரிய அரசியல் நோக்கங்களை" முன்னெடுப்பதாகவும், இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப இந்த போராட்டக் குழு முயற்சி செய்து வருவதாகவும் கூறி, ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் ஆதரவாளர்கள், இந்த போராட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை 'துரோகிகள்' என்று குற்றம் சாட்டினர். மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏன் போராட்டம்? வடக்கு காஸாவில் நடைபெற்ற இந்த போராட்டங்கள், இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்திய மறுநாள் நடைபெற்றன. இதனால் பெய்ட் லாஹியாவின் இந்த தாக்குதல் பெய்ட் லாஹியா நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகிய சுமார் இரண்டு மாதத்துக்குப் பிறகு காஸாவில் ராணுவ தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹமாஸ், ஜனவரி மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்க தவறியதாக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல்களுடன் இஸ்ரேல் மீண்டும் அதன் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் ஹமாஸுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முழுவீச்சில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள் காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை - திரும்பிச் செல்வது எப்போது? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவது என்ன? போராட்டக்காரர்களில் ஒருவரான பெய்ட் லஹியாவைச் சேர்ந்த முகமது தியாப், போரில் தனது வீட்டை இழந்துள்ளார், மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது சகோதரரையும் இழந்தார். "எந்தவொரு நபருக்காகவும், எந்தத் தரப்பினரின் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டு நாடுகளின் நலன்களுக்காகவும் நாங்கள் இறக்க மாட்டோம்", என்று அவர் கூறினார். "ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் மற்றும் துயரத்தில் இருப்பவர்களின் குரலைக் கேட்க வேண்டும், இடிபாடுகளில் இருந்து எழும் குரல் - அதுதான் மிகவும் உண்மையான குரல்." "ஹமாஸ் ஆட்சி ஒழிக, இஸ்லாமிய சகோதரத்துவ ஆட்சி ஒழிக" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிடுவதை அந்த நகரத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் காட்டின. பாலத்தீன தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் காஸாவில் ஒரே ஆட்சியாளராக இருந்து வருகிறது, அதற்கு ஒரு வருடம் முன்புதான் தேர்தலில் தனது போட்டியாளர்களை வன்முறையான முறையில் ஹமாஸ் வெளியேற்றியது. அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?26 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் கூறுவது என்ன? இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸுக்கு எதிரான வெளிப்படையான விமர்சனம் தெருக்களிலும் இணையத்திலும் அதிகரித்துள்ளது. ஆனால், ஹமாஸுக்கு இன்னும் தீவிரமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஹமாஸுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை துல்லியமாக அளவிடுவது கடினம். போர் தொடங்குவதற்கு முன்பே ஹமாஸுக்கு எதிர்ப்பு இருந்து வந்தது, ஆனால் பழிவாங்கும் பயத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தனர். காஸாவைச் சேர்ந்த முகமது அல்-நஜ்ஜார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மன்னிக்கவும், ஆனால் ஹமாஸ் உண்மையில் எதை நம்பி இருக்கிறது? அவர்கள் மக்களின் உயிர்களை நம்பி அதன் மீது பந்தயம் கட்டுகிறார்கள்", என்று பதிவிட்டுள்ளார். "ஹமாஸ் கூட எங்களை வெறும் உயிர்களாகத்தான் எண்ணுகிறது. ஹமாஸ் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். எங்கள் காயங்களுக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்கிறோம்", என்று கூறினார். ஹமாஸ் அதிகாரி டாக்டர் பாசெம் நைம் பிபிசியிடம் பேசுகையில், மக்களுக்கு "வலிமிகுந்த நிலையில் கதறி அழ உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால் அவர் போராட்டக்காரர்கள் "சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள்" மேற்கொள்வது போல இருப்பதாக குற்றம் சாட்டினார், மேலும் ஏன் காஸாவின் மேற்குக் கரையில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். காஸாவில் உள்ள மனிதாபிமான சூழ்நிலையை இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?27 மார்ச் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதான் மூலம் இஸ்ரேல்-ஸா போர் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஹமாஸை அழிப்பதற்காக இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவின் 21 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தனர், அவர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்தனர். காஸாவில் சுமார் 70% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு, தண்ணீர் வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்தன. மேலும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyrm5jjlvzo
  2. Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை இல்லையா என்று பிரித்தானிவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது. தமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்காது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவே இவ்வாறு எமது படையினருக்கு எதிராக தடை விதித்துள்ளது. சிறுவர்களையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/210364
  3. 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM (செ.சுபதர்ஷனி) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார். தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைராய்டு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது. நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தைராய்டு தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தைராய்டு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார். https://www.virakesari.lk/article/210374
  4. Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:15 PM (எம்.வை.எம்.சியாம்) திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அந்த அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸ் திணைக்களம் சார்பில் தனக்கு உள்ளதென பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் மல்லிகா சூரியப்பெரும உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இராணுவப் படை, கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 515 பேருக்கும் சிவில் பிரஜைகள் அறுவருக்கும் சுமார் 29 மில்லியன் ரூபா பணம் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட 140 அதிகாரிகளுக்கு இங்கு 24 மில்லியன் ரூபா பரிசுத்தொகையும் கௌரவ பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உரையாற்றுகையில், இத்தகைய நிகழ்வுகள் ஊடாக அதிகாரிகளை நாம் ஊக்கப்படுத்துகின்றோம். உயர்ந்தபட்ச ரீதியில் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கோவைகளை திரட்டி பணப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு பணிப்பரிசில்களை வழங்குமாறு இந்த வருடத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். அண்மைய நாட்களாக பொலிஸார் பல விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர். எதிர்வரும் தேர்தலின் பின்னரும் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகளையும் கைதுகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் பாராட்டு செலுத்தி பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். எத்தகைய சவால்கள் இருந்தாலும் பொலிஸ் திணைக்களத்தில் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறை உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளின் சார்பில் முன்னிற்க வேண்டிய பாரிய பொறுப்பு திணைக்களம் சார்பில் எனக்கு உள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கலந்துரையாடி அதற்கான தீர்வை பெற்றுத் தருவதற்கு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/210380
  5. LIVE 7th Match (N), Hyderabad, March 27, 2025, Indian Premier League Sunrisers Hyderabad 190/9 Lucknow Super Giants (5/20 ov, T:191) 66/1 LSG need 125 runs in 90 balls. Current RR: 13.20 • Required RR: 8.33 Win Probability:LSG 77.73% • SRH 22.27%
  6. கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? பட மூலாதாரம்,X/@KKRIDERS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 27 மார்ச் 2025, 01:55 GMT அசாம் மாநிலம் குவாஹட்டியில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2025 ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான் அணி சேர்த்த ஸ்கோர்தான் மிகக்குறைவானதாகும். இந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 2 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைவிட்டு மேலே வரவில்லை, மைனஸ் 0.308 என்ற ரீதியில்தான் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிலும் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.882 என்று மோசமான நிலையில் இருக்கிறது வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?27 மார்ச் 2025 உங்கள் வீட்டில் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@KKRIDERS படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார் வெற்றிக்கு காரணமான பந்துவீச்சாளர்கள் கொல்கத்தா அணியில் வலிமையான சுழற்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் சுனில் நரேன் நேற்று விளையாடாத நிலையிலும் ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது. சுனில் நரேனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார். தமிழகத்தின் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என அழைக்கப்படும் வருண் சக்கிரவர்த்தி வழக்கம்போல் சிறப்பாக விளையாடி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தினர். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும்பகுதி காரணம் பந்துவீச்சாளர்கள். தங்களுக்கு இடப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து 151 ரன்களுக்குள் சுருட்டினர். GT vs PBKS: சாய் சுதர்சன், சாய் கிஷோர் அசத்தியும் ஆட்டத்தையே திருப்பிப் போட்ட 3 ஓவர்கள் ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? 'இந்திய பேட்டரால் இப்படியும் விளாச முடியுமா!' - அசுதோஷ் ஷர்மா டுப்ளெசியை வாய் பிளக்க வைத்தது எப்படி? 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி டீகாக் மட்டுமே போதும் இந்த இலக்கை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டீகாக் சிறப்பாக பேட் செய்தார். நீண்ட காலத்துக்குப்பின் அற்புதமான ஆட்டத்தை டீ காக் வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியபின் இப்போது அதே வேகத்தில் நேற்று பேட் செய்தார். 61 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்களுடன் இறுதிவரை குவின்டன் டீ காக் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரஹானே (18), மொயின் அலி (5) ரன்கள் சேர்த்தனர். 'இம்பேக்ட் ப்ளேயர்' ரகுவன்ஷி 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கோவிட் பேரிடரின் சோதனைக் காலம் மக்கள் வாழ்வை 5 ஆண்டுகளில் எப்படி மாற்றியுள்ளது?26 மார்ச் 2025 மூளையில் 5 முறை அறுவை சிகிச்சை செய்ததால் மீண்டும் 'குழந்தையான' பெண் - தற்போது எப்படி இருக்கிறார்?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@KKRIDERS படக்குறிப்பு, மொயின் அலி மொயின் அலிக்கு எதிர்பாரா பணி இங்கிலாந்து அணியில் இருந்தபோதுகூட மொயின் அலி தொடக்கவீரராக பெரும்பாலும் களமிறங்கியது இல்லை, நடுவரிசை, ஒன்டவுனில் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்தபோதும், ஆர்சிபியில் இருந்தபோதும் நடுவரிசைதான் இவருக்குரிய இடம். ஆனால், நேற்று தொடக்க வீரராக மொயின் அலிக்கு கொடுக்கப்பட்ட பணியால் அவர் தடுமாறியது போன்றே தெரிந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் படுமோசமாக பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவரின் பந்துவீச்சையே எதிர்கொள்ள மொயின் அலி தடுமாறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸருக்கும், ஷார்ட் பந்துக்கும் மொயின் அலி ரன்களைக் குவிக்க யோசித்தார். ஒரு கட்டத்தில் தூக்கி அடித்தாலும் யாரும் பிடிக்க முடியாத இடத்தில் விழுந்தது. களத்தில் இருந்த மொயின் அலி 12 பந்துகளில் 5 ரன்களுடன் ரன்அவுட்டாகி வெளியேறினார். டீகாக் அதிரடி ஆட்டம் ஆனால், நிதானமாக ஆடத்தொடங்கிய டீகாக் வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் கொல்கத்தா 40 ரன்களையும், 7.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. டீ காக் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். 12.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. கேப்டன் ரஹானே முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறினார், கடைசியில் 18 ரன்னில் ஹசரங்கா விக்கெட்டை இழந்தார். குவாஹட்டியில் இரவில் பனிப்பொழிவு இருந்ததையடுத்து, 11வது ஓவரில் புதிய பந்து கொண்டுவரப்பட்டது. இந்த விதி இந்த சீசனில் கொண்டுவந்தபின முதல்முறையாக பந்து மாற்றப்பட்டது. பனிப்பொழிவு சற்று தொடங்கியபின் கொல்கத்தாவின் வெற்றி இன்னும் எளிதாகியது. 3வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, டீகாக் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 44 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டீகாக் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை அடிக்கவிடாமல் ஆர்ச்சர் தேவையின்றி இரு வைடு பந்துகளை வீசி டீகாக் சதம் அடிப்பதைத் தடுத்தார். இருப்பினும், கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார். ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார் ரஹானே என்ன கூறினார்? முதல் வெற்றிக்குப்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினோம், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் மொயின், வருண் அற்புதமாக செயல்பட்டனர். நரேன் இல்லாத நிலையில் மொயின் பந்துவீச்சில் நிரப்பினார். பந்துவீச்சாளர்களின் பணி சிறப்பாக இருந்தது வெற்றியை எளிதாக்கினர். விக்கெட் எடுக்க வேண்டும் என்று மொயினிடம் தெரிவித்தேன், அதை செய்துவிட்டார். மொயின் அலிக்கு முழு சுதந்திரம் அளித்தோம், ஆனால் பேட்டிங்கில் எதிர்பார்த்தவகையில் செயல்படவில்லை. ஆனால், பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்" எனத் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?23 மார்ச் 2025 சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குழப்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தற்காலிகக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரியான் பராக் நேற்று அபத்தமாக கேப்டன்சி செய்து வர்ணனையாளர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போன்று, கேப்டன்சி செய்கிறார் என்று வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். எந்த பேட்டரை எந்த வரிசையில் களமிறக்குவது, எந்த பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்துவது, எந்த பேட்டருக்கு எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படை தெரியாமல் நேற்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் செயல்பட்டதை நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள். ரியான் பராக் வழக்கமாக நடுவரிசையில்தான் களமிறங்குவார் நேற்று ஒன்டவுனில் களமிறங்கினார். தொழில்முறை பேட்டர் இல்லாத ஹசரங்காவை நடுவரிசையில் களமிறக்கி, கடந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெலை 6-வது பேட்டராகவும், அதிரடி பேட்டர் ஹெட்மெயரை 8-வது வரிசையில் களமிறக்கினார். ஹெட்மெயரை 4வது வீரராகவும், துருவ் ஜுரெலை 3வது வீரராகவும், ரியான் பராக் 6வது அல்லது 5வது வீரராக களமிறங்கி இருக்கலாம். ஷுபம் துபே சிறந்த பேட்டர், அவரை நடுவரிசையில் களமிறக்கியதற்குப் பதிலாக 3வது வரிசையில் களமிறக்கி இருக்கலாம். இங்கிலாந்து முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான நிக்நைட் கூறுகையில், "எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஹெட்மெயர் அணியில் இருந்தால் அவரை ஏன் விரைவாக களமிறக்கவில்லை. உலகளவில் டாப் குவாலிட்டி பேட்டர் ஹெட்மெயர் அதிரடி ஆட்டக்காரர். அவரை விரைவாக களமிறக்கி இருந்தால் ஆட்டம் மாறியிருக்கும், அதிக ரன்கள் கிடைத்திருக்கும், ஆட்டத்தைத் திருப்பத்தானே அவரை வைத்துள்ளீர்கள். ஹெட்மெயரை கடைசி வரிசையில் களமிறக்கி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?" என காட்டமாக விமர்சித்தார். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த 5 போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் 200 ரன்களை இலக்காக வைத்து விளையாடுகின்றன. முடிந்தவரை பேட்டர்களை 8வது வரிசை அல்லது 9வது வரிசையில் வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், ராஜஸ்தான் அணியில் 8 பேட்டர்கள் வரை இருந்தும் குழப்பமான சூழலில் பேட்டர்கள் களமிறங்கியதால்தான் தங்களுக்குரிய ரோல் தெரியாமல் ஆட்டத்தைத் தவறவிட்டனர். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 இந்தியாவில் விண்கல் தாக்கியதால் உருவான ஏரி - எங்கே உள்ளது தெரியுமா?23 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார் ஒரு அரைசதம் கூட இல்லை ராஜஸ்தான் அணியில் சாம்ஸன்(13), ஜெய்ஸ்வால்(29), நிதிஷ் ராணா(8) ரியான் பராக்(25), ஹெட்மெயர்(7), துருவ் ஜூரெல்(33), ஷூபம் துபே(9) என இத்தனை பேட்டர்கள் இருந்தும் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை, எந்த பார்ட்னர்ஷிப்பும் அரைசதத்தை கடக்கவில்லை. சாம்ஸன் அடித்து ஆடும் முயற்சியில் வைபவ் அரோரா பந்துவீச்சில் க்ளீன்போல்டானார். கேப்டன் ரியான் பராக் 3 சிக்ஸர்களை விளாசிவிட்டு வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தவரை நம்பிக்கை இருந்தது. ஆனால், மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடருக்குப்பின் ஜெய்ஸ்வால் சுழற்பந்துவீ்ச்சில் முதல்முறையாக விக்கெட்டை இழந்தார். கடந்த சீசனில் அஸ்வினை பயன்படுத்திய 5வது இடத்தில், ஹசரங்காவை பிஞ்ச் ஹிட்டராக பயன்படுத்த ராஜஸ்தான் அணி முயன்றது. ஆனால் முற்றிலும் தோல்வியாக முடிந்தது. வருண் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹசரங்கா ஆட்டமிழந்தார். 67 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டாப்ஆர்டரின் 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கிலும் 25 ரன்களைக் கடக்கவில்லை, பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. சொந்த மண்ணில் ஆடியபோதும், ரியான் பராக்கால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly2edp0je1o
  7. படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு பிரிட்டன் தடை விதித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம் பெற்றுள்ளமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரிட்டனில் இந்த நால்வர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நால்வருக்கும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகளை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டனுக்குள் இந்த நால்வருக்கும் சொத்துகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைத் தடை செய்வதற்கும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 15 வருடங்கள் பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு,ஷவேந்திர சில்வா இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது. முல்லைத்தீவு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அத்துடன், ராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர்களின் உறவினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பின்னணியிலும், தமக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை எனக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான பின்னணியிலேயே இந்தத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது. மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை7 மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?26 மார்ச் 2025 எந்தெந்த நாடுகளில் யார் யாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது? கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சி, சிப்பாய் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோர் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. அவர்களின் சொத்துகளைத் தடை செய்யவும் தீர்மானம் எட்டப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்ச்சி ஆகியோருக்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது. அந்த நாட்டிலுள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி கடற்படைத் தளபதி வசந்த கரணாகொடவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஷவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, கோட்டாபய ராஜபக்ஸ, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது இலங்கை உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிப்பதானது, அசாதாரணமாக செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கும்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகக் கூறிய அவர், இறுதித் தருணத்தில் என்ன நேர்ந்தது என்பதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ''இந்தப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் போராடினார்கள். அவர்கள் பொது மக்களைக் கொலை செய்யவில்லை. யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களும் நினைவில் இருக்கும். இனங்களை அடிப்படையாகக் கொண்டு யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தொடர்ந்து பேசிய அவர், "நான் 5 சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். பிரபாகரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலும் நானே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். இறுதி இரண்டு வாரங்களில் என்ன நேர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால், எமது முப்படை அதிகாரிகளுக்கு இவ்வாறு தடை விதித்தமையானது அசாதாரணமான செயற்பாடாகும். அவர்கள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது ராணுவத்தினர் தமது உயிர்களை எந்தளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பு கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தாரகள்? இந்த விடயங்கள் குறித்தும் கதைக்க வேண்டும். எனினும், எமது ராணுவத்தினர் மீதான இந்த நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சியாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்பும், பொலன்னறுவையும் இருந்திருக்காது. இந்த நாட்டைக் காப்பாற்றிய வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் நான் கவலையடைகிறேன்'' என யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது, மனித உரிமை மீறல் தொடர்பானது அல்லது எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, விடுதலைப் புலி அமைப்பிற்கு உதவி வழங்குவோரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே இதைக் குறிப்பிட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல என்பதுடன், சில மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுடைய நிதியின் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ''நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தற்போதுள்ள புலம்பெயர்ந்தோர் அரசியலில் ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்வதற்கும், ஆட்சிகளை அமைப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகள் தமது அரசாங்கங்களின் ஊடாகவும், தமது நிர்வாக வியூகங்களின் ஊடாகவும் எமது நாட்டின் மீது மீண்டுமொரு முறை பிரிவினைவாதத்தை ஸ்தாபிப்பதற்கும், ஈழ அரசாங்க கனவை நனவாக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ. மேலும் பேசிய அவர், "இது இன்று நேற்று இடம்பெற்ற ஒன்றல்ல. இதைத்தான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான பதில் அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும். ராணுவத்தினர் இந்த நாட்டிற்காகவே யுத்தத்தை நடத்தினார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் பல ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மாத்திரமே இந்த அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்" என்றார். "எனினும், தெரிவு செய்யப்பட்ட சில அதிகாரிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு யுத்த குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்னை கிடையாது. இது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான பிரச்னை. நாங்கள் பயங்கரவாதிகளுடன் மோதினோம். இன்று புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரும் இன்று தமிழ்-சிங்களப் பிரச்னையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் எழுப்புவோம். அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்பதுடன், மக்கள் ராணுவ வீரர்களுடன் இன்று ஒன்றுபட வேண்டும்," என்றார் நாமல் ராஜபக்ஸ. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவின் பதில் பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSA'S FACEBOOK படக்குறிப்பு,நாமல் ராஜபக்ஸ யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாரியளவிலான யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவம் வழங்கியவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பிரிட்டன் அரசாங்கம் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது தடை விதித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ''தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான நானே எடுத்தேன். இலங்கையின் ஆயுதப் படை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 363 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004ஆம் ஆண்டு வெளியேறி, ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளமையானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட தமிழர்களுக்கு தண்டனை வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார். ''முப்பது ஆண்டுக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால், 27,965 ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அது மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கடந்த 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை, உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு 2008ஆம் ஆண்டு பெயரிட்டதாகவும் அவர் கூறுகின்றார். அத்துடன், பல்வேறு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற சட்ட அழுத்தங்களில் இருந்து தமது ஆயதப் படையை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் விசேட சட்டங்களை இயற்றியதை நினைவு படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கடமைகளை நிறைவேற்றிய ஆயுதப் படை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் விடுக்கும் அழுத்தங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்நிற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமித் ஷாவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்26 மார்ச் 2025 டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வது கடினமாகிறதா?26 மார்ச் 2025 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீதரன் இவ்விடயம் சார்ந்து அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், "எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார். மேலும், "இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டன் அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்'' எனவும் கூறியுள்ளார். எண்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்பாரற்றுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 அரசாங்கத்தின் பதில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசாங்கத்தால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விடயங்களை தெளிவூட்டியபோதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால், அது தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார். தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர்களுக்கு அந்த நாட்டிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டமையானது, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளால் இவ்வாறு எடுக்கப்படுகின்ற ஒரு தலைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ஏன்? செந்தில் பாலாஜி என்ன சொல்கிறார்?19 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?19 மார்ச் 2025 பிரிட்டன் விதித்த தடையால் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதா? பட மூலாதாரம்,PRATHIBA MAHANAMAHEWA படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா இலங்கை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையால் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது. ''இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் விதிக்கப்பட்ட தடை கிடையாது. அதை பிரிட்டனே விதித்துள்ளது. அமெரிக்கா, ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கை தொடர்பில் பிரிட்டனே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது நபர்களுக்கு பிரட்டனால் விதிக்கப்பட்ட விசா மற்றும் சொத்துகளுக்கான தடையாகும். எனினும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இலங்கைக்கு இதனூடாக பாதிப்பு காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் 72 ஈ என்ற ஷரத்தில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனினும், இது தண்டனை வழங்கும் நடவடிக்கை கிடையாது" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதீபா மஹனாமஹேவா, "தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டாகும் போதும், நாம் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எமது பக்கத்திலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி, அதைச் செய்ய வேண்டியிருந்தது. இலங்கைக்குத் தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். 72வது ஷரத்திலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். பொருளாதாரக் குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக ஈ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வேறு நாடுகளில் சொத்துகள் இருக்குமானால், அது தொடர்பிலும் தாம் உதவி செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை பிரிவுடன் இணைந்து பல வேலைகளை எம்மால் செய்திருக்க முடியும். நாங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பலவற்றைத் தவறியுள்ளோம். அதனாலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன'' என்றார். ''இலங்கையில் ஐபிரிட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரிட்டன் 2018ஆம் ஆண்டு முதல் கூறி வருகின்றது. ஐபிரிட் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்க முடியாத பட்சத்தில், அதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதையேனும் நாம் கூறியிருக்க வேண்டும். பிரிட்டன் மீது முழுமையாக விரலை நீட்ட முடியாது. மனித உரிமைப் பேரவையின் ஊடாக நம்மை பிரிட்டனே கண்காணிக்கின்றது. எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து'' என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார். எனினும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாது போகுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன், தனி நாடொன்று என்ற விதத்தில் அவர்களால் நமக்கு எதிராக பொருளாதாரத் தடையைக்கூட ஏற்படுத்த முடியும் என அவர் கூறுகின்றார். வலையில் சிக்கும் விதத்தில் அல்லாமல், வலையில் சிக்காது அதைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இலங்கை செயல்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czed7j5k04po
  8. 27 MAR, 2025 | 02:57 PM பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட தடைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பலநாடுகள் அவ்வாறான தடைகளை விதிப்பதற்கு ஊக்குவிக்கும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஊக்குவிக்கும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்ததற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசாங்கத்தை வரவேற்று பாராட்டுகின்றது. உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகளின் கீழ் மாக்னிட்ஸ்கி பாணியிலான தடையை அமல்படுத்தவும் (1) இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா (2) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட (3) இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் (4) துணை இராணுவக் குழுவின் முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் (கருணா குழு) ஆகியோருக்கு எதிராகப் பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்குவதற்காக எடுக்கப்பட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவினைப் பாராட்டுகிறோம். பிரித்தானியாவில் 2024 இல் நடந்து முடிந்த தேர்தலின் போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒரு பகுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் டேவிட் லாமி எம்பி ஆகியோருக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியானது இந்த நேரத்தில் நினைவுகூரத் தக்கது. அத்துடன் இலங்கையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி சட்டத்தை பிரயோகித்தமைக்காக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அமெரிக்காவின் "மேக்னிட்ஸ்கி சட்டம்" போன்ற சட்டத்தைப் பயன்படுத்தி பிரித்தானியா தமிழர் பேரவை பிரித்தானியாவில் வசித்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் அமைப்புகளின் பத்து வருட காலத்திற்கும் மேலாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச நீதி விசாரணைக்காக தொடர்ச்சியான கோரிக்கைகளை ஐ.நாவில் முன்வைக்க எம்முடன் தொடர்ந்து பயணித்த பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக முன்னாள் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸ் சேர் ஸ்டீபன் டிம்ஸ் எம்.பி. ஆகியோர் குறிப்பிடப்படக் கூடியவர்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கு எம்முடன் கலந்துகொண்ட வெஸ் ஸ்ட்ரீட்டிங் பாராளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் இலங்கையில் அட்டூழியக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர்கள் மீண்டும் மீண்டும் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 2020 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் விஜயம் செய்த தெரசா வில்லியர்ஸ் அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சட்டத்தை முன்வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு உறுதியளித்தார். இதன் விளைவாக ஜூலை 2020 இல் உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலுக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதிக்காக போராடும் அதே வேளை மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு போன்ற அட்டூழியக் குற்றங்கள் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய தமிழர் பேரவை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மார்ச் 2009இலிருந்து ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இன் தொடர்ச்சியான முயற்சிகள் அங்கு மேற்கூறிய அரசியல்வாதிகள் மற்றும் எம் சகோதர அமைப்புகளுடன் இணைந்து எடுத்த காத்திரமான நடவடிக்கைகளின் விளைவாக மார்ச் 2021 இல்HRC/RES/46/1 எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2022 இல் HRC/RES/51/1 என்ற மேலும் வலுவூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை ((OSLAP)) நிறுவி செயல்பாடுகளை தொடங்கின. ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணை மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான (1) எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கும் (2) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்காக வாதிடுவதற்கும் (3) தகுதி வாய்ந்த நியாயாதிக்கத்துடன் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் (5) தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றனவாகும். அத்துடன் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களையும் ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு தொகுத்து அனுப்பி வைக்க முடியும். இதன் விளைவாக ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்டஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இன் இடைக்கால அறிக்கை (HRC/57/19), இலங்கை ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட பல மனித உரிமை மீறல்களைOSLAP இன் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு சுட்டிக் காட்டியது. 2024 செப்டெம்பர் மாதத்தில்ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் OSLAP தனது வசமுள்ள முக்கியமான அடையாள வழக்குகளை ( (emblematic cases ) உள்ளடக்கிய தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டு 2025 செப்டெம்பரில் நடைபெறவுள்ள 60வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது கொண்டு வரவிருக்கும் புதிய தீர்மானம் இலங்கை அரசாலும் பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் அளவையும் அதன் பாதிப்புகளையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்குஇற்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமையஇ ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் நீதித்துறை பொறிமுறைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான தகவல்களை வழங்க ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் தயாராக உள்ளது ஒரு முக்கியமான சாதகமான அம்சமாகும். இவ்வாறாக முக்கியமான சர்வதேச தளங்களில் தமிழ் மக்கள் எடுத்த முக்கியமான நகர்வுகளின் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் மீது அமெரிக்காஇ கனடா மற்றும் பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகளாவிய மனித உரிமைகள் விதிமுறைகள் 2020 இன் (Global Human Rights Sanctions Regulations) கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இங்கிலாந்து அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பல நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (நுரு) உள்ள நாடுகள் அதனை பின்பற்ற ஊக்குவிக்கும். https://www.virakesari.lk/article/210357
  9. இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:22 PM எட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுளம்பு பெருக்கம் அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம் 29 வரை செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், பணிபுரியும் இடங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும். அதேவேளை, சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு பொதுமக்களை சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ் ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/210356
  10. Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:20 PM நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 6.6 சதவீதமானவர்கள் பெண்களும், 16.4 சதவீதமானவர்கள் ஆண்களும் அடங்குவார்கள். அதேவேளை, கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் வன்முறை மற்றும் தற்செயலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை, 47.9 சதவீதமான மாணவர்கள் ஆரிசியர்களால் தாக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 12 மாதங்களில் 6.1 சதவீதமான மாணவர்கள் கட்டடாயப்படுத்தி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுப்படுத்தப்படுகின்றனர் எனவும், ஆண்களிடையே இது அதிகளவு பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/210348
  11. உள்ளூராட்சி மன்ற தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அந்த தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/316605
  12. கனடா தேர்தலில் சீனா, ரஷ்யா, இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு 25 MAR, 2025 | 04:04 PM ஒட்டாவா: அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில் வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. தொடர்ந்து இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இந்நிலையில் தேர்தலில் தலையிடலாம் என்ற குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது. “ஜனநாயக முறைப்படி நடைபெறும் கனடா நாட்டு தேர்தலில் செயற்கை நுண்ணறிவைசீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதே போல கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குநர் வனேசா லாயிட் கூறியுள்ளார். இதற்கு இந்தியா மற்றும் சீனா தரப்பில் இருந்து இன்னும் பதில் எதுவும் தரப்படவில்லை. அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 28-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210169
  13. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். ஹம்டான் பலாலின் வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீட்டிற்கு அருகிலிருந்து நீர்த்தொட்டியை சேதப்படுத்தினார்கள் ஜோசப் என்ற நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய இராணுவ சீருடை அணிந்த யூதகுடியேற்றவாசிகளுடன் அந்த பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்தனர். அவர்கள் ஹம்டானை அவரது வீட்டிற்குள் துரத்தி பிடித்து படையினரிடம் ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். யூத குடியேற்றவாசிகள் அவரின் காரை சேதப்படுத்தினார்கள், அதன் டயர்களை சேதப்படுத்தினார்கள் என ரவிவ் என்பவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். காயமடைந்த பலால் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210133
  14. 25 MAR, 2025 | 10:38 AM நியூசிலாந்தின் தென்தீவு பகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது. சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்து வருகின்றது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/210121
  15. Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றுமே சட்ட ஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலஅளவத் திணைக்களத்தின் வரைபடத்துக்கு அமைவாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தன என்றும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அந்தத் திணைக்களங்கள் நேரடியாக தமக்குரியதாக அடையாளப்படுத்தும் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளன என்ற தகவலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வடக்கில் சில மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்குரிய காணிகள், வனவளத் திணைக்களத்துக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் என்பனவற்றை விடுத்து மக்களின் வயல்காணிகளாக உள்ளவற்றுக்குள்ளும் வனவளத் திணைக்களத்தின் எல்லைக் கல்லுகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர். அதேநேரம் சில இடங்களில் வனவளத் திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் ஒரே காணிகளையே தமக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு வடக்கின் 5 மாவட்டங்களில் விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கிய காணிகளின் அளவுகளை விட புதிதாக தமது திணைக்களத்துக்கு கோரும் காணியின் அளவு அதிகம் என்றும் ஆளுநரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். வனவளத் திணைக்களத்தால் சில இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் மிக நீண்டகாலமாக வசித்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களோ, வீட்டுத்திட்ட உதவிகளோ முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும், அதேபோன்று சட்டபூர்வமான ஆவணங்கள் உள்ள ஒருதொகுதி மக்கள் வர்த்தமானி அறிவித்தலால் தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் அபிவிருத்தித் தேவைக்காக காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்தால் அது நிராகரிக்கப்படும் அதேவேளை, தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுவதாக அதிகாரிகள் ஆளுநரிடம் குறிப்பிட்டனர். இதேநேரம், இந்தத் திணைக்களங்களின் பாகுபாடான செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அந்தத் திணைக்களங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலோ வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், மேற்படி இரண்டு திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படுவதாகவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர். இந்த விடயங்களைக் கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்வரும் 9ஆம் திகதி கலந்துரையாடலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் விவரங்களை உரிய வகையில் தயார் செய்யுமாறும், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இரு திணைக்களங்கள் தொடர்பிலான விடயத்தை அணுகுவோம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டச் செயலர்கள் - காணி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம் - வடக்கு, ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/210197
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொருளாக மாறியது. படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையுடன் தொடர்புபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் பாரிய சர்ச்சையை நாட்டில் தோற்றுவித்துள்ளது. விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 படலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். ''கடந்த 1988ஆம் ஆண்டின் தொடக்கம் 1990ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச் செயல்களில் படலந்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட பாரிய சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை குறித்து தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், "1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் ஊடாக சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான தன்னாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி 17 வருட சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதே நோக்கமாக அமைந்திருந்தது. கடந்த 17 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே நோக்கம். சூரியகந்த போன்ற மனித புதைகுழிகள் தொடர்பாகவும், படலந்த போன்ற சித்திரவதை முகாம்கள் தொடர்பாகவும் அப்போதைய தலைவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று தகவல்களை வெளியிட்ட தருணத்தில் நியாயத்தை நிலைநாட்டிக் கொள்ளவே மக்கள் எதிர்பார்த்தார்கள்" என்றார். இதன்படி, 1995ஆம் ஆண்டு படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலப் பகுதிகள் பல தடவை நீடிக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.கே.ஜி.பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GOVERNMENT PRESS முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட படலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு ஆணைக் குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான பேச்சு மீண்டும் உருவெடுத்த பின்னணியில், இந்த அறிக்கையைத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது. ''இந்தச் சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 25 வருடங்களும் கடந்துள்ள இந்தத் தருணத்தில் எமது கட்சி மற்றும் எமது அமைச்சரவையினால் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதை மக்கள் மயப்படுத்துவதற்குமான பொறுப்பு நம்மிடம் உள்ளது'' என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எட்டுவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படலந்த சித்திரவதை முகாம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடத்தப்பட இருப்பதுடன், இரண்டாம் கட்ட விவாதத்தை மே மாதத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஔரங்கசீப்பை 'பொருத்தமற்றவர்' என கூறும் ஆர்எஸ்எஸ் அவரது சகோதரர் தாரா ஷிகோவை முன்னிலைப்படுத்துவது ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் 'மாஞ்சோலையை போல வால்பாறையில் இருந்தும் மக்களை வெளியேற்ற திட்டம்' - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு24 மார்ச் 2025 படலந்த சித்திரவதை முகாம் - பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க படலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைப்படி, 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், அப்போதைய அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதை முகாம்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள் இடம்பெற்ற பகுதியாக படலந்த சித்திரவதை முகாம் கூறப்படுகின்றது. கடந்த 1987-1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் இந்த முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டில் பல்வேறு நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி மக்களுக்கான நியாயத்தைத் தமது அரசாங்கம் நிலைநாட்டும்" என்பது 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது. இதன்படி, படலந்த சித்திரவதை முகாம் மற்றும் சூரியகந்த மனித புதைகுழி தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத்திலேயே ஆரம்பித்திருந்தார். இதன்படி, 1995ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் சுமார் 12 தடவைகளுக்கும் அதிக சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?7 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கேவை அதிர வைத்த விக்னேஷ் புத்தூர்: 'தோனியே பாராட்டினார்' - நெகிழ்ச்சியுடன் பகிரும் அறிமுக வீரரின் தந்தை25 மார்ச் 2025 ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான சட்டத்தரணி எஸ்.குணவர்தன செயற்பட்டிருந்ததுடன், அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் பதில் செயலாளராக டேவிட் கீதனகே பணியாற்றியிருந்தார். அதன் பின்னரான காலத்தில் இந்த ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் இரண்டாம் நிலை தரத்தைக் கொண்ட அதிகாரியான ஜீ.கே.ஜீ.பெரேரா பணியாற்றியுள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு தனது பணிகளை நிறைவு செய்த ஆணைக்குழு, அந்த அறிக்கையை அதே ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்திருந்த போதிலும், இந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. "கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அரச உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான சித்திரவதை முகாமில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா? சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்களா? அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் யார்?" என்பவை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 2ஆம் இலக்க மேல் நீதிமன்ற வளாகத்தில் 1996ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கூட்டம் தொடர்ச்சியாக 127 நாட்கள் இடம்பெற்றது. இந்த விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல தலைமைகளான ரணில் விக்ரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட 82 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ரணில் விக்ரமசிங்க பட மூலாதாரம்,GOVERNMENT PRESS படக்குறிப்பு,படலந்த ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் படலந்த பகுதி அமைந்துள்ளது. இந்த படலந்த பகுதியில் இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வீடமைப்பு திட்டமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் வசதிகள் மற்றும் தரங்களுக்கு அமைய ஏ, பி, சி என அந்த வீடுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த வீட்டுத் திட்டமானது, அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு கீழ் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட அசோக்க சேனாநாயக்கவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, படலந்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளுக்காக ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச உர கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரியாக உதவி போலீஸ் அத்தியட்சராக அப்போது கடமையாற்றிய டக்ளஸ் பீரிஸ் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் பிரகாரமே, படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியதாகவும், அவர் ஆலோசனை வழங்காத பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்காது எனவும் அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய அசோக்க சேனாநாயக்க, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்த வீடுகளை வழங்குவதற்காக எந்தவோர் உடன்படிக்கைகளும் கைச்சாத்து இடப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் எர்னஸ்ட் பெரேரா சாட்சி வழங்கியுள்ளார். 'இந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமையானது, டக்ளஸ் பீரிஸ், அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்' என அப்போதைய போலீஸ் மாஅதிபர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 குறித்த வீடமைப்புத் திட்டத்தில் A 2/2 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் 1983ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க வசித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தக் காலப் பகுதியில் அவர் பதவி வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சரின் சுற்றுலா விடுதியாகவும், கைத்தொழில் அமைச்சரின் அதிகாரபூர்வ வீடாகவும் ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டைப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோதமான முறையில் நபர்களைத் தடுத்து வைத்து, அவர்களுக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளின் இலக்கங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் பிரகாரம், 23 முதல் 26 வரையான இலக்கங்களைக் கொண்ட அறிக்கை பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம். இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய டி.எம்.பந்துல என்ற நபர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவினால் வீட்டுத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் இந்த வீடு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் பரிசோதகர் சுதத் சந்திரசேகர தங்கியுள்ளார். உதவி போலீஸ் அதிகாரியான டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கியுள்ளனர். இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டு, தான் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்த அர்ல் சுகி பெரேரா என்பவர் இந்த வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். சபுகஸ்கந்த போலீஸாரிடம் வீடொன்று கையளிக்கப்பட்டு இருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வாசல ஜயசேகர என்பவர் இந்த வீட்டை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். A 1/8 என்ற இலக்கத்தைக் கொண்ட வீடு எவருக்கும் கையளிக்கப்படாத பின்னணியில், அந்த வீட்டை அண்மித்து போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உர கூட்டுத் தாபனத்தின் தலைமை அதிகாரி பேலியகொடை போலீஸாரிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த A 1/7 என்ற வீட்டை அண்மித்து இந்த வீடு அமைந்துள்ளதுடன், அந்த வீடு பிரத்தியேக பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த இடம் என அஜித் ஜயசிங்க என்ற நபர் ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம்: ஸ்டார்லைனர் முதல் டிராகன் வரை - என்ன நடந்தது? முழு விவரம்19 மார்ச் 2025 கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், சீனா பற்றிய அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விகளுக்கு மோதி பதில் என்ன?18 மார்ச் 2025 ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்ஜன் விஜேரத்னவின் கோரிக்கைக்கு அமையவே தான் முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார். எனினும், அது தொடர்பான எந்தவோர் ஆவணங்களையும் முன்வைக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் மற்றும் போலீஸ் திணைக்களம் இது தொடர்பில் அறிந்து இருக்காமையினால், ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது. வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சியின் மரணம் வழக்கறிஞரான விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி என்பவர் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் ரஞ்ஜித் அபேசூரிய, போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போன விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி கைது செய்யப்பட்டுள்ளாரா என அப்போதைய பாதுகாப்பு செயலாளர், அப்போதைய போலீஸ் மாஅதிபரிடம் வினவியுள்ளார். போலீஸ் மாஅதிபர் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபரிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜயதாஸ, தங்காலை போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதைய அரச பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்தன போலீஸ் மாஅதிபரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலீஸ் மாஅதிபர் தங்காலை போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் அத்தியட்சர் கரவிட்ட தர்மதாஸவிடம் வினவியுள்ளதுடன், அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளதை அதிகாரி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 72வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் ஆர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க தன்னை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு சந்தேக நபரை (வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி) கொழும்புவுக்கு கொண்டு வந்து, ''களனி பிரிவில் செயற்படுகின்ற விசேட குழுவிடம்'' ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வழக்கறிஞர் விஜயதாஸ லியக்க ஆராய்ச்சி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, களனி பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் போலீஸ் பரிசோதகர் குலரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கடும் காயங்களுடன் வழக்கறிஞர் லியன்ன ஆராய்ச்சி மீட்கப்பட்டு, கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார். ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் உடலில் 207 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த வழக்கறிஞரை கொழும்பிற்குக் கொண்டு வரும்படி தான் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். போலீஸ் மாஅதிபருக்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்த போதிலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேராவிடம் குறுக்குக் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வரவில்லை என்பது விசேடமான விடயமாக இந்த ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?22 மார்ச் 2025 பாம்பு பிடிப்பவர்களே சில நேரம் அதனிடம் கடிபட்டு உயிரிழக்க நேரிடுவது ஏன்?24 மார்ச் 2025 படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது. இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது. B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 'பூனை அளவுக்குப் பெரிய எலிகள்' - பிரிட்டனின் இந்த நகரில் என்ன நடக்கிறது?23 மார்ச் 2025 ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன? பட மூலாதாரம்,BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு,படலந்த சித்திரவதை முகாம் வரைபடம் நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன? படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். ''கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது" என அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்," என்று தெரிவித்துள்ளார். அதோடு, "அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, "சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 வீடுகளில் பரவும் பூஞ்சைகளை நுகர்வது உங்கள் ஆரோக்கியத்தையே முடக்கும் ஆபத்து21 மார்ச் 2025 அது மட்டுமின்ற், இந்த ஆணைக்குழு அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டே செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டுகின்றார். ''கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்." "படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது." "இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை'' என அவர் பதிலளித்துள்ளார். இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார். அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2er00e9mkmo
  17. LIVE 5th Match (N), Ahmedabad, March 25, 2025, Indian Premier League Punjab Kings 243/5 Gujarat Titans (8/20 ov, T:244) 82/1 GT need 162 runs in 72 balls Current RR: 10.25 • Required RR: 13.50 • Last 5 ov (RR): 65/1 (13.00) Win Probability:GT 8.91% • PBKS 91.09%
  18. முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதி ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது - சரத் வீரசேகர 25 MAR, 2025 | 04:59 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பு துறையின் முன்னாள் உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையில் இல்லாதொழித்தாலும் அந்த அமைப்பின் கொள்கையினை கொண்டவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது. பிற்பட்ட காலங்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டு வரும் நாடுகளுக்கு பிரித்தானியா முழுமையாக ஆதரித்துள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. இந்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் இவர்களின் நிலைப்பாட்டை பிரித்தானியா கோரியதா, தன்னிச்சையான முறையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய வகையில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் உள்ளடக்கம் இலங்கைக்கு எதிரானதாகவே அமையும். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டு செல்லும் செயற்பாடுகள் மறைமுகமாகவே முன்னெடுக்கப்படுகிறது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210150
  19. Published By: VISHNU 25 MAR, 2025 | 06:26 PM இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த நட்பு என்றும் தொடரும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை நினைவு கூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் , நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். கடந்த இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210190
  20. 25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது. எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/210186
  21. இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம் Published By: VISHNU 25 MAR, 2025 | 08:46 PM இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 48, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியரின் ஆலோசனையின் படி ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். அவருக்கு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210193
  22. Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210052
  23. பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்; பிரிட்டனின் தடை குறித்து அலி சப்ரி Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 11:06 AM பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் குறித்த தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்த வெற்றி வீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை. பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர். எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம். உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது. ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும், இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாகயிருக்கவேண்டும். அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210126
  24. 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் "தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார். சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ் 'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர். விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார். "தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார். "உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார். இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர் 'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்' 10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார் "கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார். 10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார். உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். "விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும். இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார். சைனா மேன் பவுலிங் என்றால் என்ன? பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார் இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o
  25. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் . மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன். உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். https://www.virakesari.lk/article/210123

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.